(முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்)
முன்னுரை:
இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:
- பாகம் 1: முஹம்மது செய்தது போன்று செய்கிறார்களா ஹமாஸ் தீவிரவாதிகள்?
- பாகம் 2: அல்லாஹ் அனுமதித்தான், ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு ஏன் கோபம் வருகிறது?
- பாகம் 3: காஸாவுக்கு ஒரு நீதி, இஸ்ரேலுக்கு வேறு ஒரு நீதியா? சிங்கத்தின் கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட நரி
- பாகம் 4: காஸாவின் அழிவிற்கு மூலக்காரணம் ஹமாஸ்
- பாகம் 5: கலிஃபா உமர் ஏன் எருசலேமை பிடித்தார்? அவரின் இந்த செயலுக்காக, உலக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்
- பாகம் 6: யூதர்கள் முஸ்லிம்கள் போல, கிறிஸ்தவர்கள் "இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமை" உரிமை கொண்டாடுவதில்லை
இன்றைய கட்டுரையில் முஸ்லிம்கள் கேட்கும் ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை காண்போம். ஒரு கிறிஸ்தவ சகோதரர் "எனக்கு ஒரு வீடியோவை அனுப்பினார்", அதில் ஒரு முஸ்லிம் சகோதரர் கிறிஸ்தவர்களை திட்டி ஒரு முக்கியமான கேள்வியை கேட்கிறார். அந்த கேள்வியை இங்கு தருகிறேன், அதற்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.
அந்த வீடியோவின் யூடியூப் லிங்க் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் அந்த கேள்வியை நான் தருகிறேன், அதன் படத்தைத் தருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த வீடியோவின் யூடியூப் லிங்க கிடைத்தால் தெரிவிக்கவும்.
முஸ்லிம்களின் கேள்வி இதுதான்: யூதர்கள் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள். உலகத்திலேயே தங்கள் கடவுளை கொன்ற மக்களை (யூதர்களை) தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிறிஸ்துவர்கள். இவர்களைப்போல முட்டாள்கள் இருக்கமாட்டார்கள்.
மேலும் தற்காலத்தில் சில இடங்களில் இஸ்ரேல் நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக யூதர்கள் செல்லும் போது, காரி உமிழ்ந்துவிட்டு, திட்டிவிட்டுச் செல்கிறார்கள். ஒரு சில யூதர்கள் செய்யும், இந்த செயலை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், முஸ்லிம்கள் செய்யும் தீவிரவாத செயல்கள் கூட ஒரு சிலரே செய்வதினால், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றுச் சொன்னால், அது சரியாக இருக்குமா? இல்லையல்லவா? எனவே இதனை ஒதுக்கிவிட்டு, மேலே சொன்ன கேள்விக்கு பதிலைக் காண்போம்.
முஸ்லிம்கள் யூதர்களை வெறுக்கிறார்கள், ஏன் கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கவில்லை?
முஸ்லிம்களின் கேள்வியும் குழப்பமும் இது தான்.
முஸ்லிம்களாகிய நாங்கள் யூதர்களை வெறுக்கிறோம். ஏன் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுப்பதில்லை? அதுமட்டுமல்ல. தங்கள் தெய்வத்தையே கொலை செய்த யூதர்களை ஏன் கிறிஸ்துவர்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்?
முக்கியமாக பார்க்கும்போது "இந்த இஸ்ரேல் ஹமாஸ் சண்டையின் போது கூட" கிறிஸ்துவர்கள் இஸ்ரவேலின் பக்கமே நின்று அதனை ஆதரிக்கிறார்கள். தங்களை வெறுக்கிற யூதர்களை ஏன் கிறிஸ்துவர்கள் ஆதரிக்கிறார்கள்? இவர்களுக்கு அறிவு இல்லையா?
இதற்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்துக் கொடுக்கப்போகிறேன்.
- பாகம் 1: முதலாவது பாகத்தில். கிறிஸ்தவர்கள் ஏன் யூதர்களை வெறுப்பது இல்லை? அதற்கு பதிலாக ஏன் அவர்களை ஆதரித்து கொண்டும் அவர்கள் மீது அன்பு செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பொதுவாகவும், பைபிளிலிருந்தும் காண்போம்.
- பாகம் 2: இரண்டாவது பாகத்தில். ஒரு வேளை முஸ்லிம்கள் சொல்வது போன்று. கிறிஸ்தவர்கள் "சில நியாயமான காரணங்களை" வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மக்களை (யூதர்களை) வெறுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்த்தால். அதே போல நியாயமான காரணங்களை வைத்துக்கொண்டு கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை தான் அதிகமாக வெறுக்க வேண்டும். இதற்கான காரணங்களை பொதுவாகவும், குர்ஆனிலிருந்தும் பைபிளிலிருந்தும் காண்போம்.
இந்த இரண்டு பாகங்களையும் படித்து, கிறிஸ்தவர்களிடம் கேள்வி கேட்கும் முஸ்லிம்களுக்கு ஒரு தெளிவு உண்டாகும். இது மட்டுமல்ல, மற்ற இந்துக்கள், நாத்தீகர்களுக்கும் "கிறிஸ்தவர்களின் செயல்பாடுகள் மீது சரியான ஒரு புரிதல் உண்டாகும்".
பாகம் 1: இயேசுவை கொன்ற யூதர்களை இன்னும் ஏன் கிறிஸ்தவர்கள் வெறுக்காமல் ஆதரிக்கிறார்கள்? முஸ்லிம்களின் குழப்பமும், கிறிஸ்தவர்களின் பதிலும்
HATE – வெறுப்பு - பொதுவாக ஏன் மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள்?
பொதுவாக, நாம் ஒருவரை வெறுக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அதற்கு கீழ்கண்ட மூன்று காரணங்களைச் சொல்லலாம்:
- அந்த 'நபர்' நமக்கு ஒரு தீமை செய்திருப்பார் (அல்லது)
- நம் கருத்துக்கு எதிராக பேசியிருப்பார்/நடந்துக் கொண்டிருப்பார் (அல்லது)
- அந்த நபர் மற்றவர்களிடம் அநீதியாக நடந்துக்கொள்ளும் போது, அதனை நாம் பார்த்துயிருந்திருப்போம்.
ஆனால் இன்னொரு காரணமும் உள்ளது, அது என்னவென்றால், "நான் அந்த நபரை வெறுப்பதினால், நீயும் அந்த நபரை வெறுக்கவேண்டும்" என்று மற்றவர்களை மூலைச்சலவை(பலவீனமானவர்களின் மனங்களை மாற்ற) செய்ய அனேகர் விரும்புவார்கள்.
பொதுவாக குடும்ப சொந்தங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் இந்த வகையான 'ஒரு செயலை பார்க்கமுடியும்', அதாவது 'நம் குடும்பத்துக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆகாது, எனவே, எங்கள் குடும்பத்தில் பிறந்த நீங்களும் (பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்) அவர்களோடு சம்மந்தம் கலக்கக்கூடாது, அவர்களை சொந்தங்களாக பாவித்து, நல்ல உறவு பேணக்கூடாது, அவர்களை வெறுத்துக்கொண்டே இருக்கவேண்டும்' என்று நம் தாத்தா/பாட்டி மற்றும் சொந்தங்கள் சொல்வதை நாம் கேட்டுயிருப்போம் (பரம்பரை பகை என்றும் சொல்லலாம்). இதே போல் நண்பர்களில் சிலரும் "அவன் எனக்கு எதிரி, எனவே நீயும் அவனிடம் பேசக்கூடாது" என்று சொல்வதை பார்க்கமுடியும்.
இந்த வகையில் உள்ள முஸ்லிம்கள் தான், இஸ்ரேலர்களை "கிறிஸ்தவர்கள்" வெறுக்கவேண்டுமென்று மூலைச்சலவை செய்ய விரும்புகிறார்கள்.
இது நடக்குமா? நடக்காது!
ஏன் நடக்காது?
ஏன் கிறிஸ்தவர்கள் யூதர்களை ஆதரிக்கிறார்கள்/வெறுப்பதில்லை என்பதற்கு 7 காரணங்களை காண்போம்.
காரணம் 1: அன்று இயேசு யூதர்களை மன்னித்துவிட்டார், ஆகையால், கிறிஸ்தவர்கள் யூதர்களை மன்னிக்கவேண்டும், வெறுக்கக்கூடாது
இயேசுவை அன்று யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை தான், அவர்கள் அவர் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தி, ரோம அரசு மூலமாக தண்டனையை வாங்கிக்கொடுத்து, சிலுவையில் அறையப்பட வைத்தவர்களும் அன்றைய யூதர்கள் தான், இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
ஆனால், இயேசு சிலுவையில் தொங்கும் போது, "அவர்களை மன்னித்துவிட்டார்" என்ற விவரத்தை புதிய ஏற்பாடு குறிப்பிட மறக்கவில்லை.
லூக்கா 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
- இயேசுவே யூதர்களை மன்னித்துவிட்டார், நாம் ஏன் அதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்?
- பாதிக்கப்பட்ட இயேசுவே யூதர்களை மன்னித்துவிட்டபடியால், உண்மையாக இயேசுவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள், யூதர்களை வெறுக்க எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லையே.
- யூதர்களை மட்டுமல்ல, உலகில் யாரையும் மன்னிக்காமல் இருக்க உண்மையான கிறிஸ்தவர்களுக்கு உரிமையில்லை என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் உணரவேண்டும்.
ஒருவர் கீழ்கண்டவாறு சொல்கிறார்: கிறிஸ்தவர்களை பொறுத்தமட்டில் இது உண்மையும் கூட.
- If you hate Jews, you hate Jesus, too!
- நீங்கள் யூதர்களை வெறுத்தால், நீங்கள் இயேசுவையும் சேர்த்து வெறுத்ததாக பொருள்!
இது யூதர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த மக்களுக்கும் பொருந்தும், ஒரு கிறிஸ்தவன் இந்துக்களை, முஸ்லிம்களை, நாத்தீகர்களை வெறுத்தால், அவர்கள் இயேசு வெறுத்ததாக அர்த்தம். இயேசு மன்னித்தது போல கிறிஸ்தவர்களும் அனைவரையும் மன்னிக்கவேண்டும்.
ஊழியர் பில்லி கிரகாம் அவர்களின் மகள் அன்னே கிரஹாம் லோட்ஜ் அவர்கள் கூறிய ஒரு வரியையும் இங்கு தருகிறேன்:
If Jesus forgave those who nailed Him to the cross, and if God forgives you and me, how can you withhold your forgiveness from someone else? - By Anne Graham Lotz
இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார், தேவன் உங்களையும் என்னையும் மன்னித்தார், எனவே நீங்கள் எப்படி மற்றவர்களை மன்னிக்காமல் இருக்கமுடியும்? அன்னே கிரஹாம் லோட்ஜ்
ஆக, இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்த யூதர்களை ஏன் கிறிஸ்தவர்கள் வெறுக்கவில்லை என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்டால், கிறிஸ்தவர்களின் பிரதாண காரணம், 'இயேசு யூதர்களை மன்னித்தார், எனவே நாங்களும் மன்னிக்கிறோம்' என்பது தான்.
காரணம் 2: அவர்கள் அறியாமையினால் தம்மை கொன்றதாக இயேசு கூறுகிறார்
இரண்டாவதாக, இயேசு யூதர்களை மன்னித்தது மட்டுமல்லாமல், "அவர்கள் அதனை அறியாமையினால் செய்தார்கள்" என்றும் சொல்கிறார்.
லூக்கா 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
அதெப்படி? யூதர்கள் "இயேசுவை அறியாமையில் கொன்றார்கள்" என்று அவர் சொல்கிறார்?
இதனை புரிந்துக்கொள்ள, ஆதியாகமத்திலிருந்து தொடங்கிய "தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை" புரிந்துக்கொள்ளவேண்டும்
இயேசு தரும் இரட்சிப்பில், யூதர்களின் பங்கு:
- தேவன் தம் இரட்சிப்பின் திட்டத்தை ஆதிகால முதல் நிர்ணயித்தார். ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டாகிய "பாவத்திலிருந்து மனுகுலத்தை" மீட்க தேவன் திட்டம் தீட்டினார்.
- ஆதியாகமம் 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
- தம் மேசியாவை அனுப்ப, தேவன் ஆபிரகாமை தெரிவு செய்தார், யூதர்களை பல்லாண்டு காலம் பாதுகாத்து வந்தார்.
- தம் வார்த்தையாகிய மேசியா இயேசுவாக பூவுலகில் அனுப்பினார், அவர் உலகத்தின் பாவங்களை சுமக்கும் ஒரு பரிசுத்த ஆட்டுக்குட்டியாக, தண்டிக்கப்படவேண்டியிருந்தது.
- தேவனின் இந்த இரட்சிப்பின் திட்டத்தில், தம்மை அறியாமையினால், யூதர்கள் உதவி செய்துவிட்டார்கள்.
- யூதர்கள் இயேசுவை சிலுவையில் "அறையாமல்" இருந்திருந்தால்! மனுக்குளத்திற்கு இரட்சிப்பு கிடைத்திருக்காது.
- அன்றைய யூதர்கள் நினைத்தார்கள், தங்கள் அதிகாரத்திற்கும், மதத்திற்கும் பங்கம் விளைவித்த இயேசு என்ற நபரை நாங்கள் சிலுவையில் அறைந்துவிட்டோம் என்று, ஆனால், அவர்கள் தங்களை அறியாமல், தேவனுடைய இரட்சிப்பிற்கு உதவி செய்துவிட்டார்கள்.
- இதனால் தான் இயேசு சிலுவையில் தொங்கும் போது, "பிதாவே இவர்களை மன்னியுங்கள், இவர்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்தார்கள்" என்று சொல்லி மன்னித்தும் விட்டார்.
எனவே, கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கக்கூடாது, ஏனென்றால், அவர்கள் குரோதத்தினாலும், பொறாமையினாலும் அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தாலும், அதன் மூலம் நமக்கு இரட்சிப்பும் பாவ மன்னிப்பும் கிடைத்ததால், கிறிஸ்தவர்கள் யூத இனத்தை வெறுக்கமாட்டார்கள்.
குறிப்பு: இயேசு சிலுவையில் மரிப்பதற்கு பதிலாக, ஒரு எதிர்பாராத விபத்து மூலமாக மரித்திருந்தால், நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்காது.
காரணம் 3: கிறிஸ்துவின் அடிப்படை போதனை "அன்பும் மன்னிப்பும்", எனவே, கிறிஸ்தவர்கள் யூதர்களை நேசிக்கிறார்கள், வெறுப்பதில்லை
மூன்றாவது காரணம் என்னவென்றால், "இயேசுவின் அடிப்படை போதனையே அன்பும் மன்னிப்பும் தான்", எனவே கிறிஸ்தவர்கள் இயேசுவின் வழிகாட்டுதலில் வாழவேண்டி அழைக்கப்பட்டு இருப்பதினால், யூதர்களை மன்னித்துவிட்டார்கள்.
முஹம்மதுவின் வழிகாட்டுதலின் படி நடப்பவரே "ஒரு உண்மையான முஸ்லிம்" என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இதே போன்று இயேசுவின் வழிகாட்டுதலின் படி நடப்பவரே "ஒரு உண்மையான கிறிஸ்தவர்".
ஒரு நபரைப் பார்த்து, "இவர் இயேசுவின் சீடர்" என்று எப்படி அறிவது? இதற்கான பதிலை இயேசு கூறியுள்ளார்:
யோவான் 13:34-35
34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
இயேசு கிறிஸ்தவர்களுக்கு அன்பு செலுத்த கட்டளையிட்டுள்ளார், வெறுப்பதற்கு அல்ல. நாம் யூதர்களை வெறுத்துக் கொண்டு, தேவனை நேசிக்கிறோம் என்று சொல்லமுடியாது. யூதர்களை மட்டுமல்ல, எந்த மக்களையும் நாம் வெறுத்து, தேவனை நேசிக்கிறோம் என்று சொல்லமுடியாது.
கண்களால் காண்கின்ற மனிதன் மீது அன்பு செலுத்தாதவன், எப்படி காணாத தேவன் மீது அன்பு செலுத்தமுடியும்? என்று கேள்வி எழுப்புகிறது புதிய ஏற்பாடு!
I யோவான் 4: 20. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
ஒரு சில கிறிஸ்தவர்கள் இதனை பின்பற்றாமல் இருப்பதினால் தான், சிலவேளைகளில் செய்திகளில் கிறிஸ்தவத்தின் பெயர் அடிபடுகிறது. ஆனால், பைபிளின் சத்தியத்தை யாராளும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
பைபிளின் இந்த "அன்பும் மன்னிப்பும்" என்ற போதனையை பின்பற்றுவதினால் தான் "கிறிஸ்தவர்கள் யூதர்களையும், முஸ்லிம்களையும், இன்னும் உலகத்தில் பிறந்த எந்த மனிதனையும், பாகுபாடு இன்றி நேசிக்கிறார்கள்".
காரணம் 4: யூதர்கள் தேவன் ஆசீர்வதித்த ஆபிரகாமின் வித்தாக இருக்கிறார்கள், அவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் வெறுக்கமுடியும்
நான்காவதாக, யூதர்களை/இஸ்ரேலர்களை ஏன் கிறிஸ்தவர்கள் நேசிக்கிறார்கள்? என்ற கேள்வியை முஸ்லிம்கள் கேட்டால், "யூதர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருப்பதினால், கிறிஸ்தவர்களின் மனதில் ஏதோ ஒரு மூலையில், வெளியே சொல்லமுடியாத ஒரு அன்பும் பாசமும் ஒட்டியிருக்கிறது" என்று நான் சொல்லுவேன்.
விசுவாசத்தின் தகப்பன் என்ற பட்டப்பெயரோடு திகழும் ஆபிரகாம் என்ற பழைய ஏற்பாட்டு நபர் பற்றி அறியாத கிறிஸ்தவர் இருக்கமாட்டார்.
இந்த ஆபிரகாமைப் பற்றி தேவன் என்ன சொல்லியுள்ளார் என்று கவனித்துப் பாருங்கள்:
ஆதியாகமம் 12:2-3
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
மேலும், பாலாக் என்ற அரசன் "யூதர்களை" சபிக்கும் படி ஒரு "பொய்யான தீர்க்கதரிசியோடு" கூலி பேசி கொண்டு வருகிறான், ஆனால், அந்த பொய்யான தீர்க்கதரிசி இஸ்ரேலர்களை சபிக்க முற்படும் போது, கர்த்தர் அதனை தடுத்தார், சாபத்திற்கு பதிலாக ஆசீர்வாதத்தை சொல்லும் படி செய்தார்.
இது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாகும், இதனை பழைய ஏற்பாட்டின் எண்ணாகமம் புத்தகத்தில் படிக்கலாம்:
எண்ணாகமம் 23:7-12
7. அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
8. தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
9. கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.
10. யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.
11. அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.
12. அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
ஆபிரகாமுக்கும் அவரது சந்ததிக்கும் கர்த்தர் சொன்ன வாக்கு, "உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்". இந்த ஒரு வசனத்தை படிக்கும் கிறிஸ்தவர்கள் "எப்படி யூதர்களை சபிப்பார்கள், எப்படி வெறுப்பார்கள்?" கிறிஸ்தவர்களின் வாயினின்று எப்படி சாபத்தையும் வெறுப்பையும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கலாம்?
சாபம் என்ற விஷயத்துக்கு வந்தால், கிறிஸ்தவர்கள் "இஸ்ரேலர்களை மட்டுமல்ல, முஸ்லிம்களையும், இதர மக்களையும் சபிக்கக்கூடாது" என்று பைபிள் கட்டளையிடுகிறது. இதர மக்களையே கிறிஸ்தவர்கள் சபிக்கக்கூடாது என்று கட்டளையிடும் போது, ஆபிரகாமின் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள அவரது சந்ததியை எப்படி கிறிஸ்தவர்கள் சபிக்கமுடியும்?
இதுமட்டுமல்ல, அவர்களை சபிப்பவர்களை கர்த்தர் சபிப்பாராம்! எந்த கிறிஸ்தவனாவது கர்த்தரின் சாபத்திற்கு ஆளாக விரும்புவானா? ஆனால், முஸ்லிம்களாகிய நீங்கள் "கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கவேண்டுமென்றும், சபிக்கவேண்டுமென்றும் விரும்புகிறீர்கள்"? இது நடக்குமா?
சாத்தான் மட்டும் தான் "மக்கள் கர்த்தரின் சாபத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும் என்று விரும்புவான்" இதைத்தான் இன்று முஸ்லிம்களும் விரும்புகிறார்கள்.
எச்சரிக்கை:இஸ்ரேலர்களை சபிக்கும் முஸ்லிம்கள் "யெகோவா தேவனாகிய கர்த்தரால் சபிக்கப்பட்டவர்கள்"!
மேலே கண்ட ஆதியாகமத்தின் வசனத்தின்படி, யார் ஆபிரகாமின் சந்ததியை சபிப்பானோ, அவன் மீது கர்த்தரின் சாபம் இருக்கும், அவன் கதை இதோடு முடிந்தது.
ஆக, யூதர்களை சபிக்கும் முஸ்லிம்கள் பைபிளின் தேவனால் சபிக்கப்பட்டவர்கள். பைபிளின் தேவனைத் தான் முஸ்லிம்கள் "அல்லாஹ்" என்று அழைப்பதாக சொல்கிறார்கள், இதன் படி பார்த்தால், "யூதர்களை சபிக்கும் முஸ்லிம்கள், அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்"
இதனால் தான் என்னவோ, முஸ்லிம்கள் அதிகமாக அவதிக்கு உள்ளாகிறார்கள். இதுமட்டுமா, முஹம்மது ஒரு யூதப்பெண்ணால் விஷம் வைக்கப்பட்டு மரித்தார், கலிஃபாக்களும் சரியான ஒரு மரணத்தை சந்திக்கவில்லை (அபூ பக்கார் தவிர), முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அலியின் பிள்ளைகளும், அதாவது முஹம்மதுவின் பேரப்பிள்ளைகளும், போர்க்களத்தில் ஒரு கோரமான நிலையில் கொல்லப்பட்டார்கள். இவைகளெல்லாம், "அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது இருப்பதினால் தானோ!" என்ற கேள்வி எழுகிறது.
இன்று காஸா போன்ற பகுதியில் உள்ள மக்களும், ஹமாஸ் தீவிரவாதிகள் ஒவ்வொருவரும் அழிக்கப்பட்டு இருப்பதற்கும் "ஆதியாகமத்தின் 12:2,3 வசனங்கள் காரணமாக இருக்குமோ"? காதுள்ளவன் கேட்கக்கடவன், அறிவுள்ளவன் சிந்திக்கக்கடவன்.
நான் என் அன்பு முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எச்சரிப்பது என்னவென்றால், "நீங்கள் உலகை படைத்த இறைவனாகிய யெகோவா தேவனோடு மோதுவதற்கு தயாராகாதீர்கள், யூதர்களை வெறுக்காதீர்கள், சபிக்காதீர்கள், கர்த்தரின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்" என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
முஸ்லிம்களாகிய நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, கிறிஸ்தவர்கள் மட்டும் யெகோவா தேவன் ஆசீர்வதித்த மக்களை ஆசீர்வதிப்பார்கள், சபிக்கமாட்டார்கள் என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
கிறிஸ்தவர்களே, அன்று சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போன்று, இன்று முஸ்லிம்கள் உங்களை வஞ்சிக்க பார்க்கிறார்கள், எனவே முஸ்லிம்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
காரணம் 5: அவர்கள் ஒலிவமரம், நாம் ஒட்ட வைக்கப்பட்ட காட்டு ஒலிவமர கிளைகள்
கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்ரேலை நேசிக்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பைபிளிலிருந்து இன்னொரு காரணத்தைக் காண்போம். இது ஒரு கிறிஸ்தவ இறையியல் காரணமாக காணப்படுகிறது.
முதலாவது இவ்வசனங்களை படிக்கலாம்:
ரோமர் 11: 17-18
17. சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
18. நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.
தேவனுக்கு ஒரு தோட்டம் இருந்தது, அதில் அவர் இஸ்ரேல் என்ற ஒலிவமரத்தை நட்டு அதை பராமரித்து வந்தார். அந்த மரத்தின் 'கீழ்படியாத கிளைகளை வெட்டிப்போட்டார்'. காட்டிலிருந்த ஒலிவ மரமாகிய நம் (யூதரல்லாதவர்கள்) மீது தேவன் இரக்கம் பாராட்டினார். இதனால், அவர் "நம்மை கொண்டு வந்து அந்த வெட்டப்பட்ட கிளைகளோடு ஒட்டவைத்து, அதையும் பராமரித்து வந்துக்கொண்டு இருக்கிறார்".
வேறு வகையில் கூறுவதானால், ஒரு ராஜாவின் வீட்டில் இருக்கும் இளவரசர்கள் (யூதர்கள்) தவறு செய்து கீழ்படியாத போது, ராஜா அவர்களை சிறைச்சாலையில் அடைத்து சீர்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதே நேரத்தில், எங்கேயோ ஒரு காட்டுக்குள் இருந்த அனாதைகளாகிய நம்மை(யூதரல்லாத கிறிஸ்தவர்களை) கொண்டு வந்து, அந்த இளவரசர்கள் வாழ்ந்த மாளிகையில் வாழவைத்து அழகு பார்த்தார் அந்த ராஜா.
இப்போது, இளவரசர்கள் இடத்தில் வாழும் நாம், சிறைச்சாலையில் இருக்கும் உண்மையான இளவரசர்களை கேவலமாக பார்த்து, அவர்களை வெறுத்து அந்த ராஜாவிற்கு கீழ்படியாமல் போனால் என்ன நடக்கும்?
தன் சொந்த பிள்ளைகள் தவறு செய்யும் போது, அவர்களை தண்டிக்க தயங்காத அந்த ராஜா, நம் பரிதாப நிலையைப் பார்த்து, அன்பு கூர்ந்து நம்மை "தம் பிள்ளைகளின் இடத்தில் உட்காரவைத்தவர்', நாம் கீழ்படியாமல் தவறு செய்தால், தண்டிக்காமல் விட்டுவிடுவாரா? நிச்சயமாக இல்லை. அந்த ராஜாவினிடத்தில் எந்த பட்சபாதமுமில்லை, எல்லோருக்கும் ஒரே நீதி தான்.
இதைத் தான், மேற்கண்ட வசனத்தில் புதிய ஏற்பாடு தெளிவாக " நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள் " என்று எடுத்துக் காட்டுகிறது.
இந்த வசனத்தில் வரும் வேர் தான் "இயேசுக் கிறிஸ்து". அந்த வேர் தான் 'இஸ்ரேல் என்ற மரத்தையும் சுமக்கிறது, அதன் கிளைகளில் ஒட்ட வைக்கப்பட்ட நம்மையும் சுமக்கிறது'. எனவே கிறிஸ்தவர்கள் இஸ்ரேலர்களுக்கு விரோதமாக பெருமைப்பாராட்டக்கூடாது.
இதுவரை பார்த்த விவரங்களின்படி, இஸ்ரேலர்களுக்கு விரோதமாக பெருமைப்பாராட்ட கிறிஸ்தவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எல்லாம் இயேசுக் கிறிஸ்துவின் கிருபை என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாழவேண்டும்.
ஒன்னொரு ஒரு சுருக்கமான விவரத்தை இங்கு கொடுக்கிறேன் (A=B, B=C, A=C):
- (A) கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டை கொண்டாடுகிறார்கள் கனப்படுத்துகிறார்கள், மற்றும் அதற்கு கீழ்படிகிறார்கள்.
- (B) புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் கதாநாயகர்களை, தீர்க்கதரிசிகளை கொண்டாடுகிறது (உதாரணத்திற்கு: எபிரேயர் புத்தகத்தின் 11வது அத்தியாயத்தை படிக்கவும்). கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டு (யூதர்களின் குடும்ப) நபர்களை கொண்டாடுகிறார்கள், அவர்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஒருவரியில் சொல்வதென்றால், ஆபிரகாமுக்கு பிறகு வரும் பழைய ஏற்பாடு புத்தகங்கள் அனைத்தும் யூதர்களின் குடும்ப ஆள்பமும், குடும்ப சரித்திரமுமாகும்.
- (C) இப்படி இருக்க, கிறிஸ்தவர்கள் எப்படி, தங்கள் கதாநாயகர்களின் சந்ததிகளை அதாவது இஸ்ரேலர்களை வெறுக்கமுடியும்? லாஜிக் புரிகின்றதா?
சுருக்கமாக சொல்வதென்றால், எப்படி பார்த்தாலும் சரி, புதிய ஏற்பாட்டின் இறையியலின் படி பார்த்தாலும் சரி, கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கவோ, அவர்களை சபிக்கவோ எந்த ஒரு நியாயமான காரணமும் தெரிவதில்லை.
காரணம் 6: தற்கால உலகத்தின் நன்மைக்கு வழிவகுத்து, உதவி செய்யும் யூதர்களை எப்படி உலக மக்கள் வெறுக்கமுடியும்?
இந்த ஒரு காரணம் பைபிளுக்கு வெளியே உள்ள காரணமாகும். உலக மக்கள் அனைவரும், முஸ்லிம்களோடு சேர்த்து, இஸ்ரேலர்களுக்கு/யூதர்களுக்கு "நன்றி சொல்லவேண்டும்", முக்கியமாக 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டு யூதர்களுக்கு விசேஷித்த விதமாக நன்றி சொல்லவேண்டும்.
மருத்துவ துறையில் யூதர்கள் கண்டுபிடித்த மருந்துகள், மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கு யூதர்கள் கண்டுபிடித்த நோய் எதிர்ப்பு மருந்துகள், மற்றும் பல தற்கால உயிர்கொல்லி நோய்களுக்கு அவர்கள் கண்டுபிடித்த உபகரணங்கள் அனைத்தையும் பார்த்தால், தலை சுற்றுகிறது.
கீழ்கண்ட தொடுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய சாம்பிள் கணக்கின்படி, ஒவ்வொரு விஞ்ஞானி மற்றும் அவர் கண்டுபிடித்த மருந்து/மருத்துவ உபகரத்தினால், எத்தனைப் பேர் உயிர் காக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
- Jews Among the Greatest Scientific Life Savers (jinfo.org) JEWS LISTED AMONG THE CREATORS OF THE GREATEST LIFESAVING MEDICAL & SCIENTIFIC ADVANCES IN HISTORY (25% of listees, accounting for at least 50% of an estimated total of 5.6 billion lives saved)
- [1] Fritz Haber, Synthetic Fertilizer (Haber-Bosch process): (1/2) x 2.72 Billion = 1.36 Billion Lives Saved
- [3] Karl Landsteiner, Blood Transfusions (identification of blood groups): (1/2) x 1.16 Billion = 580 Million Lives Saved
- [4] Richard Lewisohn, Blood Transfusions (sodium citrate blood preservation method): (1/2) x 1.16 Billion = 580 Million Lives Saved
- [8] Abel Wolman, Chlorination of Drinking Water: (1/2) x 182 Million = 91 Million Lives Saved
- [11] Benjamin Rubin, Smallpox Eradication (bifurcated inoculation needle): (1/4) x 142 Million = 35.5 Million Lives Saved
- [12] Aaron Ismach, Smallpox Eradication (jet injector gun): (1/4) x 142 Million = 35.5 Million Lives Saved
- [16] Samuel Katz, Measles Vaccine: (1/8) x 124 Million = 15.5 Million Lives Saved
- [22] Sir Ernst Chain, Penicillin: (1/4) x 86 Million = 21.5 Million Lives Saved
- [26] David Nalin, Oral Rehydration Therapy for Cholera: (1/5) x 59 Million = 11.8 Million Lives Saved
- [28] Norbert Hirschhorn,Oral Rehydration Therapy for Cholera: (1/5) x 59 Million = 11.8 Million Lives Saved
- [30] David Sachar, Oral Rehydration Therapy for Cholera: (1/5) x 59 Million = 11.8 Million Lives Saved
- [32] Paul Ehrlich, Diphtheria and Tetanus Antitoxin: (1/3) x 42 Million = 14 Million Lives Saved
- [47] Alfred Sommer, Vitamin A Therapy: 8.5 Million Lives Saved
- [48] Baruch Blumberg, Hepatitis B Vaccine: (1/3) x 6.7 Million = 2.2 Million Lives Saved
- [49] Irving Millman, Hepatitis B Vaccine: (1/3) x 6.7 Million = 2.2 Million Lives Saved
- [55] Gertrude Elion, Rational Drug Design: (1/2) x 5.5 Million = 2.8 Million Lives Saved
- [73] Jacob Gershon-Cohen, Mammogram: (1/6) x 1.7 Million = 0.3 Million Lives Saved
- [77] Albert Salomon, Mammogram: (1/6) x 1.7 Million = 0.3 Million Lives Saved
- [83] Jonas Salk, Polio Vaccine: (1/4) x 1.1 Million = 0.3 Million Lives Saved
- [84] Albert Sabin, Polio Vaccine: (1/4) x 1.1 Million = 0.3 Million Lives Saved
- [93] John Robbins, Hib Vaccine for Bacterial Meningitis: (1/4) x 0.74 Million = 0.2 Million Lives Saved
- [94] Rachel Schneerson, Hib Vaccine for Bacterial Meningitis: (1/4) x 0.74 Million = 0.2 Million Lives Saved
- [95] Alexander Wiener, Rh Factor Discovery and Infant Exchange Transfusion for Rh Haemolytic Disease: (1/2) x 0.55 Million = 0.3 Million Lives Saved
- [96] Ronald Finn, Serum for Prevention of Rh Haemolytic Disease: (1/2) x 0.55 Million = 0.3 Million Lives Saved
- [101] Brian Druker, Gleevec Anti-Leukemia Drug: (1/2) x 0.18 Million = 0.1 Million Lives Saved
- [103] Henry Heimlich, Heimlich Maneuver: (1/2) x 0.05 Million = 0.03 Million Lives Saved
பல கோடிக் மக்கள் யூதர்களின் கண்டுபிடிப்பினால், உயிர் பிழைத்துள்ளார்கள் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்). இதே போல முஸ்லிம்களினால் 'உலக மக்களில் எத்தனை பேர் உயிர் பிழைத்துள்ளார்கள்' என்ற பட்டியலை தயாரிக்கமுடியுமா? இதே போல ஒரு பட்டியல் முஸ்லிம்கள் மூலமாகவும் உள்ளது, அது என்ன" 2001லிருந்து முஸ்லிம் தீவிரவாத வன்முறை செயல்களினால் உலகில் மரித்தவர்களின் எண்ணிக்கையாகும் (பார்க்க: Islam: The Politically Incorrect Truth (thereligionofpeace.com))
இன்னும் கீழ்கண்ட தொடுப்புக்களை பார்த்து, நீங்களே ஆய்வு செய்யுங்கள், மருத்துவ துறையிலும், தொழில் நுட்ப துறையிலும், எப்படியெல்லாம் யூதர்களின் பங்களிப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.
பயனுள்ள தொடுப்புக்கள்:
- The top 12 most amazing Israeli medical advances - ISRAEL21c
- How Jewish Medical Researchers Saved Millions of Lives with their Discoveries (jewishjournal.com)
- Jewish medicine - Wikipedia - 28% of Nobel Prize winners in medicine have been Jewish, although Jews comprise less than 0.2% of the world's population.[1]
- Jews Among the Greatest Scientific Life Savers (jinfo.org) JEWS LISTED AMONG THE CREATORS OF THE GREATEST LIFESAVING MEDICAL & SCIENTIFIC ADVANCES IN HISTORY (25% of listees, accounting for at least 50% of an estimated total of 5.6 billion lives saved)
யூதர்கள்/இஸ்ரேலர்களின் பொருட்களை, உயிர் காக்கும் மருந்துகளை, விஞ்ஞான தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்களை முஸ்லிம்கள் "புறக்கணிக்கவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றுள்ள நிலைமையில் இதனை மட்டும் ரோஷமுள்ள முஸ்லிம்கள் செய்வார்களானால், யுத்தமே இல்லாமல், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் ஜனத்தொகை பாதியாக குறைந்துவிடும்.
இதனைச் செய்ய ஹமாஸை ஆதரிக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரிக்கும், இஸ்ரேல் உலக வரைபடத்திலிருந்து நீக்கவேண்டும் என்று ஆசைப்படும் முஸ்லிம்கள், செய்வதற்கு அவர்களுக்கு தைரியம் இருக்கின்றதா?
ஏதோ "இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் நுகர்வு பொருட்களை மட்டும் புறக்கணிக்கிறோம்" என்றுச் சொல்வது சுலபம், ஆனால், அவர்களின் மருத்துவ தொழில்நுட்ப பொருட்களை புறக்கணித்துப் பாருங்கள் பார்க்கலாம்!?! நேரடியாக, உங்கள் முஹம்மது வாழ்ந்த 7ம் நூற்றாண்டுக்குச் சென்று ஒட்டகத்தின் மூத்திரத்தை குடித்துக்கொண்டு இருக்கவேண்டியது தான்.
நீங்கள் நேசிக்கும் நபர்களின் உயிரை உங்கள் அல்லாஹ்வினாலும், காப்பாற்ற முடியாது, போலியோ தொடங்கி, விட்டமின் மருந்துகள் வரை, எல்லாவற்றையும் புறக்கணிக்கவேண்டும், மேலும், ஈமெயில் அனுப்பவது முதற்கொண்டு, ஸ்மார்ட் தொலைபேசி, கணினி வரை புறக்கணிக்கவேண்டும்.
சுருக்கமாக சொல்வதென்றால், "உலக மக்களுக்கு அதிக உதவி செய்த, செய்துக்கொண்டு இருக்கும் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டை எப்படி கிறிஸ்தவர்கள் வெறுக்கமுடியும், 'யூதர்கள் அழியோடு ஒழிக்கப்படவேண்டும் என்று நினைக்கும் முஸ்லிம்களைப் போல நாங்கள் முட்டாள்கள் அல்ல' என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
முஸ்லிம்களின் இந்த "யூத புறக்கணிப்பு" இயக்கத்தில் சேர விரும்பும் மற்ற மக்களும் அதே முஸ்லிம்களின் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை அறியவும்.
காரணம் 7: தேவனின் திட்டத்தில் இன்னும் இஸ்ரேலுக்கு ஒரு பங்கு உண்டு, அவரது இரண்டாம் வருகைக்குள் அவர்களை அவர் சேர்த்துக் கொள்வார்
இது 'கடைசி காலத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கட்டுரையில்லை, எனவே பல பக்கங்கள் அடங்கிய இஸ்ரேல் பற்றிய விவரங்களை இங்கு சொல்லமுடியாது'.
சில வரிகளில் சொல்வதென்றால், "தேவன் இஸ்ரேலை தள்ளிவிட்டாரா? இஸ்ரேலை மறந்துவிட்டாரா? திருச்சபை உருவானதினால், அவர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு பழைய ஏற்பாட்டில் கொடுத்த வாக்குகளை மறந்துவிட்டாரா?" என்று கேட்டால், "இல்லை, யெகோவா தேவனின் கடைசி கால திட்டத்தில், இஸ்ரேல் மக்களுக்கும், நாம் இன்று காணும் இஸ்ரேல் என்ற நாட்டிற்கும், ஆம் அந்த நிலப்பரப்பிற்கும் பங்கு இருக்கிறது".
புதிய ஏற்பாட்டிலுருந்து சில வரிகளை இங்கு தருகிறேன், இது ஒரு இரத்தினச் சுருக்கம் போல இஸ்ரேல் மக்களுக்கும் யெகோவா தேவனுக்கும் இடையே இருக்கும் உறவை எடுத்துக்காட்டும்.
ரோமர் 11:1,25-29
11:1. இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
11:25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
11:26. இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;
11:27. நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
11:28. சுவிசேஷத்தைக் குறித்து அவர்கள் உங்கள் நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்து கொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
11:29. தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
11:30. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,
11:31. அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.
மற்ற மக்களுக்கு இரக்கம் கிடைத்தது போல, யூதர்களும் கடைசி காலத்தில் இரக்கம் பெறுவார்கள், அவர்கள் இயேசுக் கிறிஸ்துவை மேசியா என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இன்னும் சகரியா 12, 13 மற்றும் 14ம் அத்தியாயங்களை படிக்கும் போது, கர்த்தர் "இஸ்ரேல் நாட்டுக்காக யுத்தம் செய்வார்" என்று சொல்லப்படுகிறது.
கர்த்தர் யூத முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை தள்ளிவிடவில்லை. எனவே, யூதர்களை வெறுக்கவோ, சபிக்கவோ, அவர்களை மன்னிக்காமல் இருக்கவோ கிறிஸ்தவர்களுக்கு ஒரு நியாயமான காரணமும் இல்லை.
தற்கால இஸ்ரேல் நாட்டை கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை:
அநீதியை இஸ்ரேல் செய்தாலும், கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள். இதுவரை சொன்ன விவரங்கள், யூத கிறிஸ்தவ பைபிளின் இறையியலை சார்ந்தவைகள். ஆனால், ஒரு போதும் கிறிஸ்தவர்கள் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கமாட்டார்கள்.
- இஸ்ரேல் நாட்டின் ஒரு சில சட்டத்திட்டங்கள், நீதிக்கு எதிராக இருந்தால் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்.
- அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல் "இஸ்லாமிய தீவிரவாத குழுவாகிய ஹமாஸை" அழிக்கும் நோக்கில், தானாகவே சென்று காஸாவில் குண்டு மழை பொழிந்தால், உலக நாடுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கொதித்தெழுந்து இருந்திருப்பார்கள்.
- ஆனால், ஹமாஸ் முதலாவதாக, சிங்கத்தின் வாலை பிடித்து கடித்ததாலும், 200க்கும் அதிகமாக மக்களை அடிமைகளாக கொண்டுச்சென்றதாலும்,1500க்கும் அதிகமான இஸ்ரேல் குடிமக்களை அதிகாலையில் கொன்றதாலும், இஸ்ரேல் எதிர் தாக்குதல் செய்ததால், அதற்கு ஆதரவு தருகிறோம். ஏனென்றால் இந்த அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் நீதி இஸ்ரேல் பக்கம் உள்ளது, எனவே அதனை ஆதரிக்கிறோம்.
- இஸ்ரேல் நாட்டில் உள்ள இப்போதைய தலைவர்கள் அரசியல் தலைவர்கள் ஆவார்கள். மேலும், நம் நாட்டு தலைவர்கள் போல, அவர்களும் அரசியல் நோக்கில் பல தவறுகள் செய்யலாம், அவைகளுக்கெல்லாம் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள். அதற்காக முஸ்லிம்களைப்போல அவர்களை சபிக்கவும் மாட்டார்கள். அவர்கள் தவறுகள் செய்தால் கிறிஸ்தவர்கள் வன்மையாக கண்டிப்பார்கள்
முடிவுரை:
இதுவரை பார்த்த விவரங்களின் படி நாம் அறிவதென்ன?
1) 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த யூதர்கள் இயேசுவை கொலை செய்தார்கள் என்பதால் "இன்றைய யூதர்களை இன்றைய கிறிஸ்தவர்கள் வெறுக்கவேண்டுமென்றும், அவர்களை ஆதரிக்கக்கூடாது என்றும் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்".
2) இது ஒரு முட்டாள்தனமான வாதெமென்றும், கிறிஸ்தவர்கள் அக்கால யூதர்களையானாலும் சரி, இக்கால யூதர்களையானாலும் சரி, வெறுக்கவோ, மன்னிக்காமல் இருக்கவோ எந்த காரணமும் இல்லை என்பதை பார்த்தோம். மேலும் இதற்கான 7 காரணங்களை கண்டோம்.
3) முக்கியமாக, இக்கால யூதர்கள் மூலமாக, இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறையில் அவர்கள் செய்துவரும் நற்பணிக்காக, அவர்களை நாம் ஆசீர்வதிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை கண்டோம். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும், அவர்களின் கண்டுபிடிப்புக்களுக்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
4) இவைகள் தவிர்த்து, இன்றைய இஸ்ரேல் நாடு பல தீய காரியங்களைச் செய்தால், அதனை கண்டிக்கவும் கிறிஸ்தவர்கள் தவறமாட்டார்கள்.
5) கடைசியாக, முஸ்லிம்கள் சொல்வது போன்று, பாலஸ்தீனா என்பது யூதர்களுக்கு சொந்தமல்ல, யூதர்கள் முழுவதுமாக அழிக்கப்படவேண்டும் இதற்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்பது, சரித்திரம் தெரியாத முட்டாள்களின் கூற்று என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம்.
6) நானும் வாழவேண்டும், அவனும் வாழட்டும் என்ற கோட்பாட்டில் வாழ்ந்தால் தான் நல்லது, "நான் மட்டும் வாழவேண்டும், அவன் அழிந்தால் தான் நான் நிம்மதியாக இருப்பேன்" என்று தோரணையில் முஸ்லிம்கள் சொல்வார்களானால், இதனால் உண்டாகும் விளைவுகளை சந்திக்க உங்கள் முதுகுகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையைத் தவிர வேறு என்னத்தைச் சொல்லமுடியும்?
7) முஸ்லிம்கள் எதை விதைப்பார்களோ, அதையே அறுப்பார்கள். முஹம்மது தொடங்கி இன்றுவரை, இது தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. முஹம்மது விதைத்தார்கள், அவரும் அறுத்தார், கலிஃபாக்களும் அறுத்தார்கள், அவரது பேரப்பிள்ளைகளும் குடும்பங்களும் அறுத்தார்கள்.
8) இதோ, இன்று ஹமாஸ் போன்ற தீவிரவாதிகளுக்கு நச்சுப்பாம்புகளுக்கு இடம் கொடுத்த காஸா மக்கள் அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். காஸா மக்களின் நிலையைப் பார்த்தால், கண்கள் குளமாகின்றன, அந்த மக்கள் படும் பாடுகளைப் பார்க்கும் போது, "நான் அந்த இடத்தில் இருந்தால், எப்படியிருக்கும்" என்று எண்ணிப்பார்த்து அடிக்கடி கலக்கமடைகிறேன்.
9) முஸ்லிம்கள் "எந்த நாட்டிலும் சரி, என்றைக்கு தங்கள் கைகளில் உள்ள ஆயுதங்களை கீழே வைப்பார்களோ, அன்று அவர்கள் அமைதியாக வாழமுடியும்", அதுவரை அவர்களை துன்பங்கள் தொடரும், அதுவும் அவர்களாகவே வருவித்துக் கொண்டவைகளே என்பதையும், இங்கு பதிவு செய்கிறேன்.
முஸ்லிம்கள் "கிறிஸ்தவர்களிடம் எதிர்ப்பார்க்கும் படி", நியாயமான காரணங்களை வைத்துகொண்டு, ஒரு கூட்ட மக்களை வெறுக்கவேண்டுமென்றால், "கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களையே வெறுக்கவேண்டும்", இதற்கான காரணங்களை கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த தொடரில் எழுதுகிறேன்.
Date: 19th Nov 2023
முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/hamas_israel_2023/hamas_israel_2023_part7.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக