ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல! (இஸ்லாம்)

                 
BIBLE FAQ: உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா (யேகோவா)" அல்லது "முகமதுவையா" ?

இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.

1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.

இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.

1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல. - (இந்த கட்டுரையை இங்கே படிக்கவும்)

2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?

3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?

4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)



 
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா" அல்லது "முகமதுவையா" ?

(பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))
 

இஸ்லாமியர்கள் சில பைபிள் வசனங்கள் இறைவனின் வார்த்தை தான், அவைகளை யாரும் திருத்தவில்லை என்று சொல்கிறார்கள். முக்கியமாக அந்த வசனங்களில் அவர்கள் "முகமதுவை" பார்க்கிறார்கள், அதனால் தான் அவைகள் அவர்களுக்கு ஆதாரமாக தென்படுகிறது.

உபாகமம் 33:2ம் வசனத்தில் முகமதுவைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்றுச் சொல்கிறார்கள்.


உபாகமம் 33:2ல்
வரும் "பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடு பிரசன்னமானார் " என்ற சொற்றொடர் "முகமது மக்காவிற்கு தன் தோழர்களோடு நுழைந்த நிகழ்ச்சியோடு " ஒப்பிடுகிறார்கள்.

இஸ்லாமியர்களுடைய இந்த கருத்து ஆதாரமற்றது என்றும், பைபிளின் இந்த வசனத்திற்கும் முகமதுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இந்த கட்டுரையில் தகுந்த ஆதாரங்களோடு நாம் காணலாம்.

உபாகமம் 33:2ம் வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்பதற்கான ஆதாரங்கள் அல்லது காரணங்கள்.

1. இஸ்லாமியர்கள் நினைப்பது போல "பாரான்" என்பது "மக்கா" அல்ல என்பதை இந்த கட்டுரையை படித்தால் புரிந்துக்கொள்ளலாம். இது இஸ்லாமியர்களின் ஆதாரமற்ற ஒரு வாதமே ஒழிய உண்மையல்ல. ( படிக்க : பைபிளின் பாரான் அரேபியாவில் உள்ள மக்கா அல்ல)

2. முகமது இஸ்மவேலின் வம்சத்தில் வந்தவர் அல்ல. படிக்கவும் 1)
Ishmael is not the father of Muhammad and 2) Ishmael is not the father of Muhammad Revisited.

இனி உபாகமம் 33:2ம் வசனத்தை நம் ஆய்விற்கு எடுத்துக்கொள்வோம்.

உபாகமம் 33:1-2

உபாகமம்: 33:1-2 1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது,2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார் ; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது .


இந்த வசனத்தில் நாம் முக்கியமாக ஆராயவேண்டிய வாக்கியங்கள் இவைகள்:

1. கர்த்தர்.....பிரசன்னமானார்.

2. சீனாய்.... சேயீர்.... பாரான்:

3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:

4. அக்கினி மயமான பிரமாணம்


இப்போது மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் நாம் சிந்திப்போம், இதன் மூலம் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகள் முகமதுவிற்கும் இஸ்லாமிற்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லாதது என்பது விளங்கும்.

1. கர்த்தர்.....பிரசன்னமானார்.

இந்த வசனம் ஒரு மனிதனைப் பற்றியோ, இறைத்தூதரைப் பற்றியோ சொல்வதில்லை. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தி இவ்வசனத்தை பார்த்தாலே போதும், இதில் சொல்லப்பட்டவர் "கர்த்தர்" அல்லது "தேவன்" என்பது விளங்கும்.

இஸ்லாமியர்கள் சொல்வது போல பாரானிலிருந்து பிரசன்னமானவர் "முகமது" அல்ல, அவர் கர்த்தர்.

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்கள் வனாந்திரத்திலே சஞ்சரிக்கும் போது, பகலிலே "மேக ஸ்தம்பமாகவும் ", இரவிலே "அக்னி ஸ்தம்பமாகவும் " அவர்களின் 40 வருட பயணத்தின் போது அவர்களோடு வந்தார். இஸ்ரவேலர்கள் எத்தனைமுறை கோபப்படுத்தினாலும், அவர்களை விட்டு விலகாமல் அவர்களோடு வந்தார். இதையே மோசே அவர்களை ஆசீர்வதிக்கும் போது, முதலாவது சொல்கிறார்.

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், ஏதோ முகமதுவை பைபிளில் கண்டுபிடிக்கிறேன் என்றுச் சொல்லி, "தேவன்" வரும் இடத்தில் முகமதுவை ஒப்பிட்டுச் சொல்வது, இஸ்லாமியர்கள் தினமும் தங்கள் வாயில் உச்சரிக்கும் "லாயிலாஹா இல்லல்லாஹூ" என்ற வாக்கியத்தையே அவர்கள் புறக்கனிக்கிறவர்களாக மாறிவிடுகின்றனர். அல்லாவோடு முகமதுவை ஒப்பிடுவது போல ஆகிவிடுகிறது. எனவே, அல்லாவிடம் மன்னிப்பை கோரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

2. சீனாய்.... சேயீர்.... பாரான்:

தேவன் இஸ்ரவேல் மக்களை மோசே தலைமையில் கானானுக்கு அழைத்துக்கொண்டு வரும் போது, அவர்களுக்கு சீனாய மலையில் கட்டளைகளை கொடுத்தார். அந்த கட்டளைகள் கொடுக்கும் நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் மனதில் நீங்கா பாதிப்பை உண்டாக்க வேண்டுமென்றும், மோசேவுடைய மதிப்பு மரியாதை இன்னும் அதிகரிக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார்.

தேவன் சீனாய் மலையில் தன் மகிமையோடு இறங்கி பேசியதை பைபிளின் வார்த்தைகளில் பாருங்கள்.

யாத்திராகமம்: 19:9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். யாத்திராகமம் 19:11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார் .

யாத்திராகமம்: 19:12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும்,அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான் .13. ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.

யாத்திராகமம் 19:16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள் .17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். யாத்திராகமம் 19:18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத்திராகமம் 19:19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார் . யாத்திராகமம் 19:20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

இந்நிகழ்ச்சியை உங்கள் கற்பனையில் கொண்டுவாருங்கள். சீனாய் மலை புகைக்காடாய் தென்படுகிறது, அக்கினி தென்படுகிறது. இடியும், மின்னலும் தன் உக்கிரத்தை காட்டுகின்றன, மக்கள் மலையை தொடக்கூடாது, தொட்டால் நிச்சயம் மரணம். ஆனால், மோசே மலையில் ஏறிப்போகிறார். இதை கண்ட மக்களின் மனதில் ஒரு விதமாக பயம் வியாபிக்கிறது.

தேவனின் சத்தம் பல லட்ச இஸ்ரவேல் மக்களை களங்கடித்தது, எனவே அவர்கள் மோசேயிடம் வேண்டிக்கொண்டார்கள், நீர் பேசும், தேவன் எங்களோடு பேசவேண்டாம் என்று.


யாத்திராகமம்: 20:18 ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,19. மோசேயை நோக்கி, நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.20. மோசே ஜனங்களை நோக்கி, பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். யாத்திராகமம் 24:17 மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது .18. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.



இப்படி இந்நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் இதயங்களில் பதிந்துவிடுகிறது. பிறகு அவர்கள் சேயீர் வானாந்திர வழியாக, பாரான் வனாந்திர வழியாக கானானை அடைகின்றனர். பாரானில் அதிக நாட்கள் தங்குகின்றனர். மோசே வேவுக்காரர்களை அனுப்பி கானான் பற்றிய சில விவரங்களை தெரிந்துக்கொள்கிறார்.

பழைய ஏற்பாட்டு பக்தர்கள் தங்கள் பாடல்களில், ஜெபங்களில் இந்நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுவார்கள்.

அ) தொபோராள் பெண் தீர்க்கதரிசினி தன் பாடலில் நினைவுகூறுகிறார்.

நியாயாதிபதிகள்: 5:3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.4. கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது .5. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.



ஆ) தாவீது இராஜா நினைவு கூறுகிறார்:


சங்கீதம்: 68:7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.



இ) நெகேமிய நினைவு கூர்ந்து ஜெபிக்கிறார்:


நெகேமியா: 9:11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.12. நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.13. நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.



ஈ) ஆபகூக் தன் வேண்டுதலில்(பாடலில்) நினைவுகூறுகிறார்:


ஆபகூக்: 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார் ; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது ; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.



இப்படியாக, இஸ்ரவேல் மக்கள் அந்த நிகழ்ச்சியை தங்கள் பாடல்களிலும், வேண்டுதல்களிலும் நினைவு கூர்ந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். சீனாய், சேயீர், பாரான் என்றுச் சொல்லி, தேவன் எழுந்தார், நடந்தார், கட்டளை கொடுத்தார் என்றும், மலைகள் நடுங்கியது, அதிர்ந்தது என்று பாடல்களிலே பாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் முகமதுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது மட்டுமல்ல, சீனாய், சேயீர், பாரான் என்ற மூன்று இடங்களும் சீனாய் தீபகர்பத்தில் உள்ளதை குறிக்கிறது.

(
பாரான் மக்கா அல்ல என்ற கட்டுரையை பார்க்கவும்)

3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:

இஸ்லாமியர்கள், இந்த வாக்கியத்தில் வரும் "பரிசுத்தவான்கள்" என்பதையும், "பதினாயிரங்களானவர்கள்" என்பதையும் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள். முகமதுவோடு மக்காவில் பிரவேசித்த அவருடைய தோழர்கள் பத்தாயிரம் பேரைத் தான் இந்த வசனத்தில் "பரிசுத்தவான்கள்" என்று குறிப்பிட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். மற்றும் "பதினாயிரங்களான" என்ற வார்த்தையை அவர்கள் 10,000 என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

இவ்வசனத்தின் உண்மை பொருளை இப்போது பார்க்கலாம்.

அ) இவ்வசனத்தில் "பரிசுத்தவான்களோடே" என்பது மனிதரை அல்ல, தேவ தூதர்களைக் குறிக்கிறது

கீழுள்ள பைபிள் வசனங்களைப் பார்க்கவும்.


அப் 7:53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும் , அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

கலாத்தியர்: 3:19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது .

எபிரெயர்: 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க

ஆ) Ten -thousand மற்றும் Ten thousands வெவ்வேறானவை, ஒன்றல்ல.

இஸ்லாமியர்கள் சொல்வது போல, இந்த வசனத்தில் வரும் எண்ணிக்கை சரியாக Ten Thoousand – 10,000 (singular) என்று வராமல் Ten Thousands (Plural) என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பில் "பதினாயிரங்களோடே" என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். சரியாக 10,000 எண்ணை குறிப்பிடவேண்டுமானால், TEN THOUSAND என்று எழுதுவோம், பல ஆயிரங்கள் என்றுச் சொல்லவேண்டுமானால், TEN THOUSANDS OR TENS OF THOUSNAD என்று குறிப்பிடலாம். இந்த வசனத்தில் வரும் "பதினாயிரங்கள்" என்பது இஸ்லாமியர்கள் சொல்வது போல, சரியாக 10,000 அல்ல.
இதில் சொல்லப்பட்டுள்ளது கணக்கிலடங்கா (myriads) எண்ணிக்கை என்று பொருள்.

ஆதாரம் தேவையானால், இதோ சங்கீதம் 68:17.

சங்கீதம் 68:17  தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்னாமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.

Psalm 68: 17 The chariots of God are tens of thousands and thousands of thousands ; the Lord has come from Sinai in to his sanctuary.(NIV)  Source:  http://www.biblegateway.com/passage/?search=psalm%2068:17&version=31


இந்த சங்கீதம் சொல்கிறது, அவர் சீனாய் மலையில் இறங்கும் போது, எப்படி பல ஆயிர இரதங்களின் மத்தியில் இருந்தாரோ அது போல என்றுச் சொல்கிறது. பொதுவாக தேவன் இறங்குகிறார் என்றால், அந்த இடத்தில் தேவதூதர்கள், இரதங்கள், அக்கினி, மகிமை என்று பலவிதங்களில் வருனிப்பார்கள் . இதை நாம் பைபிளில் பல சந்தர்பங்களில் பார்க்கலாம்.

சீனாய் மலையில் தேவனொடு கூட அக்கினி, மகிமை, இடி,மின்னல் போன்றவைகளை மக்கள் கண்டு நடுங்கினர்.
சலொமோன் தேவாலயம் கட்டி பிரதிஸ்டை செய்யும் போது, இதே போல மகிமை ஆலயத்தை சூழ்ந்துக்கொண்டது(1 இராஜா 8:10-11).

இங்கு வரும் "பதினாயிரங்களோடே – Ten Thousands" என்ற வார்த்தை வரும் எபிரேய வார்த்தை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை இங்கு (
Response to Osama Abdulla ) படிக்கலாம். இக்கட்டுரையில் ஒசாமா அப்துல்லா என்பவரின் இதே கேள்விக்கு மிகதெளிவாக எபிரேய வார்த்தையின் விவரங்களோடு, இலக்கணத்தோடு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எபிரேய வார்த்தையைப் பற்றி தனி கட்டுரை வேண்டுமானால், பார்க்கலாம். அதைப்பற்றி இங்கு எழுதினால், கட்டுரை இன்னும் நீண்டதாக மாறும். எனவே, இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கவும்.

பதினாறு ஆங்கில மொழி பெயர்ப்புகளில் இரண்டு மொழி பெயர்ப்பில் மட்டுமே தவறாக "TEN THOUSAND" என்று உள்ளது, மீதியுள்ள 14 மொழி பெயர்ப்புகளில் "TEN THOUSANDS " என்றும் "MYRIADS" என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.



First, it should be stated that the New American Standard and Today's English Version are the only ones that read the singular "ten thousand" in Deut. 33:2. So Osama is wrong regarding the rendering of the RSV, the Webster's Bible and the WEB. The following English translations also render the word as "ten thousands": ASV, DRA, ESV, GNV, KJV, NKJ, RWB; likewise, the Greek Septuagint (LXX) renders it as plural. The following English translations render the word as "myriads" [plural]: DBY, JPS, NIB, NIV, NRS, YLT. The following English translations translate the word as a place-name: BBE, NAB, NLT, TNK. One English translation (NJB) paraphrases the text as though no number is there. Of all the 16 translations that render the word as a number, roughly two (NAS and TEV) renders the plural word as a singular. One cannot build a case on an incorrect translation. Standard Hebrew grammar, syntax, and lexicography expect the plural form of the word to be translated plural. (Formats are mine -Isa Koran) Source : http://www.answering-islam.org/Responses/Osama/holy_ones.htm

எனவே, இந்த வசனத்தில் பதினாயிரங்கள் என்பது கணக்கிலடங்கா அல்லது ஆயிரமாயிரமானவர்கள் என்று பொருள்படுமே தவிர, சரியாக 10,000 என்று பொருள் அல்ல.

இ) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் கூற்றுப்படி 12000 பேர் மக்காவில் நுழைந்தார்கள்

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இபின் இஷாக் தன் "சூரத்  ரசூலுல்லா " என்ற முகமதுவின் சரிதையில் சொல்கிறார் "முகமது மக்காவில் 12000 மனிதர்களோடு நிழந்தார்" .


Source: 
http://www.faithfreedom.org/Articles/sira/23.htm

Then the apostle marched out with two thousand Meccans and the ten thousand companions who had gone with him before to the conquest of Mecca . The apostle said, gazing at the greatness of this army of Allah, 'This day we shall not be overcome because our number is small!' They marched to meet the Hawazin.

4. அக்கினி மயமான பிரமாணம்

இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அக்னி மயமான பிரமாணம் என்பது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் கட்டளை" சரியாக பொருந்தாது, முகமது கொண்டுவந்த பிரமாணமாகிய "கணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பது தான் என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் ஒன்றை மறந்துப்போகிறார்கள், அது என்னவென்றால், "ஒரு கன்னத்தில் அறைந்தால்..." கட்டளையை கொடுத்தவர் மோசே அல்ல.

மோசே கொண்டுவந்த கட்டளை கூட "அக்னி மயமாக கட்டளைகள்" தான். அதாவது, பழைய ஏற்பாட்டு காலத்தில் மோசே முலமாக தேவன் கொடுத்த கட்டளை "கணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பதாகும்.

மக்களை குழப்புவதற்கு இஸ்லாமியர்கள் "இயேசுவின் கட்டளைகளை" இயேசுவிற்கு முன் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேவோடு சம்மந்தப்படுத்தி, மோசே கொண்டுவந்தது, அக்னி மயமான கட்டளைகள் கிடையாது என்று சொல்கிறார்கள். ஆனால், மோசேயின் கட்டளைப் போலவே, முகமது கொண்டுவந்ததும் "கண்ணுக்கு கண்" கட்டளைகள் தான்.(ஆனால், முகமதுவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகள் மோசேவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஜிஹாத், திருமண, விவாகரத்து கட்டளைகள் இன்னும் பல)

ஆனால், ஒரு விவரத்தை மறந்துப்போகிறார்கள், தேவன் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தும் "அக்னி மயமான கட்டளைகள்" தான். சீனாய் மலையில் அக்னி மலையை சூழ்ந்துக்கொண்டிருக்க பெற்ற கட்டளைகள் என்பதனால், அப்படி " அக்னி மயமான பிரமானம் (கட்டளை)" என்று குறிப்பிடப்பட்டதே தவிர,  இஸ்லாமியர்கள் சொல்வது போல் அல்ல.

தேவனுடைய வார்த்தைகள் அக்கினி போல் இருக்கிறது என்று தேவன் சொல்கிறார்.


எரேமிய 23:29. என் வார்த்தை அக்கினியைப் போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய வார்த்தகள் நம் எலும்புகளிலும், இதயத்திலும் அக்கினிப்போல எரியும்.

எரேமியா 20:9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன் ; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.


தேவன் தன் வார்த்தைகளை அக்கினி போல ஆக்குவார்

எரேமியா 5:14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும் .


இப்படி பல வசனங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சங்கீதம் 29:7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

உபாகமம் 4:15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில் , நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.



தேவன் இடிமுழக்கங்கள் மூலமாகவும், பேரொளி மூலமாகவும் பேசுவார்(பதில் அளிப்பார்) என்பதற்கான சில குர்-ஆன் வசனங்கள். இவ்வசனங்களில் இறைவனோடு இடிமுழக்கத்தையும், பேரொளியையும், சம்மந்தப்படுத்தி சொல்லப்பட்டதாலும், சீனாய் மலை(தூர் - ஸினாய்) பற்றிய மோசேயின் நிகழ்ச்சி சொல்லப்பட்டதாலும் இவ்வசனங்களை மேற்கோள் காட்டினேன்.

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (2:55)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
(7:143)

இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம். (19:52)      Source : http://chittarkottai.com/quran/surawise.php



எனவே, அக்னி பிரமாணம் என்பது ஒன்றும் இஸ்லாமிய பிரமாணங்களை குறிக்காது . தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அக்னி போல, நம்மை சுடும், நம்மை நல்வழிப்படுத்தும், நம் அழுக்குகளை எரித்துவிடும். எனவே, இஸ்லாமியர்களின் வாதத்திற்கும் இவ்வசனத்தின் அக்னி பிரமானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வசனம் ஒரு தீர்க்கதரிசனமல்ல, அது கடந்த கால நிகழ்ச்சியின் ஒரு நினைவு:

முடிவாக, மோசே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும் போது, அவர்களை நடத்திக்கொண்டு வந்த தேவனின் செயலை ஒருமுறை அவர்களுக்கு நியாபகம் செய்கிறாரே தவிர, எதிர் காலத்தில் நடைபெறும் ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லவில்லை. இவ்வசனத்தை கவனித்தால் தெரியும், "பிரசன்னமானார்" என்பது கடந்த கால நிகழ்ச்சியே தவிர எதிர கால நிகழ்ச்சி அல்ல.

எப்பிராயீமின் பதினாயிரங்கள், மனாசெயின் ஆயிரங்கள்:

இதே உபாகமம் 33ம் அதிகாரம் 17ம் வசனத்தை சிறிது கவனித்தால், நான் சொல்வது மிகத்தெளிவாகப் புரியும். அதாவது மோசே இஸ்ரவேலின் ஒவ்வொரு வம்சத்தையும் ஆசீர்வதிக்கிறார். எப்பிராயீம் மற்றும் மனாசே என்ற வம்சத்தை ஆசீர்வதிக்கும் போது, "பதினாயிரங்கள்" (33:2ல் சொல்லப்பட அதே வார்த்தை), "ஆயிரங்கள்" என்று ஆசீர்வதிக்கிறார்.  இஸ்லாமியர்கள் சொல்வதைப் போல, "பதினாயிரங்கள்" என்றுச் சொன்னால், சரியாக பத்தாயிரம் தான் என்றுச் சொன்னால், எப்பிராயீமின் பிள்ளைகள்(தலையீறுகள்) வெறும் பத்தாயிரம் அளவிற்கு மட்டும் தான் பெருகுவார்கள் என்று பொருள்படும். இது சரியான பொருளாக இருக்காது. உன் வம்சத்தின் பெருக்கம் பதினாயிரங்கள் என்று ஆசீர்வாதம் கூறினால், வெறும் பத்தாயிரம் என்று நினைப்பது தவறான புரிந்துக்கொள்ளுதல்(Interpretation) ஆகும்.

உபாகமம் 33:17 அவன் அலங்கரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் ஜனத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்



முடிவுரை: முதலில், பாரான் என்பது மக்கா அல்ல. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக, சீனாய், சேயீர், மற்றும் பாரான் என்பது இஸ்ரவேல் மக்கள் கடந்து வந்த பாதையாகும். பரிசுத்தர்கள் என்பது, தேவ தூதர்களைக்குறிக்கும். பதினாயிரங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்தது, சரியாக 10000 என்பதல்ல, இது பல ஆயிரங்கள் என்று பொருள்.

முக்கியமாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் குறிப்பிடுவது போல, 12000 பேரோடு அவர் மக்காவிற்குள் நுழந்தார், 10000 பேரோடு அல்ல. பைபிள் முழுவதும் நாம் தேடுவோமானால், அக்கினியை தன் வார்த்தையாக தேவன் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம்.

மற்றுமொரு விவரம் என்னவென்றால், இவ்வசனம் சொல்வது, பதினாயிரங்களோடே பாரானிலிருந்து பிரசன்னமானார் (வெளிப்பட்டார்) என்பது, ஆனால், முகமது தன் 12000 மனிதர்களை மக்காவிலிருந்து வெளியே (மதினாவில்) சம்பாதித்துக்கொண்டு, மக்காவிற்குள்(பாரனுக்குள்) நிழைகிறார். இது எப்படி இவ்வசனத்திற்கு பொருந்தும்?

எனவே, மோசே சொன்ன பாரானிலிருந்து பிரசன்னமானார் என்பது கர்த்தரை குறிக்குமே ஒழிய "முகமதுவையோ, அல்லது அவரது பிரமானங்களையோ" குறிக்காது.

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/deut332.htm

 

திங்கள், 27 ஆகஸ்ட், 2007

பைபிளின் "பாரான்" "மக்கா" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)

                

BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல


பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 1 (Part 1 of 4)


இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.

1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.

இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.

1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.

2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?

3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?

4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)





1. BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல


இஸ்லாமிய அறிஞர்கள் "முகமதுவை" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க, மாற்று மத வேதங்களின் வசனங்களில் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு முயற்சியே இந்த வாதம். அதாவது, பைபிளில் வரும் "பாரான் வனாந்திரம்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" என்று சொல்கிறார்கள். எனவே, பாரான் குறித்து வரும் சில வசனங்கள், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவைக் குறிக்கும் என்று சொல்கிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் அல்லது நம்பிக்கை சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

1. திருத்தப்பட்ட வேதம் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் "பைபிளின்" வசனங்களை ஆதாரமாக இஸ்லாமியர்கள் முன் வைப்பது ஏன்?

பைபிளில் (தோரா, ஜபூர், இஞ்ஜில்) நேர்வழியும், வெளிச்சமும் உண்டு என்று குர்-ஆன் வசனங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்கள் "பைபிள்" மாற்றப்பட்டது, திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள்.
பைபிள் இறைவனின் வார்த்தை இல்லை, அது மாற்றப்பட்டது என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், அதே நேரத்தில் "முகமது" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க "பைபிளின்" வசனங்களை ஆதாரங்களாக காட்டுகிறார்கள்.

உண்மையாகவே அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்பினால்:

a) முகமதுவை "நபி" என்று நிருபிக்க ஏன் பைபிள் வசனங்களை நம்புகிறார்கள்?

b) ஒரு புத்தகம் வேதம் இல்லை என்று அடித்துச் சொல்லும் நீங்கள் ஏன் அதன் சில (உங்களுக்கு சாதகமாக தென்படுகின்ற) வசனங்களை நம்புகிறீர்கள்?

c) பைபிள் வசனங்கள் மாற்றப் பட்டது என்றுச் சொன்னால், நீங்கள் காட்டும் வசனங்கள் மட்டும் எப்படி திருத்தப்படாமல் இருக்கும்?


எனவே, ஒரு புத்தகம் வேண்டமென்றால், அதன் எல்லா வசனங்களும் வேண்டாம் என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய, சில வசனங்களை மட்டும் நம்பவேண்டியது, அடுத்த வசனத்தை நாங்கள் ஆதரமாக காட்டினால், அது திருத்தப்பட்டது என்றுச் சொல்வது, சரியான வாதமாக அல்லது ஆதாரமாக இருக்காது.

ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படி அல்ல. நாங்கள் பைபிளை மட்டும் வேதம் என்று நம்புகிறோம். பைபிளில் வரும் செய்திகளை திருத்தி எழுதப்பட்டது குர்-ஆன் என்று நம்புகிறோம். இருந்தாலும், ஏன் அதன் வசனங்களை சிலவற்றை ஆதாரமாக கொடுக்கிறோம் என்றால், பைபிளின் செய்திகளை தவறாக புரிந்துக்கொண்டு எழுதியதால், தவறுதலாக சில பைபிள் செய்திள்கள் அப்படியே குர்-ஆனில் வந்துவிட்டது என்று சொல்கிறோம். குர்-ஆன் "வேதம்" என்று நம்பி நாங்கள் ஆதாரங்களை முன்வைப்பதில்லை. பைபிளும் தனக்கு பின் ஒரு நபி வருவார், ஒரு வேதம் வரும் என்று சொல்வதில்லை.

2. பாரான் வனாந்திரம் வரைபடம்(Map) மற்றும் மக்காவின் வரைபடம்(Map):

கீழே உள்ள படங்களைப் பாருங்கள். இதில் "பாரான் வனாந்திரம்" மற்றும் "மக்கா" எங்குள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.

Paran and Sinai Source: http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு வரும்போது தங்கிய 18 இடங்களை இந்த படத்தில் காணலாம்.

கானானுக்கும் பாரானுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றும், மக்காவிற்கு எவ்வளவு தூரம் உள்ளது என்றும் இப்படங்களின் முலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

கீழே உள்ள கூகுல் யர்த்( Google Earth) வரைபடத்தைப் பார்க்கவும். இதில் எருசலேம், மற்றும் மக்கா எங்குள்ளது என்று சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். மற்றும் தமிழில் எழுதி, கோடுகள் வரைந்துள்ளேன்.

Makka and Paran

இப்படத்தை கூகுல் யர்த்தில்(Google Earth) பார்க்கவேண்டுமானால், பூமியிலிருந்து 1528.20 மைல்கள்(Eye alt 1528.20 mi) உயரத்திலிருந்து பார்க்கவேண்டும். மற்றும் படத்தின் இடது பக்கம் அடியில் காட்டியபடி அளவு கோள் 531 மைல்கள் (Scale 531 mi) காட்டப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த படத்தில் காணலாம்.
Jerusalem and Makka at Google Earth Full Image

3. பாரான் வனாந்திரமும், மக்காவும் வெவ்வேறானவை என்பதற்கான காரணங்கள்:


3.1. ஈசாக்கும், இஸ்மவேலும் சேர்ந்தே ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் ( 89 வயது இஸ்மவேல் மக்காவின் இருந்திருந்தால், ஆபிரகாமின் அடக்கத்திற்கு இஸ்மவேல் எப்படி வந்தார் ?)


ஆகாரும் இஸ்மவேலும் பாரானில் குடியிருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆபிரகாம் மரித்த போது, ஈசாக்கும், இஸ்மவேலும் ஒன்றாக சேர்ந்து தான் அவரை அடக்கம் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது, அதையும் இஸ்லாமியர்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் தள அன்பர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

ஆதியாகமம்: 21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

ஆதியாகமம்: 25:8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள் .

ஆதியாகமம்: 25:18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி



ஒரு வேளை இஸ்லாமியர்கள் சொல்வது போல, ஆகாரும் இஸ்மவேலும் மக்காவில் வாழ்ந்ததாக வைத்துக்கொண்டால், ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் எப்படி மக்காவிலிருந்து, கானானுக்கு இவ்வளவு சீக்கிரமாக வரமுடியும். "பாரான் வனாந்திரம்" மக்காவை குறிக்கும் என்று இஸ்லாமியர்களின் வாதம் இங்கு பலவீனமாகிவிடுகிறது.

எருசலேமுக்கும், மக்காவிற்கும்(காபா) இடையே சுமார் : 1234 கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்று www.timeanddate.com என்ற தளம் ஆகாயமார்க தூரத்தை கணக்கிட்டுச் சொல்கிறது.

இந்த தளத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள "ஆகாய மார்க்கமாக" தூரம் கணக்கிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.


http://www.timeanddate.com/worldclock/distanceresult.html?p1=110&p2=151

or

http://www.timeanddate.com/worldclock/distance.html

Distance from Jerusalem to Makkah

Distance is 1234 kilometers or 767 miles or 667 nautical miles

The distance is the theoretical air distance (great circle distance). Flying between the two locations's airports can be longer or shorter, depending on airport location and actual route chosen.


ஆகாய மார்க்கம் என்றாலே 1234 KM உள்ளது, ஆனால் தரை மார்க்கம் என்றால் மலைகள், காடுகள், பாலைவனம் என்று இன்னும் தூரம் அதிகமாகும். ஆபிரகாம் மரித்தது பெயர்செபா என்பதால், ஒரு பேச்சுக்காக 1000 KM என்றே வைத்துக்கொள்வோம்.

ஆபிரகாம் மரிக்கும் போது, இஸ்மவேலுக்கு 89 வயது


ஆதியாகமம்16:16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் .

ஆதியாகமம்: 25:7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள்
நூற்று எழுபத்தைந்து வருஷம்.



இஸ்மவேலை ஆபிரகாம் பெற்ற போது, ஆபிரகாமுக்கு 86 வயது, மற்றும் மரிக்கும் போது ஆபிரகாமின் வயது 175. ஆக, ஆபிரகாம் மரிக்கும் போது இஸ்மவேல் கிட்டத்தட்ட 89 வயது முதியவராக இருந்திருப்பார்.

a) 89 வயது முதியவராகிய இஸ்மவேல், ஆபிரகாம் மரிக்கும் போது மக்காவிலிருந்து, பெயர்செபாவிற்கு எப்படி ஓரிரு நாட்களில் 1000 கிலோ மீட்டரை தாண்டி வரமுடியும்?

b) அல்லது அண்ணன் வரும் வரை தம்பியாகிய ஈசாக்கு ஆபிரகாமின் உடலை பத்திரமாக எப்படி அழுகாமல் வைத்து இருக்கமுடியும்? (அந்த காலத்தில் மரித்த உடலை பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர் சாதனப் பெட்டி போன்ற வசதி இருந்ததா?)

c) இஸ்மவேல் 1000 KM எப்படி வந்தார்? குதிரையில், ஒட்டகத்தில் வந்தாலும் ஓரிரு நாட்களில் வர முடியாது?

d) இஸ்மவேலுக்கு செய்தியைச் சொல்ல ஒருவர் மக்காவிற்கு(இஸ்லாம் படி பாரானுக்கு) சென்று இருக்கவேண்டுமல்லவா? அப்படி செல்வதற்கும் அதிக நாட்கள் ஆகுமே?

சரி இதற்கு சரியான பதில் என்னவென்றால், ஆகாரும் இஸ்மவேலும் வாழ்ந்தது இப்போதுள்ள மக்காவில் அல்ல, பாரான் வனாந்திரம் என்பது பெயர்செபாவிற்கு தெற்காக, எகிப்திற்கு கிழக்கிலே உள்ளது என்பது தான் உண்மை. எகிப்திற்கு அருகாமையில் இருப்பதால் தான், ஆகார் தன் மகனுக்கு எகிப்திய பெண்ணை திருமணம் செய்தார்கள்.

இல்லை, பாரான் என்பது மக்கா தான் என்று சொல்வீர்களானால், இதற்கு பதில் சொல்லுங்கள்:

ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் வந்தாரா இல்லையா?

வந்தார் என்று சொல்வீர்களானால், எப்படி 89 வயது உள்ள ஒரு மனிதன், 1000 KM லிருந்து ஓரிரு நாட்களில் வரமுடியும்? சொல்லுங்கள்? 1000 KMக்கு அதிகமான தூரத்தில் இருப்பவருக்கு ஆபிரகாம் மரித்த செய்தி எப்படி சென்று அடைந்தது?

எஸ்றா என்பவர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு, யூப்ரடீஸ் டைக்ரீஸ் வழியாக (900 மைல்கள்) வருவதற்கு 4 மாதங்கள் ஆனது என்று பைபிள் சொல்கிறது ( பார்க்க எஸ்றா அதிகாரம் 7:9). இஸ்மவேலுக்கு மக்காவிலிருந்து பெயர்செபாவிற்கு வர எத்தனை நாட்கள் பிடித்திருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் (சுமார் 750 மைல்கள் ஆகாய மார்க்கமாக, தரை மார்க்கமாக இன்னும் அதிகம்).

மேலே பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால், பாரானும் மக்காவும் ஒன்றல்ல. பைபிள் சொல்லும் பாரான், பெயர்செபாவிற்கு அருகாமையில் உள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.

நான் காட்டிய விவரங்கள் தவறு என்றுச் சொன்னால், எங்கே தவறு என்று நீங்களே சொல்லுங்கள்? ஆதாரங்கள் எதுவும் காட்டாமல் "நீங்கள் சொல்வது தவறு என்று" சொல்லக்கூடாது. இது படித்தவர்களுக்கு அழகல்ல.

3.2. மோசேவும், இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து வரும் போது மக்காவில் (இஸ்லாம் படி பாரானில்) கால் வைத்தார்களா?

இஸ்ரவேல் மக்கள், மற்றும் மோசே சீனாய் வானாந்திரத்திலிருந்துச் சென்று பாரான் வனாந்திரத்திலே பாளயம்(தங்குதல்) இறங்கினார்கள் என்று படிக்கிறோம். எகிப்திலிருந்து பயணம் பாரான் வழியாக இருந்தது, அந்த பாரான் மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.


எண்ணாகமம்: 10:11. இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.12. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று .

எண்ணாகமம்: 12:16. பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.



இஸ்லாமியர்கள் சொல்வது போல, பாரான் தான் மக்கா என்றால், 20 லட்சம் இஸ்ரவேலர்களை அழைத்துக்கொண்டு மோசே பாரானில் (மக்காவில்) பாளயம் இறங்கியதாக பொருள். எகிப்திலிருந்து புறப்பட்டவர்கள் பிள்ளைகள், பெண்கள் தவிர மொத்தம் 6 லட்சம் பேர். பெண்கள பிள்ளைகளைச் சேர்த்து 20 லட்சம் பேர் இருக்கக்கூடும் என்று வேத அறிஞர்கள் கணக்கிடுகின்றனர்.

யாத்திராகமம்: 12:37. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள் .38. அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.



பாரான் என்பது மக்கா என்றுச் சொன்னால், கீழே உள்ள சில கேள்விகள் எழுகின்றன.


a) குர்-ஆன், ஹதீஸ்கள் படி, மக்காவில் உள்ள காபாவை ஆதாம், அடுத்து ஆபிரகாம், இஸ்மவேல் கட்டினார்கள்.

b) அப்படியானால், மோசே மக்காவில் கால் பதித்தார். அவர் காபாவில் அல்லாவை தொழுது இருக்கவேண்டுமல்லவா?

c) அவர் காபாவில் கல்லாவை தொழுததாகவோ, இஸ்ரவேல் மக்கள் தொழுததாகவோ ஏதாவது குர்-ஆன் வசனம் உண்டா? அல்லது ஏதாவது ஹதீஸ் இருக்கிறதா ?

d) மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் கருத்துப்படி, மக்காவில் இஸ்மவேலின் வம்சம் இருந்திருக்கவேண்டும்? அதாவது 400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்மவேலின் வம்சம் மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருக்கவேண்டும். இஸ்ரவேல் மக்களும், இஸ்மவேல் மக்களும் சந்தித்ததாக, ஏதாவது தகவல்கள் உண்டா?

e) பல லட்ச மக்கள் மக்காவை கடந்துச் செல்வது ஒன்றும் சின்ன விஷயம் அல்ல?
இஸ்ரவேலர்களின் இந்த மிகப்பெரிய யாத்திரை மக்கா மக்களின் மனதில் நிச்சயமாக ஒரு பாதிப்பை அல்லது நீங்கா நினைவை கொடுத்து இருக்கும்.

f) இஸ்ரவேல் மக்கள் மற்றும் அல்லாவின் மிகப்பெரிய நபி மோசே அவர்கள் மக்காவில் கால் வைத்ததாக ஒரு வசனமாவது உண்டா? மற்ற நபிகளை விட இவரைப் பற்றி அதிக வசனங்கள் குர்-ஆனில் வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, இவர் மக்காவில், காபாவில் கால் வைத்ததாக ஏன் அல்லா ஒரு வசனமும் சொல்லவில்லை? (எனக்கு தெரிந்தவரை ஒரு வசனமும் இல்லை, ஏதாவது வசனம் அல்லது ஹதீஸ் இருந்தால் தெரிவிக்கும் படி வேண்டுகிறேன்)

ஏன் அல்லா இந்த மிகப்பெரிய நபி மக்காவில், காபாவில் தொழுதுக்கொண்ட விவரத்தை சொல்லாமல் விட்டுவிட்டார்? காரணம், இஸ்ரவேல் மக்கள், மோசே தங்கியது அரேபியாவின் மக்கா அல்ல, அது சீனாய் தீபகர்ப்ப பகுதியில் உள்ள பாரான் வனாந்திரம் ஆகும்.

எனவே, பாரான் என்பது மக்கா அல்ல.


3.4 மோசே வேவுகாரர்களை பாரானிலிருந்து அனுப்பினார், அவர்கள் 40 நாட்களில் திரும்பினார்கள்: பாரான் என்பது மக்கா என்றால், இது எப்படி சாத்தியமாகும் .

இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் நிழைவதற்கு முன்பாக, மோசே 12 மனிதர்களை கானான் நாட்டைப பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ளும்படி(வேவுகாரர்களை) பாரானிலிருந்து அனுப்புகிறார். அவர்கள் 40 நாட்களில் திரும்பிவருகிறார்கள் .



எண்ணாகமம்: 13:1. கர்த்தர் மோசேயை நோக்கி,2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான் ; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

எண்ணாகமம்: 13: 25. அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.26. அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.



சென்றுவந்த 12 நபர்களில் ஆலேப், மற்றும் யோசுவா என்ற இருவர் மட்டுமே நம்பிக்கையான வார்த்தைகளைச் சொன்னார்கள். மீதம் உள்ள 10 பேர், கானானில் உள்ள மக்களை நாம் வெல்லமுடியாது, அவர்கள் பலசாலிகள் என்றுச் சொன்னார்கள். 10 நபர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மக்கள் கானானுக்குள் நிழைய பயப்பட்டார்கள். இந்த விவரங்களை பைபிளில் எண்ணாகமம் 14:6-9 ல் கணலாம். இதைப் பற்றி குர்-ஆனும் ஒரு விவரத்தைத் தருகிறது. பார்க்க குர்-ஆன் 5:21-23



குர்-ஆன் 5:21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்.

குர்-ஆன் 5:22 அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.

குர்-ஆன் 5:23 (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்.



சில கேள்விகள்:

1. பாரான் என்பது மக்கா என்று இஸ்லாமியர்கள் சொல்வது உண்மையானால், இந்த 12 வேவுக்காரர்கள் கானானைப் பற்றிய தகவல்கள் அறிந்துக்கொள்ள 1000 KMக்கு அதிகமாக சென்று வந்தார்களா?

2. அப்படி சென்றுவரவேண்டுமானால், 40 நாட்கள் அல்ல நான்கு மாதங்களுக்கு அதிகமாக ஆகும்.

3. அவர்கள் கானானிலிருந்து பழங்கள் கொண்டுவந்ததாக படிக்கிறோம். எந்த பழம் உலகத்தில் 4 மாதங்களுக்கு அதிகமாக கெடாமல் இருக்கும்? ( சென்று வந்த நபர்கள் ஒரு முறை கானானுக்கு சென்று, அவ்வளவு தூரம் மறுபடியும் கடந்து வரவேண்டும்)


www.muslim.org என்ற தளம், குர்-ஆனின் 5:22-23 வசனங்களை விவரிக்கும்(Commentary) போது, கீழ்கண்டவாறு பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டுகிறது. (link : http://www.muslim.org/english-quran/quran.htm, Chapter 5, Verses 22-23, PDF Page Number 255)

22a. "All the people that we saw in it are men of a great stature" (Num. 13:32). For the murmurings of the Israelites and their refusal to go against the enemy, see Num. 14:1– 4.

23a. "And Joshua the son of Nun and Caleb the son of Jephunneh ... spoke unto all the company of the children of Israel, saying ... If the Lord delight in us, then He will bring us into this land and give it to us; a land which floweth with milk and honey. Only rebel not ye against the Lord, neither fear ye the people of the land ... their defence is departed from them, and the Lord is with us, fear them not" (Num. 14:6–9).

Part 6] ISRAELITES' VIOLATION OF THE COVENANT 255


மேலே கண்ட விவரங்கள் நமக்கு தெளிவாக சொல்கிறது, பாரன் வனாந்திரம் என்பது "அரேபியாவின் மக்கா" அல்ல. அது கானானுக்கு சில நாட்கள் (Below 20 days) பயணமுள்ள இடம் ஆகும்.

3.5 சாமுவேல் மரித்தபின்பு தாவிது பாரானிலே சென்று தங்கினார் (1 சாமுவேல் 25:1)

சவுல் இராஜா தாவீதை கொல்லவேண்டுமென்று துரத்திக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரையும் இராஜாவாக அபிஷேகம் செய்தவர் சாமுவேல் தீர்க்கதரிசியாவார். இவர் மரித்த போது, தாவீது தான் இருந்த இடத்தைவிட்டு பாரான் வனாந்திரத்திற்கு ஓடிப்போனதாக நாம் 1 சாமுவேல் 25:1ம் வசனத்தில் படிக்கிறோம்.



1 சாமுவேல்: 25: 1. சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.



இஸ்லாமியர்களின் வாதத்தின் படி "பாரான்" தான் "மக்கா" என்றால், இன்னும் இஸ்லாமியர்களின் வாதம் பலவீனப்படுகிறது.

தாவீது சவுலுக்கு பயந்து அக்கம் பக்கம் உள்ள மலைகளுக்கு, இடங்களுக்கு தப்பித்துச் செல்கிறார். ஆனால், ஒரு முறை பாரானுக்குச் செல்கிறார். பாரான் தான் மக்கா என்றால், தாவீது சவுலுக்கு பயந்து இத்தனை தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை. அதாவது 750 மைல்களுக்கு அப்பால் தப்பித்துச் செல்லவில்லை.

இஸ்லாமியர்களின் கூற்றில் உள்ள மற்றோரு பிரச்சனை என்னவென்றால், தாவீது கூட "மக்கா"வில் கால் வைத்தார் என்று சொல்வது போல் உள்ளது இவர்களின் வாதம். இதற்கு ஆதாரம் உண்டா? தேவனின் மனதிற்கு ஏற்றவன் தாவீது என்றால், தன் இறைவனை காபாவில் தொழவில்லையா?

ஆதாம் முதல் மக்காவும், காபாவும் இஸ்லாம் படி புன்னிய பூமியாயிற்றே? இங்கு தாவீதும் வந்தார் என்றால், இன்னும் அதன் சிறப்பு கூடுகிறது. தாவீது மக்காவில் (பாரானில் இஸ்லாம் படி) நிழைந்தாரா? ஏதாவது ஹதீஸ் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

மக்காவிற்குள் நிழைந்தால், கண்டிப்பாக காபாவில் அல்லாவை தொழவேண்டிய அவசியமில்லை என்று சாக்கு சொல்லவேண்டாம்? காரணம் காபா ஒன்று ஒரு சாதாரண சுற்றுலா தளம் அல்ல, அது அல்லாவின் வீடு, ஆதாம், ஆபிரகாம், இஸ்மவேல் என்று பல இறைவனடியார்கள் கட்டிய ஸ்தலம். பல நூறு மைல்கள் கடந்து வந்த தாவீது, மக்கா வரை வந்த தாவீதிற்கு (இஸ்லாம் படி தாவீதுகூட ஒரு தீர்க்கதரிசி), அல்லா ஏதாவது மக்காவைப் பற்றி சொல்லவில்லையா? தன்னுடைய வீடு இங்குள்ளது என்று சொல்லவில்லையா?

தாவீதை சவுலுக்கு பதிலாக அரசனாக்கவேண்டுமென்று தேவன் முடிவு செய்தார். எனவே, தாவீது கூட அதிகமான தூரம் செல்லாமல், அலைந்துக்கொண்டு இருந்தார், முடிந்த அளவிற்கு சவுலின் கைக்கு எட்டாத தூரம் சென்றார், ஆனால் மக்கா வரை செல்லவில்லை. சவுல் மரித்ததும், தாவீது இராஜாவானார். இவைகளை 1 சாமுவேல், 2 சாமுவேல் புத்தகங்களை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம்.

எனவே, தாவீது ஓடிப்போனது இஸ்ரவேலுக்கு அருகாமையில் உள்ள பாரான் வனாந்திரத்திற்குத் தானே தவிர, பல நுறு மைல்கள் கடந்து "மக்காவிற்கு" அல்ல.

3.6 ஆதாத் சாலொமோமுக்கு எதிராக கலகம் செய்து, எகிப்திற்கு ஓடிப்போகும் போது, பாரானில் தங்கினான்:

பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் நாட்டிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ளது என்பதை கீழ் கண்ட வசனம் நமக்குச் சொல்கிறது.



1 இராஜாக்கள்: 11: 17. ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஒடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.18. அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.



வரைபடத்தை நாம் பார்க்கும் போது தெரிந்துக்கொள்ளலாம், இஸ்ரவேலிருந்து எகிப்திற்கு செல்லும் போது, பாரான் வனாந்திரத்தை கடந்து அல்லது தொட்டுக்கொண்டு செல்லலாம்.

இஸ்லாமியர்களின் வாதம் படி, மக்கா தான் பாரான் என்றால், ஒரு மனிதன் இஸ்ரவேலிலிருந்து எகிப்திற்கு போகவேண்டுமானால், ஆயிர கிலோமீட்டர்கள் கடந்து மக்காவிற்குச்(பாரானுக்கு) சென்று மறுபடியும் அவ்வளவு தூரம் திரும்பி வரவேண்டும். இது ஒரு தவறான கண்ணோட்டம்.

இது எப்படி உள்ளதென்றால், ஒரு மனிதன் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் போக வேண்டுமானால், சென்னையிலிருந்து புது டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து திருவனந்தபுரம் போகவேண்டும் என்று சொல்வது போல உள்ளது.

எகிப்தின் எல்லைக்கு அருகில் பாரான் வனாந்திரம் விரிந்து படர்ந்து இருந்ததால், தான் ஆகார் இஸ்மவேலுக்கு எகிப்து பெண்ணை திருமணம் செய்தார்கள் என்று படிக்கிறோம். இஸ்மவேல் தன் சகோதரருக்கு எதிராக குடியிருப்பான் என்று பைபிள் சொல்வதும் பாரான் கானான் தேசத்திற்கு அருகில் இருப்பதால் தான். அதை விடுத்து அவர் பல நூறு மைல்கள் தூரமாக இருந்தால், இப்படி "எதிராக குடியிருந்தான்" என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

3.7 இஸ்லாமியர்கள் சொல்வதை உண்மையென்று நம்பினால், இன்று யூதர்களுக்கு சவுதி அரேபியாவின் ஒரு பகுதி சொந்தம்

இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் கானான் தேசத்தை கொடுக்கும் போது, அவர்கள் எதுவரைக்கும் உள்ள இடத்தை சுதந்தரித்துக்கொள்ளலாம் என்று எல்லைகளை குறித்துச் சொல்கிறார். இதை மோசே இஸ்ரவெல் மக்களுக்கு சொல்கிறார்.




எண்ணாகமம்: 34:3. உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும் ; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.4. உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,5. அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.



பாரான் வானந்திரம், சீன் வனாந்திரத்திற்கு அருகில் உள்ளது. மட்டுமல்ல, காதேஸ் என்ற இடம் சீன் வனாந்திரத்தில் உள்ளது என்பதை எண்ணாகமம் 20:1, 27:14, 33:36க் கொண்டு அறிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களின் வாதத்தின் படி பாரான் என்பது இஸ்ரவேல் நாட்டிற்கு தென்கிழக்கு பக்கமாக 400-500 மைல்கள் உள்ள மக்கா தான் என்று நாம் முடிவு செய்தால்!

இஸ்ரவேலுக்கு தேவன் சொந்தமாக கொடுத்த எல்லை, இப்போது உள்ள சௌதி அரேபியா (அதாவது மக்கா வரை) இருக்கும். இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? தேவன் கொடுத்த பரிசுத்த பூமியை எடுத்துக்கொள்ளும் படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன வசனம் இன்னும் குர்-ஆனில் உள்ளது. இதன் படி இஸ்ரவேல் மக்கள் இன்றுள்ள சௌதி அரேபியாவின் பாதியை அல்லாவின் கட்டளைப்படி சுதந்தரித்துக்கொள்ளலாம்.



குர்-ஆன் 5:20 அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி , "என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்;. அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்;. உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும். (5:20)

குர்-ஆன் 5:21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார். (5:21)





இதை எடுத்துக்கொள்வதற்கு தயக்கம், புறமுதுகு காட்டவேண்டாம் என்று கூட அல்லா மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்.

இது யூதர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவும், முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான செய்தியாகவும் மாறும்.

பாரான் என்பது இஸ்ரவேலுக்கு அருகாமையில் இருந்ததால் தான் அவர்கள் மோசேயின் காலத்தில், பாரான் எல்லை வரை தங்களுக்கு தேவன் கொடுத்த இடமாக சுதந்தரித்துக்கொண்டார்களே தவிர, அன்று பாரான் என்பது மக்காவரை (இஸ்ரவேலிலிருந்து பல நூறு கிலோ மீட்டர்கள்) இருந்திருக்குமானால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் எல்லையும் அதிகமாக இருந்திருக்கும்.

எனவே, இஸ்லாமியர்களுக்கே இந்த கேள்வியை விட்டுவிடுகிறேன். மக்கா தான் பாரான் என்றுச் சொல்லி, மக்கா வரை (அல்லா கட்டளைப்படி) யூதர்களுக்கு கொடுக்க முன்வருவீர்களோ அல்லது, பாரான் வேறு மக்கா வேறு என்றுச் சொல்லி, பைபிள் சொல்லும் எல்லைகள் தான் தேவன் அவர்களுக்கு கொடுத்தார் என்று முடிவு செய்வீர்களோ! அது உங்கள் விருப்பம் .

3.7 தலைப்பின் பின் குறிப்பு: இந்த விவரங்கள் பாரான் தான் மக்கா என்று இஸ்லாமியர்கள் சொல்வதினால், பைபிளில் சொல்லப்பட்ட எல்லைகளை கணக்கிட்டால் கிடைக்கும் விவரங்களே தவிர, மற்றபடி இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு சொல்லப்படவில்லை. என்னை பொருத்தவரையில், முஸ்லீம்கள் எப்படி இயேசுவை அங்கீகரிக்கவில்லையோ அதே போல தான் இன்றைய யூதர்களும். எனவே நான் யூதர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று எண்ணவேண்டாம். நான் முன்வைத்த ஆதாரங்கள் சரியானவையா என்று பாருங்கள்.

The southern boundary of the Israelite promised land was given as "Your southern side will include some of the Desert of Zin along the border of Edom. On the east, your southern boundary will start from the end of the Salt Sea [ i.e. Dead Sea], cross south of the Scorpion Pass, continue on to Zin and go south of Kadesh Barnea. Then it will go to Hazar Addar and over to Azmon, where it will turn, join the Wadi of Egypt and end at the Sea [i.e., Mediterranean]" (Numbers 34:3-5). That Wilderness of Paran and Zin are next to each other is clear from the spies' route given above. Zin and Kadesh are clearly to the south of Israel (in fact, Num 20:1, 27:14, 33:36 indicate that Kadesh is in the Desert of Zin), so to demand that Paran is on the 400-500 miles to the south east of Israel requires an impossible boundary. Moreover, it must also mean that the Israelite Promised Land includes part of Arabia (and comes very close to Mecca).... unthinkable to a Muslim indeed! Surely, the Jews will be delighted at this assertion. The Qur'an affirmed the land was ordained for them: Source : http://www.answering-islam.org/Responses/Al-Kadhi/r06.04.html



இக்கட்டுரை இன்னும் தொடரும்....

அடுத்த கட்டுரையில் பாரான் பற்றியுள்ள இன்னும் பல ஆராய்ச்சி விவரங்களோடு கர்த்தருக்கு சித்தமானால் சந்திக்கலாம்.





இது தான் இஸ்லாம் எழுதிய "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" கட்டுரையை இங்கு படிக்கலாம்



"
பாரான் மலையின் அக்னி பிரமாணம்" கட்டுரைக்கு, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதரர் மைகோவை அவர்களின் மறுப்பை இங்கு படிக்கலாம்.
பாரான் மற்றும் மக்கா பற்றிய இதர கட்டுரைகள்:

1.
MUHAMMAD IN THE BIBLE A reply to Dr. Jamal Badawi By Samuel Green

2.
Answering Dr. Jamal Badawi: Muhammad in the Bible By Sam Shamoun

3. (The Wilderness of) Paran

4.
The claims regarding Paran

5. Ishmael is not the Father of Muhammad

6.
Ishmael Is Not the Father Of Muhammad Revisited

7.
Habbakuk 3:3 1
 
 
 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1

  

பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு

மைகோவை
 
அன்புள்ள இது தான் இஸ்லாம் நண்பர்களுக்கு,

உங்களின் பாரான் மலையிலிருந்து என்ற கட்டுரையை படித்தவுடன் நீங்கள் எந்த நிலையில் மற்ற வேதங்களை அணுகுகிறீர்கள் என்ற சந்தேகம் உண்டானது.

இது தான் இஸ்லாம் கட்டுரை: பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர்

முன்னுரை

உங்களின் பிற மதங்கள் என்ற தலைப்பில் இந்து மதத்தின் கல்கி பகவான் முகமது நபி அவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.அதே போல் இந்த கட்டுரையிலும் பரிசுத்தர் என்பது ஜீப்ரீல் தூதன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது தான் இஸ்லாம் கட்டுரை: பிற மதங்கள்

மற்ற மதங்களின் விஷயங்களை ஆராயும் முன் அவர்களின் அடிப்படையான விஷயங்களை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும்

1. "கல்கி பகவான்" பற்றி உங்கள் கருத்து:

இந்து மதத்தின் கல்கி பகவான் முழு முதல் கடவுளின் மனித அவதாரமாகும். எத்தனையோ ஒற்றுமைகளை காண்பித்த நீங்கள் ஏன் இந்த விஷயத்தை மறந்து போனீர்கள். இஸ்லாமிலோ, குரான், ஹதீஸ் அகியவற்றில் முகமது நபியவர்களை முழு முதற் கடவுளின் அவதாரமாக எங்கேயாவதும் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது கடைசி நாட்களில் சீரழிந்த உலகத்துக்கு தண்டணை வழங்க ( நீயாயதீர்ப்பு செய்ய) முகமது நபியவர்கள் வந்தார்களா? அப்படியில்லை என்றால் அவர் எப்படி கல்கி பகவானாக ஆக முடியும். நீங்கள் நபிகள் நாயகம் அவர்களை பற்றி சொல்லுவது உலகை அன்பினால் நேர்வழிப்படுத்த வந்தார் என்று பின் எப்படி அவர் உலகம் முழுவதுக்கும் நீயாயாதிபதி ஆக முடியும்

இந்து மதத்தின் கல்கி பகவான் முழு முதற்கடவுளின் அவதாரம், உலகத்தின் கடைசி நாட்களில் உலகத்தில் அநீதி பெருகிவரும் பொழுது உலகத்துக்கு வந்து அதாவது உலகை நீயாயம் தீர்பதற்காக வருபவர் என்று இந்து மதத்தினர் நம்புகின்றனர்.

இவருக்கும் முகமது நபி அவர்களுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?

இது பற்றி விவரமாக எழுதுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். கர்த்தருக்கு சித்தமானால் இதை தனி கட்டுரையாக பார்ப்போம்.

2. "பரிசுத்தர்" என்ற வார்த்தையைப் பற்றிய உங்கள் கருத்து தவறானது:

நீங்கள் தவறாக குறிப்பிட்டு உள்ள மிக முக்கியமான வார்த்தைகளில் இதுவும் ஒன்று. பைபிளில் இந்த பதம் யாருக்கு உபயோகிக்க பட்டுள்ளது என்றே தெரியாமல் இந்த வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு ஏக இறைவனுக்கு இணைவைக்கும் செயலில் இறங்கி உள்ளதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. முதலாவது பைபிளின் பழைய ஏற்பாட்டில் பரிசுத்தர் என்ற வார்த்தை வரும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


லேவியராகமம் 11:44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர் ; ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

லேவியராகமம் 11:45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக .

லேவியராகமம் 19:2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர் , ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

லேவியராகமம் 22:32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன் ; நான் உங்களப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

சங்கீதம் 22:3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர் .

ஏசாயா 6:3 ஒருவரையொருவர் நோக்கி, சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் , பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

ஏசாயா 10:17 இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

ஏசாயா 12:6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். 3

ஏசாயா 30:13 இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார் .

ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார் .

ஏசாயா 41:20 கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

ஏசாயா 49:7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர் , மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.

ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் எனகிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார், உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

எசேக்கியேல் 38:16 நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை எனதேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

எசேக்கியேல் 39:27 நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள்
நாள் பரிசுத்தர் என்று விளங்கு.

ஓசியா 11:9
என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.

ஆபகூக் 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. .



இதில் ஒரு இடத்திலாவதும் இந்த பரிசுத்தர் என்ற வார்தை மனிதர்களுக்கோ அல்லது தூதர்களுக்கோ பயன்படுத்தப்படவில்லை. ஏக நாயனான படைப்பாளனையே பரிசுத்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இதை வார்த்தையை பைபிளின் புதிய ஏற்பாட்டில் பார்த்தால் தேவனையும், அவருடைய வார்த்தையாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.



மாற்கு 1:24 அவன், ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன?எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர்தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.

லுூக்கா 4:34 அவன், ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.

அப்போஸ்தலருடைய 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

அப்போஸ்தலருடைய 13:35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.

1 பேதுரு 1:16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

வெளிப்படுத்தின 4:8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தவைகள், இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

வெளிப்படுத்தின 15:4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர் , எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.



இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடே "தேவன் மனிதனாக வந்து மனிதர்களின் பாவத்துக்காக மரித்தார்" என்பதே.  எனவே பரிசுத்த வேதாகமம் முழுவதும் பரிசுத்தர் என்று வரும் அனைத்து வார்த்தைகளும் தேவனையே குறிக்கும் வேறு எந்த தூதனையும் குறிக்காது என்பதே.

3. "பாரான்" வனாந்திரம் "அரேபியாவின் மக்கா" அல்ல

பரிசுத்த வேதாகமத்தை ஆழ்ந்து வாசிக்கும் போது நாம் இந்த பாரான் வனாந்திரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். பாரான் வனாந்திரம் என்பது மிகப்பெரிய வனாந்திரம். இதன் ஒரு பகுதியே "பெயர்செபா" வனாந்திரமாக இருந்தது. இது காதேஷ் என்றும் அழைக்கப்பட்டது

ஆதியாகமம்21;13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்

ஆதியாகமம்21;20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில் , அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

ஆதியாகமம்21;.33. ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி , சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

ஆதியாகமம்22;19. ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.

ஆதியாகமம்: 23;2. கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் மரித்தாள்;



இந்த வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளுவது ஆபிரகாம் வாழ்ந்த கானான் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய வனாந்திரப்பகுதி பாரான். இதன் மற்ற பகுதிகளுக்கு வேறு பெயர்கள் இருந்தன. இதில் முக்கியமான ஒரு பகுதி பெயர்செபா.  இந்த பகுதியில் தான் ஆபிரகாம், சாராள், ஈசாக்கு குடியிருந்தனர். மற்றொரு பகுதியில் ஆகார், மற்றும் இஸ்மாவேல் அலைந்து திரிந்து வந்தனர்.வேதம் தெளிவாக சொல்கிறது இதன் பின் அவர்கள் பாரானின் இன்னொரு பகுதியில் குடியிருக்கும் போது தான் (அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.) என்று வேதம் சொல்கிறது.  இந்த சம்பவத்தை எழுதும் போது இஸ்மவேல் அங்கு இல்லை என்பது அவன் பாரான் வனாந்திரத்தில் குடியிருக்கையில் என்று தெளிவாக எழுதப்பட்டதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த பகுதிக்கு பெயர்செபா என்ற பெயரை வைத்ததே ஈசாக்கு தான்

ஆதியாகமம்26;23 . அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.24. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.25. அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.26. அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.27. அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி, ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.28. அதற்கு அவர்கள், நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம், ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.29. நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.30. அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.31. அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.32. அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.33. அதற்கு சேபா என்று பேரிட்டான் ; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.



இதற்கு பின் ஈசாக்கும் அவன் பிள்ளைகளும் பெயர்செபாவில் வசித்து வந்தார்கள்

ஆதியாகமம் 28:6

6. ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில், நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,7. யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,8. கானானிய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,9. ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.10. யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,11. ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்

ஆதியாகமம்: 36 .6. ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.7. அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்த படியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.8. ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.



மேலும் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மோசே மூலம் விடுதலை ஆன இஸ்ரவேல் மக்கள் கானானின் ஒரு பகுதியாகிய பாரானில் மீண்டும் வந்து குடியேறினர்

எண்ணாகமம்: 13 1. கர்த்தர் மோசேயை நோக்கி,2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்;

13:26. அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

யோசுவா: 12 ,5. எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான். 6. அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான் .

 

கர்த்தரின் உழியக்காரனாகிய மோசே இஸ்ரவேலின் இரண்டரை கோத்திரங்களுக்கு பாரான் வனாந்திரப்பகுதிகளை பிரித்து சுதந்திரமாக தந்ததில் இருந்து இந்த பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் தேசத்தின் பகுதிதான் என்று நாம் விளங்கிகொள்ளலாம்.

இதற்கு பின்னும் பாரானின் பெயர்செபா இஸ்ரவேல் இராஜாக்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆளுகைக்குள் இருந்தது


1 நாளாகமம்: 19 1. யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.2. அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி, துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.3. ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.4. யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபா தொடங்கி , எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்..



இந்த பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் தேசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே இருந்துள்ளது. எனவே இந்த பாரான் வனாந்திரத்துக்கும் பல நூறு மைல் தொலைவில் உள்ள சவுதி அரேபியாவின் ஹிரா குகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதையும் நாம் அறியலாம்

4. இஸ்மவேல் சந்ததியின் வரலாறு:

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன் தான் ஆனால் வாக்குதத்தம் (நன்மரங்)   கூறப்பட்டவன் அல்ல.

இஸ்மவேல் மரணத்துக்கு பின் அவன் சந்ததி பெயர்செபாவைவிட்டு அதாவது பாரான் வனாந்திரத்தை விட்டு ஆவிலா துவங்கி எகிப்து மட்டும் குடியேறினர்.  இதை கீழே உள்ள வசனத்தின் மூலம் அறியலாம்.

ஆதியாகமம்25;17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.



மேலும் இஸ்மாவேலுக்கேன்று தனி சந்ததி ஏதும் இருந்ததாக தெரியவில்லை(அதாவது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்று சொல்லும் அளவிற்கு ஒரு குறிப்பிட்ட சந்ததி மூலமாக அறியப்படுவது போல, இஸ்மவேலின் சந்ததிகள் இல்லை). ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் கீழே உள்ள வசனங்களை வாசியுங்கள்

ஆதியாகமம்: 25;13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,14. மிஷ்மா, தூமா, மாசா,15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி



இஸ்மாவேலுக்கு பின் அவன் சந்ததி பற்பல சந்ததியாக பிரிந்து, பல இடங்களில் இன கலப்பு கலாச்சாரத்தால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து போனதை நாம் வேதத்தில் காணலாம்.

முதலில் ஏசா இஸ்மவேலின் மகளை திருமணம செய்கிறான். பின் அவன் ஏதோமியன் என்ற மக்கள் கூட்டத்தின் தகப்பன் ஆகிறான். அங்கும் இஸ்மவேலுக்கு இடமில்லை.

ஆதியாகமம் 28:9 ,9. ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.

 

இதன் பின் நாம் இஸ்மவேலரை பார்க்கும் போது அவர்கள் இன்னொரு கூட்டத்தின் பெயரையும் தாங்கியே வருகின்றனர்.

ஆதியாகமம்: 37: 22. அவர்களை நோக்கி, அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.23. யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,24. அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.25. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.26. அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி, நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?27. அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.28. அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்36. அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.



இதற்கு பின் இஸ்மவேலின் சந்ததி தனித்தன்மை இல்லாமல் மீதியானியர் என்ற கலப்பின பெயரோடே தான் வருகிறார்கள்.  யார் இந்த மீதியான்.  இவன் ஆபிரகாமின் இன்னொரு மறுமனையாட்டியின்(கேத்துராளின்)மகன்

ஆதியாகமம்: 25: 1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.3. யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்4. மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

 

இந்த மீதியானர்கள் இஸ்மவேலர்களுடன் கலப்பின மக்களே, அதனால் தான் வேதத்தில் மீதியானியர் என்று வருபவர்கள் இஸ்மவேலர்களாகவே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

இந்த மீதியானியர்களில் இருந்துதான் மோசே திருமணம் செய்திருந்தார், அதனால் தான் ஆரோனும், மிரியமும் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தனர். இதற்கு பின் நீயாயாதிபதிகள் காலத்தில்
இந்த மீதியானியர் இஸ்ரவேல் ஜனத்துக்கு விரோதமாக எழும்பினர்(மோசே கூட ஒரு இஸ்மவேலின் வம்சத்தில் வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார் சொல்லி, அதற்காக ஒரு கட்டுரையை எழுதாதீர்கள். அதனால், இஸ்லாமுக்கோ, முகமது நபிக்கோ ஒரு பயனுமில்லை. )

நியாயாதிபதிகள் 6:2 மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:7 இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

நியாயாதிபதிகள் 6:13 அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி, ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

நியாயாதிபதிகள் 8:1 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி, நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.

நியாயாதிபதிகள் 8:22 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி, நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரானின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 8:28 இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.

நியாயாதிபதிகள்: 8 21. அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.22. அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி, நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரானின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.23. அதற்குக் கிதியோன், நான் உங்களை ஆளமாட்டேன்;என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.24. பின்பு கிதியோன் அவர்களை நோக்கி, உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிட்த்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.25. இஸ்ரவேலர், சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.26. பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்த்து.

 

இந்த மீதியானியர்கள் அதாவது கலப்பின இஸ்மவேலர்கள் அந்தக்காலத்திலேயே இளம் பிறை சந்திரனை போன்ற ஆபரணங்களை அணிபவர்கள். இந்த சந்ததியில் இருந்து வருபவர் எப்படி இஸ்மவேலின் சந்ததியாக முடியும். இஸ்மவேல் இஸ்ரவேலர்களுக்கு நேருங்கிய இனத்தவர்.  அவரை இஸ்ரவேலர்கள் பகைத்ததாகவோ, அல்லது மறந்ததாகவோ வேதத்தில் சொல்லப்படவில்லை. மாறாக யூதா வம்சத்தவர்களே இஸ்மவேல் என்ற பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துள்ளார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்.

1 நாளாகமம் 19:11 இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்ரு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

 மேலும் ஆசாரிய புத்திரர்கள் கூட இஸ்மாவேல் என்ற பெயர் இடப்பட்டு உள்ளனர், பார்க்க எஸ்றா 10:22.

எஸ்றா 10:22 பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்.

இஸ்ரவேல் இராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் கூட இஸ்மாவேல் என்ற பெயரை வைத்திருந்தனர் பார்க்க எரேமியா 41:1.

எரேமியா 41:1 பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும் , அவனுடனே கூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.

 

மேலே கண்ட வசனங்களில் இருந்து இஸ்மவேலை இஸ்ரவேல் மக்கள் அதிகமாக நேசித்து உள்ளார்கள் என்று அறியலாம்

முடிவுரை

முதலாவது பரிசுத்தர் என்ற பதம் இறைவனை தவிர யாருக்கும் பைபிளில் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வார்த்தையை மட்டும் இங்கே இருந்து எடுத்து வேறு கருத்தை தவறாக நுழைக்க பார்க்காதீர்கள்.

பாரான் வனாந்திரம் என்பது இஸ்ரவேல் எல்லைக்கு உட்பட்ட இடமே ஆகும். எனவே இந்த பாரான் வனாந்திரத்துக்கும் முகமது நபிகள் வாழ்ந்த சவுதி அரேபியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கும் இதற்கும் பல நூறு மைல் தூரம் உண்டு.

இஸ்மவேல் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட முற்பிதா.ஆனால் அவரின் பிள்ளைகள் காலத்தில் பிரிந்த அவரின் சந்ததி பல கலப்பினத்தால் இஸ்மவேலர்கள் என்ற தனித்தன்மையில்லாமல் மீதியானியர்கள் என்ற புனை பெயரோடு இஸ்ரவேலர்களை துன்புறுத்தி வந்துள்ளது வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் ஈசாக்கு தான் ,அவரின் சந்ததியிலேயே மனிதகுல மீட்பர் தோன்றினார். அவரே வாக்கு பண்ணப்பட்ட மேசியா.இறைவனின் வார்த்தையாகிய பரிசுத்தர் .

அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இவரே அந்த பரிசுத்தர் உலகின் அனைத்து மதங்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நீயாயாதிபதி.
இதைதான் வேதம் சொல்லுகிறது.

உபாகமம்: 33:2  . . . . . . .  பாரான் மலையிலிருந்து பிரகாசித்து , பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.3. மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில்விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

ஆபகூக் 3;.3. தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார் ; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது

வெளிப்படுத்தின விஷேசம் 19;11. பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.12. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே14. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.



அன்பு சகோதரர்களே இந்த ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுங்கள். காலம் சமீபமாய் இருக்கிறது.


இக்கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொள்ள:: mycoimbatore@gmail.com

 
All opinions expressed in the articles belong to their respective authors, and do not necessarily represent the opinions of Isa Koran site.