இது தான் இஸ்லாம் தளத்திற்கு வந்த "Comment ற்கு" பதில் :
1,கஜினி said... அன்புடையோர் அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் இணையத்தில் வெளிவந்த "கிறிஸ்த்துவம் கேள்வி பதில்" பகுதியில் கேள்வி கேட்ட அனைத்து E-mail முகவரிகல் போலியானவை என்றும் தாங்களே இது போன்ற கேள்விகளை சுயமாக தயாரித்து வெளியிட்டதாக http://www.tamilchristians.com/ கூருகிறது. தங்களின் விளக்கம் தேவை.
July 17, 2007 9:50 PM
2,அறிஞன் said...
அவர்கள் அவசரமாக அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். நடந்தது வேறு. சம்பந்தப்பட்ட இணையத்தின் நிர்வாக ஒப்புதலைக் கேட்டிருந்தோம் அவர்கள் பின் வாங்கியுள்ளார்கள்.
நமக்கு மறுப்பளிக்கும் பிற வலைப்பூக்களை நாம் சுட்டிக்காட்டாமல் அவர்களின் இணையத்தை மட்டும் சுட்டிக் காட்டியதற்கு காரணம் அந்த இணையத்தில் மட்டும் தான் பின்னூடல்கள் வருகின்றன. நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பிறரும் வலியுறுத்தலாம்.
போலி IDகளை நாம் உருவாக்கவில்லை என்பதும் அவர்களின் அவசரத்தின் நிலையையும் தனிபதிவில் விளக்குவோம்
July 18, 2007 11:33 AM
3,இயேசு கிறிஸ்த்து said...
அன்பு நண்பர் அறிஞன் அவர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும். முதலில் உங்களுக்கு மறுப்பை வெளியிட்டது http://isakoran.blogspot.com/2007/07/blog-post_16.htmlஇந்த இணையமே.பின்புதான் கிறிஸ்தவர் இணையத்தில் பதியப்பட்டு உள்ளது.வலைபூக்களில் நீங்கள் ஒரு கட்டுரை வெளியிடும் போது அதற்கு பதில் தெரிந்த யாராக இருந்தாலும் பதில் அளிப்பார்கள்.அளித்த பதில் சரியா அல்லது தவறா என்பதை விளக்க முயற்சி செய்யுங்கள்.அதை விடுத்து இணையங்களுக்குள் விவாத அழைப்பை விட்டு பின் வாங்கியுள்ளார்கள் போன்ற உதார் எல்லாம் விடாதீர்கள்.உங்களிடம் இருந்து வந்த கட்டுரைக்கு பதில் எழுதிய இணையம் வேறு,அவைகள் பதியப் பட்டுள்ள இணையங்கள் வேறு.உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் வீண் விவாதமெல்லாம் விட்டு விட்டு பதில்களை தாருங்கள்.இன்ஸா அல்லா.வரும் நாட்களில் உண்மையை உங்களிடம் எதிர் பார்க்கும் ஜாமா
July 18, 2007 11:57 PM
4,Asalam said... மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கு இது வருமேயானால், யோசிக்க வேண்டிய கட்டாய நிலைமையில் இருப்பார்கள் நமது கிருத்துவ சகோதரர்கள். ஆமீன்
திரு அறிஞன் அவர்களுக்கு என் (http://isakoran.blogspot.com) பதில்:
- இது தான் இஸ்லாம் தளத்தில் "பொய்யான ஐடிக்கள் வெளியிடப்பட்ட நாள்" Thursday, July 12, 2007 கிறிஸ்த்துவம் கேள்வி பதில்
- நான் ஐடிக்களை உருவாக்கி, பதில் தந்த நாள் : Friday, July 13, 2007
Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம் - இது தான் இஸ்லாம் "தள அனுமதி கேட்டு" இருந்த நாள்: Sunday, July 15, 2007
தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1 - அனுமதி தரப்படமாட்டாது என்றும், தேவையானால் பதில் தரவும், இல்லையானால் விட்டுவிடவும் என்றுச் சொல்லி, பதில் கொடுத்த நாள் : Monday, July 16, 2007
இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.
உண்மையில் உங்களிடம் பதில் இருந்தால்( பொய்யான ஐடிக்கள் பற்றி) உடனே அதை சொல்லவேண்டியது தானே,
ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் செய்கிறீர்கள்?
மடியில் கனம் இல்லையானால் ஏன் வழியில் பயம் ?
நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளம் பொறுப்பேற்காது என்று, பின் ஏன் இன்னும் கால தாமதம் செய்கிறீர்கள்?
நான் சொன்னது பொய் என்றால், சொல்லவேண்டியது தானே "இது தான் உண்மை, அந்த கிறிஸ்தவன் பொய்சொன்னான் என்று" ?
நீங்கள் பதில் தரவில்லையானாலும், நான் நீங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.
யோவான் 14:16ல் சொல்லப்பட்டது ஆவியானவரா அல்லது முகமதுவா? என்ற கேள்விக்கு என் பதிலையும் நான் தந்துவிட்டேன். http://isakoran.blogspot.com/2007/07/1416.html
இன்னும் சில கேள்விகளுக்கு பதிலையும் கூடிய சீக்கிரத்தில் தருவேன்.
மறுபடியும் சொல்கிறேன், நடந்ததை சொன்னேன், ஆனால், உங்களிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. உங்களிடம் பதில் இருந்தால் பதில் தாருங்கள் இல்லையானால் விட்டுவிடுங்கள்.
மற்ற சகோதரர்களுக்கு, உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த நான்கு மெயில் ஐடிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், மற்றும் என் தளத்தில், காமன்ட் எழுதுங்கள். நான் நீங்கள் என்ன செய்தியை அனுப்பினீர்களோ அதை இதே தளத்தில் உங்கள் காமன்டிற்கு கீழே பதிவு செய்கிறேன்.
இனிமேல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது...
தளத்தை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.......
3 கருத்துகள்:
அன்புள்ள சகோதரர்க்கு ,
நீங்கள் முரடாட்டம் முடைய சனத்தை போன்றே இருகிறிர்கள் தயவு செய்து கர்த்தருக்கு பயபடுங்கள் முஹம்மது திர்கதரிசியாக இல்லாமல் போகட்டும் ,ஆனால் கர்த்தரே ஓர இறைவன் என்பதை என் ஏற்க மறுகிறிர்கள்.
1 .பழைய ஏற்பாடு காலம்முதல் இன்றுவரை யூதர்கள் என் திரித்துவ கொள்கையியே ஏற்று கொள்ளவில்லை .
2 .புதிய ஏற்பாட்டில் மட்டும் திரித்துவம் கூறபடுவது ஏன்?
3 .ஏசு ஏன் திரித்துவ கொள்கையியே முன்வைக்கவில்லை ?
தயவு செய்து" நானே கர்த்தர் , என்னையல்லாமல் ரட்சகர் இல்லை". (எசாயா :43 :11 )
brother ..
please read below website
www.icschennai.com and masjidducson.org
give your suggestion about that Islamic site...
நான் கேட்ட கேள்விக்கு அந்த தளத்தை சார்தர்களுக்கு பதிலளிக்க தெரியவில்லையா?
என்னுடைய கேள்வி
1 .பழைய ஏற்பாடு காலம்முதல் இன்றுவரை யூதர்கள் என் திரித்துவ கொள்கையியே ஏற்று கொள்ளவில்லை .
2 .புதிய ஏற்பாட்டில் மட்டும் திரித்துவம் கூறபடுவது ஏன்?
3 .ஏசு ஏன் திரித்துவ கொள்கையியே முன்வைக்கவில்லை ?
கருத்துரையிடுக