இதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு)
மற்றும் மனம் வருந்துதல்
ரோலண்ட் கிளார்க்
Heartfelt Fasting and Repentance
Roland Clarke
தேவன் யோவேல் தீர்க்கதரிசி மூலமாக இவ்விதமாக பேசினார்,"ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்" (யோவேல் 2:12-14)
"Give me your hearts. Come with fasting, weeping and mourning. Don't tear your clothing in your grief, but tear your hearts instead." Return to the Lord your God for he is merciful and compassionate, slow to get angry and filled with unfailing love. He is eager to relent and not punish. Who knows perhaps he will give you a reprieve sending you a blessing instead of this curse. (Joel 2:12-14)
இஸ்ரவேல் மக்கள் இந்த அழிவின் விளிம்பு வரை செல்ல காரணமென்ன? இதற்கு காரணம், அவர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்தார்கள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். யோவேல் தீர்க்கதரிசி வந்த நேரத்திற்கு முன்பே, தேவன் தன் உக்கிர கோப அக்கினியை வெளிப்படுத்தி அவர்களை அழிக்க திட்டமிட்டுவிட்டார்.
நினிவே மக்களை அழிப்பதற்கு "அழிவு நாளை – Dooms Day" இறைவன் நிர்ணயித்த விவரங்கள் குர்ஆனிலும் பைபிளிலும் பெரும்பான்மையாக ஒரே வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிகழக்கூடிய அந்த அழிவு நாளைப் பற்றிய பயம் நினிவே மக்களின் இதயங்களைத் தாக்கியது, அதனால் அவர்கள் பச்சாதாபம்(Repented) கொண்டனர், மனம் வருந்தினர் அதனால், வரவிருந்த தண்டணையிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.யோவேல் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் செய்தியில் உள்ள ஒற்றுமையை நாம் தெளிவாகக் காணலாம். யோவேல் முதல் அதிகாரம் வசனங்கள் 13 மற்றும் 14ல், ஆசாரியர்களுக்கு எவ்விதம் தேவன் கட்டளைகளை கொடுக்கிறார் என்பதை கவனிக்கவும்:
"ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; …….. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்."
இதே போல, யோனா தீர்க்கதரிசன புத்தகத்திலும் 3:8,9ம் வசனங்களில், நினிவேயின் அரசன் தன்னை தாழ்த்தி, தன் நாட்டு மக்களுக்கு இது போலவே கட்டளையிட்டார், அதாவது, உயர்ந்த அதிகாரமுடையவன் முதற் கொண்டு, சிறிய வேலைச் செய்கின்ற ஊழியர் வரை அனைவரும் தங்களை தாழ்த்தி வேண்டுதல் செய்யும் படி கட்டளையிட்டார். அந்த அரசன் இவ்விதமாக கட்டளை கொடுத்தார்:
"மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்."
நம்மைச் சுற்றி எப்படிப்பட்ட தீய காரியங்கள் நடக்கின்றன? (உண்மையில் நம்முடைய சொந்த வாழ்விலும் கூட). பாவம் வெவ்வேறு உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, திருடுதல், பொய் சொல்லுதல், பேராசை, சுயநலம், பெருமை, பொறாமை, கோபத்தால் கொந்தளித்தல், தீய விருந்துகள், மதுபானத்திற்கு அடிமையாகுதல், மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துதல் அல்லது அடிமையாதல், மனக்கசப்பு, மன்னிக்காத சுபாவம், கொடுமையாக நடந்துக்கொள்ளுதல், புறங்கூறுதல், காம வேட்கை கொள்ளுதல், மற்றும் மோகம் கொண்டு செய்யப்படும் ஆபாச செயல்கள், இவைகளைப் போல பாவம் வித்தியாசமான விதங்களில் வருகிறது.
காம வேட்கை கொள்ளுதல், மற்றும் மோகம் கொண்டு செய்யப்படும் ஆபாச செயல்கள் போன்றவைகள் உலகில் அனைத்து பாகங்களிலும் உள்ளது, ஆனால், இது மிகவும் அதிகமாக ஆபாசமான பத்திரிக்கை, இணையம் மற்றும் இது சம்மந்தப்பட்ட துறைகளிலும், ஹாலிவுட் போன்ற திரைப்பட துறையிலும் அதிகமாக உள்ளது. இந்த துறைகளினால், மேற்கத்திய நாடுகளில் நன்னடத்தைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பொல்லாத விதையினால், மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்த வேண்டாத ஆபாச உறவுகளினால் ஏற்படும் விளைவு, வேண்டாத குழந்தைகளை பெற்றெடுத்தலாகும். மக்களில் அனேகர், "கருக்கலைப்பு – Abortion" என்பது குழைந்தைகள் பெரும் சுமையை இறக்கிவைக்க (தடைசெய்ய) சுலபமான வழி என்று நினைக்கிறார்கள். இதன் விளைவாக, கடந்த 35 ஆண்டுகளில் 40 மில்லியன் தேவையில்லாத சிசுக்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ளன! மேற்கத்திய நாடுகள் யோவேல் தீர்க்கதரிசியின் அறைகூவலை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதை இது நமக்கு போதிக்கிறது. நாம் இப்போது மனந்திரும்ப வேண்டும், அலறி அழவேண்டும், ஏனென்றால், நாம் "கருக்கலைப்பு" என்ற எண்ணிக்கையில் அடங்கா கொலைகள் நடப்பதை நம் கண்களால் கண்டும் காணாதவர்கள் போல இதுவரை இருந்துள்ளோம்.
நம் கண்களுக்கு மிகவும் தெளிவாக தெரிந்துக்கொண்டு இருக்கும், உலகத்தின் பல பாகங்களில் நடக்கும் பாவங்களை நாம் பார்த்தும் பார்க்காதவர் போல இருப்பதும் சரியானது அல்ல. உதாரணத்திற்கு, மத்திய கிழக்க(தொலை கிழக்கு) பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். பல இஸ்லாமிய நாடுகள் (மற்றும் இஸ்லாமியர்கள்) இஸ்ரவேல் நாடு மீது கொண்டுள்ள தீர்க்கமான கசப்பிற்கும், வெறுப்புத் தன்மைக்கும் நாம் என்ன சொல்லப்போகிறோம்?
ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய எழுத்தாளர், ரஸ்லன் டோக்சுகோவ்(Ruslan Tokchukov), இந்த விஷயத்தைப் பற்றி தன் கருத்தை மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்."ஒரு காலத்தில் யூத மக்களின் எதிரிகளாக இருந்த மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளாகிய, எகிப்து நாட்டின் பார்வோன்கள், அசீரியா நாடு, பாபிலோனியா நாடு, ரோம் இராஜ்ஜியம், ஸ்பெயின் நாட்டு மன்னர், ரஷ்ஷியாவின் சரிஸ்ட் இராஜ்ஜியம், மற்றும் நாஜி இயக்கம்," போன்ற அனைத்து நாடுகளின் கொடூரமான முடிவைக் கண்டு, தன் சரித்திர ஆய்வின் முடிவை இப்படியாகச் சொல்கிறார்:கிறிஸ்தவர்களின் பைபிளில் ஒரு பகுதியில் சொல்லப்பட்டது போல, யூத மக்களை சபிக்கும் மனிதர்களை தேவன் சபிக்கிறார். பிறகு இவர் சொல்கிறார், "உலகத்தின் மொத்த சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், இந்த விவரம் உண்மை என்று நிருபனமாகிறது, இப்போது, நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவராக இருக்கலாம் அல்லது இறை நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம், ஒரு வேளை நீங்கள் இதை தேவனின் சட்டம் என்றுச் சொல்லக்கூடும், அல்லது சரித்திரத்தின் நியதி என்று சொல்லக்கூடும், ஆனால், யுதர்களை கொடுமைப்படுத்திய எந்த ஒரு நாடும், மிகவும் கொடுமையான விளைவுகளை சந்திக்காமல் தப்பித்ததில்லை என்பதை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அரபியர்கள் அல்லது இதர இஸ்லாமிய நாடுகள் இதற்கு விதி விலக்கு என்று நான் நினைக்கமாட்டேன். [1]
அஹமதினெஜத் என்பவர் எழும்பி, "இஸ்ரவேல் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்குகிறேன்" என்று தொடர்ந்து தன் பயமுறுத்தலை சொல்வதற்கு முன்பு எழுத்தாளர் டோக்சுகோவ் இந்த எச்சரிக்கைகளை 2003ம் ஆண்டு எழுதிவிட்டார். உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமிய தலைவராவது எழுந்து, அஹ்மத்னெஜத்தின் இந்த கொடுமையான சவாலை கண்டித்ததுண்டா? இஸ்லாமிய நாடுகள் ரஷ்லனின் எச்சரிக்கையை கேட்டு அதன் படி எச்சரிக்கை அடையாமல் போனால், இந்த வெறுப்பின் விதையானது மிகவும் அதிகமான வளர்ந்து, கடைசியில் சுழல்காற்றிலே அதன் விளைச்சலை அவர்களே அறுக்கவேண்டி வரும் (சகரியா 12 மற்றும் யோவேல் 3ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டு இருக்கும் விதமாக, அறுக்கவேண்டி வரும்).
முஸ்லீம் அடிப்படைவாதிகளினால் செய்யப்படும் கொடூரங்களும், மற்றும் ஹிம்சைகளும் மிகவும் தவறானவைகளாகும், ஆனால், ஏமாற்றுவதற்கும் பொய் சொல்வதற்கும் என்ன சொய்யப்படும்? சிந்தித்துப் பாருங்கள், நவீனவாதியாக கருதப்படும் காலம் சென்ற யாசர் அராபத், பலவேடங்களில் நடிப்பதில் கைதேர்ந்தவர். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில்(Oslo Peace Accord - 1993) கையெழுத்து இட்டு, அதை அங்கீகறித்து (ஆங்கிலத்தில்), அதன் காரணமாக எப்படி அராபத் நோபல் அமைதிப் பரிசைப்(Nobel Peace Prize) பெற்றார் என்று உலகம் நன்றாக அறியும்.
இப்படி அமைதி ஒப்பந்தத்தை அங்கீகறித்து, கையெழுத்து இட்டு மூன்று ஆண்டுகள் ஆனவுடன், அரபி தூதுவர்களுடன் ஸ்டாக்ஹாம் என்ற இடத்தில் பேசும் போது, அவரது உண்மை உள் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்தது, அவர் கூறியதாவது:
"நாங்கள் இஸ்ரவேல் நாட்டை அகற்ற முடிவு செய்துள்ளோம்... பாலஸ்தீனவர்களாகிய நாங்கள், எருசலேம் முதற் கொண்டு எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்வோம் ("We plan to eliminate the state ofIsrael ... We Palestinians will take over everything, including all of Jerusalem." (as reported to the Norwegian daily 'Dagen', 6 Feb. 1996)).இதற்கும் மேலாக, அராபத் அவர்கள் இப்படி சொல்லியுள்ளார், "போர் செய்து இஸ்ரவேலை தோற்கடித்து எங்களால் வெற்றிபெற முடியாது என்பதால், இதனை நாங்கள் பகுதி பகுதியாக செய்யப்போகிறோம். பாலஸ்தீனாவுடன் ஒவ்வொரு பகுதியையும் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டு,.... அதனை அடித்தளமாகக் கொண்டு, இன்னும் அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்வோம். ஒரு நேரம் வரும், அப்போது அரபி தேசங்கள் அனைத்தையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு, இஸ்ரவேலை கடைசியாக தாக்குவோம்."Furthermore, Arafat explained, "Since we cannot defeat Israel in war, we do this in stages. We take any and every territory we can of Palestine ... and use it as a springboard to take more. When the time comes, we can get the Arab nations to join us for the final blow against Israel." (from an interview on Jordanian Television, as quoted in "The Threat Inherent in a Palestinian State" by Don Feder, Insight Magazine, 13 May 2003)
கொடுமையைக் கண்டு ஓலமிட்டு அழுதலும் மற்றும் மனம் வருந்துதலும்
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், சைனாவும் மியான்மாரும் இயற்கை சீற்றத்தால், மிகவும் கொடுமையாக பாதிக்கப்பட்டது, கிட்டத்தட்ட 2,00,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு நாடுகளும் இயற்கை சீற்றத்தால் மரித்தவர்களுக்காக கண்ணிர் அஞ்சலி செலுத்துவதற்கு மூன்று நாட்களை ஒதுக்கினார்கள், இந்த நாடுகள் இப்படி செய்வது சரியானது என்று கண்டார்கள். இப்போது எழும் கேள்வி, "நாடு தழுவிய இந்த அஞ்சலி செலுத்தும் நாட்களுக்கும், தாழ்மைபடுவதற்கும் அல்லது நம் உள்ளத்தில் மாற்றமடைவதற்கும் சம்மந்தமுண்டா?". இதற்கு பதில், இல்லை என்பது தான்(The question arises, "Were these days of national mourning linked in any way to humility or spiritual soul searching? Apparently not.)
இக்கட்டுரையை படிக்கும் சில வாசகர்கள், "இப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்கக்கூடும்.
இப்படிப்பட்ட கேள்வியைத் தான் இயேசு கிறிஸ்துவும் எழுப்பினார். தேவாலயத்தில் தொழுதுக்கொண்டு பலிகளை செலுத்தும் வேலையில், மிகவும் கோரமான ஒரு விபத்து நடந்து பல யூதர்கள் மரித்துப்போனார்கள், இதைப் பற்றி ஒரு கூட்ட மக்கள் பேசிக்கொண்டப்போது, இயேசு கீழ் கண்டவிதமாக கேட்டார்:
"சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளா யிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்ல வென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள் என்றார்." (லூக்கா 13:4-5)
துன்பப்படுவதற்கும், உபவாசம் இருப்பதற்கும், மனஸ்தாபம் கொள்வதற்கும் சம்மந்தமுண்டா?
உண்மையான கண்ணீர் தீர்க்கமான மனஸ்தாபத்திற்கு சரியான அடையாளமாகும். பைபிளின் படியும், குர்ஆனின் படியும், யோனா என்பவர் தன் துன்ப நேரத்தில் வேதனையின் சிகரத்தில் இருக்கும்போது தன்னை தாழ்த்தினார் என்பதை அறிவோம். பைபிள் நமக்குச் சொல்கிறது, யோனா தன் "நெருக்கத்தின் நேரத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்." (யோனா 2:2). அதே போல குர்ஆனும் சொல்கிறது, யோனா "அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:" …. "எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம்." (குர்ஆன் 68:48; 21:88)
இன்னொரு பைபிள் நிகழ்ச்சி (குர்ஆனில் பதிவு செய்யப்பட்டதின் படி) விவரிக்கிறது, சாத்தான் ஆதாமை ஏமாற்றிய பிறகு எப்படி ஆதாம் துன்பத்தில் ஆழ்ந்துவிட்டார் என்று (குர்ஆன் 20:117). இன்னும் சொல்லப்போனால், ஒரு இஸ்லாமிய ஹதீஸின் படி, ஆதாமும் ஏவாளும் 40 ஆண்டுகள் மனஸ்தாபப்பட்டு அழுதார்களாம், பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களாம். (Furthermore, according to Islamic tradition Adam and Eve wept in repentance for 40 years, after which they were reunited with each other.)
துக்கப்படுவதற்கும், மனஸ்தாபப்படுவதைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது? பைபிள் தெளிவாகச் சொல்கிறது: "… தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது."("the kind of sorrow God wants us to experience leads us away from sin and results in salvation.... But worldly sorrow, which lacks repentance, results in spiritual death.") (2 கொரிந்தியர் 7:9-10)
ஆதாமும் யோனாவும் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது, அதனால், மிகவும் தீவிரமான விளைவுகளை சந்தித்தார்கள். தாவீது இராஜாவும் தேவனுக்கு எதிராக பாவம் செய்தபோது, மிகவும் தீவிரமான விளைவுகளை சந்தித்தார். தாவீதின் ஜெபத்தை நாம் சங்கீதம் 30ல் காணலாம்,
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்….என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
யோனாவின் மற்றும் தாவீதின் தாழ்மையை நான் பார்க்கும் போது எனக்கு ஒரு ஹதீஸ் நியாபகத்தில் வருகிறது, அந்த ஹதீஸ் சொல்கிறது, "ஆதாமின் எல்லா மகன்களும்(சந்ததி) பாவிகளாவார்கள், மற்றும் இவர்களில் மிகவும் சிறப்பானவர்கள் தொடர்ந்து மன்னிப்பிற்காக மனஸ்தாபப்படு பவர்களாவார்கள்" ("Every son of Adam is a sinner and the best of sinners are those who repent constantly.").
இப்படிப்பட்ட மனப்பான்மையை தாவீது உடையவாராக இருந்ததால் தான் தேவன் தாவீதை இப்படியாக கூப்பிடுகிறார், "என் இருதத்திற்கு ஏற்ற மனிதன்". தேவனுக்கு பிரியமான பலி எது என்று தாவீதுக்கு நன்றாகத் தெரியும், "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." (சங்கீதம் 51:17)
தேவனுக்கு ஏற்ற துக்கம் நம்மை மனஸ்தாபத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மையானால், ஏசாயா 25:7-9 ல் சொல்லப்பட்டது போல, "தேவன் நம் கண்ணீர்கள் யாவையும் துடைப்பார்" என்பதும் மிகவும் உண்மையே. மறுபடியும், 57ம் அதிகாரத்தில் நாம் படிக்கலாம், தேவன் "துக்கப்படுகிறவர்களை ஆறுதல் படுத்துகிறார்". இதற்கு முன்னால் உள்ள வசனங்கள் இவ்விதமாகச் சொல்கின்றன,
"நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்….. நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச்சோர்ந்துபோகுமே. …. அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (ஏசாயா 57:15-19)
தேவன் எதன் அடிப்படையில் யோனாவை காப்பாற்றினார்? ஒருவேளை யோனாவின் தாழ்மைக்கு பதிலாக தன் வலிமை மிக்க வல்லமையை காண்பிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? இதற்கான முதல் துப்பு, அந்த கப்பலில் பயணம் செய்த மாலுமிகள் யோனாவின் தேவனே உண்மையான தேவன் என்றுச் சொன்ன விவரங்களிலிருந்து கிடைக்கிறது. நாம் அவ்வசனத்தில் இப்படியாக படிக்கிறோம், "அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலி யிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்." (யோனா 1:16)
இரண்டாவது துப்பு, "யோனா தேவனிடம் வேண்டிக்கொண்டார்" மற்றும் "நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது" என்றார். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நாம் தேவனின் செயலை காணமுடியும்.
மேலும், இரட்சிப்பு என்பது பாவத்தோடு சம்மந்தப்பட்டுள்ளது(salvation is integrally linked to sin). யோனாவின் நிகழ்ச்சியில், மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டது, வெறும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளித்தது மட்டுமல்ல, அவருடைய கீழ்படியாமை என்ற பாவத்திலிருந்து கூட அவர் தேவனிடமிருந்து மன்னிப்பு பெற்றார், தேவனிடமிருந்து இரட்சிப்பு அடைந்தார்.
யோனா ஒரு இஸ்ரவேலராகவும், மோசேயின் சட்டத்தின் கீழும் இருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஒவ்வொரு இஸ்ரவேலரும் மோசேயின் சட்டம் சொல்வது போல பல சுத்திகரிப்பு செயல்களை செய்யவேண்டியுள்ளது, அதாவது தங்களை சுத்திகரித்துக்கொள்வது, பலியிடுவது போன்றவைகளாகும். ஒவ்வொரு சடங்கிற்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டு இருந்தது, அதாவது பாவ நிவாரண பலி, கன்றுகளை பலியிடுவது, என்று இன்னும் பல சுத்திகரிப்பு காரியங்களைச் செய்யவேண்டும், ஒருவர் பிணத்தை தொட்டுவிட்டால் அதற்கும் ஒரு சுத்திகரிப்பு செய்யவேண்டி இருந்தது.
உண்மையில், மோசேயின் சட்டம் மனிதன் பாவத்திலிருந்து, குற்ற உணர்விலிருந்து விடுபட தேவையான சுத்திகரிப்பு பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்கிறது, "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (எபிரேயர் 9:22) யோனா தேவனின் கட்டளைக்கு கீழ்படியவில்லை என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆகையால், ஒரு பக்தியுள்ள யூதர், முதலாவது யோனா பாவ நிவாரணத்திற்கு தேவையான பொருத்தனைகளை செய்யாமல், நன்றி பலியை செலுத்தியிருப்பார் என்று கற்பனை செய்துபார்க்க முடியாது(Therefore, it would be unthinkable for a devout Jew to imagine Jonah making a thank offering of an animal sacrifice – without first performing an offering for his sin!)
தேவன் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார், ஆனால், பாவத்திலிருந்தும் அவர் காப்பாரா?
தேவன் இரட்சிக்கிறவராக(Saviour) இருக்கிறார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தேவனை "இரட்சிக்கிறவர் - Saviour" என்று ஆமோதித்தனர், அவர்கள் அழுது கூப்பிடும்போது அவர் வந்து விடுதலையை கொடுக்கிறார் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களின் பாவங்களிலிருந்து கூட தேவனே இரட்சித்து இருக்கிறார் என்பதற்காக தீர்க்கதரிசிகள் அவரை "இரட்சகர் - Saviour" என்று கண்டனர்.
யூதர்களும் கிறிஸ்தவர்களும் தீர்க்கதரிசிகள் பாவம் செய்தனர் என்றுச் சொல்லும் போது, இது மிகப்பெரிய விவாதமாக மாறுகிறது, ஏனென்றால், தீர்க்கதரிசிகள் பாவம் செய்யாதவர்கள் என்று முஸ்லீம்கள் போதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தீர்க்கதரிசிகள் நம்மைப் போல பாவம் செய்பவர்கள் என்ற விவரம் பைபிளில் (அவ்வளவு ஏன் குர்ஆனிலும் கூட) தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
வேதத்தில் இவ்விதமாக சொல்லப்பட்டுள்ளது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." (பிரசங்கி 7:20) மற்றும் குர்ஆனில் இவ்விதமாக நாம் படிக்கிறோம்:
"மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவம?ை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." (குர்ஆன் 16:61)"If God were to punish men for their wrong-doing, He would not leave, on the (earth), a single living creature: but He gives them respite for a stated Term." (surah 16:61)
ஆதாம் பாவம் செய்தார் என்பதை தட்டிக்கழிப்பதற்கு பல இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள். இவர்கள், "ஆதாம் வெறும் ஒரு சின்ன பிழையைச் செய்தார்" அல்லது அவர் "இறைவனின் கட்டளையை மறந்துவிட்டார்" என்றுச் சொல்வார்கள். ஆனால், ஆதாம் அந்த மரத்தின் கனியை புசிப்பதற்கு முன்பாக "மிகவும் தெளிவாக எச்சரிக்கை செய்யப்பட்டார்" என்ற விவரம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும் (யூசுப் அலி அவர்கள் தன் மொழிப்பெயர்ப்பின் 20:117ம் வசனத்தின் பின்குறிப்பில் குறிப்பிட்டது போல).
ஆதாம் ஒரு சிறிய மறதியினால் தான் இப்படிப்பட்ட செயலைச் செய்தார் என்ற இஸ்லாமியர்களின் வழக்கமான இந்த கருத்தை ஜான் கில்கிறைஸ்ட்(John GilChrist) கீழ் கண்டவாறு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் எழுதுகிறார்,
"அந்த குறிப்பிட்ட மரத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று இறைவன் எச்சரிக்கை செய்தது மட்டுமல்ல, சாத்தானும் அவர்களை சோதித்த வேளையில் அந்த எச்சரிக்கையை அவர்களுக்கு நியாபகப்படுத்தியதாக நாம் கண்டுபிடிக்கமுடியும். ஆதாம் இறைவனின் கட்டளையை வெறுமனே மறந்துவிட்டார் என்ற வாதத்தை எப்படி ஒருவர் சகித்து(ஏற்று)க் கொள்ளமுடியும்? அது மட்டுமல்ல, சாத்தான் நியாபகப்படுத்தியதை கருத்தில் கொள்ள வில்லையானாலும், இது நம்புவதற்கு மிகவும் கடினம், அதாவது, இறைவனிடமிருந்து நேரடியாக வந்த தடை செய்யப்பட்ட ஒரே ஒரு கட்டளையை ஆதாமினால் எப்படி மறந்துப்போக முடியும்? மேலும், இந்த பிழை ஒரு சிறிய பிழையாக இருக்கிறது என்றுச் சொன்னால், ஏன் இந்த சிறிய பிழைக்கான தண்டனை மிகவும் கொடியதாக இருந்தது, அதாவது ஆதாம் ஏவாள் தம்பதிகளையும், அவர்களோடு சேர்த்து இந்த முழு உலக மனித வர்க்கத்தையும் ஏன் தோட்டத்திலிருது துரத்தவேண்டும்?"Not only did God warn them against eating of the tree but we discover that Satan even reminded them of his warning while tempting them to sin. How can one possibly sustain the argument that Adam merely forgot his Lord's command? Satan's reminder aside, it is surely too hard to believe that Adam could have forgotten the one and only thing prohibited to him especially when the order came directly from God himself. Furthermore, if this was only a minor 'mistake', why was the penalty so severe - the permanent banishment of the couple and the whole human race with them from the Garden?" (p. 278 in Muhammad and the Religion of Islam)
ஆதாம் தேவனின் கட்டளையை மறந்துவிட்டாரா இல்லையா ? என்ற வாதத்தை பக்கத்தில் வைத்துவிட்டாலும், ஒரு உண்மையை மட்டும் நாம் மறுக்கமுடியாது, அதாவது குர்ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, "ஆதாம் தன் இறைவனுக்கு கீழ்படியவில்லை." (The Arabic word Asa - disobey - comes from infinitive isyan which lexically means sin.)
சிந்திக்கவேண்டிய விவரம்:
இறைவனின் 99 பெயர்களின் பட்டியலோடு "இரட்சகர் – Saviour " என்ற பெயரை எப்படி இஸ்லாமிய அறிஞர்கள்(உலைமாக்கள்) விட்டுவிட்டார்கள் என்ற விவரத்தை இந்த கட்டுரை "A Dialog about the One True God" விளக்குகிறது. இந்த கட்டுரையின் கருப்பொருள், இறைவன் எப்படி மிகவும் கொடுமையான ஆபத்தில் இருந்தவர்களை இரட்சித்தார்? என்பதை விளக்குவதாகும். தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்த கட்டுரையில் நாம் "பாவம்" பற்றி மிகவும் விவரமாகக் கண்டோம். இரட்சகர் என்ற பெயரை இஸ்லாமியர்கள் இறைவனுக்கு சூட்டுவதை விட்டுவிட்டார்கள், ஆனால், இக்கட்டுரையை படித்தபின்பு "இரட்சகர்" என்ற வார்த்தை இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் அறியலாம்.
இறைவன் தீர்க்கதரிசனமாக, "என் தாசன் என் இரட்சிப்பை கொண்டுவருவார்" என்றுச் சொல்லியுள்ளார்.(ஏசாயா 49:6) ஆனால், ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள், "இயேசு இறைவனின் இரட்சிப்பை எப்படி கொண்டுவருவார்?" இயேசு இரட்சிப்பை கொண்டுவருவார் என்பதின் அர்த்தம், பலவிதமான வியாதிகளால் பீடிக்கப்பட்டு இருந்த மக்களை சுகமாக்குவது மட்டும் தானா? அல்லது கலிலேயா கடலின் புயலில் சிக்கித் தவித்தவர்களை காப்பாற்றுவது மட்டும் தானா? இயேசு இவைகளை மட்டுமல்லாமல், பாவசுபாவத்தால் அடிமைப்பட்டு இருந்த மக்களுக்கு விடுதலையையும், குற்ற மன சாட்சியின் உணர்வுடன் அழிந்துக்கொண்டு இருந்தவர்களையும் அவர் இரட்சித்தார் என்பதும் உண்மையில்லையா? (படித்துப் பார்க்கவும், மத்தேயு 1:21;லூக்கா 7:36-48; 19:1-10, யோவான் 1:29; 3:16,17; 8:32.)
ஆசிரியரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், இங்கு சொடுக்கவும்
பின் குறிப்பு:
1 Our Place in the World: Road map leads to darkness by Ruslan Tokhchukov, Seattle Post-Intelligencer, November 14, 2003
ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக