முகமதுவின் கடிதங்களில் உள்ள வன்முறையைப் பற்றிய கட்டுரைகளுக்கு மேலதிக விவரங்களுக்காக இக்கட்டுரை பதிக்கப்படுகிறது.
முந்தைய கட்டுரைகள்
இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
செமிடிக் மொழிகளில்(Semitic Languages) ஒரு வேர் சொல்லின் இடையில் வித்தியாசமான உயிர் எழுத்துக்களை சொருகுவதால் பல வார்த்தைகளை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு மூன்று மெய் எழுத்துக்கள் கொண்ட ஒரு வேர்ச்சொல் பற்றி காண்போம். "SLM" என்பது ஒரு வேர்ச்சொல், இதனினின்று உருவானது தான் இந்த இரண்டு சொற்கள் "iSLaM" மற்றும் "SaLaM" என்பதாகும். இப்படி ஒரு வேர்ச்சொல் அல்லது மூல சொல்லிலிருந்து இரண்டு வார்த்தைகள் உருவானதால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் ஒற்றுமை இருக்குமா?
ரோமானிய மற்றும் ஜெர்மனிய மொழிகளில், உயிரெழுத்துக்களை சொருகுவதால் அல்ல, அதற்கு பதிலாக ஒரு வேர் சொல்லின் முன்பும் அதன் பின்பும் (prefix or suffix) சில எழுத்துக்களை சேர்ப்பதால், பல வார்த்தைகள் உருவாகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், "Love" என்ற வார்த்தையை ஒரு மூல வார்த்தையாகக் கொண்டால், இந்த வார்த்தை பல உரிச்சொற்களை(Adjective) உருவாக்குகிறது, அதாவது, "Loving" மற்றும் "Loveless" என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லலாம். இந்த இரண்டு சொற்களின் மூலச் சொல் "Love" என்பதாகும், ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் "ஒன்றுக்கொன்று எதிர் மறையானது". இதே போல, "type" என்ற மூலச் சொல்லினை பயன்படுத்தி "typical" மற்றும் "atypical" என்ற இரண்டு வார்த்தைகளை உருவாக்கலாம். ஆனால், இந்த இரண்டு சொற்களின் பொருள் மறுபடியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது தான். அரபி மொழியின் விவரங்களை தெரிந்துக் கொள்ள ஆங்கில மொழியை நாம் ஒரு அளவு கோளாக கொள்ள முடியாது. இருந்தாலும், அரபி மொழி தெரியாதவர்களுக்கு கீழே படிக்கப்போகின்ற கட்டுரையை புரிந்துக்கொள்ள மேலே கண்ட இரண்டு ஆங்கில உதாரணங்கள் உதவியாக இருக்கும்.
இந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அறிஞர்கள், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு, அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, இஸ்லாம் என்பது வன்முறையை வெறுத்து, அமைதியை விரும்பும் மதம் என்று காட்ட முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் புதியதாக விற்கப் பார்க்கும் ஒரு சித்தாந்தம் என்னவென்றால், "இஸ்லாம் (Islam) " என்ற தங்கள் மதத்தின் பெயரின் பொருள் "அமைதி (Peace)" என்றுச் சொல்கிறார்கள். அமைதி என்ற பொருள் தரும் அரபி வார்த்தை "சலாம் (Salam)" என்பதாகும். அவர்கள் தங்கள் புதிய சித்தாந்தத்தை சொல்வதற்கு அடிப்படையாக அரபி மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே முல வார்த்தை இருப்பதை காரணம் காட்டுகிறார்கள்.
அரபி மொழியை பேசத் தெரியாதவர்களுக்கு, மற்றும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் இப்படிப்பட்ட புதிய சித்தாந்தங்கள் மூலமாக ஏமாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, அரபி மொழி தெரிந்தவர்களையும், இஸ்லாமின் போதனை என்ன என்று புரிந்துக் கொண்டவர்களையும் ஒரு போதும் அவர்கள் முட்டாள்களாக்க முடியாது. இஸ்லாம் என்ற மதம் வன்முறையினால் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும், இன்று கூட அதே வன்முறையை நம்பி அதை ஒரு கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லீம்கள் தங்களுக்குள் இருக்கும் உறவுமுறை, மற்றும் அவர்களுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை எப்போதும் "பயம் அல்லது பீதி" என்பதின் அடிப்படையிலேயே இருந்துள்ளது, இன்னும் அப்படியே இருக்கிறது. "இஸ்லாம்" மற்றும் "சலாம்" என்ற இரண்டு வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும் மற்றும் இவ்விரண்டு வார்த்தைகள் பெயரிலோ அல்லது பொருளிலோ கூட சம்மந்தப்பட்டவைகள் அல்ல. (While it may be possible to deceive those who do not speak Arabic or those who do not know much about Islam, propaganda like this does not fool someone who knows the Arabic language and the teaching of Islam, a religion that was established by violence and still believes in violence as a principal and as a way of life. The relationships between Muslims themselves and between them and all other nations have always been based on terror and still is. Islam and Salam are two incongruous words that share no common ground either in name or in substance.)
அரபி அகராதியில் சில குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருள் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், "வேர் (root)" வார்த்தை என்றுச் சொல்லக்கூடிய மூன்று எழுத்து சொல்லை நாம் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. பல வார்த்தைகள் அந்த ஒரு மூல வார்த்தையின் மூலமாக உருவாகியிருக்கும், ஆனால், அவ்வார்த்தைகளின் பொருள்களில் கூட ஒற்றுமை இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.
"சலாமா" என்ற வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை உருவாகியது, இஸ்லாம் என்றால் "சரணடைதல்" என்றுப் பொருள்.
இதே போல, "சலாம்" என்ற வார்த்தைக்கு "அமைதி" என்றுப் பொருள், இந்த வார்த்தையும் "சலிமா" என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் "காப்பாற்றப்படல் அல்லது ஆபத்திலிருந்து தப்பித்தல்" என்பதாகும்.
இந்த "சலாமா" என்ற வார்த்தையிலிருந்து வந்த இன்னொரு பொருள் என்னவென்றால், "பாம்பின் கடி அல்லது பாம்பு கொட்டுதல்" அல்லது "தோல் பதனிடுதல்" என்பதாகும். ஆக, "இஸ்லாம்" என்ற வார்த்தை "சலாம் - அமைதி" என்ற பொருள் தரும் வார்த்தையோடு சம்மந்தம் உண்டு என்று நாம் நிர்ணயித்தால், அதே "இஸ்லாம்" என்ற வார்த்தைக்கு "பாம்பின் கடி" அல்லது "தோலை பதனிடுதல்" என்ற வார்த்தைக்கும் சம்மந்தம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவிற்கும் நாம் வரலாம்(Hence, if the word Islam has something to do with the word Salam i.e. 'Peace', does that also mean that it must be related to the 'stinging of the snake' or 'tanning the leather'?)
முகமது அவர்கள் சுற்றியுள்ள நாடுகளின் அரசர்களுக்கும், தலைவர்களுக்கும் இஸ்லாமையும், தன் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், தான் அல்லாவின் தூதர் என்பதை நம்பும்படியும் அவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்கள். அவர் தன் கடிதங்களை இப்படி முடிப்பார், "அஸ்லிம் தஸ்லம்! (Asllim Taslam)". இந்த இரண்டு வார்த்தைகளும் "அமைதி" என்ற பொருள் வரும் "சலாமா" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருது வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் "அமைதி" என்ற பொருள் இல்லை. இந்த இரு வார்த்தைகளின் பொருள் "சரணடை மற்றும் நீ பாதுகாப்பாக இருப்பாய்", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், "சரணடை அல்லது மரணமடை" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் "அமைதி" என்ற பொருளுக்கு இடமேது? (So where is the meaning of 'Peace' in such a religion that threatens to kill other people if they don't submit to it?)
வேறு வகையில் சொல்லவேண்டுமானால், குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள், அல்லது அல்-சீரா(முகமதுவின் வாழ்க்கை வரலாறு) என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய புத்தகங்களில், நிறைய ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.
இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று குர்ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது: "…. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்." (குர்ஆன் 4:89) முகமது அவர்களும், அல்புகாரி ஹதீஸின் படி, "ஒரு முஸ்லீம் அவன் மதத்தை விட்டுவிட்டால், அவனை கொல்லுங்கள்" என்றுச் சொல்லியுள்ளார்கள் (Muhammad also said, as narrated by Al-Bukhari, "If somebody - a Muslim - discards his religion, kill him.")
இஸ்லாமை தழுவி பிறகு அதை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று குர்ஆன் கட்டளை இடுவதொடு மட்டுமில்லாமல், முஸ்லீம்கள் எல்லா நாடுகளோடும் சண்டையிட்டு, ஒன்று அந்நாடுகள் இஸ்லாமை அங்கீகரித்து ஜிஸ்யா என்ற வரியை செலுத்தவேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க தயாராக வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்ஆன் 9:29) .
"Fight those who believe not in Allah nor the last day, nor hold that forbidden which hath been forbidden by Allah and his apostle nor acknowledge the religion of truth of the people of the Book (the Jews and the Christians) until they pay the Jizya with willing submission and feel themselves subdued. Surat At-Tauba 9:29"
இதே சூரா 5ம் வசனத்தில் குர்ஆன் சொல்கிறது: "…முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்…" இப்போது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று நன்றாக புரிகிறதல்லவா. ஆனால் நம்புவதற்குத் தான் சிறிது கடினம்.
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/abumuhai/salamislam.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக