ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 1 நவம்பர், 2024

மக்காவில் & மதினாவில் முஹம்மது - முக்கிய நிகழ்வுகள்

1) மக்காவில் முஹம்மது ( Muhammad at Mecca)

கி.பி. 610 - கி.பி.  622

ஒரு கிறிஸ்தவ‌ நண்பர் என்னிடம், இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது அவர்கள் பற்றி சுருக்கமாக சொல்லமுடியுமா? என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசி சுருக்கமாக கீழ்கண்ட விவரங்களைச் சொன்னேன்.  முஹம்மது தம்மை தீர்க்கதரிசியாக பிரகடனப்படுத்திய பிறகு மக்காவிலும், மதினாவிலும் வாழ்ந்தார். அதன் சுருக்கத்தை ஆண்டு வாரியாக கொடுத்துள்ளேன்.

முஹம்மதுவின் பிறப்பு:

இயேசுக் கிறிஸ்துவின் முதல் வருகைக்கு பிற்பாடு, 500 ஆண்டுகளுக்கு கழித்து, அரேபியாவில் உள்ள மக்கா என்ற நகரில் கி.பி. 570ம் ஆண்டு முஹம்மது என்பவர் பிறந்தார். இவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்தார், பிறந்த சில ஆண்டுகளில் தாயையும் இழந்தார். முதலாவதாக தம்முடைய பாட்டனாரிடமும், அதன் பிறகு தம் பெரியப்பாவிடமும் இவர் வளர்க்கப்பட்டார். இவருக்கு படிப்பு இல்லை, ஆனால் வியாபாரத்திறமை இருந்தது. பலமுறை தம்முடைய ஊர் மக்களோடும், பெரியப்பாவோடும் சிரியாவிற்கு வியாபார பயணங்களை மேற்கொண்டார். இந்த பயணங்களின் போது யூத கிறிஸ்தவ மார்க்கங்களின் சில விவரங்களை வாய் வழி கதைகளாக கற்றுகொண்டார். 

முஹம்மதுவின் திருமணம்:

தன்னுடைய 25ம் வயதில் மக்காவில் பெரும் சீமாட்டியாக இருந்த கதிஜா என்ற பெண்ணிடம் வேலைக்குச் சேர்ந்தார். இவருடைய வியாபாரத் திறமையை மெச்சிக்கொண்ட கதிஜா, இவரையே  திருமணம் செய்ய விரும்பினார், முஹம்மதுவும் ஆமோதித்தார். இந்த கதிஜா என்பவர் ஏற்கனவே திருமணமாகி, கணவனை இழந்த விதவையாக இருந்தார். இந்த திருமணத்தின் மூலமாக  முஹம்மதுவின் வாழ்வில் ஒரு பெரிய மறுமலர்ச்சி வந்தது என்றுச் சொல்லலாம். அதாவது  முஹம்மதுவிற்கும் கதிஜாவிற்கும் திருமணமான போது முஹம்மதுவிற்கு 25 வயதும், கதிஜாவிற்கு 40 வயதுமாகும். இந்த திருமணம் முஹம்மதுவை ஏழ்மையிலிருந்தும், தனிமையிலிருந்தும் விடுவித்தது. அடுத்த பதினைந்தாண்டுகள் இவ்விருவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடர்ந்தது, பிள்ளைச் செல்வங்களும் பிறந்தார்கள். 

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு:

நல்ல செல்வசெழிப்பான வாழ்க்கை, அழகான பிள்ளைச் செல்வங்கள் என்று நிம்மதியாக முஹம்மதுவின் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் முஹம்மது திடீரென்று ஆன்மீகத்தில் அதாவது தனிமையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். மக்காவின் காபா என்ற கோயிலில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டு இருந்தாலும், ஏதோ ஒரு வெற்றிடம் முஹம்மதுவிடம் காணப்பட்டது. அடிக்கடி மக்காவிற்கு அருகில் உள்ள ஹிரா என்ற குகையில் தனிமையில் நேரத்தை செலவிட ஆரம்பித்தார் முஹம்மது. தியானம் செய்யச் செல்கிறேன் என்றுச் சொல்லி,  தேவையான உணவை காட்டிக்கொண்டு சில நாட்கள் வீட்டை விட்டு அந்த குகையில் சென்று தியானத்தில் அமர்ந்திருப்பார்.

தீர்க்கதரிசியாக சுயபிரகடணம்:

இப்படி பல மாதங்கள் கடந்தன. ஒரு நாள் திடீரென்று ஒரு நபர் தன் முன் ஹிரா குகையில் தோன்றினார் என்றும், தம்மிடம் “ஓது” என்றுச் சொன்னார் என்றும் முஹம்மது கூறினார். எனக்கு ஓதத்தெரியாது என்று முஹம்மது சொன்னாலும், அவரை அந்த நபர் இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு, “ஓது,” என்றுச் சொல்லி பல வார்த்தைகளை கூறினார். இப்படி மூன்று முறை நடந்த பிறகு, முஹம்மது பயந்து வீட்டிற்கு வேகமாய் ஓடி வந்துவிட்டார். என்னை துப்பட்டியால் போர்த்திவிடு எனக்கு பயமாக இருக்கிறது என்று மனைவியிடம் கூறினார். தான் ஒரு தீய சக்தியை கண்டதாக அவர் பயப்பட்டார். 

மனைவி கதிஜா முஹம்மதுவை ஆறுதல்படுத்தி, தன்னுடைய உறவினரில் வராகா என்பவரிடம் முஹம்மதுவை கொண்டுச் சென்றார். இந்த வராகா என்பவர் வயது முதிர்ந்தவராக இருந்தார், மேலும் அவர் கிறிஸ்தவத்தை தழுவியவராக இருந்தார். நடந்ததை அறிந்துக்கொண்ட வராகா, ”நீர் ஒரு தீர்க்கதரிசி ஆவீர், உம்மை அல்லாஹ் தெரிந்தெடுத்துள்ளான்” என்றுச் சொல்லியுள்ளார். 

சில நாட்களுக்கு மறுபடியும் அந்த மர்ம நபர் காணப்படாததை உணர்ந்த முஹம்மது அடிக்கடி தற்கொலை செய்துக்கொள்ள முயன்றார். அவர் மலை மீது ஏறி தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று முயன்ற போது, ஒரு சத்தம் அவரிடம் ‘நான் காபிரியேல் தூதன், நீ அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாவாய்” என்று சொன்னது. இதன் பிறகு தான் தன்னை சந்தித்த அந்த மர்ம நபர் காபிரியேல் தூதன் என்றும், தான் அல்லாஹ்வின் நபி (தீர்க்கதரிசி) என்றும் முஹம்மது கூறிக்கொண்டு மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இது தான் இஸ்லாமின் ஆரம்பப்புள்ளி.

முஹம்மதுவும் அல்லாஹ்வும்:

அந்த காலத்தில் மக்கா மற்றும் அரேபியா பகுதியில் வாழ்ந்த மக்கள் பல தெய்வங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள். மக்காவில் இருந்த காபா என்ற கோயிலில் 360க்கும் அதிகமான சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்தார்கள். இந்த தெய்வங்களில் ஒரு தெய்வத்தின் பெயர் தான் “அல்லாஹ்”. மக்களோடு மக்களாக முஹம்மதுவும் காபாவில் இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்தார். முஹம்மதுவிற்கு அந்த குகை அனுபவம் வருவதற்கு முன்பிலிருந்தே தொன்றுதொட்டு மக்கள் அல்லாஹ்வையும், இதர விக்கிரகங்களையும் வணங்கிக்கொண்டு இருந்தார்கள். முஹம்மதுவின் தந்தையின் பெயர் “அப்துல்லாஹ்” என்பதாகும், அதாவது ‘”அப்த்” என்றால் அடிமை என்று பொருள், அப்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் அடிமை என்று பொருள். 

குகை அனுபவத்திற்கு பிறகு, மக்காவில் வணங்கிக்கொண்டு இருந்த பல தெய்வங்களில் ஒரு தெய்வத்தை முஹம்மது பிடித்துக்கொண்டார்.  அதாவது அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள், மற்ற தெய்வங்களை விட்டுவிடுங்கள் என்று முஹம்மது போதனை செய்ய ஆரம்பித்தார். அல்லாஹ் தன்னை மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பியுள்ளான், மற்ற தெய்வங்கள் பொய்யானவை அல்லாஹ் மட்டுமே மெய்யான தெய்வம் என்று போதனை செய்தார் முஹம்மது.

முஹம்மதுவும் இஸ்லாமும்:

முஹம்மது  தான் போதனை செய்துக்கொண்டு இருந்த அந்த புதிய மதத்தை ”இஸ்லாம்” என்று அழைத்தார். இஸ்லாம் என்றால் “சமர்ப்பிப்பது – submit” என்று பொருள், அதாவது எந்த மனிதன் தன்னை அல்லாஹ்விற்கு முழுவதுமாக தன்னை சமர்ப்பணம் செய்கின்றானோ, அவன் இஸ்லாமை பின்பற்றுகிறான் என்று அர்த்தம். 

இதுமட்டுமல்ல, அல்லாஹ்வைத் தவிர உலகில் வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது இந்த அல்லாஹ்வின் தூதர் (தீர்க்கதரிசி) என்றும் நம்புபவனுக்கு “முஸ்லிம்” என்று பெயர்.

முஹம்மதுவும் குர்-ஆனும்:

முஹம்மது தனக்கு அடிக்கடி காபிரியேல் தூதன் காணப்பட்டு, சில வசனங்களை ஓதிக்காட்டுகின்றார் என்றுச் சொன்னார். அவ்வசனங்களை முஹம்மது மனப்பாடம் செய்துக்கொண்டு, தன் சீடர்களிடம் சொல்லுவார். அச்சீடர்கள் அல்லது ஆரம்ப கால முஸ்லிம்கள் அதனை எழுதி வைத்துக்கொள்வார்கள். 

முஹம்மதுவின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது காபிரியேல் தூதன் வந்து வசனங்களை கொடுத்துவிட்டுச் செல்வதாக முஹம்மது கூறினார். அதாவது, ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி முடிவு எடுக்கவேண்டுமென்றால் அல்லது ஒரு குறிப்பிட்ட கேள்வியின் பதிலுக்காக முஹம்மது காத்திருந்தால், காபிரியேல் தூதன் அவருக்கு காணப்பட்டு அக்கேள்விக்கான பதிலை வசனங்களாக, அச்சூழ்நிலைக்கான முடிவை சொல்லிவிட்டுச் செல்வார். இதற்கு அரபி மொழியில்  ”வஹி” என்றும் தமிழில் “வசனங்களின் வெளிப்பாடு” என்றும் சொல்வார்கள். இப்படி இறக்கப்படும் வசனங்கள் அவருக்கு 23 ஆண்டுகள் கிடைத்தன, அதாவது முஹம்மதுவை முதலாவது ஹிரா குகையில் காபிரியேல் சந்தித்து வசனங்களை கொடுக்க ஆரம்பித்து, அவர் மரிக்கும் வரை (கி.பி. 632ம் ஆண்டு) 23 ஆண்டுகள் தொடர்ந்தது என்று இஸ்லாம் சொல்கிறது. இவ்வசனங்களை அவ்வப்போது இலைகளிலும், மிருகங்களின் தோல்களிலும், எலும்புகளிலும் எழுதி வைத்துக்கொண்டார்கள். முஹம்மது மரித்த பிறகு இவைகள் அனைத்தையும் ஒரு புத்தகமாக தொகுத்தார்கள், அதனையே குர்-ஆன் என்றுச் சொல்வார்கள். இந்த குர்-ஆன் தான் முஸ்லிம்களின் இறைவேதம்.

முஹம்மது கி.பி. 632ம் ஆண்டு தம்முடைய 63ம் ஆண்டு மரிக்கும் போது, குர்-ஆனின் வஹி (வெளிப்பாடு) நின்றுவிட்டது. முஹம்மதுவோடு வஹி ஆரம்பித்து அவரோடு முடிந்துவிட்டது.

இதுவரை கண்ட பின்னணியோடு, இப்போது ஆண்டுவாரியாக முஹம்மதுவின் வாழ்க்கை சுருக்கத்தைக் காண்போம்.

மக்காவில் முஹம்மது (ஆண்டு 1 ‍ கி.பி. 610-622)

  • நபித்துவ ஆண்டு 1,2 & 3

    • ஜிப்ரீல் தூதன் முஹம்மதுவிற்கு குர்‍ஆனின் முதல் வசனத்தை இறக்குகிறார். 

குர்‍ஆன் 96. ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)

96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

  • முஹம்மதுவின் மனைவி கதிஜா முதலாவது இஸ்லாமை ஏற்கிறார்.
  • இரண்டாவதாக, அபூ பக்கர் இஸ்லாமை ஏற்கிறார்.
  • அதன் பிறகு உஸ்மான், ஜுபைர், அப்துர்ரஹ்மான் & தல்ஹா இஸ்லாமை ஏற்கிறார்கள்.
  • மகள் ஃபாத்திமா பிறக்கிறார்.
  • அதன் பிறகு இன்னும் 12 பேர் இஸ்லாமை ஏற்கிறார்கள்.

நபித்துவ ஆண்டு 4

  • வெளிப்படையான பிரச்சாரம் ஆரம்பம்
  • குர்‍ஆன் 15:94. ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!

நபித்துவ ஆண்டு 5

  • மக்காவில் கொடுமை அதிகரிப்பதினால் முஸ்லிம்கள் இடம் பெயர்கிறார்கள்.
  • முதல் அபிசீனியா இடம் பெயர்தல் - 11 ஆண்கள், 4 பெண்கள் (உஸ்மான் & ருகைய்யா - மகள் & மருமகன்)
  • இரண்டாவது அபிசீனியா இடம் பெயர்தல் ‍ - 82 ஆண்கள் 12 பெண்கள்

நபித்துவ ஆண்டு 6

  • ஹம்ஜா மற்றும் உமர் இஸ்லாமை ஏற்கிறார்கள்

நபித்துவ ஆண்டு 7

  • முஸ்லிம்களை புறக்கணிக்கவேண்டும் என்பதாக ஒரு அறிக்கையை குறைஷிகள் வெளியிடுகிறார்கள். 

நபித்துவ ஆண்டு 8 & 9

  • முஸ்லிம்களின் புறக்கணித்தல் தொடர்கிறது.

நபித்துவ ஆண்டு 10

  • முஸ்லிம்களை புறக்கணித்தல் முடிவு பெறுகிறது.
  • அபூ தாலிப் மரிக்கிறார்.
  • கதிஜா மரிக்கிறார்கள் - துக்க ஆண்டு.
  • சௌதாவை திருமணம் செய்கிறார்.
  • மீரஜ் இரவுப்பயணம், 5 தொழுகைகள், புராக்கின் மீது பயணம் ஜெருசலேம், 7 வானங்களுக்கு மேல் பயணம்.

நபித்துவ ஆண்டு 11

  • கஜ்ரஜ் மக்கள் 6 பேர் ஹஜ்ஜின் போது இஸ்லாமை ஏற்கிறார்கள்.

நபித்துவ ஆண்டு 12

  • முதலாவது அகபா உடன்படிக்கை.
  • ஔஜ், கஜ்ரஜ் - 12 பேர் இஸ்லாமை ஏற்கிறார்கள்.
  • மதினாவிற்கு முஸப்பின் உமர் இஸ்லாமை சொல்லித்தர செல்கிறார்.

நபித்துவ ஆண்டு 13

  • இரண்டாவது அகபா உடன்படிக்கை.
  • ஔஜ், கஜ்ரஜ் – 72 ஆண்கள், 2 பெண்கள் இஸ்லாமை ஏற்கிறார்கள்.
  • மதினாவிற்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்கிறார்கள்.

மதினாவில் முஹம்மது (கி.பி. 622 - கி.பி.  632)

இஸ்லாமிய நாட்காட்டி ஹிஜ்ரி 1 (Muhammad at Madina)

ஹிஜ்ரி ஆண்டு 1

  • குறைஷிகள் முஹம்மதுவை கொல்ல முடிவு செய்தனர்.
  • முஹம்மது தம் தோழர் அபூ பக்கர் அவர்களோடு கூட, மக்காவிலிருந்து மதினாவிற்கு உயிர் தப்பிக்கச் சென்றார்.
  • இவரது படுக்கையில் அலீ (மருமகன்) படுத்திருந்து, குறைஷிகளை ஏமாற்றினார்.
  • தவ்ர் என்ற குகையில் 3 நாட்கள் தங்கினர் - சிலந்தி வலை, புறாவின் கூடு அற்புதம்.
  • மதினாவில் முஜாஹிரீன் மற்றும் அன்சார்களுக்கு இடையே ஒற்றுமை உண்டாக்குதல்.
  • அபூ பக்கரின் மகள் ஆயிஷா (9 வயது) முஹம்மது திருமணம் செய்தல்.
  • முஸ்லிம்கள் குறைஷிகளோடு சண்டை போட அல்லாஹ் அனுமதி அளித்தல் (22:39).

ஹிஜ்ரி ஆண்டு 2

  • ஜிஹாத் இஸ்லாமின் ஒரு கட்டளையாகிவிட்டது. ஜிஹாத் சண்டை போடுவது மட்டுமல்ல, அல்லாஹ்விற்காக செய்யும அனைத்தும் ஜிஹாத் தான்.
  • கிப்லா எருசலேமிலிருந்து மக்காவின் காபா பக்கம் மாற்றப்பட்டது.
  • ஈத் அல் பித்ர் - ரமலான் நோம்பும், ஜகாத்தும் இஸ்லாமின் சட்டமாகியது.
  • பத்ரு போர் (17 ரமலான்) முஸ்லிம்களின் வெற்றி (313 முஸ்லிம்கள், 1000 குறைஷிகள்). 70 குறைஷிகள், 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.
  • கைனகா யூத இனம் (Bani Qaynaqaa) நாடு கடத்தப்பட்டார்கள், 15 நாட்கள் முற்றுகையிக்கு பிறகு.
  • பாத்திமா அலி திருமணம், மற்றும் ருகைய்யா  மரணம்.

ஹிஜ்ரி ஆண்டு 3

  • முஹம்மது உமரின் மகள் ஹஃப்ஸாவை (19 வயது) அவர்களை திருமணம் செய்தார்கள்.
  • உஹூத் போர் - முதல் பகுதியில் முஸ்லிம்கள் வெற்றிப்பெற்றார்கள். ஆனால், இரண்டாவது பகுதியில் படுதோல்வி அடைந்தார்கள், 70 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். தலைவர்களின் பேச்சை கேட்காதபடியினால் தோல்வியை தழுவினார்கள் முஸ்லிம்கள்.
  • முஹம்மதுவிற்கு பேரன் ஹசேன் (அலி, ஃபாத்திமா) பிறக்கிறார்
  • ஹம்ரா அல்-அஸத்  போர்/சண்டை.
  • உஸ்மான் முஹம்மதுவின் மகள் உல்குல்துமை திருமணம் செய்கிறார் (ருகைய்யா மரித்தபடியினால்).
  • அல்-ரஜீ படுகொலை 6-10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.

ஹிஜ்ரி ஆண்டு 4

  • பிஅர் மவூனா (Bi’r Ma’una) படுகொலை - 70 ஷஹாபாக்கள் கொலை.
  • நதீர் யூத இனத்தை கைப்பற்றி நாட்டை விட்டு வெளியேற்றப்படல்  (இவர்கள் முஹம்மதை கொல்ல திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்கள், 15 நாட்கள் முற்றுகை).
  • முஹம்மது ஜைனப் பிந்த் கஜீமாவை (வயது 30) திருமணம், அவர் 8 மாதங்களுக்கு பிறகு மரித்துவிட்டார்கள்.
  • முஹம்மது உம் சல்மாவை (வயது 29) திருமணம் செய்தார்.
  • ஹுசைன் பிறக்கிறார் (அலி, ஃபாத்திமா).
  • மதுமானம் தடை செய்யப்பட்டது.
  • முஹம்மது ஜைனப் பிந்த் ஜோஷ்ஐ(வயது 36) திருமணம் செய்கிறார் (அல்லாஹ்வின் கட்டளையின்படி)
  • பெண்கள் ஹிஜாப் போடவேண்டுமென்று கட்டளை பிறந்தது.

ஹிஜ்ரி ஆண்டு 5

  • அகழிப்போர் – 15 நாட்கள் முற்றுகை, முஸ்லிம்கள் வெற்றி. சண்டை நடக்கவில்லை.
  • குரைன்ழா யூத இனம் - 25 நாட்கள் முற்றுகை. அவர்கள் உடன்படிக்கையை மீறினார்கள் என்றுச் சொல்லி, 600 - 700 தலைகள் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
  • ஆயிஷாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அல்லாஹ் நீக்கினார் (Abd ALLAH bin Ubay bin Salool.).
  • முஹம்மது ஜுவரியா அல் ஹரித்ஐ(வயது 20) திருமணம் செய்கிறார்.
  • முஸ்லிமல்லாதவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளை.
  • தயம்மம் செய்ய அனுமதி.

ஹிஜ்ரி ஆண்டு 6

  • ஹஜ் (புனித யாத்திரை) - இஸ்லாமின் தூண்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது.
  • தத்து எடுப்பது தடுக்கப்பட்டது.
  • ஹுதைபியா ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஹஜ் செய்யமுடியாமல், மதினா திரும்பும் வழியில், முஹம்மது இதனை "வெற்றி" என்றார். 
  • எப்படி என்று கேட்டதற்கு, யூத இனம் கைபர் பட்டணத்தை நாம் பிடிப்போம் என்றார். போரில் பிடிபடும் பொருட்கள் நமக்கு சொந்தமாகும் என்றார்.
  • சில வாரங்கள் (6) கழித்து கைபரை பிடித்தார். 
  • முஹம்மது சுற்றுமுள்ள அரசர்களுக்கு "இஸ்லாமுக்கு மாறும்படி கடிதங்கள்" எழுதினார் (ஹிஜ்ரி 7ல் கூட கடிதங்கள் தொடர்ந்தன).
  • முஹம்மது சிறிய‌ ஹஜ் (உம்ரா) செய்தார்.

ஹிஜ்ரி ஆண்டு 7

  • கைபர் ஆக்கிரமிப்பு.
  • முஹம்மது ரம்லா என்பவரை திருமணம் செய்கிறார்.
  • முஹம்மது ஸஃபியாவை திருமணம் செய்கிறார்.
  • முஹம்மது மைமுனாவை திருமணம் செய்கிறார்.
  • விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டுகறியை முஹம்மதுவிற்கு விருந்து அளிக்கப்படுகிறது.
  • கழுதைகள் மாமிசம் உண்பது தடுக்கப்படுகிறது.

ஹிஜ்ரி ஆண்டு 8

  • முஹம்மது முதல் உமரா செய்தார்கள். மக்காவில் 3 நாட்கள் தங்கியிருந்தார்கள்.
  • அரேபியாவிற்கு வெளியே முதல் போர் - முஃதா சண்டை - முஸ்லிம்கள் 3000 பேர்,  கிறித்தவ பைசாந்தியப் ரோம பேரரசு 10000 பேர்.
  • மக்கா ஆக்கிரமிப்பு - முஸ்லிம்கள் 10000 பேர்.
  • இஸ்லாமின் பிரதான எதிரி அபூ சுஃப்யான் இஸ்லாமை ஏற்றார்
  • ஹுனைன் போர்.
  • தயீஃப் போர்.
  • முஹம்மதுவின் மகள் ஜைனப் மரித்துவிடுகின்றார்.
  • முஹம்மது மற்றும் மரியாவிற்கு  ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது (இப்ராஹீம்).

ஹிஜ்ரி ஆண்டு 9

  • தபூக் யுத்தம்.
  • நஜ்ரான் கிறிஸ்தவ குழுவும், முபாஹலாவும்.
  • முஹம்மது திரர் மசூதியை இடிக்க கட்டளையிட்டார், அது அழிக்கப்பட்டது.

ஹிஜ்ரி ஆண்டு 10

  • முஹம்மதுவின் கடைசி ஹஜ் சொற்பொழிவு.
  • ரோம பேரரசை நோக்கி இராணுவத்தை தயார் படுத்துதல்.
  • முஹம்மதுவின் மகள் உம்குல்தும் மரணம்.
  • 18 மாதங்கள் நிரம்பிய இப்ராஹீம் (முஹம்மதுவின் மகன்) மரணம்

ஹிஜ்ரி ஆண்டு 11

  • முஹம்மது தனது 63வது வயதில் மரணம். 13 நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
  • அபூ பக்கர் முதல் கலிஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேதி: 1st Nov, 2024


உமரின் பக்கம்

முஹம்மதுவின் பக்கம்

Source: https://answering-islam.org/tamil/authors/umar/general-topics/mhmd_at_mecca_madina.html

வியாழன், 4 ஏப்ரல், 2024

நாள் 8: ஜபூர் 23 – தாவூதின் வம்சத்தில் தாவூதே பிறந்து ஒரு பிரதான மேய்ப்பராக இருப்பார் என்ற முன்னறிவிப்பு!?! இது எப்படி சாத்தியம்?

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் )

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : சங்கீதம் காட்டும் சத்திய வழி
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்?
  4. நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்
  5. நாள் 5 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23
  6. நாள் 6 - ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா?
  7. நாள் 7- ஜபூர் 23 - முந்தைய வேதகாலத்தில் மேய்ப்பனாக இருந்த அல்லாஹ், குர்‍ஆன் காலத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தானா?

முந்தைய கட்டுரையில் எப்படி பரிசுத்த வேதாகமத்தின் இறைவன் தன் மக்களுக்கு ஒரு நல்ல மேய்ப்பனாக இருப்பார் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில், பழைய ஏற்பாட்டில், தேவன் 'தாவூது மறுபடியும் இஸ்ரேல் மக்களுக்கு ஒரு பிரதான மேய்ப்பனாக இருந்து அவர்களை ஒரு நல்ல விதமாக‌ இருந்து மேய்ப்பார் (ஆட்சி செய்வார்)' என்று சொல்லக்கூடிய ஒரு முன்னறிவிப்பை காண்போம். இது எப்படி சாத்தியமாகும்? ஒருவர் மரித்து பல நூறு ஆடுகளுக்கு பிறகு மறுபடியும் வருவாரா?

400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவீது எப்படி மறுபடியும் மேய்ப்பனாக வருவார்?

கீழ்கண்ட வசனங்களை படித்தால், தாவீது இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு மேய்ப்பனாக வருவார் என்று தேவன் சொல்கிறார். 

தாவீதின் காலக்கட்டம் கி.மு. 10ம் நூற்றாண்டு, மற்றும் எசேக்கியேல் பாபிலோனுக்கு அடிமையாக கொண்டு போகப்பட்டது, கி.மு. 6ம் நூற்றாண்டு ஆகும். இவ்விருவருக்கும் இடையே 400 ஆண்டுகள் உள்ளது. இப்படி இருக்கும் போது, தேவன் எப்படி தாவீது ஒரு மேய்ப்பானாக வருவார் என்று சொல்கிறார்?

எசேக்கியேல் 34:23-24

23. அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

24. கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

அப்படியானால், இந்த தாவீது யார்? யூத அறிஞர்களின் படி, இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர், தாவீதின் வம்சாவழியில் வரப்போகிறவராக இருக்கும் மேசியா (மஸீஹா) ஆவார்.

2 சாமுவேல் 7ம் அத்தியாயத்தில், தாவீதின் சிங்காசனம் நிலைத்திருக்கும் என்று தேவன் வாக்கு கொடுத்தார், இதே விஷயத்தை 1 நாளாகமம் 17:11-14ம் வசனங்களிலும், 2 நாளாகமம் 6:16ம் வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

2 நாளாகமம் 6:16

16. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

எரேமியா 33:17:

17. இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

எரேமியா 23:5:

5. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

ஏசாயா 9:6-7:

6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

7. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 11:1

1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

இவர் தாவீதின் வம்சத்தில் பிறக்கும் மேசியாவாக (மஸீஹாவாக) இருக்கிறவர் இயேசுக் கிறிஸ்து.  இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்த மஸீஹாவாக இருக்கிறார்

லூக்கா 1:32

32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

இப்படி தாவீதின் வம்சத்தில் வரும் மேசியாவைத் தான், தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக முன்னறிவித்தார்.  இவரே பிரதான மேய்ப்பராக இருக்கிறார். இயேசு கூட தம்மை ஒரு நல்ல மேய்ப்பனாக பிரகடனப்படுத்தினார்.

யோவான் 10:11,14,15

11. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

முடிவுரை:

குர்‍ஆன் இயேசுவைய் மஸீஹா என்று அடிக்கடி அழைக்கிறது. அந்த மஸீஹா தான் பிரதான மேய்ப்பராக வெளிப்படுவார் என்று பழைய ஏற்பாடும் கூறியுள்ளது.

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

மஸீஹா பற்றி ஏன் வேதத்தில் முன்னறிவிக்கப்படவேண்டும்? அவர் எப்படி தாவீதின் சிங்காசனத்தில் என்றென்றும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்? அப்படியென்றால், மஸீஹா நித்தியமானவர் என்றல்லவா பொருள்படுகிறது? ஒருவர் நித்தியமானவராக இருந்தால் அவர் இறைவன் தானே!

ஆய்வு செய்து உண்மையை அறியவேண்டும் என்று ஆர்வமுள்ள முஸ்லிம்களா நீங்கள்? அப்படியென்றால், மஸீஹா பற்றிய விவரங்களை படிப்பீர்களா?

ஆர்வமுள்ளவர்கள், மஸீஹா பற்றி பைபிளும், குர்‍ஆனும் என்ன சொல்கிறது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் படித்துப் பார்க்கவும்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2024ramalan/2024ramalan08.html

செவ்வாய், 26 மார்ச், 2024

2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் - நாள் 7: ஜபூர் 23 - முந்தைய வேதகாலத்தில் மேய்ப்பனாக இருந்த அல்லாஹ், குர்‍ஆன் காலத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தானா?

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

நாம் ஜபூர் புத்தகத்தின் 23வது அத்தியாயத்தை தியானித்துக்கொண்டு இருக்கிறோம்.

தாவூது நபி ஜபூர் வேதத்தில், இறைவன் என் மேய்ப்பனாக இருக்கிறான், இதனால் எனக்கு எந்த குறைவும் வராது என்று பாடுகின்றார். ஆனால், இஸ்லாமிய இறையியலை பார்க்கும்போது, சில இஸ்லாமியர்கள் 'அல்லாஹ் என் மேய்ப்பனாக இருக்கிறான்' என்றுச் சொல்லக்கூடாது, இது ஷிர்க் ஆகும் என்று சொல்கிறார்கள்.

இதைப் பற்றி அறிய மேற்கண்ட தொடர்களில் 5 மற்றும் 6வது தொடர்களை படிக்கவும். இப்போது இந்த கட்டுரையில், முந்தைய வேதங்களில், அதாவது பைபிளின் பழைய ஏற்பாட்டில் எப்படி, பைபிளை கொடுத்த இறைவன் தன்னை ஒரு மேய்ப்பனாகவும், மக்களை ஆடுகளாகவும் ஒப்பிட்டு பேசுகின்றார் என்பதை ஆய்வு செய்வோம்.

1) முந்தைய வேதங்களில் யெகோவா தேவன் மேய்ப்பனாக இருக்கிறார்

பழைய ஏற்பாட்டில் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில், கர்த்தர் தன் மக்களை ஒரு மேய்ப்பனைப்  போல மேய்ப்பதாக கூறுகின்றார். உலக மக்களுக்கு தாம் ஒரு மேய்ப்பனாக இருப்பதை அவர் ஒரு போதும் ஒரு வெட்கமான செயலாகவோ, அல்லது தம் இறை இலக்கணத்துக்கு இழுக்காகவோ எண்ணவில்லை.

ஏசாயா 40:10-11

10. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

11. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

மேலூம், ஜபூரை தாவூத் நபிக்கு கீழ்கண்ட வரிகளை வேதமாக இறைவன் இறக்கினான். மக்கள் தம்மை ஒரு மேய்ப்பனாக கருதவேண்டும், மேலும் அவர் தரும் நம்பிக்கையை  பிடித்துக்கொண்டு சமாதானத்தோடு வாழவேண்டும் என்று தாவூத் நபிக்கு இறக்கி, அதனை வேதமாக எழுதவைத்துவிட்டார். இன்றிலிருந்து தாவூத் நபியின் காலக்கட்டமாகிய கடந்த 3000 ஆண்டுகளாக யூதர்களும், கிறிஸ்தவர்களும் இந்த ஜபூர் 23ஐ படித்து, தியானித்து மன அமைதியையும் பாதுகாப்பையும், நம்பிக்கையும் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.

ஜபூர் (சங்கீதம்) 23:1-6

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.  3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

இதே போன்று, ஜபூர் 80வது அத்தியாயத்தில் கூட, யெகோவா தேவனை 'இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே' என்று அழைத்து, தங்கள் விண்ணங்களை வைப்பதை பார்க்கமுடியும்.

ஜபூர் (சங்கீதம்) 80:1-3

1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

2. எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.

3. தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

கடைசியாக, இஸ்ரேல் ஜனங்களில் மேய்ப்பர்களாக (அரசு தலைவர்களாகவும், மத தலைவர்களாகவும்) இருப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாததினால், தம் ஆடுகள் படும் துன்பங்களைப் பார்த்து, தேவன் துக்கப்பட்டு, தாமே ஆடுகளை மேய்ப்பதாக கூறுகிறார்.

எசேக்கியேல் 34:1-24 (சில வசன‌ங்களை இங்கு தருகிறேன்):

5. மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.

6. என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 7. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

8. கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். 9. ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

11. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

12. ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.

14. அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

15. என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

முடிவுரை:

மேற்கண்ட வசனங்களை பார்க்கும் போது, பல இடங்களில் யெகோவா தேவன் தம்மை 'ஒரு மேய்ப்பராக' காட்டிக்கொள்வதை பார்க்கலாம். மேய்ப்பன் என்பது தம் மக்களை பாதுகாக்கும் ஒரு சிறந்த‌ வேலையாகவும் தேவன் பார்க்கிறார். இப்படி செய்வது தம் கடமையென்று பார்க்கிறார், இதனால் தம் அன்பை காட்டுகிறார். மக்களை படைத்தால் மட்டும் போதுமா, அவர்களை பராமரிக்கவேண்டாமா? பாதுகாக்க வேண்டாமா?

முஸ்லிம்களே, உங்கள் அல்லாஹ்வை நீங்கள் 'என் மேய்ப்பான்' என்று சொல்லமுடியுமா? முந்தைய வேதங்களை கொடுத்தது அல்லாஹ் என்று நீங்கள் நம்பினால், அந்த வேதங்களில் அல்லாஹ் தன்னை 'ஒரு மேய்ப்பனாக வெளிப்படுத்தியிருக்கும் போது' அதனை எப்படி நீங்கள் மறுக்கவோ, மறைக்கவோ முடியும்?

குர்‍ஆன் இறக்கிய போது (கி.பி. 610-632 வரை), அல்லாஹ் தன் மனதை மாற்றிக்கொண்டான் என்று சாக்குபோக்கு சொல்லப்‍போகிறீர்களா? இது அல்லாஹ்விற்கு ஒரு கெட்டப்பெயரை கொண்டுவரும் என்பதை மறக்காதீர்கள்.

அடுத்த கட்டுரையில், இயேசு கூட ஒரு மேய்ப்பராக தம்மை வெளிக்காட்டிய வசனங்களை சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

தேதி: 26th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2024ramalan/2024ramalan07.html


வியாழன், 21 மார்ச், 2024

நாள் 6: ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா?

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம்)

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : (சங்கீதம் காட்டும் சத்திய வழி)
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்
  4. நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்
  5. நாள் 5 - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23

இந்த கட்டுரையில் அல்லாஹ் தன்னை 'ஒரு மேய்ப்பனாக' அடையாளம் காட்டினானா? இல்லையா? என்பதை சான்றுகளோடு காண்போம்.

சங்கீதம் - ஜபூர் 23:

சங்கீதம் - 23 அதிகாரம்சங்கீதம் – 23 - அரபியில்
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.الرَّبُّ رَاعِيَّ فَلاَ يُعْوِزُنِي شَيْءٌ

இறைவன் என் மேய்ப்பன் என்று சங்கீதம் 23 சொல்கிறது. மக்கள் ஆடுகளைப் போலவும், இறைவன் அவர்களை மேய்க்கும் ஒரு நல்ல மேய்ப்பனாகவும் இருக்கிறார் என்றுச் சொல்கிறது.

ஷிர்க்:

'அல்லாஹ் என் மேய்ப்பனாக இருக்கிறான்' என்று சொல்வது, ஷிர்க் என்ற மன்னிக்கமுடியாத பாவம் என்று இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்.

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் 'அல்லாஹ் ஒரு மேய்ப்பனாக இருக்கிறான்' என்று  சொல்லப்படவில்லை. இதேபோன்று, அல்லாவுக்கு இருக்கும் 99 பெயர்களில் ஒரு பெயரும் 'மேய்ப்பன்' என்று சொல்லப்படவில்லை. மேலும். ஹதீஸ்களிலும் 'அல்லாஹ் ஒரு மேய்ப்பன்' என்று முஹம்மது கூறியதாக பதிவு செய்யப்படவில்லை.

ஜபூரோடு (சங்கீதங்களோடு) முரண்படும் குர்‍ஆன்:

இயேசுவுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு. 1000) ஜபூரை தாவூத் என்ற நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று குர்‍ஆன் சொல்கிறது. இதனை கீழ்கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

குர்‍ஆன் 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

குர்‍ஆன் 17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

குர்‍ஆன் 21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

ஜபூரை அல்லாஹ் இறக்கியிருந்தால், குர்‍ஆனையும் அல்லாஹ் இறக்கியிருந்தால், இவைகளுக்கு இடையே ஏன் இந்த முரண்பாடு?

யூதர்கள் ஜபூரை திருத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு:

எப்போதெல்லாம் குர்‍ஆனுக்கும் முந்தைய வேதங்களுக்கும் இடையே முரண்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுமோ, உடனே முஸ்லிம்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு "யூதர்கள் திருத்திவிட்டார்கள்" என்பதாகும்.

இந்த குற்றச்சாட்டில் ஒரு சதவிகிதமாவது உண்மையுள்ளதா என்பதை பார்ப்போம். நம்முடைய கேள்வி என்னவென்றால் "முதலாவதாக, ஏன் யூதர்கள் ஜபூரில் கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்" என்று எழுதவேண்டும்?

  • கி.பி. 610ல் முஹம்மது என்ற நபர் வருகிறார், அல்லாஹ் என்ற இறைவனை, அதுவும் பைபிளோடு சம்மந்தப்படுத்தி அறிமுகம் செய்கிறார்.
  • ஆனால், இஸ்லாமுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு, ஜபூர் வந்தது, இதனை தாமே இறக்கினோம் என்று அல்லாஹ் சொல்கிறான் (தாவூதின் காலம் கி.மு. 1000).

முஹம்மதுவிற்கு முன்பு வாழ்ந்த யூதர்கள் தங்கள் ஜபூரை மாற்றி எழுதுவதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது? 

முதலாவது ஜபூர் வந்தது, அதன் பிறகு 1500 ஆண்டுகளுக்கு பிறகு குர்‍ஆன் வந்தது மற்றும் முஹம்மதுவும் வந்தார். எப்போது யூதர்கள் இதனை மாற்றி எழுதினார்கள்? முஹம்மதுவிற்கு முன்பா? அப்படியானால், அல்லாஹ்வை விட யூதர்கள் சர்வஞானியாக இருக்கிறாரகள் என்று பொருள் படுகிறது. எதிர்காலத்தில் முஹம்மது என்ற ஒரு நபர் வருவார், தன்னை நபி என்று சொல்லிக்கொள்வார், அல்லாஹ் என்ற இறைவனை அறிமுகம் செய்வார். ஆனால், அல்லாஹ் என்பவன் மேய்ப்பனாக தன்னை காட்டிக்கொள்ளமாட்டான். எனவே, முஹம்மதுவிற்கு மாறு செய்வதற்கு, எதிர்ப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் வேதத்தில் "கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்" என்று எழுதிக்கொள்வோம் என்று எண்ணி, அவர்கள் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்வது, ஒரு முட்டாள்தனமான வாதமாகும்.

எனவே யூதர்கள் ஜபூரை மாற்றி எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு சரியான சான்றும் இல்லாமல், இந்த வாதம் அடிபட்டுப்போகிறது.

கிறிஸ்தவர்கள் ஜபூரை திருத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு:

அடுத்த படியாக, கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்று கூட முஸ்லிம்கள் கூறக்கூடும். இந்த வாதமும் நிலை நிறகாது.

இதற்கும் கீழ்கண்ட சான்றுகளைச் சொல்லலாம்.

1) இயேசுவிற்கு முன்பு அதாவது கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்பே, பழைய ஏற்பாடு மற்றும் அதிலுள்ள ஜபூர் புத்தகமும் எபிரேய மொழியில் நூற்றுக்கணக்கான பிரதிகள் எடுக்கப்பட்டு, அக்காலத்தில் பல நாடுகளில் பரவியிருந்த யூதர்கள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.

2) இதே போன்று, இயேசுவிற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பழைய ஏற்பாடு மொழியாக்கம் (செப்டாஜிண்ட்) செய்யப்பட்டு, கிரேக்கம் பேசும் யூதர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

3) சவக்கடல் சுருள்கள் 1947 காலக்கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவைகளின் காலக்கட்டமும் இயேசுவிற்கு முன்பு பல ஆண்டுகள் பழையதாகும். இவைகளில் கிடைத்த எபிரேய சங்கீத புத்தகமும் மாற்றப்படாமல் அப்படியே கிடைத்துள்ளது.

குகை 1ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம் 

பைபிளின் புத்தகமா? (ஆம் / இல்லை)

10

1Q10

Psalms (சங்கீதம்)

ஆம்

11

1Q11

Psalms (சங்கீதம்)

ஆம்

12

1Q12

Psalms (சங்கீதம்)

ஆம்

16

1Q16

Pesher Psalms (சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை

குகை 2ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

14

2Q14

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 3ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

2

3Q2

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 4ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

18

4Q83-98

Psalms (சங்கீதம்)

ஆம்

41

4Q171

Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம் 

42

4Q173

Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்  

 குகை 5ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

5

5Q5

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 8ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

2

8Q2

Psalms (சங்கீதம்)

ஆம்

குகை 11ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்): 

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை)

5

11Q4-9

Psalms (சங்கீதம்)

ஆம்

இப்படி பல்லாயிர பிரதிகள் உலகத்தில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் இருக்கும் போது, எப்படி கிறிஸ்தவர்கள் இதனை மாற்றமுடியும்? இதில் வேடிக்கை என்னவென்றால், 1947 காலத்திற்கு பிறகு தான் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படியிருக்கும் போது, எப்படி கிறிஸ்தவகர்கள், "உலகத்தில் உள்ள எல்லா ஜபூரை கண்டுபிடித்து, அவைகளை ஒன்று சேர்த்து, "கர்த்தர் என் மேய்ப்பராக" இருக்கிறார்" என்று மாற்றமுடியும்? இது நடைமுறை சாத்தியமற்ற கூற்றாகும். மேலும், யூதர்கள் தங்களிடம் உள்ள பிரதிகளில் மாற்றம் செய்ய எப்படி ஒப்புக்கொள்வார்கள்?

 ஆகையால், இந்த குற்றச்சாட்டும் அடிபட்டு போகிறது.

'ஜபூரில் அல்லாஹ் மேய்ப்பனாக தன்னை வெளிப்படுத்தினான், தாவூது நபியும் அதனை எழுதியும் வைத்துவிட்டார், ஆனால் குர்‍ஆனில் மட்டும் ஏன் அல்லாஹ் ஒரு மேய்ப்பனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை?' என்பதாகும்.

இந்த கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், கல்விமான்கள் பதில் சொல்வார்களா?

சிலர் ஒருவேளை இந்த பதிலை சொல்லக்கூடும், அதாவது "ஜபூரில் அல்லாஹ் தன்னை ஒரு மேய்ப்பன்' என்றுச் சொல்லி, தாவூத் நபிக்கு இறக்கியது உண்மை தான்", ஆனால், அதற்காக, குர்‍ஆனிலும், ஏதாவது ஒரு வசனத்தில் "தன்னை மேய்ப்பன்" என்று அல்லாஹ் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லையே!?

இது ஒரு சரியான கூற்றாகும், இதனை நாம் அங்கீகரிக்கலாம். ஆனால், முஸ்லிம்களின் இந்த பதில் உண்மையாக இருந்தால், "அல்லாஹ் ஒரு மேய்ப்பன்" என்றுச் சொல்வது "ஷிர்க்" ஆகாது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அல்லாஹ் என் மேய்ப்பானாக இருக்கிறான் என்ற ஃபத்வா

அல்லாஹ் என் மேய்ப்பானாக இருக்கிறான், அவன் என்னை நல்ல புல்லுள்ள இடத்தில் மேய்த்து, அமர்ந்த நீர் நிலைகளில் என் தாகத்தை தீர்த்து, எனக்கு பாக்கியத்தை அருளுகிறான் என்றுச் சொல்வது ஷிர்க் ஆகாது என்ற ஃபத்வாவை முஸ்லிம்கள் கொடுப்பார்களா?

அல்லாஹ்வின் 99 பெயர்களும் 23வது ஜபூரும் (சங்கீதமும்)

அல்லாஹ்வின் 99 பெயர்களில் வரும், கீழ்கண்ட பெயர்களின் விளக்கங்கள் சங்கீதம் 23ல் வரும் விளக்கங்கள் போல உள்ளதல்லவா?

  • 6. அல் முஃமின் -  المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
  • 7. அல் முஹைமின் - المُهَيْمِنُ – கண்காணிப்பவன்
  • 16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
  • 17. அர் ரஜ்ஜாக் -  الرَّزَّاقُ – உணவளிப்பவன்
  • 23. அர் ராஃபிஃ - الرَّافِعُ – உயர்த்துவோன்
  • 27. அல் பஸீர் - الْبَصِيرُ – பார்ப்பவன்
  • 42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
  • 43. அர் ரகீப் -  الرَّقِيبُ – கண்காணிப்பவன்
  • 52. அல் வகீல் - الْوَكِيلُ – பொறுப்பேற்பவன்
  • 55. அல் வலிய்யு -  الْوَلِيُّ – பாதுகாவலன்
  • 69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
  • 70. அல் முக்ததிர் -  الْمُقْتَدِرُ – ஆற்றலுடையவன்
  • 77. அவ்வாலீ -  الْوَالِي – உதவியாளன்
  • 79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
  • 92. அன் நாஃபிஃ -  النَّافِعُ - நற் பயனளிப்பவன்
  • 94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
  • 98. அர் ரஷீத் - الرَّشِيدُ -  நேர்வழி காட்டுவோன்

Source: அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் (தமிழ் அர்த்தம்) 99

மேற்கண்ட பெயர்களை, முந்தை கட்டுரயில் கொடுக்கப்பட்ட பட்டியலோடு, 23ம் சங்கிதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

சங்கீதம் 23:

  • 1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
  • 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
  • 3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
  • 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
  • 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
  • 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி, "ஜபூரில் அல்லாஹ் தன்னை ஒரு மேய்ப்பனாக அடையாளப்படுத்தியுள்ளான் என்பதை முஸ்லிம்கள் அறியவேண்டும்". 

  • அல்லாஹ் ஜபூரை இறக்கவில்லை என்று முஸ்லிம்கள் சொன்னால்,  அல்லாஹ்வை மேய்ப்பன் என்றுச் சொல்வது ஷிர்க் என்று முஸ்லிம்கள் கூறிக்கொள்ளலாம்.
  • ஆனால், ஜபூரை அல்லாஹ் இறக்கினான் என்று குர்‍ஆன் சொல்வதினால், முஸ்லிம்கள் அதனை ஏற்பதினால், "அல்லாஹ் என் மேய்ப்பன்" என்றுச் சொல்வது "ஷிர்க்" இல்லை என்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அடுத்த கட்டுரையில் ஜபூரில் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை எப்படி மேய்ப்பராக வெளிப்படுத்தினார் என்பதை ஆய்வு செய்வோம்...

தேதி: 21st March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: 2024 ரமளான் - நாள் 6: ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா? (answering-islam.org)