நான் ஏன் கிறிஸ்தவனாய் இருக்கிறேன்
WHY I AM A CHRISTIAN
டாக்டர் வாரன் எஃப் லார்சன்
(Dr. Warren F. Larson)
இக்கட்டுரையின் ஆசிரியர் தான் ஏன் ஒரு கிறிஸ்தவராய் இருக்கிறார் என்பதற்கும், மற்றும் அவர் ஒரு சரியான வழியைத்தான் தேர்ந்தெடுத்தாரென அவர் ஏன் உணர்கிறார் என்பதற்கும் மூன்று காரணங்கள் உள்ளன என விளக்குகிறார். இக்காரணங்கள் பைபிளின் முதல் புத்தகத்தில் ஆரம்பித்து, பைபிள் முழுவதும் காணும்படியாக வியாபித்து உள்ளது. இன்றியமையாத இத்தலைப்பில், கையாளப்படும் முக்கியமான விஷயம் என்னவெனில், இது நம் தேவனைப் பற்றிய , கிறிஸ்துவைப் பற்றிய மற்றும் மனிதகுலத்தைப் பற்றிய நமது கருத்துக்களைச் சுற்றியே வலம் வருகிறது. இவை மூன்றும் இஸ்லாமிலும் கூட இழையோடியிருப்பினும், அடிப்படையில் பைபிளில் தேவன் வெளிப்படுத்தியிருப்பதினின்று முற்றிலும் வேறுபட்டுள்ளது.
மேற்கு கனடா பகுதியில் வளரும் ஒரு இளைஞனாக, நான் முதலில் இந்த தலைப்பைப் பற்றிய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு கிறிஸ்தவ வீட்டில் பிறந்து வளர்ந்த நான் ஏழு வயதில் சொந்த விசுவாசத்திற்குள் வந்தேன். பின்பு கல்லூரியில் படிக்கும்போது எனது விசுவாசத்தைத் திருப்பி ஆராய்ந்து பார்த்தேன். உண்மையாகவே நான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்? பின்னும் என்னுடைய 24 ஆவது வயதில் நான் பாகிஸ்தான் சென்று 97 சதவீதம் முஸ்லீம்கள் (பெரும்பாலாக சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்) உள்ள அந்நாட்டில் ஒரு மிஷினரியாக 23 ஆண்டுகள் ஊழியம் செய்தேன். பற்பல சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவம் பற்றிய என் உண்மை எண்ணம் சோதனைக்குள்ளாயிற்று. நான் ஒரு இஸ்லாமியனாக மாறிவிடுவேன் என உறுதியாகவே பலர் எண்ணினர். இதற்கும் மேலாக, நான் இஸ்லாம் பற்றிய மேற்படிப்பைப் படித்து டாக்டர் பட்டத்திற்கான (Ph.D) ஆராய்ச்சிக் கட்டுரையையும் பாகிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து எழுதினேன். எனவே எனது விசுவாசத்தைக் குறித்து, அதிலும் குறிப்பாக இஸ்லாமிடமான தொடர்பு குறித்து, ஆராய்ந்து பார்க்க எனக்குப் போதுமான சந்தர்ப்பம் கிடைத்தது என உணர்கிறேன்.
இருப்பினும், நான் இரு நம்பிக்கைகளைப் பற்றி படித்திருந்தாலும், தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றிற்கான பதிலும் என்னிடம் இல்லை என நான் ஒப்புக் கொள்கிறேன். எனினும் வெளிப்படையாகவும், அமைதியாகவும் கிறிஸ்துவத்தையும் இஸ்லாமையும் ஒப்பிட்டு, குறிப்பிடத்தக்கவைகளை நான் எழுத வேண்டும் என உணர்கிறேன். இஸ்லாமைப் பற்றியோ அல்லது கிறிஸ்துவத்தைப் பற்றியோ நான் தவறாக எதுவும் அபிப்பிராயம் கொண்டிருந்தால் நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.
இப்பொருள் குறித்து நான் சிந்திக்கும் போது, வட ஆப்பிரிக்காவின் பெர்பர் இனத்தைச் சேர்ந்த புனிதர் அகஸ்டின், நபி இயேசுவிற்கு சில நூறு ஆண்டுகளுக்குப் பின் மொழிந்த,"எங்களை உமக்காக உண்டாக்கினீர்; உம்மை வந்தடைந்து ஓய்வு பெறுமட்டும் எங்கள் இதயங்கள் அமைதியின்றி இருக்கும்(Thou hast formed us for Thyself and our hearts are restless till they find their rest in Thee)" என்ற வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். மேலும் கீழ்கண்டவாறு சொல்லப்படும் கிறிஸ்துவப் பிரமாணமும் எனது நினைவுக்கு வருகிறது ."தேவனை மகிமைப்படுத்துதலும் எக்காலத்திலும் அவரில் களிகூறுதலுமே மனிதனின் தலையாய இறுதி நிலையாகும்(The chief end of man is to glorify God and enjoy him forever)" .
எனவே கிறிஸ்தவர்கள், உண்மையான மன நிறைவு, தேவனை அறிந்துகொள்வதிலிருந்து மட்டுமே வருகிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஏனெனில் நம் மனத்தில் இத்தகைய ஒரு வெற்றிடத்துடனேயே தேவன் நம்மை உருவாக்கி இருக்கிறார் என்பதாகவே காணப்படுகிறது. ஆயினும், இவ்வுலகில் அனேகம் மக்கள் கடவுளைப் பற்றி மற்றவர்கள் மூலமாக கேள்விப்படுபனவற்றை மட்டுமே அறிவார்களேயொழிய அவரைப் பற்றி உண்மையில் சிந்தனை ஏதும் செய்வதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அவர் சில கருத்துக்களின் அடிப்படையினாலான ஒரு தீர்மானமாகவே கருதப்படுகிறார். இன்னும் பலருக்கு அவர் "அங்கிருக்கிறார்" ஆனால் "இங்கு இப்போது செயல்பாட்டில்" இல்லை என்று நம்புகிறார்கள். அமெரிக்காவிலும் உலகில் இன்னும் பல பகுதிகளிலும் உள்ள பலர் இந்த வகையானவர்கள் என நான் நினைக்கிறேன். அதாவது "கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே அவரை நான் நம்புகிறேன்" என அவர்கள் சொல்லுகிறார்கள்.
இறுதியாகச் சில கிறிஸ்தவர்களும் தேவன் மீது உண்மையில் தாகத்துடனும் பசியுடனும் இருக்கிறார்களே என நான் வியப்படைவதைத் தவிற வேறு எந்த வகையிலும் என்னால் அவர்களுக்கு உதவமுடியாது. தேவனைப்பற்றிய அறியாமையிலேயும் புறக்கணிப்பிலும் மூழ்கியுள்ள இக்கால மக்களுக்கு மாறாக தேவனைப்பற்றி அறியவும் அவரோடு பேசவும் வழிபடவும் ஆவலாய் இருந்த சிலரைப் பற்றி நான் பைபிளில் வாசிக்கிறேன்.
உதாரணமாக, மோசே சொன்னார், "உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும் (யாத்திராகமம் 33:13)".தாவீதும் கூடச் சொல்கிறார், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் (சங்கீதம் 34:8)".இயேசு நபியும் சொன்னார், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8)". புதிய ஏற்பாட்டின் (இஞ்ஜில்) இறுதியில் "இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப் பட்டவைகளுமா யிருக்கிறது என்றார்கள். (வெளி 4:10-11)" எனச் சொல்லப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (Bertrand Russel) எழுதிய "நான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக இல்லை" என்ற ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். ஆனால் அதை நான் மிகவும் கவனமாக வாசிக்கவில்லை என ஒப்புக்கொள்கிறேன். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதன் பின்னால் இருந்த அவரது படம் ஒரு மிகவும் மகிழ்ச்சியற்ற மனிதனாகக் காணப்பட்டதே. ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதில், நான் திரு.பெர்ட்ராண்டு ரஸ்ஸல் அவர்கள் ஒரு கிறிஸ்தவனாக இல்லாததைவிட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நம்புகிறேன்! எனவே இதன் தொடர்ச்சியாக, நான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக மாறி ஒரு கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் என்றும் நான் சரியானதைத்தான் தேர்ந்தெடுத்தேன் என்பதிலும் மன நிறைவுடன் தான் இருக்கிறேன் என்பதை மூன்று காரணங்களக் கொண்டு விளக்குகிறேன். இவை பைபிளின் முதல் புத்தகத்தில் ஆரம்பித்து , வேர் கொண்டு பைபிள் முழுவதிலும் காணும்படியாக வியாபித்து உள்ளது. கீழ்கண்ட விவரங்கள் மொத்தத்தில் இன்றியமையாத இந்தத் தலைப்பில் என்னுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன.
தேவனின் இயல்பு (The Character of God)
தேவனுடனான நமது உறவு அவரைப் பற்றி நாம் கொண்டுள்ள எண்ணத்தின் மீதே (அதாவது நமது "கடவுள் கொள்கை" மீதே) சார்ந்துள்ளது, இந்தக் கருத்துடன் நான் ஆரம்பிப்பதற்கான காரணம், தேவன் பெரும்பாலும் நம்முடனே ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார் என நான் நம்புவதாலேயே. "அவர் நம்மிடம் முதலில் அன்பு செலுத்துவதினாலேயே நாம் அவர் மீது அன்பாய் இருக்கிறோம்" என பைபிள் சொல்லுகிறது. அதற்கான முதல் முயற்சியை அவர் எடுக்கிறார். தேவன் தான் இப்பிரபஞ்சத்தில் மிகவும் பெரியவர் என்பதில் நாம் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாய் இருக்கிறோம். அவரே மகத்துவமானவர், கம்பீரமிக்கவர், ஆளும் அரசர். எனவே, அவரது பிரஜைகள் யாரும் அவரது அழைப்பின்றி அவரது சமூகத்திற்கு வர முடியாது( He is glorious, majestic, ruler and king; therefore, none of his subjects dare come into his presence without an invitation).
மேலும், வார்த்தையியலின்படி (etymology /வார்த்தைகளின் அமைப்பு குறித்த ஆய்வு) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் "கடவுள்" என்பது ஒன்றே. சில குறிப்பிட்ட குர்ஆன் வசனங்கள் இதைத் தெரிவிக்கின்றன (குர்ஆன் 22:40). வார்த்தைகளின் மூலத்தை ஆராய்ந்தால் கடவுளைக் குறிக்கும் சொற்கள் ஒரே பொருளுடையவை. "Allah" என்பது எபிரேய மொழியில், " El-Bethel" மற்றும் "El-Elohim" என்பவையுடனும், அராமிக்கில் "Elah" என்பதுடனும் தொடர்புடையது. அல்லா என்பது இஸ்லாமின் தொடக்கத்திற்கு முற்பட்டது. ஒரு எடுத்துக்காட்டுக்காக இதை கவனியுங்கள், முகமது நபியின் தகப்பனார் பெயர் "Abd-Allah" (Servant of Allah ) என்பதாகும் (Allah is pre-Islamic as, for example, when the Prophet Muhammad's father was named Abd-Allah" (servant of Allah)).
எனினும், இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் கடவுள் என்ற சொல்லுக்கு வார்த்தையியலின்படி (etymologically) ஒரே மூலம் இருப்பினும் அவை அவற்றின் தன்மையினால் முற்றிலும் மாறுபட்டவை. கிறிஸ்துவத்தில் பைபிளின் ஆரம்பமுதல் தேவனின் வல்லமை மற்றும் ஆளுகை குறித்தேயல்லாமல் அவருக்கு ஒரு தெய்வீகத் தனித்தன்மை இருப்பதை உணர்கிறோம். இறைவனின் வல்லமை மற்றும் ஆளுமைப் பற்றி குர்ஆனில் வலியுறுத்தப்பட்டிருப்பினும், பைபிளில் தேவனின் நிபந்தனையற்ற அன்பே அவரது தனித்தன்மையாக இருக்கிறது.
பைபிளின் படி மனிதகுலம் பாவம் செய்து தேவனின் கட்டளையை மீறினது. ஆனாலும், தேவன், " நீ எங்கே இருக்கிறாய்?" என அவர்களைத் தேடினார். தானே முன்வந்து முயன்று அவரே அவர்களை விரட்டியிருந்தாலும் அவர்களைத் தொடர்ந்து அன்பு செலுத்தி முறிந்துபோன உறவைப் புதுப்பிக்க ஒரு திட்டம் வகுக்கிறார். இந்த அருமையான வசனங்களைப் படியுங்கள்:"
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார் (ரோமர் 5:8)", "அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் (ரோமர் 5:6)", "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:10)". ஒரு சிறிய வசனம் இவைகள் எல்லாவற்றையும் இரத்தினச் சுருக்கமாய் சொல்கிறது:" தேவன் அன்பாகவே இருக்கிறார் (I யோவான் 4:8.)".
அன்புக்குப் பாத்திரமற்றவர்கள் மீதான தேவனின் இந்த நிபந்தனையற்ற அன்பு பைபிள் முழுவதும் காணப்படுகிறது. சான்றாக :
"அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்" (எரேமியா 31:3).
இயேசுவால் சொல்லப்பட்ட லூக்கா 15 ல் உள்ள கெட்ட குமாரன் கதையில் கூட, தேவன் ஒரு தந்தை போல் இருக்கிறார் என்பதை விளக்குகிறார். அந்த கதையில் அந்த குமாரனின் தந்தை அவனை ஒதுக்கவோ, அவனை திரும்பிவரும்படிச் செய்ய ஒரு இராணுவத்தை அனுப்பவோ இல்லை. மாறாக அவனோடு ஒரு நல்லுறவிற்காக ஏங்கி, அவனோடு ஒப்புரவாகி அவன் வீடு திரும்பும் மட்டும் பாடுகள் பட்டு வருந்தினார். இறுதியில் அந்த மகன் விரக்தியில் மனம் திரும்பி அவனது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு வீடு திரும்புகிறான். அவன் அவ்வாறு செய்தது அவன் தந்தையின் பண்பினையும் செயலையும் நன்றாக அறிந்திருந்த காரணத்தினால் தான்.
அந்த தகப்பன் அவனது குமாரனை விரித்த கரத்துடன் வரவேற்கிறான்; ஏனெனில் அவனோடுள்ள உறவினைப் புதுப்பிக்கவே. கிறிஸ்தவத்தில் தேவன் இப்படிப்பட்ட குணத்தை உடையவராக இருக்கிறார். தௌராத் சொல்கிறது:
"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறது போல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? "(உபாகமம் 4:7 ).
இப்படி தேவன் அன்பாக இருப்பதினால், அவர் பாவத்தை எளிதில் ஏற்றுக்கொள்கிறார் என எடுத்துக் கொள்ளலாகாது. தேவன் நீதிபரர். அவர் துன்மார்க்கருக்காக நரகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இயேசு அவ்விடத்தை"அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்" (மாற்கு 9:48) எனக் குறிப்பிடுகிறார். உண்மையில் பைபிள் நரகத்தின் பயங்கரங்களின் விரிவான விளக்கத்துடன் அதாவது "சத்தானுக்கும் அவன் தூதருக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் அக்கினிக்கடல்" என்றும், "கந்தகமும் எரி தழலும் இருக்கும் இடம்" என்றும் படம் பிடித்து விவரித்து முடிக்கிறது.
ஆனால், தேவன், நாம் நரகத்திற்குப் போக வேண்டிய அவசியம் இல்லையென்றும், நரகத்திலிருந்து தப்பிக்க அவர் ஒரு நிச்சயமான வழி வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார். இதுவே நற்செய்தி. இது தம்மீது நம் தண்டனையை ஏற்றுக்கொண்ட ஒருவர் மூலமாகவே ஆகும். பைபிளில் நாம் தேடுவோமானால் பலியிடும் முறை, ஆகமங்களிலும் சங்கீதங்களிலும்(தௌராத் மற்றும் ஜபூர்) மற்றும் பைபிளின் பல பாகங்களிலும் காணப்பட்டு தேவன் பலியிட ஒரு மாற்றுப்பொருள் கொடுத்திருப்பதைக் காணலாம். இதில் இறுதி பலியாக ஒரு பாவமுமற்ற அப்பழுக்கற்ற மாற்றுப் பொருளினைத் தாமே கொடுத்திருப்பதை உணரலாம். அவரே நமக்காக மரித்து பின்பு உயித்தெழுந்தார். இயேசு தாமே இந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் அறிஞர் தாவுத் ரஹபர் (Daud Rahbar) என்பவர் டாக்டர் பட்டத்திற்காக "நீதியுள்ள கடவுள் - குர்ஆனில் அறவழிக்கொள்கை பற்றிய ஒரு ஆய்வு(God of Justice: A Study in the Ethical Doctrine of the Qur'an) " என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார். அதில் அவர் முடிவுரையாகக் கடவுள் கருணை மிக்கவராகவும் நீதியுள்ளவராகவும் ஒன்றுசேர இருக்கவேண்டுமெனின் அது சிலுவையின் மூலமே ஆகும் என எழுதியிருந்தார். இந்தப் பிரச்சினைக்கு இதுவே தீர்வு. தாவுத் ரஹபர் பின்பு ஒரு கிறிஸ்தவராக மாறி அமெரிக்காவில் ஆசிரியரானார்.
இதற்கு மறுபக்கமாக, நான் கூறுவது தவறென்றால் திருத்தவும், இஸ்லாமில் கடவுள் அன்பானவராகவே இருப்பினும் (al-wadud என்ற பெயரின் படி), பாவிகளை அவர் நேசிப்பதில்லை.
குர்ஆன் 3:31-32ன் படி, "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்;…… நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை". மேலும் குர்ஆன் 9:4 சொல்கிறது: "நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்". குர்ஆன் 4:107 கூட "கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை." என்றுச் சொல்கிறது.
அவர் கருணை மிக்கோனாய் இருப்பினும் கூட, அது ஒரு அரசன் காட்டும் கருணையே தவிர, பைபிளின் லூக்கா 15ம் அதிகாரத்தில் காணப்படுவது போன்று ஒரு தகப்பனின் பாசம் அல்ல.
குர்ஆனில் ஒவ்வொரு அத்தியாயமும் (ஒன்பதாவது தவிர) கருணை மிக்கோனும் அன்புடையோனுமான இறைவனின் நாமத்தில் (Bis milla ur-Rahman ur Rahim) என்றே துவங்குகின்றது. கடவுளின் கருணை இங்கு அவரின் உன்னதமான ஆற்றலில் அடங்கி விடுகிறது. எனவே இஸ்லாமில் அன்பு என்பது எதிர்பார்ப்புடன் கூடியது என்றே நான் கருதுகிறேன். எனவே ஒரு இஸ்லாமியன் "கடவுள் அன்பாகவே இருக்கிறார்" என அதின் உண்மையான அர்த்தத்தில் கூற முடியாது(I therefore conclude that love in Islam is reciprocal and that in a true sense a Muslim cannot say "God is love."). இஸ்லாமில் கடவுள் அனைத்து வல்லமையும் உள்ளவர் என்று கருதப்படுகிறார், ஆனால் மக்களுடன் பின்னிப் பிணையாமல் தூரமாயிருப்பவர். "சிலருக்கு சொர்க்கம், சிலருக்கு நரகம், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை" என்றுச் சொல்வது போல அல்லா காணப்படுகிறார். சொர்க்கம் என்பது அல்லாவின் சொந்த விருப்பமே(சித்தமே).
மனம் திரும்புதலை இஸ்லாம் ஊக்குவிக்கிறது என நாம் ஒப்புக்கொண்டாலும், இஸ்லாமின்படி ஒரு மனிதனின் மனம் திரும்புதலை விட மிகவும் மேன்மையானது இறைவனின் சித்தம். கடவுளின் சித்தத்தின்படியே அவர் மன்னிக்கிறார், ஆனால் அவர் பெரிய பாவங்கள் சிறிய பாவங்கள் என எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. (குர்ஆன் 18:47). எவரையும் மன்னிப்பதோ அல்லது தண்டனைக்கு உள்ளாக்குவதோ அது முற்றிலும் அல்லாவின் சித்தமே. இதற்குத் தப்புபவன் யார்?
இதன் காரணமாகவே ஒரு இஸ்லாமியர், தான் பின் வரும் குர்ஆன் வசனத்தைப் பார்த்து மிகவும் பயத்துடன் இருப்பதாக எழுதுகிறார்.
"மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்" (குர்ஆன் 19:71). இதன் பின் வரும் குர்ஆன் வசனம் பலத்த அடியாய் இறங்குகிறது: "உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர் இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; "நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்" என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்" (குர்ஆன் 11: 118-119).
இந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் இரட்சிப்பின் நம்பிக்கை இல்லாமல் இருப்பதை உணர்கிறார். அவரின் துக்கம் இபின் மசூத்(Ibn Masud) அவர்களின் கீழ்கண்ட இஸ்லாமிய ஹதீஸைக் கண்டதும் இன்னும் அதிகமாகியது, அந்த ஹதீஸ் இவ்விதமாகச் சொல்கிறது:
முகமது சொல்கிறார், "ஒவ்வொருவரும் முதலில் நரகத்திலேயே நுழைகிறார்கள். பின்பு அவர்கள் செய்தனவற்றின்படி முன்னதாகவோ அல்லது பின்போ அதினின்று வெளிவருகிறார்கள். முதலில் வெளி வருகின்றவர்கள் முழு வேகத்தில் விரைந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றும், அதன் பின்பு வேகமான சவாரி செய்பவரைப் போன்றும், பின்பு விரைந்து செல்லும் மனிதனைப் போன்றும் இறுதியில் நடந்து செல்லும் மனிதனைப் போன்றும் இருப்பார்கள். இந்த ஹதீஸ் திர்மிதி மற்றும் தரிமி மூலமாக கிடைத்தது. (The Moslem World, 18, no. 2, April 1928)
எனவே இதனை நோக்கும்போது இஸ்லாமின் கடவுள், கீழ்படிதலால் மகிழ்ச்சி அடையாதவராகவும், பாவத்தினால் வெறுப்படையாதவராகவும் தம்மை நம்புபவர்களின் மீது கருணைமிக்கவராய் இராமல் தம்மை மறப்பவர்களை வெறுத்து சாந்த குணமற்றவர்களுக்கு எதிர்ப்பாளராக இல்லாமலும் இருக்கிறார். அவர் இத்தகைய உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகவே காணப்படுகிறார். இதற்கு நேர்மாறாக கிறிஸ்துவத்தின் தேவன் நம்மீது அக்கரை உள்ளவராயிருக்கிறார். அவரது தீர்ப்புகள் நீதியாயும் பரிசுத்தமிக்கவையாயும் ஆதாரமற்றவையாய் இராமல் நன்மையாயும், தம் விருப்பத்திற்கு என்று இராமல் விருப்புவெறுப் பற்று இருக்கிறது.
மார்க்ஸிஸத்திலிருந்து கிறிஸ்துவராய் மாறின தாமஸ் மெர்டன்(Thomas Merton) என்பவர் கடவுளின் தத்துவம் பற்றிய ஒர் புத்தகத்தைப் படித்த போது மன அழுத்தத்தினால் நம்பிக்கையற்ற நிலையிலேயே மார்க்ஸிஸத்திலிருந்து மாறினார். தேவனை அவர் அருகாமையில் இருப்பராயும் உடனே சென்றடையத்தக்கவராய் கைக்கு மிக நெருக்கத்தில் இருப்பவராய் கண்டார். இதற்கு மாறாக இஸ்லாமியர்கள் என்னதான் அல்லாவைத் தேடினாலும் அவர் அவர்களின் கைக்கு எட்டாத துரமாக இருக்கிறார்.
பாகிஸ்தானிலிருந்த எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் பெண், ஒரு கிறிஸ்தவரால், "தேவனிடம் ஒரு தகப்பன் போன்றும் ஒரு நண்பராயும் வேண்டுதல் செய்ய வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டார். இதற்கு அந்த முஸ்லீம சகோதரி:
"நான் முழங்காலில் நின்று முயன்றபோது அது எனக்கு கேலிக்குரியதாகப்பட்டது. அதனைச் செய்ய எனக்கு உடன்பாடில்லை. தேவன் போன்ற மகத்துவமுள்ளவரை நம்மளவிற்குத் தாழ்த்துதல் பாவமில்லையா எனத் தோன்றுகிறது?" எனச் சொன்னார். பின்பு அவர் குழப்பத்துடன் தூங்கச்சென்று காலையில் எழும்பியபோது அன்று அவர் பிறந்த நாள் என்பது நினைவிற்கு வந்தது. அப்போது அவர் மிகவும் பரபரப்புடன் தேவனை அப்பா என்றழைத்தால் என்ன என்று நினைத்தார். உடனே அவர் முழங்காற்படியிட்டு "அப்பா பிதாவே" என்றழைத்தார். அவர் சொன்னார்," பின்பு நடந்தவைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அவரது நாமத்தை நான் உரக்கக் கூப்பிட்டேன். ஏதோவொன்று என்னை ஆட்கொண்டது. அவர் எனக்குச் செவிகொடுத்தார் என நான் அறிந்தேன். அந்த அறை வெறுமையாய் இல்லை. அவர் அங்கிருப்பதை உணர்ந்தேன்."
நான் யார் (Who I am)
நம்மைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதையே தேவனுடனான நம்முடைய உறவு சார்ந்திருக்கிறது. அதாவது நமது "மனிதத் தத்துவத்தைப்" பொறுத்தே அது அமைகிறது. இதை முதல் கட்டத்திலேயே நான் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவத்தில், மனிதகுலம் பாவப் பழக்கங்களினால் மட்டுமின்றி உள்ளான பாவத்திலும் அதாவது ஆரம்ப அடிப்படையான பாவத்திலும் மூழ்கியிருக்கிறது என நாம் அறிந்திருக்கிறோம். மனிதகுலம் முழுவதும், அதாவது முஸ்லிம்கள் மட்டுமின்றி நாம் அனைவரும் உட்பட, பாவத்தினால் ஆன தீமையில் திளைத்திருக்கிறோம். ரோமர் 3:23ல் பைபிள் சொல்கிறது "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமை அற்றவர்களானார்கள்" மறுபடியும் பைபிள் ரோமர் 3:10ல் "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்றுச் சொல்கிறது.
அது ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்தது. அவர்களுடைய கீழ்படியாமைக்குப் பிறகு தேவன் ஆதாம், ஏவாளை நோக்கி, "நீங்கள் பாவம் செய்தீர்கள்" என்று சொல்கிறார். அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை. இஞ்ஜில் சொல்கிறது, "ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று" (ரோமர் 5:12.) இது ஒரு அச்சுறுத்தும், தண்டனைக்குள்ளாக்கும் வார்த்தை தான். ஆனால் இது பாவத்தின் ஆரம்பத்தை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளும்படி இங்கு படம் பிடித்துக்காட்டுகிறது.
எனினும் தேவன் நம்மை அவ்வாறே விடுவதில்லை. அவர் பாவம் செய்தவர்களை நோக்கி, "உங்களுடைய பாவ சுபாவம் உங்களின் அடங்காமையினால் பாவத்தில் தரித்திருக்கப் பண்ணுகிறது. அதற்கெதிராக அதனை நீக்கவோ அல்லது என் கண்களுக்கு முன்பாக நீங்கள் வெட்கமடையாதிருக்கவோ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே என்னை நோக்கித் திரும்பி, என்னை விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்படையுங்கள். நான் உங்களை ஒரு புதிய வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவேன்" என்றுச் சொல்கிறார்.
எனது கணிப்பின்படி பாவம் பற்றிய பிரச்சினையை இஸ்லாம் போதுமான அளவுக்குக் கையாளவில்லை என்பது ஒரு குறை தான். "இரட்சிப்பு" என்பது இஸ்லாமில் மிக அபூர்வமான வார்த்தை (குர்ஆன் 40:41ல் மட்டுமே காணப்படுகிறது). ஏனெனில் மனிதகுலம் இஸ்லாமின் படி விழுந்து போகவில்லை, அவர்கள் மனதளவில் வீழ்ச்சியடையவில்லை, மேலும், அடிப்படையான பாவம் என்ற தத்துவம் அங்கில்லை.
சூரா 33:72ல் குர்ஆன் சொல்கிறது: "நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ". மேலும் சூரா 96:6ல், "நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்" என்பதாகவும், சூரா 20:115ல் "ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்துவிட்டார்" என்பதாகவும், சூரா 2:36ல் "ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான் " என்பதாகவும் காண்கின்றோம்.
மனிதன் பலவீனமானவன்; எனவே அவனுக்கு வழிகாட்டுதல் தேவையாய் இருக்கிறது என்று இஸ்லாம் சொல்கிறது. சூரா 30:54 சொல்கிறது: "அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்".
அதாவது இஸ்லாம் ஏன் அதனுடைய சாரம் எனக்கருதப்படும் இஸ்லாமியச் சட்டங்களுக்கு (Shariah Law) இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் இதுவாகத் தான் இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். எனினும், சரியான சட்டங்கள் மட்டும் இருந்தாலே பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்திவிடலாம் என எண்ணும் சமுதாயத்தில் ஒரு பிரச்சினை உள்ளது. அதில் உள்ள கஷ்டம் என்னவெனில் நல்ல சட்டங்கள் பெரும்பாலும் அநீதியின் கருவிகளாய் மாறிப் போகின்றன. மனித சமுதாயங்கள் ஒருபோதும் அப்பழுக்கற்றவை அல்ல. பைபிளில் ரோமர் 8:3 ஐ நாம் வாசிப்போமானால் "சட்டம் பாவத்தினால் பலவீனப்படுகிறது" என நாம் அறியலாம். தேவன் எதிர்பார்க்கும் கீழ்ப்படிதலை சட்டம் மட்டுமே உருவாக்க முடியாது.
பல கால கட்டங்களில் கிறிஸ்துவர்கள் பைபிள் அடிப்படையில் சமயச் சார்புள்ள நாடுகளை ஏற்படுத்தினர்; ஆயினும் அவை யாவும் இப்போது மறைந்து போய்விட்டன. பல வழிகளில் ஷரியா சட்டம் நல்லது தான் - மோசேயின் ஆகமங்கள் போன்று. ஆனால் பைபிள் கூறுவது என்னவெனில், ஆகமங்கள் கொடுக்கப்பட்டது மனிதர்களை நல் வழிப்படுத்த அல்ல, மாறாக, அவர்களது பாவங்களை உணரச்செய்து அவர்களுக் கென்று அவர்களை வழிநடத்த இயேசு என்ற ஒரு இரட்சகர் தேவை என்பதை உறுதிப்படுத்தவே. இது அவர்கள் இரட்சிப்புக்காக இயேசுவை நோக்கித் திருப்பும்வண்ணமாக அவர்களின் இயலாமையைத் தோலுரித்துக் காட்டிடவே ஆகும். (In many ways the shariah is good - as was the Torah of Moses - but the Bible says the Torah was given - not to make men good - but to prove their sinfulness and need of a Savior, to lead them to Christ - the Savior. It was to expose their helpless condition so they would turn to Christ for salvation).
இரட்சண்ய யாத்ரீகம்(Pilgrim's Progress ) எழுதிய ஜான் பனியன்(John Bunyan) , "ஓடுங்கள், ஓடுங்கள்-சட்டம் கட்டளையிடுகிறது. ஆனால் அது கால்களையோ அல்லது கைகளையோ தருவதில்லை; அதைவிட அருமையான தகவலை நற்செய்தி கொண்டுவருகிறது. அது எனக்கு இறக்கைகளைக் கொடுத்து என்னைப் பறக்க ஊக்குவிக்கிறது. எனவே, இயேசுவை முன்னிலைப்படுத்தாமல் எவ்வகையிலும் ஒரு சமுதாய அல்லது அரசியல் சார்ந்த ஒழுங்கினை நிறுவ நாம் முயன்றால் அது கலகத்தையே உருவாக்கும். அது தேவசித்தத்திற்கு எதிரான ஒரு வெளிப்படையான போராட்டமே ஆகும். நான் மேலை நாட்டினரின் கொடுங்கோல் ஆட்சியின் சார்பாக வக்காலத்து வாங்கவில்லை. நான் இயேசுவின் நற்செய்தியை ஆதரித்தே பேசுகிறேன். மேலை நாடுகளில் அனேகம் இயேசு கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை நிராகரித்துவிட்டன என்று எனக்குத் தெரியும்; ஆயினும் அவர் சத்தியம், நீதி மற்றும் நேர்மையின் அடிப்படையிலான இராஜ்ஜியத்தினை நிறுவ மறுபடியும் வருவார்.
மேலும் இவ்வுலகினை அழிவுக்குள்ளாக்கும் மனச்சிதைவு, வன்முறை, கொடூரம், மனிதச் சீர்கேடுகள், போர் மற்றும் கொடிய குற்றங்கள் ஆகியவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர இஸ்லாம் தவறுகிறது. இருக்கும் பிரச்சினை இதனினும் கொடியது. பைபிளில் மிகவும் அதிகமாக மதபற்றுள்ள பக்திமானிடம் இயேசு "நீ மறுபடியும் பிறக்கவேண்டும்" என்றுச் சொல்வாரானால் (யோவான் 3), நாம் அனைவரும் என்ன செய்யப்போகிறோம், நம்முடைய நிலை என்ன?
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் தேதியில் நான் கனடா நாட்டின் வான்கூவர்(Vancouver) நகரத்தில் இருந்தேன். அங்கிருக்கையில் நான் சரியாக அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1945 ல் போலந்து நாட்டின் அஸ்சுவிட்ஸ் (Auschwitz ) ல் சோவியத் படைகளினால் கொண்டுவரப்பட்ட மரணப் பாசறையினின்று மீண்டவர்களை நினைவுகூர்ந்தேன். அங்குச் சென்ற சுமார் பதினைந்து இலட்சம் கைதிகளில் அறுபத்தைந்தாயிரம் பேர் மட்டுமே 1945ல் உயிரோடிருந்தனர். பலர் தங்களின் எரிந்த சடலங்களின் நாற்றத்தையும் சில மயிர்களையும் மட்டுமே விட்டுச் சென்றிருந்தனர். அதில் அனேகம் குழந்தைகள் குறிப்பாக சில சிசுக்கள் இருந்தனர் என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என ஒரு சோவியத் போர்வீரர் சொன்னார்.
அவர்கள் அப்பாசறையின் மருத்துவராகிய ஜொசெப் மிங்க்லே(Josef Mengele) என்பவரின் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தப்பிப்பிழைத்தவர்கள். அந்த சோவியத் போர் வீரரால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதனின் சீர்கேட்டினை நீங்கள் நம்பவில்லை எனில் அதனை நீங்கள் எவ்விதம் மறுக்கக் கூடும். 1947ல் இந்திய துணைக்கண்டத்தில் நடந்த கொடூரப் படுகொலைகள் போன்ற சோக சம்பவங்கள் அதைவிட சற்றுக்குறைவான தோற்றமளிக்கலாம்; ஆனால் அவை பாவம் ஓர் கொடிய நோய் என்ற என் கருத்தினையே வலியுறுத்துகின்றன. எனவே இஸ்லாமில் நான் காண்பது என்னவெனில், மனிதனின் பாவங்கள் பற்றிய ஒரு சரியான அலசல் அதில் இல்லாதிருப்பதே. "பலர் வழி விலகிப்போனார்கள்" எனக் குர்ஆன் சொல்வதிலிருந்தே இக்கருத்தில் அதனால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை எனத் தெரிகிறது.
அடிப்படையிலேயே உண்மை நிலை பற்றிய ஒரு தீர்க்கமான சுய நம்பிக்கையை இஸ்லாம் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. எனவே தான் அதினால், இதுபோன்ற ஒரு குழப்ப நிலைக்கு ஒரு ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வைக் கொடுக்க முடியவில்லை. உதாரணமாக, ஒரு 20 வயது முஸ்லிம் பெண் ஒரு இஸ்லாமிய செய்தித்தாளின் ஆசிரியருக்கு, தான் பாவத்தினால் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதிலிருந்து மீட்படைய அதற்கு அவள் என்ன செய்யக்கூடும் எனவும் கேட்டு எழுதியிருந்தாள். அதற்கு அவர் அவள் தன்னை சீர்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இதற்கு வெளியிலிருந்து எந்த உதவியும் செய்வது சாத்தியமில்லை எனவும் பதிலளித்து இருந்தார். இதற்கு அர்த்தம் என்னவெனில் இஸ்லாமால் சட்டத்தை மட்டுமே வழங்கமுடியும்- பாவத்தினின்று மீட்கும் கருணையை அல்ல என்பதே (In other words, Islam can only offer law - not redeeming grace).
இயேசு யார்(Who Jesus Is)
தேவனோடு நமக்கு உள்ள உறவு இயேசு கிறிஸ்து யார் என நாம் நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. அதாவது நமது "இயேசு தத்துவத்தை"யே சார்ந்துள்ளது. ஆதியாகமத்தில் மனிதன் தவறிழைத்ததற்கான சாட்சியங்களுடன் பிடிபட்டு அவனுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கியபின் தேவன் தமது பணியைத் தொடர்கிறார். அவர், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்" என்று சொல்கிறார் (ஆதியாகமம் 3:15).
இதுதான் கிறிஸ்துவைப் பற்றிய முதல் வாக்குறுதி என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், ஆனால், இது கடைசி வாக்குறுதி அல்ல. பல நூற்றாண்டுகளில் பலரால் எழுதப்பட்டதான பல பைபிள் நூல்களில் இந்த வாக்குறுதி "அவர் வருகிறார், அவர் வருகிறார், அவர் வருகிறார்" என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இறுதியில் இயேசு வரும்போது அவர் வித்தியாசமானவராக, இயற்கை இயல்பிற்கு அப்பாற்பட்டவராக காணப்படுகிறார். ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்து (இரண்டு புனித நூல்களிலும் இது காணப்படுகிறது) பாவமற்றவராக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்கிறார்.
ஆனால் இணையில்லாத கிறிஸ்துவினுடைய பண்பின் அழகு பிரம்மிக்கத்தக்கது. (மீண்டும் இதை பைபிள், குர்ஆன் இரண்டும் சொல்கின்றன). யோவான் 8:46 ல் இயேசு சவால் விடுக்கிறார், " என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? ". இயேசுவைப்பற்றி குர்ஆன் சூரா 19:19 ல் கீழ்கண்டவாறு சொல்கிறது. "பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்)" இது ஏனைய தீர்க்கதரிசிகளைப் பற்றி குறிப்பிட்டவைகளிலும் வித்தியாசமானது. சூரா 3:141 ல் " எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை என்பதாக வாசிக்கிறோம்.
தன் பெயரில் உள்ள சூராவில்(அத்யாயத்தில்) அரேபிய நபி இவ்வண்ணமாய் உரைக்கிறார்: "உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக (சுரா 47:19)", சூரா 48:2 லும் கூட, "உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்." எனக் காண்கிறோம். மேலும் இயேசு தேவனாகவும் மனுஷனாகவும் இருக்கிறார் (பிலிப்பியர் 2 ல்). கிறிஸ்துவத்தின் படி தேவன் தம்முடைய சித்தத்தை மட்டுமல்ல, தம்மையே வெளிப்படுத்துகிறார்.( So, in Christianity God does not just reveal his will - He reveals himself).
தேவன் ஏன் இந்த வழியைத் தெரிந்துகொண்டார் என நாம் வியப்படையலாம். சமீபத்தில் தகவல் தொடர்பு பற்றி ராபர்ட் கேல் (Robert Gales ) என்பவர் எழுதிய ஒரு புத்தகம் இதை விளக்க உதவும். அதில் அவர் எந்த நபருமே ஆணாயினும் பெண்ணாயினும் தாங்களே ஒரு செய்தியாகவே இருக்கின்றனர் என முடிக்கிறார். இவ்வண்ணமாகவே இயேசுகிறிஸ்துவும், தேவன் தாமே தம்மையே ஒரு செய்தியாக முற்றிலும் வெளிப்படுத்தத்தக்க வகையில் வந்தார். பாவம் என்கின்ற பிரச்சினையினைக் கையாள இது ஒன்றே வழி எனக் கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். இயேசு ஒருவரே பாவமற்றவர், எனவே, பல காலத்திற்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டபடி தேவனின் ஒப்பற்ற பிரதிநிதியாகத் தமது சிலுவை மரணத்தினால் பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
இஸ்லாமை நாம் ஒப்பிடுவோமானால், அதிலும் கடவுள் மன்னிக்கிறார். ஆனால் "எப்படி மன்னிக்கிறார்" என்பதே என்னைச் சஞ்சலத்திற்குள்ளாக்குகிறது. அவர் அனாதியாய்த் தம்மிஷ்டப்படி - சொல்லப் போனால் பொறுப்பற்ற முறையில் மன்னிக்கிறார். வெறும் வார்த்தையின் மூலமாகவே அவர் மன்னிக்கிறார் . தேவ மன்னிப்பு என்பது ஒரு பொது மன்னிப்பு என்கின்ற வகையில் ஒரு தேவையற்ற செயலாக இருத்தலாகாது(He forgives arbitrarily, whimsically - almost irresponsibly. He does it by a mere word. Divine forgiveness can never be just an amnesty as if it does not really matter).
கிறிஸ்துவத்தில் மன்னிப்பு என்பது தியாகங்களும் பாடுகளும் உள்ளடங்கியது(In Christianity, forgiveness involves sacrifice and suffering). இயேசு கிறிஸ்துவானவர் இந்த உலகத்தின் பாவங்களுக்காக மரித்த தேவ ஆட்டுக்குட்டியாக மரணத்தை வென்றார். இதன் பலனாக பாவிகளின் குற்றங்களையும் அதினால் ஏற்பட்ட வெட்கத்தையும் போக்கினார் என ரோமர் 8 ல் வாசிக்கிறோம். எனவே, சிலுவையை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல் தேவனின் பெருந்தன்மைக்கும் கருணைக்கும் ஏற்படுத்தும் அவமரியாதையாகும். இது ராஜாவின் சித்தத்திற்கு மாறான கலகத்திற்கு ஒப்பாகும்.
ஒரு தூரமான பாகிஸ்தானிய கிராமத்திலிருந்த முஸ்லிம் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினவற்றை நான் நினைவு கூறுகிறேன். "உங்களின் நபி, எங்களின் நபியை விட உயர்ந்தவர் என்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. அவர் ஒரு கன்னியின் வயிற்றில் உண்டானவர், எங்கள் நபி அவ்வாறில்லை. அவர் பிறப்பிலிருந்தே அற்புதங்களைச் செய்ததால் பிறப்பிலேயே நபியானவர். எங்களவர் நாற்பது வயதில் தான் நபியானார். உங்கள் நபி இப்போதும் உயிரோடிருக்கிறார், எங்களவரோ மரித்துவிட்டார்". (சூரா 4:15, கொல்லப்பட்ட நபிகளைப் பற்றிச் சொல்கிறது; ஆனால் அவர்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினவர்கள் என்று எதுவும் கூறவில்லை).
எனவே பைபிள் இயேசுவை மீட்பர் என்றுச் சொல்லும் போது அதன் முழுமையான அர்த்தத்திலேயே அவ்வாறு கூறுகின்றது. மனிதர்களாகிய நாம் நாமாகவே தேவன் மகிழும்படியான காரியங்களைச் செய்யத் திறனற்றவர்களாய் இருக்கிறோம் என நன்கு அறிவோம், என்பதினாலேயே அவ்விதமாக வாழ அவர் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். பழங்காலத்தில் வாழ்ந்த செனகா(Senaca) என்ற ஒரு தத்துவ ஞானி இவ்வாறு கூறுகிறார்:
"நாம் கொடியவர்காளாகவே இருந்து, கொடியவர்களாகவே மாறியதினால் எப்போதும் கொடியவர்களாகவே இருப்போமென்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்"(Wicked we are, wicked we have become, and, I regret to add, wicked we will always be).
அவருக்கு எவ்விதத்திலும் நம்பிக்கை இல்லை. புனிதர்கள், நபிகள் நமக்கு வழிகாட்டினாலும் நம்மை அவர்களால் இரட்சிக்க முடியாது. அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கலாம் ஆனால், எந்த நபியும் நம் இடத்தில் வந்து நமக்கு பதிலாக மரிக்கமுடியாது.
சிலுவையில் உடன் தொங்கின கள்ளனைப் பார்த்து இயேசு, "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் " என்று சொன்னார் (லூக்கா 23:43). பைபிள் நமக்கு ரோமர் 6: 11-14 ல் இயேசு நம்மைப் பாவக்கட்டுகளினின்றும் அதனால் ஏற்படும் தண்டனையினின்றும் விடுவிப்பார் என போதிக்கிறது.
கிறிஸ்துவுக்குள்ளாக நமது அடையாளம் மகத்தானது. நாம் அவரோடு கூட "பாவத்திற்கு மரித்தோம்" என்ற நம்முடைய அடையாளம் நம்மை பாவ கட்டுகளிலிருந்து விடுதலையாக்குகிறது. மரித்தோரினின்று அவர் எழும்பியது போல நாமும் புதிய வாழ்வுக்குள் உயர்த்தப்படுவோம். இப்போது தேவ ஆவி நம்முள் இருப்பதால் தேவனை மகிழ்வுறச் செய்ய அது நமக்கு உதவுகிறது.
இஸ்லாமுக்குள் புதிதாய் வந்த ஒரு பெண் தன் மனச் சோர்வை சக முஸ்லிம்களுக்கு வெளிப்படுத்தும்
வண்ணமாக ஒரு கணிணிச் செய்தித் தளத்தில் இவ்வண்ணமாய்ச் சொல்கிறார்:
"கடந்த நான்கு ஆண்டுகளாய் நான் ஒரு முஸ்லீமாக இருந்து வருகிறேன். இஸ்லாம், நான் நடப்பதற்கு ஒரு கடினமான பாதையாய் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால் நிச்சயமாகவே நான் நல்லது தான் செய்கிறேன் என உளமாற நம்புகிறேன்........ எப்பொழுதும் நான் ஒரு முஸ்லீமாகவே இருக்கவேண்டும் என விரும்புகிறேன், ஆனாலும், இஸ்லாமில் நான் அனேக காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது..... சில நேரங்களில் இவை யாவற்றையும் செய்ய ஞாபகம் வைத்திருப்பதில் நான் பைத்தியமாக அலைகிறேனோ என நான் எண்ணுகிறேன். அல்லாவின் ஒரு நல்ல ஊழியக்காரியாக இருக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன், ஆனாலும் இவை யாவற்றையும் நான் அறிந்துகொள்வது மிகவும் அதிகமாகவே எனக்குத் தோன்றுகிறது. எனது கணவரிடம் இது பற்றிப் பேசினேன். அவர் நான் ஒரு ஜின்னினால் (அசுத்த ஆவி) பிடிக்கப்பட்டிருப்பேனோ என நினைக்கிறார்..... எனது முயற்சியில் வெற்றியடைய உதவியாய் இருக்கும்படியான பதில் கிடைப்பதற்கான தேடுதலில் நான் மிகத் தீவிரமாய் இருக்கிறேன்".
She said, "I've been a Muslim for about 4 years. Islam is a difficult road for me to walk, but I believe with all my heart that I'm doing the right thing. ... I want be a Muslim forever, but I feel there is so much to do in Islam ... sometimes I think I'm going crazy trying to remember all this... I want to be a good servant to Allah but learning all this is too much for me. I've talked to my husband and he thinks I have a jinn [evil spirit] .... I am desperately looking for answers that will help me to be successful in my effort."
இறுதியாக, சில முஸ்லிம் நண்பர்கள் ஹதீஸ்களில் முகமதுவே கூடத் தனது சொந்த மகளுக்கே இரட்சிப்பை உத்திரவாதம் செய்யக்கூடாத நிலையில் இருந்ததாகப் படித்ததை நினைவுகூறுகிறேன். அவர்கள் ஒரு இக்கட்டான கேள்வியைக் கேட்டார்கள்: "தனது சொந்த மகளாகிய பாத்திமாவையே இரட்சிக்க முடியாத நபி, நம்மை இரட்சிப்பாரென நாம் நம்புவது எவ்வாறு?" (al-Bukhari, vol. 6, p. 277). பலர் மசூதியிலிருந்து ஒரு நாளைக்கு ஐந்துமுறை ஒலிபெருக்கி மூலம் வரும் "வெற்றியடைய வாருங்கள், இரட்சிப்படைய வாருங்கள்" என்ற அழைப்புகளால் .. இவர்களுக்கே இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதபோது இவர்கள் எவ்வாறு மற்றவர்களை இவ்விதம் அழைக்க முடியும் எனச் சங்கடப்பட்டார்கள்.
இவ்விதமான கேள்விகளின் பலனாக சிலர் விரக்தியில் இயேசுவை நோக்கித் திரும்பி அவரின் வார்த்தைகளினாலும் வேதத்தினாலும் (இஞ்ஜில்) நம்பிக்கை அடைந்தார்கள். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 14:6). பல முஸ்லிம்கள் இயேசுவின் இந்த வார்த்தைகளினால் பலத்த ஆறுதல் அடைந்தார்கள்."வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத்தேயு 11:28)
Dr. Warren Larson lived in Pakistan for 23 years. He has written a book called, Islamic Ideology and Fundamentalism in Pakistan: Climate for Conversion to Christianity?; University Press of America; ISBN: 0761810943.
ஏன் இவர்கள் கிறிஸ்தவர்களானார்கள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக