அபூமுஹை அவர்களுக்கு பதில்: பாதை மாறிய பயணங்கள்
மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் ( Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?) இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார் ( மதம் மாறினால் மரண தண்டனை-1) . இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன். அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது) .
நான் சொல்லாத விவரத்தைச் சொன்னதாக, அபூமுஹை அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு சில விவரத்தைச் சொல்லியுள்ளார்.
இந்த கட்டுரையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டு:
அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற நாட்டை ஆளும் சட்டம் எல்லாம் காபிர்(Non-Islam) நாடுகள் தான் உருவாக்கின, இஸ்லாம் அதை சொல்லவில்லை என்று நான் சொன்னதாக அவர் சொல்கிறார். இதை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.
இனி அவர் என்ன எழுதினார் என்பதை கவனிப்போம்.
அபூமுஹை அவர்கள் எழுதியது:
மதம் மாறினால் மரண தண்டனை-3
Source: http://abumuhai.blogspot.com/2008/05/3_12.htmlமுஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.
அருமையான நண்பர் அபூ முஹை அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் என் கட்டுரையில் எந்த இடத்தில் உள்ளது சிறிது விளக்குங்கள்.
காபிர் நாடுகள் தான் முதல் முதலில் அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற சட்டத்தை உருவாக்கின என்று நான் சொல்லியுள்ளேனா?
இஸ்லாம் இப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்கவில்லை அல்லது சொல்லவில்லை என்று நான் எங்கு சொல்லியுள்ளேன்?
ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கும் அப்பாவி மக்களை (முஸ்லீம்களை) திசைத்திருப்புகிறீர்கள்.
அபூமுஹை அவர்கள் எழுதியது:இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.
11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.
ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.
நான் மேலே சொன்ன தலைப்பே மிகவும் தெளிவாகச் சொல்கிறது. அதாவது, காபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் எப்படி சம்மந்தம் கலந்தது என்றேன்.காபிர்களின் சட்டம் தான் முதல், இஸ்லாமிய சட்டம் தான் அடுத்தது என்று நான் சொன்னேனா? மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.
அதாவது, காபிர்களின் சட்டம் குறைபாடுள்ளது, இஸ்லாமிய சட்டம் தான் உயர்ந்தது என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் நீங்கள், எப்படி இப்போது மட்டும் அவசியம் ஏற்படும்போது திடீரென்று இஸ்லாமிய சட்டத்தோடு, காபிர்களின் சட்டத்தை சம்மந்தப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற பொருளில் சொன்னேனே தவிர, நீங்கள் நினைப்பது போல் அல்ல.
அபூமுஹை அவர்கள் எழுதியது:தேசத் துரோகம்
அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது.
இஸ்லாம் இராணுவ சட்டத்தை இயற்றவில்லை என்று நான் சொல்லவே இல்லையே, உங்களுக்கு மட்டும் இப்படி புதுமையாக தெரிகின்றது.
என் கட்டுரையை சரியாக படித்துப்பாருங்கள், எதை நான் சந்தர்ப்பவாதம் என்று சொல்கிறேன் என்று புரியும். அதாவது, மதத்தை மாறுபவனுக்கு மரண தண்டனை இஸ்லாமில் உள்ளதால், காபிர்களின் சட்டத்தை உதாரணம் காட்டும் நீங்கள், மற்ற இஸ்லாமிய சட்டத்தோடு காபிர்களின் கட்டத்தை ஒப்பிட்டுப்பேச தயாரா? என்று கேட்டேன் அவ்வளவு தான்.
அபூமுஹை அவர்கள் எழுதியது:
இதைப் பார்ப்பதற்கு முன்,
உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!
இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
.....
.....
.....
தேசத்துரோகத்திற்கு மரண தண்டனை கொடுப்பது தவறு என்று நான் எழுதவில்லை, தேசத்துரோகத்திற்கு இஸ்லாமிய சட்டமோ, அல்லது காபிர் நாடுகளின் சட்டமோ, மரண தண்டனை விதிப்பது தவறானது என்று கூட நான் எழுதவில்லை.
ஒரு மனிதன் மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவனுக்கு மரண தண்டனை சரியா? என்பது தான் என் கேள்வி. மற்றும் மதத்தை மாற்றுபவனுக்கும், தேசத்துரோகம் செய்பனையும் ஏன் சம்மந்தப்படுத்துகிறார், ஜாகிர் நாயக் அவர்கள் என்பது தான் என் கேள்வி, அவ்வளவே.
அபூமுஹை அவர்கள் எழுதியது:
மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு,
இராணுவம் மற்றும் தேசத்துரோகம் சம்மந்தப்பட்ட சட்டங்கள் காபிர் நாடுகள் தான் இயற்றினார்கள் என்று எங்கே நான் சொல்லியுள்ளேன்? ஏன் நான் எழுதிய கட்டுரையின் "பாதையை மாற்றி பயணத்தை" திசை திருப்ப பார்க்கிறீர்கள்?
அபூமுஹை அவர்கள் எழுதியது:இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.
(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
இஸ்லாமிய நாடுகளுக்கு தனியான இராணுவம் இருக்காது என்று நான் சொல்லவில்லை, அப்படி இருக்கும் இராணுவத்திற்கு தனியான இஸ்லாமிய சட்டங்கள் இருக்காது என்று கூட நான் சொல்லவில்லை.
நான் எழுதிய கட்டுரையின் பயணமெல்லாம், ஒரு மார்க்கத்தில் ஒரு குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனையை மற்ற மார்கத்தோடு அல்லது நாடுகளின் சட்டத்தோடு சம்மந்தப்படுத்திப் பேசும் போது, அதே குற்றத்தை ஒப்பிடவேண்டுமே ஒழிய, தலைக்கும் காலுக்கும் முடி போடக்கூடாது.
இஸ்லாமில் திருட்டிற்கு உள்ள தண்டனையை நியாயப்படுத்த நாம் முயற்சி எடுக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டும்? மற்ற காபிர்களின் சட்டத்தில் திருட்டிற்கு என்ன தண்டனை உண்டு என்று பார்த்து அதோடு ஒப்பிட்டால், மக்களுக்கு நன்றாக புரியும். ஒரே குற்றத்திற்கு இரண்டு மார்க்கங்களில் உள்ள தண்டனைகளை ஒப்பிட்டு பார்த்தால், நியாயமானதாக இருக்கும்.
அது போல, இஸ்லாமில் "மத மாற்றத்திற்கு" கொடுக்கும் தண்டனையை நியாயப்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளில் "மத மாற்றத்திற்கு" என்ன தண்டனை உண்டு என்பதை கண்டுபிடித்து ஒப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு, காபிர் நாடுகளில் "எந்த குற்றத்திற்கு மரண தண்டனை" உண்டு என்று கண்டுபிடித்து அதோடு ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்று தான் நான் கேட்டேன்.
ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இதற்கு ஒரு இந்து அறிஞர் கீழ்கண்டவாறு பதில் சொல்கிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்:
பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் "ஒரு மனிதன் இஸ்லாமைவிட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, அதுபோல, ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மறித்துவிட்டால், அவளுக்கு இந்து தர்மப்படி மரண தண்டனை தரவேண்டும், அதாவது கணவனோடு அவளையும் எரித்து கொன்றுவிடவேண்டும். தன் கணவன் மரித்துவிட்டால் அப்பெண் வேறு ஒரு ஆணை மறு திருமணம் செய்துக்கொண்டால் அது மரித்த கணவனுக்கு செய்யும் துரோகம் ஆகும், எனவே, இது நியாயமான தண்டனைத் தான்."
இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்து இருக்கும், உடன் கட்டை ஏறுதலுக்கும், மதமாற்றத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கத்தோன்றும். இந்த உதாரணத்தில் குற்றம் ஒப்பிடப்படவில்லை, ஆனால், தண்டனை ஒப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கணவன் மரித்துவிடுவது என்பது குற்றமே இல்லை. அது போல, மதத்தை மாற்றிக்கொள்வது குற்றமே இல்லை. இந்த உதாரணம் போலத்தான் ஜாகிர் நாயக் அவர்களும் உதாரணத்தைச் சொன்னார் என்று நான் குறிப்பிட்டேன்.
எனவே, அருமை நண்பர் அபூமுஹை அவர்களே, முதலில் நான் சொன்னதை முழுவதும் படித்து புரிந்துக்கொண்டு எழுதுங்கள்.
யாருக்கு பதில் அல்லது யாருடைய கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்கள், அபூ முஹை அவர்களே:
என் கட்டுரையைப் பற்றி பதிலோ விமர்சனமோ எழுதினால், அதன் தொடுப்பு தரவேண்டுமென்று, நான் ஏற்கனவே என் முதல் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.
நீங்கள் ஒன்றும் என்னைப்போல நேற்று பொழிந்த மழையில் முளைத்த காலான் அல்ல. உங்களுக்கு இணையத்தில் எப்படி கட்டுரையை எழுதவேண்டும் என்ற எல்லா விவரங்களும் தெரியும், இப்படி தெரிந்து இருந்தும், ஏன் என் வரிகளுக்கு பதில் அளிக்கும் போது, என் கட்டுரையின் தொடுப்பை தருவதில்லை.
எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயமா? அப்படி பயம் இல்லையானால் ஏன் தொடுப்புக்களை தருவதில்லை? எனக்கு பதில் அளிக்கும் போது, என் வரிகளை விமர்சிக்கும் போது, என் கட்டுரை வெளியாகும் ஒரு தளத்தின் தொடுப்பையும் கொடுக்காமல் பதில் எழுதுவது என்ன நாகரீகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இனி என் எல்லா பதில்களில் இந்த வரிகள் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.
முடிவுரை: நான் எந்த இடத்தில் "காபிர்கள் தான் அரசியல், ஆட்சி, இராணுவம் பற்றிய சட்டங்களை இயற்றினார்கள், இஸ்லாமில் இப்படிப்பட்ட சட்டமில்லை, அல்லது இஸ்லாமோடு இப்படி ஒப்பிடக்கூடாது என்றுச் சொன்னேன்" என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.
ஒரே குற்றத்தை(தண்டனைகளை அல்ல) இரண்டு மார்க்கங்களிலும் ஒப்பிட நீங்கள் தயாரா? உங்கள் ஷரியா சட்டம் மற்ற காபிர்கள் சட்டத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று ஒப்பிட்டு கட்டுரை எழுதுவீர்களானால், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
1 கருத்து:
Did you downloaded Wikileaks docs? Give me link plz
Thank for all
கருத்துரையிடுக