ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 24 செப்டம்பர், 2007

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

    
கேள்வியும் நானே, பதிலும் நானே - 1


நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம். அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன். நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவே, தான் தலைப்பு : கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன். என் மெயில் விலாசம்: isa.koran@gmail.com or isa_koran@yahoo.co.in


1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?


என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்
.


2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?


முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார். மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது. முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத் தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன். மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒரு வேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வது தான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.


3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதை விட "என் நம்பிக்கையைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.


2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத் தான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.


தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.


4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .


கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள்(படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத் தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான். எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை. முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும் போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான்(விரோதிக்கக்கூடாது).

5. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள். முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார்களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அது தான் கிறிஸ்துவம், இதைத் தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.


5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?


கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போது தான் அதற்கு வாய்ப்பு "தமிழ் கிறிஸ்டியன்ஸ்" தளம் மூலமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.


6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான். எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவு தான், விளையச் செய்து தேவன் தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும். அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இது தான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன. பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது. மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.


7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?


முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்லவிரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம், அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம். இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.


1. Apology_of_al-Kindy ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்

2.
Download Apology_of_al-Kindy in PDF format

3. Download Apology_of_al-Kindy zip format

4. About Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi in Wikipedia

5. About Apology_of_al-Kindy_(book) in Wikipedia


Quote:
Reference: William Muir, The Apology of Al Kindy, Written at the Court of Mâmûm (Circa A.H. 215; A.D. 830), In Defence Of Christianity Against Islam, Society For Promoting Christian Knowledge, London, England, Second Edition, 1887, pp. 122.

Background: Abd al-Masih ibn Ishaq al-Kindi wrote an apology of the Christian faith to al-Hashimi while serving in the court of the Caliph Al-Mamun in approximately the year A.H. 215 (A.D. 830). This edition of the text was originally prepared by Sir William Muir and first published in 1887. Muir gives the historical setting of the dialogue between al-Kindi and al-Hashimi and includes extensive quotations from this ancient work.


Source:
http://en.wikipedia.org/wiki/Apology_of_al-Kindy_(book)

The Apology (or Risāla) purports to be a record of a dialogue between a Muslim and a Christian. In fact, the book contains two apologies: The Muslim first invites the Christian to embrace Islam. The Christian declines this and in turn invites the Muslim to embrace Christianity. The Christian's answer comprises some six sevenths of the text.

The two participants are referred to by pseudonyms, according to the text to secure their safety. [4]. The Muslim participant, called "Abd-Allah ibn Ismail al-Hashimy" (which translates as "Servant of Allah, son of Ishmael, from the clan Banu Hashim), is described as a cousin of the unnamed Caliph, living in the Caliph's castle and being well versed in Christian theology. He is also described as having a close and trusted Christian friend called "Abd al-Masih ibn Ishaq al-Kindi" (which translates as "Servant of the Messiah, son of Isaac, from the clan Banu Kindah").

In his preface, Muir identifies the Caliph, who remains unnamed in the epistles, as Al-Ma'mun, who reigned from 813 to 833, arguing that


http://en.wikipedia.org/wiki/Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi

Abd al-Masih ibn Ishaq al-Kindi (Arabic,عبد المسيح ابن اسحاق الكندي )(English: servant of Messiah, son of Isaac, from the clan of Kindah) is the alias of a Christian character in the medieval theological work Apology of al-Kindy. The book was translated into Latin by a team working for Peter the Venerable, and into English by Sir William Muir. Abd al-Masih ibn Ishaq al-Kindi lived in the 9th century.


இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாக படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?


முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனை படிக்க ஆரம்பிப்பது அரபியில் தான். தங்கள் தாய் மொழியில் இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி. அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை. நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்றுச் சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?


3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?



இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால் தான் முதலாவது அவர்கள் மார்க்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.


மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல. அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும். எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம். அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டுமென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.
10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு. இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்ட பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு. அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார், இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்றுச் சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டுவந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...

Isa Koran Home Page Back - Question and Answers Index page
1

வியாழன், 20 செப்டம்பர், 2007

ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்

 
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்

முன்னுரை:

இது தான் இஸ்லாம் எழுதிக்கொண்டு வரும் "இயேசுவின் வரலாறு" தொடர்களுக்கு நாம் பதில் எழுதிக்கொண்டு வருகிறோம். இது வரை ஆறு தொடர்கள் வந்துள்ளது மற்றும் அவைகளுக்கு நான் மறுப்பு(பதில்) அளித்துள்ளேன். இந்த தொடர்களில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி "பைபிள் மாற்றப்பட்டுள்ளது" என்று தொடர்ந்து எழுதுவதால், இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதவேண்டாம், ஆதாரத்தோடு பதில் எழுதவும் என்று என் பதில்களில் குறிப்பிட்டுள்ளேன்.

எனவே அவர், இனி பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுவதாக தெரிவித்துள்ளார். எனவே, நானும் இனி குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரகளை எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது சம்மந்தப்பட்ட விவரங்களை இப்பக்கத்தில் காணலாம்.

இது வரை ஈஸா குர்-ஆன் கொடுத்துள்ள பதில்கள்:

1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1)
2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 )
3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 )
4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 )
5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 )
6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New



ஈஸா குர்-ஆன் அளித்த இதர கட்டுரகள், பதில்களை இங்கு காணலாம்: இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளும், எங்கள் மறுப்பும்

இனி ஜி.நிஜாமுத்தீன் எழுதிய கட்டுரையை பார்க்கலாம்.

ஜி.நிஜாமுத்தீன்

அடுத்து இந்த பின்னூடல் இடப்பட்டுள்ள ஈஸா குர்ஆன் வலைப்பூவின் சகோதரர் உமர் அவர்களுக்கு. நீங்கள் அந்தப் பின்னூடலை வெளியிட்டு உங்களுக்கு நியாயமென்று தெரிந்தவற்றை எழுதியுள்ளீர்கள். நன்றி. இது போன்ற பின்னூடல்கள் என் பணியைக் குறைத்துவிடப் போவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளாலும் பொய்யர்களாலும் நான் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு வந்துக் கொண்டிருந்தாலும் என்னால் ஆன இறைப் பணிகளை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். (சிறந்தப் பாதுகாவலனாக இறைவன் இருக்கிறான்) இறைவன் நாடும் வரை என் பணி தொடரும்.

ஈஸா குர்-ஆன்:

கையாலாகாதவர்கள் தான் மிரட்டுவார்கள். அடக்கி ஆள முயற்சிப்பார்கள். நான் மறுப்பு எழுதுவதினால், நான் உங்களையும், இஸ்லாமியர்களையும் ஒட்டுமொத்தமாக விரோதிப்பேன் என்று நினைத்தார்களோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனால், கிறிஸ்து எங்களுக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை. சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார் இயேசு என்று நாங்கள் பைபிளில் வாசிக்கிறோம். இப்படிப் பட்ட அமைதி ஆண்டவரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே, எங்கள் மறுப்பு "எழுத்துக்களுக்கு" மட்டுமே ஒழிய "மனிதர்களுக்கு" அல்ல.

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவின் வரலாற்று தொடருக்கு நீங்கள் எழுதியுள்ள மறுப்புக்கான பதில்களை நான் நிறுத்தியுள்ளேன். காரணம் பைபிளில் என்னக் குறையுள்ளது, என்ன மாற்றம் நடந்துள்ளது என்று நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் பல இடங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் வரலாற்று தொடர் இறுதியில் நாம் பைபிள் நிலவரங்களை எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இன்றைக்கு பைபிளைப் பற்றியே முதலில் எழுத வேண்டும் என்ற நிலையை நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் ஏற்படுத்தி விட்டதால் மற்ற மறுப்புகளை கொஞ்சம் ஒத்தி வைத்து முதலில் பைபிள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். பைபிளின் நிலவரம் என்னவென்று தீர்மானிக்கப்பட்டு விட்டால் மற்றவையை தீர்மானிப்பது சுலபமாகி விடும் என்பதால் உங்கள் தூண்டுதலுக்கு நன்றி.

ஈஸா குர்-ஆன்:

மன்னிக்கவேண்டும் நண்பரே, எங்களை அப்படி கேள்வி கேட்க வைத்ததே நீங்கள் தான். பல முறை பைபிளில் மாற்றம் செய்தார்கள், திருத்திவிட்டார்கள் என்று ஓயாமல் ஆதாரம் இல்லாமல் நீங்கள் எழுதியதால் தான் நாங்கள் அப்படி கேட்கவேண்டி வந்தது. இயேசுவின் வரலாறு எழுதும் போது, உங்களுக்கு எங்கே எல்லாம் பைபிளுக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாமல் போகிறதோ, அங்கேயெல்லாம், பைபிள் மாற்றப்பட்டது என்றுச் சொல்கிறீர்கள். சரி, உங்கள் விருப்பப்படி, எந்த தலைப்பிலும் எழுதுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை.

உங்களால் முடிந்தால், இயேசுவின் வரலாறு கட்டுரைகளில் எங்கு எங்கெல்லாம், நீங்கள் பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறீர்களோ, முதலாவது அதற்கு பதில் தாருங்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? -6" தொடரில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளீர்கள்.

//இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

இயேசுவின் குழந்தை அற்புதம் முதலில் பைபிளில் இருந்ததாகவும், பிறகு நீக்கப்பட்டதாகவும் எப்படி நீங்கள் நிருபிக்கமுடியும்? உங்களிடத்தில் (அல்லது அந்த ஒரு சாரார் என்பவர்களிடம்) குழந்தை அற்புதம் கதை இருந்த பைபிள் பிரதிகள் ஏதாவது கைவசம் உள்ளதா? அப்போது தானே இன்றுள்ள பைபிளோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்லமுடியும்?

எனவே, முதலாவது எங்கே எங்கெல்லாம் "இயேசுவின் வரலாறு" தொடர்களில் "பைபில் மாற்றிவிட்டார்கள், இந்த வசனம் எடுத்துவிட்டார்கள்" என்று நீங்கள் எழுதும் இடங்களைப் பற்றி பதில் சொல்லுங்கள். உங்களால் முடியவில்லையானால் விட்டுவிடுங்கள், மற்றும் பைபிள் பற்றிய உங்கள் புது கட்டுரைகளை எழுதுங்கள். அதற்கு பதில் என்னவென்று பார்க்கலாம்.

நானும் இனி, "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" பற்றி எழுத ஆரம்பிக்கிறேன். குர்-ஆன் சம்மந்தப்பட்ட அனைத்து வித கட்டுரைகளையும் எழுத ஊக்குவித்ததற்காக நன்றி.


ஜி.நிஜாமுத்தீன்

உங்கள் எழுத்தையும் எங்கள் எழுத்தையும் மக்கள் படிக்கின்றார்கள். சிந்தனைமிக்கவர்களுக்கு உண்மை எதுவென்று புரியும். அதனால் நீங்களும் எழுதுங்கள். நாங்களும் தொடர்கிறோம். இனி உங்கள் தளங்களில் என்னைப் பற்றிய பின்னூடல்கள் பதிக்கப்பட்டால் என்னிடமிருந்து பதில் வராது என்பதை மீண்டும் ஒரு முறைக் கூறிக் கொள்கிறேன். அன்புடன்

சகோதரன்

ஜி.நிஜாமுத்தீன்

19-9-2007

ஈஸா குர்-ஆன்:

"உண்மையான வார்த்தை" என் கருத்தும் இதே தான். படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். உங்களைப் பற்றி என் தளத்தில் வரும் பின்னுடல்களுக்கு(Comments) நான் பொறுப்பில்லை. அவைகள் உங்கள் நேர்மையை தாக்குவதாக இருந்தால், அதற்கு பதில் சொல்லி, உங்களின் நேர்மையை நிருபிப்பது உங்கள் கடமை. நீங்கள் பதில் அளிக்கவில்லையானால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.



Isa Koran Home Page Back - Rebuttal Index page
1

செவ்வாய், 18 செப்டம்பர், 2007

இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்

                                     

முன்னுரை:

இது தான் இஸ்லாம் தளம் ஒரு திருத்தப்பட்ட ஜிமெயில் படத்தை வெளியிட்டது. அவர்களின் நேர்மையை நிருபிப்பதற்கு, என்னை குற்றப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட படம் பொய்யானது என்று தகுந்த ஆதாரத்துடன் நான் ஒரு கட்டுரையை எழுதினேன். இதுவரை அவர்கள் அதற்கு பதில் தரவில்லை. இதற்கு தகுந்த பதில் தரும்வரை என் எல்லா மறுப்புக்களில் இதை நான் தெரிவித்துக்கொண்டு இருப்பேன். அவர்களின் இந்த மௌனம் தங்கள் நேர்மையின்மையை காட்டுகிறது. அவர்கள் செய்தது தவறு தான் என்பது நிருபிக்கிறது. இருந்தாலும் அவர்களிடமிருந்து நான் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் தயாரித்த "போலி படத்தையும்" அதைப் பற்றிய என் கட்டுரையும் இங்கு படிக்கவும்.

Other Links:
1. இதர மறுப்புக்கட்டுரைகள்      2. Isa Koran Blog



"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6" கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்

இது வரை "இது தான் இஸ்லாம்" எழுதிய "இயேசுவின் வரலாறு" 5 தொடர்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கலாம். இப்போது "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" தொடர் 6க்கு பதிலை பார்க்கலாம்.

ஜி.நிஜாமுத்தீன்

Thursday, August 30, 2007

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? - 6

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார்.

......................................................................................................................

தொடர் - 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)

இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை - அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் - 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.



ஈஸா குர்-ஆன்:

இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சிப் பற்றிய ஒரு கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். இக்கட்டுரையை படிப்பவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா என்பதை! மிகவும் தெளிவாக புரிந்துக்கொள்வார்கள்.

கட்டுரையின் தலைப்பு: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா
(
அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident )

கட்டுரையின் சுருக்கம்:


1. குர்-ஆன் படி, இயேசு ஒரு இஸ்லாமிய நபி.
2. பிறந்ததிலிருந்து இஸ்லாமிய கோட்பாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார்.
3. அவரை சிலுவையில் அறையச் செல்லும் போது, அல்லா "எல்லாரையும் ஏமாற்றி" இயேசுவை தன் அளவில் எடுத்துக்கொண்டார்.
4. யூதர்கள் "நாங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோம்" என்று நினைத்தார்கள்.

அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல் எப்படி கிறிஸ்தவம் (இஸ்லாம் படி ஒரு பொய் மதம்) உருவானது என்றும், இந்த ஏமாற்றுச் செயலால் இன்று கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றவும், கிறிஸ்தவம் ஒரு மிகப்பெரிய மதமாக மாறவும் எப்படி அல்லா காரணமானார் என்றும் இக்கட்டுரை அலசுகிறது.

இனி "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன தொடர் 6" கட்டுரையைப் பற்றி சிந்திப்போம்.

நான் என் முந்தைய பதில்களில் பல கேள்விகள் முன்வைத்துள்ளேன். அதாவது ,


1. இயேசுவின் தாய் தூர இடத்திற்குச் சென்றது எப்படி ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமல் போனது?
2. யோசேப்பு தன் மனைவி ஆகப்போகிறவள் எங்கே? என்று கேட்டு இருந்தால்? சகரியாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்?
3. மரியாளை மௌனவிரதம் இருக்கச் சொல்லி, அல்லா மரியாளை பேசச் சொல்கிறார்? இது எப்படி சாத்தியம்?
4. தன் உயிர் போகும் அளவிற்கு மரியாள் பிள்ளைபெறும் போது துடிக்கும் போது! அல்லா உணவிற்கு வழி காட்டுகிறார், அதுவும் அந்த நேரத்திலும் பழங்களுக்காக மரத்தை உலுக்கவேண்டுமாம் ?
5. குர்-ஆன் சொல்கிறதைப் பார்த்தால், மரியாளுக்கு மூன்று மாதம் ஆவதற்கு முன்பு தூர இடத்திற்கு சென்று இருக்கவேண்டும், இது உண்மையானால், அதன் பிறகு 6 மாதமாக ஒருவரும், அதாவது யோசேப்பும் கூடவா? மரியாள் எங்கே என்று தேடவில்லை?


ஆனால், இந்த எந்த கேள்விக்கும் அல்லாவிடமும் பதில் இல்லை, குர்-ஆனிலும் இல்லை. இப்படி நடைமுறைக்கு ஏற்காத விதத்தில் குர்-ஆனில் பைபிளின் நிகழ்ச்சிகள் திருத்தப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. நான் "இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ்முஸ்லீம்" தள நண்பர்களிடம் கேட்கிறேன், நீங்களாகவது குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கற்பனையில் கொண்டுவந்து இதற்கு பதில் சொல்லுங்கள்.


1. மரியாள் அவ்வளவு தூரம்(மைல்கள்) சகரியாவின் வீட்டைவிட்டு சென்று இருப்பார்கள்?
2. எத்தனை மாதம் அப்படி தூரமாக இருந்துஇருப்பார்கள்?
3. மரியாள் சகரியாவின் வீட்டில் இல்லாத இந்த சில மாதங்கள், சகரியாவின், யோசேப்பின், மற்றும் ஊர் மக்களின் நிலை என்ன? அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள்? அவர்கள் என்ன செய்து இருப்பார்கள்?
4. அல்லா, வலியால் துடிக்கும் மரியாளைப் பார்த்து ஏன் மரத்தை உளுக்கச்சொல்கிறார்?
5. யோசேப்பு பற்றி ஏன் ஒரு விவரமும் அல்லா சொல்லவில்லை?
6. மரியாள் யோசேப்பிற்கு நிச்சயமாக பிறகு, இயேசுவின் செய்திப் பற்றி தூதன் சொல்கிறாரா? அல்லது அதற்கு முன்பா? அல்லது யோசேப்பு என்ற ஒரு நபரே மரியாளின் வாழ்வில் இல்லையா?

 

குர்-ஆன் இதைப் பற்றி சொல்லாததால், இப்படி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று ஒரு கற்பனை செய்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும், பைபிள் சொல்லும் விவரங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் இக்கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.


ஜி.நிஜாமுத்தீன்

ஈஸா - இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.

'இன்னி அப்தல்லாஹ்' நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.

மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172)

அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே 'நான் இறைவனின் அடிமைத்தான்' என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார்.

நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.

தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.



ஈஸா குர்-ஆன்:

ஆமாம், பிற்காலத்தில் ஞானமில்லாத சிலர் சிலரை தீர்க்கதரிசி என்று நம்புவார்கள், அவர்களைப் போல ஏமாறவேண்டாம் என்று இயேசு தன் சீடர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதே கட்டளை இயேசுவின் சீடர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் ; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் .

மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

2 பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி , தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.


மேலே சொல்லப்பட்ட வசனங்களின் படி கிறிஸ்தவர்கள் கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் நம்பக்கூடாது. நாம் இப்போது செய்திகளில் காண்பது போல, சில கிறிஸ்தவர்கள் கள்ள தீர்க்கதரிசிகளை நம்பிவிடுகின்றனர் .

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.



ஈஸா குர்-ஆன்:

குர்-ஆன் படி எல்லா நாடுகளுக்கும், எல்லா சமுதாய மக்களுக்கும் அல்லா தூதர்களை அனுப்பியதாக சொல்கிறது
.


ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு ; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். 10:47

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை . 35:24



விஷயம் இப்படி இருக்க, ஏன் குர்-ஆனில் யூதர்கள் வழி வேதம், மற்றும் யூதர் வழி தூதர்கள் பெயர்கள் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இப்ராஹீம், ஈசாக்கு, தாவீது என்று சொல்லப்பட்ட எல்லா நபிகளும் இஸ்ரவேல் நாட்டிற்கு சம்மந்தப்பட்ட தூதர்களாகவே இருக்கிறார்களே? ஏன் வேறு நாடுகளுக்கு அனுப்பிய தூதர்கள் பெயர்கள் இல்லை?

இன்னும் பல நாடுகள் இருக்கிறது, முக்கியமாக இந்தியா இருக்கிறது, இங்கு கூட அல்லாவின் தூதர்கள் வந்திருந்தால், அவர்களிடம் இருந்த வேதம் என்ன ஆனது?

1. குர்-ஆனில் சொல்லப்பட்ட எல்லா நபிகளும், பைபிளில் சொல்லப்பட்டவர்களே, வேறு நாட்டில் அல்லது அவர்கள் வேதத்தில் வரும் நபிகள் பெயர் இல்லை, அது ஏன்?
2. குர்-ஆனில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பைபிள் சம்மந்தப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள கதைகள் சம்மந்தப்பட்டது? ஏன் இந்தியாவில், எகிப்தில் (யோசேப்பு அல்லாத), பிற நாடுகளில் உள்ள நபிகள் பற்றி ஒரு நிகழ்ச்சியும் இல்லை?
3. வேறு நாடுகளில் தோன்றிய நபிகள் கூட "இறைவனை" "அல்லா" என்று தான் அழைத்தார்களா?
4. ஏக இறைவன் கோட்பாடு எல்லா நாடுகளிலும் உண்டு, ஆனால், அவர்கள் புத்தகங்களில் "அல்லா" என்று இறைவன் பெயர் வருமா? இந்த இஸ்லாமிய கோட்பாடுகள் இருக்குமா? (திருடாதே, பொய் சொல்லாதே என்பதல்ல, இப்படிப்பட்ட கட்டளைகள் எல்லா மதத்திலும் உண்டு)
5. அப்படி மற்ற நாடுகளில் வந்த எல்லா நபிகளும் "மக்காவைப் பற்றியும்", "காபாவைப் பற்றியும்" சொல்லியிருப்பார்களா?


எல்லா நாடுகளுக்கும் நபிகள் வந்திருந்தால், எல்லாருக்கும் வேதம் கொடுக்கப்பட்டிருந்தால், ஏன் சில இஸ்லாமியர்கள் இப்படி நம்புகிறார்கள், அதாவது "அல்லா இறக்கியது 104 வேதங்கள்(புத்தகங்கள்) மட்டும் தான்". Source : http://wiki.cotch.net/index.php/Islam

ஆதாம் – 10 புத்தகங்கள்
சேத் - 50 புத்தகங்கள்
ஏனோக் – 30 புத்தகங்கள்
அப்ரஹாம் – 10 புத்தகங்கள்
மோசே – தோரா
தாவீது – ஜபூர்
இயேசு – இஞ்ஜில்
முகமது - குர்-ஆன்


Source : http://answering-islam.org/Books/Zwemer/God/preface.htm


இங்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் பைபிளில் வரும் நபர்களே தவிர, வேறு நாட்டுக்காரர்கள் அதாவது இந்தியா போன்ற நாட்டில் அல்லா அனுப்பியவர்கள் இல்லை, மற்றும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள் என்னவென்றும் அல்லா சொல்லவில்லையே? சிறிது விளக்குகிறீர்களா, (தனி கட்டுரையாக இருந்தாலும் சரி).



ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை 'இன்ஜில்' என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.



ஈஸா குர்-ஆன்:

அரபி பேசும் கிறிஸ்தவர்கள் "இஞ்ஜில் – Good News" என்றுச் சொல்வது சரியாக பொருந்தும், ஏனென்றால், கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து தான், "இஞ்ஜில்" என்ற வார்த்தை வந்தது. அதற்கு நற்செய்தி என்றுப் பொருள்.  கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்ட மொழி முக்கியமல்ல, அதன் பொருள் தான் முக்கியம்.

ஆனால், குர்-ஆனில் ஏன் "இஞ்ஜில்" என்ற கிரேக்க பதம், அதுவும் அரபியில் "இஞ்ஜில்" என்றால் "நற்செய்தி" என்று பொருள் இல்லை, முக்கியமாக அரபியில் "இஞ்ஜில்" என்றால், எந்த பொருளும் இல்லை . அப்படி இருக்க, அரபியில் இறக்கிய குர்-ஆனில் "ஏன் கிரேக்க மொழி" வார்த்தை இஞ்ஜில்? அரபியிலே "நற்செய்தி – Good News" என்று பொருள் வரும் "பஷரஹ- 'Basharah' " என்று அல்லா சொல்லவேண்டியது தானே?

Source:http://www.understanding-islam.com/related/text.asp?type=article&aid=77

// கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.//

இதில் "கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதிக்கொண்டு" என்று சொல்கிறீரே,

யார் எழுதினார்கள்?

எப்போது எழுதினார்கள்?

உங்கள் இஸ்லாமிய இயேசுவுக்கு அல்லா இறக்கிய "இஞ்ஜில்" எப்படி இருந்தது?

அதை யார் மாற்றினார்கள்?

ஏதாவது ஒரு தகவல் தரமுடியுமா?

நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஆதாரம் இல்லாமல் ஒரே விஷயத்தை அடிக்கடி சொல்லவேண்டாம் என்று? ஆனால், கேட்கமாட்டேன் என்றுச் சொல்கிறீர்கள்.

இனி நான் குர்-ஆன் பற்றிய சில விவரங்களை சொல்லியாகவேண்டுமே (இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்)

1. முகமதுவின் மரணத்திற்கு பிறகு, உதமான் ஏன் குர்-ஆனை தொகுக்க வேண்டும் என்று முற்பட்டார்?

2. அதன் அவசியமென்ன?

3. அதாவது, முகமது மரிப்பதற்கு முன்பு , "உத்மான் தொகுத்தது போல" ஒரு முழு குர்-ஆனை, முகமது தொகுத்து தனக்கு அடுத்து உள்ளவரிடம் கொடுத்து போகவில்லை! அப்படித்தானே?

4. சிலர் மனப்பாடம் செய்து இருந்தார்கள், சில அதிகாரங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், யாரிடமும் ஒரு முழு குர்-ஆன் (இப்போது நம்மிடம் உள்ளதே) அது போல இல்லை, சரிதானே?

5. ஒரு பிரதியை தொகுத்த பிறகு மற்ற குர்-ஆன்களை ஏன் எரித்தார்?

6. அதாவது, எரிக்கப்பட்ட குர்-ஆன்களில் தவறுகள், பிழைகள், இருந்தது, அப்படித்தானே?



இந்த விவரங்களை கீழ்கண்ட ஹதீஸ் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

Volume 6, Book 61, Number 510:
Narrated Anas bin Malik:
Hudhaifa bin Al-Yaman came to Uthman at the time when the people of Sham and the people of Iraq were Waging war to conquer Arminya and Adharbijan. Hudhaifa was afraid of their (the people of Sham and Iraq) differences in the recitation of the Qur'an, so he said to 'Uthman, "O chief of the Believers! Save this nation before they differ about the Book (Quran) as Jews and the Christians did before." So 'Uthman sent a message to Hafsa saying, "Send us the manuscripts of the Qur'an so that we may compile the Qur'anic materials in perfect copies and return the manuscripts to you." Hafsa sent it to 'Uthman. 'Uthman then ordered Zaid bin Thabit, 'Abdullah bin AzZubair, Said bin Al-As and 'AbdurRahman bin Harith bin Hisham to rewrite the manuscripts in perfect copies. 'Uthman said to the three Quraishi men, "In case you disagree with Zaid bin Thabit on any point in the Qur'an, then write it in the dialect of Quraish, the Qur'an was revealed in their tongue." They did so, and when they had written many copies, 'Uthman returned the original manuscripts to Hafsa. 'Uthman sent to every Muslim province one copy of what they had copied, and ordered that all the other Qur'anic materials, whether written in fragmentary manuscripts or whole copies, be burnt . Said bin Thabit added, "A Verse from Surat Ahzab was missed by me when we copied the Qur'an and I used to hear Allah's Apostle reciting it. So we searched for it and found it with Khuzaima bin Thabit Al-Ansari. (That Verse was): 'Among the Believers are men who have been true in their covenant with Allah.' (33.23)

Source: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/061.sbt.html#006.061.510



இந்த கருத்துக்கள் இக்கட்டுரைக்கு(இயேசுவின் வரலாறு) சம்மந்தமில்லாமல் இருந்தாலும், ஏன் சில விவரங்களைச் சொன்னேன் என்றால், எப்போது பார்த்தாலும், பைபிள் ஒரு கற்பனை அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு ஆதாரமும் காட்டாமல், நம் இஸ்லாமிய நண்பர் சொல்வதினால், குர்-ஆன் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே கொடுத்தேன்.

நம் இஸ்லாம் நண்பர் அடிக்கடி, "கற்பனைக் கதைகள்" என்று குற்றம் சாட்டுகிறாரே, எத்தனை கதைகளை முகமது மற்ற புத்தகங்களிலிருந்து எடுத்து குர்-ஆனில் எப்படி புகுத்தியுள்ளார் என்பதை கீழெ உள்ள தொடுப்பில் படிக்கவும்.

MUHAMMAD THE BORROWER


ஜி.நிஜாமுத்தீன்

இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).





ஈஸா குர்-ஆன்:

"அல்லா இயேசுவை கைபற்றிக்கொண்ட பிறகு" என்றுச் சொல்கிறீர்கள். இப்படி எல்லாரையும் ஏமாற்றி அல்லா இயேசுவை எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி எப்படி "கிறிஸ்தவம்" உருவாவதற்கு காரணமாகியது என்பதை கீழ் உள்ள கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident)   

//இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்//

பைபிளில் மாற்றம் செய்தார்கள் என்று சொல்ல, நீங்கள் 2000 ஆண்டுகள் வரை முன்னுக்கு செல்கிறீர்கள்.

ஆனால், நம்முடைய கண்களுக்கு முன்பாகவே, குர்-ஆனை மாற்றி சில வசனங்களை எடுத்துவிட்டு, மாற்றப்பட்ட குர்-ஆனை அல்-கைதா இமாம்கள் குவைத்திலும், கத்தர் நாட்டிலும் வெளியிட்டதாக, அதை அரசாங்கம் கண்டுபிடித்து, இனி அரசாங்க முத்திரை உள்ள குர்-ஆன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் சொல்லியது என்று செய்திகளில் வாசிக்கிறோம்.

Al Qaida clerics distributing revised editions of Koran

இவர்கள் குர்-ஆன் வசனத்தை குர்-ஆனிலிருந்து எடுத்துவிட்டு, குர்-ஆனை அச்சடிக்கும் போது அல்லா தடுக்கவில்லையோ? பின் எப்படி அல்லா பாதுகாப்பதாகச் சொல்கிறார்? இதற்கு பண உதவி செய்தவர்கள் என்ன யூதர்களா? அச்சடித்து ஏற்றுமதி செய்தவர்கள் என்ன கிறிஸ்தவர்களா? யார் சந்தோஷமாக தங்கள் வேதங்களை மாற்றுகிறவர்கள்? இஸ்லாமியர்களா அல்லது கிறிஸ்தவர்களா?

முகமதுவிற்கு பிறகு அவர் சொன்னதை விசுவாசிக்கிறோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத(குர்-ஆன்) மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளனர், செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

நீர் எழுதிய அதே வரிகள் தான், ஆனால் ஆதாரத்தோடு.

இதோ பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்-ஆன் மொழிபெயர்ப்பில் "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - எழுத்து பிழைகள் " என்ற தலைப்பில் கீழ்கண்ட வாறு "குர்-ஆனில் எழுத்துபிழை உள்ளது" என்றுச்சொல்கிறார்.

//ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் குர்-ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்பதால் அந்த மூலப் பிரதியில் ஏற்பட்ட பிழைகளை அப்படியே இன்றளவும் தக்க வைத்து வருகின்றனர்.

குர்-ஆனைப் பாதுகாப்பதற்கு இது அவசியமான ஏற்பாடு என்பதில் சந்தேகம் இல்லை. நெடிலைக் குறிப்பதற்காக அரபு மொழியில் அலிஃப் என்ற எழுத்தைச் சேர்க்கவேண்டும். இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது.

உதாரணமாக  'காஃப்' என்ற எழுத்தில் அலிஃபைச் சேர்த்தால் 'காஆ" என்று அது நெடிலாக மாறும்.
இப்படி நெடிலாக மாறுவதற்காகச் சேர்க்கப்பட வேண்டிய அலிஃபை கவனக் குறைவாக நெடிலாக சேர்க்கத் தேவையில்லாத இடங்களில் சேர்த்துள்ளனர்.

அது போல நெடிலுக்காக ஒரு அலிஃபை எழுதுவதற்குப் பதிலாக இரண்டு அலிஃபை எழுதியுள்ளனர் . அந்த இடங்கள் யாவை என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய சொற்களும், அவை இடம் பெற்ற அத்தியாயங்களும் வசன எண்களும் தனியாக பெட்டிச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.//

இப்படிப்பட்ட அந்த 22 வசனங்கள் என்ன என்பதை அரபியில் கீழ் கண்ட படத்தில் காணலாம் -
http://www.onlinepj.com/qvaralaru/vralar5.jpg வசன எண்களை இங்கு பார்க்கலாம் -  http://www.onlinepj.com/qvaralaru/vralar6.gif

Source : http://www.onlinepj.com/

     Emphasis mine


மேலே சொல்லப்பட்ட தவறுகள், மனிதர்கள் புதிதாக சேர்த்த(அலிஃப்) எழுத்துபிழைகள் ஆகும். அதுபோல ஒரு எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்தை மாற்றி எழுதியுள்ளார்கள் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்கிறார்கள். இந்த எழுத்துபிழைகள் இன்றுள்ள குர்-ஆனிலும் அப்படியே உள்ளது.

//இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245வது வசனத்தில் என்று எழுதுவதற்கு பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக 'ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே அழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.

அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் என்று எழுதுவதற்குப் பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' எழுதுவதற்கு பதிலாக 'ஸாத்' எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான அச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் .//



இந்த எழுத்துபிழைகள்(Scribal Errors) ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால், இப்படிப்பட்ட பிழைகள் இருப்பது யாருக்கும் தெரியாது, மொழிபெயர்ப்பாளர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் தான் தெரியும். ஆனாலும், இதை வெளியே சொல்லமாட்டார்கள். ஆனால், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இந்த தைரியம்(குர்-ஆன் எழுத்துப் பிழைகள் பற்றி தன் மொழிபெயர்ப்பில் சொல்வது) வேறு யாருக்கும் வராது(அதனால், தான் என்னவோ, அவரைக் கண்டால் சிலருக்கு பிடிக்காது.) உள்ளதை உள்ளதென்று ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வது ஒரு வகையான வெற்றி.

நான் இந்த எழுத்து பிழைகளுக்காக, ஆங்கில கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பேன், ஆனால், தமிழிலேயே அதற்கு வாய்ப்பு இருக்கும் பொது, ஏன் ஆங்கில கட்டுரைக்கு போகவேண்டுமென்று ஆங்கிலத்திற்குச் செல்லவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் பல விவரங்களோடு ஒரு கட்டுரையைப் பார்க்கலாம்.

எழுத்துபிழைகள் என்பது ஒரு பிரதியைப்பார்த்து வேறு பிரதியை எழுதும் போது, ஏற்படும் பிழைகள், இது எந்தவகையிலும், உண்மை செய்தியை மாற்றாது. நாம் பல பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்து இப்படிப்பட்ட பிழைகளை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இன்னும் குர்-ஆனில் இலக்கண பிழைகளும், சரித்திர முரண்பாடுகளும் பல உள்ளன, அவைகளைப்பற்றி தனி கட்டுரையில் காணலாம்.

நான் ஏன் இக்கட்டுரையில் இவ்விவரத்தைச் சொன்னேன் என்றால், பல இஸ்லாமியர்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. மட்டுமல்ல, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதால், சில விவரத்தை சொல்லவேண்டி வந்தது. இவர் இயேசுவின் வரலாறு பற்றி மட்டும் எழுதினால், நானும் அதைப்பற்றியே எழுதுவேன்.


ஜி.நிஜாமுத்தீன்

முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.



ஈஸா குர்-ஆன்:

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், பைபிள் வேதம் என்பதை நம்புவார்கள், ஆனால், குர்-ஆன் வேதம் என்றுச் சொன்னால் அந்த பொய்யை நம்பமாட்டார்கள்.


ஜி.நிஜாமுத்தீன்

இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.



ஈஸா குர்-ஆன்:

இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய ஒரு குழப்பம் என்னவென்றால், யார் தூதராக வந்தாலும் அவருக்கு ஒரு வேதம் அல்லது புத்தகம் அல்லது "செய்தி" அல்லா கொடுத்ததாக சொல்வது.

ஆபிரகாமுக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், அவர் யாரையும் பார்த்து முகமதுவைப் போல "நீங்கள் என் இறைவனை நம்புங்கள், இல்லையானால் அவர் உங்களை அழித்துவிடுவார்" என்றுச் சொல்லவில்லை. அவர் யாருக்கும் எந்த நாட்டு மக்களுக்கு தூதுவராக அனுப்பப்படவில்லை. அவர் ஒரு நாடோடியாக வாழ்ந்தார், தான் இருக்கும் இடத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது, எகிப்திற்கு ஓடிச் சென்றார், தன் மனைவியை தன் சகோதரி என்றுச் சொன்னார்.

இயேசு வாழ்ந்த காலத்தில், அவர் சொன்ன வசனங்கள் எல்லாம் அவர் இருக்கும் போதே, அவர் அச்செய்திகளை ஒரு புத்தகமாக அல்லது புத்தக சுருலாக எழுதி வைத்திருந்தார் என்று உங்களால் சொல்லமுடியுமா? இல்லை, அவர் இருக்கும் போது அப்படி செய்யவில்லை என்றுச்சொல்வீர்களானால், பின் எப்படி அவர் "அல்லா எனக்கு வேதத்தை கொடுத்தார்" என்றுச் சொல்கிறார்.

அல்லா இயேசுவிற்கு கொடுத்த புத்தகத்தை(வேதம் அல்லது செய்தி) ஒரு தொகுப்பாக மாற்றி ஏன் இயேசு தன் சீடர்களிடம் கொடுத்து, "இதோ பாருங்கள், இது தான் இறைவன் எனக்கு கொடுத்த வேதம், இதன்படி செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டுச் செல்லவில்லை. (ஓகோ, திடீரென்று எதிர்பாராத நேரத்தில், இயேசுவை அல்லா எடுத்துக்கொண்டதால், இதற்கு வாய்ப்பில்லாமல் போனதோ)

புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் அனைத்தும் இயேசுவின் "சரிதையாகும்". அவரோடு இருந்த சீடர்கள் அவர்கள் கண்களால் கண்டதும், காதால் கேட்டதும், அவரை தொட்டுப் பார்த்ததும், போன்ற பல விவரங்களை தேவனின் உதவியோடு எழுதிவைத்தார்கள்
.



ஜி.நிஜாமுத்தீன்

வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.

நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.

இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.

பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது.

மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான்.

ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.

ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

'நான் எங்கிருந்தாலும்' என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது.

இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். 'நான் எங்கிருந்தாலும்' என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.



ஈஸா குர்-ஆன்:

//ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்//

இயேசுவிற்கு கண்ணியத்தைத் தருகிறேன் என்றுச் சொல்லி, அல்லா இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலில் செய்த குழப்பம், ஒரு பொய்யான மதம்(இஸ்லாம் படி) உருவாக காரணமாகியது.

மட்டுமல்ல, அது இப்போது அல்லாவின் உண்மை மதமான இஸ்லாமுக்கு எதிராக  ஒரு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே உள்ளது. அதுவும் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாமியர்களின் கண்களில் உருத்திக்கொண்டே இருக்கிறது.

அல்லா செய்த அறியாமைச் செயல் என்ன? எப்படி கிறிஸ்தவம் இயேசுவின் சீடர்களால் பரப்பப்பட்டது, அதற்கு அல்லா எப்படி உதவியாக இருந்தார் என்ற விவரங்களை இங்கு படிக்கவும் -  
அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம்

ஜி.நிஜாமுத்தீன்

அடுத்து,

வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.

நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.

அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.

முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.



ஈஸா குர்-ஆன்:

அந்த "ஒரு சாரார்" யார்? நீர் சொல்லும் "புதிய நபிக்கொள்கை" என்ன? யார் இப்படிச் சொன்னார்கள் என்று ஒரு விவரமும் சொல்லாமல், நீர் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்.
நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று குறைந்தபட்சம் "அவர் பெயரையாது" சொல்லிவிட்டு பதில் எழுதியிருக்கலாம்.

அதாவது, கலிஃபா ரஷீத் பற்றி எழுதுகிறீரோ, ஷியா முஸ்லீமகள் எதிர்பார்க்கும் "மஹந்தி" பற்றி எழுதுகிறீரோ, அல்லது "பஹாய் " என்றுச் சொல்லக்கூடிய ஒருவரைப்பற்றி எழுதுகிறீரோ அல்லது இன்னும் யாராவது இருக்கிறார்களா? தெரியவில்லை. அல்லது இயேசுவின் சீடர்களில் இப்படி யாராவது சொன்னார்களா? ஏதாவது சொன்னால் தானே புரியும்.

குர்-ஆனும் அல்லாவும் தான் குழப்புகிறார்கள் என்றால், நீங்களுமா ?


ஜி.நிஜாமுத்தீன்

இந்த வசனத்திற்கு அவர் - பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் - கொண்ட பொருள்.

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்' என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் 'ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம் .

மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது. அந்தப் பொருள் என்ன?'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்.... என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது.

நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள்.

குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் - சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.

1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.

ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.

இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும் .

அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம்.

இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை - ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.

மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்' என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.

இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.

என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.

இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.

நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.

ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் 'ஏலி ஏலி லாமா சபக்தனி' என்று கூக்குரலிடுகிறார் இதற்கு 'என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்' என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு - சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.

இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,

இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)

இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.

தேவன் நாடட்டும் தொடர்வோம்

source: http://idhuthaanislam.blogspot.com/2007/08/6.html

Emphasis mine



ஈஸா குர்-ஆன்:

மேலே உள்ளதை படித்தால், ஒன்று மட்டும் புரிகிறது, நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இக்கட்டுரையை எழுதவில்லை. வேறு யாருக்காகவோ எழுதியிருக்கிறீர்.

அதாவது, குர்-ஆனில் நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை வைத்துக்கொண்டு, தன்னை ஒரு நபி என்று சொல்லிக்கொண்ட மற்றும், அவரை நீங்கள்(முஸ்லீம்கள்) நபி என்று நம்பாத ஒருவரைப்பற்றி நீர் எழுதுகிறீர்.

நீங்கள் சொல்தற்கும், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்பும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இயேசு ஜகாத் கொடுத்தார் என்ற குர்-ஆன் வசனத்திற்கு என் பதில்:

1. நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு - 5ல்) தெரிவித்தபடி, "இயேசு ஜகாத்" கொடுப்பேன் என்றுச் சொன்ன வசனம் ஒரு "சரித்திர தவறாகும்".

2. இயேசுவின் வரலாறு - 5ல் ஜகாத் பற்றி நான் எழுதிய பகுதியை மறுபடியும் ஒரு முறை நியாபகப்படுத்துகிறேன்.

1. ஜகாத் என்ற பொருளாதார பங்கிடு:

ஜகாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களும் கொடுக்கும் பணம், ஜகாத் என்பது இயேசுவின் காலத்தில் இல்லை. இது முகமது உருவாக்கியது. இயேசுவிற்கு பின்பு 500 வருடங்களுக்கு பிறகு முகமது உருவாக்கிய "ஜகாத்" பற்றி இயேசு பேசுவது ஒரு குர்-ஆனின் வெளிப்படையான சரித்திர பிழையாகும்.

"ஜகாத்" பற்றி தமிழ்முஸ்லீம் தளம் என்ன சொல்கிறது என்றுப்பாருங்கள்.

source:
http://tamilmuslim.blogspot.com/2005/05/blog- post_28.html

//ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60) //

2. யூதர்கள் கொடுப்பது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்":

சில இஸ்லாமியர்கள் சொல்லலாம், யூதர்களும் ஜகாத் கொடுத்தார்கள் என்று. யூதர்கள் கொடுத்தது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்". யூதர்கள் கொடுத்த "தசம பாகமும்", இஸ்லாம் சொல்லும் "ஜகாத்தும்" ஒன்றல்ல, இவைகள் வெவ்வேறானவை. இதில் கூட குர்-ஆன் அல்லது முகமது ஒரு முரண்பாட்டை செய்துள்ளார்.

"ஜகாத்திற்கும்" "தசமபாகத்திற்கும்" உள்ள வித்தியாசங்கள்:

1. ஜகாத் என்பது வருடத்திற்கு ஒரு முறை கொடுப்பது. தசம பாகம் என்பது நம் வருமானத்தில் அது ஒரு நாள் சம்பளமாகவோ, வார சம்பளமாகவோ அல்லது மாதசம்பளமாகவோ இருக்கலாம். அதிலிருந்து கொடுப்பது.

2. ஜகாத் 2.5%, தசமபாகம் 10%.

3. ஜகாத் ஏழை எளிய மக்களுக்கு, இன்னும் இதர தர்மங்களுக்கு, தசம பாகம் சபைக்கு அல்லது சர்ச்சிற்குத் அதன் தேவைகளை சந்திப்பதற்காகத் தருவது. கிறிஸ்தவத்தில் தானதருமங்கள் வேறு தசமபாகம் வேறு.



இயேசுவின் காலத்தோடு சம்மந்தப்படுத்தி "ஜகாத்" நான் கொடுப்பேன் என்று இயேசு சொன்னார் என்பது ஒரு வெளிப்படையான குர்-ஆன் முரண்பாடாகும்.
Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part5.html

//இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு மறுப்பு - 4 ) சொல்லிவிட்டேன், அதாவது முகமது சில தள்ளுபடி புத்தகங்களிலிருந்து சில கதைகளை அல்லா சொன்னதாக சொன்னார் என்று, அதற்கு ஆதாரமும் காட்டிவிட்டேன்.

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first Gospel of the Infancy of Christ " என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

 Infancy Gospel of Jesus


இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century. Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas



Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus ( known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and... Source:    http://www.britannica.com/eb/topic-208181/First- Gospel-of-the-Infancy-of-Jesus



//அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

பைபிளிலிருந்து இந்த குழந்தை அற்புதம் ஆரம்பித்திலிருந்தே நீக்கிவிட்டார்கள் என்று நம்புகின்ற நீர்,
ஏன் நீக்கினார்கள் என்று சிந்தித்து பார்க்கவில்லையா?
இது உண்மையாகவே நடந்து இருந்தால், அதை எழுதுவதில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன தொந்தரவு?
இது இயேசுவின் பெருமையை இன்னும் அதிகரித்து இருக்குமே?
தாங்கள் நம்புகின்ற இயேசு குழந்தையாக இருக்கும் போது கூட அற்புதம் செய்தார் அல்லது அற்புதமாக பேசினார் என்று அவர்கள் அதிகமாக சந்தோஷப்பட்டு இருப்பார்களே? பின் ஏன் நீக்கினார்கள்?


ஆதாரம் இல்லாமல் எதையாவது சொல்வது தான் உங்கள் வழக்கமா? நீங்கள் சொன்ன வரிகளுக்கு ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்? உம்மால் முடியாது? கடந்த மூன்று மாதங்களாக இயேசுவின் வரலாறு மறுப்புகள் 5ம் அப்படியே இருக்கின்றது? இது வரையில் பதில் இல்லை.இன்னும் ஆபிரகாம், இஸ்மவேல் வரலாறிலிருந்து வெளியே வரவில்லை. இருந்தும் பாடிய பல்லவியே மறுபடியும் மறுபடியும் பாடுகிறீர்கள்.

ஆனால், நம் கண்களுக்கு முன்பாக, குவைத்திலும், கத்தரிலும், சில வசனங்கள் நீக்கப்பட்ட குர்-ஆன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என்று செய்திகளில் படிக்கிறோம்.

இந்த இயேசுவின் குழந்தை அற்புதம் கதை, இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலாவது எழுதப்பட்டது என்று விகிபீடியா, ப்ரிட்டானிகா என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. ஆனால், இவைகள் பைபிளில் ஏற்கனவே இருந்தது என்றும், பிறகு நீக்கப்பட்டது என்றும், நீர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தது போல சொல்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அந்த "ஒரு சாரார்" என்பவர்கள் பெரிய ஆராய்ச்சியாளர்களோ? தொல்பொருள் நிபுனர்களோ? இல்லை இஸ்லாமிய அறிஞர்களா?

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அதுவரையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் எல்லாரோடும் இருப்பதாக.



Isa Koran Home Page Isa Koran - Rebuttal Index page
1

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்



ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

இயேசுவின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரம். இந்த அஸ்திபாரத்தைப் பற்றி குர்-ஆன் வித்தியாசமான விவரங்களை தருகிறது, அதை அலசுவது தான் இக்கட்டுரை. தமிழில் சில வரிகள் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படிக்கும்படி வேண்டுகிறேன். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்.

ஆசிரியர் சிறுகுறிப்பு: டேவிட் உட் (David Wood) என்ற இவர் ஒரு முன்னாள் நாத்தீகர். ஆனால், இப்போது இயேசுவை விசுவாசிப்பவர். இவரின் சிறப்பம்சம் "நாத்தீகர்களோடு வாதம் புரிவது". முக்கியமாக infidels.org என்ற நாத்தீக தளத்தின் கட்டுரைகளுக்கு இவர் பதில்(http://answeringinfidels.com/) எழுதுகிறார். தற்போது, "Problem of Evil" என்ற தலைப்பில் இவர் Ph.D செய்துக்கொண்டு இருக்கிறார். இவர் சில இஸ்லாமிய காட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரை Answering Islam.Org என்ற தளத்தில் படித்து, அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் உடனே கொடுத்ததுமன்றி, Answering-islam.org   தளத்தில் உள்ள அவர் எல்லா கட்டுரைகளுக்கும் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் ஒரு இஸ்லாமியரோடு
முகமது யார் – Who is Muhammad" என்ற தலைப்பில் புரிந்த விவாத DVD amazon ல் கிடைக்கிறது. மற்றும் அவருடைய மற்ற விவாதங்கள், இஸ்லாமிய கட்டுரைகள், மறுப்புக்கள், நாத்தீகரோடு புரிந்த நேரடி விவாதங்கள் வீடியோக்களை கீழ்கண்ட தளங்களில் காணலாம்.

1. http://www.answering-islam.org/Authors/Wood/index.htm
2. http://www.problemofevil.org/
3. http://answeringinfidels.com/
4. http://www.answeringmuslims.com/

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

அல்லாவைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது


ஆசிரியர்: David Wood


கிட்டத்தட்ட் இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணம் மற்றும் அவர் உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்லிக் கொண்டுவருகிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இஸ்லாம் தள்ளிவிட்டது மற்றும் சிலுவை நேரத்திலும், அதன் பிறகும் என்ன நடந்தது என்று வேறு வகையான நிகழ்ச்சி நிரலை சொல்கிறது. எப்படி இருந்தாலும், இஸ்லாம் தன் சொந்த விளக்கத்திகாக அதிக விலை செலுத்தியுள்ளது. அவர்களின் இந்த விளக்கம் "இறைவனை ஒரு கொடுமையான ஏமாற்றுக்காரராக காட்டுகிறது" மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசு "படுதோல்வி" அடைந்தவராக காட்டுகிறது. இப்படி இருந்தும், "அல்லா உண்மையுள்ளவர்" மற்றும் இயேசு அல்லாவின் தீர்க்கதரிசிகளில் எல்லாம் மிகச்சிறந்தவர் என்று மதிக்கப்படுகிறார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அவர்களின் இந்த வாதங்கள் அனைத்தும் குறையுள்ளது, ஏனென்றால், இஸ்லாமிய கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வாய்வழி மரபுகளாகவே வருகிறது.

Allah starts Christianity…. By Accident

(அல்லா தற்செயலாக உருவாக்கிய கிறிஸ்தவம்)



இஸ்லாமிய போதனைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், கிறிஸ்தவத்தை அல்லா உருவாக்கியதாகவும், மட்டுமல்ல, கிறிஸ்தவத்தை உலகத்தின் மிகப்பெரிய அதிகாரமுடைய மதமாக மாற்றியதாகவும் நாம் கவனிக்க முடியும். இந்த உண்மை எல்லாருக்கும் ஏதோ புதுமையாக தோன்றும், நான் சொல்வதை நம்புங்கள், இஸ்லாமியர்களோ "கிறிஸ்தவம் ஒரு தவறான மதம்" என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவம் மனிதர்களால் மாற்றப்பட்டதால், அது ஒரு பிழையான மதம் என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்கிறார்கள். இதே செய்தியைத்தான் அல்லா மரியமின் மகனான இயேசுவிற்குச் சொன்னார்.

இயேசுவை பின்பற்றியவர்கள்(சீடர்கள்) இப்போதுள்ள இஸ்லாம் போல ஒரு கோட்பாட்டை நம்பியதாக ஒரு சிறு ஆதாரமும் இல்லை. இது ஒரு புறமிருக்க, இஸ்லாம் படி, கிறிஸ்தவத்தை திருத்தியதே அல்லா தான் (According to Islam, Christianity was corrupted by Allah himself) இஸ்லாம் ஏன் நம்மை இப்படி நம்பச்சொல்கிறது என்று புரிந்துக்கொள்ளவேண்டுமானால், நாம் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

FACT #1: இயேசு அல்லாவின் தூதர் என்றும், இஸ்லாமின் தீர்க்கதரிசி(நபி) என்றும் குர்-ஆன் கூறுகிறது:

இயேசு பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை(Islamic Theology) போதித்துவந்தார் என்று குர்-ஆன் அதிகாரம்(சூரா) 19 சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார். (19:23) (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். (19:24) "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். (19:25)

"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும். (19:26)

"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)

"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)

"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. (19:33) [2]


இயேசு தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லா தன்னை தன் அளவில் உயர்த்திக்கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்துவந்தார். குர்-ஆன்படி இயேசு கொண்டுவந்த இஞ்ஜில் என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. இயேசு அல்லாவின் ஊழியனாகவும், நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.(42:13) [3]

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (43:59) இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது "மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறினார். (43:63) நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி). (43:64) [4]

ஆக, இயேசு தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாவிடம் எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டுபோகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப்பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

FACT #2: இயேசு பல சீடர்களை சம்பாதித்தார் என்று குர்-ஆன் சொல்கிறது.

இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு(அ) கற்றுக்கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் இஸ்லாம் (குர்-ஆன்) இயேசுவைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது:

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர். (3:52) [5]

"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (5:111) [6]

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். (57:26)[7]

குர்-ஆன் சொல்வது உண்மையானால், இயேசு குறைந்தபட்சம் சில இஸ்ரவேல் மக்களையாவது இஸ்லாமுக்கு மாற்றியிருப்பார். ஆனால், இப்படிப்பட்ட மாற்றம் நடந்தது என்று ஒரு சரித்திர ஆதாரமும் இல்லை. இருந்தாலும் விவாதத்திற்காக வேண்டி, இயேசுவின் இஸ்லாமிய போதனைகளை விசுவாசித்த முதல் நூற்றாண்டு யூதர்கள் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று நாம் எண்ணிக்கொள்வோம். இப்படிப்பட்ட கருத்து (Assumption), இஸ்லாமுக்காக வாதாடுபவர்களுக்கு எதிராக பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இனி நாம் பார்க்கப்போகிறோம்.

FACT #3: இயேசுவின் போதனையைக்கேட்டு முதல் நூற்றாண்டு யூதர்கள் இஸ்லாமியர்களாக மாறியிருந்தாலும், அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக்கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இயேசுவை முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்ககளைப்பற்றி அதிகபடியான சரித்திர விவரங்கள் இன்று நம்மிடம் உள்ளது, ஆனால், முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை? இயேசுவை பின்பற்றிய கிறிஸ்தவ அல்லாத மார்க்க(இஸ்லாம் சம்மந்தப்பட்ட) எல்லா விவரங்களையும் கிறிஸ்தவம் துடைத்துவிட்டது என்று இஸ்லாமுக்காக வாதாடுபவர்கள் இதற்கு பதிலாக சொல்வார்கள். ஆனால், அவர்களின் இந்த பதில் வெறும் அறிவீனமான வாதமே ஒழியவேறில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் (Christian and Non-Christian Source), ஒரு "முஸ்லீம்-கிறிஸ்தவன்" இருந்ததாக ஒரு தகவலும் இல்லை. ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது "இயேசுவின் மரணம்" பற்றிய விவரம் அந்த காலத்து அதிகாரிகளுக்கு தெரிந்தவிவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். (இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர், இது இப்போதைக்கு என் கட்டுரையின் கருப்பொருள் அல்ல) இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்துக்கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள்(அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்[8]

இயேசுவின் சீடர்களின் நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புதிய ஏற்பாடு அல்லாத மற்ற கிறிஸ்தவ ஆதாரங்களும் (Early Christian Writings) இன்று நம்மிடம் உள்ளது.

உதாரணத்திற்கு: அப்போஸ்தர் பேதுரு "ரோம பேராயராக" நியமித்த " ரோம் கிளமண்ட்(Clement of Rome)" என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய "இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்" பற்றி பலமுறை எழுதியுள்ளார்[9]. அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப்(Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார் [10]. இன்னும் பல "கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள்(Non-Christian Writings)" இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் "ஜோசபாஸ் (Josephus)" மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ்(Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சிசெய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார்[11]. ஒரு கிரேக்க நகைச்சுவை(Satirist) எழுத்தாளர் "Lucian of Samosata" என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், "இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் "[12]. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது[13].

எனவே, குர்-ஆன் சொல்லும் (1) இயேசு மரிக்கவில்லை, (2) இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் தவறானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

உண்மை இப்படி இருந்தாலும், வாதத்திற்காக வேண்டி, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், பின்பு வந்த கிறிஸ்தவர்கள் அழித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வோம் . நாம் மேலே சொன்னது போல வித்தியாசமான கற்பனையை(Outlandish Assumption) நினைத்துக்கொண்டாலும், இதனால், முஸ்லீம்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழுகின்றன:

1. இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

2. ஏன் இயேசுவின் தியாக மரணம் மற்றும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை, இஸ்லாம் நம்பிக்கையை மாற்றிவிட்டது?

3. ஏன் இயேசுவின் 33 வருடகால இஸ்லாமிய போதனை ஒரு நம்பிக்கையாக மதிக்கப்படாமல் அழிந்துவிட்டது?



இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல "கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையை மாற்றிவிட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் இயேசுவின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்துவிட்டார்கள்" என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்வார்கள். ஆனால், ஒரு உண்மையான முஸ்லீம் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான், காரணம் இது இயேசுவிற்கு என்ன நடந்தது என்று குர்-ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

FACT #4: "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று மக்கள் அனைவரும் நம்பும்படி அல்லா எல்லா மக்களையும் ஏமாற்றினார்(Deceive) என்று குர்-ஆன் சொல்கிறது

குர்-ஆனின் கூற்றுப்படி, இயேசு சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக்கொள்ளலாம். இருந்தாலும், இயேசு வானத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு ஏன் "ஒரு முஸ்லீம் கூட" இல்லை? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், இயேசுவை பின்பற்றிய எல்லாரும் "இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அவர் மறுபடியும் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார்" என்றும் நம்பினார்.

சரி, இவர்களுக்கு "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை(விவரத்தை) யார் கொடுத்தது? இஸ்லாம் கூற்றுப்படி, "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை ஆரம்பித்தவரே(கொடுத்தவரே) அல்லா தான்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (4:158) [14]

இயேசுவை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாவின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், இயேசுவின் சீடர்களும் அல்லாவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துக்கொள்ளலாம். அப்படியானால்,

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு? ( So who is responsible for the Christian belief that Jesus died on the cross?)

இஸ்லாம்(குர்-ஆன்) சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், இயேசுவின் எதிரிகள் அவரை கொன்றுவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லா அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தார். அதனால், " இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியா அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லா தானே! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இயேசுவின் சீடர்கள் ஏமாற்றப்பட்டது "தற்செயலாக(unintentional) அல்லது ஒரு விபத்தாக நடந்தது" என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், "உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப்போகிறது" என்பதை அல்லா அறியாமல் இதை செய்தார் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லா இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தார் என்று சொன்னால், அல்லாவிற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம் . ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லா, ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத்தெரியாத "அறியாமையில்" இருக்கிறார் என்று முடிவு செய்யலாம், அல்லது "அவர் தெரிந்தே ஏமாற்றக்கூடியவர்" என்ற முடிவிற்கு வரலாம். (If the deception of the disciples was unintentional, then we must conclude that God didn't realize that he was about to start the largest false religion in the world. If it was intentional, then God is in the business of starting false religions. Therefore, the God of Islam is either dreadfully ignorant or maliciously deceptive.)

முகமதுவின் கூற்றுப்படி தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசுவின் ஊழியம் ஒரு மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இயேசு 33 ஆண்டுகள் இஸ்லாமிய போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்தார் என்று இஸ்லாம் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் மரித்த சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் இயேசுவின் போதனை கேட்டவர்கள் "கிறிஸ்தவர்களாக" மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யமுடியாத பாவமான "ஷிர்க் - SHIRK"[15] என்ற பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் "இயேசுவின் போதனைக்கு" கீழ்படியாததினால், இவர்களும் "இறைவனின் மிகப்பெரிய தீர்க்கதரிசியை" தள்ளிவிட்ட அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, இயேசுவை நம்பினவர்கள், இயேசுவை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரகநேருப்பில் பங்கடைய அல்லாவால் தண்டனைக்கு உட்பட்டார்கள். இப்படியிருந்தும், முஸ்லீம்கள் "இயேசு தீர்க்கதரிசிகளிலேயே சிறந்தவர்" என்றுச் சொல்வது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதாவது, இயேசு, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது "சம்பாதித்து" இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும் இஸ்லாமுக்கு மாற்றவில்லை. மட்டுமல்ல, ஒரு இஸ்லாம் தீர்க்கதரிசியாக, இயேசு, அல்லாவின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், இயேசு தன் ஊழிய நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாவிடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை.
இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே "ஏமாற்றும் இறைவனாகிய" அல்லாவும், படுதோல்வி அடைந்த மஸிஹாவுமே.

Allah Spreads the False Religion He Accidentally Started

தற்செயலாக ஆரம்பித்த பொய்யான மதத்தை, அல்லா பெருகச்செய்தார்


இஸ்லாமின் போதனையை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" தெரிந்தோ அல்லது தேரியாமலோ(intentionally or unintentionally) துவக்கினார் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்-ஆன் நின்றுவிடவில்லை. தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறார்.

FACT #5: கிறிஸ்தவ மார்கம் வளர்ச்சி அடைய அல்லா உதவியதாக குர்-ஆன் சொல்கிறது

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லா அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை(False Message) கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லா உதவினார்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராம?ீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14) [16]

இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். இயேசுவின் போதனையை தள்ளிவிட்ட யூதர்களுக்கு எதிராக, அல்லா இயேசுவை பின்பற்றியவர்களுக்கு(சீடர்களுக்கு) உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது . மற்றும் இந்த வசனத்தின்படி "இயேசுவின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்" என்று குர்-ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமைவாய்ந்தவர்களாக மாறிய மற்றும் இயேசுவை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி "ஆதி கிறிஸ்தவர்கள் - orthodox Christians" தான், இவர்களின் நம்பிக்கை "இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதலிலும், அவருடைய தெய்வீக தன்மையின்" மீதும் இருந்தது. இயேசுவின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை சுவிசேஷம்(இஞ்ஜில் Gospel) துடைக்கப்பட்டது என்றும் இஸ்லாமியர்கள் இப்போது வாதிக்கமுடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்-ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்-ஆன் சொல்வது படி, முதல் நூற்றாண்டில் "முஸ்லீம்-கிறிஸ்தவ" கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை . அவர்கள் மிக சீக்கிரமாக துடைத்துவிடப்பட்டார்கள். இயேசுவை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்கள், பிரகாசித்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்-ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லா உதவியாக இருந்தார் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினார்.

பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற செய்தியை உருவாக்கியது யார்? இறைவன்(அல்லா) தான் இந்த செய்தியை கண்டுபிடித்தார்(Invented). கிறிஸ்தவம் அல்லாத சரித்திர ஆசிரியர்கள் (non-Christian historians) கூட இயேசுவின் மரணம் ஒரு நிருபிக்கப்பட்ட ஆதாரமாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு, இந்த செய்தி பரவியிருக்கிறது[17]. இந்த சரித்திர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி எப்படி கிடைத்தது? அவர்கள் இதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பல மக்கள் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படி செய்ய அல்லா தான் காய்நகர்த்தினார். அதனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. தற்போதுள்ள கணக்குப்படி, கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் இப்போது உலகத்தில் இருக்கிறார்கள். இஸ்லாமின் மீது அதிகாரம் செலுத்தும் உலக மதமாக கிறிஸ்தவம் ஆரம்பித்ததற்கு பொறுப்பு இயேசுவும், அல்லாவுமே வகிக்கவேண்டும்.

If Islam Is True . . .

(இஸ்லாம் உண்மையாக இருந்தால்...)


இஸ்லாமின் கருத்து பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். இறைவன் பல பில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது. இது மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படிச்செய்து அவர்கள் இறைவனின் வழியைவிட்டு விலக அல்லா காரணமானார். அல்லா மக்களை ஏமாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டாமல் இருந்திருந்தால், இதை தவிர்த்து இருந்திருக்கலாம். அதனால், இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

உண்மையில் "இயேசு சிலுவையில் மரிக்காமல் இருக்கும்போது" ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அல்லா நினைத்தார்?

இயேசுவை யூதர்களின் மற்றும் ரோம அதிகாரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றவே இப்படி அல்லா செய்தார் என்று முஸ்லீம்கள் வாதம் புரியமுடியாது, ஏனென்றால், அல்லா "இயேசுவை பாதுகாப்பாக" தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளித்துவிட்டாரே. ஏன் இயேசுவின் எதிரிகள் "இயேசு மரித்துவிட்டார்" என்று நம்பி நிம்மதியடைய அல்லா அனுமதித்தார்? ஏன் அல்லா யாரையும் ஏமாற்றாமல், இயேசுவை அப்படியே எல்லாருக்கும் முன்பாக தன் அளவில் உயர்த்திக்கொள்ளவில்லை? இப்படி இயேசுவை எடுத்துக்கொண்டு இருந்தால், இப்படி பல மக்களை ஏமாற்றவேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டதே!

கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது, இது நம்மால் ஜீரணிப்பதற்கு மிக கடினமாக உள்ளது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், தன் தீர்க்கதரிசிகளை நம்பின மக்களை அல்லா ஏமாற்றினார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், அல்லா ஒரு தவறான செய்தியை(கிறிஸ்தவ செய்தி) ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், இயேசு மஸிஹா, திறமையில்லாதவராகவும் இறைவன் அனுப்பாதவராகவும் இருக்கிறார், ஏனென்றால், அவரது வாழ்க்கை யின் முடிவு, பல மக்களை இறைவனின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் இயேசுவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் இஸ்லாமின் இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரி சிந்திக்ககூடிய மனிதன் தள்ளிவிடுகிற அளவிற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் குழப்பமாக உள்ளது. கிறிஸ்தவத்தின் ஆரம்பம் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது, மற்றும் அறிவுடமை உள்ளதாக இல்லை. இஸ்லாம் என்பது உண்மையானால், கிறிஸ்தவம் இப்போது இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை - If Islam is true, the existence of Christianity makes no sense at all.

(If Islam is true, Jesus, the Messiah, was completely incompetent and should never have been sent by God, since Jesus' life ended up leading more people astray than any other life in history. Because the Muslim view is at odds with any traditional understanding of God's nature (including the Islamic understanding), Islam is an incoherent religious system, which should be rejected by all rational people. Islam has a poor and contemptible explanation for the origin of Christianity. If Islam is true, the existence of Christianity makes no sense at all.)

If Christianity Is True . . .

(கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்...)


அதே நேரத்தில், இஸ்லாம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று கிறிஸ்தவம் தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேளை கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், இஸ்லாம் ஏன் உருவானது என்பது தெளிவாகப் புரியும்.

ஏன் இப்படிப்பட்ட இஸ்லாம் போன்ற மதம் உருவானது என்று இப்போது உடனே உங்களுக்கு புரியவில்லையானால், கீழே உள்ள சில வரிகளை படியுங்கள், அப்போது புரியும்.

கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், கீழ் கண்ட வாக்கியங்களும் உண்மையாக இருக்கும்:

(1) மக்கள் இயேசு மூலமாகத் தான் இறைவனிடம் வருகிறார்கள்.

(2) சாத்தான் என்ற ஒரு தீயசக்தி மக்களை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறான்.


மேலே உள்ள வரிகளை மனதிலே வைத்துக்கொண்டு, "சாத்தான்" பற்றி ஏதாவது ஒரு சில விவரங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று நாம் இப்போது சிந்திக்கலாம்.

சாத்தான் மக்களை இறைவனிடமிருந்து தூரப்படுத்தவேண்டும் என்று விரும்பினால், மற்றும் இறைவனிடம் செல்வதற்கு இயேசு வழி என்று அவன் தெரிந்துக்கொண்டால், சாத்தானுடைய குறி எதுவாக இருக்கும்? மக்களை அதிகமாக கெட்டவர்களாக மாற்றுவது அவனின் மிக மிக முக்கிய நோக்கமாக இருக்காது (அவன் இறைவனிடமிருந்து மக்களை பிரிக்க, இப்படியும் மக்களை அதிகமாக தீயகாரியங்கள் செய்யச் செய்வான்), இதற்கு பதிலாக, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது தள்ளிவிடவேண்டும் என்ற எண்ணத்தை அவன் மக்களின் மனதில் பாய்ச்சுவான். இதனால், மக்கள் உண்மை இறைவனிடம் சேராமல் இருக்க வாய்ப்பு உண்டாகும்.

ஆனால், எப்படி சாத்தான் மக்கள் இயேசுவை மறுத்துவிட அவர்கள் நம்பும்படிச் செய்வான்? நாம் ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அது என்னவென்றால், இந்த உலகத்தில் "இறைவன்" பற்றி அக்கரைக் கொள்ளாத அனேகமாயிர மக்கள் உள்ளனர். சாத்தான் அவர்களைப் பற்றி கவலைப்படமாட்டான், ஏனென்றால், இறைவன் மூலமாக வரும் இரட்சிப்பு அல்லது முக்தி பற்றி அவர்களுக்கு அக்கரை இல்லை. சாத்தான் முடிந்த அளவு எவ்வளவு மக்களை இறைவனுக்கு தூரமாக பிரிக்கமுடியுமோ என்று முயற்சி செய்கிறான். முக்கியமாக, ஓர் அளவிற்கு இறைவன் விஷயங்களில் அக்கரை காட்டும் மக்கள் மீது அவன் கண் எப்போதும் இருக்கும் என்று நாம் சொல்லமுடியும். மக்களை இறைவனிடமிருந்து வேறுபடுத்த சாத்தான் இரண்டுவகையான முறையை கையாள்வான்:

ஒன்று "இறைவன் நம்பிக்கை" ஒரு முட்டாள்தனம் என்று நம்பவைப்பான் (இப்போது நாம் உலகத்தில் காண்கின்ற "சமயசார்பற்ற - secularism" கொள்கையை பரப்புவான்)

அல்லது அவன் உண்மைக்கு பதிலாக வேறு ஒரு மார்க்கத்தை கொடுப்பான் (இரட்சிப்பு அல்லது முக்தி அடைய தடையாக இருக்கும் ஒரு மார்க்கம்)

கிறிஸ்தவம் உண்மையானதாக இருக்குமானால், சாத்தான் இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மறுக்கும்படி மதங்களை நம்பும்படிச் செய்வான். சில நேரங்களில் இப்படிப்பட்ட மதங்கள் கிறிஸ்தவத்தைப் போல சில கோட்பாடுகளைக் கொண்டு இருக்கக்கூடும். கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்று நாம் இப்போது சரியாக ஊகிக்கமுடியும். இப்போது "இஸ்லாம்" நம்முடைய ஊகத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று பார்க்கலாம்.

இஸ்லாமுடைய போதனை இப்படியாக இருக்கும்: "இறைவனை நம்பு, நன்மைகளைச் செய்". நீ அதிக நன்மைகள் செய்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயமாக கிடைக்கும். இயேசுவை மதிக்கவேண்டும், ஏனென்றால், அவர் அல்லாவினுடைய சிறந்த நபியாக (தீர்க்கதரிசியாக) இருக்கிறார், அவர் அல்லாவின் செய்தியை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார். மட்டுமல்ல, இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், அவர் அனேக அற்புதங்கள் செய்தார் என்றும், அவர் தான் "மஸிஹா - Messiah " என்றும் நம்பவேண்டும். ஆனால்,நீங்கள் எதை நம்பினாலும், அவர் உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதை மட்டும் நம்பவேண்டாம். மற்றும் அவர் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றும் நீங்கள் நம்பவேண்டாம். முக்கியமாக நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் என்னவாக இருக்கும் என்றால், இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்புவதாகும். இங்கு கவனிக்கவும், இஸ்லாம் இயேசுவின் மற்ற எல்லா காரியங்களையும் ஏற்றுக்கொள்கிறது, ஆனால், மனிதன் இரட்சிக்கப்பட தேவையான முக்கியமான விஷயத்தை மறுக்கிறது. முஸ்லீம்கள் இறைவனை நம்பவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளனர், ஆனால், சாத்தானும் அவன் கூட்டமும் இறைவனை நம்புகின்றன (For instance, Muslims are commanded to believe in God, but even Satan and his demons believe in God). நல்ல காரியங்களை செய்யும் படி முஸ்லிம்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர், மற்ற மதங்களிலும் இதே கட்டளை உள்ளது. முஸ்லீம்கள் இயேசுவின் பிறப்பு அற்புதத்தையும், அவர் ஒரு நபி என்றும் இஸ்லாம் நம்பும்படிச் சொல்கிறது, ஆனால், இந்த நம்பிக்கை ஒரு மனிதனை இரட்சிக்காது. ஆக, எப்போது நாம் இயேசுவின் மரணம் உயிர்த்தெழல் போன்ற மனிதன் இரட்சிக்கப்ட தேவையான விவரங்களை சொல்கிறோமோ, அவைகளை மிகவும் கடினமாக இஸ்லாம் எதிர்க்கிறது[19].
Islam, then, looks exactly like the religion we predicted that Satan would form, for it denies what is necessary for people to come to God.

எனவே, கிறிஸ்தவத்தை நம்புகிறவர்கள் இஸ்லாம் போன்ற மார்க்கம் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை சுலபமாக எதிர்பார்க்கலாம். பைபிளில் சொல்லப்பட்ட சில தீர்க்கதரிசன வசனங்களை(எதிர் காலத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்ட வசனங்கள்) நாம் பார்க்கலாம்:

இயேசு சொன்னார்: அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்[20], பவுல் கூட இப்படி சொல்கிறார் :"…சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் ."[21] (The phrase "deceitful spirit" is reminiscent of the Qur'anic claim that Allah deceived people about the death of Jesus.) உண்மை சுவிசேஷத்தை கெடுக்க பொய் போதகர்களும், தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என்று, பைபிள் அடிக்கடி போதிக்கிறது. இந்த எச்சரிக்கையை முகமதுவின் காலத்தில் சிலர் கவனித்ததாக தெரிகிறது.

முடிவுரை

Final Thoughts



சரித்திரத்தை சிறிது திரும்பிபார்ப்போமானால் அனேகர் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். உண்மையில் இன்று கூட தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள், நாளைக்கும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. ஒரு வேளை எதிர்காலத்திலே ஒரு தீர்க்கதரிசி எழும்பி, தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று சொல்வார் என்று வைத்துக்கொள்வோம்[22]. நிச்சயமாக முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு வேளை இந்த தீர்க்கதரிசி முஸ்லீம்களைப் பார்த்து கீழ்கண்டவாறு சொல்கிறார் என்று நினைத்துக்கொள்வோம்.

"சகோதரர்களே, நீங்கள் முகமதுவின் போதனையை நம்புகிறீர்கள், இதோ நான் சொல்கிறேன், இஸ்லாம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு இறைவனால் உருவாக்கப்பட்டது". ஏனென்றால், இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபியர்கள், மிகவும் கொடுமையான பழக்கங்களை கொண்டு இருந்தனர், அதாவது தங்கள் மகள்களை கொன்றுபோட்டனர், மற்றும் நூற்றுக்கணக்கான பெண்களை திருமணம் செய்தனர். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவுசெய்தார், எனவே, அவர்களை வழிவிலகச் செய்தார், உண்மையை விட்டு பொய்யானவற்றை நம்பும்படிச் செய்தார். இதோ நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் இறைவனின் மிகப்பெரிய நபியாவேன், தீமையிலிருந்து உங்களை காப்பாற்ற வந்துள்ளேன்.

முஸ்லீம்கள் இவரை நம்புவார்களா? நிச்சயமாக நம்பமாட்டார்கள். ஏன் முஸ்லீம்கள் இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? முஸ்லிம்கள் அவர் சொல்வதை நம்பமாட்டார்கள் ஏனென்றால், இறைவன் தெரிந்தே பல மில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதே போலத்தான் இயேசுவின் மரணத்தின் செய்தியை நம்பினார்கள் முஸ்லீம்கள். ஆக, மக்களை மற்றும் தன் நபியை பின்பற்றிய சீடர்களையும் ஏமாற்றும் இறைவனின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்தால், தங்களுக்கு நிச்சயமாக உண்மை சொல்லப்பட்டிருக்கும் என்று எப்படி நம்புகிறார்கள். (So if Muslims believe in a God who deceives people, even those who follow his prophets, how can Muslims be confident that they have been given the truth?)

முஸ்லீம்கள் தங்கள் இறைவனைப்பற்றியும், தங்கள் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் அதிகமாக பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், நாம் சரியாக ஆராய்ந்துபார்ப்போமானால், இஸ்லாம் மிகப்பெரிய மதத்தின் இறைவனாகிய அல்லாவை ஏமாற்றுபவன் என்று குற்றம் சாட்டுகிறது. இப்போது நாம் சிறிது நின்று நிதானித்து சிந்திக்கவேண்டும். ஏன் தன்னைப் பற்றி கவுரவமாக பெருமைப்படும் மதம், தன் இறைவன், ஒரு பொய்யான மதத்தை ஆரம்பித்தார் என்று பறைசாற்றுகிறது. ஏன் இயேசுவை மதிக்கிறோம் என்று சொல்லும் மக்கள், அவர் மிகப்பெரிய படுதோல்வி அடைந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்? இஸ்லாம் மிகவும் வேகமாக கிறிஸ்தவத்தை அழித்துவிட முயற்சி செய்ததாக தெரிகிறது, ஆனால், அதனால், தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலைப் பற்றிச் சொல்லும் போது, இஸ்லாம் இறைவனை(அல்லாவை) ஒரு "ஏமாற்றுபவர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இது இஸ்லாமிய கோட்பாடு இறைவனுக்கு பொருந்தக்கூடியது அல்ல. This desperation only makes sense if Christianity is true, and if Islam was designed by Satan to keep people from being saved.

முஸ்லீம்கள் இவைகள் அனைத்தையும் மறுக்கக்கூடும். அவர்கள் தங்கள் இறைவனுக்கு காட்டும் மதிப்பும், தங்கள் தீர்க்கதரிசிக்கு காட்டும் மரியாதையும் தொடரக்கூடும். ஆனால், அவர்கள் கிறிஸ்தவத்தை விவரிப்பதிலே சில விபரீதங்களைச் சொல்கிறார்கள். இறைவன் உலகத்தை திசைதிருப்பிவிட்டான்(astray) என்று அவர்கள் சொல்வது தான், புதுமையாக உள்ளது. இஸ்லாம் உண்மையாக இருக்குமானால், அல்லாவும், இயேசுவும் தோல்வி அடைந்தவர்கள் என்பது நிச்சயம். ஆனால், கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், இறைவனும், இயேசுவும் வெற்றிப்பெற்றவர்கள். சிலுவையிலே இரட்சிகப்படுவதற்கான வாசல் திறந்தே இருக்கிறது, தங்கள் கதவுகளை திறக்கமாட்டோம் என்று மூடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் சேர்த்து.

பொய்யான தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று இயேசு தன்னை பின்பற்றினவர்களுக்கு எச்சரித்தார். அவர்களை நம்பவேண்டாம் என்று கட்டளையும் கொடுத்துள்ளார். அவர்களை எப்படி நாம் கண்டுபிடிப்பது என்றுச் சொன்னால், அவர்களுடைய போதனைகள் இறைவனுக்கு தகுதியில்லாத குணத்தை இறைவனுக்கு உள்ளது போல காட்டக்கூடியதாக இருக்கும். இறைவன் உண்மையுள்ளவர், மற்றும் அன்புள்ளவர். இஸ்லாமை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், இந்த இரண்டும் இறைவனுக்கு இல்லை என்று நம்மை நம்பச்சொல்லும்.

Contact Author David Wood : wood_apologetics@hotmail.com

Notes:
1 See Qur'an, 24:25
2 Qur'an 19:23-26, 30-33,
3 Qur'an 42:13.
4 Qur'an 43:59, 63-64.
5 Qur'an 3:52.
6 Qur'an 5:111.
7 Qur'an 57:26.
8 1 Corinthians 15:3-5.
9 See 1 Clement 42:3.
10 See Polycarp, To the Philippians 1:2, 2:1-2, 9:2, 12:2.
11 See Josephus, Antiquities 18.64, and Tacitus, Annals 15.44.
12 Lucian of Samosata, The Death of Peregrine, 11-13.
13 Talmud, Sanhedrin 43a.
14 Qur'an 4:157-158. According to Muslim tradition, Allah made Judas Iscariot look like Jesus, so that Judas was crucified in Jesus' place.
15 To associate partners with God is to commit the sin of shirk.
16 Qur'an 61:14.
17 For instance, John Dominic Crossan, of the notoriously anti-Christian "Jesus Seminar," says "That [Jesus] was crucified is as sure as anything historical can ever be" (Jesus: A Revolutionary Biography [San Francisco: HarperCollins, 1991] p. 145).
18 This spirit being is not to be confused with the popular image of a harmless red figure with a pointy tail and a pitchfork!
19 One may wonder why I have not included belief in God among the doctrines necessary for salvation. I'm certainly not denying the necessity of belief in God. However, I do draw a distinction between a necessary doctrine and a necessary and sufficient doctrine. Belief in God is necessary for salvation, but it is not sufficient to produce it. In contrast, the Christian doctrines of confession of the lordship of Christ and belief in his resurrection from the dead are necessary and sufficient. That is, these doctrines are sufficient to guarantee the salvation of the Christian. Yet it is these doctrines that Islam most vehemently opposes.
20 Matthew 24:11.
21 1 Timothy 4:1.
22 Even Islam has had its share of self-proclaimed new prophets. Most notably, Mirza Ghulam Ahmad announced his prophethood towards the end of the 19th Century. He also claimed to be the second coming of Jesus. Millions of people have followed him. However, the vast majority of Muslims consider these "Ahmadiyyas" to be a heretical sect. The Ahmadiyyas, though they profess to be Muslims, aren't even allowed to take the pilgrimage to Mecca. The Ahmadiyya movement is significant in that Ahmadiyyas say that true Islam was corrupted, just as Muslims claim that Christianity was corrupted. Hence, Ahmadiyyas claim that God sent another prophet to restore the true message of God. Muslims reject this, because they don't believe that Islam has been corrupted. They conclude that Mirza Ghulam Ahmad must have been a false prophet. But this is the same reason Christians reject Muhammad. We don't believe that Christianity has been corrupted, so Muhammad must have been a false prophet.