நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுந்த முந்தைய பதிலை படிக்க இங்கு சொடுக்கவும்.
முன்னுரை:
முந்தைய கட்டுரையில், துல்கர்னைன் என்பவர் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? முஸ்லிம் அறிஞர்கள் அவரை யார் என்று அடையாளம் காணுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினேன். குர்-ஆன் சொல்லும் விவரங்களுக்கு பொருந்துகின்ற வகையில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், அலேக்சாண்டர் தான் சரித்திரத்தில் காணப்படுகிறார். இந்த கட்டுரையில், "அலேக்சாண்டர் தான் துல்கர்னைன்" என்று பல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி குர்-ஆனுக்கு பிரச்சனையாக மாறுகிறது என்பதை காண்போம்.
பாரா அவர்களே, முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்க அந்த மூன்று கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்கள் பயன்பட்டது என்று இஸ்லாம் சொல்லும் போது, அவைகளை ஆய்வு செய்யாமல் கண்மூடித்தனமாக உங்கள் புத்தகத்தில் நீங்களும் பதித்தபடியினால், இந்த கட்டுரையில் உங்களையும் குறிப்பிடவேண்டியுள்ளது.
கழுவுற மீனில் நழுவுற மீன் பீஜே: துல்கர்னைன் ஒரு நபி ஆவார்
பி. ஜைனுல் ஆபீதின் அவர்கள் தம்முடைய குர்ஆன் தமிழாக்கத்தின் விளக்கக்குறிப்பு 374ல், அந்த துல்கர்னைன் என்பவர் ஒரு நபியாகத் தான் இருக்கமுடியும் என்றுச் சொல்கிறார்.
374. துல்கர்னைன் நபியா?
இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன், இத்தடுப்பு யுகமுடிவு நாள் வரை நிலைத்திருக்கும் எனவும், யுகமுடிவு நாள் ஏற்படும்போது தடுப்பு தூள்தூளாக்கப்பட்டு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியே வருவார்கள் என்றும் கூறியதாக இவ்வசனம் கூறுகிறது.
இவ்வாறு இறைத்தூதரால் தான் கூற முடியும். எனவே துல்கர்னைன் இறைத்தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.
துல்கர்னைன் என்பவர் நபியா? என்று கேட்டதற்கு, ஆம் அல்லது இல்லை என்று நேரடியாக பதில் சொல்லாமல், மழுப்பி பதில் கொடுத்துள்ளார் பீஜே. இவர் நபியாகத் தான் இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள் என்றுச் சொல்கிறார். இந்த பதிலிருந்து நாம் எதனை புரிந்துக்கொள்வது? பிஜே அவர்கள் என்ன சொல்கிறார்? துல்கர்னைன் என்பவர் நபி என்றுச் சொல்கிறாரா? அல்லது இதர அறிஞர்கள் தான் சொல்கிறார்கள், நான் இப்படி சொல்லவில்லை என்றுச் சொல்கிறாரா?
பீஜே அவர்கள் பொதுவாக ஒரு விஷயத்தில் உறுதிகொண்டுவிட்டால், மற்ற அறிஞர்களுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று அடம்பிடிப்பார், மற்ற அறிஞர்களுக்கு அறிவு இல்லை என்று சொல்லிவிடுவார். ஆனால், இந்த விஷயத்திற்கு வரும் போது மட்டும் "எனவே துல்கர்னைன் இறைத்தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்" என்று சொல்லி தம் விளக்கத்தை முடித்துவிடுகின்றார். இவருக்கே சந்தேகம் இருந்தால், மற்ற அறிஞர்களின் கூட்டத்தோடு கோவிந்தா போடுவார், சந்தேகம் இல்லாமல் இருந்தால் தனியாக 'கோவிந்தா' போடுவார்.
இந்த துல்கர்னைன் யார் என்பதை அடையாளம் கண்டுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதினால், கழுவுற மீனில் நழுவுற மீன் போல, அவர் பதில் அளித்துள்ளார்.
அலேக்சாண்டர் நபியா அல்லது முஸ்லிமா அல்லது முஷ்ரிகா?
1) அலேக்சாண்டர் தனக்கு தெய்வீகத் தன்மை உண்டு என்று கருதினான்
மகா அலேக்சாண்டர் தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று கூறிக்கொண்டான், மேலும் தன்னை மக்கள் வணங்கும்படியும் செய்துள்ளான், இது சரித்திரம் சொல்லும் விவரங்களாகும்.
Alexander eagerly assimilated the religious mysticism of the Nile and of Magian Persia. Not only did he protect these religions, but also as a sole ruler, he necessarily assumed the semidivine aspect of an Asian despot, wearing Persian attire at ceremonies and accepting prostration in his presence." (Encyclopaedia Americana, Volume 1, p_540)
அல்லாஹ்வை வணங்கும் ஒரு முஸ்லிம் எப்படி அலேக்சாண்டர் போல தம்மை மக்கள் வணக்கம் செலுத்தும் படி செய்யமுடியும்? தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்றுச் சொல்லமுடியும்? இஸ்லாமின் படி இது மிகப்பெரிய பாவம் ஆகும்.
2) மரிப்பதற்கு முன்பாக தன்னை தெய்வமாக கருதி வணங்கும் படி கட்டளையிட்டான்
அலேக்சாண்டர் தாம் "அம்மோன் ரா" என்ற தெய்வத்தின் மகன் என்று கருதினான், மேலும் தான் மரிப்பதற்கு முன்பாக, தன்னை தெய்வமாக அனைவரும் வணங்கும் படியும் கட்டளையிட்டுள்ளான்.
"In the spring of 331 Alexander made a pilgrimage to the great temple and oracle of Amon-Ra, Egyptian god of the sun, whom the Greeks identified with Zeus. The earlier Egyptian pharaohs were believed to be sons of Amon-Ra; and Alexander, the new ruler of Egypt, wanted the god to acknowledge him as his son. The pilgrimage apparently was successful, and it may have confirmed in him a belief in his own divine origin. " (Sources: ancient-macedonia.jimdo.com/alexander-the-great-macedonian/ & Funk & Wagnalls Encyclopaedia, CDROM ver, by future vision multimedia inc., 1995 INFOPEDIA)
"Shortly before he died, Alexander ordered the Greek cities to worship him as a god. Although he probably gave the order for political reasons, he was, in his own view and that of his contemporaries, of divine birth." (Sources: www.indirce.com/ei-2134-report_on_alexander_the_great & Funk & Wagnalls Encyclopaedia, CDROM ver, by future vision multimedia inc., 1995 INFOPEDIA)
கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் ஜீயஸ்-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார். (மூலம்: விக்கீபீடியா - பேரரசர் அலெக்சாந்தர் - ta.wikipedia.org/s/240k)
அலேக்சாண்டர் தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று நம்பினார், தன்னை மக்கள் வணங்கவேண்டும் என்றும் சொன்னார். கடைசியாக, "ஜீயஸ்-அம்மோன்" என்ற அக்கால கடவுள் தான் தன் தந்தை என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால், குர்-ஆன் சொல்லும் துல்கர்னைன் அல்லாஹ்வை வணங்கியவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் என்று குர்-ஆன் சொல்லவில்லையென்றாலும், குர்-ஆன் சொன்ன இதர விவரங்கள் அனைத்தும் அலேக்சாண்டருக்குத் தான் பொருந்துகிறது என்பதை சரித்திரத்திலிருந்து காணலாம்.
துல்கர்னைன் என்பவன் அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொன்னால்?
துல்கர்னைன் என்பவன் அலேக்சாண்டர் என்று நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று "இன்று" முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஏனென்றால், அலெக்சாண்டர் பற்றிய சரித்திர விவரங்கள் நமக்கு தெரிந்துவிட்டது என்பதால், முஸ்லில்ம்கள் இப்படி பல்டி அடிக்கலாம். ஆனால், ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் துல்கர்னைன் என்பவர், அலேக்சாண்டர் என்று தான் அடையாளப்படுத்தினார்கள். துல்கர்னைன் அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொல்லும் முஸ்லிம்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்:
அ) உண்மையில் துல்கர்னைன் யார்? சரித்திரத்திலிருந்து சரியான நபரை அடையாளம் காட்டுங்கள்.
ஆ) குர்-ஆன் சொல்லும் விவரங்களின் படி, மிகப்பெரிய இராஜ்ஜியங்களை ஆண்ட அந்த அரசன் பற்றி ஏன் சரித்திரத்தில் எங்கும் நாம் காண்பதில்லை? மதத்திற்கு வெளியே சரித்திர ஆசிரியர்கள் இப்படிப்பட்ட அரசனைப் பற்றிய விவரங்களை தவரவிட்டு இருக்கவே மாட்டார்கள். மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்டவர் என்பது சாதாரண விவரமல்ல.
இ) துல்கர்னைன் ஒரு நல்ல முஸ்லிமாக மேலும் நபியாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் பைபிளின் பழைய ஏற்பாட்டிலாகவது அல்லாஹ் அவனைப் பற்றி குறிப்பிட்டு இருந்திருக்கவேண்டுமல்லவா?
ஈ) பைபிளில் சின்ன சின்ன நபிகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்த அல்லாஹ் இவ்வளவு பெரிய மனிதனைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? (யெகோவா தேவன் அல்லாஹ் அல்ல என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும், ஆனால், முஸ்லிம்கள் அல்லாஹ் தான் பைபிளின் தேவன் என்பதால் இந்த கேள்வியை கேட்கிறேன்).
உ) நபிகள் பற்றி சொல்லும் போது குர்-ஆன், ஆபிரகாம் முதல் இயேசுவரையுள்ள நபிகள், அரசர்கள் பற்றி குறிப்பிடுகிறது. இவரது நபித்துவம் பற்றி குர்-ஆன் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?
ஊ) மத்திய கிழக்கு பகுதியில் ஒரு சிறிய பகுதிய ஆண்ட தாவீது மற்றும் சாலொமோன் போன்ற அரசர்கள் பற்றி பக்கம் பக்கமாக பேசும் குர்-ஆன், அக்கால உலகத்தின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட துல்கர்னைன் பற்றி இதர இடங்களில் ஏன் மூச்சு விடுவதில்லை?
எ) இஸ்லாமின்படி கடைசி கால தீர்க்கதரிசனத்தைச் சொன்ன துல்கர்னைன் பற்றி குர்-ஆன் இதர இடங்களில் ஒரு குறிப்பு கூட சொல்லாமல் இருப்பது ஆச்சரியமே! ஒருவேளை குறைஷிகள் இவரைப் பற்றி கேட்காமல் இருந்திருந்தால், இப்படிப்பட்டவர் பற்றி ஒரு வசனத்தையும் குர்-ஆனில் நாம் கண்டு இருந்திருக்கமாட்டோம். இஸ்லாமிய அறிஞர்கள் குர்-ஆனில் வரும் 25 நபிகளின் பெயர்களை குறிப்பிடும் போது, ஏன் இவரது பெயரையும் குறிப்பிடுவதில்லை? பீஜே அவர்கள் இவரையும் அந்த நபிகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்வாரா?
முடிவுரை:
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்களால் துல்கர்னைன் பற்றி குர்-ஆன் சொல்லும் விவரங்களை மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை.
இப்போது பாரா அவர்கள் என் மீது கோபம் கொள்ளலாம், "வெறும் இரண்டு வரிகள் எழுதியதற்காக இந்த கட்டுரையில் என்னை ஏன் இவன் இழுக்கிறான்"?
பாரா அவர்களே, உம்மை எப்படி மறந்துவிடமுடியும்? இஸ்லாமுக்காக ஆதரவாகப் பேசும் மேசியாக்கள் அவ்வப்போது உலகில் தோன்றுகிறார்கள், இவ்வரிசையில் இந்து மதத்திலிருந்து வந்த இஸ்லாமிய மேசியா நீங்கள் அல்லவா? உங்களை எப்படி மறக்கமுடியும்?
துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் எங்கே இருக்கிறது? துல்கர்னைன் சொன்ன தீர்க்கதரிசனம் என்ன? உலகத்தின் முடிவில் நடக்கும் விவரங்களில் துல்கர்னைன் கதையில் வரும் இதர பாத்திரங்களின் பங்கு என்ன போன்றவைகளை அடுத்தடுத்த கட்டுரையில் காண்போம்.
அடிக்குறிப்புக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக