ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 6 ஆகஸ்ட், 2016

Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள் பாகம் 5: நான் பதில் சொல்லிவிட்டால், நீ இஸ்லாமை ஏற்பாயா?* (*Terms & Conditions Apply)

ஜாகிர் நாயக்கின் அந்த இரண்டு கேள்விகள் – பிரம்மஸ்திரங்கள்

டாக்டர் ஜாகிர் நாயக் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சி. அரங்கம் நிரம்பி வழிகிறது. கேள்விகள் கேட்க ஒரு இந்து சகோதரர் மைக்கின் முன்பாக நிற்கிறார். இஸ்லாம் பற்றிய ஒரு கேள்வியை தட்டுத்தடுமாறி கேட்கிறார். நிதானமாக அவர் கேட்ட கேள்வியை கேட்டுவிட்டு, தான் உட்கார்ந்து இருக்கும் இருக்கையிலிருந்து எழுந்து மைக்கிற்கு முன்பாக வந்து நிற்கிறார் ஜாகிர் நாயக். அரங்கத்தில் அமர்ந்திருக்கும் முஸ்லிம்கள் கைகளைத் தட்ட தயாராக இருக்கிறார்கள். அவர் என்ன சொன்னாலும் கைகளை தட்டிவிடலாம் என்ற ஆவேசத்தில் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஜாகிர் நாயக் வாயை திறந்து, 'சகோதரரே! நீங்கள் திருப்தியடையும் அளவிற்கு நான் இந்த கேள்விக்கு பதிலை சொல்லிவிட்டால், நீங்கள் இஸ்லாமை இப்போதே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்ட மாத்திரத்தில், அரங்கம் கைத்தட்டல்களால் அதிருகிறது. இது தான் முதலாவது கேள்வி.

இதே போல இன்னொரு கேள்வி பதில் நிகழ்ச்சி. ஒரு கிறிஸ்தவர் மைக்கை பிடித்துக்கொண்டு, தனக்கு தெரிந்த இரண்டு பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி, இஸ்லாமுக்கு எதிராக ஒரு கேள்வியை கேட்டு விடுகிறார். ஜாகிர் நாயக் எழுந்து வந்து, இப்படியும் அப்படியும் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்த நபரும், இடையிடையே ஜாகிர் நாயக்கை தடுத்து, அவருக்கு மறுப்பை அளிக்க முயலுகின்றார். என் அரங்கத்தில் வந்து என்னிடமே குறுக்கு கேள்விகளை கேட்கிறாயா! இப்போதே உன் வாயை எப்படி மூடுகிறேன் பார்! என்ற தோரணையில், ஒரு பிரம்மஸ்திரத்தை தன் வில்லிலிருந்து தொடுக்கிறார் ஜாகிர் நாயக். இயேசு இறைவன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நாயக் கேட்க, ஆம் என தலையாட்டுகிறார் கிறிஸ்தவர். உடனே நாயக், பைபிளில் எங்கேயாவது 'நான் இறைவன் என்னை வணங்குங்கள்' என்று இயேசு சொன்னதுண்டா? அப்படிப்பட்ட ஒரு வசனத்தை நீங்கள் இங்கு சுட்டிக்காட்டினால், இப்போதே நான் கிறிஸ்தவனாகிறேன் என்று சவால் விடுகின்றார். உடனே கைத்தட்டல்களால் அரங்கம் அதிருகிறது. இது இரண்டாவது கேள்வி.

மேற்கண்ட வர்ணனைகள் கற்பனையல்ல, அவைகள் பச்சை நிஜங்கள். யூடியூபில் ஜாகிர் நாயக் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சில விடியோக்களை பாருங்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இவரது பதிலைக் கேட்டு அதே அரங்கத்தில் அப்போதே இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்களாம்! அந்தோ பரிதாபம்!

அந்த இரண்டு பிரம்மஸ்திரங்கள்

முதல் கேள்வி: 'உங்கள் கேள்விக்கு நான் சரியான பதிலைச் சொல்லிவிட்டால், நீங்கள் இஸ்லாமை இப்போதே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?'

இரண்டாவது கேள்வி: 'நான் இறைவன், என்னை வணங்குங்கள்' என்று பைபிளில் இயேசு சொன்னதாக ஒரு வசனத்தை காட்டிவிட்டால், நான் இப்போதே கிறிஸ்தவனாக மாறிவிடுகிறேன்.

இந்த இரண்டு கேள்விகளையும் மேலோட்டமாக பார்க்கும் போது, மிகவும் ஞானமிக்க கேள்விகளாகத் தோன்றும், ஆனால் உண்மையில் இவைகள் முட்டாள்தனமான மற்றும் ஆபத்தான கேள்விகளாகும். இப்படிப்பட்ட கேள்விகளை திரு ஜாகிர் நாயக் அவர்கள் பொது அரங்கில் கேட்டது தான் ஆச்சரியம். இவைகள் எப்படி ஆபத்தானவை என்பதையும், ஒருவர் முஸ்லிமாக மாறுவதற்கு முன்பாக அவருக்கு ஜாகிர் நாயக் சொல்லவேண்டிய உண்மைகள் எவைகள் என்பதையும் சுருக்கமாக காண்போம்.

முதல் கேள்வி: ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டால், நீ இப்போதே இஸ்லாமை ஏற்பாயா? * Terms & Conditions Apply

டெலிஷாப்பிங் (Tele-shopping): தற்காலத்தில் மக்கள் ஆன்லைனில் மற்றும் டீவிக்களில் வரும் டெலிஷாப்பிங் நிகழ்ச்சிகளை பார்த்தவண்ணம் பொருட்களை வாங்குகின்றனர். டெலிஷாப்பிங் விளம்பரங்களை கவனித்துப் பாருங்கள். அழகான பெண்கள்/ஆண்கள், ஒரு பொருளைப் பற்றி ஆஹா ஓஹோ என்று  விவரிப்பார்கள். இன்னும் சில நிமிடங்கள் தான் உள்ளது, நீங்கள் டீவியை பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்திலேயே போன் செய்து, ஆர்டர் செய்தால், உங்களுக்கு 80% தள்ளுபடி விலையில் இப்பொருட்கள் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துவார்கள். நாம் சிந்திப்பதற்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்கமாட்டார்கள். உடனே! உடனே! போன் செய்யவேண்டும், அப்பொது தான் குறைந்த விலையில் இப்பொருட்கள் கிடைக்கும் என்பார்கள், மேலும் இலவசமாக இதர பொருட்களும் கிடைக்கும் என்றுச் சொல்லுவார்கள். நாமும் அவர்களின் வார்த்தைகளில் மயங்கி உடனே ஆர்டர் செய்துவிடுவோம்.  தூங்கி எழுந்து மறுநாள் சிந்திக்கும் போது, ஏன் இப்படி நாம் சிந்திக்காமல் இவ்வளவு பணத்தை அவசரத்தில் செலவு செய்துவிட்டோம் என்று எண்ணுவோம். மேலும், அந்த பொருள் வீடு வந்து சேர்ந்த பிறகு தான் உண்மை புரியும்! 

இதே போலத்தான், ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு செல்பவர்களிடம்,  டெலிஷாப்பிங் விளம்பரக்காரர்களைப் போல, 'நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டால், இப்போதே இஸ்லாமை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்கிறார். என் கருத்துப்படி டெலிஷாப்பிங் விளம்பர பெண்ணுக்கும், ஜாகிர் நாயக்கிற்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை, அங்கு 'வியாபாரம்' இங்கு 'இஸ்லாம்' அவ்வளவு தான். (சிலர் வியாபாரத்தை மதத்தைப்போல செய்கிறார்கள், சிலர் மதத்தை வியாபாரத்தைப் போல செய்கிறார்கள். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்).

ரூபாய் 5000/- க்கு விற்கப்படும் பொருள், அந்த விளம்பர நேரத்திலேயே ஆர்டர் செய்தால், ரூபாய் 999/- க்கு கிடைக்கும் என்ற ஆசையால், நாமும் சிந்திக்காமல் ஆர்டர் செய்ய, பொருள் வீடு வந்து சேர, பார்சலை திறந்து பார்த்தால் அதிர்ச்சி! நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று புரியும், இருந்தாலும் பரவாயில்லை, 999/- தானே! போனால் போகிறது, வாங்கிய அந்த சேலையை சமையல் அறையில் துடைக்க வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு மறந்துவிடுவோம். ஆனால், இதே பாணியில் இஸ்லாமை ஒருவர் ஏற்றுக்கொண்டால்! அதன் பிறகு வேண்டாம் என்று முடிவு செய்தால்! என்ன நடக்கும்? இஸ்லாம் என்ன, டெலிஷாப்பிங்கில் வாங்கும் செலையா, வீடுதுடைக்க வைத்துக்கொள்வதற்கு? இஸ்லாம் விஷயத்தில் கொஞ்சம் அசைந்தால், வாழ்க்கை துடைக்கப்பட்டு போய்விடும்.

• ஒருவர் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதற்கு ஒரே ஒரு பதில் போதுமா?

• அரங்கத்தில் நான்கு மணிநேரம் கேட்ட இஸ்லாமிய சொற்பொழிவுகள் நம்மை, அடுத்த 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழவைக்குமா? 

• நாம் வாங்கிய பொருள் நமக்கு திருப்தி அளிக்கவில்லையென்றால், ஒரு வாரத்திற்குள் திருப்பி கொடுத்துவிட்டு, நம் பணத்தை திரும்ப கேட்க நமக்கு உரிமை உள்ளது (சில பொருட்களுக்கு மட்டுமே). இதே போல, 'இஸ்லாம்' எனக்கு பொருந்தாது என்று எண்ணுகின்றேன், எனக்கு திருப்தியாக இல்லை! எனவே, நான் மறுபடியும் இந்து மதத்திற்கே, கிறிஸ்தவத்திற்கே திரும்பி சென்றுவிடுகிறேன் என்றுச் சொன்னால், இஸ்லாமில் முடியுமா? இஸ்லாமில் ஏதாவது வாரண்டி பீரியட் (Warranty Period) உண்டா? (இஸ்லாமுக்கு மாறும் ஆண்கள் கவனிக்கவும்: நீங்கள் முஸ்லிமாக மாறிய பிறகு, உங்களுக்கு சில நாட்கள் கழித்து விருத்தசேதனம் செய்வார்கள். அதன் பிறகு நீங்கள் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ திரும்ப செல்லவேண்டுமென்று விரும்பினாலும், நீங்கள் இழந்த நுனித்தோலை திரும்பபெறமுடியாது).

• ஒரு பதிலை கேட்டு முஸ்லிமாக மாறிய என்னால், என் குடும்பத்துக்கு ஏதாவது பாதிப்பு உண்டாகுமா? என் மனைவி/கணவர் மற்றும் பிள்ளைகளின் நிலை என்ன? இஸ்லாம் என்பது மனதளவில் உண்டாகும் மாற்றமா? அல்லது வெளிப்புற சமுதாய அடையாளத்தையே மாற்றக்கூடிய ஒன்றா?

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்த பிறகே ஒருவர் இஸ்லாமை ஏற்கவேண்டும். ஒருவர் ஒரு மார்க்கத்தை தழுவும் போது, அதைப் பற்றிய பின்னணி விவரங்களை தெரிந்துக்கொண்டு தழுவுவது தான் சிறந்தது. 

Terms and Conditions Apply:

சில தள்ளுபடிகளை கொடுக்கும் பொருட்களில் பார்த்தால், '*' என்ற ஒரு குறியீட்டை சின்னதாக பதித்து இருப்பார்கள். அதன் பிறகு, அந்த விளம்பரத்தை அல்லது பொருட்களை கூர்ந்து கவனித்தால் '*Conditions Apply' என்று எழுதி பல நிபந்தனைகளை படிக்கமுடியாத அளவு சிறிய எழுத்துக்களில் எழுதியிருப்பார்கள். பெரும்பான்மையானவர்கள் இந்த நிபந்தனைகளை படிப்பதில்லை, ஏதோ ஒரு வேகத்தில் பொருட்களை வாங்கிவிடுவார்கள். ஆனால், அப்பொருளினால் பிரச்சனை வரும் போது, கடைக்காரரிடம் நாம் கேள்வி கேட்கும் போது, அவர் அந்த 'Terms and Conditions'களை படிக்கும் படி சொல்லுவார்! அதை படித்த பிறகு நாம் வாயை மூடிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வருவோம். பொருட்களை வாங்கும் போது மட்டும் அல்ல, நாம் வேலைக்கு சேரும் போதும், வங்கிகளில் லோன் வாங்கும் போதும், இதர ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போதும், பல பக்கங்கள் கொண்ட 'Terms and Conditions களை' படிக்காமல் கையெழுத்து போட்டுவிடுகிறோம். நிபந்தனைகளை படிக்காமல் பொருட்களை வாங்குவது நல்லதல்ல, இதனை நாம் அனைவரும் அறிவோம்.

இதே போல, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இஸ்லாமை ஏற்கும் அன்பர்களுக்கு இஸ்லாமின் 'Terms and Condition களை'  முன்னமே சொல்லிவிட்டால் நல்லது என்ற அறிவுரையை கூறுகிறேன். முக்கியமாக, இஸ்லாமை ஏற்பவர்களாவது, இஸ்லாமின் நிபந்தனைகள் (Terms and Conditions) எவைகள் என்று கேட்டு அறிந்துக்கொண்டு அதன் பிறகு இஸ்லாமை தழுவும் படி கேட்டுக்கொள்கிறேன். 

இனி நம்முடைய வேண்டுதலுக்கு இணங்க, தம்முடைய பாணியில் இஸ்லாமில் எத்தனை நிபந்தனைகள் உள்ளது என்பதை ஜாகிர் நாயக் அவர்கள் விளக்குவார்கள். ஆனால், ஜாகிர் நாயக் எப்போது சௌதி அரேபியாவிலிருந்து  வருவது? நமக்கு எப்பொது இஸ்லாமின் நிபந்தனைகளை சொல்லிக்கொடுப்பது (இன்றைய தேதியில் ஆகஸ்ட் 6ம் தேதியில் அவர் சௌதியிலேயே இருக்கிறார், இந்தியா திரும்பவில்லை!). எனவே, இஸ்லாமின் முக்கியமான 5 நிபந்தனைகளை நான் இங்கு பட்டியலிடுகிறேன், மீதமுள்ளதை ஜாகிர் நாயக்கோ அல்லது உங்களுடைய இஸ்லாமிய நண்பர்கள் விளக்குவார்கள்.  இந்த 5 நிபந்தனைகளுக்கு நாம் 'இஸ்லாமின் 5 நிபந்தனைத் தூண்கள்' என்று பெயரிடலாம்.

இஸ்லாமின் 5 நிபந்தனைத் தூண்கள்

நிபந்தனைத் தூண் 1:

Islam will kill you if you apostate - நீ இஸ்லாமை புறக்கணித்தால், கொல்லப்படுவாய்:

இந்த நிபந்தனையின் படி, ஒருவர் முஸ்லிமாக மாறிவிட்ட பிறகு, ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாமை விட்டு வெளியேறினால், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி அந்த நபர் இஸ்லாமிய அரசால் கொல்லப்படுவார். 

உதாரணத்திற்கு, இந்த கட்டுரையை படிப்பவராகிய நீங்கள் இந்துவிலிருந்து/கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிமாக மாறினால். அதன் பிறகு, சில ஆண்டுகள் கழித்து, ஏதோ சில காரணங்களுக்காக மறுபடியும் இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ மாறினால், உங்களுக்கு மரண தண்டனை உண்டு. ஒருவேளை நீங்கள் ஜனநாயக மதசார்ப்பற்ற நாடுகளாகிய இந்தியா போன்ற நாடுகளின் குடிமக்களாக இருந்தால், உங்களுக்கு முஸ்லிம்களால் குர்-ஆனின் படி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி மரண தண்டனை கொடுக்கமுடியாது. ஆனால், தலைக்கு மேலே ஒரு கத்தி எப்போதும் தொங்கிக்கொண்டே இருக்கும் என்பதை மட்டும் மறவாதீர்கள். 

ஒரு பதிலை நான் சொல்லிவிட்டால், நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்வாயா? என்று கேள்வி கேட்டகும் ஜாகிர் நாயக்கின் படி, இப்படிப்பட்டவர்கள் தேசத்துரோகிகள் போன்று குற்றம் செய்தவர்களாம், எனவே இவர்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை கொடுப்பது நியாயமானதாம்.

ஜாகிர் நாயக் அவர்களே, உங்கள் அரங்கத்தில் அமர்ந்து உங்களுடைய தேன் சொட்டும் சொற்பொழிவுகளை கேட்கும் வாசகர்களுக்கு இந்த நிபந்தனையைப் பற்றி முதலாவது சொல்லிவிட்டு, அதன் பிறகு அவர்களுக்கு 'இஸ்லாமிய விசுவாச பிரமாணத்தைச் சொல்லிக் கொடுக்கமுடியுமா?'

நிபந்தனைத் தூண் 2:

If you commit crime, you will be punished as per THE SHARIA LAW

நீ தவறு செய்தால், ஷரியா சட்டத்தின் படி தண்டிக்கப்படுவாய்

இஸ்லாமை ஏற்பதற்கு முன்பாக, அவர்களுக்கு ஷரியா சட்டத்திலுள்ள குற்றவியல் தண்டனைகளைப் பற்றிய ஒரு விளக்கத்தை கொடுக்கவேண்டும். உதாரணத்திற்கு, திருடினால் கைகள் வெட்டப்படும், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் தணடனையாக கொடுக்கப்படும். இப்படிப்பட்ட தண்டனைகளை இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே கொடுக்கப்படும் என்று நினைத்துவிடாதீர்கள். ஜனநாயக நாடுகளிலும், இஸ்லாமியர்களில் சிலர் ஷரியாவை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, உங்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். ஒரு கிறிஸ்தவர் எப்படி இந்த அனுபவத்தை ருசி பார்த்தார் என்பதை கீழ்கண்ட உண்மையான நிகழ்ச்சியை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இஸ்லாமியராக மாறிய ஒரு கிறிஸ்தவர், தன் நண்பர்களுடன் மது அருந்தியதற்காக, நான்கு நல்ல இஸ்லாமியர்கள் அவரது வீட்டில் இரவு நேரத்தில் நுழைந்தனர். மூன்று பேர் அந்த நபர் படுத்திருந்த கட்டிலில் அவரை அப்படியே கை கால்களை அழுத்தி பிடித்தார்கள். நான்காவது இஸ்லாமியர் ஒரு மின்சார வைரைக் கொண்டு, (எலெக்ட்ரிக் வைர்)  நாற்பது முறை அவரை அடித்தார். இந்த நான்கு பேரையும் ஆஸ்திரேலிய காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது, மேலும் அறிய இந்த தொடுப்பை படிக்கவும்: http://www.heraldsun.com.au/news/intruders-whip-silverwater-man-31-for-drinking/story-e6frf7jo-1226097080261

ஆஸ்திரேலியா என்பது ஜனநாயக நாடாக இருந்தாலும், சில முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தின் படி தண்டனையை ஹோம் டெலிவரி (Home Delivery) செய்துவிட்டுப் போவார்கள். எந்த நான்கு பேர் நீங்கள் முஸ்லிமாக மாறும்போது, உங்கள் பக்கத்தில் மகிழ்ச்சியாக நின்றுக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்களோ, அவர்களே உங்கள் வீடு தேடிவந்து, கொடுக்கவேண்டியதை கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.

எனவே, இஸ்லாமுக்கு மாற முடிவு செய்துக்கொண்டு இருக்கின்ற, ஏற்கனவே முடிவு செய்துவிட்ட, அல்லது முடிவு செய்யப்போகும் அன்பர்களே, ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள், ஆழம் தெரியாமல் காலைவிட்டாலும் பரவாயில்லை,  தலையை விட்டுவிடாதீர்கள்! புகைபிடித்தல் உடல்  நலத்துக்கு கேடு என்று அரசாங்கம் விளம்பரம் தான் செய்யமுடியும், நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் புகைபிடிக்கும் போது, வந்து உங்கள் வாயிலிருந்து சிகரெட்டை பிடுங்கி வீசமுடியாது. எனவே, என்னால் எச்சரிப்பு மட்டுமே செய்யமுடியும்.

நிபந்தனைத் தூண் 3:

If your spouse didn't convert, then you need to divorce her/him

உங்கள் துணை இஸ்லாமுக்கு மாறாத பட்சத்தில், அவரை நீங்கள் விவாகரத்து செய்யவேண்டும்.

இந்த நிபந்தனை பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏற்கனவே திருமணமான ஒரு இந்து பெண் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், அவரது கணவர் இந்துவாகவே தொடர்ந்தால். இஸ்லாமிய சட்டத்தின் படி, அவரது கணவர் இஸ்லாமை ஏற்க அவகாசம் கொடுக்கவேண்டும், அவர் இஸ்லாமுக்கு மாறவில்லையென்றால், அவள் தன் கணவரை விவாகரத்துச் செய்யவேண்டும். எனவே, திருமணமான பெண்கள் இஸ்லாமுக்கு மாறுவது மிகவும் ஆபத்தானது. இந்து கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இந்த பெண் வாழ்வது எப்படி? இன்னொரு முஸ்லிம் ஆணுக்கு 2ம், 3ம் மற்றும் நான்காம் தாரமாக போகவேண்டியதுதான்.

இன்னும் இப்படிப்பட்ட அனேக சிக்கல்கள் முக்கியமாக இஸ்லாமுக்கு மாறும் பெண்களுக்கு உள்ளது. இதனை ஜாகிர் நாயக் முதலாவது விளக்கிவிட்டு, அதன் பிறகு, அந்த ஒரு கேள்விக்கு பதில் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிபந்தனைத் தூண் 4:

Your husband may commit adultery with his slave girls.

உன் கணவர் அடிமைப்பெண்களோடு விபச்சாரம் புரிய அவனுக்கு அதிகாரம் உண்டு.

திருமணமாகாத ஒரு இந்து பெண் அல்லது கிறிஸ்தவ பெண் ஜாகிர் நாயக்கின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்று, தன் கேள்விக்கு அவர் பதில் கொடுத்தபடியினால் இஸ்லாமுக்கு மாறிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, அந்தப்பெண் வேறு ஒரு இந்து ஆணையோ அல்லது கிறிஸ்தவனையோ திருமணம் செய்துக்கொள்ளமுடியாது, இது முதலாவது பிரச்சனை, இதன் விளைவுகளை அறிய மேலே கொடுக்கப்பட்ட நிபந்தனையை பார்க்கவும்.

இந்த பெண் ஒரு முஸ்லிம் ஆணையே திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். இப்போது இரண்டாவது பிரச்சனை என்னவென்றால், இவள் திருமணம் செய்துக்கொண்ட முஸ்லிம் ஆணுக்கு, இஸ்லாமின் படி நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை உள்ளது. இதனை இந்த பெண் தடுக்கமுடியாது. மூன்றாவது பிரச்சனை இன்னொன்று உள்ளது, இந்த முஸ்லிம் பல அடிமைப்பெண்களை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து, வீட்டில் வைத்துக்கொண்டு, அவர்களோடு விபச்சாரம் புரியலாம். அதாவது அந்த அடிமைப் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அவர்களோடு உடலுறவு கொள்ளலாம். வீட்டிலேயே சட்டப்படி வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் கூத்து இஸ்லாமில் மட்டுமே நடக்கும். இதனை, அந்த நான்கு மனைவிகள் தடுக்கமுடியாது, ஏனென்றால், முஸ்லிம் ஆண்களுக்கு குர்-ஆனில் அல்லாஹ் கொடுத்த உரிமை இது, இதனை யாரும் குறை சொல்லமுடியாது.  இந்தியா போன்ற நாடுகளில் அடிமைகளை விற்கும் பழக்கமில்லை, ஆனால், இஸ்லாமிய நாடுகளில் ஆங்காங்கே இதற்கு அனுமதி உண்டு.  

ஜாகிர் நாயக் அவர்கள், முதலாவது இந்த விவரங்களை விளக்கிவிட்டு, அதன் பிறகு  இஸ்லாமில் பெண்கள் சேர அனுமதி கொடுத்தால் ரொம்ப புன்னியமாக இருக்கும்.

நிபந்தனைத் தூண் 5:

Your husband may beat you if you don't obey him

நீ கீழ்படிய மறுத்தால், உன் கணவர் உன்னை அடிப்பார்

ஒரு இந்து சகோதரி இஸ்லாமை ஏற்றால், அவள் ஒரு முஸ்லிமைத் தவிர வேறு ஒரு இந்து ஆணை திருமணம் செய்யமுடியாது. இந்த பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் ஆண் தான் கணவனாக வரமுடியும். இஸ்லாமின் படி, ஒரு முஸ்லிம் ஆண் தன் மனைவியை அடிக்க உரிமை உள்ளது. ஒரு சகோதரி, இந்த கேள்வியை கேட்டபோது ஜாகிர் நாயக் எப்படி பதில் அளித்துள்ளார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கவும்.

தன் மனைவியை அடிக்க முஸ்லிம் ஆணுக்கு உரிமை உள்ளது, ஆனால் தன் கணவன் தவறு செய்தால் மட்டும் அவனை அடிக்காமல், அந்த பெண் பெரியவர்களை அழைத்து பிரச்சனையை சரி செய்துகொள்ளவேண்டுமாம். மேலும், பெண்களை விட ஆண்கள் பலசாலியாக இருப்பதினால், நீ உன் கணவனை அடித்தால், அவன் திருப்பி அடித்தால் என்ன செய்வாய் என்று திருப்பி கேள்வி கேட்கிறார் ஜாகிர் நாயக்? இதே மாதிரி, தன்னை அடிக்கும் கணவனை மனைவி திருப்பி அடித்தால் என்ன செய்வது ஜாகிர் நாயக் அவர்களே! பலசாலியான மனைவிகளும் இருக்கிறார்களே! இதற்கு என்ன செய்வது?

மேலும், மனைவியை ஒரு சின்ன குச்சியால், அடிக்கும் படி இஸ்லாம் சொல்கிறதாம், இப்படியெல்லாம் ஜாகிர் நாயக் போன்றவர்கள் பொருள் கொடுத்து, குர்-ஆனை பிரச்சனையிலிருந்து காப்பாற்றுகிறார்கள். மனைவியை ஒருவன் அடிக்க முயன்றால் அவன் ஒரு காட்டிமிராண்டித் தனமாக நடந்துக்கொள்ளப் பார்க்கிறான் என்று அர்த்தம். இந்த லட்சனத்தில் பல்துளக்கும் குச்சியினால் மனைவியை அடிக்கவேண்டும் என்று ஜாகிர் நாயக் சொல்கிறார். மனைவியை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டவன் கோபமாக இருக்கும்போது, பல்துளக்கும் குச்சியை தேடிக்கொண்டு ஓடுவானா? வேடிக்கையாக இருக்கிறதல்லவா! ஆனால், பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில், சர்வ சாதாரணமாக ஜாகிர் நாயக் இதனைச் சொல்வார். இது தான் இஸ்லாம். 

இந்த நிபந்தனையைப் பற்றியும் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முன்வரும் பெண்களிடம் சொல்லவேண்டும். 

இப்படி இஸ்லாமில் அனேக நிபந்தனைத் தூண்கள் உள்ளன. அவைகளில் வெறும் ஐந்தைப் பற்றி தான் நாம் மேலே கண்டோம். குறைந்தபட்சம் மேற்கண்ட ஐந்து தூண்களையாவது முதலாவது விளக்கவேண்டும், அதன் பின்பு இஸ்லாமை ஏற்கும்படி ஜாகிர் நாயக் அழைப்பு விடுக்கவேண்டும். இந்த நிபந்தனைகள் பற்றியெல்லாம், ஜாகிர் நாயக் மூச்சுவிடமாட்டார், கோழியை அமுக்குவது போல, அப்படியே அமுக்கிவிடுவார். 

இவைகள் பற்றியெல்லாம் அறிந்துக்கொள்ளாமல், ஒருவர் இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறார் என்றால், அவர் தன் கழுற்றில் தூக்கு கயிறை கட்டிவிட்டு, அதன் மற்றொரு முனையை முஸ்லிம்களின் கைகளில் கொடுப்பதற்கு சமமாகும். நான் தவறு செய்கிறேன் என்று எப்போது உங்களுக்கு தோன்றுகிறதோ, அப்போது அந்த கயிறை நீங்கள் இழுக்கலாம் என்று அவரே முஸ்லிம்களுக்கு உரிமை கொடுப்பதற்கு சமமாகும்.

ஜாகிர் நாயக்கின் இரண்டாவது அதிபுத்திசாலியான கேள்வி:

இயேசு 'நான் இறைவன், என்னை வணங்குங்கள்' என்று பைபிளில் சொன்னதாக ஒரு வசனத்தை காட்டிவிட்டால், நான் இப்போதே கிறிஸ்தவனாக மாறிவிடுகிறேன்.

ஒரு கேள்வியைக் கேட்டு, ஜாகிர் நாயக் கொடுக்கும் பதிலை ஓரளவிற்கு சமாளிக்கும் அளவிற்கு ஒரு கிறிஸ்தவர் கிடைத்துவிட்டால் போதும், ஜாகிர் நாயக் உடனே  இந்த 'பிரம்மஸ்தரத்தை' பயன்படுத்துவார். 

இது ஜாகிர் நாயக்கின் அறிவீனமான கேள்வியாகும். இயேசு தன் தெய்வீகத்தை பல வகைகளில் நற்செய்தி நூல்களில் வெளிப்படுத்தி இருந்தும், அந்த ஆதாரங்களையெல்லாம் விட்டுவிட்டு, இவர் சொல்லும் சொற்றொடரே தனக்கு வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனமாகும். இதை ஒப்புக்கொள்ளமாட்டோம் என்றுச் சொல்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை படித்து உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

இந்து சகோதரனின் கேள்வி: எனக்கு குர்-ஆனிலிருந்து கீழ்கண்டவிதமாக ஒரே ஒரு வசனத்தைக் காட்டுங்கள், நான் இப்போதே முஸ்லிம் ஆகிவிடுகிறேன்.

"சிவன், விஷ்ணு, பிரம்மா என்பவர்கள் தெய்வங்கள் அல்ல, நான் தான் அல்லாஹ், என்னை மட்டும் வணங்குங்கள் இந்துக்களே".

ஒரு இந்துவிற்கு மேற்கண்ட சொற்றொடர்கள், அதே வரிசையில் கொண்ட ஒரு வசனத்தை குர்-ஆனிலிருந்து காட்டுங்கள். 

'லாயிலாஹா இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)'  என்று குர்-ஆன் சொல்கிறதே! என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இது இந்துக்களுக்கு போதாது, பொதுவாக சொல்லும் வசனம் வேண்டாம், 'எங்கள் இறைவனின் பெயர்களை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்' அப்போது தான் நாங்கள் முஸ்லிம்களாக மாறுவோம் என்று அவர்கள் சொல்வார்கள். இது முட்டாள்தனமான வாதம் என்று முஸ்லிம்கள் சொன்னால், இதே போல, ஜாகிர் நாயக் சொன்னது கூட "முட்டாள்தனமான வாதம்" தானே!

கிறிஸ்தவனின் கேள்வி: எனக்கு குர்-ஆனிலிருந்து கீழ்கண்டவிதமாக ஒரே ஒரு வசனத்தைக் காட்டுங்கள், நான் இப்போதே முஸ்லிம் ஆகிவிடுகிறேன்.

"இயேசுவாகிய நான், தேவகுமாரன் அல்ல, உலக மக்களின் பாவநிவரணத்திற்காக நான் சிலுவையில் மரிக்கவில்லை, மூன்றாம் நாள் உயிர்த்தெழவில்லை. எனவே, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்"

மேற்கண்ட வார்த்தைகளை அதே வரிசையில் வரும் படி ஒரு குர்-ஆன் வசனத்தைக் காட்டுங்கள், இப்போதே நான் முஸ்லிமாகிவிடுகிறேன்.  ஜாகிர் நாயக்கினால் மேற்கண்ட வார்த்தைகள் அடங்கிய வசனத்தை குர்-ஆனில் கண்டுபிடிக்கமுடியாது. 

மேற்கண்ட கேள்விகள் நமக்கு முட்டாள்தனமாகத் தெரிகின்றதல்லவா? ஆனால், இதே கேள்விகளை ஜாகிர் நாயக் அவர்கள் இந்துக்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் கேட்டால், முஸ்லிம்கள் அப்படியே பூரிப்பாகி, கைகளை மிகவும் சத்தமாகத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஜாகிர் நாயக் முட்டாள்தனமான கேள்வியை கேட்கின்றாரே! இது எப்படி சரியான கேள்வியாக இருக்கும்! என்று சிந்திக்கமாட்டார்கள். 

முடிவுரை: இதுவரை ஜாகிர் நாயக் பயன்படுத்தும் இரண்டு பிரம்ம அஸ்திரங்கள் (கேள்விகள்) பற்றி பார்த்தோம். இதே போலத்தான் ஜாகிர் நாயக்கின் பெரும்பான்மையான பேச்சுக்கள் இருக்கும். 

மதம் என்பது ஒரே ஒரு கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் மாற்றிக்கொள்ளக்கூடிய அளவிற்கு சுலபமல்ல. இறைவனை நம்பும் ஆத்தீகனுக்கு, மதம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை கூட வரும் ஒன்றாகும், அவ்வளவு ஏன், இறந்த பிறகும் தொடரும் என்றும் நாம் நம்புகிறோம். மேலும், இஸ்லாமைப் போன்ற ஒரு மதத்திற்கு மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. முதலாவது இஸ்லாமின் Terms and Conditions (நிபந்தனைகள்) பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். ஆழமாக இஸ்லாமை ஆய்வு செய்யவேண்டும், அதன் பிறகு தான் முடிவிற்கு வரமுடியும். நான் இந்த கேள்விக்கு பதில் கொடுத்தால், நீ இஸ்லாமுக்கு மாறிவிடுவாயா! என்று கேள்வி கேட்பது, அடிமுட்டாள் தனமாகும். மேலும், "நான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொன்னதாக ஒரு வசனத்தைக் காட்டுங்கள், இப்போதே நான் கிறிஸ்தவனாக மாறுகிறேன் என்றுக் கேட்பது வஞ்சகமாகும். 

இப்படியெல்லாம் ஏன் ஜாகிர் நாயக் நடந்துக்கொள்கிறார்? என்று நாம் கோபம் கொள்ளத் தேவையில்லை, அவரைத் திட்டத்தேவையில்லை! காரணம், அவர் என்ன செய்வார்? அவர் பின்பற்றும் இஸ்லாம் அவரை இப்படி மாற்றியுள்ளது. நாம் தான் இஸ்லாமைப் பற்றிய உண்மை விழிப்புணர்வை அடையவேண்டும். ஜாகிர் நாயக் போன்றவர்கள் விடும் பிரம்ம அஸ்திரம் என்பது, புஸ்ஸென்று புகை மட்டும் விட்டு விட்டு அமைதியாக இருந்துவிடும் தீபாவளி வெடி என்பதை நாம் உணரவேண்டும்.


Dr. ஜாகிர் நாயக்கிற்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/zakirnaik/zakirnaik_at_2016_part5.html


கருத்துகள் இல்லை: