(தூங்குபவர்களை எழுப்பமுடியும், ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது என்றுச் சொல்வார்கள். தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்கள் மேல் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினால் அவர்களும் எழுவார்கள். ஆனால், முஸ்லிம் அறிஞர்களில் இன்னொரு வகை மக்களும் இருக்கிறார்கள், இவர்கள் தங்களை அறிவாளிகளாக கருதிக்கொண்டு, தூக்க மாத்திரைகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு, உண்மையாகவே மயக்கிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பிஜே அவர்கள். இப்போது இவரை எழுப்புவது எப்படி? இவரை எழுப்பும் (தெளிவிக்கும்) விதம் பற்றி தமிழ் கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இக்கட்டுரையில் இப்படிப்பட்டவர்களை எப்படி எழுப்புவது என்பதை விளக்கியுள்ளேன்.)
முன்னுரை:
பிஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில், வசனம் 18:9க்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் (விளக்க எண் 271). கிறிஸ்தவத்தை குறைகூறவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, இவர் அல்லாஹ்வின் வார்த்தையை குத்தி கொதறி நாசமாக்கியுள்ளார். குர்-ஆனின் 18வது அத்தியாயத்தில் வரும் குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எப்படி இவர் சவக்கடல் சுருள்களோடு ஒப்பிட்டு பேசி மிகப்பெரிய தவறை செய்துள்ளார் என்பதை மட்டும் சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.
குர்-ஆனின் 18வது அத்தியாயத்தின் 9வது வசனம் பற்றி பிஜே அவர்கள் எழுதிய விளக்கத்தின் முதல் பகுதியை இங்கு படிப்போம், அடுத்தடுத்த தொடர்களில் மீதமுள்ள விளக்கத்துக்கு பதிலைக் காண்போம்.
271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்
இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு" என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன ஏடு? என்பது பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்'' என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
(அந்த வீடியோ பதிவுகள் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முகவரி www.onlinepj.com/-/
குர்-ஆனின் குகைவாசிகள் எப்படி கும்ரான் குகைவாசிகளானார்கள்?
அந்தக் குகை (அல்கஹ்ஃப் – அத்தியாயம் 18):
அது ஒரு கட்டுக்கதை, அது ஒரு புராணக்கதை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய ஒரு கட்டுக்கதையை உண்மை சரித்திர நிகழ்ச்சியென குர்-ஆன் பதிவு செய்து, ஒரு பெரிய சரித்திர பிழையை செய்துள்ளது. இந்த அத்தியாயத்திற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்பதை பிஜே அவர்கள் தம் குர்-ஆன் தமிழாக்கத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
இந்த அத்தியாயத்தின் 9வது வசனம் முதல் 26 வரை கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர்.
பிஜே அவர்களின் அறிவீனமான விளக்கத்தை (271) புரிந்துக்கொள்வதற்கு அவரின் மேற்கண்ட பெயர் விளக்கம் நமக்கு உதவும்.
குர்-ஆனின் இந்த சரித்திர பிழை பற்றி, எழுத்தாளர் பாரா அவர்களுக்கு நான் அளித்த பதில்களில் தெளிவாக விளக்கியுள்ளேன், அவைகளை இங்கு படிக்கலாம்:
பாரா அவர்களுக்கு மறுப்புக்கள்:
கும்ரான் குகைவாசிகளும் சவக்கடல் சுருள்களும்:
1947ம் ஆண்டு சவக்கடல் இருக்கும் கும்ரான் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களை "சவக்கடல் சுருள்கள்" என்று அழைப்பார்கள். நம்முடைய அடுத்தடுத்த கட்டுரைகளில் சவக்கடல் சுருள்கள் பற்றிய மேலதிக விவரங்களைக் காண்போம்.
பிஜேயின் மதியீனம்:
ஒரு குகையில் 300 ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிய வாலிபர்கள் பற்றிய கட்டுக்கதையை எடுத்து, கும்ரான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களோடு பிஜே ஒப்பிட்டு எழுதியுள்ளார். இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஐந்து வித்தியாசங்களை மட்டும் சுருக்கமாக நாம் ஆய்வு செய்தாலே போதும், பிஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தில் வெளிப்பட்ட மதியீனம் அவரது கால்களுக்கு கீழே மிதிபட்டுவிடும்.
அட்டவணை: கும்ரான் குகைவாசிகளுக்கும் குர்-ஆனின் குகைவாசிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள்.
எண் | குர்-ஆன் குகைவாசிகள் | கும்ரான் சவக்கடல் குகைவாசிகள் |
---|---|---|
1 | இது கட்டுக்கதை | இது சரித்திரம் |
2 | இவர்கள் கி.பி. காலத்தவர்கள் | இவர்கள் கி.மு. காலத்தவர்கள் |
3 | இவர்கள் கிறிஸ்தவர்கள் | இவர்கள் யூதர்கள் |
4 | அதிகபட்சம் 7 பேர் | ஒரு ஊர் மக்கள் (200) |
5 | ஒரு ஏடு (அந்த ஏடு) | பல ஆயிர ஏடுகள் (சுருள்கள்) |
இந்த வித்தியாசங்கள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் பிஜே அவர்கள் சொந்தமாக பொய்களை அள்ளிவீசியுள்ளார். இப்போது இவ்வித்தியாசங்கள் பற்றி சில வரிகளைக் காண்போம்.
வித்தியாசம் 1: கட்டுக்கதையும் சரித்திரமும்
குர்-ஆனின் குகைவாசிகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய கட்டுக்கதையாகும் [5]. இது ஒரு சரித்திர நிகழ்ச்சியல்ல. இந்த நிகழ்ச்சிப் பற்றி குறைஷிகள் முஹம்மதுவிடம் கேட்டார்களாம், அதற்கு முஹம்மது அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்று பதில் கொடுத்தாராம். இதனால், முஹம்மதுவின் நபித்துவம் நிருபிக்கப்பட்டது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். இதையே எழுத்தாளர் பாரா அவர்களும் தம்முடைய நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் எழுதினார். இவருக்கு நான் கொடுத்த மறுப்புக்களை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கிறேன்.
300 ஆண்டுகளாக வாலிபர்களை தூங்க வைத்தவன் நான் தான் என்று அல்லாஹ் குர்-ஆனில் சொல்கின்றான், ஆனால், அந்த குகையில் எத்தனை வாலிபர்கள் தூங்கினார்கள் என்று பதில் சொல்லாமல் அல்லாஹ் விட்டுவிட்டான். இதுமட்டுமல்ல, அவ்வாலிபர்கள் பற்றி மேலதிக கேள்விகளை மக்கள் கேட்டால், அவர்களோடு விவாதம் புரியவேண்டாம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு கட்டளையும் கொடுத்தான்.
பார்க்க குர்-ஆன் 18:22
18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர், (இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் – (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளியரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
குர்-ஆனின் கட்டுக்கதைப் பற்றிய பொதுவான விவரங்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கி தெரிந்துக்கொள்ளுங்கள்: https:/
குர்-ஆனின் குகைவாசிகளின் கதை கட்டுக்கதையாகும். ஆனால், கும்ரான் குகையில் கிடைத்த சுருள்களும், அங்கு வாழ்ந்த மக்களும் உண்மை சரித்திரமாகும். யூதர்களில் சிலர் ஒரு குழுவாக அங்கு வாழ்ந்தார்கள், தாங்கள் வைத்திருந்த சுருள்களை பாதுகாத்து வைத்தார்கள்[1].
பிஜே அவர்களே, குர்-ஆனின் குகைவாசிகள் ஒரு கற்பனை கதாபாத்திரங்கள் என்பதை அறியுங்கள். இதனை மேலும் அறிய பாரா அவர்களுக்கு நான் கொடுத்த பதில்களை படித்துப் பாருங்கள்.
வித்தியாசம் 2: கி.பியும் கி.முவும்
குர்-ஆனின் குகைவாசிகள் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் உலாவிய கட்டுக்கதையாகும், ஆனால், கும்ரான் குகையில் வாழ்ந்த மக்களின் காலக்கட்டம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டுவரை ஆகும்.
குறைஷிகள் முஹம்மதுவிடம் குகைவாசி வாலிபர்கள் பற்றிய கேள்வியை கேட்பதற்கு முன்பே, இது பல வகைகளில் சொல்லப்பட்டு வந்துக்கொண்டு இருந்திருக்கின்றது. ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ணிக்கையை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இதையே குர்-ஆனும், சிலர் 3, சிலர் 5 இன்னும் சிலர் 7 வாலிபர்கள் குகையில் தூங்கினார்கள் என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறது (குர்-ஆன் 18:22)
The Seven Sleepers (Arabic: اصحاب الکھف aṣḥāb al kahf, "companions of the cave") of Ephesus are legendary people in a story of a group of youths who hide inside a cave outside the city of Ephesus around 250 AD, . . .
Another version is that Decius ordered them imprisoned in a closed cave to die there as punishment for being Christians. Having fallen asleep inside the cave, they purportedly awoke approximately 180 years later during the reign of Theodosius II, following which they were reportedly seen by the people of the now-Christian city before dying.
The earliest version of this story comes from the Syrian bishop Jacob of Sarug (c. 450–521), which is itself derived from an earlier Greek source, now lost.[1] An outline of this tale appears in Gregory of Tours (b. 538, d. 594), and in Paul the Deacon's (b. 720, d. 799) History of the Lombards. The best-known Western version of the story appears in Jacobus de Voragine's Golden Legend.
மூலம்: பார்க்க அடிக்குறிப்பு [5]
சவக்கடல் சுருள்களின் காலக்கட்டம் கி.முவில் தொடங்கி, கி.பி முதல் நூற்றாண்டுவரை செல்கிறது.
Paleographic dating
Analysis of letter forms, or palaeography, was applied to the texts of the Dead Sea Scrolls by a variety of scholars in the field. Major linguistic analysis by Cross and Avigad dates fragments from 225 BCE to 50 CE.[50] These dates were determined by examining the size, variability, and style of the text.[51] The same fragments were later analyzed using radiocarbon dating and were dated to an estimated range of 385 BCE to 82 CE with a 68% accuracy rate.[50]
மூலம்: விக்கிபீடியா – பார்க்க அடிக்குறிப்பு [1]
ஆக, குர்-ஆன் குகைவாசிகளின் கதை முஹம்மதுவின் காலக்கட்டத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பானதாகும். சவக்கடல் சுருள்களின் காலம் இயேசுவிற்கு முன்பு 200-300 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டுள்ளது.
வித்தியாசம் 3: குர்-ஆன் குகைவாசிகள் கிறிஸ்தவர்கள், கும்ரான் குகைவாசிகள் யூதர்கள்.
பிஜே தம்மை அறிவாளி என்று எண்ணிக்கொண்டு, குர்-ஆனில் "அந்த ஏடு" என்று அல்லாஹ் குறிப்பிட்டுச் சொல்வது, கும்ரானில் கண்டெடுக்கப்பட்ட சுருள் தான் என்றுச் சொல்கிறார். ஆனால், குர்-ஆனின் குகைவாசிகள் "கிறிஸ்தவ வாலிபர்கள்" ஆவார்கள் என்பதும், கும்ரானில் சவக்கடல் பகுதியில் வாழ்ந்தவர்கள் யூதர்கள் ஆவார்கள் என்பதும் இவருக்கு தெரியவில்லை.
இதில் இன்னொரு வேடிக்கையைப் பாருங்கள். குர்-ஆனில் வரும் குகைவாசிகள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள், அப்படியானால், முஹம்மதுவிற்கு முன்பு 'எந்த காலக் கட்டத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள், திரித்துவமில்லாத ஒரே இறைவன் என்ற கோட்பாட்டை நம்பினார்கள்?' என்ற கேள்வி எழுகின்றது. மேலும், எந்த காலக்கட்டத்தில், இயேசு இறைவன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று கிறிஸ்தவர்கள் நம்பினார்கள்? போன்ற சரித்திரம் சம்மந்தமான கேள்விகள் குர்-ஆனுக்கு சவால்களாக இருக்கின்றன.
இயேசுவிற்கு தெய்வீகத்தன்மை உண்டு என்று நம்பின வாலிபர்களை, அதாவது கிறிஸ்தவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் குகையில் தூங்கச்செய்து காப்பாற்றியதாக குர்-ஆன் சொல்கிறது, ஆனால், அதே குர்-ஆன் இயேசுவிற்கு தெய்வீகத்தன்மையில்லை என்றுச் சொல்கிறது, இது வேடிக்கையல்லவா?
வித்தியாசம் 4: குர்-ஆன் குகைவாசிகள் அதிகபட்சம் 7 பேர், கும்ரான் வாசிகள் அதிகபட்சம் 200 பேர்
குர்-ஆனின் கட்டுக்கதை குகைவாசிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், அதிகபட்சமாக 7 ஆகும். இதற்கு குர்-ஆனும், அதற்கு முன்பாக நிலவிய இதர புத்தகங்களும் சாட்சிகளாகும். ஆனால், கும்ரான் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 200 இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்[6]. ஒவ்வொரு ஆய்வாளரும் வெவ்வெறு எண்ணிக்கையைச் சொல்கிறார்கள், பார்க்க அடிக்குறிப்பு [6]. அடுத்தடுத்த கட்டுரையில் கும்ரான் மக்களைப் பற்றி மேலதிக விவரங்களைக் காண்போம்.
பிஜே அவர்களின் சூப்பர் மேன்கள்:
கும்ரான் குகைகளில் கிடைத்த சுருள்களின் எண்ணிக்கையை கவனித்தால், அங்கு வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 7 பேராக மட்டும் இருக்காது. தங்கள் உயிரை காத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் தப்பித்து ஓடிய இந்த வாலிபர்கள், கும்ரான் குகைகளில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து சுருள்களையும் முதுகில் சுமந்துக்கொண்டு ஓடினார்கள் அதன் பிறகு அந்த குகையில் ஒளிந்தார்கள் என்ற பொருளில் பிஜே அவர்கள் சொல்வது என்பது நகைப்பிற்குரியது, முட்டாள்தனமானது. இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. சவக்கடல் சுருள்கள் அனைத்தும் கும்ரானின் 11 குகைகளில் கிடைத்தது. பிஜே அவர்களின் விளக்கத்தை நாம் ஏற்பதாக இருந்தால், அந்த 11 குகைகளில் கிடைத்த அனைத்து சுருள்களையும், மண் ஜாடிகளையும் இந்த ஏழு வாலிபர்கள் கொண்டு வந்து பாதுகாத்து வைத்தார்கள் என்று சொல்லவேண்டும். இது சாத்தியமான ஒன்றா? உயிருக்கு பயந்து ஓடுபவர்கள் பெரிய மண் ஜாடிகளை சுமந்துக்கொண்டுப் போக அவர்கள் 'சூப்பர் மேன்'களாக இருந்தார்களா? பிஜே அவர்கள் தான் இக்கேள்விகளுக்கு பதில் தரவேண்டும்.
மேலும் சில ஆய்வாளர்களின் படி, கும்ரான் குகைகள் தங்கள் சுருள்களை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட இடமாக இருந்ததாம், அப்படியானால், அந்த சவக்கடல் சுருள்களின் சொந்தக்காரர்கள், (எஸ்ஸனெஸ் என்ற யூத பிரிவு மக்கள்) வாழ்ந்த இடம் வேறு, அவர்கள் சுருள்களை பாதுகாத்த இடம் வேறு. எனவே, இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும், ஜோஸபாஸ் என்ற சரித்திர ஆசிரியரின் படி, 3000 எஸ்ஸனெஸ் யூதர்கள் முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார்கள், இவர்களின் 5% சதவிகிதமானவர்கள், இந்த குகைகளில் வாழ்ந்திருந்தாலும், 150 பேர் என்று கணக்கு வரும் – பார்க்க அடிக்குறிப்பு [6].
இவ்வளவு விவரங்களை நான் ஏன் தருகிறேன் என்று பிஜே போன்றவர்கள் சிந்திக்கவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம்க என்ற நிலையில் பிஜே போன்ற மத அறிஞர்கள் இருப்பதினால் தான் பலர் வழிதவறிச் செல்கிறார்கள். பிஜே அவர்களே, இனி ஏதாவது எழுதும் போது, எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
வித்தியாசம் 5: குர்-ஆன் குகைவாசிகளின் ஒரு ஏடு, கும்ரான் வாசிகளின் பல ஆயிர ஏடுகள்
குர்-ஆனில் அல்லாஹ் "அந்த ஏட்டுக்குரியவர்கள்" என்று சொல்லிவிட்டானாம், எனவே, அது மூக்கியமானதாக இருக்கும் என்று பிஜே அவர்கள் ஆஹா, ஓஹோ என்று எழுதுகிறார். இவர் சொல்வதைப் பார்த்தால், கும்ரான் குகையில் இப்படி சுருள்கள் இருப்பதை இவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்து, உலகத்துக்கு சொன்னதாக எழுதுகிறார். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பதித்த இவரது வரிகளை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.
பிஜே அவர்களே, யாருடைய காதை குத்தப்பார்க்கிறீர்கள்? யாரை ஏமாற்ற இந்த முயற்சி?
கும்ரான் குகைகளில் 15000 கைப்பிரதிகள் கிடைத்ததாக நீங்களே உங்கள் விளக்கத்தின் பிற்பகுதியில் எழுதுகிறீர்கள், ஆனால், இங்கு மட்டும், "அந்த ஏடு" மிகவும் முக்கியமானது என்றுச் சொல்கிறீர்கள்.
கும்ரானின் குகைவாசிகள் அந்த 15000 ஏட்டுக்கு உரியவர்களா? அல்லது குர்-ஆன் சொல்கின்ற ஒரு ஏட்டுக்கு உரியவர்களா? உங்களால் சிறிது விளக்கமுடியுமா? ஒவ்வொரு குகையில் எத்தனை கைப்பிரதிகள் கிடைத்தன என்று அடிக்குறிப்பு [1] ல் உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் ஞானத்தை பயன்படுத்தி, அல்லாஹ் சொன்ன அந்த ஒரு ஏடு, எந்த குகையிலிருந்து கிடைத்தது என்று சொல்லமுடியுமா?
சவக்கடல் சுருள் பற்றி இன்னும் பல விவரங்களை அடுத்த கட்டுரையில் விவரிக்க விரும்புகிறேன். இதோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
முடிவுரை:
இந்த கட்டுரையில், பிஜே அவர்கள் தம்முடைய 271ம் விளக்கத்தில் எழுதியவைகளுக்கு மேலோட்டமாக பதில் அளித்துள்ளேன். அதாவது, பிஜே அவர்களின் அடிப்படையே சரியில்லை, அவரின் ஒப்பிடுதலே தவறாக உள்ளது என்பதை விளக்கினேன். குர்-ஆனின் 18வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட ஒரு கட்டுக்கதையை, கும்ரானில் கிடைத்த சவக்கடல் சுருள்களோடு ஒப்பிட்டு அவர் எழுதியது, அவரின் மிகப்பெரிய மதியீனத்தை வெளிக்காட்டக்கூடியதாக இருக்கிறது. இதனை வாசகர்கள் புரிந்துக்கொள்வதற்காக, மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஐந்து வித்தியாசங்களை மட்டுமே சுருக்கமாக எழுதினேன்.
அவரது விளக்கத்தில் கிறிஸ்தவம் மீதும், பவுலடியார் மீதும் அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை அடுத்தடுத்த கட்டுரையில் கொடுக்கவுள்ளேன்.
மயங்கியிருக்கும் பிஜே போன்றவர்களை எழுப்புவது எப்படி?
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் உண்டு.
தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டு மயக்கத்தில் இருப்பவர்களை எப்படி எழுப்புவது? இது மிகவும் சுலபம். மயக்கம் தெளிய உதவிபுரியும் பெரிய ஊசியை போடவேண்டிய இடத்தில் போட்டால் மயக்கம் தானாக தெளியும். அப்படியும் அவர்கள் எழவில்லையென்றால், அருவை சிகிச்சை செய்து, இரண்டு கிட்னியை எடுத்து காகத்துக்கு போட்டுவிட்டால் போதும், இனி அவர்களால் எந்த பிரச்சனையும் வராது. ஆகையால், இஸ்லாமிய தமிழ் அறிஞர்களே, சிறிது ஆய்வு செய்து எழுதவும்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் கிறிஸ்தவர்களில் அனேகர் எழும்பி, முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டாக்கிக்கொண்டிருக்கும் விதத்தை பார்த்தால், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக கர்த்தரை அதிகமாக மகிமைப்படுத்துகிறேன்.
மயக்கத்தை தெளிவிக்கும் ஊசிகள் அடுத்த கட்டுரையிலும் போடப்படும்...
அடிக்குறிப்புக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக