முந்தைய கட்டுரையில், இத்ரிஸ் என்ற முஸ்லிம், யூத ரபீ எழுதிய ஜோஹர் என்ற புத்தகத்தில் முஹம்மதுவை கண்டுபிடிக்க எப்படிப்பட்ட பாடுகள் பட்டார் என்பதைப் பார்த்தோம், அக்கட்டுரையின் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இக்கட்டுரையில், இத்ரிஸ் சகோதரர் மேற்கொண்டு என்ன எழுதினார் என்பதையும், இதன் மூலம் அவர் எப்படி அல்லாஹ்விற்கு இழுக்கை கொண்டு வந்திருக்கிறார் என்பதையும் காண்போம்.
இத்ரிஸ் எழுதியது:
//
Salam aleikum,
No, its not about Mirza Ghulam, the Jews knew only one Ahmed from "ancient days" and in their hope they called him Messiah by which they undestood the Last Prophet of God who will establish the kingdom of God on earth (Islam). The Hebrew term מָשִׁיחַ (moshiach) means "anointed." In Biblical Hebrew, this expression precisely was bestowed on a person who had attained a position of nobility, greatness, someone who acquired a high status of authority. In Rabbinic literature the title Moshiach is reserved for the chosen leader who will be a savior to Israel in the Last Times. That long awaited Messiah in Jewish eyes is not Jesus (pbuh) as some could argue, since this Messiah was to be a powerful Messenger, a warrior who will take victory over all his enemies.
Take care,
Ahmed
//
இதிரிஸ் என்பவர், ஜோஹர் என்ற புத்தகத்தில் அஹ்மத் என்ற வார்த்தை வருகிறது, அது முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு என்று கூறினார். இதற்கு நாம் முதலாவது மறுப்பை முந்தைய கட்டுரையில் கொடுத்துள்ளோம். இவரது பதிவைக் கண்டு, இன்னொரு முஸ்லிம் சகோதரர், அந்த அஹ்மத் என்பது "மிர்சா குலாம் அஹ்மத் (அஹ்மதிய்யா இஸ்லாம்)" என்பவராக இருக்கலாம் இல்லையா? என்று திரும்ப கேள்வி கேட்டார். இதற்கு இத்ரிஸ் மேற்கண்டவிதமாக பதிலைக் கொடுத்துள்ளார்.
இவர் கொடுத்த பதில் எப்படி அல்லாஹ்வை சிலுவையில் அறைகிறது என்பதை இப்போது காண்போம்.
இத்ரிஸ் எழுதியது:
// No, its not about Mirza Ghulam, the Jews knew only one Ahmed from "ancient days" and in their hope they called him Messiah by which they undestood the Last Prophet of God who will establish the kingdom of God on earth (Islam).//
யூதர்களுக்கு ஒரே ஒரு அஹ்மத் என்பவரை மட்டுமே தெரியுமாம்! இத்ரிஸ் கூறுகிறார். இவர் யூத புத்தகங்களை படித்துள்ளாரா? குறைந்தபட்சம் பழைய ஏற்பாட்டையாவது படித்திருந்திருப்பாரா? யூதர்கள் எதிர்ப்பார்க்கும் மேசியா என்பவரைப் பற்றி அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இவருக்குத் தெரியுமா?
யூதர்கள் எதிர்ப்பார்க்கும் மேசியா, உலகில் தேவனுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பாராம், அது தான் இஸ்லாம் என்று இத்ரிஸ் சொல்கிறார். இஸ்லாம் என்ற கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால், எல்லாம் இப்படித் தான் தெரியும் முஸ்லிம்களுக்கு.
இத்ரிஸ் எழுதியது:
//The Hebrew term מָשִׁיחַ (moshiach) means "anointed." In Biblical Hebrew, this expression precisely was bestowed on a person who had attained a position of nobility, greatness, someone who acquired a high status of authority.//
யூதர்களின் வேத விஷயங்களை நன்கு அறிந்தவர் போல பேசுகின்றார் இத்ரிஸ்.
எப்படியாவது முஹம்மது பற்றிய முன்னறிவிப்பை புகுத்திவிடவேண்டுமென்று பல விவரங்களை விட்டுவிட்டார் இவர்.
முதலாவதாக, யூதர்கள் எதிர்ப்பார்க்கும் மேசியாவிற்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதி "அவர் தாவீது இராஜா வம்சத்தில் பிறப்பவராக இருப்பார் என்பதாகும்."
இரண்டாவதாக, மேசியா யூதர்களுக்கு விடுதலை அளிப்பார் என்று யூதர்கள் எதிர்ப்பர்த்தார்கள்.
இந்த இரண்டு தகுதிகளும் முஹம்மதுவிற்கு இல்லை. முஹம்மது யூத வம்சத்தில் தாவீது வழித்தோன்றலாக வந்தவர் அல்ல. இதனை முஸ்லிம்களும் ஒப்புக்கொள்வார்கள்.
எனவே, இத்ரிஸ் போன்றவர்கள் எப்படிப்பட்ட பொய்களைச் சொன்னாலும், மேலோட்டமாக அவர்களின் வரிகளை ஆய்வு செய்தால், உண்மை விளங்கிவிடும்.
பார்க்க:
- விக்கீபீடியா - en.wikipedia.org/wiki/Messiah_in_Judaism
- மேசியா எபிரேய பதம் - biblehub.com/hebrew/4899.htm
- மேசியா யார்? யூத இணைய நூலகம் - www.jewishvirtuallibrary.org/messiah
இத்ரிஸ் எழுதியது:
//In Rabbinic literature the title Moshiach is reserved for the chosen leader who will be a savior to Israel in the Last Times.//
இவரது கூற்றுப்படி, கடைசி காலத்தில் இஸ்ரேல் மக்களுக்கு உதவியாக மேசியா வருவார். அவர் வந்து இஸ்ரேல் மக்களுக்காக போரிடுவார், அதாவது யூதர்களின் எதிர்களோடு போரிடுவார். இத்ரிஸ் சகோதரின் வரிகளில் உள்ள விபரீதங்கள் புரிகிறதா உங்களுக்கு?
இயேசு மேசியாவாக இருந்தால்:
முஸ்லிம்கள், யூதர்களை எதிரிகளாக பார்க்கிறார்கள். ஆக, முஸ்லிம்கள் தான் இஸ்ரேல் நாட்டவரின் எதிரிகள். இவர்களோடு போரிட மேசியா வருவார். அவர் வந்து முஸ்லிம்களை அழித்து, இஸ்ரேலர்களை காப்பார். இதைத்தான் இத்ரிஸ் மேற்கண்ட வரியில் சொல்கிறார். இவர் சுயநினைவோடு எழுதுகின்றாரா அல்லது போதையில் எழுதுகின்றாரா என்று தெரியவில்லை? இஸ்லாமின் படி, உலக கடைசியில் வரப்போகிறவர், இயேசு ஆவார். இயேசு வந்து யூதர்களுக்கு உதவி செய்வார் என்றுச் சொல்வது, இஸ்லாமை தகர்க்கும் ஒன்றாக இருக்கிறதே! (இதற்காகத்தான் நான் சொல்கிறேன், "முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் பேசாதீர்கள், எழுதாதீர்கள், மறுத்தால், அது உங்களுக்கே பிரச்சனையாக மாறும்").
முஹம்மது மேசியாவாக இருந்தால்:
மேற்கண்ட வரியில், "முஹம்மதுவை மனதில் வைத்துத் தான் இத்ரிஸ் எழுதினார்" என்று முஸ்லிம்கள் சொன்னால், இது இன்னும் பிரச்சனையாக மாறும். அதாவது முஹம்மது இஸ்ரேலர்களுக்கு உதவியாக, அவர்களின் எதிரிகளோடு போரிடுவார் என்று மேற்கண்ட வரிகள் சொல்கின்றன என்று அர்த்தமாகிறது.
இஸ்லாமின் படி, முஹம்மது உலகின் கடைசியில் வரமாட்டார், இயேசு தான் வரப்போகிறார். முஹம்மது தான் கடைசி நாட்களில் வருவார் என்று இத்ரிஸ் சொன்னால், இவருக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிறது.
இத்ரிஸின் வரிகளை எந்த வகையில் படித்தாலும் சரி, அது இஸ்லாமுக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கிறது. இதை இத்ரிஸ் அறிவாரா?
இத்ரிஸ் எழுதியது:
//That long awaited Messiah in Jewish eyes is not Jesus (pbuh) as some could argue, since this Messiah was to be a powerful Messenger, a warrior who will take victory over all his enemies.//
குர்-ஆனுக்கு முரண்படும் இத்ரிஸ்:
இவர் எழுதியவைகளை கூர்ந்து படித்துப் பாருங்கள். யூதர்கள் இயேசுவை மேசியா (கிறிஸ்து) என்று நம்புவதில்லை, இது உண்மை தான். ஆனால், குர்-ஆன் நம்புகிறதே! இயேசு தான் மேசியா (மஸீஹா) என்று பல இடங்களில் குர்-ஆன் குறிப்பிடுகின்றது. இதைச் சொல்லி, அதைச் சொல்லி, முஹம்மதுவை காப்பாற்றுகிறேன் என்றுச் சொல்லி, கடைசியாக குர்-ஆனையே பொய்யாக்கிவிட்டார் இத்ரிஸ், சபாஷ், நல்ல முயற்சி!
குர்-ஆன் இயேசுவை மேசியா(மஸீஹ்) என்று அழைக்கும் வசனங்கள்:
3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் . . . .
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . . .
4:172. (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் . . . .
5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ". . . .
5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, . . . .
9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; . . . .
9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; . . . . (முஹம்மது ஜான் தமிழாக்கம்).
குர்-ஆன் முழுவதிலும், ஒரு இடத்தில் கூட முஹம்மது ஒரு மஸீஹா என்று அல்லாஹ் சொல்லப்படவில்லை.
முடிவுரை:
இத்ரிஸ் சொல்வது உண்மையா? (அ) குர்-ஆன் சொல்வது உண்மையா?
இத்ரிஸ் சொல்கிறார், "யூதர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும் மஸீஹா முஹம்மது ஆவார்".
குர்-ஆன் சொல்கிறது, "இயேசு தான் மஸீஹா, அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டார்". யார் உண்மைச் சொல்கிறார்கள்? குர்-ஆனா? இத்ரிஸா? முஸ்லிம்கள் முடிவு செய்யட்டும்.
இத்ரிஸ் சொல்வதை நாங்கள் ஏற்கத்தயார். அதாவது யூதர்கள் எதிர்ப்பார்க்கும் மஸீஹா முஹம்மது என்பதை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் அதன் பிறகு இஸ்லாம் என்ற ஒன்று உலகில் இருக்குமா? அல்லது இருக்கவேண்டிய அவசியம் இருக்குமா? என்பது தான் முஸ்லிம்களால் பதில் சொல்லமுடியாத கேள்வி!
இத்ரிஸுக்கு மறுப்புக்கள் தொடரும் . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக