ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 30 செப்டம்பர், 2017

யூத ரபி எழுதிய ஜோஹர் புத்தகத்தில் முஹம்மது உள்ளாரா?

சில நாட்களுக்கு முன்பாக எனக்கு, ஒரு சகோதரர் ஒரு மெயிலை அனுப்பியிருந்தார். அவர் கீழ்கண்ட தொடுப்பை சுட்டிக்காட்டி, "முஹம்மதுவின் பெயர் பழைய யூத நூல்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த தொடுப்பு சொல்கிறது. அதைப் பற்றி ஆய்வு செய்து, விளக்கம் அளிக்கமுடியுமா? என்று கேட்டு இருந்தார்.

நான் அந்த தொடுப்பை படித்து, ஆய்வு செய்து என் பதிலை கட்டுரையாக பதிக்கிறேன் என்று அந்த சகோதரருக்கு பதில் அனுப்பினேன். அந்த பதில் தான் இந்த கட்டுரை.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

  1. முஸ்லிம்கள் முஹம்மதுவை ஏன் பைபிளில் தேடுகிறார்கள்? 
  2. இத்ரிஸ் என்ற புனைப்பெயரில் எழுதும் அஹ்மத் என்பவருக்கு பதில்
  3. ஜோஹர் புத்தகம் இஸ்லாமை காப்பாற்றுமா? (அ) குழி தோண்டி புதைக்குமா?
  4. முடிவுரை

1) முஸ்லிம்கள் முஹம்மதுவை ஏன் பைபிளில் தேடுகிறார்கள்?

முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனங்கள் பைபிளில் உண்டு என்று முஸ்லிம்கள் சொல்லும் போது நமக்கு எழும் கேள்விகள்:

  • பைபிளில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்புக்களா? இதன் அவசியம் என்ன?
  • முஹம்மதுவை குர்-ஆனில் தேடுவதை விட்டுவிட்டு, முஸ்லிம்கள் ஏன் பைபிளில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்?

குர்-ஆன் 7:157

பைபிளில் முஹம்மதுவை தேடும்படி, குர்-ஆன் 7:157 முஸ்லிம்களை கட்டாயப்படுத்துகிறது.

குர்-ஆன் 7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும்இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; . . . .

குர்-ஆனுக்கு ஒரு அமிலச்சோதனை:

மேற்கண்ட குர்-ஆன் வசனம் (7:157), பைபிளில் (தோரா மற்றும் இன்ஜீல்) முஹம்மது பற்றிய முன்னறிவிப்புக்கள் உண்டு என்று சொல்லிவிட்டது. ஆனால், பைபிளின் எந்த புத்தகத்தில், எந்த இடத்தில் என்று துள்ளியமாகச் சொல்லவில்லை.  இது முஸ்லிம்களுக்கு தர்மசங்கடமாக மாறிவிட்டது. 

இப்போது முஸ்லிம்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன. 

  • ஒன்று, முஹம்மது பற்றிய முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளது என்று வசன எண்ணோடு  நிரூபிக்கவேண்டும்.  
  • அப்படி அவர்களால் நிரூபிக்கமுடியவில்லையென்றால், குர்-ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் இல்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அதாவது குர்-ஆன் பொய் சொல்லியுள்ளது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.

நிச்சயமாக அவர்கள் இரண்டாவது தெரிவை தெரிவு செய்யமாட்டார்கள், அதாவது குர்-ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை, அது ஒரு பொய்யான புத்தகம் என்று சொல்லமாட்டார்கள். எனவே, எப்பாடுபட்டாவது பைபிளில் சில வசனங்களை எடுத்துக்காட்டி, இதோ முஹம்மது பற்றிய முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளது என்று தவறான  வசனங்களை காட்டுவார்கள்.

இதுவரை பைபிளில் தேடியவர்கள், இப்போது யூத ரபீக்கள் எழுதிய விளக்கவுரைகளிலும், இதர புத்தகங்களிலும் தேட ஆரம்பித்துவிட்டார்கள். இதன் வெளிப்பாடு தான் ஜோஹர் என்ற புத்தகத்தில் முஹம்மது பற்றி சொல்லப்பட்டுள்ளது என்ற முஸ்லிம்களின் யூகம்.

2) இத்ரிஸ் என்ற புனைப்பெயரில் எழுதும் அஹ்மத் என்பவருக்கு பதில்

போலந்து நாட்டிலிருந்து, இத்ரிஸ் என்ற புனைப்பெயரில் அஹ்மத் என்ற முஸ்லிம் எழுதிய பதிவைத் தான் நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். 

இத்ரிஸ் எழுதியவை:

// two days ago, while browsing the contents of Hebrew books in Google I came across an interesting document which is called Zohar (perhaps some of you did heard about it before since it is commonly known in Jewish literature). The author of the original work was a 2nd-century Rabbi named Shimon bar Yohai. Generaly speaking, this work include a commentary on the mystical aspects of the Torah and scriptural interpretations as well.//

இவர் எபிரேய புத்தகங்களை கூகுளில் தேடிக்கொண்டு இருக்கும் போது, இவருடைய கண்களில் ஜோஹர் என்ற புத்தகம் பட்டதாம்.

இவரது வரிகளைப் பார்த்து, "ஓ, இவருக்கு ஹீப்ரு (எபிரேய) மொழி தெரியும்" என்று நாம் நினைக்ககூடாது. எபிரேய மொழியை கூட்டி கூட்டி படிக்கவும் இவருக்கு தெரியாது என்பதை அவரது பதிவை முழுவதுமாக படித்தால் புரியும். மேற்கண்ட பத்தியில் ஒரு யூத ரபியின் புத்தகத்தைப் பற்றி எழுதுகிறார். இந்த புத்தகம் பலவிதமான ஆவிகளின் உலகம் பற்றிய விவரங்களைச் சொல்வதாக உள்ளது. அதாவது, ஆன்மா, பேய்/பிசாசு, மனிதன், இறைவன் போன்றவற்றைப் பற்றிய ஒரு விபரீதமான விவரங்களைச் சொல்லும் புத்தகமாக உள்ளது. 

இத்ரிஸ் எழுதியவை:

இவர் கூகுளில் அல்லது ஏதாவது ஒரு மொழியாக்க தளத்தில் ஆங்கிலத்தில் "Prophet Ahmed in Isaiah" என்று எழுதி, எபிரேய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த சொற்றொடரை எடுத்து அவர் கூகுளில் எபிரேய மொழி புத்தகங்களில் தேடியுள்ளார். மேலும், அவர் தேடிய வார்த்தைகள் அதே வரிசையில் அவருக்கு கிடைக்கவில்லை. அதாவது அவர் பதித்த முழு எபிரேய வரியில், அவர் தேடிய மூன்று வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவருக்கு கிடைக்கவில்லை.

அவர் தேடிய வார்த்தைகளில் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே அவர் காட்டிய எபிரேய வசனத்தில் கிடைத்துள்ளது. இதனை படத்தில் சதுரம் மற்றும் வட்டமிட்டு நான் குறிப்பிட்டுள்ளேன்.

அடுத்து அவர் என்ன எழுதுகிறார் என்பதை பார்ப்போம்.

இத்ரிஸ் எழுதியவை:

// The text however, is writen in difficult and obscure way (even scholars has observed). There is an abvious error in בעהיק where ת was wrongly mistook as ה

//

இப்போது தான் முஸ்லிம்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்போகிறது. இவர் எழுதிய வரியை கூர்ந்து படிக்கவும்:

தில்லுமுல்லு 1)

" writen" என்ற வார்த்தையில் எழுத்து பிழை உள்ளது. மேலும், "abvious" என்ற வார்த்தையும் பிழையான வார்த்தையாகும். இவர் உண்மையாகவே ஒரு அறிஞராக இருந்திருந்தால், இப்படிப்பட்ட எழுத்துப் பிழைகளைச் செய்யமாட்டார். இது ஒரு சிறிய பிழை தான், இருந்தபோதிலும் தன்னை ஒரு எபிரேய எழுத்துக்களை ஆய்வு செய்யும் அறிஞர் போல காட்டிக்கொண்டதால், இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது.

தில்லுமுல்லு 2)

மேற்கண்ட வரி மிகவும் கடினமாகவும், புரியாதவண்ணமாகவும் எழுதப்பட்டுள்ளதாக இவர் சொல்கிறார். இது இவருக்கு எப்படி தெரியும்? இவருக்கு எபிரேய மொழி தெரியாத போது, எபிரேய வரிகளில் உள்ள கடினத்தன்மை இவருக்கு எப்படி புரிந்துவிட்டது? இவருக்கு எபிரேய மொழியை படிக்கத்தெரியுமா? எபிரேய மொழியின் இலக்கணத்தை இவர் அறிவாரா? முஸ்லிம்கள் பொதுவாக மக்களை குழப்பப் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு எல்லாமே தெரிந்தது போல காட்டிக்கொள்வார்கள், அதன் வெளிப்பாடு தான் இது. ஆனால், வசமாக மாட்டிக்கொள்வார்கள்.

தில்லுமுல்லு 3)

இவர் "(even scholars has observed)" என்று எழுதியுள்ளார். இதன் அர்த்தமென்ன? இந்த எபிரேய வரி மிகவும் கடினமாக உள்ளது பல எபிரேய அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்று இவர் சொல்கிறார்.

இப்போது நாம் கேட்கும் கேள்விகள் என்னவென்றால்:

இவர் எந்தெந்த எபிரேய அறிஞர்களிடம் இதைப் பற்றி கேட்டுள்ளார்? அவர்களின் பெயர்களையும், அவர்கள் எந்தெந்த (எபிரேய) பல்கலைக்கழகங்களில் வேலை பார்க்கிறார்கள் என்று இவரால் சொல்லமுடியுமா? வெறுமனே அறிஞர்களும் குழம்பியுள்ளார்கள் என்றுச் சொல்வது பொய்யான கூற்றாகும். இவர் ஒரு அரைவேக்காடு, இந்த இலட்சனத்தில் அறிஞர்களும் குழப்பமாக இருக்கிறது என்று தான் கருதுகிறார்கள் என்று மொட்டையாகச் சொல்வது, வேடிக்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆய்வுகளைச் செய்யும் போது, பல மூலங்களை, அறிஞர்களின் பெயர்களை குறிப்பிடவேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூட இவருக்கு கிடையாது என்பது உறுதியாகிவிட்டது.

தில்லுமுல்லு 4)

There is an abvious error in בעהיק where ת was wrongly mistook as ה

"ஒரு எபிரேய வார்த்தையில் ஒரு எழுத்து" பிழையாக உள்ளதாம், இதனை இவர் கண்டுபிடித்து விட்டாராம். இந்த ஆய்வை இவர் எப்படி செய்தார்? ஒருவேளை இவர் ஒரு எபிரேய மொழி பண்டிதராக இருந்தாலும், ஆய்வு செய்து தான் இவர் சொல்வதை ஒப்புக்கொள்ளமுடியும். இப்படி இருக்க, எபிரேய மொழியின்  எழுத்துக்களை கூட்டிப்படிக்கத் தெரியாத இவருக்கு இந்த ஞானம் எப்படி வந்தது? இவர் சொன்ன எழுத்துப்பிழையை உறுதிச் செய்வது யார்? இதற்கு எபிரேயம் தெரிந்த ஒரு அறிஞர் தேவை, மேலும் கூகுளில் ஸர்ச் செய்து, இப்படிப்பட்ட பெரிய விஷயங்களைச் சொல்வது கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம் தான். இவர் சொல்வது எப்படி இருக்கின்றதென்றால், தமிழே தெரியாத ஒரு வடநாட்டுக்காரர், திருக்குறளில் எழுத்துப்பிழை உள்ளது என்றுச் சொல்வதற்கு இணையாக உள்ளது. ஒரு எபிரேய வார்த்தையில் துள்ளியமாகப் பார்த்து இதில் இந்த எழுத்தில் பிழை உள்ளது என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு இவருக்கு எபிரேய  ஞானம் உள்ளதா? என்பதை வாசகர்கள் அவர் எழுதிய அனைத்து வரிகளையும் படித்தால் புரிந்துக்கொள்ளலாம்.

அடுத்து அவர் எழுதியவைகளைக் காண்போம்.

இத்ரிஸ் எழுதியவை:

//You can put this Hebrew text into Google translator if you wish.

Link //

இது ஒரு சூப்பர் வேடிக்கை. வாசகர்களுக்கு தேவைப்பட்டால், கூகுள் டிரான்லேடர் (Google Translator) தொடுப்பை சொடுக்கி பார்த்துக்கொள்ளுங்கள் என்று மேற்கண்ட தொடுப்பை அவர் கொடுத்துள்ளார்.

இதிலென்ன தவறு என்று கேட்டால், அவர் கொடுத்தது கூகுள் மொழியாக்க (Google Translator) தொடுப்பு அல்ல, அவர் கொடுத்தது கூகுள் புத்தகங்களில் தேடும் (Google books) தொடுப்பு ஆகும்.

கூகுளின் மொழியாக்க தொடுப்பு (Google Translator) எது?

புத்தகங்களில் தேடும் தொடுப்பு (Google Books) எது?

என்று கூட தெரியாத இவரா? இஸ்லாமிய ஆய்வாளர்? இவருடைய இப்படிப்பட்ட ஆய்வை பார்க்கும் போது, இரண்டாம் வகுப்புவரை படித்தவன் திடீரென்று ஆய்வில் இறங்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. 

இத்ரிஸ் எழுதியவை:

//Unfortunately, I 'am not able to understand all of the Hebrew text, since as I've said it is written in a difficult way, but I can recognize the words: כתיב(it is written), בה' בעהיק יומין (through/by him in ancient of days), אחמד (ahmad), ישעיה (Isaiah), and כלחו (sent ?). Now, it is interesting to note that the two expressions תיק יומין in the entire Old Testament appears only in Daniel 7:9 and 7:13 in connection with the Son of Man (literally = ben Adam = Son of Adam) who was to be presented before the Throne of God. It can be only prophet Mohammed (pbuh) and no one else! So, the fact of using such specific words standing together is a curious indication that could reveal the shocking truth behind this Zohar book which according to some scholars is the same book that was disappeared 1,800 years ago, and after long time was discovered in Spanish in 13th cent.//

இவருக்கு மேற்கண்ட எபிரேய வார்த்தைகள் எல்லாம் புரியவில்லையாம், ஏனென்றால், அவைகள் கடினமான வகையில் எழுதப்பட்டுள்ளதாம் (I 'am not able to understand all of the Hebrew text, since as I've said it is written in a difficult way). இதனை இவர் ஏற்கனவே சொல்லியுள்ளாராம் (கண்டுபிடித்துவிட்டாராம்).

அது எப்படி? ஒரு மொழியில் உள்ள வார்த்தைகளை கடினமாக எழுதுவது? கடினமாக எழுதுவது என்றால் என்ன அர்த்தம்? 

நமக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியும். யாராவது தமிழில் ஏதையாவது எழுதி நம்மிடம் படிக்க கொடுத்தால், ஒன்று நாம் அவைகளை படிப்போம், அல்லது அவைகள் பிழையாக எழுதப்பட்டு இருந்திருந்தால், "இதில் இன்னின்ன பிழைகள் உள்ளன" என்று தெளிவாக நாம் சொல்லிவிடுவோம். இப்படி செய்வதை விட்டுவிட்டு, "நீ கடினமாக எழுதியுள்ளாய், இதனால் என்னால் படிக்கமுடியவில்லை" என்று நாம் சொன்னால், இதன் அர்த்தமென்ன? நமக்கு தமிழை கூட்டி கூட்டி கூட படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தம். நான் சொல்வது சரி தானே! 

இதைப் போலத் தான் அவர் சொல்லியுள்ளார். இந்த முஸ்லிம் இத்ரிஸுக்கு எபிரேய மொழி தெரியாது. ஏதோ, எழுத்துக்களின் வடிவங்களைப் பார்த்து, அடையாளப்படுத்த முயன்றுள்ளார், அவ்வளவு தான். ஆனால், இவர் எழுதியதை கவனித்தால், இவர் ஒரு எபிரேய மொழி அறிஞர் மாதிரியும், இவருக்கு பண்டைய கால கல்வெட்டுக்களில் தோல் சுருள்களில் உள்ள அரைகுறை எழுத்துக்களை படிக்க கொடுத்தது மாதிரியும் பாசாங்கு செய்கிறார்.

இத்ரிஸ் எழுதியவை:

// but I can recognize the words: כתיב(it is written), בה' בעהיק יומין (through/by him in ancient of days), אחמד (ahmad), ישעיה (Isaiah), and כלחו (sent ?). //

ஆனால், இவர் சில வார்த்தைகளை மட்டும் அடையாளம் கண்டாராம். அதாவது ஒவ்வொரு வார்த்தையும் கூகுள் மொழியாக்கத்தில் (எபிரேயத்திலிருந்து ஆங்கிலத்திற்கு) போட்டு பொருளை பார்த்து இருந்திருக்கிறார் (இதனால் தான் இவருக்கு எபிரேய மொழிய தெரியாது என்று குறிப்பிட்டேன்).

இப்போது இவ்வார்த்தைகளை நாம் கூகுளிலும், www.doitinhebrew.com தளத்திலும் மொழியாக்கம் செய்துப் பார்ப்போம்:

1) בה' בעהיק יומין (through/by him in ancient of days)

இந்த வார்த்தைக்கு "God is in the present day" என்று வருகிறது. தமிழில் "கடவுள் இன்றும் இருக்கிறார்" என்று வருகிறது. வாசகர்கள் கவனிக்கவும், கூகுள் மொழியாக்கம் 100% சரியான மொழியாக்கம் அல்ல என்பதை இத்ரிஸ் போன்ற முஸ்லிம்கள் அறியவேண்டும். இவருக்கு "through/by him" என்று எப்படி பொருள் கிடைத்தது? (இதெல்லாம் முஸ்லிம்களுக்கு சகஜமப்பா!)

2)  אחמד (ahmad)

எபிரேயத்தில் அஹ்மத் என்றால் என்ன அர்த்தம் என்று இவருக்குத் தெரியுமா? 

எபிரேய மொழியில் அஹ்மத் வினைச்சொல்லாகும். இதற்கு "ஆசைப்படுதல், விரும்புகின்ற" என்று அர்த்தம். ஒரு வார்த்தை ஒரு மொழியில் ஒரு பொருளில் இருக்கும், வேறு மொழியில் வேறு பொருள் வரும். இவ்விரண்டும் ஒன்றாகாது. 

அரபியில், இது பெயர்ச்சொல்லாக உள்ளது. 

இதனை www.doitinhebrew.com  தளத்தில் தேடி கண்டுபிடிக்கலாம்.

உதாரணம் 1: 

அல்லாஹ் என்றால் அரபியில், இறைவனின் பெயர், ஆனால் ஹீப்ரு மொழியில் இதற்கு என்ன பொருள்?

அல்லாஹ் என்றால் எபிரேய மொழியில் "கர்வாலி மரம்" என்று பொருள். இன்னும் இதைப் பற்றி அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்:

ஜியாவிற்கு பதில் - "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள் (இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை. இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை)

http://www.answering-islam.org/tamil/authors/umar/answer_jiya/allah_oak_tree.html

உதாரணம் 2:

அக்பர் என்றால் அரபியில், உயர்ந்தவர் (great) என்று பொருள். ஆனால், எபிரேய மொழியில் அக்பர் என்றால் சுண்டெலி என்று அர்த்தம். 

இத்ரிஸ் சகோதரரின் லாஜிக்கின் படி, அரபியில் "அல்லாஹு அக்பர்" என்றால், எபிரேய மொழியில்  "அல்லாஹ் ஒரு சுண்டெலி" என்று அர்த்தம், அல்லது "கர்வாலி மரம் ஒரு சுண்டெலி" என்று அர்த்தம்.

இதனை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ் ஒரு சுண்டெலி என்று இவர் ஏற்றுக்கொள்வாரா?

     1) Zakir Naik Proves That Allah Is a Mouse! (Based on Song of Solomon 5:16)

     2) Hebrew Dictionary: 5909. akbar

3) כלחו (sent ?)

இதற்கு கூகுள் "அவரது ரொட்டி" அல்லது "his bread" என்று தருகிறது. இவருக்கு மட்டும் "செண்ட்" என்று எங்கேயிருந்து கிடைத்தது?

ஆங்காகங்கே இருக்கும் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு, சம்மந்தமில்லாமல் அர்த்தம் செய்வது எப்படி சரியானதாக இருக்கும்? இவர் தேடிய வார்த்தைகள் "Prophet Ahmed in Isaiah" இது ஒரு பொதுவான தேடல். இதற்கு ஒரு யூத ரபி எழுதிய புத்தகத்தில் ஆங்காங்கே கிடைத்த வார்த்தைகளின் பொருளை ஒன்று சேர்த்து என்ன சொல்ல வருகிறார் இவர்? உண்மையான ஆய்வாளர்கள் இது ஒரு முட்டாள்தனமான ஆய்வு என்றுச் சொல்வார்கள்.

இன்னும் இவரது ஆய்வை நாம் பார்ப்போம்.

இத்ரிஸ் எழுதியவை:

//Now, it is interesting to note that the two expressions תיק יומין in the entire Old Testament appears only in Daniel 7:9 and 7:13 in connection with the Son of Man (literally = ben Adam = Son of Adam) who was to be presented before the Throne of God. It can be only prophet Mohammed (pbuh) and no one else!//

வந்த வேலையை விட்டுவிட்டு, திடீரென்று சம்மந்தமே இல்லாத வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தாவுவதை பாருங்கள். 

மனுஷ குமாரன் (תיק יומין ) என்ற வார்த்தைகள் முழு பழைய ஏற்பாட்டிலும் இரண்டு இடங்களில் வருகின்றதாம். முஹம்மதுவை விட்டுவிட்டு திடீரென்று மனுஷகுமாரனுக்கு தாவுவதற்கு காரணம் என்ன? இதுவரை ஆய்வு செய்ததை அப்படியே காற்றில் விட்டுவிட்டதன் காரணம் என்ன?

இப்படித் தான் முஸ்லிம்களின் ஆய்வு (!) இருக்கும். சரி, அவரது ஆய்வின் படியே நாமும் செல்வோம். தானியேல் 7:9 மற்றும் 7:13ல் வரும் மனிஷ குமாரன் என்ற வார்த்தையென்பது முஹம்மதுவிற்கு மட்டுமே பொருந்துமாம், வேறு யாருக்கும்  பொருந்தாதாம்.

இவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்:

அ) இவர் முதலாவது தானியேல் 7ம் அத்தியாயத்தை முழுவதுமாக படித்துள்ளாரா?

ஆ) மனுஷகுமாரன் என்ற வார்த்தையை புதிய ஏற்பாட்டில் யாராவது தங்களுக்காக பயன்படுத்தியுள்ளார்களா? இதைப் பற்றிய அறிவு இவருக்கு உண்டா?

இ) எந்த ஆய்வை அடிப்படையாக வைத்துக்கொண்டு, மனுஷ குமாரன் என்பது முஹம்மதுவை மட்டுமே குறிக்கும் என்று இவரால் சொல்லமுடிந்தது?

தானியேல் 7:9 மற்றும் 7:13

தானியேல் புத்தகத்தின் 7:13ஐ பார்த்த, இத்ரிஸ், 14வது வசனத்தை படிக்காமல் போய்விட்டார். முஸ்லிம்கள் செய்யும் பெரும்பான்மையான தவறுகள் எல்லாம், மேலோட்டமாக அவர்கள் படித்துவிட்டு, அல்லது மற்றவர்கள் சொன்னதை ஆய்வு செய்யாமல், "இது தான் உண்மை" என்று அடம் பிடிப்பது தான். இத்ரீஸும் அப்படியே செய்துள்ளார். 14வது வசனம் சொல்வதை அவர் படித்திருந்தால், மனுஷ குமாரன் என்பது முஹம்மது என்று சொல்லமாட்டார்.

இப்போது அனைத்து வசனங்களையும் படித்துப் பாருங்கள்.

தானியேல் 7:9-14

9. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

10. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

11. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

12. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

13வது வசனத்தில் "மனுஷ குமாரன்" சாயலாக காணப்பட்டவர், 14வது வசனத்தில் அவர் இறைவன் என்று சொல்லப்பட்டுள்ளது. 

உலக மக்கள் அனைவரும் அவரை தொழுதுக்கொள்கிறார்கள். மேலும், கர்த்தத்துவமும் மகிமையும், ராஜரீகமும் அவருக்கு கொடுக்கப்பட்டது என்றுச் சொல்லப்படுகிறது. அவர் தான் இறைவன். முஸ்லிம்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் அவர் தான் அல்லாஹ்.

இத்ரிஸ் என்ற சகோதரர், 14வது வசனத்தை படிக்காமல், ஒரு மிகப்பெரிய ஷிர்க்கை செய்துள்ளார். மனிதனாகிய முஹம்மதுவை இறைவனுக்கு சமமாக அடையாளம் காட்டுகின்றார்.

இத்ரிஸ் சகோதரர் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்துள்ளார் என்று அவருக்குத் தெரியுமா? மனிதனை அல்லாஹ்விற்கு சமமாக்குவது இஸ்லாமின் படி மன்னிக்கமுடியாத பாவம் என்பதை அவர் அறியமாட்டாரா? முஹம்மதுவை பைபிளில் கண்டுபிடிப்பதற்காக அல்லாஹ்விற்கு எதிரான பெரும் பாவத்தைச் செய்கிறார்கள் முஸ்லிம்கள்.

தானியேல் 7ம் அத்தியாயத்தில் வரும் மனுஷ குமாரன் போன்றவர் முஹம்மது என்றுச் சொல்வது, முஸ்லிம்களுக்கு வம் கலந்த முட்டாள்தனமாகும்.

இதில் இன்னொரு தவறு என்ன தெரியுமா? மனுஷ குமாரன் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் இரண்டு இடங்களில் மட்டுமே வருகின்றதாம் - தானியேல் 7:9 மற்றும் 7:13.

தானியேல் 7:9 (வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம்)

I beheld H1934 H2370 till H5705 the thrones H3764 were cast down, H7412 and the Ancient H6268 of days H3118 did sit, H3488 whose garment H3831 was white H2358 as snow, H8517 and the hair H8177 of his head H7217 like the pure H5343 wool: H6015 his throne H3764 was like the fiery H5135 flame, H7631 and his wheels H1535 asburning H1815 fire. H5135

தானியேல் 7:13 (வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம்)

I saw H1934 H2370 in the night H3916 visions, H2376 and, behold, H718 one like the Son H1247 of man H606 came H858with H5974 the clouds H6050 of heaven, H8065 and came H4291to H5705 the Ancient H6268 of days, H3118 and they brought him near H7127 before H6925 him.

மூலம்: https://www.blueletterbible.org/kjv/dan/7/13/ss1/s_857013

கவனிக்கவும், மனிஷ குமாரன் (Son of man) என்ற வார்த்தைகள், தானியேல் 7:13ல் (H1247 & H606) மட்டுமே வருகிறது, இத்ரிஸ் சொல்வது போல 7:9ல் வரவில்லை.

இதிலிருந்து அறிவது என்ன? இத்ரிஸ் ஒரு அரைவேக்காடு மற்றும் யாரோ ஒரு முஸ்லிம் எங்கேயோ எதையோ எழுத அதனை அப்படியே ஆய்வு செய்யாமல், வாந்தி எடுக்கும் முஸ்லிம் ஆவார்.

இத்ரிஸ் எழுதியது:

//Sounds exciting isn't ? For this reason I have asked a Rabbi Ben Abrahamson to help us explain what the text says, I'am waiting for his answer.

Also, if you type מחמד (Mohammed) it will suprisingly show one result, and it is in ספר דברים (Deuteronomy) ! Subhanallah! //

இவராகவே ஒரு தவறான ஆய்வை செய்வார்! அதை இவரே மெச்சிக்கொள்வார்!

மேலும் ஜோஹர் புத்தகத்தில் வந்த வாக்கியத்தின் அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள பென் அப்ரஹாம்சன் என்ற யூத ரபீயிடம் உதவி கேட்டுயுள்ளாராம். இந்த பென் அப்ரஹாம்சன் என்ற ரபீ எங்குள்ளார்? அவர் எங்கு வேலை பார்க்கிறார்? போன்ற விவரங்களை எதையும் கொடுக்காமல், மொட்டையாக எழுதியதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு? இந்த பென் அப்ரஹாம்சன் என்பவர் கூட இவரது கற்பனைக் கட்டுக்கதையாக இருக்கக்கூடும்.

இரண்டாவதாக, இவர் முஹம்மத் என்ற பெயரை எபிரேய மொழியில் பைபிளில் தேடினாராம், அவருக்கு உபாகமம் புத்தகத்தில் ஒரு இடத்தில் அவ்வார்த்தையை கண்டுபிடித்துவிட்டாராம். இது மிகவும் ஆச்சரியமான விஷயமாம், மேலும் இதனால் அவர் அல்லாஹ்வை புகழுகின்றாராம். 

இவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பது நமக்கு விளங்குகிறது. அதாவது, உபாகமம் புத்தகத்தில் "முஹம்மது" என்ற வார்த்தை எந்த அத்தியாயத்தில், எந்த வசனத்தில் வருகிறது? என்பதை இவர் சொல்லியிருக்கவேண்டாமா? உண்மையாகவே, இவருக்கு பதில் கிடைத்து இருந்திருந்தால், அவ்வசனத்தை எபிரேய மொழியில் பதித்து இருந்திருக்கவேண்டாமா?

ஜோஹர் என்ற யூத புத்தகத்தில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளது என்றுச் சொல்லி, எபிரேய மொழியில் அதனை பதித்தவர், உபாகமம் புத்தகத்தின் வசனத்தையும் எபிரேய மொழியில் பதித்து இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? குறைந்த பட்சம், உபாகமத்தின் வசன எண்ணைக் கொடுத்தாலாவது நாம் எபிரேய மொழியில் அவ்வசனத்தைப் பார்த்து, அவர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை! இதன் மூலம் அறிவதென்ன? உபாகமத்தில் முஹம்மது என்ற எபிரேய வார்த்தை உள்ளது என்று அவர் சொன்னது சுத்தப்பொய், அல்லது அசுத்தப்பொய் என்பது தான் உண்மை.

அடுத்த பத்தியில் அவர் பொதுவாக சொன்ன விஷயங்கள் பற்றி இங்கு பதில் எழுதவேண்டிய அவசியமில்லை. 

மேலும், அவர் பதித்த இதர பதிவுகள் பற்றி அடுத்த பாகத்தில் நான் பதில் எழுதுவேன். 

இந்த பதிலின் முடிவுரையாக, ஜோஹர் புத்தகம் பற்றி சில விவரங்களை காணலாம். வாசகர்கள் இணையத்தில் இப்புத்தகம் பற்றி தெரிந்துக்கொள்ள இது உதவும். மேலும் இப்புத்தகம் பற்றி முஸ்லிம்களிடம் சில கேள்விகளை கேட்கவேண்டும்.

3) ஜோஹர் புத்தகம் இஸ்லாமை காப்பாற்றுமா? (அ) குழி தோண்டி புதைக்குமா?

யூதர்கள் என்றால் முஹம்மதுவிற்கு ஆகாது, ஆகையால் முஸ்லிம்களுக்கும் ஆகாது. எது நடந்தாலும் சரி, அதன் பின்னால் யூதர்கள் இருப்பார்கள் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதனை இஸ்லாமின் ஆறாவது தூண் என்று கூடச் சொல்லலாம். ஆனால், ஜோஹர் என்ற புத்தகத்தை ஒரு யூத ரபி எழுதியிருக்கிறார் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் அதைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதுகிறார்கள் என்றுச் சொன்னால், இதன் பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கிறது என்று அர்த்தம். அதாவது, முஸ்லிம்கள் தேடுகின்ற ஏதோ ஒரு புதையலை இவர்கள் அதில் கண்டுவிட்டார்கள் என்று அர்த்தம்.

ஜோஹர் புத்தகம் பற்றி அறிய கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்குங்கள். இக்கட்டுரையை படிக்கும் வாசகர்களில் யாராவது முஸ்லிம்களாக இருந்தால், நிச்சயம் இத்தொடுப்புக்களை படிக்கவேண்டும்.

இப்போது இத்ரிஸ் சகோதரருக்கு (முஸ்லிம்களுக்கு) சில கேள்விகள்:

1) ஜோஹர் புத்தகத்தில் ஒரு இடத்தில் அஹ்மத் என்ற வார்த்தை வருவதாகச் சொல்கிறீர்களே, அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட அனைத்து விவரங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

2) ஜோஹர் புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தை படித்தாலே, அது ஒரு ஆன்மா, பேய், பிசாசு, மெய்ஞானம் போன்ற ஆவி உலகம் பற்றி பேசுகின்றதே, அவைகள் குர்-ஆனுக்கு எதிராக உள்ளதே, இதனை எப்படி  அங்கீகரிக்கப் போகிறீர்கள்?

3) அஹ்மத் என்ற எழுத்துக்கள், உச்சரிப்புக்கள் மட்டும் இருந்தால் போதும், அந்த வரியில் சொல்லப்பட்ட பொருள் எங்களுக்கு தேவையில்லை என்ற தோரணையில் ஆய்வு செய்கிறீர்களே!  ஒருவேளை அஹ்மத் என்ற வார்த்தை வரும் வாக்கியத்தின் பொருள் மிகவும் கேவலமானதாக, முஹம்மதுவிற்கு அவமானத்தைக் கொண்டுவரும் பொருளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வீர்களா?

4) குர்-ஆனின் அடிப்படை போதனைகளுக்கு எதிராக ஜோஹர் புத்தகத்தில் விவரங்கள் காணப்படுமானால், என்ன செய்வீர்கள்? யூதன் எழுதிய ஜோஹர் புத்தகத்தை ஏற்றுக்கொண்டு, குர்-ஆனை புறக்கணிப்பீர்களா?

5) பைபிளில் முஹம்மதுவை கண்டுபிடிக்கமுடியா விட்டால், யூதர்களின் விளக்கவுரை புத்தகங்களிலாவது கிடைப்பாரா என்று தேட ஆரம்பித்துவிட்டீர்களே! இன்னும் சில காலம் போனால், எபிரேய பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகங்களிலும் முஹம்மதுவை தேட ஆரம்பித்துவிடுவீர்கள் போல இருக்கிறதே!

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி நாம் அறிவது:

அ) முஸ்லிம்களுக்கு முஹம்மது அல்லது அஹ்மத் என்ற வார்த்தை பைபிளில் கண்டுபிடிக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது.

ஆ) இந்த நிர்பந்தத்தை கொடுத்தது குர்-ஆன் தான். தோராவிலும், இன்ஜிலிலும் அஹ்மத் என்ற பெயர் உண்டு என்று குர்-ஆன் சொல்லாமல் இருந்திருந்தால் முஸ்லிம்களுக்கு இப்படிப்பட்ட பாடுகள் இருந்திருக்காது.

இ) பைபிளில் தேடித்தேடிப் பார்த்தார்கள், முஹம்மது அங்கு இல்லை, என்வே யூதர்கள் எழுதிய விளக்கவுரை மற்றும் இதர புத்தகங்களில் கிடைக்குமா? என்று தேடிப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஈ) கடைசியாக, அஹ்மத் என்ற வார்த்தை, ஜோஹர் புத்தகத்தில் உள்ளது என்று கூகுளில் தேடிப்பார்த்து, ஆய்வு என்ற பெயரில் எதையோ எழுதிவிட்டார்கள். 

உ) உண்மையில், ஜோஹர் புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்படவில்லை என்று அதே இத்ரிஸ் தன்னுடைய அடுத்தடுத்த பதிவில் ஒப்புக்கொண்டுள்ளார், உடைந்து போனது அவரது மூக்கு. இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுவேன்.

ஊ) தானியேல் 7ம் அத்தியாயத்தில் வரும் மனுஷ குமாரனுக்கு ஏற்ற சாயல் உடையவர் என்பது இறைவனை குறிப்பதாக இருக்கிறது. பாவம், அதனையும் இத்ரிஸ் அறிந்துக்கொள்ளாமல், அது முஹம்மது தான் என்றுச் சொல்லி, அல்லாஹ்வால் மன்னிக்கமுடியாத மிகப்பெரிய பாவத்தை செய்தவர் ஆகிவிட்டார்.

கருத்துகள் இல்லை: