ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 29 நவம்பர், 2015

மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

(மக்காவிற்கு அருகில் உள்ளதா?  (அ) பெட்ராவிற்கு அருகில் உள்ளதா?)

முன்னுரை:

சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள் தம்முடைய "குர்-ஆனிக் ஜியோகிரஃபி" என்ற புத்தகத்தில் இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது ஜோர்டானில் உள்ள பெட்ரா ஆகும் என்று கூறுகிறார். அதற்காக குர்-ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களிலிருந்தும், தொல்லியல் ஆய்வுகளின் படியும் அனேக ஆதாரங்களை தம் புத்தகத்தில் எழுதியுள்ளார். அவைகளில் சிலவற்றை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம். 
மேற்கண்ட கட்டுரைகள் மக்காவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. இப்போது நம்முடைய கவனத்தை பெட்ராவின் பக்கம் திருப்புவோம். குர்-ஆனின் புவியியல் விவரங்கள் எப்படி பெட்ராவிற்கு பொருந்துகிறது என்பதை பார்ப்பதற்கு முன்பாக, தற்காலத்தில் பெட்ரா எங்கே உள்ளது, அதன் முக்கியத்துவம் என்னவென்பதை சுருக்கமாக காண்போம். அதன் பிறகு குர்-ஆன் 11:83ம் வசனம் எப்படி பெட்ராவை குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெட்ரா – சிறு குறிப்பு:

பெட்ரா என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். கிரேக்க மொழியில் பெட்ரா என்றால் கல் என்று அர்த்தம். பெட்ரா அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 3ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இன்று இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. புதிய உலக ஏழு அதிசயங்களில் பெட்ராவும் ஒன்று.[1][2][3][4]

பெட்ராவிற்கும் மக்கா மதினாவிற்கு இடைப்பட்ட தூரம்:

பெட்ராவிற்கும் மக்காவிற்கும் இடையேயுள்ள தூரம் எவ்வளவு என்பதை நாம் அறிந்துக் கொண்டால், நம் கட்டுரைகளை புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். இக்கட்டுரைகள் புவியியல் பற்றிப் பேசுவதால், இந்த தூரக்கணக்கு நமக்கு உதவியாக இருக்கும். இக்கணக்குகளை என்னால் முடிந்த அளவிற்கு சுலபமாக்கியுள்ளேன்.

பெட்ராவிற்கும் மக்காவிற்கும் இடையே 1080 கி.மீ. தூரம் உள்ளது. தரைவழியாகச் சென்றால் இந்த தூரம் இன்னும் அதிகமாக இருக்கும். கூகுள் மூலமாகவே இந்த தூரத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம். கூகுளில் "distance between mecca and petra" என்று டைப் செய்து பார்த்துக் கொள்ளலாம். இக்கட்டுரையில் தரப்பட்ட தூரம் சம்மந்தப்பட்ட விவரங்கள் இதே வகையில் தான் எடுக்கப்பட்டது (தேதி: 28-Nov-2015).

படம் 1: பெட்ரா மற்றும் மக்காவிற்கு இடையேயுள்ள குறைந்த பட்ச  தூரம்

பெட்ராவிற்கும் மதினாவிற்கு இடையே 762 கி.மீ. தூரம் உள்ளது.

படம் 2: பெட்ரா மற்றும் மதினாவிற்கு இடையேயுள்ள குறைந்தபட்ச தூரம்

மேற்கண்ட வரைப்படங்கள் குர்-ஆன் 11:83ஐ புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். 
பெட்ராவைப் பற்றி மேலும அறிய இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டு இருக்கும் தொடுப்புக்களை சொடுக்கவும். நம்முடைய அடுத்தடுத்த கட்டுரைகளிலும் பெட்ராவைப் பற்றிய இதர வரைபடங்களையும், முக்கியமான விவரங்களையும் காண்போம். 
இப்போது குர்-ஆன் 11:83ஐ ஆய்வு செய்வோம்.

மக்காவிற்கு தர்மசங்கடமாக மாறும் குர்-ஆன் 11:83 வசனம் 

இந்த பதினோராவது அத்தியாயம் மக்காவில் இறங்கிய அத்தியாயமாகும். இப்போது இதன் 83வது வசனத்தை மூன்று  தமிழாக்கங்களில் படிப்போம்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன;(அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
11:83. (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) 

பிஜே தமிழாக்கம்:
11:83: (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை

சோதோம் கொமோராவின் அழிவு:

குர்-ஆன் 11:75-83 வசனங்களில் அல்லாஹ் இப்ராஹீம் (ஆபிரகாம்) பற்றியும், லூத் (லோத்து) பற்றியும் அதன் பிறகு எப்படி லூத் இருந்த ஊர் அழிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் பேசுகின்றான். இவ்வூர்களின் பெயர்கள் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பைபிளின் படியும் இதர தொல்லியல் ஆய்வுகளின் படியும், இந்த ஊர்களின் பெயர்கள் "சோதோம்" மற்றும் "கொமோரா" என்று அறியப்பட்டிருக்கின்றன [5]. 

இவ்வூர்களின் மீது அல்லாஹ் எப்படி அழிவை கொண்டு வந்தான் என்றுச் சொல்லிவிட்டு, இந்த மக்காவில் உள்ள மக்கள் "அழிக்கப்பட்டிருக்கும் அவ்வூரை" தங்கள் கண்களால் பார்க்கும்படி இந்நாள் வரைக்கும் அவைகள் அப்படியே பாழடைந்துள்ளது என்றும் சொல்கிறான்.

ஆனால், 83ம் வசனத்தை கூர்ந்து கவனித்தால், "பாழாய் போன அவ்வூர், முஹம்மது துன்புறுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இஸ்லாமிய புனித நகரத்திற்கு வெகு தொலைவில் இல்லை" என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தின் இந்த கடைசிப் பகுதியைத் தான் நான் இக்கட்டுரையில் ஆய்வு செய்துள்ளேன். 

நான் மேற்கோள் காட்டிய மூன்று தமிழாக்கங்களின் கடைசி பகுதியை இங்கு மறுபடியும் பதிக்கிறேன்.

11:83. . . . . (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

11:83. . . .  (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

11:83: . . .  அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை. (பிஜே தமிழாக்கம்)

லூத் வாழ்ந்த ஊர், அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் மக்காவிற்கு அதிக தொலைவில் இல்லை:

குர்-ஆனின் இந்த பதினோராம் அத்தியாயம் மக்காவில் இறக்கப்பட்டது. இவ்வதிகாரத்தில் அல்லாஹ் முஹம்மதுவை துன்புறுத்துகின்ற மக்காவினருக்கு பல அறிவுரைகளை அல்லது நடந்து முடிந்த சரித்திர உதாரணங்களை எடுத்துக் காட்டி எச்சரிக்கை செய்கிறான். சரித்திரத்தை திரும்பிப் பாருங்கள், நான் எப்படி தீமை செய்த ஊர்களை அழித்தேன் என்பதைப் பார்த்து எச்சரிக்கை அடையுங்கள் என்ற தோரணையில் அல்லாஹ் இங்கு பேசுகின்றான். மேலும், நான் ஏற்கனவே அழித்துள்ள ஊர் உங்களுடைய ஊருக்கு அதிக தொலைவில் இல்லை, அது மிகவும் அருகில் உள்ளது. அதனை நீங்கள் சென்று பார்க்க விரும்பினால் பார்க்கலாம் என்பது போல இவ்வசனம் உள்ளது. இவ்வசனத்தை தமிழாக்கம் செய்தவர்கள் கூட இப்படித் தான் பொருள் கொண்டுள்ளார்கள். 

இவ்வசனத்தில் உள்ள பிரச்சனை என்ன?  இவ்வசனத்துக்கும் பெட்ராவிற்கும் சம்மந்தமென்ன? இவ்வசனம் எப்படி "இஸ்லாமின் பிறப்பிடம் பெட்ரா" என்பதை நிருபிக்கும்? போன்ற கேள்விகள் வாசகர்களுக்கு எழும். அதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.

சோதோம் கொமோரா எங்கு உள்ளது?

அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர், லூத் வாழ்ந்த ஊர் ஆகும். இந்த லூத் வாழ்ந்த ஊர் "சோதோம்" ஆகும், அதன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஊர் "கொமோரா" ஆகும். இந்த இரண்டு ஊர்களும், சவக்கடலுக்கு அருகாமையில் இருப்பதை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன [6]. ஆபிரகாமும் லோத்துவும் ஒன்றாக வாழ்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் தனித்தனியாக புரிந்து வாழ்ந்தார்கள். சோதோம் கொமோரா அழிக்கப்பட்டு புகைக்காடாக இருந்த போது, ஆபிரகாம் அதனை தூரத்திலிருந்து பார்த்ததாக பைபிள் கூறுகிறது [6].

சவக்கடல் பகுதி மக்காவிற்கு அருகில் உள்ளதா? அல்லது பெட்ராவிற்கு அருகில் உள்ளதா?

குர்-ஆன் 11:83ன் படி, அல்லாஹ் அழித்த ஊர் (சவக்கடல் சுற்றுப்புறப்பகுதி) இஸ்லாமின் புனித பூமிக்கு தொலையில் இல்லை. அப்படியானால், இஸ்லாமின் புனித பூமி எது? மக்காவா அல்லது பெட்ராவா?  இதனை அறிய மக்காவிற்கும் சவக்கடலுக்கும் இடையே உள்ள தூரத்தை நாம் கணக்கிடவேண்டும். அதே போல பெட்ராவிற்கும் சவக்கடலுக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிடவேண்டும்.

படம் 3: மக்காவிற்கும் சவக்கடலுக்கும் இடையே உள்ள தூரம் – 1211 கி.மீ.

படம் 4: பெட்ராவிற்கும் சடக்கடலுக்கும் இடையே உள்ள தூரம் – 137 கி.மீ.

(இந்த தூரங்கள் நேர்க்கோட்டின் படி கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது இவ்விடங்களுக்கு வானவூர்தியில் சென்றால், மேற்கண்ட தூரம் நமக்கு வரும். தரை வழியில் கணக்கிட்டால், பாலைவனம், மலைகள், காட்டுப்பகுதி என்று பல தடங்கல்களை கடந்துச் சென்றால், தூரம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் வைக்கவும்.)

இன்னொரு முறை குர்-ஆன் 11:83 வசனத்தின் கடைசி பகுதியைப் படிப்போம்:

11:83. . . . . (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

11:83. . . .  (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

11:83: . . .  அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை. (பிஜே தமிழாக்கம்)

மேற்கண்ட பகுதியை படிப்பவர்களின் மனதில் தோன்றும் பிம்பம்/தூரம் என்னவாக இருக்கும்? அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட ஊர் இஸ்லாமின் புனித பூமிக்கு 1200 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று கருதமுடியுமா? அல்லது இஸ்லாமின் புனித பூமிக்கு 100-200 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று கருதமுடியுமா?

"அவ்வூர் அதிக தொலைவில் இல்லை" என்பது – 1200 கிலோ மீட்டருக்கு பொருந்துகின்றதா? அல்லது 130 கிலோ மீட்டருக்கு பொருந்துகின்றதா?  

இரண்டு நாட்கள் பிரயாணமா? அல்லது பன்னிரண்டு நாட்கள் பிரயாணமா?

பெட்ராவிலிருந்து ஒரு குதிரையில் பிராயாணப்பட்டுச் சென்றால், ஒரு நாளுக்கு 100 கிலோமீட்டர் தூரம் கடந்தாலும், சவக்கடல் பகுதியை அடைய (130 கி.மீ. கடக்க) 1-2 நாட்கள் பிடிக்கும். ஆனால், இதே போல, மக்காவிலிருந்து சவக்கடல் பகுதியை அடைய குறைந்த பட்சம் 12 நாட்கள் பிடிக்கும் (100 கி.மீ. * 12 நாட்கள் = 1200 கி.மீ.). மேலும், பாலைவனப் பகுதிகளில், குதிரைகளை விட ஒட்டகப்பிரயாணமே சரியாக இருக்கும். ஒட்டகத்தோடு பிராயாணித்தால் இன்னும் நாட்கள் அதிகமாகும் என்பதை மனதில் வைக்கவும்.[7]

ஒரு ஊரை சென்றடைய 12 நாட்கள் பிடிக்கும் தூரத்தையா அல்லாஹ் "அதிக தொலைவு இல்லை" என்று குர்-ஆன் 11:83ல் சொல்கின்றான்? ஓரிரு நாட்களில் சென்று அடையக்கூடிய ஊரைப் பற்றிச் சொல்லும்போது "அதிக தொலைவு இல்லை" என்றுச் சொல்வது தான் சரியாக இருக்கும். குர்-ஆன் 11:83ஐ மக்காவோடு ஒப்பிடும் போது, அது சாத்தியமில்லாத ஒன்றாக தெரிகின்றது, ஆனால் இதே வசனம் பெட்ராவோடு ஒப்பிடும் போது சரியாக பொருந்துவதை காணமுடியும்.

குர்-ஆன் 11:83ம் வசனம் பெட்ராவில் இறக்கப்பட்டு இருக்கவேண்டும், ஏனென்றால், இவ்வசனத்தின் படி, அல்லாஹ் அழித்த ஊரானது (சவக்கடல் பகுதியானது) பெட்ராவிலிருந்து 137 கிலோ மீட்டர் தூரமிருக்கிறது. முஹம்மது இவ்வசனத்தை சொன்ன போது, அம்மக்களுக்கு தெரிந்த விஷயமாக இது இருந்தபடியினாலும், அப்பகுதி பெட்ராவிற்கு அருகில் இருந்தபடியினாலும், அவர்களுக்கு குர்-ஆனின் எச்சரிக்கை சரியாக புரிந்திருக்கும். எனவே, இவ்வசனத்தில் சொல்லப்பட்ட விவரங்களின் படி, இஸ்லாமிய புனித பூமி பெட்ரா என்று கருதலாம்.  

"இஸ்லாமிய புனித பூமி மக்கா ஆகும்" என்றுச் சொல்வது குர்-ஆன் 11:83ம் வசனத்தோடு மோதுவதற்கு சமமாகும். 

ஒரு சராசரி மனிதன் இவ்வசனத்தை படிக்கும் போது, அல்லாஹ் அழித்த ஊரானது இஸ்லாமிய புனித பூமிக்கு அருகில் இருக்கும் இடமாக இருக்கும் என்று தான் கருதுவான்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கமும் குர்-ஆன் 11:83ம் வசனமும்

இதுவரை மூன்று தமிழாக்கங்களிலிருந்து குர்-ஆன் 11:83ஐ ஆய்வு செய்தோம். IFT தமிழாக்கத்தில் இவ்வசனம் இன்னொரு வகையாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனையும் நாம் ஆய்வு செய்துவிடுவோம். ஒருவேளை IFT யின் குர்-ஆன் தமிழாக்கம் அரபி மூலத்திற்கு அதிக நெருக்கமான தமிழாக்கமாக இருக்குமா? மக்காவிற்கு சாதகமான மொழியாக்கமாக இது இருக்குமா? என்பதை இப்போது பார்ப்போம்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

11:83. அக்கற்கள் ஒவ்வொன்றும் உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது! மேலும் அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை!

இந்த தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியைப் பாருங்கள். "அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை" என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற தமிழாக்கங்கள், "அல்லாஹ் அழித்த அந்த ஊர் தொலைவில் இல்லை" என்று சொல்லும் போது, இவர் "ஊர் என்ற இடத்தில் தண்டனை" என்று தமிழாக்கம் செய்துள்ளார்.

அரபி மூலத்தில் "ஊர் என்றும் இல்லை, தண்டனை என்றும் இல்லை" அதற்கு பதிலாக "அது(ஹிய)" என்று தான் உள்ளது [8]. மொழியாக்கம் செய்பவர்கள், தங்களுக்கு தோன்றியபடி மொழியாக்கம் செய்கிறார்கள்.  

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த தமிழாக்கம் என்னுடைய இந்த கட்டுரையின் கருப்பொருளுக்கு பொருந்தவில்லையே! என்று வாசகர்கள் எண்ணலாம், ஆனால், IFTயின் இந்த தமிழாக்கம் உண்மையில் "அல்லாஹ்வை பொய்யனாக்குகிறது" என்பதை இப்போது காண்போம்.

தண்டனை வெகுதொலைவில் இல்லை:

இந்த IFTயின் தமிழாக்கத்தின்படி, முஹம்மதுவை துன்புறுத்துகின்ற அக்கிரமக்காரர்களுக்கு, தண்டனை வெகு தொலைவில் இல்லை. அப்படியென்றால், லூத் உடைய ஊரார்களை அல்லாஹ் எப்படி அழித்தானோ, எப்படி வானத்திலிருந்து தண்டனையை இறக்கி அவ்வூரை புரட்டிப்போட்டானோ அதே போல, இம்மக்களையும் அல்லாஹ் புரட்டிப்போடும் தண்டனை வெகு தொலைவில் இல்லை. சீக்கிரத்தில் மக்காவின் மக்களை அல்லாஹ் அழித்துப்போடுவான் என்று இவ்வசனம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் படி பார்த்தால், குர்-ஆன் 11:83ம் வசனம் ஒரு "தீர்க்கதரிசனமான" வசனமாகும். முஹம்மதுவை துன்புறுத்துகின்ற மக்காவினரும், மக்கா ஊரும், அல்லாஹ்வால் வானத்திலிருந்து தண்டனை இறக்கப்பட்டு, லூத்துவுடைய ஊரைப் போல  அழிக்கப்படும். ஆனால், இந்த வாக்குறுதியை அல்லாஹ் ஏன் நிறைவேற்றவில்லை?  மக்காவினரை எப்போது அல்லாஹ் அழித்தான்? மக்காவை குர்-ஆன் 11:83ன் படி அல்லாஹ் எப்போது அழித்தான்?

சுருக்கமாகப் பார்த்தால், குர்-ஆன் 11:83ல் சொல்லப்பட்ட தண்டனை இன்று வரை மக்காவினரின் மீதும், மக்காவின் மீதும் நிறைவேறவில்லை.  மக்காவினரில் பலர் முஹம்மதுவோடு சண்டை போட்டு மரித்தார்களே என்று நீங்கள் சொல்லக்கூடும், ஆனால், குர்-ஆன் 11:83 சொல்வது போரில் அவர்களை அழிப்பேன் என்பதுப் பற்றியல்ல. லூத்துடைய ஊரை அழித்தவண்ணமாகவே அழிப்பேன் என்று சொன்னது பற்றியது தான். மேலும், முஹம்மது மக்காவை ஆக்கிரமித்த போது, பெரிய போர் இல்லாமல், இரத்தம் சிந்தாமல் (சிலரை மட்டும் கொன்றார்கள்), மக்காவை ஆக்கிரமித்தார்கள். பெரும்பான்மையான மக்காவினர் கொல்லப்படாமல் காக்கப்பட்டனர். ஆக, குர்-ஆன் 11:83ம் வசனத்தின் வாக்குறுதியை அல்லாஹ் மறந்துவிட்டார் என்றுச் சொல்லலாம். 

இப்போது கீழ்கண்ட இரண்டு தெரிவுகளில், ஒன்றை நாம் தெரிவு செய்யவேண்டும்:

1) IFTயின் தமிழாக்கத்தின் படி, குர்-ஆன் 11:83ல் லூத்துடைய ஊரை அழித்தது போல மக்காவையும் அழிப்பதாக அல்லாஹ் வாக்கு (தீர்க்கதரிசனம்) கொடுத்தான். ஆனால், அல்லாஹ்வின் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை.

2) இதர தமிழாக்கங்களின் படி, அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட ஊர், மக்காவிற்கு வெகு தொலைவில் இல்லை, இதனால் இஸ்லாமின் புனித பூமி மக்கா இல்லை, அது பெட்ரா ஆகும்.

முஸ்லிம்கள் இவ்விரு தெரிவுகளில் எதனை தெரிவு செய்யப்போகிறார்கள்? இதில் எதனை தெரிவு செய்தாலும், அது மக்காவிற்கும், இஸ்லாமுக்கும் பிரச்சனையாகவே இருக்கிறது என்பதை காணமுடியும்.  தமிழ் முஸ்லிம்கள் இக்கட்டுரைக்கு பதில் அளித்தால், நான் இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்களை மறுபரிசீலனை செய்வேன்.

அடுத்தடுத்த கட்டுரைகள்:

இந்த கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்ட குர்-ஆன் 11:83 வசனம் பற்றி சரித்திர ஆசிரியர் கிப்சன் தம்முடைய புத்தகத்தில் குறிப்பிடவில்லை. நான் குர்-ஆன் தமிழாக்கங்களை படிக்கும்  போது என் எண்ணத்தில் தட்டிய பொறிதான் இந்த கட்டுரை. நம்முடைய அடுத்தடுத்த கட்டுரைகளில், பெட்ரா பற்றி ஆசிரியர் கிப்சன் முன்வைத்த ஆதாரங்களைப் பார்ப்போம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] புதிய ஏழு உலக அதிசயங்கள் - https://ta.wikipedia.org/s/mz8


[3] பெட்ரா - https://ta.wikipedia.org/s/dt




[7] மலைகள் மற்றும் கரடுமுரடாண பாதைகள் போன்றவற்றில் ஒரே வேகத்தில் குதி்ரையில் பிரயாணிக்க முடியாது. சராசரியாக ஒரு நாளுக்கு 100 கிலோ மீட்டர் என்று நாம் கருதலாம். குதிரைகள் ஒரு மணிக்கு 50 கிலோ மீட்டரை விட அதிகமான வேகத்தில் ஓடும் திறனுள்ளது. ஆனால், ஓய்வு இல்லாமல் பல மணி நேரம் அதுவும், கரடுமுரடான பாதையில் ஓடும் போது, வேகமும் குறையும், சோர்வும் உண்டாகும். குதிரயின் உண்மை வேகத்தைப்  பற்றி அறிய இந்த தொடுப்பை சொடுக்கவும் -http://www.speedofanimals.com/animals/horse

[8] 11:83 Transliteration - Musawwamatan AAinda rabbika wama hiya mina alththalimeena bibaAAeedin. Hiya

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/mecca_petra/mecca_problem_8.html

முஸ்லிம்களுக்கான பைபிள் பாடங்கள் - அறிமுகம்

முஸ்லிம்களுக்கான பைபிள் பாடங்கள்

அறிமுகம்

அன்புள்ள நண்பனுக்கு,

இந்த வேதாகம நம்பிக்கை பற்றிய ஆராய்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ”ஜலலுத்-தீன் ரூமி” என்பவர் ஒரு புகழ்பெற்ற முஸ்லிம் கவிஞர் ஆவார். இவர் “இருட்டறையில் ஒரு யானை” என்ற கதையை சொன்னார். ஒரு முறை சிலர் ஒன்றாக கூடி, ஒரு யானையை அரேபியாவிற்கு கொண்டு வந்தார்கள்.  அந்த யானையைக் காண மக்கள் அலைமோதிக்கொண்டு வந்தார்கள். துரதிஷ்டவசமாக, அந்த யானை கட்டப்பட்டு இருந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது. மக்கள் அந்த யானையை தொட்டுப் பார்த்து தான் தெரிந்துக் கொள்ளவேண்டிய அளவிற்கு அந்த அறை இருட்டாக இருந்தது. ஒருவர் யானையின் தும்பிக்கையை தொட்டுப் பார்த்தார், யானை என்றால் ”குழாய் போல தொற்றமுள்ள ஒரு மிருகம்” என்று நினைத்துக் கொண்டார். இன்னொருவர் யானையின் காதை தொட்டுப்பார்த்தார், யானை என்றால் விசிறி போல இருக்கும் ஒரு மிருகம் என்று நினைத்துக் கொண்டார். இதே போல யானையை அனேகர் தொட்டுப் பார்த்தனர். யானையின் பக்கவாட்டு உடலை தொட்டுப் பார்த்தவர், யானை ஒரு சுவர் போல இருக்கும் என்று நினைத்தார். யானையின் காலை தொட்டுப்பார்த்தவர், யானை மரம் போல இருக்கும் எனவும், வாலை தொட்டவர் “கயிறு” போல யானை இருக்கும் எனவும் நினைத்துவிட்டார். இப்படி இருட்டறையில் யானையை தொட்டுப் பார்த்தவர்கள் அனைவரும், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் அறிந்துக் கொண்டார்கள், உண்மையில் ஒரு யானை எப்படி  இருக்கும் என்று முழுவதுமாக ஒருவருக்கும் தெரியவில்லை. 

இந்த பைபிள் பாடத்திட்டமானது, முஸ்லிம்கள் ”பைபிளின் நம்பிக்கையை” சரியான விதத்தில் அறிந்துக் கொள்ளும் வகையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, யானையை இருட்டறையில் அல்ல, வெளிச்சத்தில் முழுவதுமாக பார்த்து உண்மையை அறிந்துக் கொள்ளும் வகையில் இப்பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அல் கிதாப் என்று சொல்லப்படும் பரிசுத்த வேதாகமத்தை (அல் குதுபுள் முகத்தஸ்) அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள இப்பாடங்கள் உதவும். 

கிறிஸ்தவர்கள் பல சபை பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டாலும், பைபிளின் அடிப்படை போதனைகளை அனைவரும் இன்னமும் கடைபிடிக்கின்றனர். இதுமட்டுமல்ல, கிறிஸ்தவம் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டு இருப்பதை விட, பைபிளின் போதனை வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பைபிளில் கண்டு கொள்வீர்கள். நாம் பைபிள் நம்பிக்கை பற்றிய அறிவை பைபிளின் மூலமாக பெறவில்லை எனில், அல்லது பைபிளை முழுவதுமாக படிக்காமல், ஆங்காங்கே சில வசனங்களை மட்டும் நீங்கள் படிப்பவராக இருந்தால், உங்களுக்கு பைபிள் என்பது, ”இருட்டறையில் தொட்டுப் பார்த்த யானையைப் போலவே” காட்சி அளிக்கும். 

இந்த பாடங்களை ஒவ்வொன்றாக நீங்கள் படிக்கும்  போது, மேற்கத்திய உலகில் காணப்படுகிற கட்டுப்பாடற்ற, இறைவனுக்கு இடம் கொடுக்காத வாழ்க்கை கிறிஸ்தவம் அல்ல , மாறாக பைபிளின் போதனையை புறந்தள்ளின அல்லது மறுதலித்த ஒரு வாழ்க்கை  என்பதை அறிந்துக் கொள்வீர்கள்.  எனவே, சுயமாக கிறிஸ்தவம் பற்றிய பல கற்பனைகளை உருவாக்கிக் கொள்ளாமல், ஒரு முஸ்லிம் கிறிஸ்தவர்களிடம் சென்று, உங்கள் பைபிளில் காணப்படும் இறைவனுடைய வெளிப்பாடு என்ன என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். இதைத் தான் குர்-ஆன் ஸுரா 10:94 கீழ்க்கண்டவாறு  கூறுகின்றது:

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். 10:94 

பைபிளின் ஆழமான போதனைகளை, ஆன்மீக விவரங்களை விவரிக்க இப்பாடங்கள் தயாரிக்கப்படவில்லை. நீங்கள் பைபிளை மேற்கொண்டு ஆய்வு செய்ய விரும்பினால், இப்பாடங்கள் உங்கள் ஆய்விற்கு ஒரு அஸ்திபாரமாக இருக்கும். எனவே, இந்த பைபிள் ஆராய்ச்சி பயணத்தை எங்களோடு தொடரும் படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். உலகமனைத்திலும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் எப்படி ஒரு புதிய வாழ்வையும், மாபெரும் மகிழ்ச்சியையும் பைபிளை படிப்பதின் மூலம் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இதன் மூலமாக நீங்களும் அறிந்துக் கொள்வீர்கள். 

ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் “உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” என்ற பகுதியில், அப்பாடத்தில் கற்றுக்கொண்டவைகள் பற்றிய சில கேள்விகள் தரப்பட்டிருக்கும். அவை நீங்கள் கற்றுக் கொண்டவைகளை உள்வாங்கிக் கொள்ள உதவும்.

இப்பாடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் “டாக்டர் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து” எடுக்கப்பட்டதாகும். சில இடங்களில் வேறு குர்-ஆன் தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதன் பெயர் குறிப்பிடப்படும். பைபிள் வசனங்கள் “பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா” வெளியிட்ட தமிழ் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

பொருளடக்கம்                                        பாடம் 1: பைபிள் என்றால் என்ன?


ஞாயிறு, 22 நவம்பர், 2015

நியாயத்தீர்ப்பு நாளில் யார் “இறைவன்” என்று அழைக்கப்படுபவர்?

நியாயத்தீர்ப்பு நாளில் யார் "இறைவன்" என்று அழைக்கப்படுபவர்?

இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில்  கீழ்கண்டவாறு சொல்கிறார்: (மத்தேயு 7:21-23)

7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 

7:22  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 

7:23  அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மேற்கண்ட 22ம் வசனத்தில் "அந்நாளில்" என்ற சொல் "நியாயத்தீர்ப்பு நாளை குறிக்கிறது". உலகமனைத்தையும் நியாயத்தீர்ப்பு செய்பவருக்கு முன்பாக அந்த நாளில் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைப் பற்றிய கணக்கை ஒப்புவிக்கவேண்டும்.

இயேசு அந்த நியாயத்தீர்ப்பு நாளின் "நியாயாதிபதி" என்று இங்கு பறைச்சாற்றுகிறார்.

ஒரு நாள் வரும், அந்த நாளில் ஒவ்வொருவருக்கும் "யார் இறைவன் (கர்த்தர்)" என்று தெளிவாக தெரியவரும். இதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் யாருக்கும் வராது [1].

அந்த நாளில் எல்லோரும் தம்மை "கர்த்தாவே / ஆண்டவரே" என்று அழைப்பார்கள் என்று இயேசு சொல்கிறார். இப்படி மக்கள் அழைக்கும் போது அவர் அதனை மறுக்கவில்லை. இப்படி அழைப்பவர்களைப் பார்த்து "ஏன் எனக்கு இப்படிப்பட்ட தெய்வீகத்தன்மையான பட்டத்தைக் கொடுத்து அழைக்கிறீர்கள்" என்றுச் சொல்லி, அவர்களை குற்றப்படுத்தமாட்டார், அதற்கு பதிலாக அவர்களின் கீழ்படியாமைப் பற்றி கேள்வி எழுப்புவார். கிறிஸ்துவே ஆண்டவர் என்று அறிக்கையிட்டவர்களையும், அவரது ஊழியம் செய்து, அவருடைய பெயரில் பல காரியங்களை செய்தவர்களையும் அவர் கேள்வி கேட்பார், அவர்களின் கீழ்படிதல் பற்றி குற்றம் சாட்டுவார் [2]. இப்படிப்பட்ட ஊழியம் செய்த இவர்கள் இயேசுவிற்கு முழு இருதயத்தோடும் கீழ்படிந்தார்களா? அவரோடு தனிப்பட்ட விதத்தில் உறவுமுறையை வைத்திருந்தார்களா? அல்லது மத சடங்காச்சாரங்களை மட்டும் பின்பற்றிக்கொண்டு, அவர் மீது சாராமல் வாழ்தார்களா என்று கேள்வி எழுப்புவார்.

அந்த நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு மட்டுமே நியாயாதிபதியாக இருப்பார், எனவே, இன்று அவரை ஆண்டவர் என்று அழைப்பதும் சரியான ஒன்று தான். 

நாமும் எச்சரிக்கையாக இருப்போம், இயேசுவை (உதட்டளவில்) பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லிக்கொண்டு, அவரை முழுமனதோடு நேசிக்காமல், கீழ்படியாமல் இருந்தால், நம்மிடமும் அந்த நாளில் கேள்விகள் கேட்கப்படும்.

மேற்கண்ட வசனங்களில் மக்களிடம் காணும் பிரச்சனை எதுவென்றால் "அவர்கள் இயேசுவை எப்படி கூப்பிட்டார்கள் என்பது பற்றியது அல்ல, அதற்கு பதிலாக, அவர்கள், அவருக்கு முழுமனதோடு கீழ்படிந்தார்களா?" என்பது தான். 

குர்-ஆனின் 5:116-118 வசனங்கள் சொல்வது போல, இயேசு அந்த நாளில் கேள்விகள்  கேட்கப்படமாட்டார். அதற்கு பதிலாக, அந்த நாளில் நியாயாதிபதியாக அவரே இருப்பார். இவருக்கு முன்பாகத்தான், உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் புரிந்த செயல்களுக்கு கணக்கை ஒப்புவிக்கவேண்டும். இயேசுவை எப்படி இவர்கள் கண்டார்கள், என்னவென்று அழைத்தார்கள் என்பதும் கேட்கப்படும், கடைசியாக நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும்.

மத்தேயு 7:21-23ல் இயேசு கூறியவற்றோடு, முஹம்மது கூறியதாக புகாரி ஹதீஸில் வரும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் [3]

அடிக்குறிப்புக்கள்

[1] பார்க்க பிலிப்பியர் 2:5-11

[2] பார்க்க "The Easy Sinful Nature Of Christianity".

[3] புகாரி ஹதீஸ்கள்:

6585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :7 Book :81

6586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் ('அல்கவ்ஸர்') தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.  . . .Volume :7 Book :81

6587. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :81

மூலம்: http://www.answering-islam.org/BibleCom/mt07_21-23.html

இஸ்லாமியர்களுக்கான பைபிள் விரிவுரை

Source: http://www.answering-islam.org/tamil/bible/biblecom/mt07_21_23.html


சனி, 21 நவம்பர், 2015

”மனித அவதாரம்” பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்

"மனித அவதாரம்" பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்

(The "Incarnation Fallacy")

இது மிகச் சிறிய கட்டுரையாகும். கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் "இயேசு இறைவனாக இருக்கிறார் என்றும் அவரே மனிதனாக வந்தார் என்றும்" நம்புகிறார்கள். (மனித அவதாரம் பற்றிய மற்றொரு கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.)

பொதுவாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு சொல்லும் போது, "இயேசுவை மனிதனாக காட்டும் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை எடுத்துக் காட்டி, இவைகளின் படி இயேசு ஒரு மனிதன் தான், அவர் இறைவன் அல்ல" என்றுச் சொல்வார்கள்.

தன் இலக்கை தவறவிட்டுவிட்ட அம்பு போன்றது தான் முஸ்லிம்களின் இந்த வாதம். இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், "இயேசு ஒரு மனிதனாகவும் இருக்கிறார்" என்று கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய மற்றும் அறிய விஷயத்தை கண்டுபிடித்து சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற விஷயத்தைத் தான் அவர்கள் சொல்கிறார்கள். மேலும், முஸ்லிம்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் "பைபிளிலிருந்து தங்களுக்கு தேவையான வசனங்களைத் தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுகிறார்கள்" என்பதாகும். ஆனால், இயேசுவைப் பற்றி கிறிஸ்தவர்களின் புரிந்துக் கொள்ளுதல் தான் சரியானது. பைபிளில் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் ஒன்று சேர்த்து கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள். முஸ்லிம்களைப் போல சில வசனங்களை விட்டுவிட்டு கிறிஸ்தவர்கள் பொருள் கொள்வதில்லை. இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களையும், மனிதனாக காட்டும் வசனங்களையும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதினால், அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் தவறு இருப்பதில்லை. "இதோ இவ்வசனங்கள் இயேசுவை மனிதனாக காட்டுகின்றன" என்று முஸ்லிம்கள் நம்மிடம் சொல்வது, அவரைப் பற்றிய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் இதர வசனங்களோடு அவைகள் முரண்படுவதில்லை. 

உண்மையை உள்ளபடியே சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியது "இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை அல்ல, இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களைத் தான்".  இப்படி ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை ஆய்வு செய்வதினால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.

முஸ்லிம்கள் இந்த "மனித அவதார வாதத்தைத்" தான் பெரும்பான்மையாக தங்கள் விவாதங்களில் பயன்படுத்துகிறார்கள். நமக்குத் தெரிந்த விஷயத்தை நம்மிடமே வந்து "ஒரு புதிய விஷயமாக முஸ்லிம்கள்   சொல்வது" வேடிக்கையானதாகும். ஆதாவது நம்முடைய தாய் மொழியிலும், இன்னும் நமக்கு தெரிந்த ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பைபிளை படிக்கும் நம்மிடம் வந்து "இதுவரை இவ்வசனங்களை நீங்கள் பார்க்கவில்லை, இதோ நாங்கள் முதல் முறையாக இந்த வசனங்களை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம்" என்று முஸ்லிம்கள் சொல்வது வேடிக்கை என்றுச் சொல்லாமல் என்னவென்றுச் சொல்வது?

இதே போல, இன்னொரு பிழையான வாதத்தையும் முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள். அது திரித்துவத்தைப் பற்றிய வாதமாகும். தேவன் திரித்துவராக இருக்கிறார் என்றும், அதே நேரத்தில் தேவன் ஒருவரே என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்களின் நம்பிக்கை இப்படி இருக்கும் போது, முஸ்லிம்கள் நம்மிடம் வந்து "தேவன் ஒருவர் என்பதை வெளிக்காட்டும் பைபிளின் வசனங்களை மட்டும் தனியாக எடுத்து மேற்கோள் காட்டி, பார்த்தீர்களா? தேவன் ஒருவர் தான்" என்று சொல்கிறார்கள்.  இவ்வசனங்கள் எவ்விதத்திலும் நமக்கு முரண்படுவதில்லை. தேவன் ஒருவரே என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், இதில் ஆச்சரியமோ அல்லது முரண்பாடோ இல்லை. 

உண்மையாகவே முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்யவேண்டுமென்றால், பைபிளில் "இயேசுவின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும், பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும் ஆய்வு செய்யவேண்டும்".  தேவனுக்கு தெய்வீகத்தன்மை இருப்பது போலவே, இயேசுவிற்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் தெய்வீகத் தன்மை உள்ளது என்பதை விளக்கும் பைபிள் வசனங்களை முஸ்லிம்கள் ஆய்வு செய்து, தங்கள் முடிவைச் சொல்லவேண்டும். 

மூலம்: http://www.answering-islam.org/Fallacies/incarnation.html

முஸ்லிம்களின் தர்க்கப் பிழைகள் பற்றிய கட்டுரைகள்

விவாத மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/responses/fallacies/incarnation.html


ஞாயிறு, 15 நவம்பர், 2015

குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை

குர்-ஆன் வசனங்களை இரத்து செய்வது என்பது இறைவசனங்களை திருத்துவதற்கு சமம் என்று ஒருவர் கூறினார், அதற்கு ஒரு முஸ்லிம் கீழ்கண்டவிதமாக பதில் அளித்தார்:

"அல்லாஹ் தன் வசனங்களை இரத்து செய்வது" பற்றி விமர்சனம் செய்த சகோதரருக்கு இந்த பதிலை தருகிறேன்.

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். நீங்கள் ஒரு அலுவலகத்தின் மேலாளர் (Manager) என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு சில கட்டளைகளை நீங்கள் தரவேண்டியுள்ளது. இதற்காக உங்கள் செயலாளரிடம் (Secretary) கட்டளைகளைக் கொடுத்து, இவைகளை அப்படியே டைப் செய்யும் படி கேட்டுக் கொள்கிறீர்கள். இந்த செயலாளர் உங்கள் அனுமதியில்லாமல், அந்த கட்டளைகளோடு சிலவற்றை கூட்டுகிறார், சிலவற்றை நீக்கிவிடுகிறார். இந்த செயலாளர் செய்தது என்ன? மேலாளர் கொடுத்த மூல கட்டளைகளை இவர் திருத்திவிட்டார். இது தவறாகும். ஆனால், இப்போது இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். 

மேலாளராகிய நீங்கள் உங்கள் கைகளாலேயே அக்கட்டளைகளை டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் டைப் செய்யும் போது, சிலவற்றை புதியதாக சேர்க்கிறீர்கள், சிலவற்றை நீங்களே நீக்கிவிடுகின்றீர்கள். அதன் பிறகு  உங்கள் செயலாளரிடம் கொடுத்து வேலையாட்களிடம் சேர்க்கும்படி சொல்கிறீர்கள். இந்த எடுத்துக்காட்டில்,  மேலாளராகிய நீங்கள் செய்ததை "மூலத்தை திருத்திவிட்டார்" என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. இக்கட்டளைகள் உங்களிடமிருந்து நேரடியாக வந்தபடியினால், உங்கள் அலுவலகத்தின் வேலையாட்களும், செயலாளரும் அவைகளை "மூலம்" என்று தான் சொல்வார்கள், திருத்தப்பட்டது என்று சொல்லமாட்டார்கள். இதே போலத்தான் அல்லாஹ் தன் வசனங்களை மாற்றுகிறார், அது மாற்றப்படாத மூலம் என்றே கருதப்படும். சிறந்த உவமைகள் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். 

கிறிஸ்தவனின் பதில்:

நீங்கள் ஒரு அருமையான உவமையைச் சொல்லியுள்ளீர்கள். எனக்கு உவமைகள் என்றால் அதிகமாக பிடிக்கும், ஏனென்றால், பல வரிகளில் விளக்கவேண்டிய விவரங்களை நச்சென்று நான்கு வரிகளில் அது விளக்கிவிடும். 

ஆனால், உங்கள் உவமையில் அனேக இறையியல் பிரச்சனைகள் இருப்பதை நான் காண்கிறேன்.

ஒரு மேலாளர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, கட்டளைகளை மாற்றுவதைப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த மேலாளர் தன்  செயலாளரிடம் தன் கட்டளைகளை கொடுத்துவிட்ட பிறகும், தன் மனதை மாற்றிக்கொண்டு கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை அல்லது செயலாளரிடம் கொடுப்பதற்கு முன்பாகவே கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை. இந்த மேலாளருக்கு தன் கட்டளைகளை மாற்றும் அதிகாரம் உள்ளது, அதனை யாரும் கேள்வி கேட்கமுடியாது. 

ஆனால், ஒரு முக்கியமான விவரத்தை  இங்கு கவனிக்கவேண்டும், அதாவது, இந்த மேலாளர் ஒரு சாதாரண மனிதர் ஆவார், இவர் இப்படிப்பட்ட தவறுகளை செய்யத் தான் செய்வார்.  இவர் ஏன் தன் கட்டளைகளை மாற்ற விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால்,  தன் கட்டளைகளில் தவறு இருப்பதாக  இவர் உணருகிறார், அந்த தவறு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். தன் தவறை இவர் உணரும் தருணத்தில் உடனே தன் முந்தைய கட்டளைகளை மாற்ற முயலுகிறார். தான் முன்பு எழுதிய கட்டளைகளை மாற்றுவதற்கு அவருக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது, அதனால் அவர் மாற்றுகிறார். 

இப்போது உங்களால் இந்த உவமையில் உள்ள பிரச்சனையை காணமுடியும் என்று நம்புகிறேன். அல்லாஹ் தன் முந்தைய வசனங்களை இரத்து செய்துவிட்டு, அவைகளுக்கு பதிலாக புதிய கட்டளைகளை கொடுக்க முடிவுசெய்துவிட்டால், இதன் அர்த்தம் என்ன? தாம் தவறு செய்துவிட்டதாக அல்லாஹ்வே சுய ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்று  அர்த்தமாகுமல்லவா? வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், தாம் முன்பு இறக்கிய கட்டளைகள் "பிழையற்ற கட்டளைகள் அல்ல, அவைகளில் தவறு இருக்கிறது, எனவே அவைகளுக்கு பதிலாக புதிய பிழையில்லாத கட்டளைகள் தேவைப்படுகிறது" என்று அல்லாஹ் சொல்வது போல இருக்கிறது.

அன்பான இஸ்லாமிய சகோதரரே, உங்களுடைய உவமையின் மூலமாக, "அல்லாஹ் தவறு செய்துவிட்டார்" என்று நீங்கள் அவரை குற்றப்படுத்துகிறீர்கள்.

ஆனால், இறைவன் சர்வ ஞானியாக இருக்கிறார். புதிய சூழ்நிலைகளைப் பார்த்து, மக்களின் புதிய செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை, அவருக்கு சர்வமும் தெரியும். நடந்துவிட்டதும், நடந்துக் கொண்டு இருப்பதும், நடக்கப்போவதும அவருக்குத் தெரியும்.  இறைவன் தன் முந்தையை கட்டளைகளை இரத்து செய்துவிட்டார் என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய கோட்பாடு, இறைவனின் தகுதிக்கும், இலக்கணத்துக்கும் இழுக்கை கொண்டு வருகிறது. 

ஒருவேளை அல்லாஹ் குர்-ஆன் வசனங்களை இறக்குவதற்கு முன்பாக மாற்றி இருந்திருந்தால், "இந்த மாற்றத்தைப் பற்றி" நாம் அறிந்திருக்கமாட்டோம். இப்போது நாம் "இரத்து செய்த வசனங்களையும், இரத்து செய்யப்பட்ட வசனங்களையும்" அறிந்திருக்கிறோம்.  இதன் மூலம் இரண்டு விவரங்களை நாம் அறிகிறோம், "முதலாவது, அல்லாஹ் தம்முடைய முந்தையை வசனங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். இரண்டாவதாக, தம்முடைய முந்தைய வசனங்களில் உள்ள தவறை உணர்ந்துக் கொள்ள அவருக்கு அதிக நாட்கள் பிடித்துள்ளது என்பதாகும்". 

முஸ்லிம்களின் படி, குர்-ஆன் என்பது படைக்கப்பட்ட ஒன்று அல்ல, அது நித்திய நித்தியமாக அல்லாஹ்வுடன் இருந்துள்ளது. இப்போது நமக்கு தோன்றும் கேள்வி என்னவென்றால், "முஹம்மதுவிற்கு குர்-ஆன் வசனங்களை இறக்கிவிட்ட பிறகு, எப்படி  அல்லாஹ்விற்கு தன் முந்தைய வசனங்களை மாற்றவேண்டும் என்ற ஞானம் வந்தது? அல்லது தன் முந்தைய வசனங்கள் கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது?".

என்னை பொருத்தமட்டில், "குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல்" என்ற கோட்பாடு அறிவுடையவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த கோட்பாடு பரிசுத்தமான மற்றும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு மிகப்பெரிய அவமரியாதையாகும். இந்த கோட்பாடு, "இறைவன் தவறு செய்பவன்" என்று அவனை குற்றப்படுத்துகிறது. அதாவது முதல் முறை ஒரு காரியத்தை செய்யும் போது (வசனங்களை இறக்கும்போது) அதனை சரியாக செய்யத் திராணியில்லாதவனாக இறைவன் இதன் மூலம் சித்தரிக்கப்படுகின்றான். அதன் பிறகு, தன் பிழையை சரி செய்ய, முந்தைய வசனங்களை இரத்து செய்கிறான். இப்படிப்பட்ட கோட்பாட்டை நிச்சயமாக என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இஸ்லாமின் இரத்து செய்தல் பற்றிய இதர கட்டுரைகளை படிக்க சொடுக்கவும் "Index to Islam (ஆங்கிலம்)" and "Quran section (தமிழ் மற்றும் ஆங்கிலம்)".

இக்கட்டுரைக்கு ஒரு முஸ்லிம் சகோதரர் பதில் கொடுத்துள்ளார். இவருக்கு கிறிஸ்தவர்கள் இரண்டு பதில்களை கொடுத்துள்ளார்கள், அதனை இங்கு படிக்கவும்: 

வெள்ளி, 13 நவம்பர், 2015

மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?


முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

முந்தையை கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்: மக்காவின் பிரச்சனைகள்:அறிமுகம்12345, & 6.

குர்-ஆனிக் ஜியோகிரஃபி (Quranic Geography) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிப்சன் அவர்கள், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா நகரமாகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார், அவைகளில் சிலவற்றை மேற்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம். 

இக்கட்டுரையில் அவர் கூறும் இன்னொரு ஆதாரத்தைப் பார்ப்போம், அதாவது "இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல, ஏனென்றால், இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தை உருவாக்கும் சக்தி அதற்கு இல்லை" என்பது தான் அது. 

இஸ்லாமிய புனித நகரமும் அதன் ஜனத்தொகையும்:

ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரம் பெரிய எண்ணிக்கையில் போர் வீரர்களையும், வியாபாரிகளையும் உருவாக்கியுள்ளது. அதாவது, புனித நகரத்திலிருந்து அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் போருக்காகவும், வியாபாரத்திற்காகவும் சென்று இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், புனித நகரில் அதிக அளவில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால், "7ம் நூற்றாண்டின் மக்காவில் இது சாத்தியமா?" என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.

சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், தம் புத்தகத்தின் 234ம் பக்கத்தில் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரியின் "சரித்திர புத்தகத்திலிருந்து" இந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளார், இவைகளை ஹதீஸ்களிலும் காணலாம். மக்காவினர் முஸ்லிம்களோடு புரிந்த போர்களில் கலந்துக்கொண்ட வீரர்களின் எண்ணிக்கை, மேலும் மக்காவினரின் வணிக கூட்டங்களில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை, இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், நமக்கு அக்கால புனித நகரின் ஜனத்தொகைக்கான அடிப்படை எண்ணிக்கை கிடைத்துவிடும்.

மூல நூல் ஹிஜ்ரி வருடம் / நிகழ்வுமக்கா இராணுவத்தின் / வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கை
தபரி, தொகுப்பு 7, பக்கம் 13ஹிஜ்ரி 1, அல் அப்வா என்ற இடத்தில் நடந்த சண்டை300 குதிரை வீரர்கள்
தபரி, தொகுப்பு 7, பக்கம் 15-16ஹிஜ்ரி 2, மக்கா வணிக கூட்டம் மீது வழிப்பறி100 நபர்கள் கொண்ட வணிக கூட்டம், 2500ஒட்டகங்கள்
தபரி தொகுப்பு 7, பக்கம் 33ஹிஜ்ரி 2, பத்ரு போர்மக்காவின் போர் வீரர்கள் 1000 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 90ஹிஜ்ரி 2, சாவிக் (Sawiq) போர்மக்காவின் போர் வீரர்கள் 200 பேர்
தபரி தொகுப்பு 7, பக்கம் 98ஹிஜ்ரி 3, அல்கரதா என்ற இடம், மக்கா வணிக கூட்டம்மக்காவின் வணிக கூட்டத்திடமிருந்து 20,000திர்ஹம் கொள்ளையடிக்கப்பட்டது.
தபரி தொகுப்பு 7, பக்கம் 110ஹிஜ்ரி 3, உஹுத் போர்மக்காவின் போர் வீரர்கள் 3000 பேர், 200குதிரைப்படை வீரர்கள்
தபரி தொகுப்பு 8, பக்கம் 13ஹிஜ்ரி 5, அகழ்ப்போர், மக்காவினரும் இதர கூட்டங்களும்போர் வீரர்கள் மொத்தம் 10,000 பேர் (மக்காவின் காலாட்கள் மட்டும் 4000 பேர்) [1]

(மூலம்: Quranic Geography, பக்கம் 234) 

முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு மக்காவினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் மக்காவினரிலிருந்து அனேகர் மரித்துப் போயினர். இந்த நஷ்டத்திற்கு பிறகும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபாரிகளையும் இஸ்லாமிய புனித பூமி ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக்கொண்டே இருந்துள்ளது.  மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு போரின் போதும், இரண்டு தரப்பிலிருந்தும் மக்கள் மரித்தனர். இருந்தபோதிலும், மக்காவிலிருந்த குறைஷி மக்கள்  பல ஆயிர போர் வீரர்களைக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டனர். 

உதாரணத்திற்கு, பத்ரு போரில் 1000 பேர், உஹுத் போரில் 3000 பேர், அகழ்ப்போரில் 4000 பேர் மக்காவின் சார்ப்பில் கலந்துக் கொண்டனர். 

இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, இவர்களின் வியாபார கூட்டமும் மிகவும் பெரியது, இவர்களை முஸ்லிம்கள் தாக்கி பொருட்களை கொள்ளையிட்டனர். உதாரணத்திற்கு, மேற்கண்ட பட்டியலில் கொடுத்துள்ளதின் படி, ஹிஜ்ரி 3ம் ஆண்டில் அல்கரதா என்ற இடத்தில் மக்காவின் வணிக கூட்டத்தை முஸ்லிம்கள் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்வங்களை கொள்ளையடித்தனர், கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கு சொந்தமானதாகும். இந்த ஒரு பங்கு மட்டும் 20,000 திர்ஹம் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அப்படியானால், அந்த வியாபார கூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடந்த வழிப்பறிக் கொள்ளையின் போது, மக்காவினரின் வணிக கூட்டத்திடம் இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை 2500 ஆகும். அப்படியானால், வணிக கூட்டத்தின் சிறப்பைப் பாருங்கள். 

இதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி ஒரு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபார கூட்ட மக்களையும் உருவாக்கும் அளவிற்கு விசாலமான பட்டணமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் தற்கால புனித பூமி என்று கருதப்படும் மக்காவைப் பற்றிய தொல்லியல் ஆதாரங்களின் படி மக்கா என்பது ஒரு வறண்ட இடமாகும். அதிக மக்கள் வாழ்வதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் மக்காவிற்கு இல்லை. இப்படிப்பட்ட இடத்திலிருந்து எப்படி இத்தனை போர் வீரர்கள் மற்றும் வியாபாரிகள் எழும்பமுடியும்?  இது தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களின் மற்றொரு சந்தேகம். 

இஸ்லாமிய ஆதார நூல்கள் சொல்லும் விவரங்களின் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புரியும். 

இஸ்லாமியர்களின் படி, ஏழாம் நூற்றாண்டில்:

  • மக்கா ஒரு பெரிய நகரம்
  • குர்-ஆனின் படி நகரங்களின் தாய் (உம்முல் குர்ரா)
  • செல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம்
  • பல ஆயிர போர் வீரர்களைப் பெற்றிருந்த நகரம்
  • சுற்றுப்புற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை செல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நகரம்.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க நகரம் ஒரு சிறிய கிராமம் போல சில நூறு மக்களை மட்டும் கொண்ட கிராமமாக இருக்கமுடியாது. 

புனித நகரத்தின் ஜனத்தொகை கணக்கு - ஏறக்குறைய 48,000 பேர்

மக்காவின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்று நம்மிடம் கணக்கெடுப்பு இல்லை. முஸ்லிம்களிடம் இந்த எண்ணிக்கை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். மேற்கண்ட போர் வீரர்கள் மற்றும் வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாம் புனித நகரின் ஜனத்தொகையை ஓரளவிற்கு கணக்கிடலாம். இது நூறு சதவிகிதம் சரியான கணக்கீடு என்று கருதமுடியாது, ஆனால்,  இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத் தான் புனித நகரில் ஜனத்தொகை இருந்திருக்கமுடியும் என்ற முடிவிற்கு நாம் நிச்சயமாக வரலாம்.

நான் (உமர்) எப்படி புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை 48,000 என்று கணக்கிட்டேன் என்ற விவரங்கள் இக்கட்டுரையின் கடைசியில் "அடிக்குறிப்புகள் & மேலதிக ஆய்வுகள்" என்ற பகுதியில் இரண்டாம் [2] எண்ணில் கொடுத்துள்ளேன், அதனை படித்துக் கொள்ளவும்.

மக்காவும் அதன் வேளாண்மையும்:

மக்காவின் 48,000 ஜனங்களுக்கு உணவுகளை கொடுக்கும் அளவிற்கு மக்காவில் வேளாண்மை இல்லை. 

இதற்கு சில காரணங்களை நாம் கொடுக்கமுடியும்:

1) ஆசிரியர் கிப்சன் அவர்கள் சொல்வதின் படி, மக்கா ஒரு நகரமாக இருந்ததற்கான எந்த ஒரு தொல்லியல் ஆதாரமும் கி.பி. 900க்குள் கிடைக்கவில்லை.   

பார்க்க கட்டுரைகள்: 

மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?

மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?

மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் "மக்காவின்" பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?

2) மக்காவில் திராட்சை, மாதுளை, அத்தி போன்ற கனிவகைகள் மற்றும் இதர காய்கறி, தானியங்கள் விளைவதற்கு ஏற்ற சூழல்  இல்லை. மக்கா ஒரு வறண்ட பிரதேசம், அங்கு வேளாண்மை நடப்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லை. பேரிச்சை தவிர வேறு வகையான வேளாண்மை அங்கு இல்லை. 

3) மக்காவின் மழையின் அளவு (பொழிவு) வருடத்திற்கு 11.1 cm or 4.4 inch ஆகும் [3]. இந்த அளவு மழையின் பொழிவுள்ள இடங்களில் எந்த ஒரு பயிர் வகையின் வேளாண்மையும் நடைப்பெறாது. காய்கறிகள், தானியங்கள் மற்றும் கனிவகைகள் போன்றவைகளின் விவசாயம் நடைப்பெறாது. மக்காவில் பேரிச்சைத் தவிர வேறு எந்த ஒரு வகையான விவசாயமும் நடைப்பெற வாய்ப்புக்கள் இல்லை.

ஆக, இதன் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல அது வேறு ஒரு நகரமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் வருகிறது. சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், அந்த நகரம் பெட்ரா என்று கூறுகிறார்.

முடிவுரை:

இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல என்பதற்கு "இஸ்லாமிய நூல்கள் கொடுக்கும் அதன் ஜனத்தொகை விவரங்களும்" ஒரு காரணம் என்பதை இக்கட்டுரையில் கண்டோம். நம் கணக்கின் படி, குறைந்தபட்சம் 48,000 மக்களைக் கொண்ட நகரமாக புனித பூமி இருந்திருக்கவேண்டும். 

ஆனால், மக்காவின் தொல்லியல் விவரங்களின் படி, ஏழாம் நூற்றாண்டின் மக்கா, வறண்டதும் மக்கள் நடமாற்றமற்ற இடமாகவும் இருந்துள்ளது.  

இஸ்லாமிய நூல்கள் மக்காவின் ஜனத்தொகை 48,000 ஐ விட அதிகமாக இருந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கின்றன, ஆனால் தொல்லியல் விவரங்கள் இதற்கு சாத்தியமில்லை என்றுச் சொல்கின்றன.  அப்படியானால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புலனாகிறது.

இரண்டாவதாக, மக்காவின் பொழிவு (வருடாந்திர சராசரி மழையின், ஈரப்பதத்தின் அளவு) 11 சென்டிமீட்டர் ஆகும். இது வேளாண்மைக்கு ஏற்ற சூழல் அல்ல. இப்படி இருக்க, இவ்வளவு பெரிய ஜனத்தொகைக்கு எப்படி உணவுகளை வழங்க மக்காவினால் முடிந்திருக்கும்? இது சாத்தியமில்லை. அக்காலத்தில் இத்தனை ஆயிர மக்களின் உணவுத் தெவையைப் பூர்த்திச் செய்ய, அதிகமாக வேளாண்மையுள்ள இடம் தான் தேவை, மக்காவைப் போல உள்ள ஒரு வறண்ட பூமியில் இது சாத்தியமில்லை.

குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் சொல்லும் புனித பூமி "இன்று புனித பூமி என்று முஸ்லிம்கள் கருதும் மக்கா அல்ல" என்பது தெளிவாக விளங்குகிறது. 

அடுத்த தொடர் கட்டுரையில் சந்திப்போம்.


அடிக்குறிப்புகள் & மேலதிய ஆய்வுகள்

The bulk of the Confederate armies were gathered by the pagan Quraysh of Makkah, led by Abu Sufyan, who fielded 4,000 foot soldiers, 300 horsemen, and 1,000-1,500 men on camels.[14]

[2] ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித பூமியின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும்?

ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு என்ற விவரம் என்னிடம் இல்லாததால், அதனை நான் கணக்கிட முயன்றுள்ளேன். முஸ்லிம்களிடம் இந்த விவரம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.

மேலே கொடுக்கப்பட்ட பட்டியலின் படி, அகழ்ப்போரில் தான் அதிகமான மக்காவினர் பங்கு பெற்றனர். எனவே, அதனையே நம் கணக்கிற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு போரில் ஈடுபட்டவர்களை நாம் கூட்டத்தேவையில்லை, காரணம் என்னவென்றால், ஒவ்வொரு போரிலும் புதியவர்களே ஈடுபட்டனர் என்றுச் சொல்லமுடியாது. அதே வேளையில், ஒவ்வொரு போரிலும் சில புதிய முகங்கள் பங்குபெற்று இருந்திருக்கலாம். நம் கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையில் போர்வீரர்கள் ஈடுபட்ட போரையே நாம் கருத்தில் கொள்ளலாம்.

அகழ்ப்போரில் 4000 காலாட்கள், 300 குதிரை வீரர்கள், 1,000 – 1500 வரை ஓட்டகத்தின் மீது வந்த வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்[1]. இதில் ஒட்டகத்தின் மீது வந்தவர்கள் 1000 லிருந்து 1500 வரை இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதில் நாம் மத்திய எண்ணை எடுத்துக் கொள்வோம், அதாவது 1250ஐ நம் கணக்கிற்கு எடுத்துக் கொள்வோம் (1000க்கும் 1500க்கும் இடையே இருக்கும் மத்திய எண் 1250 ஆகும்)

மக்காவிலிருந்து வந்த மொத்த வீரர்கள்: 5550 (4000+300+1250 = 5550). 

வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை இதில் பாதியாக கருதலாம், அதாவது 2500 என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நகரத்தின் பொருளாதார வளர்ச்சி வியாபாரிகள் மீதும், விவசாயிகள் மீதும், வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீதும்  சார்ந்திருக்கும். நகரத்தில் உள்ள அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், வியாபாரம் செய்வது யார்? எனவே, வியாபார கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்வோம். 

இவ்விரண்டையும் கூட்டினால் 8050 வருகிறது (5550 போர் வீரர்கள் + 2500 வியாபாரிகள்). இந்த எண்ணிக்கையை ரவுண்ட் செய்து 8000 என்று கணக்கிட்டுக் கொள்வோம் (50ஐ குறைத்துக் கொண்டோம்).

இந்த 8000 பேரில் ஆண்கள் மட்டுமே இருப்பதாக கருதுவோம். இப்போது இவர்களின் குடும்ப நபர்களையும் கணக்கில் கொண்டு, குறைந்த பட்சம் இஸ்லாமிய புனித நகரின் ஜனத்தொகையை கணக்கிடுவோம். 

உமராகிய நான் என் கட்டுரைக்காக, எண்களை வேண்டுமென்றே அதிகரித்து காட்டுகிறேன் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, சில அனுமானங்களை (Assumptions) நாம் விதித்துக் கொள்வோம், அதாவது சில விதிகளை தளர்த்திக் கொள்வோம். 

தளர்த்தப்படும் விதி 1: முஸ்லிம்களின் படி, இஸ்லாம் வருவதற்கு முன்பாக, மக்காவின் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததாம். இஸ்லாம் வந்து "ஒரு ஆண் நான்கு பெண்களை மட்டும்" திருமணம் செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்ததாம். மக்காவினர் இஸ்லாமை ஏற்காதவர்களாக இருந்தபடியினால், நான்கை விட அதிக திருமணங்கள் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். இருந்த போதிலும் மக்காவின் ஜனத்தொகை கணக்கிற்காக, நாம் ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

தளர்த்தப்படும் விதி 2: ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால், ஒரு மனைவிக்கு ஒரு பிள்ளை என்று கணக்கிட்டாலும் எண்ணிக்கை எங்கேயோ சென்றுவிடும், இருந்தபோதிலும், நம் கணக்கில் ஒரு ஆணுக்கு இரண்டு பிள்ளைகள் (நாம் இருவர் நமக்கு இருவர்) என்றே எடுத்துக் கொள்வோம். 

தளர்த்தப்படும் விதி 3: ஒவ்வொரு போரின் போதும் அனேக மக்கா போர் வீரர்கள் மரித்தார்கள். இவர்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளவேண்டும், அது தான் சரியானது. இருந்தபோதிலும், இவர்களையும் நான் என் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

ஏன் இந்த தளர்த்தும் விதிகள்:

இப்படி தளர்த்தும் விதிகளை நான் கொடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெற்றோர்கள் இருவர் (தாய் தந்தை) என்று நாம் கணக்கிடப்போகிறோம்.  பல நேரங்களில் ஒரே பெற்றோருக்கு இரண்டு/மூன்று/நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த நான்கு பேரும் போரில் பங்கு பெற்று இருந்திருக்கலாம். இருந்த போதும், நாம் ஒவ்வொரு வீரருக்கும் பெற்றோர்கள் இருவர் என்று கணக்கிடப்போகிறோம். இது எப்படி சரியான எண்ணிக்கையாக இருக்கும்? என்ற கேள்வி எழும். நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை, புனித நகரில் எத்தனை ஆண்கள், பெண்கள் அப்போது இருந்தார்கள் என்ற கணக்கு நம்மிடம் இல்லை. எனவே, மேற்கண்ட தளர்த்தும் விதிகளை நான் கொடுத்துள்ளேன். ஒரு கணக்கில் தளர்த்துகிறோம், அடுத்த கணக்கில் சில அதிகபடியான எண்ணிக்கையை விட்டுவிடப்போகிறோம். நம்முடைய ஜனத்தொகை கணக்கெடுப்பு ஒரு பக்கமாக சார்ந்து வேண்டுமென்றே தவறாக கணக்கிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதற்காக, சில தளர்த்தும் விதிகளை நாம் வைத்துள்ளோம். நமக்கு ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை தெரிந்திருந்தால், இந்த கணக்கை நாம் செய்யவேண்டிய அவசியமிருக்காது. 

மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு, கீழ்கண்ட கணக்கெடுப்பை பார்க்கவும்.

நம்முடைய முந்தைய கணக்கின் படி, மொத்தம் 8000 ஆண்கள் (போர் வீரர்கள் + வியாபாரிகள்) என்று நாம் கணக்கிட்டோம். இந்த 8000 பேருக்கு குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள், பெற்றோர்கள் இருவர் என்று கருதினால், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் 5 பேர் குடும்ப நபர்கள் என்று வருகிறது. ஆக, 8000 பேர்களின் குடும்ப நபர்களை கணக்கிடும் போது = 8,000 X 5 = 40,000 என்று வருகிறது. 

  • ஆண்கள் 8000 பேர்
  • அவர்களின் குடும்ப நபர்கள் 40,000 பேர் 
  • மொத்தம் 48,000 என்று கணக்கு வருகிறது. 

ஆக, முஹம்மதுவின் காலத்தின் புனித பூமியில் குறைந்த பட்சம் 48,000 மக்கள் இருந்திருக்கவேண்டும் என்று நாம் கணக்கிடலாம். ஆனால், உண்மையில் இதைவிட அதிகமான மக்கள் புனித நகரத்தில் இருந்திருக்கவேண்டும். (யாராவது இந்த கணக்கெடுப்பை இன்னும் மேம்படுத்த விரும்பினால், வேறு ஒரு கணக்கை கொண்டுவந்தால், எனக்கு தெரிவிக்கவும்).