பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
WAS MUHAMMAD A SINNER?
இரவின் அமைதியில், மக்களின் சத்தங்களை விட்டு தூரமாக வந்து, தன் இருதயத்தின் நினைவுகளை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு, ஒரு மனிதன் தன் மனதிற்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகளை இறைவனின் முன்பாக சமர்ப்பிக்கிறார்.
அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.
"Oh God, I acknowledge and confess before You, all my sins, please forgive them, as no one can forgive sins except You. Forgive my mistakes, those done intentionally, or out of my ignorance, with or without seriousness. Oh God, forgive my sins and my ignorance, forgive my sins of the past and of the future, which I did openly or secretly. Forgive the wrong I have done, jokingly or seriously. I seek Your protection from all the evil I have done. Wash away my sins, and cleanse my heart, from all the sins as a white garment is cleansed from the filth, and let there be long distance between me and my sins, as You made the East and West far from each other."
இந்த ஜெபமானவது (வேண்டுதலானது) தன் இருதயத்தின் ஆழத்தில் இருக்கும் பாவங்களின் வீரியத்தை அறிந்த ஜெபமாக உள்ளது. பாவத்தின் பக்கம் சாயக்கூடிய தன் சுபாவத்தை இந்த ஜெபம் அங்கீகரிக்கிறது. தன் பாவ பிடியிலிருந்து விடுதலை ஆகவேண்டும் என்ற ஆவல் இந்த வேண்டுதலில் காணப்படுகிறது. இந்த ஜெபத்தில் அம்மனிதர் பாவத்திலிருந்து விடுபடவேண்டும் என்று போராடுகின்றதை காணமுடியும். தன்னுடைய கடந்த கால மற்றும் எதிர்கால பாவங்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுகின்றார். ஏனென்றால், தான் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால், எதிர் காலத்தில் பாவம் செய்வார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இது தவிற்க முடியாதது. இவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். தான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும், குற்றங்களையும் மன்னிக்கவேண்டும் என்று அவர் வேண்டுகின்றார். தான் செய்த இந்த பாவங்கள் தீயவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார், ஆகையால் அவைகளை இறைவனுக்கு முன்பாக அறிக்கையிடுகின்றார். தான் செய்த பாவங்களை லேசானவைகள் என்று அவர் அவைகளைப் பற்றி லேசாக நினைக்கவில்லை. இறைவனின் பார்வையில் அவைகள் அருவறுப்பானவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார்.
இந்த மனிதர் ஒரு பாவி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பாகம் 1: முஹம்மது பாவியாக இருந்தாரா?
இந்த வேண்டுதலை செய்தவர் முஹம்மது ஆவார். ஸஹீ புகாரி பாகம் 8: எண்கள் 335, 379, 407 மற்றும் 408 [1] என்ற ஹதீஸ்களில் காணப்படும் முஹம்மதுவின் பாவ மன்னிப்பு வேண்டுதல்களின் மொத்த சுருக்கத்தைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். தான் ஒரு பாவி என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும். ஆகையால் தான் அவர் தன் பாவங்களை இப்படி வெளியரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அடிக்கடி தான் ஒரு பாவி என்பதை அவர் கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, தன் வாயின் மூலமாக வெளிப்பட்ட குர்ஆனும் அவரை ஒரு பாவி என்றே அடையாளம் காட்டுகின்றது. இப்படி இருந்தும், தற்காலத்தில் உள்ள அனேக இஸ்லாமியர்கள் முஹம்மது ஒரு பாவி அல்ல என்றுச் சொல்கிறார்கள்.
கேள்வி: முஹம்மது தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகிறார், அப்படியிருக்கும் போது அவர் ஒரு பாவியில்லை என்று அவர் சொன்னதற்கு விரோதமாக ஏன் இன்றையை இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்?
இந்த கேள்விக்கு பதிலை நான் காண்பதற்கு முன்பாக, முஹம்மது பாவியில்லை என்றுச் சொல்கின்ற தற்கால/மத்திய கால இஸ்லாமியர்களின் வாதங்களைக் காண்போம். அதன் பிறகு முஹம்மது ஒரு பாவி தான் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உதவி கொண்டு நிருபிப்போம்.
அ) "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு
அல்லாஹ் ஒரு சிறப்பான பாதுகாப்பை தன் தீர்க்கதரிசிகளுக்கு கொடுத்துள்ளார் அதன் மூலம் அவர்கள் "பாவிகளாக" இருக்கமாட்டார்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கோட்பாட்டைப் பற்றி ஒரு அருமையான விளக்கத்தை ஜான் கில்கிறைஸ்ட் தன் புத்தகமாகிய "முஹம்மது மற்றும் இஸ்லாமிய மதம்" என்ற புத்தகத்தில் தருகிறார் [2]. இந்த கோட்பாட்டை "இஸ்மா" என்று கூறுகிறார்கள். இந்த புத்தகத்தை இத்தொடுப்பில் படிக்கலாம்:
http://answering-islam.org/Gilchrist/Vol1/
இந்த புத்தகத்திலிருந்து நான் அனேக பத்திகளை மேற்கோள்களாக காட்டுகிறேன்.
பக்கம் 273 லிருந்து சில பத்திகள்
"தீர்க்கதரிசிகள் அனைவரும் 'இஸ்மா' என்ற பாவத்திலிருந்து பாதுகாப்பு என்ற சிறப்பான சலுகையை அனுபவித்தார்கள், அதாவது அவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்கு 'இஸ்மா' உதவுகிறது, இதன் மூலம் அவர்கள் பாவிகள் அல்ல என்று இன்றுள்ள முழு இஸ்லாமிய உலகமும் நம்பிக்கொண்டு இருக்கிறது. இது இஸ்லாமுக்கு முரண்பாடான கோட்பாடாகும். குர்ஆனும் ஹதீஸ்களும் போதிக்கும் போதனைக்கு முரணாக இந்த நம்பிக்கை இருக்கிறது.
இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்பு, இஸ்லாம் மற்றும் ஹதீஸ்கள் போதிப்பதற்கு எதிராக, இந்த புகழ்பெற்ற புதிய கோட்பாடு உருவாகி வளர்ச்சி அடைந்தது. இது முதன் முதலில் ஃபிக் அக்பர் 2 என்று அழைக்கப்பட்ட கோட்பாடாகும், இது கீழ்கண்ட விதமாக கூறுகிறது:
"எல்லா தீர்க்கதரிசிகளும் பாவத்திலிருந்து விடுபட்டவர்கள், அது சிறியதாக இருந்தாலும் சரி, மிகவும் கொடியதாக இருந்தாலும் சரி, நம்பிக்கையின்மையாக இருந்தாலும் சரி, தீய நடக்கைகளாக இருந்தாலும் சரி, இவர்கள் அவைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இருந்தும் போராட்டமும், சிறிய பிழைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கும்" "All the Prophets are exempt from sins, both light and grave, from unbelief and sordid deeds. Yet stumbling and mistakes may happen on their part. Wensinck, "The Muslim Creed, p. 192."
இஸ்லாமிய மூல நூல்கள் சொல்வதை நாம் மறுக்க முடியாது. ஆகிலும், நபிகள் செய்ததாக குர்ஆனும் ஹதீஸ்களும் சொல்லும் பாவங்களை, இவர்கள் வெறும் "சிறிய பிழைகள்" என்று சொல்லி அவர்களின் பாவங்களின் தன்மையை லேசாக்குகிறார்கள். இதே போல உள்ள இன்னொரு இஸ்லாமிய விவரம் "ஞாபக மறதியைப் பற்றியதாகும்". இஸ்லாமிய நூல்கள் எவ்வளவு தீவிரமாக நபிகளின் பாவங்களைப் பற்றி கூறினாலும், இன்றைய இஸ்லாமிய எழுத்தாளர்கள் அச்செயல்களுக்கு காரணம் ஞாபக மறதி தான் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.
இந்த கோட்பாடு இஸ்லாமில் உருவானதற்கு இரண்டு அடிப்படை காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, உலகில் வாழ்ந்தவர்களில் இயேசு தான் பாவமற்ற மனிதராக வாழ்ந்தார் என்று பைபிள் சொல்வதை ஆரம்பகால இஸ்லாமியர்கள் சீக்கிரத்திலேயே கண்டுக்கொண்டனர். இதனை சமாளிக்க இஸ்லாமியரகள் கண்டுபிடித்த ஒரு கோட்பாடு "எல்லா தீர்கக்தரிசிகளும் முஹம்மதுவோடு கூட சேர்த்து பாவமற்றவர்கள்" என்ற கோட்பாடாகும். முஹம்மதுவை விட இயேசுவின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருப்பதை இஸ்லாமியர்கள் கண்டுக்கொண்டதால், அவர்களால் அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இயேசு அற்புதங்கள் செய்தது போல, முஹம்மது எந்த அற்புதத்தையும் செய்யவில்லையானாலும், பொய்யான சில அற்புதங்களை இட்டுக்கட்டி அவைகளை முஹம்மது செய்தார் என்று சில இஸ்லாமியர்கள் கூறுவது போல, இயேசு பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை சகித்துக்கொள்ளமுடியாமல், முஹம்மதுவும் பாவமில்லாதவர் என்ற பொய்யான கோட்பாட்டை இஸ்லாமியர்கள் உருவாக்கினார்கள்.
இரண்டாவதாக, இஸ்லாமின் படி வெளிப்பாடுகள் மூலமாக கிடைக்கும் இறைவசனங்கள் காபிரியேல் (ஜிப்ராயீல்) மூலமாக எல்லா நபிகளுக்கும் கிடைத்தது. ஆகையால், இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை நபிகள் (தீர்க்கதரிசிகள்) பெறவேண்டுமானால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தூய்மை நிறைந்ததாக இருக்கவேண்டும், எந்த பாவமும் செய்யாதவர்களாக இருக்கவேண்டும் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. நபிகள் பாவங்கள் செய்கின்றவர்களாக இருந்தால், அவர்களால் எப்படி இறைவசனங்களை பிழையில்லாமல் மக்களிடம் சேர்க்கமுடியும்? இப்படிப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைத் தான் நபிகள்(தீர்க்கதரிசிகள்) பாவங்கள் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டை உருவாக்க இரண்டாவது காரணமாக இருந்தது.
மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது?
ஆ) முஹம்மது ஒரு பாவி என்பதற்கு குர்-ஆனிலிருந்து ஆதாரங்கள்.
முஹம்மது ஒரு பாவி அல்லது பாவம் செய்தவர் என்று குர்ஆன் அடையாளம் காட்டுகிறது: 40:55, 48:2, and 47:19:
40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
குர்ஆன் 47:19ம் வசனத்தை இரண்டு தமிழ் மொழிப்பெயர்ப்புக்களிலும், ஐந்து ஆங்கில மொழியாக்களிலும் காணலாம். (குறிப்பு: இவ்வசனங்களில் முஹம்மது தன்னுடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் மன்னிப்பு கோறுகிறார்)
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். (பீஜே தமிழாக்கம்)
"Know that there is no deity but God. Implore Him to forgive your sins and to forgive the true believers, men and women. God knows your busy haunts and resting places." Dawood [3]
"So know (O Muhammad) that there is no God save Allah, and ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest." Pickthall [4]
"Know thou therefore that there is no god but God, and ask forgiveness for thy sin, and for the believers, men and women. God knows your going to and fro, and your lodging." Arberry [5]
"Know, then, that there is no god but God; and ask pardon for thy sin, and for believers, both men and women. God knows your busy movements and your final resting places." Rodwell [6]
"Know therefore that there is no god but Allah and ask forgiveness for the fault and for the men and women who believe: for Allah knows how ye move about and how ye dwell in your homes." Ali [7]
இந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்திய வார்த்தை "தன்ப்" (dhanb or thanb) என்பதாகும். இந்த வார்த்தை அனேக முறை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹக்ஸ் இஸ்லாமிய அகராதி இவ்வார்த்தையின் பொருளை "பாவம் அல்லது குற்றம் அல்லது இவைகளைப்போல உள்ள ஒரு குற்றம்" [8] என்று வரையறுக்கிறது. (Hughes Encyclopedic Dictionary of Islam)[8]
முஹம்மது ஒரு பாவி என்று குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது. இவ்வார்த்தையை குர்ஆன், முஹம்மதுவிற்கும் சேர்த்தே சொல்கிறது. முஹம்மது ஒரு பாவியில்லை என்று வாதம் புரியும் இஸ்லாமியர்கள் இவ்வார்த்தைக்கு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, இந்த வார்த்தை குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அல்லது அவ்வசனம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் பொருள் என்ன? இந்த வார்த்தையின் உண்மைப்பொருளை நாம் ஆரய்வோம். இறைவன் தண்டனை அளிக்கும் பாவமாக இவ்வார்த்தையின் பொருள் உள்ளதா? அல்லது இறைவன் மன்னிக்கும் அளவில் உள்ள மிகச்சிறிய பிழை என்ற பொருள் இவ்வார்த்தைக்கு உள்ளதா என்பதை நாம் ஆராய்வோம். இவ்வார்த்தையின் உண்மைப் பொருளை அறியவேண்டுமானால், இவ்வார்த்தை எங்கே எல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவ்வசனங்கள் சொல்லும் பொருள் அல்லது சூழல் என்ன என்பதை காண்போம்.
இவ்வார்த்தையின் பொருளைப் பற்றி குர்ஆனே பேச இப்போது நாம் இடம் கொடுப்போம்.
குர்ஆனில் இவ்வார்த்தை 39 இடங்களில் வருகிறது, சில இடங்களில் என்ன பாவம் என்பதைச் சொல்லாமல் பொதுவாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு 3:31ம் வசனத்தை பாருங்கள்,
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; ....
இவ்வசனத்தில் "எந்த பாவம்" என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், "பாவம்" என்று மட்டும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், "தன்ப்" என்ற வார்த்தை வேறுபல வசனங்களில் "என்ன பாவத்தைப் பற்றி" அவ்வசனம் குறிப்பிடுகின்றது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட பட்டியலை நாம் காண்போம். நான் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட 22 இடங்களை மேற்க்கோள் காட்டப்போகிறேன், ஏனென்றால், குர்ஆன் இவ்வார்த்தையை எவ்வளவு வீரியமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களை நான் உற்சாகப்படுத்துகிறேன், "தன்ப்" என்ற வார்த்தையை மிகவும் லேசானதாக பொருள்படும் படி அல்லாஹ் குர்ஆனில் எங்கேயாவது பயன்படுத்தியுள்ளாரா என்று தேடிப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த "தன்ப்" என்ற பாவத்தை செய்தவருக்கு கொடுக்கப்படும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு முரண்பாடாக அல்லாஹ் மிகவும் லேசான தண்டனையை கொடுத்ததாக ஏதாவது வசனம் உங்களுக்கு தென்படுகின்றதா என்று தேடிப்பாருங்கள். நான் தேடிப்பார்த்ததில், எனக்கு கிடைக்கவில்லை.
"தன்ப் - DHANB" அல்லது பாவம் என்ற வார்த்தை வரும் குர்ஆன் வசனங்களின் தொகுப்பு:
3:11 (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
பார்வோனின் மக்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அளிப்பதாக அல்லாஹ் கூறுகிறார், அவர்கள் செய்த "தன்ப்" என்ற பாவத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
3:16 இத்தகையோர் (தம் இறைவனிடம்): 'எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம், எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!' என்று கூறுவார்கள்.
இந்த வசனத்தின்படி மக்கள் தாங்கள் செய்த "தன்ப்" காக மன்னிப்பை கேட்கின்றனர், ஏனென்றால், தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்காமல் போனால், அவர்கள் நரகத்தின் அக்கினியில் விழவேண்டியிருக்கும்.
5:18 யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
இங்கு, கிறிஸ்தவர்களும் யூதர்களும் அவர்களின் "தன்ப்" என்ற பாவத்தினால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படுவார்கள் என்று முஹம்மது கூறுகிறார். ஆக, அவர்களின் தன்ப் என்ற பாவம் அவர்களுக்கு தண்டனையை சம்பாதித்துக் கொடுத்தது, பாராமுகமாக விட்டுவிடுவதற்கு இது ஒன்றும் சிறிய பாவமில்லை அல்லாஹ்வின் பார்வையில்.
5:49 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன
இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
இந்த வசனத்தில் "தன்ப்" என்பது ஒரு "குற்றமாக" கருதப்படுகிறது. சிந்திக்கும் சக்தியுள்ள எந்த மனிதனாவது குற்றம் புரிவது வெறும் சிறிய பிழை என்று கருதுவானா? நிச்சயமாக அப்படி கருதமாட்டான். இறைவன் குற்றங்களை எப்படி கருதுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீரகள்?
6:6 அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
பல வம்சங்களை/சந்ததிகளை அவர்களின் "தன்ப்" காக அழித்ததாக இறைவன் கூறுகின்றான்.
7:100 பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
மக்களின் "தன்ப்" காக தண்டிக்கப்படுகிறார்கள், அதாவது "தன்ப்" என்பது தண்டனை பெற்றுத் தருகின்ற ஒரு செயலாக இருக்கிறது.
8:52 (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
இந்த வசனத்தில் மறுபடியும் மக்களின் "தன்ப்"காக அல்லாஹ் அவர்களை தண்டித்தார். மக்களின் "தன்ப்" என்ற பாவத்தை அல்லாஹ் ஏதோ சிறிய பிழையாக நினைக்காமல், அதற்கு தண்டனையை கொடுக்கிறார்.
8:54 ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
இவ்வசனத்தில் மறுபடியும் மக்கள் தங்கள் "தன்ப்"காக, இறைவனால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இந்த குற்றம் செய்தவர்களை அல்லாஹ் அநியாயக்காரர்கள் பொய்யர்கள் என்று சொல்கிறார்.
9:102 வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அலி தன் பின்குறிப்பில் இவ்விதமாக கூறுகிறார்: "சில மனிதர்களிடம் நல்ல குணங்கள் இருந்தாலும், அவர்கள் பலவீனமாக இருப்பார்கள், இதனால் தீய செயல்களை செய்வார்கள். அலி அவர்கள் இந்த "தன்ப்" ஐ "தீய செயல்கள்" என்று கூறுகிறார். "தீய செயல்கள் என்பது தெரியாமல் செய்யும் பிழைகளாக ஆகுமா?"
12:29 (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.
இந்த வசனத்தில், யோசேப்பை பாவத்தில் விழவைக்க முயற்சி செய்த பெண்ணைப் பற்றி படிக்கிறோம். ஆனால், அவர் மீது கற்பழிப்பு குற்றத்தை அதே பெண் பொய்யாக சுமத்தினாள். இதனால், அப்பெண்ணின் "தன்ப்" அல்லது பாவத்திற்காக மன்னிப்பு கோறும்படி அறிவுரை தரப்படுகிறாள். ஒரு வேற்று ஆணோடு உடலுறவு கொள்ள நினைக்கும் இப்பெண்ணின் பாவம், அறியாமல் செய்த பிழையா? இல்லை. இது மனிதனுக்கு, இறைவனுக்கு எதிராக செய்த பாவமாகும்.
12:97 (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
இவ்வசனத்திலும், யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் "தன்ப்" ஐ மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் செய்த அந்த பாவம் என்ன? அவர்கள் யோசேப்பை கடத்திச் சென்று, அடிமையாக விற்றுவிட்டாரகள். அதன் பிறகு தங்கள் தந்தையிடம் பொய்யையும் சொன்னார்கள். இவர்கள் செய்த இந்த செயல்கள் ஏதோ தெரியாமல் செய்த சிறிய பிழைகளா? அல்லது ஞாபகம் இல்லாமல் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை. இந்த செயல்கள் மிகவும் மோசமான பாவங்களாகும், இவைகள் பொறாமையினால் செய்த தீய செயல்களாகும்.
14:10 அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.
இந்த வசனத்தில் "தன்ப்" என்பது பல தெய்வ வழிப்பாட்டைக் குறிக்கிறது. விக்கிர ஆராதனை (பல தெய்வ வழிப்பாடு) மறதியில் செய்யும் சாதாரண செயலா? அவர்களின் "தன்ப்" பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றால் அவர்கள் நரக நெருப்பிலிருந்து தப்புவார்கள். இந்த பாவம் மன்னிக்கப்படவில்லையானால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
26:14 "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).
இந்த வசனத்தில் மோசே பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு "குற்றம்/தன்ப்" புரிந்ததாக கூறுகிறார். அவர் செய்த அந்த குற்றம் தான் என்ன? அவர் செய்தது ஒரு கொலையாகும். கொலை என்பது அல்லாஹ் கண்டும் காணதவர் போல இருந்துவிடும் அளவிற்கு சிறிய பிழை தான் என்று எந்த ஒரு இஸ்லாமியராவது சொல்லமுடியுமா?
28:78 (அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
இங்கு, ஒரு முழு தலைமுறையை அவர்கள் செய்த "தன்ப்" காக அல்லாஹ் அவர்களை அழித்தாராம். ஒரு சிறிய பிழைக்காகவா அல்லாஹ் ஒரு தலைமுறை மக்களை அழிப்பார்?
29:40 இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
மக்கள் செய்த குற்றமாகிய தன்ப்காக அவர்களை அல்லாஹ் பிடித்ததாக கூறுகிறார். அவர் எப்படி அம்மக்களை அழித்தார் என்பதை பார்க்கவும்:கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினார், பேரிடி முழக்கத்தை அனுப்பினார், பூமியினுள் அழுந்தச் செய்தார், சிலரை தண்ணீரில் மூழ்கடித்தார். மக்கள் செய்த இந்த "தன்ப்" தீயசெயல்கள் இல்லையா? "தன்ப்" என்பது அல்லாஹ் காணாதவர் போல இருக்கச் செய்யும் ஒரு சிறிய பிழையா? இல்லை...இல்லவே இல்லை. தன்ப் என்பது அல்லாஹ் மிகவும் கொடுமையாக தண்டிக்கும் பாவமாகும்.
40:11,12 அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர். (40:11) . (பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
இவ்வசனத்தில் மக்கள் தங்கள் பாவங்களை(தன்ப்) ஒப்புக்கொள்கின்றனர். இவர்களின் செய்த பாவம் எது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறார்? அல்லாஹ்வுடன் மற்றவர்களை சமமாக்கினதையே பாவம் என்று அல்லாஹ் கூறுகிறார். இப்படிப்பட்ட பாவத்தை "ஷிர்க்" என்று சொல்லப்படும். இந்த பாவம் மன்னிக்கப்படாது என்று பல இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.
40:21 இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
மக்களின் பாவங்களுக்காக (தன்ப்) அல்லாஹ் அவர்களை தண்டிக்கிறார். தன்ப் என்பது எப்படிப்பட்ட பாவம் என்றால், அல்லாஹ்விடமிருந்து இவர்களை காப்பாற்ற ஒருவர் தேவைப்படும் அளவிற்கு மிகவும் கொடுமையானது, ஆனால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இல்லை.
46:31 "எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
அல்லாஹ் மக்களின் பாவங்களிலிருந்து (தன்ப்) மன்னிப்பு அளித்து, தண்டனையிலிருந்து தப்பிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இறைவனின் பார்வையில் பாவத்திற்கு(தன்ப்) கடுமையான தண்டனை தரப்படவேண்டி இருக்கிறது.
61:12 அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
இந்த வசனத்தில் அல்லாஹ் அவரகளின் பாவங்களை (தன்ப்) மன்னிப்பாராம். அதன் பிறகு சொர்க்கத்தில் அவர்களை அனுமதிப்பாராம். அதாவது, தன்ப் என்ற பாவம் மன்னிக்கப்படாவிட்டால், அந்த சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
67:11 (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
இம்மக்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வார்களாம். ஆனால், இவர்களுக்கு மன்னிப்பு தரப்படாது. ஆகையால் இம்மக்கள் இவர்களின் பாவங்களினால், நரகத்தில் இருப்பார்கள்.
91:14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
மேலே உள்ள வசனத்தில், மக்கள் அந்த நபி ஒரு கள்ள நபி என்று கருதி அவரை நிராகரித்துவிட்டனர் மற்றும் அந்த விசேஷித்த ஒட்டகத்தை கொன்றுவிட்டனர். இவர்களின் இந்த "தன்ப் குற்றத்திற்காக" அல்லாஹ் என்ன செய்தார்? அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்கி முழுவதுமாக அழித்துவிட்டார். ஏன் இந்த தண்டனை அவர்களுக்கு? அவர்களின் "தன்ப்" என்ற குற்றத்திற்காக இந்த தண்டனை.
வாருங்கள் இப்போது சிறிது ஆராயலாம். "தன்ப்" என்ற வார்த்தை பாவம், குற்றம் மற்றும் தவறு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த "தன்ப்" என்ற பாவம்
செய்தவர்களை அல்லாஹ் என்ன செய்தார்?
அல்லாஹ் இப்படிப்பட்டவர்களை...
பூமியில் இராதபடிக்கு துடைத்துப்போட்டார்
அழித்துவிட்டார்
நரக நெருப்பில் போட்டார்
பயங்கரமான தண்டனையை அளித்தார்
கணக்கு கேட்டார்
பயங்கரமான புயலைக் கொண்டு அழித்தார்
பயங்கரமான தாக்குதலை கொடுத்தார்
பூமி அவர்களை விழுங்கும்படி செய்தார்
தண்ணீரில் மூழ்கும்படி செய்தார்
தண்டித்தார்
நரக நெருப்பில் தள்ளி வேதனையை அனுபவிக்கும் படி செய்தார்
"தன்ப்" என்ற பாவத்தை செய்தவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனைகளைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். இந்த "தன்ப்" என்ற பாவமானது அல்லாஹ் பார்த்தும் பார்க்காததுமாக விட்டுவிடக்கூடிய அளவிற்கு ஒரு சிறிய "பிழை", "தடுமாறுதல்"அல்லது "மறதியில் செய்த பிழை" என்று பொருள் தெரிகிறதா உங்களுக்கு?
இல்லை! நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் மேலே கண்ட தண்டனைகளை பார்த்தால், "தன்ப்" என்பது அல்லாஹ் மிகவும் தீவிரமாக தண்டிக்கும் ஒரு பாவமாக இருக்கிறது. அல்லாஹ்வின் பார்வையில் இது கண் ஜாடையாக பார்த்தும் பார்க்காதது போல விட்டுவிடுகின்ற சிறிய பாவமல்ல, இது மிகவும் கொடுமையான பாவமாகும். இதனை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா?
முக்கியமாக இதனை மறக்கவேண்டாம், அதாவது முஹம்மது "தன்ப்" என்ற பாவத்தை செய்துள்ளார். முஹம்மது தன்னுடைய அனைத்து "தன்ப்" காக மன்னிப்பு கோரும் படி அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுள்ளார். தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்தால் தான் சொர்க்கத்தில் நுழைய முடியும் என்று முஹம்மது குர்ஆனில் கூறியுள்ளார். தன்ப் பாவங்கள் மன்னிக்கப்படாதவன் நிச்சயமாக நரகத்தில் செல்வான்.
முதல் பாகத்தின் முடிவுரை:அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா?
இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், முஹம்மதுவின் பாவங்கள் பற்றிய ஹதீஸ்களையும் அவர் செய்த பாவங்களின் பட்டியலையும் காண்போம்.
ஆதார நூற்ப்பட்டியல்
[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.
[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:
http://answering-islam.org/Gilchrist/Vol1/
[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England
[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.
[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.
[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.
[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.
[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"
[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.
[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.
[11] இக்கட்டுரையின் அனைத்து குர்ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
mo-sinner.htm
Rev A: 4/26/00
ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER?
இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1
முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19)
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)
முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
7 கருத்துகள்:
unakana kooli iruthi theerppu naalil thaaraalamaka kidaikkum.
theyva makane
unakaana kooli nichchayam kaaththirukirathu theyva mainthane.
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா?
Umar:
Dear muslim brothers,
enaku oru kelvi irukirathu.
Mohammed nabi yai yeen EN UYIRILUM MELAANA endra varthaiyai korukireer, nabi yai patri karuthukalai korinal asingamaga pesukireer, nabi ungalukku Uyirruku melaanavar endral Appo alla vai entha idathil vaithu irukkireer. namathu uyir iravanukuthan sontham. iraivanai mattume uyirukku melanavaraga karutha veendum. neengal maraimugamaga Mohammed nabi yai vanangu kireergal. avarai patri Quaranil ulla unmaiyai koorinal, matravarkalai kevalamaga pesukireergal. Neengal unmaiya alla vai mattum vanangubavara.?? By akbar basha. chennai
Dear muslim brothers,
I want to ask you Question,
Neengal nabi yai En uyirinim meelana endu koorukireergal,
Mohammed nabi yai patri Unmai karuthhukal atharathudan korinal avargalai kevalamaga pesukireergal.
Nan orndru ketga virumbukiren, yarai naam uyirilum meelaga karutha veendum. nammai uyir kodutha iraivankku mattum allava?
Anal neengal nabiyai uyirilum meelaga karuthukireer. Neengal marai mugamaga, nabiyai vanangugireergal, namathu udal uyir anaithum nammai padaitha iraivanukku mattume sontham,
nabi oru manithan avar pala pavangal saithavar enndru ungal vathame korukirathu avarai pinpatrinal. neengal avai polave pavam saibavaraga irupeer, pavam saiyatha Esuvai pinpatrungal ungal vazhkai marum. AMEN by Akbar basha(christian)chennai.
Dear muslim brothers,
I want ask you question?
Nengal mohammed nabi yai vuyirukum melanavar endru korukireergal,
En apadi? yar ungalukku uyirai thanthathu mohammed nabiya? nammai padaitha iraivanai uyirilum melaga karuthuvathai vittu, oru manithanukku ipadi pesukireere. neengal nabai yai maraimugamaga vangukireergal, ungal iraivanai yalla, nabiyai patri unmaiyai atharathudan(ungal vetham) korinal neengal asinga maga pesukireergal, neengal yarai vanangukiravargal, ungal allah vaiya alathu nabiyaiya,? melum pavam saitha nabiyai pinpatrinal avarai polave neenglum pavam saiveer pavam saiyatha Esu kristhuvai pinpatrinal ungalathu pavam mannika padum, sinthithu parungal. By akbar basha.chennai
dear muslim brothers,
I am asking question for you,
Neengal Quran nai ye iraivan aruliyathu endru korukireer, melum itharkaga evvalavu vivatham argument sandai podukireergal nalla. samuthayathirku nalla eduthu kattaga irukka vendiya neengal sandai pottu kondu pirivaiyai vuruvagu kireergal. Satru sinthithu parungal, nam yarum kadavulai kanavillai vedham kadavulidam irunthu vanthathai koda nam kanavillai neengal Quranai nambikaiyin adipadaiyile pinpatru kireergal ipadi irukka nan solvathu than sari ena koravathai vittu vittu Quarinin vazhkai muraiyum bible sollum vazhkai muraiyum voppitu parungal kadaval nammai pirakka padaikka villai nam oruvarodu oruvar sandai pottukolla nammai padaikka villai nam samthana maga irukkave nammai padaithar, bible samathanathaiye karpikkirathu, sandai poda alla, bible than unmaiyana irai vethamaga naan etru kolgiren(nan oru muslima irunthavan ) please follow jesus. you life will be save. bu Akbar basha.chennai
கருத்துரையிடுக