ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 30 செப்டம்பர், 2010

ஜியா நோட்ராட்டின் சாட்சி

ஜியா நோட்ராட்டின் சாட்சி

 1964ல், ஆப்கானிஸ்தானின் காபுலில் உள்ள குருடர்களுக்கான நூர் பாடசாலையில் ஜியா நோட்ராட்  என்ற 14 வயது பையன் சேர்ந்தார்.  அவர் ஏற்கனவே  முழு குர்ஆனையும் மனப்பாடமாக கற்று அறிந்திருந்தார். மேற்கத்திய முறையில் சொல்லவேண்டுமானால், ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒருவர்  புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் கற்பதுபோல்,  ஜியாவின் தாய் மொழி அரபி மொழியாக‌ இல்லாததால்  இவர் குர்‍ஆனை இதே போல மனனம் செய்து வைத்திருந்தார். மூன்றே ஆண்டுகளில் அவர் ஆறு அடிப்படை கிரேட்டுகளை  (six primary grades) முடித்து விட்டார்.

இந்த குருடர்களுக்கான பிரேய்ல் வகுப்பில் கலந்து கொள்ளும்போது ஜியா ஆங்கிலத்தில் புலமை பெற்று விட்டார். ஒரு கையடக்க வானொலிப் பெட்டியின் ஒலிபரப்புகளைச் செவிமடுத்து கேட்டு, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்ப்பதின் மூலம் அவர் இந்த ஆற்றலை வளர்த்துக கொண்டார்.  ஒரு சிறிய காது குப்பியின் (ear phone) மூலம், பிற நாடுகளில் இருந்து ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை செவிமடுத்தார். படிப்படியாக சில ஆன்மீக்க் கேள்விகளைச் சிந்திக்க ஆரம்பித்தார். உதாரணமாக, பாவமன்னிப்புக்கான மாற்றீடு என்றால் என்ன? இதுபோன்ற காரியங்களைப் பற்றி, சுவிசேஷத்தின் குரல் என்ற ஆப்ரிக்க கண்டத்தின்,எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் சபபாவில் இருந்து ஒலிபரப்ப்ப்பட்ட கிறிஸ்தவ ஒலிபரப்புகளை கேட்டுக்கொண்டு இருந்தார்.

இறுதியாக, இயேசுவை மேசியாவாகவும்  தமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அனுபவத்தை ஒரு சிலரிடம் பகிர்ந்து கொண்டார்.  இதனால் தான் கொல்லப்படும் அபாயம் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா என்று நண்பர்கள் கேட்டு எச்சரித்தனர். (மதமாறுகிறவர்களுக்கு)  இஸ்லாமியத் துரோகத் தடை சட்டத்தின் கீழ் அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் விளைவைத் தாம் தெரிந்துக்கொண்டு விட்டதாகவும் இயேசு தமக்காக சிலுவையில் மறித்து விட்டதால், அந்த மேசியாவிற்காக  தாம் மறிக்கத் தயாராக இருப்பதாக்க் பதிலுரைத்தார்.

அதன் பிறகு ஜியா ஒரு சில ஆப்கானிஸ்தானிய கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்தார். முன்னதாக அவர் கற்று வந்த காபூல் குருடர் கல்லூரியில் அவர் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மறு ஆண்டில், அவர் கிறிஸ்தவராக மாறிவிட்டார் என்பதை அறிந்து, அவரைப் பதவியில் தோற்க வைத்தனர்.அவர் பதவியிழந்ததற்காக, தாம் மிகவும் வேதனையடைவதாக ஒரு கிறிஸ்தவ ஆசிரியை கூறினார். அதற்கு மறுமொழியாக, அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்  (யோவான் 3.30) என்ற யோவான் தீர்க்கதரிசியின் வசனத்தை மேற்கோள்  காட்டி கூறினார்.  தனது மேட்டிமையை அழித்துப் போட்டு, தேவனின் தாழ்மையான தாசனாக மாறவேண்டும் என்பதை ஜியா வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார்.

ஜியா குருடர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு முன், ஒரு குளிரான எரியூட்டப்படாத நிலக்கரி போல் காணப்பட்டதாக அவரின் தந்தையார் கூறினார். அந்த அனுபவத்திற்குப் பிறகு, ஜூவாலையிட்டு செங்கதிர்களாகப் பிரகாசமாக எரியும் நிலக்கரியாக மாறியிருக்கிறார் ஜியா.

ஒருமுறை பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட யோவான் சுவிஷேசத்தைப் பெற்றுக் கொண்டார். அதைத் திறந்து தமது விரல்களால் (நுகர்ந்து) அதை வாசிக்க ஆரம்பித்தார்.அதனைத் திரும்ப ஒப்படைத்து, இப்போது தமது கேள்வி பதிலளிக்கப்பட்டு விட்டது  என்றார். எந்தக் கேள்வி என்று கேட்கப்பட்டபோது, யோவன் 13.34ல் இயேசு கூறியதைச் சுட்டிக் காட்டினார் – "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்".  பழைய ஏற்பாட்டிலுள்ள‌ லேவியராகம்ம் 19.18ல், தேவன் மோசேக்கு "உன்னைப் போல் உன் அயலானையும் நேசி" என்று கட்டளையிட்டிருக்க, இயேசு "புதிய" கட்டளை என்று ஏன் இதனை கூறினார் என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. மேசியா(இயேசு) மனிதனாக வரும் வரைக்கும்   இவ்வுலகம், அவருடைய அன்பை தங்கள் சொந்த அனுபவத்தில் கண்டதில்லை.  பைபிள் தேவ அன்பை  வெளிப்படுத்துகிறது  இயேசு, தேவனின் அந்த அன்பை வெளிப்படுத்தும் மனித அவதாரமாவார் என்று மேலும் விளக்கினார். அதனால் தான் இது புதிய கட்டளையாகிற்று. நான் உங்களை நேசிப்பது போல, உங்களில் ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்ற புதிதான கட்டளையை வழங்குகிறேன். அவருடைய பூரணமான ஜீவியத்தின் மூலம் இயேசு நமக்கு ஒரு புதிய முன்னுதாரணத்தை வழங்கியுள்ளார்.

ஜியா, ஆப்கானிதானிய பார்வையுடையோர் பள்ளியில் பதிந்து கொண்ட முதல் பார்வையற்றவர் ஆவார். அவருடன் எப்போது ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கருவி இருக்கும்.அதில், ஆசிரியர் உரை அனைத்தையும் பதிவு செய்து கொண்டு, செல்லுமிட மெல்லாம் அதை மறுபடியும் கேட்டு வருவார். இப்படிச் செய்ததினால், நூற்றுக் கணக்கான சக மாணவர்கள் மத்தியில் அவர் முதல் கிரேட் நிலையில் தேறினார். அவருடைய வகுப்பில் தோல்வி கண்ட மாணவர்கள், மூன்று மாத விடுமுறைக்குப் பிறகு அந்தச் சோதனையை மீண்டும் எடுக்க இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விடுமுறை காலத்தில் அவர் தமது அடுத்தாண்டுக்கான பாடங்களைக் கற்று அதிலும் தேறினார்.இவ்விதமாக தமது உயர்நிலைக் கல்வியில் ஒவ்வொரு ஆண்டுக்குமான இரண்டு கிரோடுகளை, முன்னதாகவே முடித்துக் கொண்டார்.

தங்கள் நம்பிக்கைக்காக  ஒடுக்கப்படுகிற கிறிஸ்தவர்களுக்காக வாதாட, ஜியா இஸ்லாமிய சட்டத்துறையைக் கற்க விரும்பினார். இதற்காக, காபூல் சட்டக்கல்வியில் இளநிலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். கல்வினின் மறுமலர்ச்சிக் கொள்கைகளைக் கற்றுக் கொள்வதற்காக, அதே பெயரில் உள்ள கல்விக் கூடத்திலும் (Calvin's Institutes) அவர் பயின்றார்.

கிறிஸ்தோபல் குருடர் சுவிஷச நிலையம் (Christoffel Blind Mission), ஜெர்மனிய மொழியில் பிரேய்ல் புத்தகங்களை ஆப்கானிஸ்திய குருடர் மாணவர்களின்  நூல் நிலையத்திற்கு வழங்கியது. இப்புத்தகங்களையும் வாசிக்க விரும்பிய ஜியா, இதர மாணவர்களோடு, காபூலில் உள்ள கோத்தே கல்லூரியில்()Goethe Institute)  ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளச் சென்றார். அங்கேயும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்த அவர், ஜெர்மன் மொழியை ஆழமாகக் கற்றுக் கொள்ள உபகார நிதியை வென்றார். ஒரு பார்வையற்ற மாணவருக்கு ஏற்பாடுகளும் வசதிகளும் செய்யமுடியாத‌ காரணத்தால், ஜெர்மன் நாட்டவர் அவருக்கு வழங்கிய சலுகையை திரும்ப பெற்றுக்கொண்டனர். தான் என்ன செய்யலாம் என்று அவர்களிடம் கேட்டார். சுயமாகவே பயணித்து, தன் சொந்த நலனைப் பேணிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர். அதற்குச் சம்மதித்த பிறகே அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டது. அந்த உயர்நிலைப் பயிற்சியிலும், அவர் முதல் மாணவராகத் தேர்வு பெற்றார்.

ஜியா வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை ஈரானின் பெர்சிய மொழியில் இருந்து தனது சொந்த மொழி வழக்கான ஆப்கானிய டாரி (Afghan Dari dialect) மொழிக்குப் பெயர்ப்பு செய்தார். இதனை லாகூரில் உள்ள பாகிஸ்தானிய வேதாகம சங்கம் பதிப்பித்தது. மூன்றாவது பதிப்பை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பதிப்பகம் 1989ம் ஆண்டில் பதிப்பித்தது. சௌதி அரேபியாவிற்குச் சென்று குர்ஆனிய வசன மன்னப் போட்டியிலும் வாகை சூடியிருக்கிறார். அந்த வெற்றியில் பிரமித்துப் போன நீதிபதிக் குழு, அரபு மொழியறியாத இன்னொரு இனத்தார் முதல் நிலையில் வென்றதில் எரிச்சலும் கொண்டனர். இத்தோல்வியைச் சரிகட்டும் வகையில் அரபியப் போட்டியாளர்களுக்கு வேறு பரிசுகளை ஈடுகட்டினர், அதாவது "சிறப்பான அரபியன்" என்ற பரிசை அரபியர்களுக்கு கொடுத்தார்கள். ஜியாவைப் போன்ற வெவ்வேறான பார்வையற்ற மாணவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், மார்ச் 1973ல், ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் காபூலிலும் ஹெராட்டிலும் உள்ள இரண்டு பார்வையற்றோர் கல்லூரிகளையும் மூடிவிடுமாறு எழுத்துப்பூர்வமான உத்தரவை அனுப்பியது, ஹெரட் என்ற பட்டணம் காபுலிருந்து 700 மைல் தூரம் உள்ளது. குருடர் கல்வியில் புலமைவாய்ந்த அனைத்து ஆசிரியர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு ஒரு வார கால அவகாசத்தில் வெளியேறுமாறும் உத்தரவிட்டது. இந்த ஆக்கப்பூர்வமான ஆசிரியர்கள் வெளியேறும்போது, ஏசாயா 42.16ல் உள்ளதுபோல, குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன். இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன், என்ற வாக்குத்தத்தத்தை வழங்கினார்.

இதற்கு முன்பு காபூலில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை அந்நாட்டின் முஸ்லீம் அரசாங்கம் இடித்துத் தள்ளியது. எய்சன்ஹோவர்(Eisenhower) என்ற அமெரிக்கப் பிரதமர், 1959ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டபோது, காபூலுல் ஓர் ஆலயத்தை எழுப்ப அரசர் ஜாஹி ஷாவிடம் அனுமதி கேட்டுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள முஸ்லீம் தூதரக அதிகாரிகளுக்கு மசூதி எழுப்ப அனுமதி வழங்ககப்பட்டதுபோல, ஆப்கானிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ அதிகாரிகள் வழிபாடு நடத்த பரஸ்பர அடிப்படையில் ஆலயம் எழுப்ப அனுமதி வழங்குமாறு  அதிபர் கேட்டிருந்தார். பன்னாட்டுக் கிறிஸ்தவர்கள் இந்த ஆலயம் எழுப்புவதற்கு நிதியுதவி வழங்கினர். மிகவும் சௌந்தரியமான ஆப்கானிஸ்தானிய பளிங்கில் எழுப்பப்பட்ட மூளையின் தலைக்கல்லில், நமது பாவங்களில் இருந்து விடுவிக்க தம்முடைய இரத்தத்தைச் சிந்திய தேவனுக்கு மகிமை உண்டாக, எல்லா தேசத்தாரும் தங்கள் ஜெபத்தை ஏறெடுக்கும் மனையாக, மாண்புமிகு ஷாஹிர் ஷா வளாகத்தில், மே 17, 1970ல் அபிஷேகிக்கப்படுகிறது என்றும், இயேசு கிறிஸ்துவே இந்தக் கட்டிடத்தின் தலைமை மூலைக் கல் என்றும் பதிக்கப் பட்டிருந்தது.

இந்த ஆலயத்தின் தடுப்புச் சுவர் இடிக்கப்படும் பொருட்டாக, பட்டாளங்கள் சென்றபோது, ஒரு ஜெர்மனியக் கிறிஸ்தவ வணிகர், காபூலின் துறையிடம் சென்று, உம்முடைய அரசாங்கம் இந்த தேவ வாசஸ்தலத்தைத் தொட்டால், உம்முடைய அரசாங்கத்தையே தேவன் வீழ்த்திப் போடுவார், என்று எச்சரித்தார். இது ஒரு தரிசனம் என்று பிற்பாடு நிரூபிக்கப்பட்டு விட்டது. இதனை அலட்சியப்படுத்திய காபூல் துறையானவர், தனது அரசாங்கம் எந்த மாற்றீட்டுக்கும் பணியாது என்ற பாணியில், அந்த ஆலயக் கட்டிடத்தை நஷட ஈடு கொடுக்காமல், இடித்துத் தள்ள அனுமதிக்கும்மாறு சபையாருக்கு உத்தரவுக் கடிதத்தை அனுப்பினார். அதற்கு மறுமொழி கூறிய சபையார், இந்த ஜெபவீட்டின் மீது தங்களுக்குக் கூட உரிமையில்லாததால், யாரிடமும் இதனை ஒப்படைக்க முடியாது என்றனர். அரசாங்கம் தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டு வந்து இதனை இடித்துப் போட்டால், அவர்கள் தேவனுக்குப் பதிலளிக்கப் பாத்திரர் ஆகின்றனர் என்றும் எச்சரித்தனர்.

காவல் துறையினரும், பணியாளர்களும் ஸ்தலத்திற்குச் சென்று ஆலயத்தை இடித்துத் தறைமட்டமாக்கினர். அச்செயலை ஆட்சேபிப்பதற்குப் பதிலாக சபையார், அவர்களுக்குத் தேனீரும் பலகாரங்களும் வழங்கினர். பன்னாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் ஜெபித்ததோடு, ஆப்கானிஸ்தானிய தூதரகத்திற்குப் பல தேசங்கள் கடிதங்களும் எழுதின. பில்லி கிரகமும், இதர உலகக் கிறிஸ்தவத் தலைவர்களும் இதனை எதிர்த்துத் தங்கள் கவலையை அரசருக்குத் தெரிவித்தனர்.

ஜூலை 17, 1973ல், ஆலயம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது. அன்று இரவு, சூழ்ச்சிகரமான முறையில், ஆலயத்தை இடித்துத் தள்ளுவதில் பொறுப்பேற்ற ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் கவிழ்ந்து போனது. நல்ல நாள் தீய நாள் என்று நாள் பார்க்கும்  ஆப்கானிஸ்தானியர்கள்,  மேசியாவாகிய இயேசு, (பரலோகத்தில் இருந்து) இறங்கி வந்து, தமது ஜெப வீட்டை இடித்துத் தள்ளிய அரசாங்கத்தைக் கவிழ்த்துப் போட்டார், என்றனர். 227 ஆண்டுகளாக மன்னர் ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தான், அதே இரவில் ஒரு தாவுத்  (Daoud) என்ற பிரதமரின் கீழ் ஜனநாயக நாடாக மாறியது. 1978ம் ஆண்டில் கம்யூனிஸ்டுகளின் சூழ்ச்சியில் இந்த அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டது. 1979ம் ஆண்டில், கிறிஸ்மஸுக்கு மறுநாள், ரஷிய அரசாங்கத்தின் படையெடுப்பில், இந்த அரசாங்கமும் கவிழ்ந்து போனது. இலட்சக் கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக சென்றனர். அவர்களில் ஒருவர், நமது அரசாங்கம் கிறிஸ்தவ ஆலயத்தை இடித்துத் தள்ளியதால், தேவன், நமது தேசத்தை நியாயந்தீர்க்கிறார் என்று கூறக் கேட்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ், காபூல் பார்வையற்றோர் கல்லூரி மீண்டும் செயல்படத் தொடங்கி, ஜியா அதற்குப் பொறுப்பாக்கப்பட்டார். அங்கு ஜியா மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு அவர் பின்னர் வற்புறுத்தப் பட்டார். ஆனால், அவர் மறுத்து விட்டார். ஓர் அதிகாரி, இக்கட்சியில் சேர மறுத்தல், நீ கொல்லப்படுவாய் என்று மிரட்டியிருக்கிறார். தான் இந்த மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும், அரசாங்கம் தனது உயிரை பறித்துக் கொள்ளத் தயாராக உள்ளதா என்றும் கேட்டு இருக்கிறார்.

இறுதியாக, ஒரு பொய் குற்றச்சாட்டில், ஜியா கைது செய்யப்பட்டு, காபூலுக்கு அப்பால் உள்ள புளி சார்க்கி அரசியல் சிறையில், அடைக்கப்பட்டார். அங்கு மேலும் ஆயிரக் கணக்கானோர் மரண தண்டனைக்கு ஆளாகியிருந்தனர். குளிர்காலக் கடுமையில் அவர்களை காப்பாற்றுவதற்கு அவர்களுக்கு போதுமான சூடு அங்கு இல்லை அல்லது அதற்கான வசதியும் இல்லை. அவர் தமது மேல்சட்டையை மட்டும் போர்வையாகக் கொண்டு, குளிர்ந்த மண் தரையில்  உறங்க நேறிட்டது. தனது பக்கத்தில் இருந்த கைதிக்கு, ஒரு மேலாடைகூட இல்லாததால், அவர் மிகவும் அவதிப்பட்டார். யோவான் ஸ்நானகன், "இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்". என்று சொன்னதை ஜியா அறிந்திருந்தார். (லூக்கா 3.11). எனவே, தனது ஒரே மேலாடையையும் கழற்றி, இல்லாத அயலானிடம் கொடுத்தார். அந்த நாளிலிருந்து, தேவன் அற்புதமான முறையில் ஒவ்வொரு நாள் இரவு முழுவதும் வெப்பம் காத்தார். தன்னை ஓர் ஆதரவாளர் அரவணைத்துக் கொண்டதுபோல் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கினார்.

சிறையில், ஜியாவை மூளைச் சலவை செய்ய, பல அதிர்ச்சி சோதனையை வழங்கினர். மின்சாரத்தைப் பாய்ச்சி, அவருடைய வலது நெற்றியில் தீ வடுவை ஏற்படுத்தினர். ஆனால், அவர் தனது விசுவாசத்திற்கு விலைபேசவில்லை. சிறையில் ரஷ்ய அரசாங்கம் அவருக்கு ரஷ்ய மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, அதையும் கற்றுப் புலமைபெற்றார்.

கம்யூனிஸ்ட்டு காரர்கள் இறுதியாக டிசம்பர் 1985ல் அவரை விடுவித்தனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஜியா ஆதியாகம் 12.1-3 வரை தனது பிரேய்ல் வேதாகமத்தை வாசித்தார். கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.  என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானை விட்டு சுவிசேஷப் பணிக்காகப் பாகிஸ்தான் புறப்பட வேண்டும் என்று ஜியா உணர்ந்தார். குருடரான ஒரு பிச்சைக்காரரோடு அவருக்கு நட்பு உண்டானது கந்தலான உடைகளை உடுத்திக் கொண்டார். தனது நாட்டை விட்டுப் புறப்படும்போது, உடன் வந்த நண்பரை, தனது சார்பாக பேசுவதற்குப் பணித்துக் கொண்டார். இதன் மூலம் தனது உண்மையான அடையாளத்தை இராணுவத்தினரடமிருந்து மறைக்க முடிந்தது. இவ்வண்ணமாக, சோவியத்தின் சோதனைச் சாவடியில் இருந்து, காபூலின் துரித சாலையைக் கடக்க முடிந்தது. 150 மைல் கொண்ட கைபர் பாஸையும் அதன் பிறகு பாகிஸ்தானையும் கடக்க அவர்களுக்குப் 12 நாட்கள் பிடித்தன.

தனது சொந்த கிளை மொழியான டாரிக்கு, பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்த அனுபம் இருந்தததால், பாகிஸ்தானை அடைந்தவுடன், ஐக்கிய அமெரிக்காவிற்குச் சென்று, எபிரேய மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்து. ஆனால், கைவிடமுடியாத தனது ஜனத்தாராகிய ஆப்கானிஸ்திய அகதிகள் மத்தியில் தாம் அதிகமான சேவைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதை நினைத்து, கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அங்கே பார்வையற்றோருக்கான ஒரு கல்லூரியை அவர்களுக்காக நிறுவினார். பாக்கிஸ்தானிய பிரதான மொழியான உர்துவைக் கற்றுக் கொண்டு, கிறிஸ்தவ சபைகளில் உபதேசிக்கலானார். மேலும், புதிய ஏற்பாட்டு கதைகளை சிறுவர்களுக்கான புத்தகங்களாக‌ டாரிக்கு மொழியில் மொழிப்பெயர்த்தார்.

மார்ச் 23, 1988ல், ஒரு முஸ்லீம் தீவிரவாதக் கூட்டத்தினர்(இஸ்பே இஸ்லாமி [இஸ்லாமிய கட்சி] என்ற குழு) ஜியாவைக் கடத்தினர். ஆங்கில அறிவுடையவரானதால், ஜியா ஒரு சிஐஏ உளவாளி என்றும், ரஷ்ய மொழி அறிவுடையவரானதால், சோவியத்தின் உளவாளி என்றும், கிறிஸ்தவர் என்பதால்(இஸ்லாமை விட்டு வெளியேறியவர்), ஒரு சமயத் துரோகி என்றும் அவர் மீது குற்றஞ் சுமத்தப் பட்டது. மணிக் கணக்கில் அவர் உருளைகளால் அடித்து நொறுக்கப் பட்டார். பார்வையுடைய ஒருவன், தன்னை நோக்கி வீரிட்டு வரும் உருளையை உணர்ந்து, நகர்ந்து அந்த வேதனையைச் சிறதளவாவது சமாளிக்க முடியும். ஆனால், கண்கள் கட்டப்பட்ட நிலையில் உருளைகள் வீரிட்டு வருவதை உணர்ந்து வேதனையைச் சற்றளவாவது சமாளிக்க முடியாது. தேவனாகிய இயேசு கிறிஸ்துவும் இதே போன்ற சொல்லொன்னா வேதனையைத்தான் கடந்து சென்றார் (லூக்கா 22.64). அவருடைய (ஜியாவின்) துணைவியாரும் பெண் பிள்ளைகளும் பாகிஸ்தானுக்குள் பிரவேசித்து, கடத்தப்படும் வரைக்கும் அவரோடுதான் இருந்தனர். இச்சம்பத்திற்கு மிகச் சமீபத்தில், அவருடைய துணைவியார், தந்தையின் சாயலையுடைய ஓர் அழகான ஆண் பிள்ளையை ஈன்றெடுத்தார். ஆனால், ஜியாவுக்குத் தனது புதிய வாரிசைப் பற்றித் தெரியுமா என்பதை யாரும் அறியர்.

இஸ்லாமியர் கட்சி ஜியாவைக் கொன்று விட்டது என்று உறுதியற்ற இறுதி ஆதாரங்கள் கூறுகின்றன. கடத்தப்படுவதற்கு முன், ஆகக் கடைசியாக தனது நண்பரிடம், தாம் கடத்தப்பட்டால், திண்ணமாகக் கொல்லப்படுவார் என்று கூறியிருக்கிறார். இதே இஸ்லாமிய கட்சி, சித்திரவதைக்கு ஆளான இரண்டு தேவைப்படும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு, உதவிப் பொருட்களை எடுத்துச் சென்ற இரண்டு பாக்கிஸ்தானியக் கிறிஸ்தவர்களைக் கைது செய்தது. இவர்களை விடுவிக்குமுன், ஜியா நோட்ராட்டைக் கொன்று போட்டது போல் நாங்கள் உங்களைக் கொல்லப் போவதில்லைஎன்று கூறியதை அவர்களில் ஒருவன் கூறியிருக்கிறார். ஜியா, படு கொடூரமான முறையில் இஸ்லாமியக் கட்சியினரால் கொல்லப்பட்டிருப்பதற்கு, பாக்கிஸ்தானிய வடகிழக்கு எல்லையின் முன்னணிச் செய்தியாளர் மேலும் ஆதாரமிருப்பதாகக் கூறியுள்ளார்.

பன்னாட்டிப் பிரகடனத்தின், 13வது மனித உரிமை சட்டத்தில், ஒவ்வொருவருக்கும், சுதந்திரமாகச் சிந்திக்கவும், கொள்கையைக் கடைபிடிக்கவும், மத விசுவாசத்தைக் கொள்வதற்கும் உரிமையுண்டு என்று பறை சாற்றுகிறது. ஜியாவிற்கு ஏற்பட்ட அவலம், மனித உரிமை மீறலுக்கு ஓர் உதாரணமாகிவிட்டது. ஜியாவின் உரிமை மீறப்பட்டுள்ளதோடு, அவருடைய விசுவாசத்தின் நிமித்தம் கொல்லவும் பட்டிருக்கலாம். தாம் பிடிபடுவதற்கு முன், ஒரு கிறிஸ்தவ நண்பரிடம் தமக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், தமது குடும்பத்தைப் பராமரிக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார். இன்னும் சில மணித் துளிகளில் ஜியாவிற்கு ஏற்படப்போகும் பரிதாபம் இன்னதென்று அறியாத அவர், சாதகமான பதிலைத் தந்துள்ளார். ஆனால், ஜியாவின் துணைவியாரையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் வட அமெரிக்காவிற்குக் கொண்டு செல்ல அவர் ஏற்பாடும் செய்து விட்டார்.

எந்தவிதமான விசுவாச முறைமையையும் தேவன் மனிதர்களிடத்தில் கட்டாயப்படுத்த வில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையை தேவன் மனிதர்களுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில்,  அரசாங்கத்திற்கு அல்லது ஏதாவது ஒரு குழுவிற்கு, ஒருவரின் விசுவாசத்தைக் கட்டாயப்படுத்த என்ன உரிமை இருக்கிறது? ஆப்கானிஸ்தானின்  புதிய அரசாங்கமானது, மனிதனின் விசுவாச உரிமையை மதிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறோம். இதுவே, மற்ற எல்லா (ஜனநாயக) உரிமைகளுக்கும் அடிப்படையாகி விட்டது. ஆப்கானிஸ்தானியர்களின் பிரதான மொழியான டாரியில், இசா-ய் பாடின் கூட், முசா-ய் பாடின் கூட் என்ற ஒரு பழமொழி உண்டு. இதன் பொருளானது, இயேசுவானவரின் சீடர்கள் தங்களது மார்க்கத்தையும், மோசேயின் சீடர்கள் அவர்களின் மார்க்கத்தையும் பின்பற்றுவார்களாக, என்பதாகும்.

யோவான் 16.2ல் கூறியுள்ளதுபோல், இயேசுவானவர், … மேலும், உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும் என்று, இயேசுவானவர் தீர்க்கதரிசனங் கூறியுள்ளார். அவர் உயிர்த்தெழுந்த பின்னர்,ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன், - இவ்விதமாய் இயேசுவானவர் தமது சீடர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உண்மையில் ஜியா மேசியாவிற்காகக் கொல்லப்பட்டிருந்தால், தமது நித்திய வெகுமதிக்குப் தகுதி உடையவராகி விட்டார். மற்ற எல்லா விலையேறப்பெற்ற விசுவாசிகளும் அந்த உத்தமரைக் காண்பார்கள். 1தெசலோனிக்கேயர் 4.17ன் பிற்பகுதியில்,…. இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என்ற வேத வாக்குத்தத்தமும் நிறைவேறும். அதன் பிறகு ஜியாவின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நாம் புரிந்து கொள்வோம்.

ஆங்கில மூலம்:  The Story of Zia Nodrat




கருத்துகள் இல்லை: