BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல
இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.
1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.
2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.
3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.
இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.
1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?
3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?
4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)
இஸ்லாமிய அறிஞர்கள் "முகமதுவை" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க, மாற்று மத வேதங்களின் வசனங்களில் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு முயற்சியே இந்த வாதம். அதாவது, பைபிளில் வரும் "பாரான் வனாந்திரம்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" என்று சொல்கிறார்கள். எனவே, பாரான் குறித்து வரும் சில வசனங்கள், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவைக் குறிக்கும் என்று சொல்கிறார்கள்.
இவர்களின் இந்த வாதம் அல்லது நம்பிக்கை சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.
1. திருத்தப்பட்ட வேதம் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் "பைபிளின்" வசனங்களை ஆதாரமாக இஸ்லாமியர்கள் முன் வைப்பது ஏன்?
பைபிளில் (தோரா, ஜபூர், இஞ்ஜில்) நேர்வழியும், வெளிச்சமும் உண்டு என்று குர்-ஆன் வசனங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்கள் "பைபிள்" மாற்றப்பட்டது, திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள். பைபிள் இறைவனின் வார்த்தை இல்லை, அது மாற்றப்பட்டது என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், அதே நேரத்தில் "முகமது" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க "பைபிளின்" வசனங்களை ஆதாரங்களாக காட்டுகிறார்கள்.
உண்மையாகவே அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்பினால்:
a) முகமதுவை "நபி" என்று நிருபிக்க ஏன் பைபிள் வசனங்களை நம்புகிறார்கள்?
b) ஒரு புத்தகம் வேதம் இல்லை என்று அடித்துச் சொல்லும் நீங்கள் ஏன் அதன் சில (உங்களுக்கு சாதகமாக தென்படுகின்ற) வசனங்களை நம்புகிறீர்கள்?
c) பைபிள் வசனங்கள் மாற்றப் பட்டது என்றுச் சொன்னால், நீங்கள் காட்டும் வசனங்கள் மட்டும் எப்படி திருத்தப்படாமல் இருக்கும்?
எனவே, ஒரு புத்தகம் வேண்டமென்றால், அதன் எல்லா வசனங்களும் வேண்டாம் என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய, சில வசனங்களை மட்டும் நம்பவேண்டியது, அடுத்த வசனத்தை நாங்கள் ஆதரமாக காட்டினால், அது திருத்தப்பட்டது என்றுச் சொல்வது, சரியான வாதமாக அல்லது ஆதாரமாக இருக்காது.
ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படி அல்ல. நாங்கள் பைபிளை மட்டும் வேதம் என்று நம்புகிறோம். பைபிளில் வரும் செய்திகளை திருத்தி எழுதப்பட்டது குர்-ஆன் என்று நம்புகிறோம். இருந்தாலும், ஏன் அதன் வசனங்களை சிலவற்றை ஆதாரமாக கொடுக்கிறோம் என்றால், பைபிளின் செய்திகளை தவறாக புரிந்துக்கொண்டு எழுதியதால், தவறுதலாக சில பைபிள் செய்திள்கள் அப்படியே குர்-ஆனில் வந்துவிட்டது என்று சொல்கிறோம். குர்-ஆன் "வேதம்" என்று நம்பி நாங்கள் ஆதாரங்களை முன்வைப்பதில்லை. பைபிளும் தனக்கு பின் ஒரு நபி வருவார், ஒரு வேதம் வரும் என்று சொல்வதில்லை.
2. பாரான் வனாந்திரம் வரைபடம்(Map) மற்றும் மக்காவின் வரைபடம்(Map):
கீழே உள்ள படங்களைப் பாருங்கள். இதில் "பாரான் வனாந்திரம்" மற்றும் "மக்கா" எங்குள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.
Source: http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு வரும்போது தங்கிய 18 இடங்களை இந்த படத்தில் காணலாம்.
கானானுக்கும் பாரானுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றும், மக்காவிற்கு எவ்வளவு தூரம் உள்ளது என்றும் இப்படங்களின் முலமாக தெரிந்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள கூகுல் யர்த்( Google Earth) வரைபடத்தைப் பார்க்கவும். இதில் எருசலேம், மற்றும் மக்கா எங்குள்ளது என்று சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். மற்றும் தமிழில் எழுதி, கோடுகள் வரைந்துள்ளேன்.
இப்படத்தை கூகுல் யர்த்தில்(Google Earth) பார்க்கவேண்டுமானால், பூமியிலிருந்து 1528.20 மைல்கள்(Eye alt 1528.20 mi) உயரத்திலிருந்து பார்க்கவேண்டும். மற்றும் படத்தின் இடது பக்கம் அடியில் காட்டியபடி அளவு கோள் 531 மைல்கள் (Scale 531 mi) காட்டப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த படத்தில் காணலாம். Jerusalem and Makka at Google Earth Full Image
3. பாரான் வனாந்திரமும், மக்காவும் வெவ்வேறானவை என்பதற்கான காரணங்கள்:
3.1. ஈசாக்கும், இஸ்மவேலும் சேர்ந்தே ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் ( 89 வயது இஸ்மவேல் மக்காவின் இருந்திருந்தால், ஆபிரகாமின் அடக்கத்திற்கு இஸ்மவேல் எப்படி வந்தார் ?)
ஆகாரும் இஸ்மவேலும் பாரானில் குடியிருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆபிரகாம் மரித்த போது, ஈசாக்கும், இஸ்மவேலும் ஒன்றாக சேர்ந்து தான் அவரை அடக்கம் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது, அதையும் இஸ்லாமியர்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் தள அன்பர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆதியாகமம்: 21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
ஆதியாகமம்: 25:8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள் .
ஆதியாகமம்: 25:18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி
ஒரு வேளை இஸ்லாமியர்கள் சொல்வது போல, ஆகாரும் இஸ்மவேலும் மக்காவில் வாழ்ந்ததாக வைத்துக்கொண்டால், ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் எப்படி மக்காவிலிருந்து, கானானுக்கு இவ்வளவு சீக்கிரமாக வரமுடியும். "பாரான் வனாந்திரம்" மக்காவை குறிக்கும் என்று இஸ்லாமியர்களின் வாதம் இங்கு பலவீனமாகிவிடுகிறது.
எருசலேமுக்கும், மக்காவிற்கும்(காபா) இடையே சுமார் : 1234 கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்று www.timeanddate.com என்ற தளம் ஆகாயமார்க தூரத்தை கணக்கிட்டுச் சொல்கிறது.
இந்த தளத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள "ஆகாய மார்க்கமாக" தூரம் கணக்கிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
http://www.timeanddate.com/worldclock/distanceresult.html?p1=110&p2=151
or
http://www.timeanddate.com/worldclock/distance.html
Distance from Jerusalem to Makkah
Distance is 1234 kilometers or 767 miles or 667 nautical miles
The distance is the theoretical air distance (great circle distance). Flying between the two locations's airports can be longer or shorter, depending on airport location and actual route chosen.
ஆகாய மார்க்கம் என்றாலே 1234 KM உள்ளது, ஆனால் தரை மார்க்கம் என்றால் மலைகள், காடுகள், பாலைவனம் என்று இன்னும் தூரம் அதிகமாகும். ஆபிரகாம் மரித்தது பெயர்செபா என்பதால், ஒரு பேச்சுக்காக 1000 KM என்றே வைத்துக்கொள்வோம்.
ஆதியாகமம்16:16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் .
ஆதியாகமம்: 25:7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
இஸ்மவேலை ஆபிரகாம் பெற்ற போது, ஆபிரகாமுக்கு 86 வயது, மற்றும் மரிக்கும் போது ஆபிரகாமின் வயது 175. ஆக, ஆபிரகாம் மரிக்கும் போது இஸ்மவேல் கிட்டத்தட்ட 89 வயது முதியவராக இருந்திருப்பார்.
a) 89 வயது முதியவராகிய இஸ்மவேல், ஆபிரகாம் மரிக்கும் போது மக்காவிலிருந்து, பெயர்செபாவிற்கு எப்படி ஓரிரு நாட்களில் 1000 கிலோ மீட்டரை தாண்டி வரமுடியும்?சரி இதற்கு சரியான பதில் என்னவென்றால், ஆகாரும் இஸ்மவேலும் வாழ்ந்தது இப்போதுள்ள மக்காவில் அல்ல, பாரான் வனாந்திரம் என்பது பெயர்செபாவிற்கு தெற்காக, எகிப்திற்கு கிழக்கிலே உள்ளது என்பது தான் உண்மை. எகிப்திற்கு அருகாமையில் இருப்பதால் தான், ஆகார் தன் மகனுக்கு எகிப்திய பெண்ணை திருமணம் செய்தார்கள்.
b) அல்லது அண்ணன் வரும் வரை தம்பியாகிய ஈசாக்கு ஆபிரகாமின் உடலை பத்திரமாக எப்படி அழுகாமல் வைத்து இருக்கமுடியும்? (அந்த காலத்தில் மரித்த உடலை பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர் சாதனப் பெட்டி போன்ற வசதி இருந்ததா?)
c) இஸ்மவேல் 1000 KM எப்படி வந்தார்? குதிரையில், ஒட்டகத்தில் வந்தாலும் ஓரிரு நாட்களில் வர முடியாது?
d) இஸ்மவேலுக்கு செய்தியைச் சொல்ல ஒருவர் மக்காவிற்கு(இஸ்லாம் படி பாரானுக்கு) சென்று இருக்கவேண்டுமல்லவா? அப்படி செல்வதற்கும் அதிக நாட்கள் ஆகுமே?
இல்லை, பாரான் என்பது மக்கா தான் என்று சொல்வீர்களானால், இதற்கு பதில் சொல்லுங்கள்:
ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் வந்தாரா இல்லையா?
வந்தார் என்று சொல்வீர்களானால், எப்படி 89 வயது உள்ள ஒரு மனிதன், 1000 KM லிருந்து ஓரிரு நாட்களில் வரமுடியும்? சொல்லுங்கள்? 1000 KMக்கு அதிகமான தூரத்தில் இருப்பவருக்கு ஆபிரகாம் மரித்த செய்தி எப்படி சென்று அடைந்தது?
எஸ்றா என்பவர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு, யூப்ரடீஸ் டைக்ரீஸ் வழியாக (900 மைல்கள்) வருவதற்கு 4 மாதங்கள் ஆனது என்று பைபிள் சொல்கிறது ( பார்க்க எஸ்றா அதிகாரம் 7:9). இஸ்மவேலுக்கு மக்காவிலிருந்து பெயர்செபாவிற்கு வர எத்தனை நாட்கள் பிடித்திருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் (சுமார் 750 மைல்கள் ஆகாய மார்க்கமாக, தரை மார்க்கமாக இன்னும் அதிகம்).
மேலே பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால், பாரானும் மக்காவும் ஒன்றல்ல. பைபிள் சொல்லும் பாரான், பெயர்செபாவிற்கு அருகாமையில் உள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.
நான் காட்டிய விவரங்கள் தவறு என்றுச் சொன்னால், எங்கே தவறு என்று நீங்களே சொல்லுங்கள்? ஆதாரங்கள் எதுவும் காட்டாமல் "நீங்கள் சொல்வது தவறு என்று" சொல்லக்கூடாது. இது படித்தவர்களுக்கு அழகல்ல.
3.2. மோசேவும், இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து வரும் போது மக்காவில் (இஸ்லாம் படி பாரானில்) கால் வைத்தார்களா?
இஸ்ரவேல் மக்கள், மற்றும் மோசே சீனாய் வானாந்திரத்திலிருந்துச் சென்று பாரான் வனாந்திரத்திலே பாளயம்(தங்குதல்) இறங்கினார்கள் என்று படிக்கிறோம். எகிப்திலிருந்து பயணம் பாரான் வழியாக இருந்தது, அந்த பாரான் மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.
எண்ணாகமம்: 10:11. இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.12. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று .
எண்ணாகமம்: 12:16. பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
இஸ்லாமியர்கள் சொல்வது போல, பாரான் தான் மக்கா என்றால், 20 லட்சம் இஸ்ரவேலர்களை அழைத்துக்கொண்டு மோசே பாரானில் (மக்காவில்) பாளயம் இறங்கியதாக பொருள். எகிப்திலிருந்து புறப்பட்டவர்கள் பிள்ளைகள், பெண்கள் தவிர மொத்தம் 6 லட்சம் பேர். பெண்கள பிள்ளைகளைச் சேர்த்து 20 லட்சம் பேர் இருக்கக்கூடும் என்று வேத அறிஞர்கள் கணக்கிடுகின்றனர்.
யாத்திராகமம்: 12:37. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள் .38. அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
பாரான் என்பது மக்கா என்றுச் சொன்னால், கீழே உள்ள சில கேள்விகள் எழுகின்றன.
ஏன் அல்லா இந்த மிகப்பெரிய நபி மக்காவில், காபாவில் தொழுதுக்கொண்ட விவரத்தை சொல்லாமல் விட்டுவிட்டார்? காரணம், இஸ்ரவேல் மக்கள், மோசே தங்கியது அரேபியாவின் மக்கா அல்ல, அது சீனாய் தீபகர்ப்ப பகுதியில் உள்ள பாரான் வனாந்திரம் ஆகும்.
a) குர்-ஆன், ஹதீஸ்கள் படி, மக்காவில் உள்ள காபாவை ஆதாம், அடுத்து ஆபிரகாம், இஸ்மவேல் கட்டினார்கள்.
b) அப்படியானால், மோசே மக்காவில் கால் பதித்தார். அவர் காபாவில் அல்லாவை தொழுது இருக்கவேண்டுமல்லவா?
c) அவர் காபாவில் கல்லாவை தொழுததாகவோ, இஸ்ரவேல் மக்கள் தொழுததாகவோ ஏதாவது குர்-ஆன் வசனம் உண்டா? அல்லது ஏதாவது ஹதீஸ் இருக்கிறதா ?
d) மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் கருத்துப்படி, மக்காவில் இஸ்மவேலின் வம்சம் இருந்திருக்கவேண்டும்? அதாவது 400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்மவேலின் வம்சம் மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருக்கவேண்டும். இஸ்ரவேல் மக்களும், இஸ்மவேல் மக்களும் சந்தித்ததாக, ஏதாவது தகவல்கள் உண்டா?
e) பல லட்ச மக்கள் மக்காவை கடந்துச் செல்வது ஒன்றும் சின்ன விஷயம் அல்ல? இஸ்ரவேலர்களின் இந்த மிகப்பெரிய யாத்திரை மக்கா மக்களின் மனதில் நிச்சயமாக ஒரு பாதிப்பை அல்லது நீங்கா நினைவை கொடுத்து இருக்கும்.
f) இஸ்ரவேல் மக்கள் மற்றும் அல்லாவின் மிகப்பெரிய நபி மோசே அவர்கள் மக்காவில் கால் வைத்ததாக ஒரு வசனமாவது உண்டா? மற்ற நபிகளை விட இவரைப் பற்றி அதிக வசனங்கள் குர்-ஆனில் வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, இவர் மக்காவில், காபாவில் கால் வைத்ததாக ஏன் அல்லா ஒரு வசனமும் சொல்லவில்லை? (எனக்கு தெரிந்தவரை ஒரு வசனமும் இல்லை, ஏதாவது வசனம் அல்லது ஹதீஸ் இருந்தால் தெரிவிக்கும் படி வேண்டுகிறேன்)
எனவே, பாரான் என்பது மக்கா அல்ல.
3.4 மோசே வேவுகாரர்களை பாரானிலிருந்து அனுப்பினார், அவர்கள் 40 நாட்களில் திரும்பினார்கள்: பாரான் என்பது மக்கா என்றால், இது எப்படி சாத்தியமாகும் .
இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் நிழைவதற்கு முன்பாக, மோசே 12 மனிதர்களை கானான் நாட்டைப பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ளும்படி(வேவுகாரர்களை) பாரானிலிருந்து அனுப்புகிறார். அவர்கள் 40 நாட்களில் திரும்பிவருகிறார்கள் .
எண்ணாகமம்: 13:1. கர்த்தர் மோசேயை நோக்கி,2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான் ; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
எண்ணாகமம்: 13: 25. அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.26. அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
சென்றுவந்த 12 நபர்களில் ஆலேப், மற்றும் யோசுவா என்ற இருவர் மட்டுமே நம்பிக்கையான வார்த்தைகளைச் சொன்னார்கள். மீதம் உள்ள 10 பேர், கானானில் உள்ள மக்களை நாம் வெல்லமுடியாது, அவர்கள் பலசாலிகள் என்றுச் சொன்னார்கள். 10 நபர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மக்கள் கானானுக்குள் நிழைய பயப்பட்டார்கள். இந்த விவரங்களை பைபிளில் எண்ணாகமம் 14:6-9 ல் கணலாம். இதைப் பற்றி குர்-ஆனும் ஒரு விவரத்தைத் தருகிறது. பார்க்க குர்-ஆன் 5:21-23
குர்-ஆன் 5:21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்.
குர்-ஆன் 5:22 அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.
குர்-ஆன் 5:23 (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்.
சில கேள்விகள்:
1. பாரான் என்பது மக்கா என்று இஸ்லாமியர்கள் சொல்வது உண்மையானால், இந்த 12 வேவுக்காரர்கள் கானானைப் பற்றிய தகவல்கள் அறிந்துக்கொள்ள 1000 KMக்கு அதிகமாக சென்று வந்தார்களா?
2. அப்படி சென்றுவரவேண்டுமானால், 40 நாட்கள் அல்ல நான்கு மாதங்களுக்கு அதிகமாக ஆகும்.
3. அவர்கள் கானானிலிருந்து பழங்கள் கொண்டுவந்ததாக படிக்கிறோம். எந்த பழம் உலகத்தில் 4 மாதங்களுக்கு அதிகமாக கெடாமல் இருக்கும்? ( சென்று வந்த நபர்கள் ஒரு முறை கானானுக்கு சென்று, அவ்வளவு தூரம் மறுபடியும் கடந்து வரவேண்டும்)
www.muslim.org என்ற தளம், குர்-ஆனின் 5:22-23 வசனங்களை விவரிக்கும்(Commentary) போது, கீழ்கண்டவாறு பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டுகிறது. (link : http://www.muslim.org/english-quran/quran.htm, Chapter 5, Verses 22-23, PDF Page Number 255)
22a. "All the people that we saw in it are men of a great stature" (Num. 13:32). For the murmurings of the Israelites and their refusal to go against the enemy, see Num. 14:1– 4.
23a. "And Joshua the son of Nun and Caleb the son of Jephunneh ... spoke unto all the company of the children of Israel, saying ... If the Lord delight in us, then He will bring us into this land and give it to us; a land which floweth with milk and honey. Only rebel not ye against the Lord, neither fear ye the people of the land ... their defence is departed from them, and the Lord is with us, fear them not" (Num. 14:6–9).
Part 6] ISRAELITES' VIOLATION OF THE COVENANT 255
மேலே கண்ட விவரங்கள் நமக்கு தெளிவாக சொல்கிறது, பாரன் வனாந்திரம் என்பது "அரேபியாவின் மக்கா" அல்ல. அது கானானுக்கு சில நாட்கள் (Below 20 days) பயணமுள்ள இடம் ஆகும்.
3.5 சாமுவேல் மரித்தபின்பு தாவிது பாரானிலே சென்று தங்கினார் (1 சாமுவேல் 25:1)
சவுல் இராஜா தாவீதை கொல்லவேண்டுமென்று துரத்திக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரையும் இராஜாவாக அபிஷேகம் செய்தவர் சாமுவேல் தீர்க்கதரிசியாவார். இவர் மரித்த போது, தாவீது தான் இருந்த இடத்தைவிட்டு பாரான் வனாந்திரத்திற்கு ஓடிப்போனதாக நாம் 1 சாமுவேல் 25:1ம் வசனத்தில் படிக்கிறோம்.
1 சாமுவேல்: 25: 1. சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
இஸ்லாமியர்களின் வாதத்தின் படி "பாரான்" தான் "மக்கா" என்றால், இன்னும் இஸ்லாமியர்களின் வாதம் பலவீனப்படுகிறது.
தாவீது சவுலுக்கு பயந்து அக்கம் பக்கம் உள்ள மலைகளுக்கு, இடங்களுக்கு தப்பித்துச் செல்கிறார். ஆனால், ஒரு முறை பாரானுக்குச் செல்கிறார். பாரான் தான் மக்கா என்றால், தாவீது சவுலுக்கு பயந்து இத்தனை தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை. அதாவது 750 மைல்களுக்கு அப்பால் தப்பித்துச் செல்லவில்லை.
இஸ்லாமியர்களின் கூற்றில் உள்ள மற்றோரு பிரச்சனை என்னவென்றால், தாவீது கூட "மக்கா"வில் கால் வைத்தார் என்று சொல்வது போல் உள்ளது இவர்களின் வாதம். இதற்கு ஆதாரம் உண்டா? தேவனின் மனதிற்கு ஏற்றவன் தாவீது என்றால், தன் இறைவனை காபாவில் தொழவில்லையா?
ஆதாம் முதல் மக்காவும், காபாவும் இஸ்லாம் படி புன்னிய பூமியாயிற்றே? இங்கு தாவீதும் வந்தார் என்றால், இன்னும் அதன் சிறப்பு கூடுகிறது. தாவீது மக்காவில் (பாரானில் இஸ்லாம் படி) நிழைந்தாரா? ஏதாவது ஹதீஸ் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்.
மக்காவிற்குள் நிழைந்தால், கண்டிப்பாக காபாவில் அல்லாவை தொழவேண்டிய அவசியமில்லை என்று சாக்கு சொல்லவேண்டாம்? காரணம் காபா ஒன்று ஒரு சாதாரண சுற்றுலா தளம் அல்ல, அது அல்லாவின் வீடு, ஆதாம், ஆபிரகாம், இஸ்மவேல் என்று பல இறைவனடியார்கள் கட்டிய ஸ்தலம். பல நூறு மைல்கள் கடந்து வந்த தாவீது, மக்கா வரை வந்த தாவீதிற்கு (இஸ்லாம் படி தாவீதுகூட ஒரு தீர்க்கதரிசி), அல்லா ஏதாவது மக்காவைப் பற்றி சொல்லவில்லையா? தன்னுடைய வீடு இங்குள்ளது என்று சொல்லவில்லையா?
தாவீதை சவுலுக்கு பதிலாக அரசனாக்கவேண்டுமென்று தேவன் முடிவு செய்தார். எனவே, தாவீது கூட அதிகமான தூரம் செல்லாமல், அலைந்துக்கொண்டு இருந்தார், முடிந்த அளவிற்கு சவுலின் கைக்கு எட்டாத தூரம் சென்றார், ஆனால் மக்கா வரை செல்லவில்லை. சவுல் மரித்ததும், தாவீது இராஜாவானார். இவைகளை 1 சாமுவேல், 2 சாமுவேல் புத்தகங்களை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம்.
எனவே, தாவீது ஓடிப்போனது இஸ்ரவேலுக்கு அருகாமையில் உள்ள பாரான் வனாந்திரத்திற்குத் தானே தவிர, பல நுறு மைல்கள் கடந்து "மக்காவிற்கு" அல்ல.
3.6 ஆதாத் சாலொமோமுக்கு எதிராக கலகம் செய்து, எகிப்திற்கு ஓடிப்போகும் போது, பாரானில் தங்கினான்:
பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் நாட்டிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ளது என்பதை கீழ் கண்ட வசனம் நமக்குச் சொல்கிறது.
1 இராஜாக்கள்: 11: 17. ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஒடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.18. அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.
வரைபடத்தை நாம் பார்க்கும் போது தெரிந்துக்கொள்ளலாம், இஸ்ரவேலிருந்து எகிப்திற்கு செல்லும் போது, பாரான் வனாந்திரத்தை கடந்து அல்லது தொட்டுக்கொண்டு செல்லலாம்.
இஸ்லாமியர்களின் வாதம் படி, மக்கா தான் பாரான் என்றால், ஒரு மனிதன் இஸ்ரவேலிலிருந்து எகிப்திற்கு போகவேண்டுமானால், ஆயிர கிலோமீட்டர்கள் கடந்து மக்காவிற்குச்(பாரானுக்கு) சென்று மறுபடியும் அவ்வளவு தூரம் திரும்பி வரவேண்டும். இது ஒரு தவறான கண்ணோட்டம்.
இது எப்படி உள்ளதென்றால், ஒரு மனிதன் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் போக வேண்டுமானால், சென்னையிலிருந்து புது டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து திருவனந்தபுரம் போகவேண்டும் என்று சொல்வது போல உள்ளது.
எகிப்தின் எல்லைக்கு அருகில் பாரான் வனாந்திரம் விரிந்து படர்ந்து இருந்ததால், தான் ஆகார் இஸ்மவேலுக்கு எகிப்து பெண்ணை திருமணம் செய்தார்கள் என்று படிக்கிறோம். இஸ்மவேல் தன் சகோதரருக்கு எதிராக குடியிருப்பான் என்று பைபிள் சொல்வதும் பாரான் கானான் தேசத்திற்கு அருகில் இருப்பதால் தான். அதை விடுத்து அவர் பல நூறு மைல்கள் தூரமாக இருந்தால், இப்படி "எதிராக குடியிருந்தான்" என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
3.7 இஸ்லாமியர்கள் சொல்வதை உண்மையென்று நம்பினால், இன்று யூதர்களுக்கு சவுதி அரேபியாவின் ஒரு பகுதி சொந்தம்
இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் கானான் தேசத்தை கொடுக்கும் போது, அவர்கள் எதுவரைக்கும் உள்ள இடத்தை சுதந்தரித்துக்கொள்ளலாம் என்று எல்லைகளை குறித்துச் சொல்கிறார். இதை மோசே இஸ்ரவெல் மக்களுக்கு சொல்கிறார்.
எண்ணாகமம்: 34:3. உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும் ; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.4. உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,5. அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
பாரான் வானந்திரம், சீன் வனாந்திரத்திற்கு அருகில் உள்ளது. மட்டுமல்ல, காதேஸ் என்ற இடம் சீன் வனாந்திரத்தில் உள்ளது என்பதை எண்ணாகமம் 20:1, 27:14, 33:36க் கொண்டு அறிந்துக்கொள்ளலாம்.
இஸ்லாமியர்களின் வாதத்தின் படி பாரான் என்பது இஸ்ரவேல் நாட்டிற்கு தென்கிழக்கு பக்கமாக 400-500 மைல்கள் உள்ள மக்கா தான் என்று நாம் முடிவு செய்தால்!
இஸ்ரவேலுக்கு தேவன் சொந்தமாக கொடுத்த எல்லை, இப்போது உள்ள சௌதி அரேபியா (அதாவது மக்கா வரை) இருக்கும். இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? தேவன் கொடுத்த பரிசுத்த பூமியை எடுத்துக்கொள்ளும் படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன வசனம் இன்னும் குர்-ஆனில் உள்ளது. இதன் படி இஸ்ரவேல் மக்கள் இன்றுள்ள சௌதி அரேபியாவின் பாதியை அல்லாவின் கட்டளைப்படி சுதந்தரித்துக்கொள்ளலாம்.
குர்-ஆன் 5:20 அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி , "என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்;. அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்;. உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும். (5:20)
குர்-ஆன் 5:21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார். (5:21)
இதை எடுத்துக்கொள்வதற்கு தயக்கம், புறமுதுகு காட்டவேண்டாம் என்று கூட அல்லா மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்.
இது யூதர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவும், முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான செய்தியாகவும் மாறும்.
பாரான் என்பது இஸ்ரவேலுக்கு அருகாமையில் இருந்ததால் தான் அவர்கள் மோசேயின் காலத்தில், பாரான் எல்லை வரை தங்களுக்கு தேவன் கொடுத்த இடமாக சுதந்தரித்துக்கொண்டார்களே தவிர, அன்று பாரான் என்பது மக்காவரை (இஸ்ரவேலிலிருந்து பல நூறு கிலோ மீட்டர்கள்) இருந்திருக்குமானால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் எல்லையும் அதிகமாக இருந்திருக்கும்.
எனவே, இஸ்லாமியர்களுக்கே இந்த கேள்வியை விட்டுவிடுகிறேன். மக்கா தான் பாரான் என்றுச் சொல்லி, மக்கா வரை (அல்லா கட்டளைப்படி) யூதர்களுக்கு கொடுக்க முன்வருவீர்களோ அல்லது, பாரான் வேறு மக்கா வேறு என்றுச் சொல்லி, பைபிள் சொல்லும் எல்லைகள் தான் தேவன் அவர்களுக்கு கொடுத்தார் என்று முடிவு செய்வீர்களோ! அது உங்கள் விருப்பம் .
3.7 தலைப்பின் பின் குறிப்பு: இந்த விவரங்கள் பாரான் தான் மக்கா என்று இஸ்லாமியர்கள் சொல்வதினால், பைபிளில் சொல்லப்பட்ட எல்லைகளை கணக்கிட்டால் கிடைக்கும் விவரங்களே தவிர, மற்றபடி இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு சொல்லப்படவில்லை. என்னை பொருத்தவரையில், முஸ்லீம்கள் எப்படி இயேசுவை அங்கீகரிக்கவில்லையோ அதே போல தான் இன்றைய யூதர்களும். எனவே நான் யூதர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று எண்ணவேண்டாம். நான் முன்வைத்த ஆதாரங்கள் சரியானவையா என்று பாருங்கள்.
The southern boundary of the Israelite promised land was given as "Your southern side will include some of the Desert of Zin along the border of Edom. On the east, your southern boundary will start from the end of the Salt Sea [ i.e. Dead Sea], cross south of the Scorpion Pass, continue on to Zin and go south of Kadesh Barnea. Then it will go to Hazar Addar and over to Azmon, where it will turn, join the Wadi of Egypt and end at the Sea [i.e., Mediterranean]" (Numbers 34:3-5). That Wilderness of Paran and Zin are next to each other is clear from the spies' route given above. Zin and Kadesh are clearly to the south of Israel (in fact, Num 20:1, 27:14, 33:36 indicate that Kadesh is in the Desert of Zin), so to demand that Paran is on the 400-500 miles to the south east of Israel requires an impossible boundary. Moreover, it must also mean that the Israelite Promised Land includes part of Arabia (and comes very close to Mecca).... unthinkable to a Muslim indeed! Surely, the Jews will be delighted at this assertion. The Qur'an affirmed the land was ordained for them: Source : http://www.answering-islam.org/Responses/Al-Kadhi/r06.04.html
இக்கட்டுரை இன்னும் தொடரும்....
அடுத்த கட்டுரையில் பாரான் பற்றியுள்ள இன்னும் பல ஆராய்ச்சி விவரங்களோடு கர்த்தருக்கு சித்தமானால் சந்திக்கலாம்.
இது தான் இஸ்லாம் எழுதிய "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" கட்டுரையை இங்கு படிக்கலாம்
"பாரான் மலையின் அக்னி பிரமாணம்" கட்டுரைக்கு, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதரர் மைகோவை அவர்களின் மறுப்பை இங்கு படிக்கலாம்.
1.
2. Answering Dr. Jamal Badawi: Muhammad in the Bible By Sam Shamoun
3. (The Wilderness of) Paran
4. The claims regarding Paran
5. Ishmael is not the Father of Muhammad
6. Ishmael Is Not the Father Of Muhammad Revisited
7. Habbakuk 3:3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக