(சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்)
சகோதரி சபரிமாலா அவர்களுக்காக எழுதிய முந்தைய நான்கு கட்டுரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் படிக்கலாம்.
இந்த தற்போதைய கட்டுரையில், குர்ஆன் 4:128ஐப் பற்றி சகோதரி அவர்களிடம் விளக்கம் கேட்போம் அல்லது அவரது கருத்தைக் கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
குர்ஆன் 4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
குர்ஆன் 4:128. எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் தன்னை (கடுமையாக இடையூறளிப்பான்) என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை.. . .
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
குர்ஆன் 4:128. ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை;. . .
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
குர்ஆன் 4:128. இன்னும் ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை. . ..
சகோதரி அவர்கள் குர்ஆனையும், முஹம்மதுவையும் நன்கு அறிந்துக்கொண்டு பேசுவது போன்று வீடியோக்களில் பேசி வருகிறார்கள். ஆனால், உண்மையில் சகோதரிக்கு 'குர்ஆனையும் முஹம்மதுவையும் நன்கு தெரியுமா'? அல்லது ஆழம் தெரியாமல் காலைவிட்டுக்கொண்டு இருக்கிறாரா என்பது தான் என் சந்தேகம்.
சரி வாருங்கள், என் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அவரிடமே கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
அழகிய முன்மாதிரி முஹம்மது உண்மையில் "ஒரு மாதிரி"
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் இஸ்லாமை ஆழமாக ஆய்வு செய்து கற்றுக்கொண்டு இருந்த காலத்தில், முஹம்மதுவின் "முன் மாதிரி" வாழ்க்கையைப் பார்த்து "ஒரு மாதிரி" ஆகிவிட்டேன். என் தாய்க்கு வயது இப்போது 80ஐ தாண்டியிருக்கும், இன்றும் பற்கள் கொட்டிவிட்ட நிலையிலும், பொக்கை வாய் வைத்துக்கொண்டு எங்களோடு பேசும் போதும், என் கண்களுக்கு என் தாய் மிகவும் அன்பாகவும், அழகாகவும் தான் தெரிகிறார்கள். என் குடும்பத்தில் நாங்கள் ஆறுபேர், நாங்கள் சகோதர சகோதரிகளாக பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் போது, அவர் செய்த தியாகம் மற்றும் இன்னபல நிகழ்ச்சிகளைச் சொல்லி நாங்கள் பெருமைக்கொள்வோம்.
இப்படிப்பட்ட தாயை, என் தகப்பன் (அவர் இன்று இல்லை, அவர் காலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது) "நீ அழகாக இல்லை, உனக்கு வயதாகிவிட்டது, உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்" என்று சொல்லியிருந்தால், அவரது பிள்ளைகளாகிய நாங்கள் ஆறு பேர் என்ன செய்திருப்போம் என்று 'வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்'. இப்படி ஒரு மனிதன் தன் மனைவிக்கு வயது கூடிவிட்டதென்று விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அந்த மனிதனை பின்பற்ற நமக்கு மனது வருமா? அவனை 'நல்ல மனிதன்' என்று சொல்வோமா? சில வாசகர்கள் 'அவனை மனிதன்' என்ற நிலையிலேயே எங்களால் பார்க்கமுடியாது! இதிலே 'நல்ல மனிதன்' என்ற கேள்விக்கே இடமில்லை என்று மனதில் நினைப்பது என்னால் உணரமுடிகின்றது.
சகோதரி சபரிமாலா அவர்களே! கட்டுரையின் கருப்பொருளுக்கு போவதற்கு முன்பாக, ஒரு கேள்வி: மேற்கண்ட கேள்விக்கு உங்கள் பதில் என்ன? உங்கள் தாயாரை வயது சென்றுவிட்டதென்றுச் சொல்லி, உங்கள் தகப்பனார், விவாகரத்து செய்ய நினைத்துயிருந்திருந்தால் ஒரு பெண்ணாக உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
முஹம்மது ஒரு முள் மாதிரி
முஹம்மது தம்முடைய 2வது மனைவி ஸவ்தா என்பவருக்கு வயது கூடிவிட்டதென்றுச் சொல்லி, அவரை விவாகரத்து செய்துவிட முடிவு செய்தார். இதனை எதிர்ப்பார்க்காத ஸவ்தா தம்முடைய ஒரு முக்கியமான உரிமையை விட்டுக்கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை ஒட்டியே குர்ஆனில் 4:128ம் வசனம் வெளிப்பட்டதென்று முஸ்லிம் விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். இதனை இஸ்லாமிய நூல்களின், அறிஞர்களின் சான்றுகளோடு கீழ்கண்ட கட்டுரைகளில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் விளக்கியுள்ளேன் (யாருக்காவது சந்தேகமிருந்தால், எனக்கு தெரிவிக்கலாம்).
சகோதரி சபரிமாலா அவர்கள், கீழ்கண்ட 2 கட்டுரைகளை நிச்சயம் படிக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.
- மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது - ஸவ்தா பின்த் ஜமா
- தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்
குர்ஆன் 4:128ஐ பற்றியும், முஹம்மதுவின் முன்மாதிரி வாழ்க்கைப் பற்றியும் சகோதரி சபரிமாலா அவர்களிடம் சில கேள்விகள்:
1) இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு நான்கு மனைவிகள் வரை அனுமதி கொடுத்திருந்தாலும், முஹம்மது மட்டும் 9க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்தார், இன்னும் வைப்பாட்டிகளும் (அடிமைப்பெண்களை) வைத்திருந்தார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன சகோதரி அவர்களே!
2) முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் மரித்த பிறகு, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஸவ்தா என்ற பெண்மணி வருகிறார்கள், குடும்பமும் நன்றாக நடந்துக்கொண்டு இருந்தது. ஆனால் முஹம்மது இன்னும் சில மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார்கள். இது ஒரு முன் மாதிரி தலைவருக்கு அதுவும் ஆன்மீக தலைவருக்கு அழகாக தெரிகின்றதா? உங்கள் கருத்தென்ன சகோதரியே!
3) சரி போகட்டும்! அவருக்கு தெம்பு இருக்கிறது, அவர் எத்தனை மனைவிகளை திருமணம் செய்தால் நமக்கென்ன!? ஆனால், தனக்கு கஷ்டம் இருக்கும் போது, மனைவியாக வந்து தியாகம் புரிந்த அந்த பெண்மணி "அழகாக இல்லை, அவருக்கு வயதாகிவிட்டதென்றுச் சொல்லி, அவரை விவாகரத்து செய்துவிடுவேன்" என்று எண்ணுவது, "இஸ்லாமிய நபிக்கு, அதாவது அழகிய முன்மாதிரிக்கு அழகாக தெரிகின்றதா"? சகோதரி, இதற்கு உங்கள் பதில் என்ன?
4) இப்படித்தான் 'உங்கள் அல்லாஹ்வும், அழகிய முன்மாதிரியும்' நடந்துக்கொள்வார்களா? இதைவிட, "இந்து சாமிகள் எவ்வளவோ மேல் போல தெரிகின்றதே!". முஹம்மதுவை விட முருகனே மேல் போல தெரிகின்றதே! (இந்த ஒப்பீட்டுக்காக மன்னிக்கவும், இருந்தாலும், உண்மையைச் சொல்லத்தானே வேண்டும், ஏனென்றால், அழகிய முன் மாதிரியாயிற்றே உங்கள் நபி, அதற்கு தகுதி அவருக்கு இருக்கிறதா? என்று கேள்வி கேட்க பெண்களாகிய உங்களுக்கு உரிமையுள்ளதே! இதனை அங்கீகரிக்கிறீர்களா?)
5) பாவம் அந்தப்பெண் ஸவ்தா, ஏற்கனவே முதல் கணவனை இழந்துவிட்டு தவித்த போது, வாழ்க்கை கொடுத்த நபிக்கு நன்றியுள்ளவர்களாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டார். மரிக்கும் போதாவது, நிம்மதியாக வாழலாம் என்று பார்த்தால், இன்னொரு விவாகரத்தா! (ஸவ்தாவிற்கு 55 வயதாம், முஹம்மதுவிற்கு 50 வயதாம் முஸ்லிம்கள் சொல்கிறார்கள்).
6) இதனால், மனம் நொந்துப்போன ஸவ்தா தன்னோடு முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஆயிஷாவிற்கு கொடுத்துவிட்டார் (9 வயது சிறுமி ஆயிஷாவை முஹம்மது கட்டாயத் திருமணம் செய்திருந்தார்). என் கணவனுக்கு இளம் பெண்கள் தேவைப்படுகிறார்கள், இன்னும் சிறுமி ஆயிஷா என்றால் கொள்ளைப்பிரியம் அவருக்கு. என்னைப்போன்ற 55 வயது பெண் தேவைப்படுமா! போய்த்தொலையட்டும்! என்று தம் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டார். ஸவ்தா முஹம்மதுவுக்கு எது தேவை என்பதை நன்கு அறிந்துக்கொண்டார், எதை விட்டுக்கொடுத்தால், இந்த மனுஷனுக்குப் பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும்! எனவே, சரியான ஒரு காரியத்தை செய்தார். இந்த நிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுவது சரியா சகோதரியே! ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும் என்றுச் சொல்வார்கள், அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு முஸ்லிமைப்போல பேசக்கூடாது, ஒரு பெண்ணைப்போல பேசவேண்டும். உங்கள் கருத்தென்ன சொல்லுங்கள்?
7) சபாஷ், இது சரியான தீர்ப்பு என்றுச் சொல்லி, ஒரு குர்ஆன் வசனத்தை கூட அல்லாஹ் இறக்கிவிட்டான், முஹம்மதுவும் ஸவ்தாவின் இந்த முடிவை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த கண்றாவியை என்னவென்றுச் சொல்வது? உங்களுக்கு இது எப்படி தெரிகின்றது சகோதரியே! இது முஹம்மதுவின் 'அழகிய முன்மாதிரியாகத் தெரிகின்றதா'? எனக்கோ, முஹம்மதுவின் இந்த அழகிய முன்மாதிரியைப் பார்த்தால், வாந்தி தான் வருகின்றது. (நான் மட்டும அன்று இருந்திருந்து, ஸவ்தாவிற்கு அண்ணனாகவோ, தந்தையாகவோ இருந்திருந்தால்... சரி நடந்து முடிந்துவிட்டதைப் பற்றி பேசி என்ன பலன், கடந்த கால ஸவ்தாவைப் பற்றி பேசி என்ன பலன், இக்கால ஸவ்தாக்கள் பற்றிப் பேசலாம்).
8) குர்ஆனில் 4:128ம் வசனத்தை இறக்கி, எதை அல்லாஹ் சாதித்தான்? அன்னை ஸவ்தாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரமான மற்றும் கேவலமான நிகழ்ச்சியை ஆதரித்து வசனம் இறக்கியதால் யாருக்கு லாபம்? ஸவ்தா போன்ற பெண்களுகா? அல்லது முஹம்மது போன்ற ஆண்களுக்கா?
9) குர்ஆன் 4:128 யாருக்கு சாதகமாக இறக்கப்பட்டுள்ளது? யாருக்கு சமரசம் செய்ய? "ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால்" யாருக்கு அறிவு புகட்டவேண்டும்? அந்த காமக்கொடூரனுக்கா? அல்லது தன்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டால், என்ன செய்வது என்று பயத்தோடு இருக்கும் அந்த பெண்ணுக்கா?
சகோதரி சபரிமாலா அவர்களே, பெண்களின் விடுதலைக்காக உழைக்கும் சகோதரியே! முஸ்லிம்களின் அன்னையாகிய ஸவ்தா அவர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை, இன்று ஒரு தாய்க்கு ஏற்பட்டு, உங்களிடம் வந்து முறையிட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? "ஓ, என்னே ஒரு அழகிய முன் மாதிரி என்று அந்த ஆணை மெச்சிக்கொண்டு, அவரை புகழ்ந்து வீடியோ போடுவீர்களா? அல்லது அந்த ஆணை விமர்சித்து, அந்த தாய்க்கு ஏற்பட்ட துயரத்திற்கு எதிராக, பெண்ணடிமைக்கு எதிராக போராடுவீர்களா"?
ஸவ்தாவிற்கு முஹம்மது ஒரு முள் மாதிரி:
உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், ஸவ்தா அவர்களுக்கு முஹம்மது ஒரு முன் மாதிரியாக அல்ல, ஒரு முள் மாதிரியாக தெரிந்திருப்பார். சிலர் கேட்கலாம், "முஹம்மது ஒரு முள் மாதிரியாக தெரிந்திருந்தால், அவரை விட்டுப்போகவேண்டியது தானே!'. இது இன்று மற்ற இன மக்களுக்குவேண்டுமானால் ஒரு நியாயமான, சரியான தெரிவாக இருக்கும், ஆனால், அன்று அதாவது 7வது நூற்றாண்டில், ஒரு முஸ்லிம் சமுதாயத்தில், ஒரு பெண்ணின் நிலை, இன்றுள்ள பெண்களின் நிலை போன்று அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமிய பெண்களுக்கு படிப்பு மறுக்கப்படுகின்றது, உலக ஞானம் மறுக்கப்படுகின்றது, வீட்டைவிட்டு வெளியே சென்று உலகை புரிந்துக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகின்றது? ஒரு முஸ்லிம் தாய் தனக்கு, 80வயது இருந்தாலும், 8வயது பேரனுடைய அனுமதிப்பெற்றுத் தான், அவனின் துணையோடுத் தான் வெளியே செல்லவேண்டும் என்ற நிலையிருந்தால், பெண்கள் எப்படி முன்னேறமுடியும்?
குர்ஆன் 4:128ல் அந்த ஆணுக்குத் தான் அல்லாஹ் அறிவுரை சொல்லியிருக்கவேண்டுமே ஒழிய, 'மனைவி தன் உரிமைகளை விட்டுக்கொடுத்து சமரசம்' செய்துக்கொண்டால் நல்லது என்றுச் சொல்வது, மிகவும் கேவலமாக உள்ளது. ஏன்? ஒரு ஆண் தன் 'உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாதா?', 'ஆண்களுக்கு ஒரு போதும் வயது கூடுவதில்லையா?'. முஹம்மது என்றும் பதினாறு என்றுச் சொல்வது போன்று இளமையாக எப்போதும் இருந்தாரா? ஒரு முஸ்லிம் பெண் தன் கணவன் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறான், அவனுக்கு வயது கூடிவிட்டது என்ற காரணத்தைக் காட்டி விவாகரத்து கோரமுடியுமா? ஆயிஷா அவர்கள் தனக்கு ஆறு வயது இருக்கும் போது, தன்னுடைய அனுமதியின்றி 50வயதுடைய முஹம்மதுவிற்கு திருமணம் செய்துகொடுத்தார்களே!, தனக்கு ஒன்பது வயதுள்ள போது, அந்த சிறுமியோடு வெட்கமில்லாமல், 53 வயதுடைய முஹம்மது வீடுகூடினாரே! இதைவிட ஒரு கொடுமை ஒரு அழகிய முன்மாதிரி எங்கேயாவது ஆன்மீக தலைவர்களில் காணமுடியுமா? அப்படி கண்டால், அவரை ஒரு அழகிய முன்மாதிரியாக ஏற்போமா? ஆயிஷா அவர்கள், நான் ஒரு வாலிபப்பெண், இவர் ஒரு வயசான கட்டை, இவர் எனக்கு வேண்டாம், இவர் அழகாக இல்லை, எனக்கு ஒரு வாலிபனை திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றுச் சொல்லி கேட்டுயிருந்தால் அதில் தவறு இருந்திருக்குமா?
(இன்னொரு கசப்பான உண்மையென்னவென்றால், முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்யும் போது, அவருக்கு வயது 6, முஹம்மதுவிற்கு வயது 50. ஆயிஷா அவர்கள் 18 வயது இருக்கும் போது, முஹம்மது மரித்துவிட்டார். அதன் பிறகு, முஹம்மதுவின் மனைவியாக இருந்ததற்காக, தம் வாழ்நாள் முழுவதும் அடுத்த 49 ஆண்டுகள் (67வது வயதுவரை) யாரையும் திருமணம் செய்ய அனுமதி இல்லாமல் இருந்தபடியினால், அப்படியே வாழ்ந்தார்கள்.)
சகோதரி சபரிமாலா, பிளீஸ் ஒரு முறை இஸ்லாமை படியுங்கள், குர்ஆனை படியுங்கள், அதன் விளக்கவுரைகளை படியுங்கள், முஹம்மதுவின் உண்மை முகத்தை அறிந்துக்கொள்ளுங்கள். உங்களின் கருத்துப்படி, முஹம்மது செய்தது அழகிய முன்மாதிரியா? அல்லது ஒரு மாதிரியா?
இன்னொரு குர்ஆன் வசனத்தோடும், முஹம்மதுவின் முன்மாதிரி செயல்களோடும் சந்திப்போம், அதுவரை சிறிது சிந்தியுங்கள் சகோதரி...
சகோதரியே! சிந்திக்க வேண்டாமா:
குர்ஆன் 4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
இதில் எந்த பிரிவில் நீங்கள் இருக்கிறீர்கள் சகோதரியே!:
குர்ஆன் 11:24. இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
தேதி: 19th Mar 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக