ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 31 அக்டோபர், 2016

சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை


முந்தைய கட்டுரைகள்: 

1) சவக்கடல் சுருள்கள் அறிமுகம்

2) சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

சவக்கடல் சுருள்களின் கண்டுபிடிப்பு ஒரு பெரிய நீண்ட பயணம். முதல் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சுருள்களுக்கும், பதினோறாம் குகையில் கிடைத்த சுருள்களுக்கும் இடையே 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. 1947ம் ஆண்டு முதல் 1967வரை நடந்த நாடகம் என்ன? இதில் பங்கு பெற்ற நடிகர்கள் யார் என்பதை சுருக்கமாகக் காண்போம். 

பிப்ரவரி 1947

முஹம்மத் இத்திப் ஹஸ்ஸன் என்பவர், மற்ற இரண்டு மேய்ப்பர்களோடுச் சேர்ந்து, சவக்கடல் பகுதியில் முதலாவது குகையிலிருந்த சுருள்களை கண்டுபிடித்தார்.

மார்ச் 1947

முதல் குகையிலிருந்து எடுத்த சுருள்களை யாருக்கு விற்கலாம் என்று அந்த மேய்ப்பர்கள் வியாபாரிகளை தேடிக்கொண்டு இருந்தார்கள்.

ஏப்ரல் 1947

கலீல் இஷ்கந்தர் என்கின்ற "கண்டோ" என்பவர் மூன்று சுருள்களை வாங்கிக்கொண்டார். அந்த மூன்று சுருள்களின் பெயர்களாவன: 1QIsaiaha; 1QpHab; and 1QS-the Community Rule

(சுருள்களை பெயரிடும் விதம்: '1Qisaiaha' என்ற சுருளின் பெயரில்  '1Q' என்றால் 'முதலாவது குகை' என்று அர்த்தம். 'Q' என்ற எழுத்துக்கு முன்பாக குகையின் எண் கொடுக்கப்படும். '1Q' என்றால் முதலாவது குகை, '2Q' என்றால் இரண்டாவது குகை  என்று அர்த்தமாகும். இதே போல பதினோறு குகைகளுக்கும் (1Q - 11Q) பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக '1Qisaiaha' என்ற சுருளின் பெயரில், 'isaiaha' என்பது முதலாவது கிடைத்த 'ஏசாயா - A' புத்தகம் (isaiah - a) என்று அர்த்தம்.  அப்படியானால், ஏசாயாவின் புத்தகம் இன்னொரு பிரதி கிடைத்தால் அதற்கு  'isaiahb'  (ஏசாயா- B) என்று பெயரிடுவார்கள். இதே குகையில் இரண்டாவது பிரதியும் கிடைத்தது, அதற்கு 1Qisaiahb என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த ஏசாயா பிரதியையும் மேய்ப்பர்கள் விற்றுவிட்டார்கள். அடுத்த தொடரில் ஒவ்வொரு குகையில் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன என்பதை காண்போம்.)

மே/ஜூன் 1947

அந்த மேய்ப்பர்கள் 'ஃபீதி ஸலாஹி' என்பவருக்கு இதர மூன்று சுருள்களை (1QIsaiahb; 1QM-the War Scroll; and 1Q35) விற்றார்கள். கவனிக்கவும்: ஏசாயா – B (1QIsaiahb) என்ற இன்னொரு பிரதியும் முதல் குகையில் கிடைத்தது.

ஜூலை 5, 1947

கண்டோ என்பவர் தான் வாங்கியிருந்த மூன்று சுருள்களை, 'அதனாஸியஸ் யேஸு சாமுவேல் (Syrian Orthodox Metropolitan Athanasius Yeshue Samuel)' என்பவருக்கு விற்றார். 

நவம்பர் 23, 1947

மிஸ்டர் X  என்பவர் (பெயர் தெரியவில்லை), எலியேசர் லிபா சுகெனிக் என்பவரை தொடர்பு கொண்டு, சுருள்களை முதலாவது பார்வையிட்டார். (https://en.wikipedia.org/wiki/Eleazar_Sukenik - எலியேசர் லிபா சுகெனிக்)

நவம்பர் 27, 1947

சுகெனிக் 'Old City' என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில், மிஸ்டர் எக்ஸ் என்பவரை சந்தித்தார்.

நவம்பர் 29, 1947

சுகெனிக் மற்றும் மிஸ்டர் எக்ஸ் இருவரும் சேர்ந்து ஸலாஹி என்பவரை சந்திக்க பெத்லஹேமுக்கு பேருந்து பயணம் மேற்கொண்டனர். ஸலாஹியிடமிருந்த சுருள்களை வாங்குவதற்கான அனைத்து ஆயத்தங்களை சுகெனிக் செய்தார். ஐக்கிய நாட்டு சபை, இந்த நாளில் தான் பாலஸ்தீனாவை பிரித்து, இஸ்ரேல் நாட்டை உருவாக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

பிப்ரவரி 1948

மர் சாமுவேல் என்பவரின் உதவியாளர் 'ரெவரெண்ட் பூட்ரோஸ் ஸவ்மி' American School of Oriental Research ஸ்தாபனத்தை தொடர்பு கொண்டு சுருள்களைப் பற்றி கூறினார். அந்த ஸ்தாபனத்தின் தலைவராக இருந்த ஜான் சி டிரெவர் என்பவர், அந்த சுருள்களை அமெரிக்காவிற்கு கொண்டுவரும்படி அழைப்பு விடுத்தார்.

மார்ச் 15, 1948

டிரெவர் தன்னிடம் வந்த சுருள்களை புகைப்படம் எடுத்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிஞராக  இருந்த வில்லியம் எஃப் ஆல்பிரைட் என்வருக்கு ஒரு பிரதியை அனுப்பினார். ஆல்பிரைட் ஆய்வு செய்து, அச்சுருள்களின் காலம் கி.மு. 100 என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

மார்ச் 25, 1948

ஸவ்மி அச்சுருள்களை லெபனானின் பீருட் நகருக்கு கொண்டுச் சென்று பாதுகாத்தார்.

ஜனவரி 29, 1949

மர் சாமுவேல் சுருள்களோடு அமெரிக்கா வந்து டிரெவரை சந்தித்தார்.

பிப்ரவரி 15 - மார்ச் 1949 

'பெரி ரோலண்ட் டி வக்ஸ்' மற்றும் 'ஜி. லான்கெஸ்டர் ஹார்டிங்' என்பவர்கள், முதலாம் கும்ரான் குகைக்குச் சென்று மேலும் அதிகமாக ஆய்வு செய்து, இன்னும் பல சுருள்களை கண்டுபிடித்தார்கள்.

நவம்பர் 24 – டிசம்பர் 12, 1951

'டி வக்ஸ்' மற்றும் 'ஹார்டிங்' முதலாம் குகைக்கு அருகில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த குடியிருப்பான கும்ரான் பகுதியை ஆய்வு செய்ய தொடங்கினார்கள்.

பிப்ரவரி 1952

கும்ரானின் இரண்டாம் குகை கண்டுபிடிக்கப்பட்டது.

மார்ச் 10-20, 1952

கும்ரானின் மூன்றாம் குகை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1952

அங்கிருந்த மேய்ப்பர்களால் நான்காவது குகை கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குகையில் இருந்த 80% சுருள்களை அவர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். பாலஸ்தீன தொல்பொருள் அருங்காட்சியகம் (Palestine Archaeological Museum), அந்த சுருள்களை 'கண்டோ'விடமிருந்து வாங்குவதற்கு ஆரம்பித்தது.

செப்டம்பர் 22-29, 1952

'டி வக்ஸ்' மற்றும் அவரது குழு நான்காவது குகையில் தங்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள்.

செப்டர்ம்பர் 1952

'ஜோசெஃப் டி' ஐந்தாவது குகையை கண்டுபிடித்தார், அதன் பக்கத்திலேயே ஆறாவது குகையும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 1954

மர் சாமுவேல் 'த வால் ஸ்டிரீட் ஜர்னல்' என்ற செய்தித்தாளில், 'நான்கு சவக்கடல் சுருள்கள் விற்பனைக்கு' என்ற விளம்பரத்தைக் கொடுத்தார்.

ஜூன் 11, 1954

சுகெனின் மகன் 'யுகேல் யதின்' என்பவர், அந்த நான்கு சுருள்களை இரகசியமாக வாங்க முயன்றார்.

பிப்ரவரி 13, 1955

யுகேல் யதின் 'சுருள்கள் மறுபடியும் இஸ்ரேலுக்கு திரும்புகிறது' என்று அறிக்கையிட்டார்.

பிப்ரவரி – ஏப்ரல் 1955

புதிய சவக்கடல் குகைகள் 7, 8, 9 மற்றும் 10 கண்டுபிடிக்கப்பட்டது.

பிப்ரவரி 1956

கும்ரான் பகுதியில் இருந்த மேய்ப்பர்கள் பதினோறாவது குகையை கண்டுபிடித்தார்கள்.

ஜூன் 1967

யுகேல் யதின் 'கண்டோ' என்பவரிடமிருந்து 'ஆலய சுருளை – Temple Scroll' வாங்கினார்.

இக்கட்டுரைக்கு உதவிய தொடுப்புக்கள்:

சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


சவக்கடல் சுருள்கள் அறிமுகத்தை படிக்க இங்கு சொடுக்கவும்

முதலாவதாக, கடந்த காலத்தில் கிடைத்த கையெழுத்து பிரதிகளில், தொல்லியல் கண்டுபிடிப்புகளில், இந்த சவக்கடல் கண்டுப்பிடிப்பு தான் மிகவும் பெரியது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், ஒரே இடத்தில் 900க்கும் அதிகமான சுருள்கள் கிடைத்திருப்பதினால் இந்த முக்கியத்துவம்.

இரண்டாவதாக,  இச்சுருள்கள் கி.மு. 250க்கும் - கி.பி 68க்கும் இடைப்பட்ட காலத்துக்குட்பட்டதென்பதால், இதைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ள அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். கிறிஸ்துவிற்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுருள்களும் இங்கு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்றாவதாக, இச்சுருள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. 1947ம் ஆண்டில்  முதலாவது ஒரு குகையில் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் பிறகு தொடர்ச்சியாக 1956வரை பதினோறு குகைகளில் பல ஆயிர கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

நான்காவதாக, 1956 வரை கண்டுபிடிக்கப்பட்ட பிரதிகள் அனைத்தையும் மக்கள் பார்வைக்காக, அறிஞர்களின் ஆய்விற்காக உடனே வெளியிடப்படவில்லை. ஆய்வுகள் இன்னும் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு காலம் கடத்தினார்கள், இதனால் சவக்கடல் சுருள்களின் ஆய்வில் ஈடுபடாத அறிஞர்களின் ஆர்வம் அதிகரித்துவிட்டது. இதைப் பற்றி விவரமாக இன்னொரு தொடரில் காண்போம். 

ஐந்தாவதாக, அனைத்து சுருள்களும் வெளியிட தாமதமானபடியினால், பல அறிஞர்கள் பல வகையாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவ உலகம் சவக்கடல் சுருள்களின் உண்மைகளை மறைக்க முயலுகின்றது என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணத்திற்கு, பேராசிரியர் ராபர்ட் ஹெச் ஐஸன்மேன் போன்றவர்கள் புதிய கருத்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சவக்கடல் சுருள்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆறாவதாக, கிறிஸ்தவ அறிஞர்களின் மத்தியிலும் சுவக்கடல் சுருள்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. இயேசுக் கிறிஸ்து பற்றி ஏதாவது விவரங்கள் இச்சுருள்களில் கிடைக்குமா? என்ற ஆர்வத்தில் கிறிஸ்தவ அறிஞர் உலகம் காத்துக்கொண்டு இருந்தது. 

கடைசியாக, இஸ்லாமிய அறிஞர்களின் உலகம் பற்றி சொல்லியாக வேண்டும். கிறிஸ்தவத்திற்கு எதிராக புதிய கருத்துக்களைச் சொல்லும் ஐஸன்மேன்  போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு சக்கரைக்கட்டியாக இனித்தது. சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை மெய்ப்படுத்துகிறது என்று முஸ்லிம்கள் அறியாமையில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், அதை இன்றுவரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதைப் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் விவரமாக காண்போம்.

மேற்கண்ட காரணங்களுக்காக, சவக்கடல் சுருள்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பும், எதிர்ப்பும் அதிகமாகிகொண்டே இருந்தது என்றுச் சொல்லலாம். 

தேதி: 31st Oct 2016


'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/why_dss.html


சவக்கடல் சுருள்கள் அறிமுகம்


Dead Sea Scrolls

சவக்கடலின் மேற்கு திசையில், எரிகோவிற்கு 8 மைல் தூரத்தில் ஒரு பாழடைந்த இடம் உள்ளது. அது கடல் மட்டத்திலிருந்து 1300 அடிகள் தாழ்வாக உள்ள இடம். இந்த இடத்திற்கு 'கும்ரான்' என்று பெயர். இங்கு யூதமதத்தை பின்பற்றும் ஒரு குழுவினர், இதர யூதர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்துவந்தார்கள். திடீரென்று ஒரு நாள் இவர்களில் சிலர் இரகசியமாக பக்கத்தில் இருக்கும் குகைகளின் உச்சிக்கு ஏறினார்கள். தாங்கள் உயிரினும் மேலாக கருதும் சுருள்களை பல ஜாடிகளில் அடைத்து குகைகளுக்குள் பதுக்கி வைத்தார்கள்.  அச்சுருள்கள் அங்கு இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கைக்கு இவ்வளவு வலிமையிருக்கும் என்று யாரும் அப்போது எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நாள் தங்களுக்கு நல்ல‌ காலம் வரும், அப்போது வந்து இவைகளை எடுத்துச்செல்லலாம் என்று எண்ணி அவைகளை விட்டுச் சென்றார்கள்.  அவர்களின் துரதிஷ்டமோ அல்லது நம்முடைய அதிர்ஷ்டமோ,  அதன் பிறகு, அச்சுருள்களை எடுத்துச் செல்ல மறுபடியும் யாருமே வரவில்லை. அச்சுருள்கள் எந்த ஒரு மனிதனின் கண்களுக்கு தென்படாமல், 2000 ஆண்டுகள் அமைதியாக அக்குகைகளிலேயே தூங்கிக்கொண்டு இருந்தது.

கி.பி. 70களில் ரோமர்களுக்கு எதிரான யூத கிளர்ச்சிக்கு பிறகு யூதர்கள் சிதரடிக்கப்பட்டார்கள். ஒரு ஊரை விட்டு அடுத்த ஊருக்கு, ஒரு நாட்டை விட்டு அடுத்த நாட்டுக்கு, ஒரு கண்டத்தை விட்டு அடுத்த கண்டத்துக்கு அவர்கள் துரத்தப்பட்டார்கள்.  ஒரு வேளை, அக்காலத்தில் ராக்கெட் வசதி இருந்திருந்தால், பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு அவர்களை துரத்தியிருப்பார்கள். எருசலேமுக்கு வெளியே  அச்சுருள்கள் குகைகளில் தூங்கிக்கொண்டு இருக்கும் காலமும், யூதர்கள் இஸ்ரேலுக்கு வெளியே வாழ்ந்த காலமும் ஒன்றாகவே இருந்தது. நூறு, இருநூறு அல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து நல்ல காலம் பிறந்தது.  1947ம் ஆண்டு, கும்ரான் குகைகளுக்குள் இருக்கும் சுருள்கள் இடையர்களின் கண்களில் பட்டுவிட்டன. இஸ்ரேல் என்ற தனி நாடு உயிர்த்தெழுவதற்கு முன்பாக அவர்களின் மூதாதையர்கள்  பாதுகாத்து வைத்திருந்த சுருள்களுக்கு உயிர் வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ரோமர்களின் கைகளிலிருந்து அழிக்கப்படாமல் காக்கப்படவேண்டும் என்று பாதுகாக்கப்பட்ட சுருள்கள் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த கும்ரான் குகைகளில் 1947 லிருந்து 1956 வரை கண்டெடுக்கப்பட்ட சுருள்களைத் தான் 'சவக்கடல் அல்லது கும்ரான் சுருள்கள்' என்று கூறுகிறோம்.

இச்சுருள்கள் 900க்கும் அதிகமான எண்ணிக்கையுடையவை, ஆனால், பல ஆயிர துண்டு பிரதிகளாகவும், முழு புத்தகங்களாகவும் கிடைத்துள்ளன. இவைகள் எபிரேயம், அராமிக் மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. 

சவக்கடல் சுருள்களை இரண்டு வகையான  பிரிக்கலாம்:

  1. பைபிள் சம்மந்தப்பட்ட சுருள்கள் - பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் புத்தகங்கள் (Biblical scrolls).
  2. பைபிளுக்கு சம்மந்தமில்லாத இதர வகையைச் சேர்ந்த சுருள்கள் (Non-Biblical scrolls) - தள்ளுபடி ஆகமங்கள், ஜெபங்கள், சட்டம் மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட சுருள்கள் போன்றவை. 

இக்கட்டுரைகளின் நோக்கம்:

சவக்கடல் சுருள்கள் என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதப்படுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்களுண்டு. முதலாவதாக, தமிழ் முஸ்லிம்கள் 'சவக்கடல் சுருள்களை' அடிப்படையாக வைத்துக்கொண்டு தவறாக கிறிஸ்தவத்தை விமர்சித்திருக்கிறார்கள், இவர்களுக்கு பதில் கொடுக்கவேண்டும். அதாவது பி ஜைனுல் ஆபிதீன் என்ற முஸ்லிம் அறிஞர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில், விளக்கக்குறிப்பு 271ல் சவக்கடல் சுருள்கள் பற்றி எழுதி, கிறிஸ்தவத்தை விமர்சித்துள்ளார். இவர் அறியாமையில் இதனைச் செய்துள்ளார், இவருக்கு பதில் கொடுப்பது தான் முதல் நோக்கம். இரண்டாவதாக, சவக்கடல் சுருள்களின் அருமை பெருமைகளை தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டலாம் என்பதாகும்.

இந்த தொடர் கட்டுரைகளை கோர்வையாக படிப்பவர், கீழ்கண்டவைகளை புரிந்துக்கொள்வார்.

1) சவக்கடல் சுருள்கள் என்றால் என்ன? இவைகளின் முக்கியத்துவம் என்ன? 

2) ஒவ்வொரு கும்ரான் குகையிலும் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் என்னென்ன? 

3) கிறிஸ்தவ சபை சவக்கடல் சுருள்களை வெளியுலகிற்கு காட்டாமல் மறைத்தது உண்மையா? 

4) இச்சுருள்களுக்கும், இஸ்லாமுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?

5) சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை மெய்ப்படுத்துகின்றதா? 

6) சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்தை ஆதரிக்கின்றதா? அல்லது எதிர்க்கின்றதா?

7) பேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் என்பவரின் கோட்பாடு என்ன? 

8) இஸ்லாமை இச்சுருள்கள் உறுதிப்படுத்துகிறது என்று ஐஸன்மேன் கூறியது எதனால்?

9) ஐஸன்மேனின் கைகளைக் கொண்டு, இஸ்லாமை இடித்துப்போட முயற்சி எடுக்கும் பிஜே அவர்கள் (பிஜே அவர்களின் 271வது குறிப்பிற்கு மறுப்பு)

10) பேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கைக்கு மறுப்பு

தமிழ் முஸ்லிம் அறிஞர் பிஜே அவர்களின் விளக்கம் 271க்கு கொடுத்த அறிமுக மறுப்புக் கட்டுரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அஸ்ஸாமு அலைக்கும் - உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் (Death Be Upon You)


எனக்கு இஸ்லாமில் அதிக ஆர்வம் இருப்பதினால், நான்  பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் பல முஸ்லிம்களோடு உரையாடுவதற்கு அதிக நேரத்தை செலவிடுகிறேன். சில நேரங்களில் என் கட்டுரைகளுக்கான தலைப்பு அப்படிப்பட்ட உரையாடல்களின் மூலம் கிடைக்கிறது. தற்போதைய கட்டுரைக் கூட இப்படிப்பட்ட ஒரு உரையாடலின் போது உதித்தது தான். அதாவது முஹம்மது எப்படி மற்றவர்களுக்கு கடினமான பதில்களைக் கொடுத்தார் என்ற விவரத்தைப் பற்றி உரையாடிக்கொண்டு இருக்கும் போது உதித்தது தான். இயேசு மற்றும் புதிய ஏற்பாட்டின் படி கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எப்படி பதில் தரவேண்டும்? அதே போல, முஹம்மது மற்றும் இஸ்லாமின் படி முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களுக்கு பதில் தரவேண்டும்? என்ற விவரத்தை சுருக்கமாக ஒப்பிட்டுப்பார்ப்போம். 

இஸ்லாமிய சமுதாயத்தில் பல முஸ்லிம் அறிஞர்கள்,  'முஹம்மதுவின் நற்செய்லகள்' பற்றி பலவாறு புகழ்ந்துப் பேசுவார்கள், பல புத்தகங்களை எழுதுவார்கள். இவைகளில் ஒரு செயல் முக்கியமான இடம் பிடிக்கும், அது என்னவென்றால், 'தம்மை துன்புறுத்துபவர்களிடம் கூட முஹம்மது மிகவும் அன்பாக நடந்துக்கொண்டார்' என்பதாகும். இதற்காக முஸ்லிம் அறிஞர்கள் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களையும் ஆதாரமாகச் சொல்வார்கள்.  இவ்வசனங்களில் முஸ்லிம்கள் முக்கியமாக முஹம்மது கூட, 'தம்மை அவதூறு செய்யும் நபர்களின் வார்த்தைகளை புறக்கணித்துவிட்டு, பொறுமையாக இருக்கவேண்டும்' என்று குர்-ஆன் கட்டளையிடுகிறது.

குர்-ஆன் 33:48. அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக;அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.

குர்-ஆன் 50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.  (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஸ்லிம்கள் அவதூறுச் சொற்களை புறக்கணித்துவிட்டு, பொறுமையோடு இருக்கவேண்டும் என்று குர்-ஆன் போதிக்கிறது. ஆனால், தற்போது நாம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும் போது, இஸ்லாமையும், முஹம்மதுவையும் விமர்சிப்பவர்களிடம் முஸ்லிம்கள் குர்-ஆன் சொல்வது போல நடந்துக்கொள்வதில்லை என்பதை காணமுடியும். ஏன் முஸ்லிம்கள் குர்-ஆனுக்கு எதிராக இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்று கவனிக்கும் போது, இன்னொரு உண்மை பளிச்சென்று தெரியும். அது என்னவென்றால், முஸ்லிம்கள் தங்கள் அனுதின வாழ்வின் சிறந்த வழிகாட்டியாக, அழகிய முன்மாதிரியாக 'முஹம்மதுவையே நோக்கிப் பார்க்கிறார்கள்' என்பதாகும் (பார்க்க குர்-ஆன் 33:21).

33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்). 

அவதூறு வார்த்தைகளுக்கு முஸ்லிம்கள் எப்படி பதில் கொடுப்பார்கள் என்பதை அறியவேண்டுமென்றால், முஹம்மது அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை பார்க்கவேண்டும். 

முஹம்மதுவிற்கு வன்மையான எதிர்ப்பு கிளம்பியபோது, பல நேரங்களில் அவர் அமைதியாகவும், அன்பாகவும் பதில் அளித்துள்ளார். ஆனால், அதே முஹம்மது இதர நேரங்களில் மிகவும் வன்மையாக பதில் அளித்தார், சில நேரங்களில் கொடுமையாகவும் நடந்துக்கொண்டுள்ளார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய முந்தைய கட்டுரையில் நான் விளக்கியபடி, அபூ லஹப் என்பவருக்கு முஹம்மது அளித்த பதிலைச் சொல்லலாம். அதாவது அபூ லஹப் முஹம்மதுவை கடுமையாக விமர்சித்தார், பல தொல்லைகளைக் கொடுத்தார். இதற்கு முஹம்மதுவின் மூலமாக அல்லாஹ் கொடுத்த பதில் என்ன தெரியுமா? குர்-ஆனில் ஒரு முழு அத்தியாயத்தை (குர்-ஆன் அத்தியாயம் 111) இந்த அபூ லஹப்பையும், அவரது மனைவியையும் சபிப்பதற்காகவே இறக்கியது தான். 

இன்னொரு உதாரணத்தை இப்போது காண்போம். முஹம்மதுவிற்கு மிகவும் பிரியமான மனைவியாகிய ஆயிஷா அவர்கள் இந்த நிகழ்ச்சியை விவரித்துள்ளார்கள், அதனை இங்கு படிப்போம். 

ஸஹீஹ் முஸ்லிம் எண் 4373

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு "அஸ்ஸாமு அலைக்கும்" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் "அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா" (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள்.

நான் "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிலிருந்து அறிவது என்னவென்றால், ஒருவர் முஹம்மதுவிற்கு சாபத்தை வாழ்த்தாக கூறினால், உடனே முஹம்மதுவும் சாபத்தை பதிலாக தருகிறார் என்பதாகும். உலக பிரகாரமாக பார்த்தால், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தண்டனைகளை கவனிக்கும் போது, தற்காலிகமாக இவைகள் நமக்கு திருப்தியை கொடுப்பதாக இருந்தாலும், எதிர்ப்புகளை வேறுவகையாக சந்திக்கும்படி தேவன் நமக்கு பைபிளில் கற்றுக்கொடுத்துள்ளார். 

1 தெசலோனிக்கேயர் 5:15ம் வசனத்தில், ஒருவருக்கும் தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.  இதே போதனையை ரோமர் 12:17லும் காணமுடியும். மேலும், தேவனின் போதனை இதோடு நின்றுவிடாமல், இன்னொரு அடி மேலே செல்கிறது.  அதாவது 'ஒருவர் நமக்குச் செய்த தீமைக்கு பதிலாக தீமை செய்யாமல் இருப்பது' முதல் நிலையென்றால், 'அந்த தீமைக்கு ஆசீர்வாதத்தை பதிலாக திருப்பிக் கொடுப்பதுதான் அடுத்த நிலை' என்று பைபிள் போதிக்கிறது. இந்த வசனத்தைப் பாருங்கள்.

1 பேதுரு 3:9  தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து,ஆசீர்வதியுங்கள்.

1 Peter 3:9 not returning evil for evil or insult for insult, but giving a blessing instead; for you were called for the very purpose that you might inherit a blessing.

இப்படிப்பட்ட போதனையை முதலாவது இயேசுவே செய்துக்காட்டினார், பார்க்க 1 பேதுரு 2:23. இதே போதனைத் தான் கிறிஸ்தவர்களின் வழிகாட்டியாகவும் இருக்கிறது, பார்க்க எபிரேயர் 12:3. 

இவைகள் அனைத்தையும் இரத்தினச் சுருக்கமாக, ரோமர் 12:21 நமக்கு சுட்டிக்காட்டுகிறது:

ரோமர் 12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

Romans 12:21 Do not be overcome by evil, but overcome evil with good.

இஸ்லாமின் போதனையும், கிறிஸ்தவ போதனையும் நமக்கு இப்போது தெளிவாக புரிந்திருக்கும். முஸ்லிம்கள் பின்பற்றும் போதனை 'சாபத்திற்கு சாபத்தை பதிலாக கொடு' என்பதாகும்.  ஆனால், கிறிஸ்தவர்களுக்கு கிடைத்துள்ள போதனை என்னவென்றால், 'ஒருவர் உன்னை சபித்தால், அவமானப்படுத்தினால், அவரை ஆசீர்வதியுங்கள், சபிக்காதிருங்கள்' என்பதாகும். 

முஸ்லிம்களோடு நான் உரையாடும் போது 'இக்கட்டுரையின் கருப்பொருள்' உருவாகியது என்பதை துவக்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அந்த ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சகோதரரிடம், 'சாபத்தை திருப்பிக் கொடுக்கும் முஹம்மதுவின்  இந்த குணம், எப்படி அவரை அன்புள்ளவராகவும், நற்குணமுள்ளவராகவும் வெளிப்படுத்தும்?' என்று கேட்டேன்.  பல நிமிடங்கள் சிந்தித்துவிட்டு, அந்த சகோதரர் கொடுத்த பதில் 'எனக்குத் தெரியாது' என்பதாகும். ஏனென்றால், இந்த செயலைச் செய்தவர் முஹம்மது என்பதால், முஸ்லிம்கள் 'எங்களுக்கு தெரியாது' என்ற பதிலைத் தவிர வேறு என்ன பதிலை அவர்களால் சொல்லமுடியும்?

இயேசு செய்த செயல்கள் ஒருமுறை கூட என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால், ஒருவேளை நான் முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது செய்த இப்படிப்பட்ட செயல்கள் என்னை பல முறை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருந்திருக்கும். இயேசு மற்றும் முஹம்மது, இவ்விருவருக்கு இடையே இருக்கும் இப்படிப்பட்ட வித்தியாசங்கள், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களை சுட்டிக்காட்ட போதுமானதாகும்.