பர்னபா சுவிசேஷத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்குசொடுக்கவும்.
இந்த கட்டுரையில் மோசடி முஸ்லிம் "பர்னபா" செய்த ஒரு சரித்திர பிழையைப் பார்ப்போம்.
திருமதி இந்திரா காந்தி அவர்கள் பாரத பிரதமராக இருந்தபோது, தமிழ் நாட்டில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தார் என்று ஒரு எழுத்தாளர் எழுதினால், அவரை எந்த மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று நாம் நினைப்போம் அல்லவா? இப்படிப்பட்டவர் தான் பர்னபா சுவிசேஷம் என்ற நூலை எழுதிய மோசடி முஸ்லிம்.
பர்னபா சுவிசேஷம், அத்தியாயம் 3ல் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:
There reigned at that time in Judaea Herod, by decree of Caesar Augustus, and Pilate was governor in the priesthood of Annas and Caiaphas. Wherefore, by decree of Augustus, all the world was enrolled; wherefore each one went to his own country, and they presented themselves by their own tribes to be enrolled.
இந்த பத்தியில் அவர் என்ன சொல்கிறார் என்றால், ஒரே காலக்கட்டத்தில் ஏரோது என்பவரும், பிலாத்து என்பவரும், இஸ்ரேல் நாட்டில் இயேசுவின் பிறப்பின் சமயத்தில் ஆட்சி செய்ததாகக் கூறுகிறார்.
இவ்வரிகளில் ஐந்து நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:
1) சீசர் அகஸ்டஸ் (Caesar Augustus)
2) அரசர் ஏரோது (King Herod)
3) கவர்னர் பிலாத்து (Governor Pilate)
4) பிரதான ஆசாரியர் அன்னா (High Priest Annas)
5) பிரதான ஆசாரியர் காய்பா (High Priest Caiaphas)
இதில் அப்படி என்ன சரித்திர பிழை உள்ளது?
- ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக சீசர் அகஸ்டஸ் கிமு 27 லிருந்து கிபி 14 வரை ஆட்சி செய்தார்.
- ஏரோது ராஜா கிமு 37 லிருந்து கிமு 4/கிபி 1 வரை யூதேயா பகுதிக்கு அரசராக இருந்தார்.
- பிலாத்து கிபி 26 லிருந்து 36 வரை கவர்னராக இருந்தார்.
- காய்பா கிபி 18 லிருந்து 36 வரை பிரதான ஆசாரியராக இருந்தார்.
அகஸ்டஸ் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி புரியும் போது, யூதேயா பகுதியை ஒரு சிற்றரசராக ஏரோது (பெரிய ஏரோது) ஆட்சி புரிந்தார். ஆனால், இவர்களின் காலத்தில் "பிலாத்து" ஆளுநனராக ஆட்சி செய்யவில்லை, மேலும் காய்பா பிரதான ஆசாரியராக இருந்ததில்லை. பிலாத்து கி.பி 26 ல் தான் ஆட்சிக்கு வருகிறார். இவர் கி.பி. 36 வரை ஆட்சியில் இருந்தார். இவரது காலத்தில் தான் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். இதே காலத்தில் தான் காய்பா பிரதான ஆசாரியராக இருக்கிறார். அனேகரின் நன்மைக்காக ஒருவர் மரிப்பது நல்லது என்று யூத தலைவர்களுக்கு அறிவுரை கூறியவர் இந்த காய்பா தான்.
- அகஸ்டஸும், பெரிய ஏரோதும் ஒரே காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.
- பிலாத்தும், காய்பாவும் ஒரே காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.
பிலாத்து ஆளுநராக இருந்த போது, ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக இருந்தவர், அகஸ்டஸ் அல்ல, அவர் சக்கரவர்த்தி திபேரியஸ் ஆவார்.
அன்னா என்பவர் காய்பாவின் மாமனார் ஆவார் (யோவான் 18:13).
அன்னா என்பவருக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள், இவர்களும், இவரது மருமகன் காய்பாவும் எந்தெந்த காலக்கட்டத்தில் பிரதான ஆசாரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலை கீழே காணவும்:
Ananus (or Annas):
Eleazar the son of Ananus (கிபி 16–17) அன்னாவின் மகன்
Caiaphas (18–36) அன்னாவின் மருமகன்
Jonathan the son of Ananus (கிபி 36–37 and 44) அன்னாவின் மகன்
Theophilus ben Ananus (கிபி 37–41) அன்னாவின் மகன்
Matthias ben Ananus (கிபி 43) அன்னாவின் மகன்
Ananus ben Ananus (கிபி 63) அன்னாவின் மகன்
சரித்திர பிழைகள்:
கி.பி. 18லிருந்து பிரதான ஆசாரியராக பதவி வகித்த காய்பாவை எடுத்து, அவர் கிபி 1ம் ஆண்டில் (அல்லது கி.மு 4ல்), பிரதான ஆசாரியராக இருந்தார் என்று பர்னபா சுவிசேஷம் சொல்வது, முதலாவது சரித்திர பிழையாகும்.
இரண்டாவதாக, கி.பி. 26லிருந்து ஆளுநராக பதவி வகித்த பிலாத்துவை எடுத்துக்கொண்டு போய், கிமு 4 அல்லது கிபி 1ல் (இயேசு பிறந்த ஆண்டு) நுழைப்பது இரண்டாவது சரித்திர தவறு.
முடிவுரை:
இதிலிருந்து அறிவது என்னவென்றால், பர்னபா சுவிசேஷம் என்பது ஒரு மோசடி புத்தகம். அதனை இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர் எழுதவில்லை. பர்னபா என்ற ஒரு போலியான பெயரில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு யாரோ ஒருவர் (முஸ்லிம் தான்) எழுதியுள்ளார். அவருக்கு முதல் நூற்றாண்டில் சரித்திரம் தெரியவில்லை. இயேசுவின் பிறப்பு காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் என்று தெரியவில்லை, இயேசுவை சிலுவையில் அறையும் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களை மேலோட்டமாக படித்துவிட்டு, சரித்திரத்தை ஆய்வு செய்யாமல், பொய்யான தகவல்களை மோசடி முஸ்லிம் பர்னபா சுவிசேஷத்தில் எழுதியுள்ளார்.
அடிக்குறிப்புக்கள்:
Augustus (Latin: Imperator Caesar Divi filius Augustus;[nb 1] 23 September 63 BC – 19 August 14 AD) was a Roman statesman and military leader who was the first Emperor of the Roman Empire, controlling Imperial Rome from 27 BC until his death in AD 14
2) en.wikipedia.org/wiki/Herod_the_Great - 37– c. 4 BCE/ 1 CE
Pontius Pilate was the fifth prefect of the Roman province of Judaea, serving under Emperor Tiberius from AD 26 to 36.[1][5] He is best known today for the trial and crucifixion of Jesus.
Joseph Caiaphas, known simply as Caiaphas (Hebrew: יוֹסֵף בַּר קַיָּפָא; Greek: Καϊάφας) in the New Testament, was the Jewish high priest who organized the plot to kill Jesus. Caiaphas was involved in the Sanhedrin trial of Jesus.[1] The primary sources for Caiaphas' life are the New Testament and the writings of Josephus. Outside of his interactions with Jesus, little else is known about his tenure as high priest.