அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு,
நான் (உமர்) தமிழ் கிறிஸ்டியன்ஸ் என்ற தளத்தில் ஒரு உறுப்பினன். மற்றும் என் கட்டுரைகள் முதலாவது இடம் பெற்றது என் தளமாகிய www.geocities.com/isa_koran என்ற தளத்தில் தான்.தமிழ் கிறிஸ்டியன்ஸ் (www.tamilchristians.com) என்ற தளம் உள்ளதை தெரிந்துக்கொண்ட உடன், உறுப்பினனாகி என் கட்டுரைகளை அங்கும் வைத்தேன். நான் எழுதும் கட்டுரைகளுக்கு, மறுப்புக்களுக்கு அத்தள நிர்வாகத்திடம் நான் கேட்க மாட்டேன். அந்த தளம் கிறிஸ்தவர்களுடைய கருத்துக்களை பரிமாரிக்கொள்ள வைத்துள்ளார்கள்.
நான் என் முதல் "இயேசு வரலாறு -1 மறுப்புக் கட்டுரையை" உங்கள் (iduthaanislam.blogspot.com) தளத்தில் Comment டாக பதித்தேன், அதை பிரசுரிக்கவில்லை. எனவே தான் நான் ஒரு புதிய தளத்தை உருவாக்கவேண்டி வந்தது ( http://isakoran.blogspot.com).
கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான்:
1. எனக்கும் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திற்கும் எந்த நிர்வாக சம்மந்தமுமில்லை. நான் ஒரு உறுப்பினன் மட்டும் தான்.
2. என் பிரதானமான தளம் : www.geocities.com/isa_koran மற்றும் http://isakoran.blogspot.com
3. உங்களுக்கு விருப்பமானால் என் "மறுப்பு கட்டுரைகளுக்கு" மறுப்பை எழுதுங்கள், அல்லது விட்டுவிடுங்கள். அது உங்கள் விருப்பம். நீங்கள் பதில் தரவேண்டுமானால், "ஒரு நிர்வாகம் தன் ஒப்புதலை தரவேண்டும்" என்று நீங்கள் நினைத்தால், அது முடியாது.
4. என் கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவித்தால், தெரிவியுங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள். உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் எண்ணும் போது, நானும் என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
5. ஒரு தளம் பொறுப்பேற்றால் தான் பதில் தருவேன் என்றால், அது உங்கள் விருப்பம். நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை.
இது தான் இஸ்லாமின் கேள்வி:
தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
எது சத்தியம்? -1 (தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில்)
G.N
அன்பானவர்களே... இறைவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்து இறைவனுக்கு பிரியமானவர்களாக மரிப்பதே மேல். இறைவனின் வார்த்தையை விசுவாசித்து அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பதன் வழியாகவே நாம் இறைவனுக்கு உவப்பானவர்களாவோம்.
இறை விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு மத்தியில் பல மாறுபாடுகள் நிலவுகின்றன. பிறவற்றை விட்டு விட்டு இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத்திற்கு மத்தியில் உள்ள பிரச்சனைகளை அலசும் முகமாக இந்த விவாதம் துவங்கியுள்ளது.
நானொரு முஸ்லிம். குர்ஆனை இறைவேதம் என்று நம்புபவன். வெறும் நம்பிக்கையுடன் நின்றுவிடாமல் அதன் வார்த்தைகளை முடிந்தவரை - என் அறிவுக்கு எட்டியவரை - விளங்கி வருபவன்.
முஹம்மத் மக்காவில் பிறந்தவர். தன்னை இறைத்தூதர் என்று அவர் சொன்ன பொழுதுகளில் அவர் பிறந்த பூமி சிலைவணக்கங்களாலும் - தீய செயல்களாலும் நிறைந்திருந்தன. அந்தப் பொழுதுகளில் திருக்குர்ஆன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் அவர்களைப் பற்றியும் அதேக் கொள்கையை சரிகண்டுக் கொண்டிருந்தவர்கள் - இருப்பவர்கள் பற்றியும், அவர்கள் எவ்வளவு தவறான வழியை தெரிவு செய்து தன்னை இறை நிராகரிப்பின் பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அதிலிருந்து சிந்தித்து மீண்டு வரும் வழிகளையும் முன்வைத்தது.
இறைவனால் இறைத்தூதராக ஆக்கப்பட்டு தன் பணியைத்துவங்கிய முஹம்மத் அவர்கள் பிறகு மதினா செல்கிறார்கள். அங்கு வாழ்ந்த பிற சமூகங்களை சந்திக்கின்றார்கள். அந்த சமுதாய மக்கள் விசுவாசத்தால் முந்தியவர்கள் என்று தங்களைக் கூறிகொண்டிருந்தவர்கள். அவர்கள் யூதர்களும் - கிறிஸ்த்தவர்களுமாவர்.
அநத சமூகங்களுக்கு வந்த இறைத்தூதர்களைப் பற்றியும் அவர்களின் பணிப்பற்றியும் குர்ஆன் பேசத்துவங்கியதும், அந்த சமுகங்கள் செய்த தவறுகளையும் குர்ஆன் சுட்டிக்காட்டத்துவங்கியது. அதில் முக்கிய இடம் பிடிப்பதுதான் இறைத்தூதராக வந்த இயேசு இறைமகனாக மாற்றப்பட்ட விபரம்.
முந்தைய வேதங்களை - மோசேவுக்கு அவருக்கு முன் வந்தவர்களுக்கு, இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களை நம்பவேண்டும் என்று கட்டளையிடும் குர்ஆன் அந்த வேதங்களின் நிலை என்னவாகியது என்பதையும் சுட்டிக் காட்டத்தவறவில்லை. வேதங்களை இறக்கியவனின் ஒப்புதல் இல்லாமல் அவன் வார்த்தைகள் பிறரால் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத ஒரு வேதத்தை இயேசுவை அனுப்பிய அதே இறைவன் முஹம்மதுக்கு இறக்கி வைத்தான்.
பிற வேதங்களை நம்ப சொல்லும் அதே வேளை அந்த வேதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்ற குர்ஆனின் வாதம் தான் பிறர் வேதமாக நம்பிக்கொண்டிருக்கும் பைபிளை ஆய்வு செய்யும் நிலையை இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்படுத்தியது. உலகலாவிய அளவில் இது ஒரு பணியாகவே நடந்துக் கொண்டிருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த பணி மிக மிக மிகக் குறைவாகும்.
என் போன்றவர்களை பைபிளைப் படித்து அதன் நிலையை உணர செய்ய தூண்டுகோலாக அமைந்தவர் சென்னையை சேர்ந்த மெய்வழிப் பத்திரிக்கை ஆசிரியர் ஜெபமணியாவார்.
இவர் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுத துவங்கியது இஸ்லாமிய அறிஞர்களை விழிப்படைய செய்தது. அவர்கள் பைபிளை அலசத்துவங்கினார்கள். எழுதத்துவங்கினார்கள். நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டார்கள். கிறிஸ்த்தவர்கள் சார்பாக அதே ஜெபமணி கலந்துக் கொண்டார். இஸ்லாத்திற்காக விவாத அழைப்பு விட்ட அறிஞர் பிஜே கலந்துக் கொண்டார்.
மதுரையில் சில நாட்கள் அந்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்புப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. (அந்த விவாத சீடிகளை கிறிஸ்த்தவர்கள் மிக அவசியமாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். விவாதம் செய்ய ஜெபமணி தகுதியானவர் அல்ல என்று உங்களில் பலர் கருதலாம். ஜெபமணிக்காக இல்லாவிட்டாலும் இஸ்லாத்தின் தரப்பில் பைபிள் குறித்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் உஙகள் சிந்தனைக்கு பெரும் சவாலாக அமையும்.
அதன் தொடர்ச்சியாகவே இயேசு பற்றி பைபிள் நிலவரங்களை கூடுதலாக கவனம் செலுத்தத் துவங்கினோம். காழ்ப்புணர்ச்சிகளுக்கோ வெறுப்புணர்ச்சிகளுக்கோ இடமளிக்காமல் ஒரு சராசரி மனநிலையோடுதான் அன்றிலிருந்து இன்றுவரை நமது பைபிள் குறித்த சிந்தனை நீடிக்கின்றது.
பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சிந்தனைக்கு நாம் முரட்டுத்தனமாக வரவில்லை. பைபிளை ஊன்றிப்படித்த பிறகே அந்த சிந்தனைக்கு வந்தோம். அதனால் தான் இயேசு குறித்த நிலவரங்களை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன" என்ற வரலாற்றுத் தொடரை துவங்கினோம். அது குறித்து கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிலர் விவாதத்திற்காக நம்மோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த விவாதம் ஒரு முடிவை நோக்கி நம்மை இட்டு செல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேதங்களை இன்னும் ஆழமாக அணுகி அலசி பார்க்க ஒரு வாய்ப்பாக அமையட்டும்.
இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு மறுப்பு பல இணையங்களில் வந்தாலும் (ஒரே மறுப்பு பல இணையங்களில் பிரசுரிக்கப்படுகின்றது) நாம் 'தமிழ் கிறிஸ்டியன்" இணையத்தை நம்மோடான நேரடி விவாதக்களமாக எடுத்துக் கொள்வோம். இதற்கு அவர்கள் உடன்பட்டு தங்கள் ஒப்புதலை அளிக்கட்டும்.
ஒப்புதல் கேட்பதற்கு கூட காரணம் இருக்கின்றது.
உமர் என்றப் பெயரில் எழுதும் சகோதரர் ஜுலை 6ம் தேதி செய்த பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருந்து, நம் இருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கட்டுரைகள் நமக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இஸ்லாமிய சகோதரர்கள் "கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது" என்று தலைப்பு கொடுத்துயிருந்தார்கள்.
இந்த மறுப்புக் கட்டுரைகள், எழுதும் நபருடைய சொந்த கருத்துக்கள் என்றும், இதில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு இந்த http://www.tamilchristians.com/ தளம் பொருப்பு வகிக்காது என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேற் கொண்டு இத்தளத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
இவரது கருத்துக்களுக்கு இணையத்தளம் பொருப்பு ஏற்காது என்றால் எதை நம்பி எழுதத்துவங்குவது என்பது கேள்வி.
இணையத்தின் நிர்வாகம் பொருப்பேற்கும் கருத்துக்களே இணையத்தில் பதிக்கப்பட வேண்டும். (இதுதான் இஸ்லாம் இதே நிலையில் தான் உள்ளது).நாங்கள் பொருப்பேற்க மாட்டோம் ஆனால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதித்து விட்டுப் போகலாம் என்று ஒரு மன்ற நிர்வாகம் அலட்சியப்படுத்தக் கூடாது.
உமர் என்பவரோ அல்லது பிற சகோதர சகோதரிகளோ யாராக இருந்தாலும் அவர்களின் பதிப்புக்கு மன்றமும் பொருப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.
நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மன்றத்தில் பதியுங்கள். தொடர்வோம்
எங்கள் தொடர்பு அஞ்சல்.
totmpage@gmail.com
(முக்கிய குறிப்பு: இதுதான் இஸ்லாம் இல்லாத மெயில் ஐடிகளை கேள்வி பதிலில் பயன்படுத்தியுள்ளதா... என்பது பற்றிய உங்கள் பதிவுக்கு உங்கள் ஒப்புதலுக்கு பிறகு விளக்கமளிப்போம். தேவன் நாடட்டும்)
உங்களின் அஞ்சல் முகவரியை வெளியிடுங்கள்.
3 கருத்துகள்:
ஜெபமணி அவர்களின் கப்பா நிலைக்குமா என்ற நூலை நான் முன்பொருதடவை வாசித்திருக்கிறேன். எனக்கு அந்த புத்தகம் மிகவும் ஆச்சரியத்தை அந்நாட்களில் ஏற்படுத்தியது. எனினும் கால ஓட்டத்தில் அதை நான் மறந்து விட்டேன். உங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். கடவுள் கருணை உண்டு.
பவுலை கள்ளத் தீர்க்கதரிசி என்ற வாதத்திற்கு பதில் என்கிறீா்களே!பவுலை கள்ளத் தீர்க்கதரிசி அவர் இயேசுவின் தரிசனத்தை நேரடியாக கண்டு இயேசுவை மகிமைப்படுத்தி கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என கிறிஸ்துவுக்காக உயிரையே கொடுத்தவர். இயேசுவின் நாமத்தினால் முழங்கால் யாவும் முடங்கும்,நாவுகள் யாவும் அவரே தேவன் என அறிக்கையிடும் என்றெல்லாம் இயேசுவையும் அவருடைய தெயவீகத்தையும் அறிந்து உணர்ந்து, புகழ்ந்து அவருக்ககாக வாழ“க்கையையே அர்ப்பணித்தவர் எப்படி ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இருக்க முடியும். உங்களது வாதம் சரியானதாக இருந்தால் இயேசுவுக்கு விரோதமாக அல்லவா அவர் செயல்பட்டிருக்க வேண்டும்.அப்படி இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் மறுதலித்து அவர் தேவ குமாரன் இல்லை என உலக மக்களையே இரண்டாக பிரிப்பதற்கு காரணமான முகம்மது நபி அல்லவோ கள்ளத் தீர்க்கதரிசி என உங்களது வாதப்படியே திட்டமாக கூறலாமே.மற்றொருவிதத்தில் அல்லாவின் தீர்்க்கதரிசி என நீங்கள் கூறுகிற நபிக்கு அல்லா எப்போதாவது காட்சி கொடுக்கவில்லையே. ஜிப்ரீல் வானவரைத்தானே நபி தரிசித்தாா்.அதுபோல குரான் சொல்லுகிற ஐபபிள் சொல்லுகிற தீர்க்கதரிசி மூஸா அவர்களுக்கு அல்லாஹ் எத்தனை முறை காட்சி கொடுத்துள்ளார்.அதே அல்லா நபிக்கு மட்டும் ஏன் காட்சி தரவில்லை.ஒரு தீர்க்கதரிசிக்கு, ஒரு வேதத்தையே முழு உலகுக்கும் கொண்டு வருகிற நபிக்கு மட்டும் ஏன் அல்லாஹ் தம்மை வெளிப்படுத்தவில்லை.உங்களது வாதப்படியே நபி கள்ளத்“ தீர்க்கதரிசி என ஏன் சொல்லக் கூடாது.பவுலுக்கு தேவன் அருளிய வெளிப்பாடுகளை இயேசுவோடு கூட இருந்த பேதுரு சாட்சியிட்டு உறுதிப்படுத்தியுள்ளாரே.அவரோடு இருந்த யோவான் இன்னும் எத்தனைபோ் அதனை உறுதிப்படுத்தியுள்ளனரே. நபி சொன்னதை வேறு யாராவது உறுதிப்படுத்தினார்களா? வேறு ஆட்களே அல்லாவுக்கு கிடைக்கவில்லையா அல்லது நபி கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லியுள்ளனாரா? படிப்பறிவே இல“லாத நபி சொன்னதை வேத வாக்கு என் வாதிடுகிறீர்களே1 படித்து பட்டம் பெற்று, பெரும் செல்வந்தனாயிருந்து,கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்பி கிறிஸ்தவத்தை அழிக்க எண்ணியவனையே கர்த்தர் இயேசு சந்தித்து மாபெரும் சாட்சியாக எழுப்பி வைத்ததை மறுக்க முடியாத சாட்சி என்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவரையே கள்ளத்தீர்க்கதரிசி என வாதிடுகிறீர்கள். எத்தனை ரோம அதிகாரம் பெற்று கிறிஸ்துவுக்காக அத்தனையையும் உதறிவிட்டு உலகத்தின் பாதி நாடுகள்வரை இயேசுவின் சுவிசேஷம் பரவ காரணமாயிருந்தவர் கள்ளத் தீர்க்கதரிசி எனக் கூறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்.முகம்மது நபியே கள்ளத் தீர்்க்கதரிசியாவார். அதனால்தான் மக்கள் அவரை மெக்காவைவிட்டு விரட்டினார்கள் என்பது உமக்குத் தெரியும்தானே.
Muttaal Muthalil kaafiraana nee Rasoolai vimarsikka thaguthi attravan , Unnai pondra kaafirhaluku Allah Nichchayam alivai tarivaanaha aameen! Nea ippadi katturai eluthuvathaal Naan yengala nambikayaium sari, Rasoolin sunnavaum sari vittu vida maattom.
கருத்துரையிடுக