அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்.
ரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை
அன்புள்ள தம்பி,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
நேற்று நான் அனுப்பிய கடிதத்தை படித்து இருப்பாய் என்று நம்புகிறேன்.
நீ ஒரு முஸ்லிமோடு அதிகமாக நட்பாக இருக்கிறாய், உங்கள் இருவரின் நட்பு அதிகமாக உள்ளது என்று சௌதியில் இருக்கும் என் நண்பன் எனக்கு கூறியபோது, "இதிலென்ன தவறு? எனக்கும் இஸ்லாமியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் அல்லவா?" என்று நான் கூறினேன். என் தம்பி என்ன குழந்தையா? இவனோடு பேசு அவனோடு பேசாதே என்று கட்டுப்பாடு விதிப்பதற்கு? அவன் நண்பர்களோடு சுதந்திரமாக பழகட்டுமே, சுதந்திரத்திற்கு தடை போடவேண்டாம் என்று நான் என் நண்பனிடம் கூறினேன்.
ஆனால், சில நாட்களுக்கு பிறகு நீ ஒரு மெயில் அனுப்பி "நான் முஸ்லிமாகிவிட்டேன்" என்று கூறினாய், நான் சுயமாக இந்த முடிவை எடுத்தேன் என்றும் கூறினாய். அப்பா அன்று அதிகமாக துக்கப்பட்டார், நான் அவ்வளவு துக்கம் அடையவில்லை, ஏனென்றால் உன்னுடைய பலம் மற்றும் பலவீனம் எது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ சுதந்திரமாக எடுத்த முடிவை நான் மதிக்கிறேன்.
நான் உன்னிடம் ஒரு விஷயத்தை பற்றி கேட்க விரும்புகிறேன். நீ சுதந்திரமாக இஸ்லாமை தழுவினாய், அதற்கு உனக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நீ இஸ்லாமை விட்டு வெளியே வர விரும்பினால், அப்படி செய்ய உனக்கு சுதந்திரம் உண்டா?
உன்னை இஸ்லாமை தழுவும் படி உற்சாகப்படுத்திய உன் நண்பர்கள், நீ மறுபடியும் அதைவிட்டு வெளியேறவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் உனக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் வெளியேற அனுமதிப்பார்களா?
நான் ஏன் இந்த கடிதங்களை எழுதுகிறேன் என்பதை உனக்கு விளக்குகிறேன். நீ நம் குடும்பத்தின் ஒரு அங்கம், நீ எங்கு இருந்தாலும், நன்றாக இருந்தால் அது போதும் எங்களுக்கு. ஆனால், ஒரு நாள் கர்த்தரிடத்தில் மறுபடியும் நீ வரவிரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீ இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், இஸ்லாம் இடம் கொடுக்குமா? இஸ்லாமியர்கள் உன்னை வாழவிடுவார்களா? இது தான் என் பயம்.
உனக்கு நெருங்கிய நல்ல நேர்மையான இஸ்லாமிய நண்பன் ஒருவன் இருந்தால், அவனிடம் "ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், நீங்கள் அனுமதிப்பீர்களா?" என்று கேட்டு அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று கவனித்துப்பார். என் தம்பி இஸ்லாமில் பாதுகாப்பாக இருப்பானா? அவன் வெளியே வரவிரும்பினால் கூட பாதுகாப்பாக இருப்பானா? என்பதை கேட்டு எனக்குச் சொல்வாயா?
இஸ்லாமை விட்டு வெளியேறும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சிறிது கவனித்துப்பார்? ஷரியா சட்டம் இஸ்லாமியர்களை என்ன பாடுபடுத்துகிறது என்று கவனித்துப்பார். இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை செய்தித்தாள்களில் படித்துப்பார்? நீ குழந்தையல்ல, எனவே, அனைத்தையும் சோதித்துப் பார்.
நல்லவேளை நாம் இந்தியாவில் பிறந்தோம், இஸ்லாமிய நாட்டில் பிறக்கவில்லை, அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால், அதிகமாக சந்தோஷப்பட முடியாது, இங்கும் மறைவாக அனேக தீங்குகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கிறது. தம்பி, ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான பொக்கிஷம், அவன் சுதந்திரமாக வாழுவதும், சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதுமாகும், இந்த இரண்டும் இந்நாள் வரை உனக்கு இருந்தது, இனி இப்படிப்பட்ட சுதந்திரம் உனக்கு கிடைக்குமோ என்பது தான் என் கேள்வி?
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். நான் கேட்ட விஷயத்தை மட்டும் உன் நண்பர்களிடம் கேட்டுச் சொல்வாயா? நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"
இப்படிக்கு, உன் அண்ணன்,
தமிழ் கிறிஸ்தவன்.
8 கருத்துகள்:
உமர் அண்ணா அவர் தம்பிக்கு எழுதும் இந்த கடிதம் என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. இஸ்லாத்துக்கு போவதும் புலிவாலை பிடிப்பதும் ஒன்று என்பதை பரிந்துகொண்டேன். ஒரு பாதாள குழுவில் சேர்ந்தவன் எப்படி அந்த குழுவிலிருந்து வெளியே வர முடியாதோ அதை போலாதான் இஸ்லாம் எனும் படுகுழியில் விழுந்தவனும் திரும்பி மேலே ஏறுவது கடினமான காரியம் என்பதை அறிந்துகொண்டேன். நன்றி உமர் அண்ணா.
பாதுகாப்பாக இருப்பானா? நல்ல கற்பனை. பாதுகாப்பாக இருப்பதற்கு மட்டுமில்லை, எதிர் கருத்து கூறவும் இஸ்லாம் உரிமை தருகிறது என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி... நண்பரே!
பாதுகாப்பாக இருப்பானா? நல்ல கற்பனை. பாதுகாப்பாக இருப்பதற்கு மட்டுமில்லை, எதிர் கருத்து கூறவும் இஸ்லாம் உரிமை தருகிறது என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி... நண்பரே!
பாதுகாப்பாக இருப்பானா? நல்ல கற்பனை. பாதுகாப்பாக இருப்பதற்கு மட்டுமில்லை, எதிர் கருத்து கூறவும் இஸ்லாம் உரிமை தருகிறது என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி... நண்பரே!
அன்பான நண்பர் பாபு அவர்களுக்கு,
நீங்கள் இஸ்லாமிய நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன்.
இஸ்லாமை விட்டுவெளியே சென்றாலே அவனுக்கு மரண தண்டனை தான்.
இஸ்லாமிய நாடுகளில் அல்லது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் கேள்வி கேட்கும் மக்கள் அனுபவிக்கும் பாடுகள் அனேகம்.
இந்தியா போன்ற சிறும்பான்மையாக முஸ்லிம்கள் இருக்கும் நாடுகளில் கொஞ்சம் வாலை சுருட்டி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். எனினும் அவ்வப்போது தங்கள் உண்மை முகத்தை காட்டிவிடுகிறார்கள்.
கொஞ்ச உலக செய்திகளை கூட நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.
பதிலுக்கு நன்றி. பெரும்பான்மையர் உள்ள நாடுகளில் சிறுபான்மையர் ஒடுக்கப்படுவது முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்ல... இந்தியா, இலங்கை, இஸ்ரேல etc கூட விதிவிலக்கல்ல. நாடுகள் ஏன்? கேரளா, உபி, கர்நாடகா மாநிலங்களில் நடப்பதை உலக செய்திகளை படித்து தெரிந்துக்கொள்ள அறிவுரை கூறும் உங்களுக்கு தெரியாததல்ல.
பிரச்சினையே உங்கள் குறுகிய கண்ணோட்டம்தான். எங்கே ஒரு மூலையில் இஸ்லாம் பெயரில் சிலர் செய்யும் தவறுகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் நீங்கள்... பக்கத்துக்கு வீட்டில் பக்கத்துக்கு தெருவில் "தினம் தினம் நடக்கும்"... சாதி சண்டைகள்( மதமல்ல), RSS இன் அட்டூளியங்கள், கலப்பு திருமண கௌரவ படுகொலைகள், காப் பஞ்சாயாத்து அக்கிரமங்கள்.... இலங்கை, பர்மா, இஸ்ரேலில் நடக்கும் மத படுகொலைகளின் போதுமட்டும் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதேன்?
தயவு செய்து உங்கள் பார்வைகளோடு சேர்த்து கொஞ்சம் மனதையும் திறந்து வைத்து உலகை பாருங்கள்!
பதிலுக்கு நன்றி. பெரும்பான்மையர் உள்ள நாடுகளில் சிறுபான்மையர் ஒடுக்கப்படுவது முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்ல... இந்தியா, இலங்கை, இஸ்ரேல etc கூட விதிவிலக்கல்ல. நாடுகள் ஏன்? கேரளா, உபி, கர்நாடகா மாநிலங்களில் நடப்பதை உலக செய்திகளை படித்து தெரிந்துக்கொள்ள அறிவுரை கூறும் உங்களுக்கு தெரியாததல்ல.
பிரச்சினையே உங்கள் குறுகிய கண்ணோட்டம்தான். எங்கே ஒரு மூலையில் இஸ்லாம் பெயரில் சிலர் செய்யும் தவறுகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் நீங்கள்... பக்கத்துக்கு வீட்டில் பக்கத்துக்கு தெருவில் "தினம் தினம் நடக்கும்"... சாதி சண்டைகள்( மதமல்ல), RSS இன் அட்டூளியங்கள், கலப்பு திருமண கௌரவ படுகொலைகள், காப் பஞ்சாயாத்து அக்கிரமங்கள்.... இலங்கை, பர்மா, இஸ்ரேலில் நடக்கும் மத படுகொலைகளின் போதுமட்டும் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதேன்?
தயவு செய்து உங்கள் பார்வைகளோடு சேர்த்து கொஞ்சம் மனதையும் திறந்து வைத்து உலகை பாருங்கள்!
உலகில் குற்றங்கள்/வன்முறைகள் பல காரணங்களுக்காக நடக்கிறது.
அவைகளில் இரண்டு வகைகளை காண்போம்.
1) முதலாவதாக, யாருடைய நிர்பந்தம் இல்லாமல் மனிதன் செய்யும் குற்றங்கள்:
ஒருவன் மற்றொருவனை ஏமாற்றிவிட்டால் வன்முறையில் ஈடுபட்டு தாக்குவது. மோகத்தை கட்டுபப்டுத்தாமல் தனியாக செல்லும் பெண்களை கற்பழிப்பது. பழிக்கு பழி வாங்குவது. பணம் பதவி இருக்கும் போது, சிறும்பான்மையினரை கொடுமைப்படுத்துவது.
இது போல, அனேக குற்றங்கள் நடைபெறுகின்றன. மேற்கண்ட குற்றங்கள் அனைத்து நாடுகளிலும் நடைப்பெறும், வித்தியாசமே இல்லை. நீங்கள் சொன்னது போல பெரும்பான்மையான எல்லா நாடுகளிலும் சிறும்பான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்தி, அனேக தொல்லைகளுக்கு உட்படுத்துகிறார்கள்.
இப்படிப்பட்ட நாட்டில், இந்த குற்றம் செய்தவர்களின் குற்றங்கள் நிருபிக்கப்பட்டால், நீதிமன்றங்கள் அவர்களுக்கு தண்டனைகள் தருகின்றது, குற்றவாளி தண்டிக்கப்படுவான். சிலர் பணத்தை பயன்படுத்தி தப்பித்தும் கொள்கிறார்கள், இப்படி தப்பிப்பது அவ்வப்போது ஆங்காங்கே நடைப்பெறுகிறது.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
2) இரண்டாவதாக, மதம் சொல்கிறது என்றுச் சொல்லி நடைப்பெறும் குற்றங்கள்/வன்முறைகள்:
இந்த இரண்டாவது வகையைப் பற்றி தான் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமும், இஸ்லாமிய சட்டமாகிய ஷரியாவும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில், சிறும்பான்மையினர் படும் அள்ளல்கள் அதிகம்.
ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். எந்த நாடாக இருந்தாலும், மேற்கண்ட முதலாவது வகை குற்றங்கள் ஒரு புறம் சிறும்பான்மையினரையும், ஏழைகளையும் தாக்கி நாசமாக்கிக்கொண்டு இருக்கும் போது. அதோடு கூட சேர்த்து, இஸ்லாம் மற்றும் ஷரியா மூலமாக இன்னும் அதிக குற்றங்கள் நடைப்பெறும் போது, சிறும்பான்மையினர் இரண்டு வகையான பாதிப்பிற்கு ஆளாகிறார்களே. இதைத் தான் நான் குறிப்பிடுகிறேன்.
இஸ்லாமிய நாட்டில்: ஒருவன் இஸ்லாமை விட்டு வெளியேறினால், அவனுக்கு அதிக ஆபத்துக்கள் காத்துக்கொண்டு இருக்கிறது, மரண தண்டனையும் கிடைக்கும். அவன் சுதந்திரமாக தன் புதிய மார்க்கத்தை அல்லது நாத்தீகனாக மாறியிருந்தால், சுந்ததிரமாக இஸ்லாமை பின்பற்றாமல் இருக்க அவனுக்கு உரிமையில்லை. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரு இஸ்லாமியரல்லாதவன், எதைச் செய்தாலும், எங்கள் நபியை, குர்-ஆனை அவமானப்படுத்திவிட்டான் என்றுச் சொல்லி, வழக்கு தொடர்ந்து அவனுடைய வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள்.
இப்போது சொல்லுங்கள், ஒரு ஹிந்து அல்லது கிறிஸ்தவன் முஸ்லிமாக மாறி அவன் தன் புதிய மதத்தை (இஸ்லாமை) சுதந்திரமாக பின்பற்றுவது போல, ஒரு முஸ்லிம் கிறிஸ்தவனாக மாறி வாழமுடியுமா? இது பாகிஸ்தானிலும், சௌதி அரேபியாவிலும், இன்னும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் சாத்தியமா?
மற்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு நாம் தண்டனை வாங்கித் தரமுடியும். ஆனால், ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமை விட்டு வெளியேறினான் என்றுச் சொல்லி அவனுக்கு தண்டனை கொடுத்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு/ நீதிபதிகளுக்கு தண்டனை வாங்கித் தரமுடியுமா? நிச்சயமாக முடியாது.
கொஞ்சம் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் வன்முறைகளை கவனித்துப் பாருங்கள்.
கருத்துரையிடுக