2. குர்ஆனின் ஸூராக்கள் (அத்தியாயங்கள்)
2.1 குர்ஆனின் ஸூராக்கள் இறக்கப்பட்ட வரிசைகள்
உங்களிடம் ஒரு குர்ஆன் இருந்தால், அதனை எடுத்து முதல் அத்தியாயத்தின் பெயர் என்னவென்று படித்துப் பாருங்கள்? இணையத்திலும் குர்ஆன் தளங்களில் சென்று முதல் அத்தியாயத்தின் பெயரை கவனியுங்கள், அது "அல் ஃபாத்தியா / அல் ஃபாத்திஹா அல்லது தோற்றுவாய்" என்று எழுதப்பட்டு இருக்கும். ஆனால், இந்த அத்தியாயம் (ஸூரா) முஹம்மதுவிற்கு முதலாவது இறக்கப்பட்ட அத்தியாயம் அன்று, இது ஐந்தாவதாக இறக்கப்பட்ட அத்தியாயம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள். இரண்டாவது அத்தியாயம் "அல் பகரா" என்று இருக்கும், இதுவும் இரண்டாவதாக இறக்கப்பட்ட அத்தியாயம் அல்ல, இது மதினாவில் இறக்கப்பட்ட (68வது, அல்லது 74வது அல்லது 100வது) அத்தியாயம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட முதல் குர்ஆன் வசனம் எது அத்தியாயம் எதுவென்று கேட்டால், அது நம்மிடம் உள்ள குர்ஆன்களில் 96வது அத்தியாயமாக பதிக்கப்பட்டுள்ளது.
ஆக, நம்முடைய கையில் இருக்கும் குர்ஆனின் அத்தியாயங்கள் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட வரிசையில் அமைக்கப்படவில்லை. அதிகமான வசனங்கள் கொண்ட அத்தியாயங்கள் தொடங்கி, குறைவான வசனங்கள் உள்ள அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
குர்ஆனின் ஸூராக்களை (அத்தியாயங்களை) வரிசைப் படுத்தி சில அறிஞர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள், அதனை இங்கு காண்போம். உலக முஸ்லிம் அறிஞர்கள், எந்த ஒரு பட்டியலையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1) இமாம் ஜலாலுத்தீன் அல்-சுயூத்தி (Jalal al-Din al-Suyuti, கிபி 1445–1505):
இவர் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் "ஸுயுத்தி" என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவரது "இத்கான் (Al-Itqan fi Ulum al-Qur'an)" புத்தகம் மிகவும் புகழ்பெற்றது. இவர் ஸூராக்கள் இறங்கிய வரிசையை கொடுத்துள்ளார்.
2) தியோடர் நால்டேக் (Theodor Nöldeke - 1836 – 1930):
இவர் ஜெர்மன் அறிஞர், எழுத்தாளர் மற்றும் குர்ஆனில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இவரும் குர்ஆன் வரிசைப் பட்டியலைக் கொடுத்துள்ளார். இவரது ஆய்வையும் பட்டியலை பல இஸ்லாமியர்கள் தங்கள் ஆய்வுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். 1924ம் ஆண்டு கெய்ரோவில் முதல்முறையாக அச்சு வடிவில் வெளியான குர்ஆனுக்கும் இவரது ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (Link).
3) சர் வில்லியம் முயிர் (Sir William Muir, 1819 – 1905) :
இஸ்லாம் பற்றி ஆய்வு செய்த அறிஞராவார். இவர் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தகமாக எழுதினார், மேலும் இதர இஸ்லாம் சம்மந்தப்பட்ட பல ஆய்வு புத்தகங்களையும் எழுதியுள்ளார். [1][2]
குர்ஆனின் ஸூராக்கள் இறக்கப்பட்ட வரிசை
Chronological Order of Quran Chapters
இந்த பட்டியலை எப்படி புரிந்துக்கொள்வது: ஸுயுத்தி மற்றும் நால்டெக் அறிஞர்களின் படி, முதன் முதலாக இறக்கப்பட்ட ஸூரா, இன்று குர்ஆனில் 96வதாக உள்ள ஸூராவாகும். வில்லியம் முயிர் அறிஞரின் படி, முதன் முதலாக இறக்கப்பட்டது 103அது அத்தியாயமாகும்.
- இறக்கப்பட்ட வரிசை – Revealed order
- ஸுயுத்தி வரிசை – Suyuti order of chapters
- நால்டெக் வரிசை – Noldeke order of chapters
- முயிர் வரிசை - Muir order of chapters
இறக்கப்பட்ட வரிசை | ஸுயுத்தி வரிசை | நால்டெக் வரிசை | முயிர் வரிசை |
1 | 96 | 96 | 103 |
2 | 68 | 74 | 100 |
3 | 73 | 111 | 99 |
4 | 74 | 106 | 91 |
5 | 111 | 108 | 106 |
6 | 81 | 104 | 1 |
7 | 87 | 107 | 101 |
8 | 92 | 102 | 95 |
9 | 89 | 105 | 102 |
10 | 93 | 92 | 104 |
11 | 94 | 90 | 82 |
12 | 103 | 94 | 92 |
13 | 100 | 93 | 105 |
14 | 108 | 97 | 89 |
15 | 102 | 86 | 90 |
16 | 107 | 91 | 93 |
17 | 109 | 80 | 94 |
18 | 105 | 68 | 108 |
19 | 113 | 87 | 96 |
20 | 114 | 95 | 113 |
21 | 112 | 103 | 74 |
22 | 53 | 85 | 111 |
23 | 80 | 73 | 87 |
24 | 97 | 101 | 97 |
25 | 91 | 99 | 88 |
26 | 85 | 82 | 80 |
27 | 95 | 81 | 81 |
28 | 106 | 53 | 84 |
29 | 101 | 84 | 86 |
30 | 75 | 100 | 110 |
31 | 104 | 79 | 85 |
32 | 77 | 77 | 83 |
33 | 50 | 78 | 78 |
34 | 90 | 88 | 77 |
35 | 86 | 89 | 76 |
36 | 54 | 75 | 75 |
37 | 38 | 83 | 70 |
38 | 7 | 69 | 109 |
39 | 72 | 51 | 107 |
40 | 36 | 52 | 55 |
------------------
இறக்கப்பட்ட வரிசை | ஸுயுத்தி வரிசை | நால்டெக் வரிசை | முயிர் வரிசை |
41 | 25 | 56 | 56 |
42 | 35 | 70 | 67 |
43 | 19 | 55 | 53 |
44 | 20 | 112 | 32 |
45 | 56 | 109 | 39 |
46 | 26 | 113 | 73 |
47 | 27 | 114 | 79 |
48 | 28 | 1 | 54 |
49 | 17 | 54 | 34 |
50 | 10 | 37 | 31 |
51 | 11 | 71 | 69 |
52 | 12 | 76 | 68 |
53 | 15 | 44 | 41 |
54 | 6 | 50 | 71 |
55 | 37 | 20 | 52 |
56 | 31 | 26 | 50 |
57 | 34 | 15 | 45 |
58 | 39 | 19 | 44 |
59 | 40 | 38 | 37 |
60 | 41 | 36 | 30 |
61 | 42 | 43 | 26 |
62 | 43 | 72 | 15 |
63 | 44 | 67 | 51 |
64 | 45 | 23 | 46 |
65 | 46 | 21 | 72 |
66 | 51 | 25 | 35 |
67 | 88 | 17 | 36 |
68 | 18 | 27 | 19 |
69 | 16 | 18 | 18 |
70 | 71 | 32 | 27 |
71 | 14 | 41 | 42 |
72 | 21 | 45 | 40 |
73 | 23 | 16 | 38 |
74 | 32 | 30 | 25 |
75 | 52 | 11 | 20 |
76 | 67 | 14 | 43 |
77 | 69 | 12 | 12 |
78 | 70 | 40 | 11 |
79 | 78 | 28 | 10 |
80 | 79 | 39 | 14 |
-------------------
இறக்கப்பட்ட வரிசை | ஸுயுத்தி வரிசை | நால்டெக் வரிசை | முயிர் வரிசை |
81 | 82 | 29 | 6 |
82 | 84 | 31 | 64 |
83 | 30 | 42 | 28 |
84 | 29 | 10 | 23 |
85 | 83 | 34 | 22 |
86 | 2 | 35 | 21 |
87 | 8 | 7 | 17 |
88 | 3 | 46 | 16 |
89 | 33 | 6 | 13 |
90 | 60 | 13 | 29 |
91 | 4 | 2 | 7 |
92 | 99 | 98 | 113 |
93 | 57 | 64 | 114 |
94 | 47 | 62 | 98 |
95 | 62 | 8 | 2 |
96 | 55 | 47 | 3 |
97 | 76 | 3 | 8 |
98 | 13 | 61 | 47 |
99 | 98 | 57 | 62 |
100 | 59 | 4 | 5 |
101 | 110 | 65 | 59 |
102 | 24 | 59 | 4 |
103 | 22 | 33 | 58 |
104 | 63 | 63 | 65 |
105 | 58 | 24 | 63 |
106 | 49 | 58 | 24 |
107 | 66 | 22 | 33 |
108 | 65 | 48 | 57 |
109 | 64 | 66 | 61 |
110 | 61 | 60 | 48 |
111 | 48 | 110 | 60 |
112 | 5 | 49 | 66 |
113 | 9 | 9 | 49 |
114 | 1 | 5 | 9 |
2.2 குர்ஆன் அத்தியாயங்களின் வகைகள்: மக்கீ மற்றும் மதனீ
மக்கிய்யா & மதனிய்யா
இது முதலாவது வகைப்படுத்தல். குர்ஆன் அத்தியாயங்கள் இரண்டு வகையாக உள்ளன. மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் "மக்கீ" என்றும், மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களை "மதனீ" என்றும் அழைக்கப்படுகின்றன. முஹம்மது ஹிஜ்ரத் செய்வதற்கு முன்பு இறக்கப்பட்ட வசனங்கள்:மக்கீ, மற்றும் ஹிஜ்ரத் செய்த பிறகு இறக்கப்பட்ட வசனங்கள்:மதனீ.
உங்களிடம் ஒரு குர்ஆன் இருந்தாலோ, அல்லது இந்த இணைய தளத்திலோ (http://www.tamililquran.com/suraindex.asp) நீங்கள் அத்தியாயங்களின் பட்டியலில், மக்கீ, மதனீ என்று ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நேராக எழுதியிருப்பதை காணமுடியும்.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் மொத்தம் 87, வசனங்கள் மொத்தம் 4621 ஆகும், மொத்த குர்ஆனில் இதன் சதவிகிதம் 74.1% ஆகும். இதே போன்று மதினாவில் இறக்கப்பட்ட மொத்த அத்தியாயங்கள் 27 ஆகும், மொத்த வசனங்கள் 1615 மற்றும் வசனங்களின் சதவிகிதம் 25.9% ஆகும். இந்த பட்டியல் முஹம்மதுஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
சில முஸ்லிம் அறிஞர்கள் மக்கீ அத்தியாயங்கள் 86 என்றும், மதனி அத்தியாயங்கள் 28 என்றும் கூறுகிறார்கள்.
கீழ்கண்ட படத்தை பார்க்கவும், மக்கீ மற்றும் மதனீ அத்தியாயங்கள் எவை என்பதை வண்ணமிட்டு காட்டப்பட்டுள்ளது. மஞ்சல் வண்ணத்தில் இருப்பது மதனீ அத்தியாயங்களாகும், பச்சை வண்ணத்தில் இருப்பவை மக்கீயாகும்.
இரண்டாவதாக, அத்தியாயங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு, கீழ்கண்டவிதமாக பிரிக்கலாம்.
குர்ஆன் அத்தியாயங்கள் அரபியிலும் தமிழிலும் குர்ஆன்களில் எழுதியிருப்பார்கள். மொத்தம் 114 அத்தியாயங்களை நான் கீழ்கண்ட விதமாக பிரித்துள்ளேன். அத்தியாயங்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் இந்த பிரிவுகள் உதவும் என்று நம்புகிறேன்.
- 1) மனிதர்கள்/நபிகளின் பெயர்கள்
- 2) எழுத்துக்கள் (சில அரபி எழுத்துக்களே அத்தியாயங்களாக உள்ளன)
- 3) இறைவன்/ஜின்
- 4) காலம்/நேரம்
- 5) செயல்கள்/வினைச்சொற்கள்
- 6) உயிரற்றவைகள்/பொருட்கள்/பெயர்கள்
- 7) மிருகங்கள்
- 8) மற்றவைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக