ஏழிலாவிற்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?
முன்னுரை:
எழிலா என்ற தளத்தில் "இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல் " என்ற தலைப்பில் ஒரு செய்தியைக் கண்டு மிரண்டுப்போனேன். எந்த நாட்டில் இப்படிப்பட்ட செய்தியை, எந்த சபை வெளியிட்டது என்று காணலாம் என்று ஆவலாக படித்துப்பார்த்தேன். பிறகு தான் கண்டுக்கொண்டேன், பொய்யின் காற்று இவர்கள் பக்கம் இப்போது வீசியுள்ளது என்று.
நான் ஏன் இப்படி சொல்கிறேன், என்பதை அறிய எழிலா வெளியிட்ட செய்தியை படியுங்கள்:
இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவமதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
17:3 And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
17:4 And it be told thee, and thou hast heard of it, and enquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
17:5 Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.
இந்த செய்தியில் வேண்டுமென்றே அவர்கள் மறைத்த உண்மை என்ன என்பதை காண்போம்.
1. இவர்கள் கொடுத்த தலைப்பின் முதல் பாகத்தை பாருங்கள்:
"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"
இவர்கள் வேண்டுமென்றே செய்த தவறு, "இன்றைய கிறிஸ்த போதனை" என்று தலைப்பு வைத்தது.
நான் இவர்களிடம் கேட்கும் கேள்வி:
a) எந்த சபையில்(Church) இப்படி போதிக்கிறார்கள்?
b) எந்த நாட்டில் போதிக்கிறார்கள்?
c) புதிய ஏற்பாட்டில் எங்கு இப்படி சொல்லப்பட்டுள்ளது?
d) "இன்றைய கிறிஸ்த போதனை" என்று எப்படி உங்களால் சொல்லமுடிகிறது?
"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"
அதாவது, "கிறிஸ்த மதத்திலிருந்து வெளியேறினால்" என்று எழுதுகிறார்கள்.புதிய ஏற்பாட்டிற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பது புலனாகிறது.
a) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்றுச் சொல்லுங்கள்b) இந்த வசனம் எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே தெரியுமா? ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அது எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கவேண்டும் என்பது கூட மற்றவர்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த வசனம் பழைய ஏற்பாட்டு வசனம் என்று தெரிந்தே மறைத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
c) யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா?d) இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் உள்ளதென்று உங்களால் நிருபிக்கமுடியுமா?
e) கடைசியாக, பழைய ஏற்பாட்டையாவது நீங்கள் படித்ததுண்டா? குறைந்த பட்சம் இந்த வசனம் வரும் புத்தகத்தையாவது, அல்லது அதிகாரத்தையாவது படித்ததுண்டா?
====================
உபாகமம் 17:2 - 7உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
====================
2) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்மந்தம் உண்டா?
யூதர்களுக்கு மோசே மூலமாக கொடுக்கப்பட்ட கட்டளைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்:
a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை)
b) சமூகம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட கட்டளைகள்
c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்
a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை):
தேவன் மோசே மூலமாக கொடுத்த 10 கட்டளைகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். அதாவது நானே உன் தேவன், விக்கிரகங்களை வணங்க வேண்டாம், விபச்சாரம் செய்யவேண்டாம், திருடவேண்டாம், பொய் சொல்லவேண்டாம், மற்றவர்களின் பொருட்களின் மீது ஆசைப்படவேண்டாம், உன் பெற்றோரை கணம் செய்யவேண்டும் போன்ற கட்டளைகள் ஆகும்.
சமுதாயத்தில் நிகழும் பல குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் தரவேண்டும், பற்றிய கட்டளைகள் இதில் அடங்குகிறது. திருடும் போது, விபச்சாரம் செய்யும் பொது, மற்றவனை ஏமாற்றும் போது என்ன தணடனை கொடுக்கவேண்டும், போன்ற கட்டளைகள் இதில் அடங்கும்.
இந்த கட்டளைகள் யூதர்களுக்கு மட்டும் தான், கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எப்படி என்று கேட்பீர்களானால், ஒரு முறை இயேசுவிடம் யூத ஆசாரியர்கள் வந்து இவரிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக, ஒரு விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் கட்டளைப்படி இவளை கல்லெரிந்து கொள்ளவேண்டும்,நீர் என்ன சொல்கிறீர் என்று கேட்கும் போது, "இது வரை ஒரு முறையும் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எரியக்கடவன்" என்று இயேசு சொல்கிறார். உடனே எல்லாரும் சென்றுவிடுகின்றனர். அதாவது, யூதர்கள் ஒரு நாடாக இருந்ததால், சமுக கட்டளைகளை தேவன் பழைய ஏற்பாட்டில் விதித்தார், புதிய ஏற்பாட்டில் அக்கட்டளைகள் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற கட்டளைகளை மாற்றி, எல்லாரையும் நேசியுங்கள் என்று இயேசு சொன்னார். இதை புதிய ஏற்பாட்டில் நீங்கள் படிக்கலாம்.
c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்:
பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் பூசாரிகள் செய்யவேண்டியவை மிகவும் அதிகமான வேலைகள் இருந்தது, அவர்களுக்கென்று தனியான உடை இருந்தது, அதற்காக ஒரு வம்சம் அல்லது கோத்திரம் இருந்தது, பஸ்கா போன்ற பண்டிகைகள் அதற்குரிய வழிமுறைகள் இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை மக்களுக்காக பல ஆசாரங்களை அவர்கள் செய்யவேண்டும். அதையெல்லாம், புதிய ஏற்பாட்டில் இல்லை. பழைய ஏற்பாட்டின் எல்லா தேவாலய வழிமுறைகளும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாக இருந்தது.
கிறிஸ்தவத்தில் அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் கட்டளைகள் இல்லை, இயேசு இதைப்பற்றிச் சொல்லும் போது, என் அரசு(இராஜ்ஜியம்) இந்த உலகத்திற்கு சம்மந்தப்பட்டது இல்லை என்றார். எனவே, நீங்கள் குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள், யூதர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு அல்ல.
சரி, பழைய ஏற்பாடு மக்களுக்கு என்றாலும், ஏன் கொல்லவேண்டும் என்று கேட்பீர்கள்:
அதாவது, கி.மு. வில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே இருந்த விக்கிர ஆராதனை பழக்கங்களில் சில தீய பழக்கங்கள் இருந்தன. அதாவது, விக்கிர ஆராதனைகளில் விபச்சாரம் என்பது ஒரு பகுதியாக இருந்தது, மற்றும் தங்கள் பிள்ளைகளை சிலைகளுக்கு பலி இடுவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது. இதற்காகத் தான் தேவன அவர்களின் "அருவருப்புக்களுக்கு விலகி இருங்கள்" என்றுச் சொல்லி, கட்டளைகளையிட்டார்.
உங்கள் பிள்ளைகளை விக்கிரகங்களுக்கு பலி இடவேண்டாம் என்று கட்டளையிட்டார், இஸ்ரவேல் மக்களில் ஒருவரும் இப்படி விபச்சாரம் வேசித்தனம் செய்கிறவர்களாக இருக்கக்கூடாது என்றார்.
இந்த பகுதிக்காக "இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளும் பதில்களும்" என்ற கேள்வி பதில் கட்டுரையில் நான் கொடுத்த பதிலை இங்கு இணைக்கின்றேன். இந்த என் பதிலில் தேவதாசி முறையும், மற்றும் பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு விலகியிருங்கள் என்றுச் சொன்ன வசனங்களையும் நான் விவரித்துள்ளேன்.
ஆனால், தாமார் அப்படிச் செய்யவில்லை. இதற்கு காரணம் "கானான்" தேசத்தில் உள்ள மக்களிடையே இருந்த "Shrine or Temple Prostitute முறையாகும்" - இந்தியாவில் இதையே "தேவதாசி" என்றுச் சொல்வார்கள். ஒரு பெண்ணை கோவிலுக்கென்று(God of Fertility) நேர்ந்துக்கொள்வார்கள், அவள் ஒரு பொது பொருளாக கருதப்படுவாள்.
Source : Wikipedia : http://en.wikipedia.org/wiki/Shrine_prostitute
Religious prostitution is the practice of having sexual intercourse (with a person other than one's spouse) for a religious purpose. A woman engaged in such practices is sometimes called a temple prostitute or hierodule, though modern connotations of the term prostitute cause interpretations of these phrases to be highly misleading.It was revered highly among Sumerians and Babylonians. In ancient sources (Herodotus, Thucydides) there are many traces of hieros gamos (holy wedding), starting perhaps with Babylon, where each woman had to reach, once a year, the sanctuary of Militta (Aphrodite or Nana/Anahita), and there have sex with a foreigner, as a sign of hospitality, for a symbolic price. (Cf. Herodotus, Book I, para 199)
A similar type of prostitution was practiced in Cyprus (Paphos) and in Corinth, Greece, where the temple counted more than a thousand prostitutes (hierodules), according to Strabo. It was widely in use in Sardinia and in some of the Phoenician cultures, usually in honour of the goddess 'Ashtart. Presumably by the Phoenicians[citations needed], this practice was developed in other ports of the Mediterranean Sea, such as Erice (Sicily), Locri Epizephiri, Croton, Rossano Vaglio, and Sicca Veneria. Other hypotheses[specify] concern Asia Minor, Lydia, Syria and Etruscans.
It was common in Israel too, but some prophets, like Hosea and Ezekiel, strongly fought it; it is assumed that it was part of the religions of Canaan, where a significant proportion of prostitutes were male (roughly the same proportion as there were men in society at large, about 50%).[citations needed] [specify] speculates that the Canaanite peoples had a system of religious prostitution, inferring from passages such as Genesis 38:21, where Judah asks Canaanite men of Adullam "Where is the harlot, that was openly by the way side?". The Hebrew original employs the word "kedsha" in Judah's question, as opposed to the standard Hebrew "zonah". The word "kedsha" is derived from the root KaDeSh, which signifies uniqueness and holiness; thus it (according to his speculation) possibly represents a religious prostitute.
India
The practice devadasi and similar customary forms of hierodulic prostitution in Southern India (such as basavi),[1] involving dedicating adolescent girls from villages in a ritual marriage to a deity or a temple, who then work in the temple and act as members of a religious order. Human Rights Watch claims that devadasis are forced at least in some cases to practice prostitution for upper-caste members[2]. Various state governments in India have enacted laws to ban this practice. They include Bombay Devdasi Act, 1934, Devdasi (Prevention of dedication) Madras Act, 1947, Karnataka Devdasi (Prohibition of dedication) Act, 1982, and Andhra Pradesh Devdasi (Prohibition of dedication) Act, 1988.[3]
அந்த காலத்தில், சில நாடுகளில் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்கு ஒரு முறை, இப்படி தன் தெய்வத்திற்காக ஒரு நாள், தன் கணவரல்லாத ஒருவரோடு இருக்கவேண்டும், இதை அவர்கள் புனிதமாக எண்ணினர்.
8. பைபிள் எதிர்க்கும் Shrine or Temple Prostitute or "தேவதாசி" முறை:
நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம், பல இடங்களில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு "அந்நியர்களுடன் திருமண உறவுமுறைகளை" வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். இதற்கு காரணம் அந்நிய ஜனங்களிடையே இருந்த இப்படிப் பட்ட பழக்கங்கள், மற்றும் இஸ்ரவேலர்களில் இப்படிப்பட்ட "தேவதாசியாக" ஒருவரும் இருக்கக்கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்
உபாகமம்: 23:17-18 ( Deuteronomy 23:17-18)
No Israelite man or woman is to become a shrine prostitute. You must not bring the earnings of a female prostitute or of a male prostitute into the house of the LORD your God to pay any vow, because the LORD your God detests them both. (NIV)17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
மூலமொழியில் இங்கு சொல்லப்படும் வார்த்தை " வேசியில்லை" அது "தேவதாசி"( Shrine Prostitute) என்பதாகும். எந்த ஒரு இஸ்ரவேல் பெண்ணும், ஆணும் இப்படி "தேவதாசியாக" இருக்கக்கூடாது என்பதாகும். அந்த கானானியரின் ஜனங்களில் ஆண்களும் இப்படி இருந்தனர். இப்படி Shrine Prostitute ஈடுபடுபவர்கள் அதற்காக சிறிது பணமும் பெறுவார்கள், அப்படிப்பட்ட பணம் கூட தேவனுடைய ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார். நாயின் கிரயம்(the Price of a Dog) என்றால், ஆண்கள் இப்படி வேசித்தனம் செய்து சம்பாதிக்கும் பணம் ஆகும்.
இப்படியாக தேவன் பலமுறை இஸ்ரவேல் மக்களுக்கு கானானியர் செய்ததுபோல செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். பழைய ஏற்பாட்டு இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை தங்கள் நாட்டிலிருந்து துரத்தி இருக்கிறார்கள்.
1 இராஜா 14:23-24, 15:11-12, 22:46 & 2 இராஜா 23:7
1 இராஜா 14:23 . அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.24. தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.1 இராஜா 15:11. ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.12. அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
1 இராஜா 22:46. தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.
2 இராஜா 23:7. கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.
இஸ்ரவேலில் தேவனுக்கு பயந்த இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை நாட்டிலிருந்து விறட்டிவிட்டார்கள்.
புதிய ஏற்பாட்டு காலத்திலும், பவுல் ஊழியம் செய்த "கொரிந்தி" பட்டணமும் இப்படிப்பட்ட அருவருப்புக்களால் நிறைந்திருந்தது. சுமார் இப்படிப்பட்ட ஆண், பெண் தேவதாசிகள் 1000 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.
According to Nelson's Bible Dictionary Corinth was ancient Greece's most important trade city. At Corinth the apostle Paul established a flourishing church made up of a cross section of the worldly minded people who had flocked to Corinth to participate in gambling, legalized temple prostitution, business adventures, and amusements available in this first century navy town. The city soon became a melting pot for the approximately 500,000 people who lived there at the time of Paul's arrival. Source: http://www.christiangay.com/he_loves/corinth.htm
எனவே தான் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கீழ்கண்டவாறு அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
1 கொரி 6:9-11
9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜயத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் ,10. திருடரும், பொருளாசைக்காரரும்,வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.11. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
மூலமொழியில், இந்த வசனத்தில் வரும் "வேசிமார்க்கத்தார், விபச்சாரக்காரர், ஆண்புணர்ச்சிக்காரர்" என்பது இந்த "Male/Female Temple Prostituttes " பற்றியே சொல்லப்பட்டுள்ளது.
ஆக, யேகோவாவிற்கு அருவருப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது அந்நியர்களுடைய இப்படிப்பட்ட செயல்கள்.
-----------------
முடிவுரை: இனி மேலாவது ஏதாவது வசனத்தை குறிப்பிடுவதாக இருந்தால், மேற்கோள் காட்டி, புரிந்துக்கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். "இன்றைய கிறிஸ்தவத்தில்" என்று எழுதி, பழைய ஏற்பாட்டு வசனத்தை எடுத்து கிறிஸ்தவத்தை சம்மந்தப்படுத்தி இப்படியெல்லாம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக