ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க
முன்னுரை: கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு அவதூறை பரப்புகிறார்கள் என்று இப்ராஹிம் அவர்கள் மிகவும் காரசாரமாக பதில் (http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html) அளித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய சத்தத்தோடு பதில் அளித்துள்ளார். இஸ்லாமுக்கே உரித்தான பாணியில் கிறிஸ்தவர்களைத் திட்டியும் எழுதியுள்ளார், அல்லாவின் நல்லடியார் இபரஹிம் அவர்கள். சரி, அவர் என்ன எழுதியுள்ளார்? என்பதை இந்த கட்டுரையில் காணலாம். இவர்களது இந்த கட்டுரைக்கு என் முதல் பதிலை இங்கு படிக்கலாம்:
ஏகத்துவத்திற்கு பதில் : உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் – 2
1. யாகாவா ராயினும் "நா" காக்க:
இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள், இஸ்லாமில் சகிப்புத்தன்மை அதிகம் என்று மேடையில் முழங்கும் இஸ்லாமியர்கள், மேடையில் மட்டும் தான் "அமைதி" காக்கிறார்கள், மேடையை விட்டு இறங்கிவந்துவிட்டால், சுனாமி தான்.
"இஸ்லாமியர்களுக்கு கேள்விகளையும், பதில்களையும் முன்வைக்கும்" நபர்களுக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு இவர்கள் சூட்டும் புகழாரங்கள் என்னவென்று சிறிது பார்ப்போம். கீழே உள்ள புகழாரங்கள் அனைத்தும் பல கட்டுரைகளிலிருந்து எடுத்தது அல்ல, இவைகள் அனைத்தும் ஒரே கட்டுரையிலிருந்து எடுத்தது. இஸ்லாமுக்கு சகிப்புத்தன்மை அதிகம் என்றுச் சொல்லும் அமைதி புறாக்கள் எழுதியதை படியுங்கள்.
1) சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் -
2) அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.
3) நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள்,
4) எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது?
5) இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
6) இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக
7) சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள்.
8) இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு
9) நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,
10) அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும்
11) நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ
12) அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும்
13) இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம்
14) அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.
15) இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம். அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.
16) எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள்
17) 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.
18) அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?
19) ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது.
20) அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.
21) நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள்
2. அன்பான இஸ்லாமிய நண்பர்களே! "சகிப்புத்தன்மை என்றால் என்ன?" :
ஒரு இந்துவோ, கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, அவனோடு நாங்கள் தோலோடு தோல் சேர்த்து அல்லாவை தொழுதுக்கொள்கிறோம்,நாங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை ஏனென்றால், இஸ்லாம் சகிப்புத்தன்மையுள்ளது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே!
ஒரு முஸ்லீமிடம் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம், ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனிடம் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம். அதே போல ஒரு இந்துவை இன்னொரு இந்து சகித்துக்கொள்வது என்பது சுலபம். இவர்கள் இருவரின் அடிப்படை நம்பிக்கையும் ஒன்று தானே.
இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்று நீங்கள் சொல்லவேண்டுமானால், உங்கள் சகிப்புத்தன்மையை முஸ்லீமிடம் அல்ல, மற்றவர்களிடம் காட்டவேண்டும். இஸ்லாமுக்கு கேள்விகள் கேட்டு, பதில்கள் தருகிறோம் என்ற காரணத்தால், இப்படி தரம் குறைவாக திட்டுகின்றீர்களே, உங்களிடம் எங்கே சகிப்புத்தன்மை உள்ளது? நீங்களும் தான் பைபிளில் உள்ள அனைத்தும் கற்பனை என்றுச் சொல்கிறீர்கள்,யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லாவின் வார்த்தைகளாகிய அவரது முந்தைய வேதத்தை திருத்திவிட்டார்கள் என்று (முஸ்லிம்கள் தான் அவர்கள் திருத்தும் போது, பக்கத்தில் இருந்து பார்த்தது போல) சொல்லுகின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களை திட்டுகின்றோமா? திட்டுவதற்கு பதிலாக எங்களால் முடிந்த மற்றும் எங்களுக்கு (முக்கியமான எனக்கு) தெரிந்த பதிலை தருகிறோம்.
ஒரே கட்டுரையில் கிறிஸ்தவர்களை நீங்கள் சொன்ன புகழாரங்கள்:
விஷமிகள்,
விஷமப்பிரச்சாரம்,
மறுக்கத் திராணியற்றவர்கள்,
எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்?
சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?,
இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை,
விஷமக்கட்டுரைகளை,
கயவக் கும்பல்,
யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,
நோயாளிகள்,
வெளிநாட்டு கைக்கூலிக்கு,
வெளிநாட்டு விஷமிகளை,
பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம் ,
திரானியற்ற இந்தக் கயவர்கள்தான்,
கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு,
இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு,
எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.
இந்த மேலே உள்ள எல்லா வார்த்தைகளையும் உங்களுக்குச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும், நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம், உங்களை திட்டுவதில்லை. காரணம் என்ன தெரியுமா? எங்களுக்கு வழி காட்டியவர் சென்று வந்த பாதையில் தான் நாங்களும் செல்கிறோம். நீங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரை பின்பற்றுகிறீர்கள். இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்பது உண்மையாக இருக்குமானால், இப்படி எல்லாம் நீங்கள் எழுதமாட்டீர்கள். இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி உண்மையாக இருக்கிறது என்றுப்பாருங்கள்:
மத்தேயு 7:16-20:
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
3. இஸ்லாமை சகிப்புத்தன்மையற்ற மார்க்கமாக நீங்கள் அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்:
ஏதோ மேடையில் பேசினால், கேட்பவர்கள் சில நாட்களுக்குள் மறந்துப்போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் "எழுத்துக்களை, கட்டுரைகளை" பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இது தவறு. உங்கள் கட்டுரைகள் பல தளங்களில் பதிக்கப்பட்டு, ஆயிரமாயிரமான பேர், பல ஆண்டுகள் படிப்பார்கள். படிப்பவர்கள் எல்லாரும், இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றும், அப்படி இஸ்லாமியர்களாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களை திட்டுவதை அங்கீகரிப்பார்கள் என்று நினைத்துவிடவேண்டாம். வன்முறையை எதிர்ப்பவன் இஸ்லாமிலும் உண்டு, வன்முறையை ஆதரிக்கிறவன் கிறிஸ்தவத்திலும் உண்டு. எல்லா மார்க்க மக்களில் இப்படி பல கருத்துக்கள் கொண்ட மக்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நம் எழுத்துக்கள் நாம் யார்? நம் மனநிலை என்ன? என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிடும், உங்கள் கட்டுரைகளை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். உங்களின் இந்த வார்த்தைகளினால், இஸ்லாமுக்கு ஒரு அவதூறு பெயரை நீங்களே கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எழுதவும்.
நாங்கள் ஆரோக்கியமான விவாதங்கள், ஆதாரத்தோடு கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் முன்வைத்த பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் தருவது போல, நீங்களும் பதில் தாருங்கள், நீங்கள் தான் ஆதாரபூர்வமாக, அறிவு பூர்வமாக ஆதாரங்களை முன்வைத்து பதில் தருபவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்களே, பின் ஏன் இவ்விதம் கோபப்பட்டு எழுதுகிறீர்கள்?
இஸ்லாம் சகிப்புத் தன்மையுள்ளது என்றுச் சொல்வது மட்டுமல்ல, அதை நிரூபிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. எதிர்ப்பே இல்லாத போது, நாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்று முழங்குவது சுலபம், ஆனால், உண்மையான எதிர்ப்பு இருக்கும்போது, "சகிப்புத்தன்மையை", இஸ்லாமின் அமைதி முகத்தை காட்டும் சமயம் இது தான் என்று கருதி செயல்படவேண்டும்.
முடிவுரை: ஏகத்துவம் எழுதிய இந்த கட்டுரையின் மற்ற பகுதிகளுக்கு என் பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன். ஒவ்வொரு தலைப்பாக எடுத்து பதில் சொல்வது தான் சிறந்தது என்று நான் கருதுகிறேன். ஏன் நேரடி மேடை விவாதத்திற்கு வரமறுக்கிறீர்கள்? ஜாகிர் நாயக்கிடம், பிஜே அவர்களிடம் மேடையில் கேள்விகள் கேட்கலாம் அல்லவா? மாற்கு 16ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, விசுவாசிப்பவர்களால் நடக்கும் அடையாளம் பற்றி என்ன பதில்? விஷத்தை குடிக்க தயாரா? போன்ற கேள்விகளை அவர் கேட்டுள்ளார். ஒவ்வொன்றிற்கும் பதில் கூடிய சீக்கிரமே தரமுயற்சி செய்கின்றேன். எனக்கு கிடைக்கும் சமயத்தில் முடிந்த அளவிற்கு வாரம் ஒரு கட்டுரை அல்லது பதிலை தர நான் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.
இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை எப்படி திட்டினாலும் நாங்கள் நிதானம் இழக்கமாட்டோம். அதற்கு பதிலாக, எங்கள் மறுப்புக்களை இன்னும் ஆழமாகவும், பிழையில்லாமலும் எழுத முயற்சி செய்வோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் செய்யவேண்டியவைகள்:
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;... (மத்தேயு 5:11-12)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்(மத்தேயு 5:44)
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்(லூக்கா 6:28).
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்(ரோமர் 12:14).
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்(1 பேதுரு 3:9).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக