ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 4 நவம்பர், 2023

பாகம் 5: கலிஃபா உமர் ஏன் எருசலேமை பிடித்தார்? அவரின் இந்த செயலுக்காக‌, உலக‌ முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்

(முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்)

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

[கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவிய என் தம்பி, சௌதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இந்த இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய விவரங்களை என்னோடு விவாதிப்பதற்கு, ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் சார்பில் பேச எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அந்த உரையாடலை இங்கு எழுத்து வடிவில் தருகிறேன்]

தம்பி: ஹலோ, உமரண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: தம்பி, வஅலைக்கும் ஸலாம். எல்லாம் நலம் தானே.

தம்பி: ஆம், எல்லாம் நலம் தான், ஆனால் ஒரே ஒரு வேதனை என்னை வாட்டுகிறது, "நீங்கள் அநீதியின் பக்கம் பேசுவது தான்" என்னால் ஜீரணித்துக்  கொள்ளமுடியவில்லை.

உமர்: நான் உனக்கு என்ன அநீதி செய்தேன்? எனக்கு புரியவில்லையே!

தம்பி:  புரியவில்லையா? இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் நீங்கள் ஆதரவு தருவது பற்றி தான் நான் பேசுகிறேன்.  

சரித்திரத்தை திருப்பிப் பார்க்கும் போது, 1948ம் ஆண்டு, பாலஸ்தீன முஸ்லிம்கள் இருக்கும் பகுதியில் திடீரென்று யூதர்கள் வந்து, அந்த நாடு எங்களுடையது என்றுச் சொல்வது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்.

உமர்: ஓ.. நீ அப்படி வருகிறாயா? உன் கணக்குப் படி:

ஒரு நாட்டில் பல காலமாக ஒரு கூட்ட மக்கள் வாழ்ந்துக்கொண்டு வந்தால், திடீரென்று வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்தால், அது ஒரு தவறான செயல், அது அநியாயம் மற்றும் கண்டிக்கத் தகுந்த செயல் என்று சொல்ல வருகிறாய்? அப்படித்தானே!

[அந்த இடம் 3000 ஆண்டுகளாக யூதர்கள் வாழ்ந்த பகுதியாகும், சில காரணங்களுக்காக அவர்கள் அங்கிருந்து அவ்வப்போது வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டார்கள். ஆனால், யூதர்களில் கொஞ்ச மக்கள் அங்கு வாழ்ந்துக்கொண்டே வந்துள்ளார்கள், தேவைப்பட்டால் இதைப் பற்றி வேறு கட்டுரையில் பார்க்கலாம்]

தம்பி: ஆமாம், 100% அப்படித்தான், யூதர்களுக்கென்று தனி நாடு 1948ல் உருவாக்கப்பட்டது தவறு என்று சொல்கிறேன். நீங்கள் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள், உண்மை புரியும், இப்படித் தான் திடீரென்று யூதர்களுக்கு ஒரு நாடு உருவானது, பாலஸ்தீனத்தில்.

உமர்: அடப்பாரடா! உனக்கு சரித்திரமும் படித்து புரிந்துக் கொள்ளவும் முடிகிறது! மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

நீ சரித்திரத்தைப் பற்றி பேசுவதினால், நானும் சரித்திரத்தையே வைத்து உன்னிடம் பேசுகிறேன்.

தம்பி: சரி வாங்க, பேசலாம். நாம் 1948ம் ஆண்டிலிருந்து நம் ஆய்வை தொடங்கலாம்.

உமர்: கொஞ்சம் இரு தம்பி. சரித்திரம்/வரலாறு என்று வந்துவிட்டால், ஏன் 75 ஆண்டுகளுக்கு முன்பு போகவேண்டும், இன்னும் சிறிது பின்னால் சென்று 7ம் நூற்றாண்டிலிருந்தே நாம் பேசலாம்.

முக்கியமாக, உன்னுடைய இறைத்தூதர் முஹம்மதுவும், அவரது கலிஃபாக்களும் என்ன செய்தார்கள் என்று ஆய்வு செய்யலாம் வா!  அவர்கள் குட்டிச்சுவராக்கிய நாடுகள் எவைகள்? அவர்கள் பண ஆசையாலும், நாடுகளை பிடிக்கவேண்டும் என்ற ஆசையினாலும் செய்த கொடூரங்கள் என்னவென்று பார்ப்போம்.

தம்பி: நீங்க என்ன? எந்த தலைப்பில் பேசினாலும், உடனே இஸ்லாமின் தொடக்க காலத்துக்கு சென்று விடுகிறீர்கள்?

உமர்: ஆமாம், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசவேண்டுமென்றால், அதுவும் இஸ்லாமிய தீவிரவாதிகளாகிய ஹமாஸ், அல்கெய்தா போன்றவர்கள் பற்றி பேசவேண்டுமென்றால், அவர்களின் அஸ்திபாரமாகிய இஸ்லாம் பற்றி ஆய்வு செய்தால் தானே உண்மை விளங்கும்.

திருக்குறளும் அதைத் தானே சொல்கிறது:

  • நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
  • வாய் நாடி வாய்ப்பச் செயல்

ஒரு நோயை குணப்படுத்துவதற்கு, அதன் மூலக்காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டுமெல்லவா?

தம்பி: சரி, இஸ்லாமிய சரித்திரத்திலிருந்தே பேசலாம் வாங்க! சத்தியம் இஸ்லாமின் பக்கம் இருக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

உமர்: உன்னிடத்தில் பிடித்தது, இந்த பக்தி வைராக்கியம் தான், சபாஷ்.

தம்பி: முஸ்லிம்களின் ஆதங்கம் இது தான், 1948ல் யூதர்களுக்கென்று தனி நாடு கொடுக்கப்பட்டது தவறு. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் யார் அந்த இடத்தில் வாழுகிறார்களோ, அவர்களுக்குத் தான் அந்த இடம் நாடு சொந்தம்.  புதிதாக வந்தவர்கள் "வந்தேரிகள் தான்" அவர்களுக்கு அந்த இடத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு உரிமை இல்லை.

உமர்: 

[உமர் மனதுக்குள்: இஸ்லாமிய சரித்திரம் சரியாக கற்காததினால், நான் என்ன கேட்கப்போகிறேன் என்று தெரியாமல் துள்ளுகிறான், என் தம்பி]

தம்பி, உனக்கு ஒரு கேள்வியை வைக்கிறேன்: முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம் உனக்குத் தெரியுமா?

தம்பி: ஓ தெரியுமே!

  • கி.பி. 570: எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கி.பி. 570ல் மக்காவில் பிறக்கிறார், 
  • கி.பி. 610: தமது 40வது வயதில் அதாவது கி.பி. 610ல் இறைத்தூதர் என்று அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்படுகிறார்.  
  • கி.பி. 622: அடுத்த 12 ஆண்டுகள் மக்காவில் இஸ்லாமிய அழைப்பு பணியைச் செய்கிறார். மக்கா மக்கள் அவரையும், இஸ்லாமை ஏற்ற முஸ்லிம்களையும் கொடுமைப் படுத்துவதினால், கி.பி. 622ல் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்கிறார்.
  • கி.பி. 632: மதினாவில் அடுத்த 10 ஆண்டுகள் 'இஸ்லாமிய தாவா பணியை' இறைத்தூதரும் மற்ற சஹாபாக்களும் செய்து, கி.பி. 632ம் ஆண்டு இறைத்தூதர் மரித்தார்.

உமர்: வாவ்! ரொம்ப சூப்பர் தம்பி. இவ்வளவு தான் உனக்குத் தெரியும்!

கடைசி 10 ஆண்டுகள் மதினாவிலிருந்துக் கொண்டு முஹம்மதுவும் சஹாபாக்களும் இஸ்லாமிய தாவா பணியைச் செய்தார்கள், வேறு ஒன்றுமே செய்யவில்லை! அப்படித் தானே!

தம்பி: ஆமாம், இது எல்லா முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் தெரியுமே! உங்களுக்குத் தெரியாதா?

உமர்: எனக்கு கூட இவைகளெல்லாம் தெரியும், ஆனால், உனக்கும் சராசரி முஸ்லிம்களுக்கும் தெரியாத அனேக உண்மைகளும் எனக்குத் தெரியும்.

சரி, என் கேள்விகளை கேட்கிறேன், முஹம்மதுவும் முஸ்லிம்களும் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு:

  • எத்தனை நாடுகளுக்கு, ஊர்களுக்கு 'இஸ்லாமிய தாவா செய்ய அனுப்பப்பட்டார்கள்'?
  • எந்தெந்த சஹாபாக்களை எந்தெந்த ஊர்களுக்கு அனுப்பினார்கள்?
  • இவர்களின் இந்த 'தாவா பணியினால்' இஸ்லாமை ஏற்றவர்கள் எத்தனைப் பேர்?
  • மதினாவில் இவர்கள் எந்த தொழிலைச் செய்தார்கள்?
  • இவர்களுக்கு உணவுக்கு என்ன வழி இருந்தது?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமா தம்பி?

தம்பி: மதினாவிற்கு ஹிஜ்ரி செய்வதற்கு முன்பு, யாத்ரிப்புக்கு(மதினா) மூஸா இப்னு உமர் என்ற சஹாபியை அனுப்பியதாக எனக்குத் தெரியும், ஆனால் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு, எத்தனை ஊர்களுக்கு, எந்தெந்த சஹாபாக்களை இறைத்தூதர் அனுப்பினார் என்ற விவரம் என்னிடம் இப்போதைக்கு இல்லை.

உமர்: என்னடா இது! மதினாவில் பத்து ஆண்டுகள் தாவா பணி செய்ததாகச் சொல்கிறாய், ஆனால், குறைந்தபட்சம் சில விவரங்களையாவது தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கக்கூடாதா?

சரி போகட்டும், முஹம்மது மதினாவில் இருக்கும் போதும், சிலர் கேட்டுக்கொண்டதின் படி, முஹம்மதுவின் வாளுக்கு பயந்தபடியினால் இஸ்லாமை கற்றுத்தரும் படி கேட்டதினால், சிலரை அவர் அனுப்பினார்.

முஹம்மது மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் எத்தனை தாவா பணியை (கிறிஸ்தவர்களின் படி சொல்லவேண்டுமென்றால் மிஷனரி பயணங்கள்) செய்தார் என்ற விவரம் முஸ்லிம்கள் அனேகருக்குத் தெரியாது, அது தேவையும் இல்லை அவர்களுக்கு.

இந்த கேள்விக்கு பதில் சொல் பார்க்கலாம்: முஹம்மது மதினாவில் இருக்கும் போது, எத்தனை போர்களில் ஈடுபட்டார் அல்லது சண்டையிட்டார்?

தம்பி: எங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 19 யுத்தங்களில் பங்கு பெற்றார்

உமர்: பார்த்தாயா தம்பி! உன் பச்சோந்தித் தனத்தை!  முஹம்மது மதினாவில் 10 ஆண்டுகள் தாவா பணியை செய்தார் என்று சொன்னாய்! அந்த 10 ஆண்டுகளில் எத்தனை போர்களில் பங்கு பெற்றார் என்ற விவரத்தை தெரிந்தே மறைத்தாய்!

சரி, எத்தனை இஸ்லாமிய தாவா பணியை செய்தார்? என்று கேள்வி எழுப்பினால், உன்னிடத்திலிருந்து பதில் வரவில்லை. ஆனால் எத்தனை போர்கள் செய்தார் என்று கேள்வி கேட்டவுடனே, 19 என்று உடனே பதில் வந்தது.

இதிலிருந்து அறிவதென்ன? மதினாவில் முஹம்மது தாவா பணியைக் காட்டிலும், பயங்கரவாதத்திலும், தீவிரவாதத்திலும் அண்டை நாடுகளோடு சண்டையிடுவதிலும் தான் ஈடுபட்டார் என்ற உண்மை வெளியே வந்துள்ளது.

தம்பி: இந்த விவரங்கள் புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களில் வருகிறது, எனவே தான் உடனே என்னால் சொல்லமுடிந்தது,  இதில் என்ன தவறு இருக்கிறது?

முஹம்மது அவர்கள் பங்கு பெற்றது 19 போர்கள்:

புகாரி எண்: 3949 & 4471

3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் 

நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள். கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)' என்றார்கள். 

4471. அபூ இஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார் 

'இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எத்தனை புனிதப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?' என்று நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பதினேழு (புனிதப் போர்களில் நபி அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)' என்று பதிலளித்தார்கள். நான், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் பங்கெடுத்தார்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பத்தொன்பது போர்களில் (பங்கெடுத்தார்கள்)' என்று பதிலளித்தார்கள். 

முஸ்லிம் எண்: 2405 & 3706

2405. அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பதினேழு அறப்போர்களில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)" என்று விடையளித்தார்கள். தொடர்ந்து அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது போர்களில் கலந்துகொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்" என்றும் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், "(நாடு துறந்து செல்வதற்கு முன்) அவர்கள் மக்காவில் இருந்தபோது மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். 

3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.

அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

உமர்: இதைத் தான் நானும் சொல்கிறேன், உங்கள் புகாரி/முஸ்லிம் ஹதீஸ்களில் இஸ்லாமிய தாவா பணிப் பற்றிய விவரங்களை விட, அவர் செய்த போர்கள் பற்றிய விவரங்கள் தான் அதிகம் காணப்படுகிறது, ஏனென்றால், முஹம்மதுவின் முக்கியத்தும் நாடுகளை பிடிப்பது, அதன் பிறகு வரும் ஒரு பைபுராடக்ட்(By-Product) தான் இஸ்லாமை பரப்புவது ஆகும்.

தம்பி: கடைசியாக, என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

உமர்: முஹம்மதுவின் காலத்திலிருந்தே, இஸ்லாம் பயங்கரவாதத்தின் மூலமாகத் தான் வளர்ந்தது, மக்களை போர்கள் மூலமாக கொன்று குவித்து தான் இஸ்லாம் வளர்ந்தது என்று சொல்லவருகிறேன்.

இது மட்டுமல்ல, இஸ்லாமிய சரித்திர நூல்களின் படி, மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள்  மொத்தம் 95ஐ தொடுகிறது என்ற விவரம் தெரியுமா உனக்கு?

கீழ்கண்ட விக்கிபீடியா  தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன்.  கிழேயுள்ள அட்டவணையை காணவும்.

Source: List of expeditions of Muhammad – Wikipedia 

தம்பி: எங்கள் இறைத்தூதர் செய்த போர்களுக்கும், இந்த ஹமாஸ் இஸ்ரேல் சண்டைக்கும் என்ன சம்மந்தம்?

உமர்: தம்பி, முஸ்லிம்களாகிய நீங்கள் முதலாவது நேர்மையாக விவரங்களை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள், உண்மைகளை மறைத்து பொய்யான விவரங்களைச் சொல்வதை நிறுத்துங்கள்.

உனக்கு முஹம்மது 19 போர்களில் பங்கு பெற்றார் (கட்டளையிட்டவைகள் அனேகம்) என்ற விவரம் தெரிந்திருந்தும், என்னிடம் "மதினாவில் 10 ஆண்டுகள் இறைத்தூதர் அவர்கள் இஸ்லாமிய தாவா பணியை செய்தார்" என்று வாய் கூசாமல் பொய் சொல்வதினால் தான் எனக்கும் சரி, மற்ற மக்களுக்கும் சரி "எங்கேயோ" எரிகிறது. அதனால் தான், தயவு தாட்சண்யம் இல்லாமல் இஸ்லாம் பற்றிய உண்மைகளை பளிச்சென்று சொல்ல வேண்டி வருகிறது.

சரி, இஸ்ரேல் விஷயத்துக்கு வருகிறேன். மதினாவில் சும்மா இல்லாமல், ஏன் 95க்கு மேல் வன்முறைகளுக்கும், யுத்தங்களுக்கும் முஹம்மது கட்டளையிட்டார்?

இஸ்லாமிய தாவா பணியை செய்வதைக் காட்டிலும், சண்டையிடுவது முஹம்மதுவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலையாக மாறிவிட்டதா?

தம்பி: இறைத்தூதர் போட்ட சண்டைகள் அனைத்தும் "தற்காப்புக்காக" போட்டவைகள், அவைகள் வலியச் சென்று போட்டவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.

உமர்: முஹம்மது தற்காப்புக்காக போட்ட சண்டைகளும் உண்டு, அதே நேரத்தில் ஒரு பயங்கரவாதியாக, தீவிரவாதியாக போட்ட சண்டைகளும் உள்ளன.

முஹம்மதுவின் வன்முறைகளை/சண்டைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

  • வியாபார கூட்டங்களை வழிமறித்து அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டது (Raids)
  • இவரே  வலியச்சென்று போர் செய்தது (Offence)
  • எதிரிகள் இவர் மீது போர் தொடுக்கும் போது இவர் போரிட்டது (Defense)
  • தன்னை எதிர்த்து பேசியவர்களை ஆட்களை அனுப்பி கொலை செய்தது 

தம்பி, பொய்களைச் சொல்வதை களைந்து மெய்யை பேச கற்றுக்கொள், அதன் பிறகு இஸ்லாமிய தாவா பணியைச் செய்யலாம்.

முதலில், இஸ்லாமிய சரித்திரத்தை நன்றாக படித்துப் பார்த்து, கற்றுக்கொண்டு அதன் பிறகு பேசு:

குறைந்த பட்சம் கீழ்கண்ட கட்டுரைகளை படித்து, ஓரளவிற்கு இஸ்லாமிய அறிவை வளர்த்துக்கொள்:

தொடுப்புக்கள்:

  1. நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்
  2. முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3 
  3. நிலமெல்லாம் இரத்தம் – இந்த ஒரே ஒரு ஹதீஸை பாரா அவர்கள் படித்திருந்தால்! 

அரேபியா கண்டம், முஹம்மதுவிற்கு முன்பு எப்படி இருந்தது, முஹம்மது மரிக்கும் போது எப்படி இருந்தது, அதன் பிறகு முதல் கலிஃபா அபூ பக்கர் மரிக்கும் போது எப்படி இருந்தது என்பதை இந்த படத்தை பார்த்து புரிந்துக்கொள்:

இஸ்லாமின் பெயரில் நாடுகளை பிடித்த ஒரு சர்வாதிகாரி தான் உங்கள் முஹம்மது, சும்மா இருந்த நாடுகளை வலியச் சென்று பிடித்துவிட்டு, இப்போது முதளைக் கண்ணீர் வடிக்கிறார்கள் முஸ்லிம்கள்!

தம்பி: இஸ்ரேல் பற்றி நான் கேள்வி எழுப்பினால், 1948ல் நடந்தது பற்றி கேள்வி எழுப்பினால், நீங்கள் இஸ்லாமிய ஆரம்பகால யுத்தங்களைப் பற்றி பேசுகிறீர்கள்?

உமர்: தம்பி, முஹம்மது செய்தது யுத்தங்கள் அல்ல, ஆக்கிரமிப்புக்கள் ஆகும். தன்னிடம் மனித பலம் இருப்பதினால், பலவீனமான ஊர்களையும், குழுக்களையும் நாடுகளையும் பிடித்தார் முஹம்மது.

இஸ்ரேல் நாடு 1948ல் உருவானது ஆக்கிரமிப்பு என்றால், முஹம்மது செய்ததும் ஆக்கிரமிப்பு தான். இஸ்ரேல் நாட்டிலிருந்து யூதர்களை இன்று துரத்தவேண்டுமென்று சொன்னால், முஹம்மதுவின் மூலமாகவும், முதல் நான்கு கலிஃபாக்கள் மூலமாகவும், அதன் பிறகு வந்த இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாத அரசர்கள் மூலமாகவும் பிடிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் முஸ்லிம்களை இன்று துரத்தவேண்டும், இதனை நீ ஒப்புக்கொள்வாயா?

தம்பி: மற்ற விஷயங்கள் பற்றி அதிகம் பேசாதீர்கள், எருசலேம் பற்றி இப்போது பேசலாமா?

உமர்: வருகிறேன் தம்பி, இரண்டாம் கலிஃபா உமரின் அருமை பெருமைகளை, பயங்கரவாத தீவிரவாத செயல்கள் பற்றி இப்போது பேசலாம்.

தம்பி: நீங்கள் அடிக்கடி எங்கள் இறைத்தூதர் பற்றியும் கலிஃபாக்கள் பற்றியும் பேசும் போது, "பயங்கரவாதி, தீவிரவாதி" என்று குறிப்பிடுகிறீர்கள், இதனை நான் கண்டிக்கிறேன்.

உமர்: அதப்பாருடா, என் தம்பிக்கு கோபம் வருகிறதாம்.

  • ஒரு நாயைப் பார்த்து, நாய் என்று அழைப்பது,
  • ஒரு பன்றியைப் பார்த்து பன்றி என்று அழைப்பது,
  • ஒரு திருடனைப் பார்த்து திருடன் என்று அழைப்பது,
  • ஒரு தீவிரவாதியைப் பார்த்து தீவிரவாதி என்று அழைப்பது

ஏற்றுக் கொள்ளக்கூடியது தானே, உனக்கு ஏன் கோபம் வருகிறது?

அப்படி உன் கோபத்தில் நியாயம் இருந்தால், முஹம்மது ஏன் 95க்கும் அதிகமான பயங்கரவாத செயல்களுக்கு, போர்களுக்கு கட்டளையிட்டார், அதை செய்தும் காட்டினார் என்று உலகிற்கு சொல்லி, புரியவை?

முதல் நான்கு கலிஃபாக்களாகிய அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்கள் "ஏன் இப்படி அனேக போர்களைச் செய்தார்கள்? ஏன் நாடுகளை வலியச் சென்று பிடித்தார்கள்?" அவர்களை ஏன் "சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள் தீவிரவாதிகள்" என்று அழைக்கக்கூடாது என்று உலகிற்கு எடுத்துச் சொல்லி, உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து வையுங்கள் பார்க்கலாம்.

தம்பி: எருசலேம் பற்றி பேசலாமா? [தம்பி மிகவும் கோபமாக கேட்கிறான்]

உமர்: நீ சும்மா இருந்தால் தானே! நான் எருசலேம் பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும். ஏதோ இஸ்லாம் தான் உலகத்திலேயே ஒரு அமைதியான மதம் போல பேசினால், எரியாதா?

தெரியாமல் தான் கேட்கிறேன், அது என்ன தம்பி, ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டுக்கும் ஒரு தீவிரவாத கும்பல் இருக்கிறது? 

  • சிரியாவில் "அல் நஸ்ரா ஃப்ரண்ட்"
  • இஸ்ரேலில் "ஹமாஸ்"
  • லெபநானில் "ஹிஸ்புல்லாஹ்"
  • ஆப்கனிஸ்தானில் "தாலிபான்"
  • பாகிஸ்தானில் "ஜெயிஸ் ஈ முஹம்மத்"
  • ஈராக் மற்றும் சிரியாவிற்கு சேர்த்து "ஐசில் – ISIL"
  • பாகிஸ்தான் கஷ்மீரில் "லஸ்கர் ஈ தய்யிபா"
  • எகிப்தின் சீனாய் பகுதில் "அன்சர் பையத் அல் மக்திஸ்"
  • லிபியாவில் "அன்சர் அல் ஷரியா"
  • துருக்கியில் "தர்கிஷ் டொமெஸ்டிக் டெர்ரரிஸம்" (TURKISH DOMESTIC TERRORISM)
  • பல ஆஃப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு "அல் கெய்தா"

இன்னும் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது...

Link: Terrorist Groups | National Counterterrorism Center (dni.gov)

இந்த குழுக்கள் அனைத்தும் "உன் பார்வையில் சுதந்திர போராட்ட வீரர்களா"?

இஸ்ரேல் நாட்டில், ஹமாஸ் என்ற தீவிரவாதிகள், யூதர்களை துரத்த உருவாக்கப்பட்டது? ஆனால், மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் தம்பி 'இப்படி வீட்டுக்குவீடு வாசற்படி என்று சொல்வது போன்று ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டுக்கும் தீவிரவாத குழுக்கள்".

இதிலிருந்து "பிரச்சனை இஸ்லாமிய‌ மக்கள் அல்ல, பிரச்சனை இஸ்லாமிய மதம்" என்று புரிகிறதல்லவா?

அது என்னவோ தம்பி, நீ ஒரு கேள்வி கேட்டால், பத்து பதில் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆர்வம் முட்டுகிறது.

சரி, எருசலேமுக்கும், இஸ்ரேல் பகுதிக்கும் வரலாம்.

தம்பி: இப்போவாவது நிறுத்துனீர்களே? அது போதும்.

உமர்: சரி, கலிஃபா உமர் என்னென்ன‌  தாவா பணி செய்தார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், அவர் கீழ்கண்ட நாடுகளை  10 ஆண்டுகளில் தன் பயங்கரவாத செயல்களினால் ஜெயித்தார்.

இரண்டாம் கலீஃபா உமர் (634 - 646)

முதல் கலீஃபா அபூ பக்கர் மரித்த பிறகு உமர் இரண்டாம் கலீஃபாவாக பதவி ஏற்றார், இவர் 634 லிருந்து 644 வரை (10 ஆண்டுகள் மற்றும் சில மாதங்கள்) ஆட்சி புரிந்தார். இவர் தம்முடைய 10 ஆண்டு கால ஆட்சியில், இன்னும் அனேக நாடுகளை ஆக்கிரமித்தார். முக்கியமாக, எருசலேமை இவர் கைப்பற்றினார் (637). கிறிஸ்தவ பைசாந்திய ஆட்சியாளரிடமிருந்து இஸ்லாம் எருசலேமை கைப்பற்றியது

இரண்டாம் கலீஃபா கைப்பற்றிய நாடுகள் ஆண்டு வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: en.wikipedia.org/wiki/Timeline_of_7th-century_Muslim_history

உமரின் ஆட்சியின் முடிவில் மத்திய கிழக்கு நாடுகளில் எந்தெந்த பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது என்பதை கீழ்கண்ட படம் காட்டுகின்றது.  உமர் தம் ஆட்சி காலத்தில் எகிப்து, எருசலேம், பைசாந்திய நாடுகள், பெர்சியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளை இஸ்லாமின் ஆட்சிக்குள் கொண்டு வந்தார். அபூ பக்கர் கைப்பற்றிய நாடுகளோடு, உமர்  கைப்பற்றிய நாடுகளை (படங்களை) ஒப்பிட்டுப்பாருங்கள்.

சரியாக கவனி, கி.பி. 637ல் உமர் எருசலேமை கைப்பற்றினார், 6 மாதங்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அதனை கைப்பற்றினார்.

இந்த கீழ்கண்ட கட்டுரையை படித்துப் பார், எப்படி எருசலேம் இஸ்லாமின் ஆக்கிரமிப்பக்குள் வந்தது? என்பது புரியும்.

இன்று காசாவிற்குள் எப்படி உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் சில நாட்கள் செல்லவிடாமல் இஸ்ரவேல் தடுத்தது, அதே போன்று ஆறு மாதங்கள் எருசலேம் நகரம், "அமைதி மார்க்கத்தவர்களின் முற்றுகையினால் தவித்தது, அங்கு அன்று இருந்த கிறிஸ்தவ தலைவர் மக்களின் நலன் கருதி" எருசலேமை இஸ்லாமின் கோர கைகளில் விட்டுக்கொடுத்தார்.

தம்பி: இதில் என்ன தவறு இருக்கிறது? அவரிடம் ஆட்சி பலம் இருக்கிறது அதனால் நாடுகளை பிடித்தார்?

உமர்: ஓ.. அப்படியானால், பலமுள்ளவன் பலவீனமானவனை அநியாயமாக தாக்கினாலும், இஸ்லாமின் படி 'பலவீனமானவன்' சும்மா இருக்கவேண்டும் அப்படித்தானே!

இதன்படி பார்த்தால், அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் பலமுள்ளவர்களாக இருந்தார்கள், எனவே அவர்கள் எருசலேமை பிடித்தார்கள். அதே போன்று இன்று இஸ்ரேல் பலமுள்ளவர்களாக  இருக்கிறார்கள், காஸாவை அவர்கள் பிடித்தாலும், இஸ்லாமின் படி அவர்கள் சரியாகத் தான் செய்தார்கள் என்று நீ சொல்வாயா?

தம்பி:  அது எப்படி சொல்லமுடியும்? இது அநியாயமல்லவா? யூதர்கள் 1948ல் செய்தது பாவச் செயல் அல்லவா?

உமர்: உமர் எருசலேமை பிடித்தால் அது நியாயமான செயல், இஸ்ரேல் தன் முன்னோர்களின் இடத்தை 1948ல் திரும்ப எடுத்துக்கொண்டால் அது அநியாயமா?

முஸ்லிம்களே, உங்களுக்கு நீதி நியாயம் என்றால் என்னவென்று தெரியாதா? இஸ்லாம் உங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லையா?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அன்று எருசலேமை ஆண்டுக்கொண்டு இருந்த, கிறிஸ்தவர்களிடமிருந்து, எருசலேமை "ஆக்கிரமித்த" உமரின் இந்த பாவ செயலுக்காக, இன்றுள்ள முஸ்லிம்கள், " கிறிஸ்தவர்களிடமும், உலக மக்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும்".

தம்பி: இது என்ன புது கூத்தாக இருக்கிறது? யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கிறிஸ்தவர்கள் எங்கே வந்தார்கள்?

உமர்: 1948ல் யூதர்களுக்கென்று தங்கள் மூதாதையர்களின் நாட்டை கொடுத்தது பாவ செயல் என்றால், 637ல் கிறிஸ்தவர்களிடமிருந்து சண்டையிட்டு, எருசலேமை கைப்பற்றியது கூட பாவ செயலே ஆகும்.

தம்பி: அன்று ஐக்கிய நாட்டுச் சபை போன்ற ஒரு அமைப்பு இல்லை, மேலும் பலமுள்ள அரசர்கள் தங்களால் முடிந்த நாடுகளை பிடித்தார்கள் அது பாவமல்ல.

உமர்: இது எனக்கும் தெரியும் தம்பி! ஆனால், கேள்வி "அதே ஐக்கிய நாட்டுச் சபையும், ஆங்கிலேயர்களும் தான்" 1948ல், பாலஸ்தீன பகுதியை இருவரும் வாழுவதற்கு பிரித்து கொடுத்தார்கள்.

காஸாவும், மேற்கு கரை முஸ்லிம்களும் என்ன செய்யவேண்டும்? நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழுகிறோம், நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழுங்கள் என்று சொல்லி, மூடிக்கொண்டு (வாயைத் தான் சொல்கிறேன்) வாழவேண்டும். 

இந்த பகுதியில் நாங்கள் மட்டுமே வாழுவோம், யூதர்கள் அழிக்கப்படவேண்டும் என்று சொல்வதினால் தான், பலமுள்ள இஸ்ரேலின் கையில் அடிபட்டு சாகிறார்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். உலக முஸ்லிம்கள் எப்போது கிறிஸ்தவர்களிடம் "கலிஃபா உமர் செய்த பயங்கரவாத ஆக்கிரமிப்புகளுக்காக, எருசலேமை கைப்பற்றியதற்காக‌" மன்னிப்பு கேட்கப்போகிறார்கள்?

தம்பி: நாங்கள் "மன்னிப்பு கேட்கமாட்டோம்" உமர் செய்தது சரியான செயல் தான்.

உமர்: அப்படியானால், 1948ல் யூதர்களுக்கு ஒரு தனி நாடு உருவாக்கி கொடுக்கப்பட்டதும் நியாயமானது தான்.

இனி என்னிடம் இதைப் பற்றி நீ பேசவே கூடாது.

முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம், கிறிஸ்தவர்களுக்கு வேறு நியாயமா?

தம்பி: நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்?

உமர்: போ.. போய் முதலாவது இஸ்லாமிய சரித்திரத்தை படி. முஹம்மதுவும் கலிஃபாக்களும் பிடித்த நாடுகளைப் பற்றி சிந்தி.

7ம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாமியர்கள் செய்த அனைத்து கொடுமைகளுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் "முஸ்லிம்கள் இன்று உலக மக்களிடம் மன்னிப்பு கேட்காதவரை", உங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை "உலகம் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள்" என்றும் அழைக்கும்.

சரித்திரத்தில் நம் முன்னோர்கள் செய்த தவறுகளை இன்று சுட்டிக்காட்டப்படும் போது, அதை நேர்மையாகவும் பெருந்தன்மையுடனும் ஏற்றுக்கொண்டு, இன்று அதற்காக மன்னிப்பு கேட்காதவர்களாக முஸ்லிம்கள் இருக்கும் வரை, உலகில் அமைதி என்பது கிடைக்காது.

உலக மக்கள் இஸ்லாமையும் குர்‍ஆனையும் முஹம்மதுவையும் நன்றாக அறிந்துக்கொண்டு, இவர்களை புறக்கணிக்காதவரை "உலக சமாதானம்" பற்றி பேச அவர்களுக்கு அருகதையில்லை.

இஸ்லாம் இருக்கும்வரை பயங்கரவாதம் இருக்கும், தீவிரவாத குழுக்கள் இருப்பார்கள். இஸ்லாமிய நாடுகளாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட சதவிகித முஸ்லிம்கள் அங்கு இருந்தால், நிச்சயம் ஒரு தீவிரவாத குழு தானாக உருவாகிவிடும், அல்லது மற்ற நாட்டு தீவிரவாத குழுவிற்கு இங்கிருந்து உதவிகள் செய்யப்படும்", இதைத் தான் உலகில் நாம் பார்க்கிறோம்.

தம்பி: உங்களோடு என்ன பேசினாலும், என் நேரம் வீணாகிறதே தவிர, எந்த பயனும் கிடைப்பதில்லை, நான் போனை வைக்கிறேன்.

உமர்: சரித்திரத்தை பேச நீயே அழைத்தாய், நானும் சரித்திரத்தைப் பற்றி பேச தொடங்கும் போது, கோபம் பொத்திக்கிட்டு வருகிறது உனக்கு. 

எத்தனை நாட்கள் உலகை ஏமாற்றிக்கொண்டு இருப்பீர்கள்? உங்கள் முகம் உலகிற்கு சிறிது சிறிதாக‌ தெரியவருகிறது, உலக மக்களும் சத்தியத்தை அறிந்துக்கொள்வார்கள், அப்பொழுது அவர்கள் இஸ்லாமியர்களின் மாய வலையிலிருந்து விடுதலையடைவார்கள்.

Date: 4th Nov 2023


முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம் 

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/hamas_israel_2023/hamas_israel_2023_part5.html


கருத்துகள் இல்லை: