ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் - உபாகமத்தின் உண்மை:



உபாகமத்தின் உண்மை:
முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்

ஆசிரியர்: டேவிட் உட்


THE DEUTERONOMY DEDUCTIONS:
Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet

By David Wood

"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்" ~தேவன் (உபாகமம் 18:20)[1]

"நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்" ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]

யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.

முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.

முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக‌ விவரிக்கிறேன்.

I. உபாகமத்தின் உண்மை
(I. THE DEUTERONOMY DEDUCTIONS)

வாதம் பிரதிவாதம் பற்றி இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன, அவைகள் Valid Logic மற்றும் True Premises ஆகும். இந்த இரண்டு விவரங்களும் நாம் சரியான முடிவு எடுக்க நம்மை அழைத்துச்செல்கிறது. ( The most basic argument form is the syllogism, and the most basic valid form of the syllogism is Modus Ponens.[3] The logical form of the following arguments is Modus Ponens; thus, they are logically valid: )

கீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:

வாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர்க்கதரிசி:

A1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால், அந்த நபர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" ஆவார்.
A2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார்.
——————————————————
A3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி

வாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்

B1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒரு கள்ள தீர்க்கதரிசி.
B2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார்.
——————————————————
B3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி

மேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, எனவே, உண்மையான வாதங்களின் அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன. ஆக, இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய் (அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம் இந்த "அடிப்படை வாதங்களைப் பற்றி" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.

II அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.

II. PREMISES A1 AND B1 DEFENDED

அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்ட விவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது. அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராத வசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையான தீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது. "முகமது பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது" என்று முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படை வாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

முகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின் உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்கு அடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதே போல‌, "Brief Illustrated Guide to Understanding Islam " என்ற புத்தகத்தில் "முகமது பற்றி பைபிள் சொல்கிறது" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமான ஆதாரமாக காட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ் கண்டவாறு கூறுகிறார்:

"The Biblical prophecies on the advent of the Prophet Muhammad are evidence of the truth of Islam for people who believe in the Bible"

"முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளை நம்புகிறவர்களுக்கு "இஸ்லாம் உண்மையான மார்க்கம்" என்பதற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகும்."

உபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:

"உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்." (உபாகமம் 18: 18, 19)[4]


இந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்த புத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. நான் இங்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், "முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18: 18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்று கருதுகிறார்கள்). அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்கு அடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க‌ முடியாதே! இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:

"சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்." (உபாகமம் 18:20)


இந்த வசனத்தின் படி நாம் "ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)" இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்:

(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்று சொல்பவர்.

(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பவர்


முகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 and B1) தவிர்க்க முடியாது. மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம் 18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்று சொல்கின்றன. ( To sum up, Muslims have appealed to a passage in Deuteronomy 18, and that passage entails premises A1 and B1. Thus, according to Muslim claims, the first premise of each of the Deuteronomy Deductions is true.)

III அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.

III. PREMISES A2 AND B2 DEFENDED

"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது" என்ற‌ இஸ்லாமியார்களின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் இறைவன் அனுப்பாத செய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம். இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார். ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், ஏனென்றால், அவர் அபகீர்த்தியான‌ "சாத்தானின் வசனங்கள்" என்றுச் சொல்லக்கூடிய வசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.

சாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூத எழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்ப கால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம். சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:

(1) Ibn Ishaq, (இபின் இஷாக்)
(2) Wakidi, (வாகிடி)
(3) Ibn Sa'd, (இபின் சத்)
(4) al-Tabari, (அல்‍-டபரி)
(5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்)
(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)
(7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா)
(8) Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா)
(9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )


சிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்த சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையான அதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய‌ "மூன்று சங்கிலித் தொடர்" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது [7]. ( three chains of transmission [isnad] ). இது மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த "சஹி அல்-புகாரி" என்ற ஹதீஸ் தொகுப்பும், சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாக உள்ளது (Number 4862, கிழே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த விவரங்கள் போக, குர்‍ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53) "பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு" பதில் அளிப்பதாக உள்ளது.

ஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது, உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள் நம்மை கட்டாயப்படுத்துகின்றன. (இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும் விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் - http://www.answering-islam.org/Responses/Saifullah/sverses.htm) இந்த சரித்திர ஆதாரங்கள் அனைத்தும் "சாத்தனின் வசனங்கள்" என்ற நிகழ்ச்சி ஒரு ஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன. சரித்திர ஆய்வாளர்கள், "உலக தலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை" ஆய்வு செய்ய " Principle of Embarrassment " என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கோட்பாடு சட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியர் " Annette Gordon-Reed " என்பவர், இந்த கோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:

"Declarations against interest are regarded as having a high degree of credibility because of the presumption that people do not make up lies in order to hurt themselves; they lie to help themselves."[8]

"தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களை காயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மை உண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்."[8]


மேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம் "சாத்தானின் வசனங்களோடு" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, "முகமதுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதையில்லை" என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டி இருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்; ஒருவேளை இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள் தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்ற முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லி இது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.

சாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ள ஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத‌ அளவிற்கு வலுவாக உள்ளது. இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த‌ சரித்திரத்தில் "சாத்தான் வசனம்" பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.

அல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):

அல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இன மக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம் மிகவும் வேதனையுற்றார். அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காக இறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில் விரும்பினார். தன் இன மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இன மக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதனால், அவர் தன்க்குள் தானே போராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமா என்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.


மற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)


அவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இன மக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான் அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:

"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்" (Al-Tabari, பக்கம். 108)


கடைசியாக‌ முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேக தெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதற்கு பிரதிபலனாக "தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால், இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate), அந்த மசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ, நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்"(Al-Tabari, பக்கம். 109)

அந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும் குறுகிய காலம் வரை தான் நிலைத்தது, அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களை புகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அது சாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார். அல்லாவிற்கு எதிராக இவரின் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால் முகமது புலம்பினார்: "நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச் சொன்னேன்"(பக்கம் 11). இருந்தபோதிலும், "கப்ரியேல்" தூதன் முகமதுவை தேற்றினார், மற்றும் "எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்" என்று அவருக்கு அறிவித்தார். இந்த நம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம் குர்‍ஆனிலும் காணமுடியும்:

"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்." (குர்‍ஆன் 22:52)[9]

"And We did not send before you any apostle or prophet, but when he desired, the Shaitan made a suggestion respecting his desire; but Allah annuls that which the Shaitan casts, then does Allah establish His communications, and Allah is Knowing, Wise." (Surah 22:52)[9]


குர்‍ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களை சோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லா அனுமதிக்கிறாராம்.

சாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத குர்‍ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்று மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதாவது இஸ்லாமின் நபி குறைந்த பட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாக கொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம் ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10]. ஆக, முஸ்லீம்களின் ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள் உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.

IV சாத்தியமான மறுமொழிகள்

(IV. POSSIBLE REPLIES)

வாத‌மூல‌க்கூறுக‌ளாகிய‌ A1,A2,B1 மற்றும் B2 போன்ற‌வைக‌ளை நான் ஏற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ள் ந‌ம‌க்கு இருப்ப‌தால், முடிவுக‌ளாகிய‌ A3, B3 இர‌ண்டையும் நாம் ஏற்றுக்கொள்வ‌து ச‌ரியான‌தாகும். இந்த‌ வாத‌ங்க‌ள் ந‌ம‌க்கு முக‌ம‌து ஒரு பொய் தீர்க்க‌த‌ரிசி என்ப‌தை காட்டுகின்றது. இருந்த‌போதிலும், முஸ்லீம்க‌ள் இந்த‌ முடிவை ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் எப்ப‌டி இத‌னை ம‌றுக்கிறார்க‌ள் என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்க‌மாக‌ காண்போம்.

முஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்து வராத ஒரு வெளிப்பாடு ஆகும் என்று ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் இந்த வழியில் போனால், "உபாகமம் 18:18,19"ம் வசனங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாக இருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள் சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.(அதாவது, பைபிளில் உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள் சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ, அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச் சொல்வார்கள்) உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் "முகமது ஒரு நபி" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு வசனம் திருத்தப்பட்டது காரணம் அவ்வசனம் "முகமது ஒரு கள்ள நபி" என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.(While it is alarmingly common for Muslims to pick and choose which passages in the Bible are correct (i.e. everything that agrees with Islam is correct, but everything that disagrees with Islam was corrupted by evil Jews and Christians), no one is going to be convinced by the claim that one verse in Deuteronomy 18 proves the prophethood of Muhammad, while another verse in the same passage is corrupted because it proves that he was a false prophet.)

ஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள், உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும். மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசன வசனம் தாம், முஸ்லீம்கள் "தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க" முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும். எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்து ஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்த முன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பது நிச்சயம். ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார். அப்படியானால், இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது நிரூபனமாகும். அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள் விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லை என்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது, இது முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.

ஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தை விட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது. உபாகமம் 18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும், அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை, ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள் நிரூபிக்கட்டும், இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபி பொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள் மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.(Muslims who want to deny A1 and B1 must therefore show that these premises are false by arguing that genuine prophets can indeed deliver false revelations and speak in the names of false gods. I would love to see Muslims attempt to defend such an untenable position!)

முகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது, ஆனால், A2 மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும். அப்படியானால், முகமது புறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ள அதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களை செய்யவேண்டும்.

முதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின் (கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில் விவரிக்கவேண்டும் (அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதை நிருபிக்கவேண்டும்)

இரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையை மறுப்பதற்கான காரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதி வைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள். (இதற்கு பதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்து இருக்கலாம்).

மூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa'd, al-Tabari, Ibn Abi Hatim, Ibn al-Mundhir, Ibn Mardauyah, Musa ibn 'Uqba, and Abu Ma'shar போன்றவர்கள் தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்று நிரூபிக்கவேண்டும் (இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது)

நான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்) தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்று தெரிவிக்க பயன்படுத்திய‌ "சங்கிலித் தொடர் (Chains of Authority)" முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.

ஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ் தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சில விவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள் விளக்கவேண்டும்.

அல்-புகாரி இப்படியாகச் சொல்கிறது:

நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். (4862) [11]

The Prophet performed a prostration when he finished reciting Surat an-Najm [Surah 53], and all the Muslims and Al-Mushrikun (polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allah and in His Messenger Muhammad) and jinn and human beings prostrated along with him. (4862)[11]

புறசமயத்தார்கள்(Pagans) முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate) செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர் தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்ன சாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், "அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின் வசனங்களை சொல்லியுள்ளார்கள்" என்றுச் சொல்லும் குர்‍ஆன் சூரா 22:52ஐ விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம் சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் உள்ளது.

ஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்ற எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாக பில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது மற்றும் ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்று முகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம் எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக "முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்று நம்பவேண்டும்" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும். (Seventh, they must show non-Muslims why we should reject all the available evidence and believe that Muhammad was spiritually reliable, when, as all informed Muslims will admit, Muhammad was the victim of black magic (a spell cast by a Jewish magician) and, at one point, was convinced that he was demon-possessed. )

இதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசு பிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம் செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தை சொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? (முகமதுவின் ஆன்மீக பிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் : "சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)")

இஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களை விளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை. உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம் புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்ப‌வருக்கும் இடையே "முகமதுவின் நபித்துவம் - prophethood of Muhammad " என்ற தலைப்பில் நடந்த விவாதம் பற்றிச் சொல்வேன். இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, " இது குர்‍ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்" என்றுச் சொல்கிறார். ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காக சிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை, இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridicules polytheism). உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில் உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.

முஸ்லீம்கள் குர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன் மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம் செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌து என்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌ வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌தீஸ் மிக‌வும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து. ஏன் புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள் சூரா 53க்கு த‌ங்க‌ள் சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌க்க‌ம் செலுத்தினார்க‌ள் என்று சிந்தித்துப்பார்க்கும் போது, ந‌ம‌க்கு கிடைக்கும் ந‌ம்ப‌த்த‌குந்த‌ கார‌ண‌ம் என்ன‌வென்றால், முக‌ம‌து, அவ‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளை புக‌ழ்ந்துச் சொன்ன‌ வ‌ச‌ன‌ங்க‌ளே ஆகும் என்ப‌து மிக‌வும் தெளிவாகும், இதைத்தான் ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாகிய‌ ச‌ரித்திர‌ ஏடுக‌ள் சொல்லும் விளக்கமுமாகும்.

இது வரை நாம் சிந்தித்த‌ விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றிய சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பலவீனமான‌ நேரத்தில், முகமது சோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பல தெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும். இதன் பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது. அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின் உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாத முடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதாவது, முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதாகும்.

V. மதிப்பீடு

V. ASSESSMENT

முடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம் என்னவென்றால், என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடிப்படை வாதங்கள்) இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early Muslim Historians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபி மக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். தற்கால முஸ்லீம்கள், முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க, உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்று ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தை கொடுத்துள்ளார்கள். உபாக‌மத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாக இருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, அது என்னவென்றால், "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்பதாகும்.

உபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with true premises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒரு நேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான். இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் இந்த வாதங்களை தீவிரமாக ஆராய்ந்து, சோதித்து, அதற்கு ஆதாரங்கள் உண்டா என்று பரிசோதித்து, கடைசியில் வாதங்களை மறுக்காமல், அதற்கு பதிலாக‌, முடிவுரையை மட்டும் மறுத்தால், இவர் எப்படிப்பட்டவர் என்றால், "உண்மையை தெரிந்துக்கொள்ள விருப்பமில்லாதவர் மற்றும் தான் வளர்க்கப்பட்ட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மனிதராகவே நமக்கு தென்படுவார்". எனக்கு என் அனுபவம் கற்றுக்கொடுத்ததின் படி பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே போல முஸ்லீம்களிலும் பலர் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட முஸ்லீம்கள் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய முதலாவது சத்தியம் என்னவென்றால், தாங்கள் நபி என்றுச் சொல்லும் முகமது ஒரு தீர்க்கதரிசியே அல்ல என்பதாகும். அதே போல இரண்டாவது சத்தியம், தாங்கள் நபி என்றுச் சொல்லும் இயேசுக் கிறிஸ்து ஒரு நபியை விட மேன்மையானவர் என்பதாகும். (இந்த இரண்டாம் சத்தியம் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்)

குறிப்புகள்:


1 Bible quotations are from the New American Standard Bible, Updated Edition.
2 The History of al-Tabari, Volume VI: Muhammad at Mecca, W. Montgomery Watt and M. V. McDonald, trs. (Albany: State University of New York Press, 1988).
3 Modus Ponens takes the form:
1. If P, then Q.
2. P.
———————
3. Therefore, Q.
Here we may substitute various elements for P and Q, giving us, for instance:
1. If Fido is a dog, then Fido is a mammal.
2. Fido is a dog.
———————
3. Therefore, Fido is a mammal.
4 Ibrahim, I. A. A Brief Illustrated Guide to Understanding Islam (Houston: Darussalam, 1997), p. 33.
5 See, for example, "Muhammad in the Bible?"
6 For references, see "Muhammad and the Satanic Verses."
7 Ibn Hajar, quoted in Allam Shibli Nu'mani, Sirat-un-Nabi, Volume 1, M. Tayyib Bakhsh Budayuni, tr. (New Delhi: Kitab Bhavan, 2004), p. 164.
8 Annette Gordon-Reed, Thomas Jefferson and Sally Hemings: An American Controversy (Charlottesville: University of Virginia Press, 1997).
9 Qur'an quotations are from the M. H. Shakir translation.
10 One might object that Muhammad did not actually speak in the names of the pagan gods. That is, he did not say, "I come to you in the name of Manat." Instead, he spoke in the name of Allah, and merely approved of the intercession of the pagan gods. However, the point of the passage in Deuteronomy is clearly that anyone who promotes polytheism is a false prophet. And Muhammad certainly promoted polytheism on this occasion.
11 Sahih Al-Bukhari, Volume Six, Muhammad Muhsin Khan, tr. (Riyadh: Darussalam, 1997).

டேவின் உட் அவர்களின் இதர கட்டுரைகளை இங்கு படிக்கலாம் ஆங்கிலக் கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள்

மூலம்: http://www.answering-islam.org/Authors/Wood/deuteronomy_deductions.htm


Isa Koran Home Page Back - Author David Wood's Page page
1
 
 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Tênis e Sapato, I hope you enjoy. The address is http://tenis-e-sapato.blogspot.com. A hug.