"மனித அவதாரம்" பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்
(The "Incarnation Fallacy")
இது மிகச் சிறிய கட்டுரையாகும். கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் "இயேசு இறைவனாக இருக்கிறார் என்றும் அவரே மனிதனாக வந்தார் என்றும்" நம்புகிறார்கள். (மனித அவதாரம் பற்றிய மற்றொரு கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.)
பொதுவாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு சொல்லும் போது, "இயேசுவை மனிதனாக காட்டும் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை எடுத்துக் காட்டி, இவைகளின் படி இயேசு ஒரு மனிதன் தான், அவர் இறைவன் அல்ல" என்றுச் சொல்வார்கள்.
தன் இலக்கை தவறவிட்டுவிட்ட அம்பு போன்றது தான் முஸ்லிம்களின் இந்த வாதம். இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், "இயேசு ஒரு மனிதனாகவும் இருக்கிறார்" என்று கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய மற்றும் அறிய விஷயத்தை கண்டுபிடித்து சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற விஷயத்தைத் தான் அவர்கள் சொல்கிறார்கள். மேலும், முஸ்லிம்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் "பைபிளிலிருந்து தங்களுக்கு தேவையான வசனங்களைத் தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுகிறார்கள்" என்பதாகும். ஆனால், இயேசுவைப் பற்றி கிறிஸ்தவர்களின் புரிந்துக் கொள்ளுதல் தான் சரியானது. பைபிளில் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் ஒன்று சேர்த்து கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள். முஸ்லிம்களைப் போல சில வசனங்களை விட்டுவிட்டு கிறிஸ்தவர்கள் பொருள் கொள்வதில்லை. இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களையும், மனிதனாக காட்டும் வசனங்களையும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதினால், அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் தவறு இருப்பதில்லை. "இதோ இவ்வசனங்கள் இயேசுவை மனிதனாக காட்டுகின்றன" என்று முஸ்லிம்கள் நம்மிடம் சொல்வது, அவரைப் பற்றிய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் இதர வசனங்களோடு அவைகள் முரண்படுவதில்லை.
உண்மையை உள்ளபடியே சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியது "இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை அல்ல, இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களைத் தான்". இப்படி ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை ஆய்வு செய்வதினால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
முஸ்லிம்கள் இந்த "மனித அவதார வாதத்தைத்" தான் பெரும்பான்மையாக தங்கள் விவாதங்களில் பயன்படுத்துகிறார்கள். நமக்குத் தெரிந்த விஷயத்தை நம்மிடமே வந்து "ஒரு புதிய விஷயமாக முஸ்லிம்கள் சொல்வது" வேடிக்கையானதாகும். ஆதாவது நம்முடைய தாய் மொழியிலும், இன்னும் நமக்கு தெரிந்த ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பைபிளை படிக்கும் நம்மிடம் வந்து "இதுவரை இவ்வசனங்களை நீங்கள் பார்க்கவில்லை, இதோ நாங்கள் முதல் முறையாக இந்த வசனங்களை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம்" என்று முஸ்லிம்கள் சொல்வது வேடிக்கை என்றுச் சொல்லாமல் என்னவென்றுச் சொல்வது?
இதே போல, இன்னொரு பிழையான வாதத்தையும் முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள். அது திரித்துவத்தைப் பற்றிய வாதமாகும். தேவன் திரித்துவராக இருக்கிறார் என்றும், அதே நேரத்தில் தேவன் ஒருவரே என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்களின் நம்பிக்கை இப்படி இருக்கும் போது, முஸ்லிம்கள் நம்மிடம் வந்து "தேவன் ஒருவர் என்பதை வெளிக்காட்டும் பைபிளின் வசனங்களை மட்டும் தனியாக எடுத்து மேற்கோள் காட்டி, பார்த்தீர்களா? தேவன் ஒருவர் தான்" என்று சொல்கிறார்கள். இவ்வசனங்கள் எவ்விதத்திலும் நமக்கு முரண்படுவதில்லை. தேவன் ஒருவரே என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், இதில் ஆச்சரியமோ அல்லது முரண்பாடோ இல்லை.
உண்மையாகவே முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்யவேண்டுமென்றால், பைபிளில் "இயேசுவின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும், பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும் ஆய்வு செய்யவேண்டும்". தேவனுக்கு தெய்வீகத்தன்மை இருப்பது போலவே, இயேசுவிற்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் தெய்வீகத் தன்மை உள்ளது என்பதை விளக்கும் பைபிள் வசனங்களை முஸ்லிம்கள் ஆய்வு செய்து, தங்கள் முடிவைச் சொல்லவேண்டும்.
மூலம்: http://www.answering-islam.org/Fallacies/incarnation.html
முஸ்லிம்களின் தர்க்கப் பிழைகள் பற்றிய கட்டுரைகள்
Source: http://www.answering-islam.org/tamil/responses/fallacies/incarnation.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக