ஆயிஷாவின் சாட்சி
நான் ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுடைய இளநிலை படிப்பை முடித்த பிறகு, மேற் கொண்டு பல்கலைகழகத்தில் படிக்க அமெரிக்கா வந்தேன். முதல் வருட மாணவர்கள், முதல் வருடத்தோடு தொடர்புடைய ஒரேவிதமான பாடத்திட்டங்களை தெரிந்துக்கொண்டனர். என்னுடன் பயிலும் அமெரிக்க மாணவர் ஒருவரோடு நட்புறவு கொண்டேன். நாங்கள் நலமான நண்பர்களாய் இருந்தோம். செமஸ்டரின் தொடக்கத்தில் வந்த என்னுடைய பிறந்த நாள் வருவதை கண்டுபிடித்த என் நண்பர், எனக்கு ஒரு சின்ன புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை பரிசாக கொடுத்தார். முதலில் சிறிது தயங்கினேன்/பின்வாங்கினேன், ஒரு வாரமாக அந்த புத்தகத்தை நான் தொடவில்லை. அந்த புத்தகத்தை தொட பயமாக இருந்தது. ஆனாலும் நான் ஒரு அசைக்ககூடாத முஸ்லிமாக இருந்ததால், இந்த புத்தகத்தை படிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
மாற்கு எழுதின சுவிசேஷம் சின்ன புத்தமாக இருப்பதால் அதை படிக்குமாறு என்னுடைய நண்பர் சிபாரிசு செய்தார். அதனால் மாற்கு சுவிசேஷத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் வாழ்வைப்பற்றினதான அநேக காரியங்கள் என்னை ஒரு கணம் யோசிக்க வைத்தாலும், இயேசு கிறிஸ்து பேசின இந்த வார்த்தை எனக்கு மிகவும் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துயது:
மத்தேயு 23: 25-26
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு".
இதேவிதமான சிந்தனையில் என் பெற்றோரால் நான் வளர்க்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உள்ளலவில் பெருமையுள்ளவர்களாயும், சுய நலமுள்ளவர்களாயும் வாழ்ந்துக்கொண்டு, வெளிப்புறமாக நல்லவர்கள் போல நடிக்கும் மாய்மாலகாரர்களை எனது பெற்றோர் வெறுத்தனர். உண்மையான இஸ்லாம் என்பது, உள்ளத்தில் இருக்கவேண்டியதே தவிர வெளிப்புறமான சமயம் சார்ந்த சடங்குகள் அல்ல என்பதை எனது பெற்றோர் கற்றுத் தந்தனர். இயேசு கிறிஸ்துவும் என்னுடைய பெற்றோர் கூறிய அதே கருத்துக்களை கூறியிருப்பதால், என் வாழ்க்கையின் மீது அவருக்கு அதிகாரம் / அக்கரை இருப்பதையும், அவர் கூறியது உண்மை என்பதையும் அடையாளங்கண்டு கொண்டேன். ஒரு மாதத்திற்கு பிறகு இயேசுகிறிஸ்துவால் உண்டாகும் இரட்சிப்பிற்காக விண்ணப்பம் பண்ணினேன்.
நான் கிறிஸ்தவளாக மாறிவிட்டேன் என்பதை எனது குடும்பத்தினரிடம் சொன்னப்போது என்மீது கடும்கோபம் கொண்டனர். என்னுடைய புதிய நம்பிக்கையில் அவர்களின் சந்தோஷமின்மையை பார்த்தபோது, அவை என்னால் சகித்துக்கொள்ள முடியாத மிகப்பெரிய வேதனையாய் இருந்தது. என்னுடைய குடும்பத்தினருடன் நல்ல உறவு எனக்கு இருந்தது, முக்கியமாக என்னுடைய அம்மாவை நான் மிகவும் நேசித்தேன். அநேக நாட்கள் என் அம்மாவின் உறவை புதுபித்துக்கொள்ள(மறுபடியும் பெற) இந்த கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால், இயேசுவைக் குறித்ததான எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. வேதத்தின் மூலம் இயேசுவை பற்றிய உண்மையை நான் அறிந்துக்கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும்.
ஆயிஷா.
ஆங்கில மூலம்: Aishah's Story
இவர்கள் ஏன் கிறிஸ்தவர்களானார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக