ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

குர்-ஆன் 18:9 - பிஜே விளக்கம் 271 (1) - குர்-ஆன் குகைவாசிகளும், கும்ரான் குகைவாசிகளும்

(தூங்குபவர்களை எழுப்பமுடியும், ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது என்றுச் சொல்வார்கள். தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்கள் மேல் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினால் அவர்களும் எழுவார்கள். ஆனால், முஸ்லிம் அறிஞர்களில் இன்னொரு வகை மக்களும் இருக்கிறார்கள், இவர்கள் தங்களை அறிவாளிகளாக கருதிக்கொண்டு, தூக்க மாத்திரைகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு, உண்மையாகவே மயக்கிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பிஜே அவர்கள். இப்போது இவரை எழுப்புவது எப்படி? இவரை எழுப்பும் (தெளிவிக்கும்) விதம் பற்றி தமிழ் கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இக்கட்டுரையில் இப்படிப்பட்டவர்களை  எப்படி எழுப்புவது என்பதை விளக்கியுள்ளேன்.)

முன்னுரை:

பிஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில், வசனம் 18:9க்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் (விளக்க எண் 271). கிறிஸ்தவத்தை குறைகூறவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, இவர் அல்லாஹ்வின் வார்த்தையை குத்தி கொதறி நாசமாக்கியுள்ளார். குர்-ஆனின் 18வது அத்தியாயத்தில் வரும் குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எப்படி இவர் சவக்கடல் சுருள்களோடு ஒப்பிட்டு பேசி மிகப்பெரிய தவறை செய்துள்ளார் என்பதை மட்டும் சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.

குர்-ஆனின் 18வது அத்தியாயத்தின் 9வது வசனம் பற்றி பிஜே அவர்கள் எழுதிய விளக்கத்தின் முதல் பகுதியை இங்கு படிப்போம், அடுத்தடுத்த தொடர்களில் மீதமுள்ள விளக்கத்துக்கு பதிலைக் காண்போம்.

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு" என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன ஏடு? என்பது பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்'' என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

(அந்த வீடியோ பதிவுகள் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முகவரி www.onlinepj.com/-/savukasal_avanam/)

குர்-ஆனின் குகைவாசிகள் எப்படி கும்ரான் குகைவாசிகளானார்கள்?

அந்தக் குகை (அல்கஹ்ஃப் – அத்தியாயம் 18):

அது ஒரு கட்டுக்கதை, அது ஒரு புராணக்கதை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய ஒரு கட்டுக்கதையை உண்மை சரித்திர நிகழ்ச்சியென குர்-ஆன் பதிவு செய்து, ஒரு பெரிய சரித்திர பிழையை செய்துள்ளது. இந்த அத்தியாயத்திற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்பதை பிஜே அவர்கள் தம் குர்-ஆன் தமிழாக்கத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

இந்த அத்தியாயத்தின் 9வது வசனம் முதல் 26 வரை கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர். 

பிஜே அவர்களின் அறிவீனமான விளக்கத்தை (271) புரிந்துக்கொள்வதற்கு அவரின் மேற்கண்ட பெயர் விளக்கம் நமக்கு உதவும். 

குர்-ஆனின் இந்த சரித்திர பிழை பற்றி, எழுத்தாளர் பாரா அவர்களுக்கு நான் அளித்த பதில்களில் தெளிவாக விளக்கியுள்ளேன், அவைகளை இங்கு படிக்கலாம்:

பாரா அவர்களுக்கு மறுப்புக்கள்:

கும்ரான் குகைவாசிகளும் சவக்கடல் சுருள்களும்:

1947ம் ஆண்டு சவக்கடல் இருக்கும் கும்ரான் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களை "சவக்கடல் சுருள்கள்" என்று அழைப்பார்கள். நம்முடைய அடுத்தடுத்த கட்டுரைகளில் சவக்கடல் சுருள்கள் பற்றிய மேலதிக விவரங்களைக் காண்போம். 

பிஜேயின் மதியீனம்:

ஒரு குகையில் 300 ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிய வாலிபர்கள் பற்றிய கட்டுக்கதையை எடுத்து, கும்ரான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களோடு பிஜே ஒப்பிட்டு எழுதியுள்ளார். இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஐந்து வித்தியாசங்களை மட்டும் சுருக்கமாக நாம் ஆய்வு செய்தாலே போதும், பிஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தில் வெளிப்பட்ட மதியீனம் அவரது கால்களுக்கு கீழே மிதிபட்டுவிடும். 

அட்டவணை: கும்ரான் குகைவாசிகளுக்கும் குர்-ஆனின் குகைவாசிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்.

எண்குர்-ஆன் குகைவாசிகள்கும்ரான் சவக்கடல் குகைவாசிகள்
1இது கட்டுக்கதைஇது சரித்திரம்
2இவர்கள் கி.பி. காலத்தவர்கள்இவர்கள் கி.மு. காலத்தவர்கள்
3இவர்கள் கிறிஸ்தவர்கள்இவர்கள் யூதர்கள்
4அதிகபட்சம் 7 பேர்ஒரு ஊர் மக்கள் (200)
5ஒரு ஏடு (அந்த ஏடு) பல ஆயிர ஏடுகள் (சுருள்கள்)

இந்த வித்தியாசங்கள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் பிஜே அவர்கள் சொந்தமாக பொய்களை அள்ளிவீசியுள்ளார். இப்போது இவ்வித்தியாசங்கள் பற்றி சில வரிகளைக் காண்போம்.

வித்தியாசம் 1: கட்டுக்கதையும் சரித்திரமும்

குர்-ஆனின் குகைவாசிகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய கட்டுக்கதையாகும் [5]. இது ஒரு சரித்திர நிகழ்ச்சியல்ல. இந்த நிகழ்ச்சிப் பற்றி குறைஷிகள் முஹம்மதுவிடம் கேட்டார்களாம், அதற்கு முஹம்மது அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்று பதில் கொடுத்தாராம். இதனால், முஹம்மதுவின் நபித்துவம் நிருபிக்கப்பட்டது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். இதையே எழுத்தாளர் பாரா அவர்களும் தம்முடைய நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் எழுதினார். இவருக்கு நான் கொடுத்த மறுப்புக்களை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கிறேன். 

300 ஆண்டுகளாக வாலிபர்களை தூங்க வைத்தவன் நான் தான் என்று அல்லாஹ் குர்-ஆனில் சொல்கின்றான், ஆனால்,  அந்த குகையில் எத்தனை வாலிபர்கள் தூங்கினார்கள் என்று பதில் சொல்லாமல் அல்லாஹ் விட்டுவிட்டான். இதுமட்டுமல்ல, அவ்வாலிபர்கள் பற்றி மேலதிக கேள்விகளை மக்கள் கேட்டால், அவர்களோடு விவாதம் புரியவேண்டாம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு கட்டளையும் கொடுத்தான். 

பார்க்க குர்-ஆன் 18:22 

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர், (இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் – (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளியரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

குர்-ஆனின் கட்டுக்கதைப் பற்றிய பொதுவான விவரங்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கி தெரிந்துக்கொள்ளுங்கள்: https://en.wikipedia.org/wiki/Seven_Sleepers 

குர்-ஆனின் குகைவாசிகளின் கதை கட்டுக்கதையாகும். ஆனால், கும்ரான் குகையில் கிடைத்த சுருள்களும், அங்கு வாழ்ந்த மக்களும் உண்மை சரித்திரமாகும். யூதர்களில் சிலர் ஒரு குழுவாக அங்கு வாழ்ந்தார்கள், தாங்கள் வைத்திருந்த சுருள்களை பாதுகாத்து வைத்தார்கள்[1]. 

பிஜே அவர்களே, குர்-ஆனின் குகைவாசிகள் ஒரு கற்பனை கதாபாத்திரங்கள் என்பதை அறியுங்கள். இதனை மேலும் அறிய பாரா அவர்களுக்கு நான் கொடுத்த பதில்களை படித்துப் பாருங்கள். 

வித்தியாசம் 2: கி.பியும் கி.முவும்

குர்-ஆனின் குகைவாசிகள் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் உலாவிய கட்டுக்கதையாகும், ஆனால், கும்ரான் குகையில் வாழ்ந்த மக்களின் காலக்கட்டம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டுவரை ஆகும். 

குறைஷிகள் முஹம்மதுவிடம் குகைவாசி வாலிபர்கள்  பற்றிய கேள்வியை கேட்பதற்கு முன்பே, இது பல வகைகளில் சொல்லப்பட்டு வந்துக்கொண்டு இருந்திருக்கின்றது.  ஒவ்வொருவரும் வெவ்வேறு  எண்ணிக்கையை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இதையே குர்-ஆனும், சிலர் 3, சிலர் 5 இன்னும் சிலர் 7 வாலிபர்கள் குகையில் தூங்கினார்கள் என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறது (குர்-ஆன் 18:22)

The Seven Sleepers (Arabic: اصحاب الکھف aṣḥāb al kahf, "companions of the cave") of Ephesus are legendary people in a story of a group of youths who hide inside a cave outside the city of Ephesus around 250 AD, . . .

Another version is that Decius ordered them imprisoned in a closed cave to die there as punishment for being Christians. Having fallen asleep inside the cave, they purportedly awoke approximately 180 years later during the reign of Theodosius II, following which they were reportedly seen by the people of the now-Christian city before dying.

The earliest version of this story comes from the Syrian bishop Jacob of Sarug (c. 450–521), which is itself derived from an earlier Greek source, now lost.[1] An outline of this tale appears in Gregory of Tours (b. 538, d. 594), and in Paul the Deacon's (b. 720, d. 799) History of the Lombards. The best-known Western version of the story appears in Jacobus de Voragine's Golden Legend.

மூலம்: பார்க்க அடிக்குறிப்பு [5]

சவக்கடல் சுருள்களின் காலக்கட்டம் கி.முவில் தொடங்கி, கி.பி முதல் நூற்றாண்டுவரை செல்கிறது.

Paleographic dating

Analysis of letter forms, or palaeography, was applied to the texts of the Dead Sea Scrolls by a variety of scholars in the field. Major linguistic analysis by Cross and Avigad dates fragments from 225 BCE to 50 CE.[50] These dates were determined by examining the size, variability, and style of the text.[51] The same fragments were later analyzed using radiocarbon dating and were dated to an estimated range of 385 BCE to 82 CE with a 68% accuracy rate.[50]

மூலம்: விக்கிபீடியா – பார்க்க அடிக்குறிப்பு [1]

ஆக, குர்-ஆன் குகைவாசிகளின் கதை முஹம்மதுவின் காலக்கட்டத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பானதாகும். சவக்கடல் சுருள்களின் காலம் இயேசுவிற்கு முன்பு 200-300 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டுள்ளது. 

வித்தியாசம் 3: குர்-ஆன் குகைவாசிகள் கிறிஸ்தவர்கள், கும்ரான் குகைவாசிகள் யூதர்கள்.

பிஜே தம்மை அறிவாளி என்று எண்ணிக்கொண்டு, குர்-ஆனில் "அந்த ஏடு" என்று அல்லாஹ் குறிப்பிட்டுச் சொல்வது, கும்ரானில் கண்டெடுக்கப்பட்ட சுருள் தான் என்றுச் சொல்கிறார். ஆனால், குர்-ஆனின் குகைவாசிகள் "கிறிஸ்தவ வாலிபர்கள்" ஆவார்கள்  என்பதும், கும்ரானில் சவக்கடல் பகுதியில் வாழ்ந்தவர்கள் யூதர்கள் ஆவார்கள் என்பதும் இவருக்கு தெரியவில்லை. 

இதில் இன்னொரு வேடிக்கையைப் பாருங்கள். குர்-ஆனில் வரும் குகைவாசிகள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள், அப்படியானால்,  முஹம்மதுவிற்கு முன்பு 'எந்த காலக் கட்டத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள், திரித்துவமில்லாத ஒரே இறைவன் என்ற கோட்பாட்டை நம்பினார்கள்?' என்ற கேள்வி எழுகின்றது.  மேலும், எந்த காலக்கட்டத்தில், இயேசு இறைவன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள்? போன்ற சரித்திரம் சம்மந்தமான கேள்விகள் குர்-ஆனுக்கு சவால்களாக இருக்கின்றன. 

இயேசுவிற்கு தெய்வீகத்தன்மை உண்டு என்று நம்பின வாலிபர்களை, அதாவது கிறிஸ்தவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் குகையில் தூங்கச்செய்து காப்பாற்றியதாக குர்-ஆன் சொல்கிறது, ஆனால், அதே குர்-ஆன் இயேசுவிற்கு தெய்வீகத்தன்மையில்லை என்றுச் சொல்கிறது, இது வேடிக்கையல்லவா?

வித்தியாசம் 4: குர்-ஆன் குகைவாசிகள் அதிகபட்சம் 7 பேர், கும்ரான் வாசிகள் அதிகபட்சம் 200 பேர்

குர்-ஆனின் கட்டுக்கதை குகைவாசிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், அதிகபட்சமாக 7 ஆகும். இதற்கு குர்-ஆனும், அதற்கு முன்பாக நிலவிய இதர புத்தகங்களும் சாட்சிகளாகும். ஆனால், கும்ரான் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 200 இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்[6]. ஒவ்வொரு ஆய்வாளரும் வெவ்வெறு எண்ணிக்கையைச் சொல்கிறார்கள், பார்க்க அடிக்குறிப்பு [6].  அடுத்தடுத்த கட்டுரையில் கும்ரான் மக்களைப் பற்றி மேலதிக விவரங்களைக் காண்போம்.

பிஜே அவர்களின் சூப்பர் மேன்கள்:

கும்ரான் குகைகளில் கிடைத்த சுருள்களின் எண்ணிக்கையை கவனித்தால், அங்கு வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 7 பேராக மட்டும் இருக்காது. தங்கள் உயிரை காத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் தப்பித்து ஓடிய இந்த வாலிபர்கள், கும்ரான் குகைகளில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து சுருள்களையும் முதுகில் சுமந்துக்கொண்டு ஓடினார்கள் அதன்  பிறகு அந்த குகையில் ஒளிந்தார்கள் என்ற பொருளில் பிஜே அவர்கள் சொல்வது என்பது நகைப்பிற்குரியது, முட்டாள்தனமானது. இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. சவக்கடல் சுருள்கள் அனைத்தும் கும்ரானின் 11 குகைகளில் கிடைத்தது. பிஜே அவர்களின் விளக்கத்தை நாம் ஏற்பதாக இருந்தால், அந்த 11 குகைகளில் கிடைத்த அனைத்து சுருள்களையும், மண் ஜாடிகளையும் இந்த ஏழு வாலிபர்கள் கொண்டு வந்து பாதுகாத்து வைத்தார்கள் என்று சொல்லவேண்டும். இது சாத்தியமான ஒன்றா? உயிருக்கு பயந்து ஓடுபவர்கள் பெரிய மண் ஜாடிகளை சுமந்துக்கொண்டுப் போக  அவர்கள் 'சூப்பர் மேன்'களாக இருந்தார்களா? பிஜே அவர்கள் தான் இக்கேள்விகளுக்கு பதில் தரவேண்டும்.

மேலும் சில ஆய்வாளர்களின் படி, கும்ரான் குகைகள் தங்கள் சுருள்களை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட இடமாக இருந்ததாம், அப்படியானால், அந்த சவக்கடல் சுருள்களின் சொந்தக்காரர்கள், (எஸ்ஸனெஸ் என்ற யூத பிரிவு மக்கள்) வாழ்ந்த இடம் வேறு, அவர்கள் சுருள்களை பாதுகாத்த இடம் வேறு. எனவே, இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும், ஜோஸபாஸ் என்ற சரித்திர ஆசிரியரின் படி, 3000 எஸ்ஸனெஸ் யூதர்கள் முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார்கள், இவர்களின் 5% சதவிகிதமானவர்கள், இந்த குகைகளில் வாழ்ந்திருந்தாலும், 150 பேர் என்று கணக்கு வரும் – பார்க்க அடிக்குறிப்பு [6].

இவ்வளவு விவரங்களை நான் ஏன் தருகிறேன் என்று பிஜே போன்றவர்கள் சிந்திக்கவேண்டும்.  எடுத்தோம் கவிழ்த்தோம்க என்ற நிலையில் பிஜே போன்ற மத அறிஞர்கள் இருப்பதினால் தான் பலர் வழிதவறிச் செல்கிறார்கள். பிஜே அவர்களே, இனி ஏதாவது எழுதும் போது, எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 

வித்தியாசம் 5: குர்-ஆன் குகைவாசிகளின் ஒரு ஏடு, கும்ரான் வாசிகளின் பல ஆயிர ஏடுகள்

குர்-ஆனில் அல்லாஹ் "அந்த ஏட்டுக்குரியவர்கள்" என்று சொல்லிவிட்டானாம், எனவே, அது மூக்கியமானதாக இருக்கும் என்று பிஜே அவர்கள் ஆஹா, ஓஹோ என்று எழுதுகிறார். இவர் சொல்வதைப் பார்த்தால், கும்ரான் குகையில் இப்படி சுருள்கள் இருப்பதை இவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்து, உலகத்துக்கு சொன்னதாக எழுதுகிறார். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பதித்த இவரது வரிகளை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

பிஜே அவர்களே, யாருடைய காதை குத்தப்பார்க்கிறீர்கள்? யாரை ஏமாற்ற  இந்த முயற்சி?

கும்ரான் குகைகளில் 15000 கைப்பிரதிகள் கிடைத்ததாக நீங்களே உங்கள் விளக்கத்தின் பிற்பகுதியில் எழுதுகிறீர்கள், ஆனால், இங்கு மட்டும், "அந்த ஏடு" மிகவும் முக்கியமானது என்றுச் சொல்கிறீர்கள். 

கும்ரானின் குகைவாசிகள் அந்த 15000 ஏட்டுக்கு உரியவர்களா? அல்லது குர்-ஆன் சொல்கின்ற ஒரு ஏட்டுக்கு உரியவர்களா? உங்களால் சிறிது விளக்கமுடியுமா? ஒவ்வொரு குகையில் எத்தனை கைப்பிரதிகள் கிடைத்தன என்று அடிக்குறிப்பு [1] ல் உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் ஞானத்தை பயன்படுத்தி, அல்லாஹ் சொன்ன அந்த ஒரு ஏடு, எந்த குகையிலிருந்து கிடைத்தது என்று சொல்லமுடியுமா?

சவக்கடல் சுருள் பற்றி இன்னும் பல விவரங்களை அடுத்த கட்டுரையில் விவரிக்க விரும்புகிறேன். இதோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.

முடிவுரை:

இந்த கட்டுரையில், பிஜே அவர்கள் தம்முடைய 271ம் விளக்கத்தில் எழுதியவைகளுக்கு மேலோட்டமாக பதில் அளித்துள்ளேன். அதாவது, பிஜே அவர்களின் அடிப்படையே சரியில்லை, அவரின் ஒப்பிடுதலே தவறாக உள்ளது என்பதை விளக்கினேன். குர்-ஆனின் 18வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட ஒரு கட்டுக்கதையை, கும்ரானில் கிடைத்த சவக்கடல் சுருள்களோடு ஒப்பிட்டு அவர் எழுதியது, அவரின் மிகப்பெரிய மதியீனத்தை வெளிக்காட்டக்கூடியதாக இருக்கிறது.  இதனை வாசகர்கள் புரிந்துக்கொள்வதற்காக, மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஐந்து வித்தியாசங்களை மட்டுமே சுருக்கமாக எழுதினேன்.  

அவரது விளக்கத்தில் கிறிஸ்தவம் மீதும், பவுலடியார் மீதும் அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை அடுத்தடுத்த கட்டுரையில் கொடுக்கவுள்ளேன். 

மயங்கியிருக்கும் பிஜே போன்றவர்களை எழுப்புவது எப்படி?

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் உண்டு.

தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டு மயக்கத்தில் இருப்பவர்களை எப்படி எழுப்புவது? இது மிகவும் சுலபம். மயக்கம் தெளிய உதவிபுரியும்  பெரிய ஊசியை போடவேண்டிய இடத்தில் போட்டால் மயக்கம் தானாக தெளியும். அப்படியும் அவர்கள் எழவில்லையென்றால், அருவை சிகிச்சை செய்து, இரண்டு கிட்னியை எடுத்து காகத்துக்கு போட்டுவிட்டால் போதும், இனி அவர்களால் எந்த பிரச்சனையும் வராது.  ஆகையால், இஸ்லாமிய தமிழ் அறிஞர்களே, சிறிது ஆய்வு செய்து எழுதவும்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் கிறிஸ்தவர்களில் அனேகர் எழும்பி, முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டாக்கிக்கொண்டிருக்கும் விதத்தை பார்த்தால், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக கர்த்தரை அதிகமாக மகிமைப்படுத்துகிறேன்.

மயக்கத்தை தெளிவிக்கும் ஊசிகள் அடுத்த கட்டுரையிலும் போடப்படும்...

அடிக்குறிப்புக்கள்



வியாழன், 22 செப்டம்பர், 2016

நிலமெல்லாம் இரத்தம் (16) – புராணக்கதையின் குகைவாசிகளும் அல்லாஹ்வும்

(நிலமெல்லாம் இரத்தத்திற்கு கொடுத்த முந்தைய பதில்களை இங்கு படிக்கவும்)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

உங்களுடைய நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 15 மற்றும் 16வது அத்தியாயத்தில், முஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக குறைஷிகள் கேட்ட மூன்று கேள்விகள் பற்றி எழுதியுள்ளீர்கள்.  அவைகள் பற்றிய அறிமுகத்தை என் முந்தைய இரண்டு கட்டுரைகளில் (14, 15) எழுதியிருந்தேன்.  

இந்த கட்டுரையில், அல்லாஹ் கொடுத்த பதில்கள் எப்படி குர்-ஆனின் நம்பகத்தன்மையை கெடுத்துப்போடுகின்றது என்பதை சுருக்கமாக காண்போம். 

முதல் கேள்வி பற்றி பாரா அவர்கள் எழுதியது:

ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? . . .மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல! உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். 

. . . 

அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்கிவந்த அந்த இளைஞர்களுக்கு, அவர்களது சமூகத்தினராலேயே பெரும் பிரச்னை உண்டானது. உலகமே சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, இவர்கள் மட்டும் ஒரே இறைவன், உருவமற்ற இறைவன் என்று சொல்வதைப் பொறுக்காத மக்கள், அவர்களுக்குப் பல சங்கடங்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள். குகைக்குள்ளே போனவர்கள், தம்மை மறந்து உறங்கவும் ஆரம்பித்தார்கள். (குகைக்குள் சென்றவர்களை இறைவனே காதுகளைத் தட்டிக்கொடுத்து உறங்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆதாரம்: அல் கஹ்ஃப் 18:11) சுமார் முந்நூறு வருட உறக்கம்! பிறகு அவர்களது கண்விழிப்பை, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களின் விழிப்புணர்வுக்கு உருவகமாக வைத்து நிறைவடையும் கதை அது.

பாராவின் படி குர்-ஆனில் புராணக்கதை (கட்டுக்கதை) உள்ளது:

பாரா அவர்களே, உங்களின் கீழ்கண்ட வரிகள் என் வேலையை சுலபமாக்கிவிட்டது:

  • யூதர்கள் கேட்ட அந்த வினாக்களுக்கு விடை அவர்களுக்கு தெரிந்திருந்தது.
  • மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.
  • அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.
  • துன்புறுத்தல்களுக்கு பயந்து குகையில் பதுங்கியவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேல் தூங்கினார்கள்.

நீங்கள் இந்த கதை ஒரு புராணக்கதை என்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஒரு கட்டுக்கதையை உண்மையான சரித்திர நிகழ்ச்சியாக குர்-ஆன் சொல்லியுள்ளதை மறைமுகமாக நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இதிலிருந்து குர்-ஆன் ஒரு இறைவேதமல்ல என்பதை சொல்லிவிட்டீர்கள். 

குர்-ஆனில் காணப்படும் அனேக கட்டுக்கதைகளில் 'இந்த குகைவாசிகள்' பற்றிய கதையும் ஒன்று. 

இந்த நிகழ்ச்சிப் பற்றி குர்-ஆன் 18:9-22, 25-26ல் சொல்லப்பட்டுள்ளது.  இந்த வசனங்களை அடிக்குறிப்பு [1]ல் கொடுத்துள்ளேன். இப்போது இந்த கதை குர்-ஆனில் இருப்பதினால் அல்லாஹ்விற்கு உண்டாகும் பிரச்சனைகள் என்னவென்பதை சுருக்கமாக காண்போம்:

1) குகையில் ஒதுங்கியவர்கள் எத்தனைப் பேர் என்று அல்லாஹ்விற்கு தெரியவில்லை 

ஒரு கட்டுக்கதையை உண்மையான சரித்திரம் என்று அல்லாஹ்  பதிவு செய்து இருப்பது குர்-ஆனின் நம்பகத்தன்மையை சிதைக்கும் முதலாவது துப்பாகும். இரண்டாவதாக, அந்த குகையில் ஒதுங்கியவர்கள் எத்தனைப்பேர் என்று அல்லாஹ் சொல்லாமல் விட்டது, குர்-ஆன் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.  குர்-ஆன் 18:22ம் வசனத்தில் அல்லாஹ் குழப்பும் விதத்தை பாருங்கள்:

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர், (இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் – (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

அந்த குகையில் ஒதுங்கியவர்கள் எத்தனைப் பேர்? என்ற கேள்விக்கு அல்லாஹ் தரும் பதில் இது தான் (இது பதிலா!?). சிலர் மூன்று பேர் என்றுச் சொல்கிறார்களாம், சிலர் ஐந்து பேர் என்றுச் சொல்கிறார்களாம், வேறு சிலர் ஏழு பேர் என்றுச் சொல்கிறார்களாம். கடைசி வரையிலும், எத்தனைப்பேர் என்று அல்லாஹ் கூட சொல்லவே இல்லை!

இதனை, பாரா அவர்கள் சரியாக சுட்டிக்காட்டினார், அதாவது இந்த கதை ஒரு புராணக்கதையாகும் அதாவது கட்டுக்கதையாகும். வாய்வழியாக கதைகள் உலாவும் போது, இப்படி ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறான எண்ணிக்கைத் தான் வெளிப்படும்.  

அல்லாஹ் இந்த கதையை சரித்திரக்கதை என்றுச் சொல்வதாக இருந்தால், ஏன் அவர் எண்ணிக்கையை சரியாகச் சொல்லவில்லை? மேலும், அந்த வசனத்தில் அல்லாஹ்வோடு சேர்த்து, இன்னும் சிலருக்குத் தான் அந்த எண்ணிக்கைத் தெரியும் என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். ஆனால், அது என்ன எண்ணிக்கை என்று சொல்ல மறுத்துவிட்டான். அல்லாஹ்வின் இந்த அரைகுறையான பதில், கேட்ட கேள்விக்கு எப்படி சரியான பதிலாக அமையும்?

//(நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக!//

அல்லாஹ் சொன்ன இதே பதிலைத் தான், அக்கால பாமர மக்கள் கூட வாய்வழியாக கேட்டு அறிந்து வைத்திருப்பார்கள். முஹம்மதுவைப் போன்ற ஒரு வியாபாரியிடம் சென்று, 'நீ பல நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து இருக்கிறாய். குகையில் ஒதுங்கிய அந்த வாலிபர்கள் பற்றிய கதையை நீ கேட்டு இருந்திருந்தால் அதைப் பற்றி சிறிது விளக்கமுடியுமா? என்று கேட்கும் போது, அவர் அல்லாஹ் சொன்னது போலத்தான் பதில் சொல்வார், 'சிலர் குகையில் ஒதுங்கியது 3 பேர் என்கிறார்கள், சிலர் 5 அல்லது 7 என்று சொல்பவர்கள் உண்டு, ஆனால், உண்மையான எண்ணிக்கை எனக்குத் தெரியாது என்றுச் சொல்வார்'.  

இப்படிப்பட்ட அரைகுறை பதிலைச் சொன்ன அல்லாஹ் எப்படி சர்வ ஞானியாக இருக்கமுடியும்?

ஏதோ தவறான எண்ணிக்கையைச் சொல்லி ஏன் வீணாக மாட்டிக்கொள்ளவேண்டும்? எனவே, சிலர் இப்படிச் சொல்கிறார்கள்! சிலர் அப்படிச் சொல்கிறார்கள்! என்று சொல்லிவிட்டு எண்ணிக்கையைச் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால்  தப்பித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பதிலை கொடுத்துள்ளார் அல்லாஹ்.  இந்த தவறை சரியாக புரிந்துக்கொண்ட பாரா அவர்கள் கூட, கழுவுற மீனில் நழுவுற மீன் போல, நாஜூக்காக அடைப்பிற்குள் அல்லாஹ்வின் மானத்தை காப்பாற்ற முயன்றுள்ளார். பாரா அவர்களின் அந்த வரிகளை கீழே படியுங்கள்: 

// ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள்.//

அடைப்பிற்குள் "(மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.)" என்று எழுதிய பாரா அவர்கள் "யாருக்கு தெரியவில்லை?" என்று தெளிவாகச் சொல்லவில்லை. பாரா அவர்களுக்கு அந்த எண்ணிக்கை தெரியாது என்று எடுத்துக்கொள்வதா? அல்லது அல்லாஹ்விற்கே அதன் பதில் தெரியவில்லை என்று எடுத்துக்கொள்வதா? 

முடிவாக, குகை தோழர்கள் பற்றிய குர்-ஆனின் விவரங்களை படிக்கும் போது, சரியான பதில் தெரியாமல் பல நாட்கள் தவித்த முஹம்மது, கடைசியாக இட்டுக்கட்டிய வசனங்கள் தான் இவைகள் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.   இதனை மறுப்பவர்கள், அந்த காலத்தில், வேறு யாருக்கும் தெரியாத ஒரு புதிய விவரம் இந்த வசனங்களில் என்ன இருக்கிறது? என்பதை சுட்டிக்காட்டட்டும். 

2) "இபேஸஸ் நித்திரையாளர்கள்"(Seven Sleepers of Ephesus):

குகை வாசிகள் பற்றிய விவரம், புகழ் பெற்ற புராணக்கதையாகும், முஹம்மதுவிற்கு வானத்திலிருந்து இறங்கிய அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விவரமல்ல. பாரா அவர்களின் வரிகளை பாருங்கள்:

அ) யூதர்கள் கேட்ட அந்த வினாக்களுக்கு விடை அவர்களுக்கு (மதினா யூதர்களுக்கு) தெரிந்திருந்தது.

ஆ) மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.

இ) அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.

யூதர்கள் ஒரு "பொதுஅறிவுக்" கேள்வியைத்தான் முஹம்மதுவிடம் கேட்கச் சொல்லியுள்ளார்கள். அதுவும்,  யூதர்கள் எதிரிகளாக கருதும் கிறிஸ்தவர்கள் பற்றிய புராணக்கதையைப் பற்றி கேட்கச்சொல்லியுள்ளார்கள். இந்த கதைக்கும் யூதர்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை. முஹம்மதுவின் காலத்தில் பாமர மக்கள் முதல், படித்தவர்கள் வரை பெரும்பான்மையானவர்களின் வாயில் உலாவிய கதையை முஹம்மது அரைகுறையாக அறிந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், பாரா போன்றவர்கள் தான், ஒன்றுமில்லாதவற்றை பிடித்துக்கொண்டு, 'இந்த பதிலின் மூலமாக முஹம்மதுவின் நபித்துவம் நிருபிக்கப்பட்டது' என்று தம் தொடர் கட்டுரையில் எழுதுகிறார்கள் (பாரா அவர்கள் என்ன செய்யமுடியும்! முஸ்லிம்கள் சொன்னதைத் தானே அவரும் எழுதமுடியும்!).

இதைப் பற்றிய பொதுவான விவரங்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கவும்:https://en.wikipedia.org/wiki/Seven_Sleepers

முடிவுரை:

ஒரு கட்டுக்கதையை அல்லாஹ் குர்-ஆனில் புகுத்தியுள்ளான், மேலும் அவன் கொடுத்த பதில் கூட அரைகுறையானதாக இருக்கிறது. குகையில் பதுங்கியவர்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆனால் உண்மையான எண்ணிக்கை என்னவென்று அல்லாஹ் கடைசி வரை சொல்லவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?  குகை  பற்றிய வசனங்கள் முஹம்மதுவின் சொந்த சரக்கு ஆகும், அவைகள் சொர்க்கத்திலிருந்து இறங்கிய சரக்கு அல்ல.   முஹம்மது இந்த பதிலை அளித்தால், நிச்சயமாக மக்கள், "தூங்கியவர்கள் எத்தனை பேர்?" என்று கேட்பார்கள், அப்போது நீ அவர்களோடு அதிகமாக தர்க்கம் செய்யவேண்டாம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான்.

(நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

சர்வத்தையும் அறிந்த ஞானியாக அல்லாஹ் இருந்திருந்தால், தூங்கியவர்களின் சரியான எண்ணிக்கையை சொல்லியிருக்கலாம் அல்லவா? மற்றவர்கள் சொல்வதெல்லாம் பொய்யாகும், "நான் சொல்லும் எண்ணிக்கைத் தான் சரியானது" என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அவன் சொல்லவில்லை, ஏனென்றால், முஹம்மதுவிற்கு சரியான எண்ணிக்கை தெரியாது, எனவே, அல்லாஹ்வினால் சொல்லமுடியவில்லை.

இந்த அரைகுறை விவரத்திற்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் "எண்ணிக்கை முக்கியமல்ல, அந்த கதையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் தான் முக்கியம், அதற்காகத் தான் அல்லாஹ் எண்ணிக்கையைச் சொல்லவில்லை" என்று ஒரு சப்பைக் கட்டுக் கட்டுவார்கள். அல்லாஹ் இப்படி அரைகுறை விவரம் சொன்னால் அது எப்படி முழுமையான பதிலாக அமையும்?  இதிலிருந்து முஹம்மதுவின் நபித்துவம் எப்படி நிருபிக்கப்படும்?

அடுத்த கட்டுரையில், மீதமுள்ள இரண்டு பதில்களைப் பற்றி காண்போம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] குர்-ஆன் 18:9-22, 25-26 (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

18:9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.

18:11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

18:12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

18:15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

18:16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

18:17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.  

18:18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

18:19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

18:20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்" (என்றும் கூறினர்).

18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள்.

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.

18:25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.

18:26. "அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை" என்று (நபியே!) நீர் கூறும்.


நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan16.html


ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

குர்-ஆன் 24:33 – அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் முஸ்லிம்களை அல்லாஹ் தண்டிப்பானா?

இது எப்படிப்பட்ட கூற்று?  ஒரு முஸ்லிம் அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் வரும் பணத்தை சாப்பிடுவானா? இப்படியும் யாராவது எழுதுவார்களா? போன்ற கேள்விகள் இக்கட்டுரையை படிக்கும் முஸ்லிம்களுக்கு எழும். ஆனால், இப்படிப்பட்ட (மாமா) வேலைகளை செய்யும் முஸ்லிம்களை தண்டிக்கமாட்டேன் என்று அல்லாஹ் குர்-ஆனில் மறைமுகமாக சொல்லியிருந்தால் முஸ்லிம்கள் எப்படி இதனை ஜீரணித்துக்கொள்வார்கள்? 

நம் கட்டுரைக்கு மையமாக இருக்கும் குர்-ஆன் வசனத்தை இப்போது படிப்போம்.

1) குர்-ஆன் 24:33

குர்-ஆனின் ஒவ்வொரு எழுத்தும் அல்லாஹ்வின் வாயிலிருந்து புறப்பட்டதாகும், இதில் முஸ்லிம்களுக்கு சந்தேகமில்லை. 

குர்-ஆன் 24:33ஐ நான்கு தமிழ் மொழியாக்கங்களில் படிப்போம். கடைசி வாக்கியத்தை கூர்ந்து கவனிக்கவும்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

இதர தமிழாக்கங்களில் முழுவசனத்தை படிக்காமல், இவ்வசனத்தின் கடைசி வாக்கியத்தை மட்டும் படிப்போம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:33. . . . தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

24:33. . . . மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

பிஜே தமிழாக்கம்:

24:33. . . . கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

கவனிக்கவும்: இங்கு பிஜே அவர்கள் "உங்கள் பெண்களை" என்று குழப்பம் தரும்படி தமிழாக்கம் செய்துள்ளார். இந்த வசனம் அடிமைப்பெண்கள் பற்றி பேசுகின்றதே தவிர, முஸ்லிம்கள் சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளும் (1 லிருந்து 4 வரையுள்ள) பெண்களைப் பற்றி பேசவில்லை. ஆனால், இதே பிஜே அவர்கள், தம் ஆங்கில மொழியாக்கத்தில் அடைப்பிற்குள் (slaves - அடிமைகள்) என்று எழுதியுள்ளார், இதே போல தமிழில் அவர் செய்திருக்கலாம்.

பிஜே தமிழாக்கத்தின் ஆங்கில மொழியாக்கம்:

33. Let those who have no means to marry, safe guard their chastity435, until Allah makes them self sufficient by his bounty. Those among your slaves, who ask for a deed of freedom in writing, then you give them in writing, the deed of freedom if you know the goodness in them301. You give them from the wealth which Allah has given you. Do not compel in prostitution your women (slaves) who desire chastity in order to get the material gains of the world. Whoever compels, then indeed, Allah is Forgiving and the Most Merciful to the compelled women.

2) தமிழாக்கங்களின் சுருக்கமான ஆய்வு

மேலே நான்கு தமிழாக்கங்களில் குர்-ஆன் 24:33ம் வசனத்தை படித்தோம். முக்கியமாக, அவ்வசனத்தின் கடைசி வாக்கியத்தை, அப்துல் ஹமீது பாகவி தவிர, மற்றவர்கள் ஒரே மாதிரியாக தமிழாக்கம் செய்துள்ளார்கள். அப்துல் ஹமீது பாகவி அவர்களால், அல்லாஹ்வின் தெய்வீக கடைசி வாக்கியத்தை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை ஒரு முஸ்லிம் தன்னிடமுள்ள, ஒழுக்கமாக வாழவேண்டுமென்று விரும்புகின்ற ஒரு அடிமைப் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணத்தை சம்பாதித்தால், அல்லாஹ் அப்பெண்ணை மன்னிப்பான் என்று இவ்வசனம் சொல்கிறது. ஆனால், அந்த மாமா வேலை செய்த முஸ்லிம் பற்றி ஒன்றுமே சொல்லாமல், அல்லாஹ் அமைதியாக இருந்துவிட்டான். இதனை ஜீரணித்துக்கொள்ளாத பாகவி அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு வாக்கியத்தை அடைப்பிற்குள் எழுதுகிறார்கள், கடைசி வாக்கியத்தை கவனிக்கவும்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:33. . . . தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)

பாகவி அவர்களின் இந்த மொழியாக்கம், குர்-ஆனுக்கு எதிரானதா? இக்கட்டுரையின் கடைசியில் இதைப் பற்றி சில கேள்விகளை முன்வைப்போம்.

3) குர்-ஆன் 24:33ன் நான்கு வாக்கியங்கள்

இப்போது இந்த வசனத்தின் நான்கு வாக்கியங்களை ஆய்வு செய்வோம். நான்காவது வாக்கியம் தான் இக்கட்டுரையின் மையப்பொருள் ஆகும். 

முதல் வாக்கியம்: 

முதல் வாக்கியத்தில் திருமணமாகாதவர்கள் (ஆண்கள்) எப்படி தங்கள் "கற்பை" காத்துக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். ஒவ்வொரு தமிழாக்கத்திலும் "கற்பு - ஒழுக்கம்" என்ற வார்த்தையை எப்படி குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை கவனிக்கவும்:

  • முஹம்மது ஜான் தமிழாக்கம்: ஒழுக்கம் பேணட்டும்
  • அப்துல் ஹமீது பாகவி: கற்பைக் காத்துக் கொள்ளவும்
  • IFT தமிழாக்கம்: ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும்
  • பிஜே தமிழாக்கம்:  கற்பொழுக்கம் பேணட்டும்

இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று உள்ளது. இவ்வசனத்தில் "கற்பு, ஒழுக்கம், ஒழுக்கத்தூய்மை" போன்ற வார்த்தைகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் அர்த்தம் வேறு, நாம் பொதுவாக கொடுக்கும் அர்த்தம் வேறு. 

நாத்தீகர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களிடம் சென்று, "ஒருவன் தனக்கு திருமணம் ஆகும் வரை தன் கற்பை காத்துக்கொண்டான் அல்லது ஒழுக்கதூய்மையோடு இருந்தான்" என்றுச் சொன்னால், "அவன் திருமணத்திற்கு  முன்பு வேறு  எந்த பெண்ணோடும் உடலுறவு கொள்ளவில்லை" என்று அர்த்தம் என பொதுவாக புரிந்துக்கொள்வோம். ஆனால், முஸ்லிம்களிடம் சென்று, "இந்த முஸ்லிம் வாலிபன்  தனக்கு திருமணம் ஆகும் வரை தன் கற்பை காத்துக்கொண்டான் அல்லது ஒழுக்கதூய்மையோடு இருந்தான்" என்று நாம் சொன்னால், அதற்கு என்ன அர்த்தமென்றால், "இவன் தனக்கு திருமணம் ஆகும் வரை, தன் அடிமைப் பெண்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தான், ஆனால், இதர பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளாமல், தன் கற்பைக் காத்துக்கொண்டான்" என்று அர்த்தமாகும்.

ஆக, ஒரு முஸ்லிம் வாலிபன் கணக்கிலடங்கா அடிமைப்பெண்களோடு உடலுறவு வைத்துக்கொண்டாலும், தன் கற்பை பல அடிமைப்பெண்களுக்கு பகிர்ந்து கொடுத்தாலும், அல்லாஹ் அவனைப் பார்த்து, "சபாஷ், இவன் தன் கற்பை காத்துக்கொண்டான்" என்று மெச்சிக்கொள்வான்.  அடிமைப் பெண்களோடு முஸ்லிம் ஆண்கள் திருமணமாகாமல் உடலுறவு கொண்டால், அதனை "இஸ்லாம் விபச்சாரம்" என்று அழைக்காது, "அவனைப் பார்த்து கற்புள்ளவன்" என்று தான் அழைக்கும், இந்த விவரத்தை முஸ்லிமல்லாதவர்கள் புரிந்துக்கொள்வது சிறிது கடினமே. 

முஸ்லிம்களின் அகராதியில் "கற்பு, ஒழுக்கம்" போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே வேறு.

இரண்டாவது வாக்கியம்: 

இரண்டாவதாக, "உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்!" என்ற வாக்கியமாகும். இந்த வாக்கியம் அடிமைகளாக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிக்கும். ஆனால், அடிமைப் பெண்களின் விஷயத்தில் சில சிக்கல்கள் தெரிகின்றன. 

1) விடுதலைப் பத்திரம் பெற்றுக்கொண்ட அடிமைப்பெண்கள் எப்படி சம்பாதித்து தங்கள் கடனை அடைப்பார்கள்?

2) இப்பெண்களின் குடும்பங்கள் மற்றும் பெற்றோர்களை கொன்றுவிட்டுத்தான் இவர்களை அடிமைகளாக கொண்டுவந்துள்ளார்கள்.

3) இப்பெண்கள் சம்பாதிக்க தங்கள் நாட்டிற்குச் செல்ல வாய்ப்பு இல்லை, அங்கு அவர்களின் குடும்ப நபர்கள் கூட உயிரோடு இல்லை.

4) இவர்களிடத்தில் பலவகையான திறமைகளை வெளிக்காட்டி சம்பாதிக்கும் வாய்ப்பு கூட இருக்காது. முஸ்லிம்கள் வாழும் இடத்தில் பெண்கள் எப்படி முன்னேறமுடியும்? இந்த அடிமைப்பெண்கள் என்ன தொழில் செய்து சம்பாதித்து, தங்கள் எஜமானர்களின் கடனை தீர்ப்பார்கள்?

5) அடிமைகளாக கொண்டு வரப்பட்ட நாள் முதற்கொண்டு, இந்த முஸ்லிம் எஜமானர்கள் தொடர்ச்சியாக இவர்களை கற்பழித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் என்ன தொழில் செய்து பணம் சம்பாதிக்கமுடியும்?

6) இவர்கள் விடுதலை பத்திரம் எழுதிக்கொண்டு, ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கிறேன் என்றுச் சொல்லி,  இஸ்லாமிய சமுதாயத்தில் வாழமுயன்றாலும், மற்ற முஸ்லிம்கள், இவர்கள் அடிமைகள் அல்லவா? என்றுச் சொல்லி, இவர்களுக்கு பாலியல் தொல்லை தரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

7) பெயரளவிற்கு, அடிமைப்பெண்களுக்கு விடுதலை பத்திரம் எழுதிக்கொடுங்கள் என்று குர்-ஆன் சொன்னாலும், அது முஸ்லிம்கள் வாழும் சமுதாயத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகும். இன்னொரு நிபந்தனையும் குர்-ஆன் சொல்கிறது, அதாவது அடிமைகளிடம் "நல்லதை நீங்கள் அறிந்தால்" அவர்களுக்கு விடுதலை பத்திரம் எழுதிக்கொடுங்கள் என்றுச் சொல்கிறது.  அடிமைப்பெண்களிடம் என்ன நல்லதை (தொழில் செய்து சம்பாதிக்கும் திறமையை) இந்த முஸ்லிம் ஆண்கள் காணமுடியும்? குர்-ஆனின் படி, அடிமைப்பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. குர்-ஆன் பெயரளவிற்கு சொல்கிறது என்பதை காணமுடியும்.

8) இஸ்லாமிய சமுதாயத்தில், அடிமைப்பெண்கள் விடுதலை பத்திரம் எழுதப்பட்டு விடுவிக்கப்பட்டால், அவர்கள் விபச்சாரம் புரிந்து தான் சம்பாதிக்கமுடியும். அதுவும், முஸ்லிம் எஜமானனிடம் இருந்துக்கொண்டு விபச்சாரம் புரிந்தால், அப்பெண்களுக்கு சிறிது பாதுகாப்பாவது கிடைக்கும், அந்த எஜமானனை விட்டு வெளியே வந்து அந்த தொழில் செய்தால், இவர்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாம் பாதுகாப்பு அளிக்காது. 

9) பெயரளவிற்கு குர்-ஆன்  "அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்!"  என்று சொல்கிறது, ஆனால், எவ்வளவு தரவேண்டும், எந்த வகையில் தரவேண்டும்? போன்ற விவரங்களை அல்லாஹ் நிர்ணயிக்கவில்லை. உண்மையாகவே, அடிமைப்பெண்கள் மீது அக்கரையுள்ளவர்களாக அல்லாஹ்வும் முஸ்லிம்களும் இருந்திருந்தால், அவர்களை கற்பழிக்கும் படி அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியிருக்கமாட்டான், முஸ்லிம்களும், முஹம்மதுவும் அந்த வசனத்தை பின்பற்றியிருந்திருக்கமாட்டார்கள். 

மூன்றாவது வாக்கியம்:

"கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்!"

இந்த வாக்கியத்தில் "கற்புள்ளவர்களாக வாழவேண்டும் என்று விரும்பும் அடிமைப்பெண்களை, முஸ்லிம்களே, நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்காதீர்கள்" என்று அல்லாஹ் சொல்கின்றான். இப்படியும் முஹம்மதுவின் கால முஸ்லிம்கள் செய்வார்களா? என்று புருவங்களை உயர்த்துகிறீர்களா? ஆம், குர்-ஆனில் அல்லாஹ் அப்படித் தான் சொல்கிறான். 

இது சாதாரண வாக்கியமல்ல, அல்லாஹ்வினால் விஷமேற்றப்பட்ட வாக்கியமாகும். இவ்வாக்கியம் மறைமுகமாக என்ன சொல்கிறது? நேரடியாக என்ன சொல்கிறது? என்பதை கவனித்தால் ஆச்சரியமாக இருக்கும்.

1) அடிமைப்பெண்கள் யார்? இவர்களும் குடும்பப்பெண்களே! ஆனால், போரினால் தங்கள் குடும்பங்களை இழந்துவிட்டு, அடிமைகளாக விற்கப்பட்டவர்கள்.

2) கற்பொழுக்கத்தோடு வாழவேண்டுமென்று விரும்புகிற அடிமைப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவேண்டாமென்று அல்லாஹ் சொல்வதிலிருந்து, மறைமுகமாக முஸ்லிம்களுக்கு  "கற்பு பற்றி அக்கரை கொள்ளாத அடிமைப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்" என்று அல்லாஹ் சொல்லவருகிறார் என்று புரிகின்றதல்லவா? என்னுடைய இந்த விளக்கம் தவறு என்று முஸ்லிம்கள் கருதினால், இவ்வசனத்திற்கு சரியான விளக்கத்தை கொடுக்கலாம்.

3) ஒரு முஸ்லிமிடம், ஒரு அடிமைப்பெண் இருப்பாள் என்று வைத்துக்கொள்வோம், அவள் கற்பு பற்றி அக்கரையில்லாதவள் என்று வைத்துக்கொள்வோம். குர்-ஆன் 24:33ன் படி, இந்த முஸ்லிம் தன் நண்பர்களிடம் தன் அடிமைப்பெண்ணை கூட்டிக்கொடுத்து (விபச்சாரத்தில் ஈடுபடுத்தி) பணம் சம்பாதிக்கலாம். 

4) இந்த வாக்கியம், ஒரு முஸ்லிம் தன் அடிமைப்பெண்ணோடு உடலுறவு கொல்வது பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், குர்-ஆனின் படி, தன் அடிமைப்பெண்ணோடு உடலுறவு கொள்வது என்பது ஹலால் ஆகும், ஹராம் அல்ல. இங்கு அல்லாஹ் குறிப்பிட்டுச் சொல்வது, அந்த பெண்ணை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதிப்பது பற்றியதாகும்.

5) அல்லாஹ் எப்படிப்பட்ட தெய்வமாக இருக்கிறான் பாருங்கள்! குர்-ஆன் எப்படிப்பட்ட வேதமாக இருக்கிறது என்று பாருங்கள்! தன் மக்கள் அடிமைப்பெண்களை கற்பழிக்கவும், கற்பைப் பற்றி அக்கரையில்லாத அடிமைகள் மூலமாக விபச்சாரத்தொழில் நடத்தி பணத்தை சம்பாதிக்கவும் குர்-ஆன் அனுமதிக்கிறது. இதனை மறுப்பவர்கள், தகுந்த ஆதாரங்களோடு மறுக்கலாம்.

நான்காவது வாக்கியம்:

"யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்."

இப்போது நான்காவது வாக்கியத்துக்கு வருவோம். இது தான் இக்கட்டுரையின் கருப்பொருள் வாக்கியம்.

ஒருவேளை முஸ்லிம்களில் சிலர்,  கற்பை பேணவேண்டுமென்று விரும்பும் அடிமைப்பெண்களை பலவந்தப்படுத்தி, விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தினாலும், அதன் மூலம் வரும் பணத்தை சாப்பிட்டாலும், இதில் அப்பெண்களின் தவறு ஒன்றுமில்லை,  எனவே "நான் மன்னித்துவிடுவேன்" என்று அல்லாஹ் இந்த வாக்கியத்தில் சொல்கின்றான். 

1) மேலோட்டமாக இந்த வாக்கியத்தை படிப்பவர்கள், அல்லாஹ் எவ்வளவு பெரிய அன்பாளனாக இருக்கிறான் பாருங்கள்! அந்த அடிமைப்பெண்களை மன்னிப்பேன் என்று குர்-ஆனில் சொல்லியிருக்கிறான் என்று எண்ணக்கூடும். ஆனால், தன் இறைத்தூதரையும், தன் வேதத்தையும் நம்பும் முஸ்லிம்கள் ஒரு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை சாப்பிட முயன்றுள்ளார்களே! அந்த முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா?

2) இது எவ்வளவு பெரிய கேடுகெட்ட செயலாகும். அடிமைப்பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் அவர்களை கற்பழிப்பது ஒரு பெருங்குற்றம். இதோடு கூட, அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணத்தைச் சம்பாதிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் பாருங்கள்?

3) இந்த வாக்கியத்தில், அப்படிப்பட்ட முஸ்லிம்கள் "காஃபிர்கள் ஆவார்கள்" என்றோ, அல்லது, அவர்கள் செய்வது "ஷிர்க்" என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு பெரிய பாவம் என்றோ அல்லாஹ் சொல்லவில்லை? இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமென்றும்? அல்லாஹ் குர்-ஆனில் இவ்வசனத்தில் குறிப்பிடவில்லை. 

4) இப்படிப்பட்ட காரிங்கள் செய்யும் முஸ்லிம்கள் "காஃபிர்கள்" என்று நம் முஸ்லிம் அறிஞர்கள் ஃபத்வா கொடுப்பார்களா? இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும்? என்று தண்டனையை நிர்ணயிப்பார்களா?

5) பல பக்கங்கள் விளக்கங்களை எழுதிய பிஜே அவர்கள், இந்த விவரம் குறித்து ஒரு விளக்கமாவது கொடுத்திருக்கின்றாரா? பிஜே அவர்களின் கருத்துப்படி, முக்கியமாக TNTJ குழுவில் உள்ள முஸ்லிம்களின் கருத்துப்படி, இப்படிப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படவேண்டும்? ஒருவேளை, இவ்வசனத்தில் அல்லாஹ்வே அப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காத பட்சத்தில் "நாங்கள் அவர்களுக்கு இன்ன தண்டனை கொடுக்கப்படவேண்டுமென்று ஃபத்வா கொடுத்தால், நாங்கள் அல்லாஹ்வோடு மோதுகின்றவர்களாக கருதப்படுவோம்" என்று பயப்படுகின்றீர்களா?

6) இவ்வாக்கியத்தில் வரும் கேவலமான விவரத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாத அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தன் தமிழாக்கத்தில் "(எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)" என்று எழுதியிருப்பது? ஏற்றத்தக்கதா? இவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிராக எழுதியதாக கருதப்படவேண்டுமா? 

7) பாகவி அவர்கள், அப்படிப்பட்ட முஸ்லிம்கள் "பெரும் பாவிகள்" என்று முத்திரை குத்துவது பற்றி பிஜே மற்றும் இதர முஸ்லிம் அறிஞர்களின் கருத்து என்ன? அதுவும் "வெறும் பாவியல்ல", "பெரும் பாவி" என்று இவர் கூறுகின்றார். அப்படியானால், பெரும் பாவியாகிய அந்த முஸ்லிமுக்கு, ஷரியா சட்டத்தின் படி என்ன தண்டனை கொடுக்கப்படவேண்டும்? தற்காலத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இப்பாவத்தைச் செய்யும் முஸ்லிமுக்கு என்ன தண்டனையுள்ளது, யாராவது இந்த விஷயத்தில் தெளிவான விளக்கம் அளிக்கமுடியுமா?

8) பாகவி போன்ற ஒரு முஸ்லிமுக்கு இந்த பாவம் "பெரும்  பாவம்" என்று தோன்றியுள்ளது, ஆனால் அல்லாஹ்விற்கும், இதர முஸ்லிம் அறிஞர்களுக்கும் ஏன் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றவில்லை?

9) ஒருவேளை, குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் இந்த பெரும் பாவத்துக்கு என்ன தண்டனையை அல்லாஹ் நியமித்துள்ளான் என்று ஆராய்ச்சி செய்து, முஸ்லிம்கள் எனக்கு தெரிவித்தால், நான் இந்த கட்டுரையில் அதனை "தமிழ் முஸ்லிம்கள் கொடுத்த மேலதிக விளக்கம்/பதில்" என்று தலைப்பிட்டு, அதனை அப்படியே பதித்து, என் கட்டுரையில் எந்த இடத்தில் மாற்றம் செய்யமுடியுமோ, அங்கு மாற்றம் செய்து பதிப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

10) அல்லாஹ் ஒரே ஒரு வாக்கியத்தில், "அடிமைப்பெண்களை முஸ்லிம்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது, அப்படி செய்பவர்கள் பெரும் பாவிகள் ஆவார்கள், அது ஷிர்க் ஆகும்" என்று குர்ஆனில் சொல்லியிருந்தால், முஸ்லிம்கள் அதனை நிச்சயம் பின்பற்றியிருந்திருப்பார்களே! ஆனால், அடிமைப்பெண்களின் துரதிஷ்டம்! எனக்கு தெரிந்தவரை குர்-ஆனில் அப்படி அல்லாஹ் சொல்லவே இல்லை. இதனை மறுப்பவர்கள் குர்-ஆனிலிருந்து மேற்கண்டது போல அல்லாஹ் சொல்லியிருந்தால், அந்த வசனத்தை குறிப்பிடவும். நான் இந்த கட்டுரையில் அவ்வசனத்தை பதித்து, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பேன். 

முடிவுரை: 

குர்-ஆன் 24:33ஐ நாம் ஆய்வு செய்தோம். எனக்கு தெரிந்த விளக்கத்தை நான் கொடுத்தேன். பிஜே முதற்கொண்டு, இதர முஸ்லிம் அறிஞர்களிடமிருந்து நான் இக்கட்டுரைக்கு பதிலையும், விமர்சனத்தையும் எதிர்ப்பார்க்கிறேன். நான் வெளிப்படையாக அல்லாஹ் மீது குற்றம் சுமத்தியுள்ளேன், இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் படி பிஜே அவர்களை கேட்டுக்கொள்கிறேன், தம்முடைய குர்-ஆன் விளக்கத்தில் இதற்கான பதிலை விளக்கமாக எழுதும் படி, முஸ்லிம்கள் அவரை நிர்பந்திக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். யாரேனும் அவரை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட பிஜே அவர்களை  அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


உமரின் குர்-ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

பிஜே அவர்களுக்கு மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran_24_33.html


செவ்வாய், 13 செப்டம்பர், 2016

2016 பக்ரீத் – 7: அல்லாஹ்வின் குர்பானி, குர்பானி & குர்பானி

(2016 பக்ரீத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இந்த தொடுப்பில் படிக்கலாம்)

இந்த தொடரில் "குர்பானி" என்ற முக்கியமான சொற்றொடர் பற்றியும், இதற்கும் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமப்பதற்கும் என்ன ஒற்றுமையுள்ளது என்பதைப் பற்றியும் சிறிது ஆய்வு செய்வோம்.

குர்பானி என்ற சொல்லிற்கு "தியாகம் செய்தல்" என்றும், "எந்தச் செயலைக் கொண்டு ஒருவரை (அல்லாஹ்வை) நெருங்க முடியுமோ அச்செயல்" என்றும் பொருள் கூறுகிறார்கள்.

Qurbāni (Arabic: قربانى‎‎) (or أضحية Udhiyyah as referred to in Islamic Law) is the sacrifice of a livestock animal during Eid al-Adha. The word is related to the Hebrew qorbān "offering" and Syriac qurbānā "sacrifice", etymologised through the cognate Arabic triliteral as "a way or means of approaching someone" or "nearness". [1] விக்கிபீடியா

பொதுவாக பக்ரீத் பண்டிகையன்று பிராணிகளை பலியிடுவதை குர்பானி என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். குர்பானி பற்றிய அருமை பெருமைகளை முஸ்லிம்களிடம் கேட்டால், மணிக்கணக்கில் விளக்குவார்கள். குர்பானியாக பலியிடப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமமும் (முடியும்), குர்பானி கொடுக்கும் நபருக்கு கியாமநாளில் நன்மைகளாக கருதப்படுமாம்.

1) அல்லாஹ்வை நெருங்க எப்படி குர்பானி உதவி புரியும்?

ஒருவரை நெருங்க எந்த செயல் உதவியாக இருக்குமோ, அதனை குர்பானி என்றுச் சொல்வார்கள். ஒரு மிருகத்தை அறுத்து, அதன் இரத்தத்தை பூமியில் ஓடச்செய்வது எப்படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நெருங்க உதவியாக இருக்கும்?

திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்ற ஹதீஸ் தொகுப்புகளில், கீழ்கண்ட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமநாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

அறிவிப்பவர்-அன்னை ஆயிஷா(ரலி), திர்மிதி-180, இப்னு மாஜா-233 மூலம்

பக்ரீத் பண்டிகை நாளன்று, முஸ்லிம்கள் செய்யும் செயல்களில், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த செயல், குர்பானி பிராணியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதாகுமாம். மேலும், அதே மேற்கண்ட கட்டுரையில், குர்பானிக்கு பதிலாக பணத்தை ஏழைகளுக்கு தானதர்மம் செய்தால் அது குற்றமிழைப்பதற்கு சமமாகுமாம். 

குர்பானிக்கு பகரமாக சதகா:

குர்பானிக்கு கடமையானவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து இரத்தத்தை ஓட்டுவது அவசியமாகும். இதற்கு மாறாக குர்பானி மிருகங்களில் விலையை சதகாவாக, தானதர்மமாக ஏழைகளுக்கு கொடுத்தால் குர்பானி கடமை நிறைவேறாது. இப்படிச் செய்பவர் குற்றமிழைத்தவராக ஆகிவிடுவார்.மூலம்

"குர்பானியின் சட்டங்கள்" என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விதமாக கூறப்பட்டுள்ளது:

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும்.

மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்:

அ) ஒரு மிருகத்தின் மரணம் எப்படி முஸ்லிம்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும்? குர்-ஆன் 22:37ன்படி, இறையச்சம் தான் அல்லாஹ்வைச் சேரும் என்றால், ஒரு மிருகத்தை ஏன் கொல்லவேண்டும்?

ஆ) நற்செயல்கள் நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும் என்றுச் சொன்னால், அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், ஒரு மிருகத்தை கொலை செய்து, அதன் இரத்தத்தை பூமியில் ஓடச்செய்வது எப்படி நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும்?

இ) திர்மிதி மற்றும் இப்னு மாஜா ஹதிஸ்களின் படி, பக்ரீத் பண்டிகையன்று முஸ்லிம்கள் செய்யும் செயல்களில், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது குர்பானி ஆகுமாம். ஏன் இப்படி?

ஈ) ஒரு மிருகத்தின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவதில் அல்லாஹ்விற்கு ஏன் இவ்வளவு பிரியம்? இலட்சக்கணக்கான மிருகங்கள் பக்ரீத் அன்று பலியிடப்படுகின்றது, இரத்தம் ஆறாய் ஓடுகின்றது. இதில் என்ன அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல் வந்துவிடுகின்றது? மிருகங்களின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவதில் ஏதாவது முக்கியமான இஸ்லாமிய இறையியல் தத்துவம் அடங்கியுள்ளதா?

உ) அல்லாஹ்வை நெருங்க ஒரு ஆடு/மாடு/ஒட்டகம் பலியிடப்படவேண்டுமா? 

ஊ) ஒரு ஆட்டிற்கு நிகரான பணத்தை, ஏழைகளுக்கு தானதர்மம் செய்வதைக் காட்டிலும், அந்த ஆட்டை கொலை செய்வது தான் அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்றா? ஏன்?

அல்லாஹ் சொன்னான் ஆகையால், நாங்கள் செய்கிறோம் என்றுச்சொல்வதோ, ஆபிரகாமின் செயலை நினைவு கூறும்படி செய்கிறோம் என்றுச் சொல்வதோ மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான பதிலாக அமையாது. குர்பானியின் அருமை பெருமைகளை பார்க்கும் போது, மேற்கண்ட சாதாரண காரணம் நிச்சயமாக இருக்கமுடியாது.

2) பழுதற்ற பிராணியே குர்பானிக்கு ஏற்றது

குர்பானி கொடுக்கும் பிராணி, பழுதற்றதாக இருக்கவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். 

குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராணிகளின் தன்மைகள்

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)

நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

அல்லாஹ்வை நெருங்க ஏன் ஒரு பிராணி பலியிடப்படவேண்டும் என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அந்த பிராணி பிழையற்றதாக இருக்கவேண்டும் என்பது முஹம்மது போட்ட நிபந்தனையாகும். இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் எதுவும் பிழையற்றதாகவும், நேர்த்தியானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏன் ஒரு மிருகம் பிழையற்றதாக இருக்கவேண்டும்?  என்பது தான் கேள்வி.

நாம் இதுவரை குர்பானி பற்றி இரண்டு முக்கியமான விவரங்களை கண்டுள்ளோம். முதலாவதாக, குர்பானியைக் கொண்டு மக்கள் அல்லாஹ்வை நெருங்க முடியும், இரண்டாவதாக, அந்த குர்பானி பிராணியானது பழுதற்ற ஒன்றாக இருக்கவேண்டும். 

3) பாவநிவார பலியும், பழுதற்ற பிராணியும்

இறைவனுக்கு ஏன் நாம் மிருகங்களை பலியிடவேண்டும்? என்ற கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால், அதற்கான பதில் கிடைக்காது. ஏனென்றால், குர்-ஆனோ, ஹதீஸ்களோ இக்கேள்விக்கான பதிலை தருவதில்லை. எனவே, முந்தைய வேதமாகிய தவ்ராத்தை சிறிது ஆய்வு செய்து பார்த்தால், இதற்கான பதில் முழுவதுமாக கிடைக்கும். 

தவ்ராத்தில் லேவியராகமம் புத்தகத்தின் 4 மற்றும் 5வது அத்தியாயத்தில் எப்படி இஸ்ரவேலர்கள் பாவநிவாரண பலியை செலுத்த வேண்டுமென்று  மோசேயின் மூலமாக தேவன் கட்டளையிட்டுள்ளார். மேலும் அந்த பலியிடப்படும் பிராணி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

லேவி 4:1  பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 

லேவி 4:2  நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது. (முழு அத்தியாங்களை படித்துப் பார்க்கவும்)

மனிதன் இறைவனுக்கு எதிரான பாவம் செய்யும் போது, அவன் இறைவனோடு நெருங்கும் உரிமையை இழக்கின்றான். எனவே, அவன் மறுபடியும் இறைவனோடு நெருங்கவேண்டுமென்றால், அவனது ஸ்தானத்தில் இன்னொருவர் இரத்தம் சிந்தவேண்டும். ஆகையால், ஒரு பழுதற்ற பிராணியை தெரிவு செய்து, பலியாக கொடுக்கும் படி இறைவன் கட்டளையிட்டார். 

4) நிஜமிருக்க நிழலை பின் தொடர்வது ஏன்?

மிருகங்களின் பலியும் இரத்தமும் பாவங்களை நீக்கினால், ஏன் இயேசு மறுபடியும் குர்பானி (பலி) ஆக வேண்டும்?

மனிதன் தான் செய்யும் பாவங்களை போக்கிக்கொள்ள, பிராணிகளை பலியிடுவதை ஒரு நிழலாட்டமாக தேவன் பழைய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் நிஜத்தை நாம் இயேசுவில் காணமுடியும்.

பழைய ஏற்பாட்டில், எந்த ஒரு இடத்திலும், பிராணிகளின் பலிகளினால் பாவங்கள் முழுவதுமாக "நீக்கப்படும்" என்றுச் சொல்லப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் பாவநிவாரணம் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்ட எபிரேய பதம் "Kaphar", இதன் அர்த்தம் "மூடுவது (Covering)" என்பதாகும், "முழுவதுமாக நீக்குவது" என்று அர்த்தமாகாது [2]. இதே வார்த்தையைத் தான் நோவா ஒரு பேழையை செய்து, அதை கீலினால் பூசு (மூடு) என்று தேவன் கட்டளையிட்டதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லேவி 4:20  பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப்பாவநிவிர்த்தி (எபிரேயம்: Kaphar) செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

பல நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான பிராணிகள் யூத ஆசாரியர்களால் பலியாக்கப்பட்டு, இரத்தம் சிந்தப்பட்டது, இது நம்முடைய பாவத்தின் வீரியத்தை தெரியப்படுத்துகிறது. இந்த மிருகங்களின் இரத்தம் பாவங்களை "மூடும்" திரைபோன்று செயல்படுகின்றதே தவிர அவைகள், நம் பாவங்களை "முழுவதுமாக நீக்குவதில்லை". இதைத்தான் எபிரேயர் 10:4,10-12 வசனங்கள் தெளிவாகச் சொல்கிறது, மேலும், யார் மூலமாக பாவங்கள் உண்மையாக நீக்கப்படும் என்பதையும் சொல்கிறது. 

எபிரேயர் 10:4  அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.

10:10  இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 

10:11  அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி(periaireo) செய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். 

10:12  இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

இயேசுக் கிறிஸ்து ஒரே தரம் குர்பானியாகி(பலியாகி), எல்லோருடைய பாவங்களை நீக்கினார் என்பது தான் நிஜம், பிராணிகளின் குர்பானி வெறும் நிழல் தான்.

எபிரேய 10:11ம் வசனத்தில் "நிவர்த்தி" என்ற வார்த்தை கிரேக்க மூல மொழியில்  "Periaireo" என்று வருகிறது. இதன் அர்த்தம் "மூடுவது – Covering" என்று அல்லாமல்,  "முழுவதுவாக நீக்குவது" என்பதாக வருகிறது [3]. ஆக, பழைய ஏற்பாட்டில் பிராணிகளின் பலிகளினால் உண்டாகும் பாவநிவர்த்தி என்பது, வெறும் பாவத்தை மூடுவதாக அமைகிறது, ஆனால், இயேசுவின் மூலமாக வரும் பாவநிவர்த்தி என்பது, "பாவத்தை முழுவதுமாக நீக்குவது" ஆகும்.

முடிவுரை:

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போல, பிராணிகளின் பலிகளும் இரத்தம் சிந்துதலும், மனிதர்களின் பாவங்களை வெறும் மூடுகிறது, அவைகளை நீக்குவதில்லை. பிராணிகளின் இரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் போது, நம் பாவங்களின் விளைவை நாம் அறிந்துக்கொள்ளலாம். நாம் எவ்வளவு கீழ்தரமாக பாவங்கள் செய்து இறைவனின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறோம். இறைவன் சுயமாக நம்மை மன்னிக்க ஒரு வழியைக் கொடுத்தால் தவிர,  நாம் செய்யும் நற்செயல்கள், நம் பாவங்களை நீக்கவும், இறைவனோடு நாம் நல்லுறவு பெறவும் போதுமானதாக இல்லை. எனவே தான், இறைவன் இயேசுவாக பூமியில் வந்து, அனைவருக்காகவும் ஒரே தரம் பலியாகி, நம் சுமைகளை நீக்கி, நம்மை தம்மிடம் சேர்த்துக்கொண்டார். இதனை புரிந்துக்கொள்ளாமல், முஸ்லிம்கள் இன்னும் குர்பானி என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

அடிக்குறிப்புக்கள்:

[1] Qurbani -  https://en.wikipedia.org/wiki/Qurbani 

[2] எபிரேயம் - Kaphar

H3722

כּפר

kâphar

kaw-far'

A primitive root; to cover (specifically with bitumen); figuratively to expiate or condone, to placate or cancel: - appease, make (an) atonement, cleanse, disannul, forgive, be merciful, pacify, pardon, to pitch, purge (away), put off, (make) reconcile (-liation).

[3] கிரேக்கம் - Periaireo

G4014

περιαιρέω

periaireō

per-ee-ahee-reh'-o

From G4012 and G138 (including its alternate); to remove all around, that is, unveil, cast off (anchor); figuratively to expiate: - take away (up).


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/bakrid/2016_bakrid_7.html