சகோதரி சபரிமாலா அவர்களுக்கு எழுதிய முந்தைய கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட தொடுப்புக்களைச் சொடுக்கவும்:
பெண் விடுதலைக்காக உழைக்கும் சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்:
இந்த கட்டுரையில் மூன்று குர்ஆன் வசனங்கள் பற்றி சகோதரியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். இவைகள் பற்றி சகோதரி அவர்கள் தம்முடைய "தினம் ஒரு நிமிடம் திருக்குர்ஆனுடன்" என்ற தலைப்பில் எடுத்து பேசி, விளக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
தினம் ஒரு நிமிடம் திருக்குர்ஆனுடன் - குர்ஆன் 33:28-29 & 66:5 - பாகம் 4
குர்ஆனும் பெண்களும் 4: முஸ்லிம் அன்னையர்களை விவாகரத்து பற்றிச் சொல்லி மிரட்டிய அல்லாஹ்
முதலாவதாக, மூன்று குர்ஆன் வசனங்களை படிப்போம்:
குர்ஆன் 33:28-29 & 66:5
குர்ஆன் 33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
குர்ஆன் 33:29. "ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்" என்றும் கூறுவீராக!
குர்ஆன் 66:5 அவர் உங்களை ´தலாக்´ சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இவ்வசனங்களில் இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
முஹம்மதுவிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 9 மனைவிகள் உயிரோடு இருந்தனர். முஸ்லிம் ஆண்களுக்கு நான்கு மனைவிகளை அல்லாஹ் சட்டமாக்கியிருந்தான், ஆனால் முஹம்மதுவிற்கோ அந்த சட்டத்தை அல்லாஹ் சட்டை செய்யவில்லை, எத்தனை பெண்களையாவது அவர் திருமணம் செய்துக்கொள்ளலாம். இது இக்கட்டுரையின் கருப்பொருள் இல்லை.
ஒரு குறிப்பிட நேரத்தில் முஹம்மதுவைச் சுற்றி அவரது இரண்டு அல்லது மூன்று மனைவிகள் உட்கார்ந்துக்கொண்டு, வீட்டுச் செலவிற்கு கொஞ்சம் அதிக பணம் கொடுக்கும் படி கேட்டார்கள். தன்னால் கொடுக்கமுடியாது என்று முஹம்மது மறுத்துள்ளார், இதனால் கோபம் கொண்டு அல்லாஹ், குர்ஆன் 33:28,29ஐ இறக்கினான். வீட்டு செலவிற்கு அதிக பணம் வேண்டுமா? அப்படியானால், அதோடு கூட விவாகரத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மிரட்டுகின்றான் அல்லாஹ். இதைச் சுற்றிய ஹதீஸ்கள் மற்றும் இதர பின்னணியோடு கீழ்கண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது, மேலதிக விவரங்களுக்கு அதனை படிக்கவும்:
இரண்டாவது நிகழ்ச்சி, இன்னும் கேவலமானது, ஒரு குறிப்பிட்ட இரகசியத்தை மனைவியிடம் சொல்லி, வேறு மனைவிகளிடம் சொல்லாதே என்று முஹம்மது கூறினாராம். ஆனால், அப்பெண் இன்னொரு மனைவிக்கு சொல்லிவிட்டார்கள், இதனால் அவமானம் அடைந்த முஹம்மதுவை தேற்றுவதற்கு அல்லாஹ் இன்னொரு வசனத்தை இறக்கினான். அது தான் குர்ஆன் 66:5.
முஹம்மதுவின் மனைவிகளே, இப்படி இரகசியத்தை வெளியே சொல்லியதால், உங்களுக்கு தலாக் விடச்சொல்லி, முஹம்மதுவிற்கு ஆலோசனைச் சொல்லி, அவருக்கு இன்னும் கன்னிப்பெண்களையும், ஏற்கனவே திருமணமான பெண்களையும் நான் திருமணம் செய்துக் கொடுப்பேன் என்று அல்லாஹ் 'முஸ்லிம்களின் அனனையர்களை மிரட்டுகின்றார்'. இந்த கொடுமையை வேறு எங்கேயாவது நம்மால் பார்க்கமுடியுமா? ஒரு மனைவியின் அடிமைப்பெண்ணோடு, முஹம்மது விபச்சாரம் புரிந்துவிட்டார், இதனை அந்த மனைவி பார்த்துவிட்டார். என் அடிமைப்பெண்ணோடு, என் மஞ்சத்தில் நீ உள்ளாசமாக இருக்கிறாயா? என்று அந்த மனைவி கோபம் கொள்ள, இனி இப்படி செய்யமாட்டேன் என்று முஹம்மது சத்தியம் செய்தார், யாரிடமும் சொல்லாதே என்றும் சொன்னார். ஆனால், அந்த மனைவி முஹம்மதுவின் இன்னொரு மனைவியிடம் கூறிவிட்டார். இதற்காக குர்ஆன் வசனம் இறங்கியது, வெட்கக்கேடு.
இதன் பின்னணியையும், குர்ஆன் விளக்கவுரைகளையும் சேர்த்து, அந்த பரம இரகசியம் என்னவென்பதையும் கீழ்கண்ட கட்டுரையில் விளக்கிவுள்ளேன்.
சகோதரி சபரிமாலா அவர்களிடம் குர்ஆன் 33:28-29 & 66:5 பற்றி சில கேள்விகள்:
1) முஸ்லிம்களின் அன்னையர்களிடம் 'உங்களை நபி விவாகரத்து செய்துவிடுவார்" என்று அல்லாஹ் மிரட்டுவது நியாயமா? அதுவும் நிரந்தரமாக குர்ஆனில் வசனமாக கொடுத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?
2) குடும்ப செலவிற்கு கொஞ்சம் அதிகமாக பணம் தாருங்கள் என்று ஒரு குடும்ப தலைவி தன் கணவரிடம் கேட்பது 'விவாகரத்து செய்துவிடுவேன்' என்று மிரட்டும் அளவிற்கு அவ்வளவு பெரிய பாவமா? (குர்ஆன் 33:28-29)
3) குர்ஆன் 66:5ன் படி, கணவன் செய்த ஒரு தில்லுமுல்லு பற்றி மற்ற மனைவியிடம் கூறியது, விவாகரத்து மிரட்டல் விடும் அளவிற்கு அல்லாஹ் தன் தரம்தாழ்த்தி இறங்கியிருப்பது, அவனது இறைத்தன்மைக்கே இழுக்காகும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
4) சகோதரி சபரிமாலா அவர்களே! பெண்களின் சிறிய தவறுகளுக்கு அல்லாஹ் விவாகரத்து மிரட்டல் கொடுப்பது, ஆண்களுக்கு ஒரு அதிகபடியான உரிமையை கொடுப்பது போன்று ஆகிவிடாதா? இதனை சில ஆண்கள் பெண்கள் மீது தவறான அதிகாரம் செலுத்தும்படி வாய்ப்பு கொடுப்பது போன்று ஆகிவிட்டதல்லவா? இப்படியெல்லாம் முஸ்லிம் ஆண்கள் செய்யமாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக சொல்லமுடியுமா?
5) முஹம்மது செய்த விபச்சார பாவத்துக்கு அவரை தண்டிக்காமல், அல்லது கண்டிக்காமல் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ் அவருக்கு வக்காளத்து வாங்க குர்ஆன் வசனங்களை இறக்கி முஸ்லிம்களின் அன்னையர்களை விவாகரத்து செய்துவிடுவார்? அவருக்கு நான் இன்னும் அதிகமாக பெண்களை கொடுப்பேன் என்றுச் சொல்ல அல்லாஹ்விற்கு வெட்கமாக தோன்றவில்லையா?
6) உங்களுக்கு பதிலாக வேறு பெண்களை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வேன் என்று நேரடியாகச் சொல்வதை விட்டுவிட்டு, அதை இன்னும் விரிவுபடுத்தி, "கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர்" போன்றவர்களை அவருக்கு கொடுப்பேன் என்று பெண்களை வித்தியாசப்படுத்தி அல்லாஹ் சொல்வதைப் பார்த்தால், இது இறைவாக்கா? அல்லது மனிதவாக்கா என்ற சந்தேகம் அல்லவா வருகிறது?
7) நீங்கள் பல குர்ஆன் வசனங்களை இதுவரை விளக்கி, அவைகளில் உள்ள நல்ல ஆழமான விடயங்களை சொல்லியுள்ளீர்கள், மிக்க நன்றி, அதே போன்று குர்ஆன் 33:28-29 & 66:5 வசனங்களையும் மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, இஸ்லாமிய விரிவுரைகளை படித்து, சரித்திர பின்னணிகளை படித்து, 'தினம் ஒருநிமிடம் திருக்குர்ஆனுடன்' என்ற தலைப்பில் பேசுவீர்களா?
சகோதரி சபரிமாலா அவர்கள், மேற்கண்ட கேள்விகளை படித்து, இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட குர்ஆன் 33:28-29 & 66:5 வசனங்களை விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த கட்டுரையில் இன்னொரு குர்ஆன் வசனத்தில் சந்திப்போம்.
தேதி: 3rd Feb 2022
சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/sabarimala/sabarimala_quran_33_28.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக