அன்புள்ள மனித இனமே வணக்கம்,
"இது தான் இஸ்லாம்" தளம் இயேசுவின் வரலாறு என்று ஐந்து தொடர் கட்டுரையை எழுதியது. பைபிளைப் பற்றி தவறான தகவல்கள் கொடுத்து இருந்தார்கள். நான் அதற்கு மறுப்பு எழுதினேன்.
இக்கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக "இது தான் இஸ்லாம்" தளம் "கிறித்துவம் கேள்வி பதில்" என்ற தலைப்பில் நான்கு கேள்விகள் அதற்கு இஸ்லாம் முறையில் பதில் கொடுத்து இருந்தார்கள்.
இந்த நான்கு கேள்விகள் வித்தியாசமான ஈ-மெயில் அட்ரஸ் மூலமாக தங்கள் தளத்திற்கு கேள்விகளாக வந்ததாக சொல்லி, அந்த ஈ-மைல் அட்ரஸ் கூட கொடுத்து இருந்தார்கள்.
இதோ அந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்கள் மற்றும் கேள்விகள்: Source : http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_12.html
http://www.tamilmuslim.com/QA/qa35.htm
1. இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?
irvanm(at)reedifmaildotcom
2. நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom
3. முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom
4. கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது?
mmsafi20(att)hotmaildotcom
இந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்களும் ஒரு பொய்யான ஈமெயில் அட்ரஸ்கள்.
இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்?
இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன். இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.
a) irvanm@rediffmail.com
b) kabmabul@yahoo.com
c) rafeeqrauoofa@gmail.com
d) mmsafi20@hotmail.com
(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)
இது எப்படி சாத்தியம் ?
உண்மை என்னவென்றால், இப்படி அவர்களுக்கு கேள்விகளும் வரவில்லை, இப்பெயர் கொண்ட மெயில் முகவரிகளும் இல்லை. ஒரு சர்வரில் ஒரே பெயரில் இரண்டு முகவரிகள் இருக்க வாய்ப்பு இல்லை. ( இதைப் பற்றி ஏதாவது புதிய தகவல் இருந்தால் எனக்கு தெரியபடுத்தவும்).
இது தான் இஸ்லாமா ? அல்லது இது தானா இஸ்லாம்:
இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, சிந்தியுங்கள். நேர்மையுள்ளவர்கள், நீதியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், இப்படி செய்யலாமா ?
ஏன் பொய்யானா முகவரியிலிருந்து கேள்விகள் வந்தது என்றுச் சொல்லவேண்டும் ? அவர்களாகவே, இதே கேள்விகளை கொடுத்து பதில் தரலாம் இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது ?
சரி, கொடுத்தது கொடுத்தீர்கள், உங்கள் நண்பர்களது முகவரியையாவது கொடுக்கலாம் இல்லையா?
(at Worst Case :இன்னும் சொன்னால், ஏன் ஒரு மணி நேரம் செலவழித்து இந்த நான்கு முகவரிகளையும் அவர்களே உருவாக்கி இருக்ககூடாது ?)
அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் பிறகு தருகிறேன்.
இது என்ன விளையாட்டு இறைவனுடைய ஊழியம் செய்யும் போது? உங்களுக்கு எங்கள் மறுப்பு கட்டுரைக்கு பதில் தரமுடிந்தால் தாருங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள்?
ஏன் இஸ்லாமின் பெயரை , அல்லாவின் பெயரை மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பெயரை கெடுக்கவேண்டும் ?
நல்ல பெயர் எடுக்க பல வருடங்கள் ஆகலாம், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிடம் பொதும்.
இதை படிக்கும் இஸ்லாமியர்களே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? இவர்களை கேட்கமாட்டீர்களா?
நேர்மை:
நான் எழுதும் கட்டுரைகளில், மறுப்புகளில் பிழை இருக்கலாம், எழுத்து பிழை, வசன எண் பிழை, ஏன் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனத்தை நான் தவறாக புரிந்துக்கொண்டு எழுதிகூட இருக்கலாம். நான் படித்த, பார்த்த சில தளங்களில் சில தவறான கருத்துக்களை நான் சொல்லியிருக்கலாம்.
என் தவறை சுட்டுக்காட்டினால், நான் திருத்திக்கொள்கிறேன், ஒப்புக்கொள்கிறேன், தேவைப் பட்டால் என் வார்த்தைகளை திரும்பபெற்றுக்கொள்கிறேன். இவைகளை என் கட்டுரைகளின் கடைசியில் பதித்து வைக்கிறேன்.
நான் மனிதன், தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, அதை திருத்திக்கோள்வதில் தான் வெற்றி உள்ளது.
"இயேசுவிற்கு அல்லது கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கு நான் ஒரு பொய்யான தகவலை என் மனசாட்சிக்கு தெரிந்தே சொல்வதை காட்டிலும், என் கைகள் தங்கள் வேலையை இழந்தால், அது எனக்கு நலமாக இருக்கும்".
பொய் பித்தலாட்டத்தை இயேசு ஒப்புக்கொள்ள மாட்டார்.
இயேசு 30 வருடங்கள் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களைப் பார்த்து கேட்கும் கேள்வி: என்னில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் ? அவரை நோக்கி ஒரு விரலும் எழும்பவில்லை.
இது தான் இயேசு கிறிஸ்து.
இனி அவர்கள் கட்டுரைகளில் உள்ள நேர்மையை இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்.
(நானோ அல்லது மற்ற கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவரவில்லை, அதற்காக சில கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளை இங்கு சொல்லவேண்டாம். ஆனால், இயேசு நல்லவர், அவரின் வழி சரியானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை)
வாய்மையே வெல்லும், சத்தியமேயே ஜயதே.
சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியும் உங்களை விடுதலையாக்கும் - இயேசு.
David
site : www.geocities.com/isa_koran
email : isa.koran@gmail.com
Blod : http://isakoran.blogspot.com
8 கருத்துகள்:
You write very well.
Excellent Article. Many Muslims unfortunately have not understood kuran , because they never read kuran by themselves in a language that they can understand. PJ is a good communicator but a very poor researcher .
hey idiotic fellows,you rewrite your bible in your own languages and twist its meanings(although bible is a ditch)..You idiots dont have guts to establish muslims worthful comments and you ignore and you finally say Christianity is best..bible sucks..asingamailla...poi velaya parungada..
அஸ்லாமு அலைக்கும்.......
நீங்கள் இந்த தளத்திள் இஸ்லாத்தை பற்றி பல செய்திகளை இஸ்லாத்திற்கு மாற்றமாக சொல்லியுள்ளீர்கள் இதை நீங்கள் மறுத்தாலும் நாம் இப்படியே இணைய தளத்தில் வதிடுவதில் பயனில்லை எனவே நீங்கள் இஸ்லாமியர்களுடன் நேரடி விவாத்திற்கு தயாரா
திரு MANSOOR அவர்களுக்கு,
இப்போது நீங்கள் பின்னூட்டமிட்ட கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்களின் படி "இஸ்லாமிய அறிஞர்கள்" எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லலாமே, அதே போல இத்தளத்தின் அனேக கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லலாமே.
அடுத்ததாக, நேரடி விவாதத்தை விட, இப்படி கட்டுரை எழுதுவதே எனக்கு பாதுகாப்பானது. மட்டுமல்ல, எனக்கு நேரம் கிடைக்கும் போது கிடைத்த நேரத்தை பயன்படுத்தி நான் எழுதுகிறேன். இஸ்லாமியர்களின் உண்மை முகத்தையும், இஸ்லாமிய உலகம் மறைத்துக்கொண்டு இருக்கின்ற உண்மைகளை வெளிக்கொணர்ந்துக் கொண்டு இருக்கிறேன். உங்களால் முடிந்தால், என்னுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் பதில் அளிக்கமுடிந்தால் பதில் அளியுங்கள். அவைகளுக்கு எனக்கு நேரம் கிடைக்கும் போது பதில் அளிப்பேன். இதுவரை எழுதிய இத்தள கட்டுரைகளை படித்துப் பாருங்கள். இஸ்லாம் பற்றி உங்களுக்கே தெரியாத அனேக உண்மைகளை அறிந்துக்கொள்வீர்கள்.
பீஜேவைப் போல புத்தகங்கள் தெம்பாக எழுதிவிட்டு, நாங்கள் பதில் சொன்னவுடன், கேள்வி கேட்டவுடன் நேரடி விவாதத்திற்கு வருகிறாயா இல்லையா? என்று கேட்கும் "(கோழைத் தன) அறிஞராக இருக்கவேண்டாம்" என்று கேட்டுக்கொள்கிறேன்.
உமர் அண்ணா, நீங்க சொன்னது ரொம்ப சரி, உங்களுக்கு நேரம் கிடைச்சா தான் எதையாவது பொய்யை தேடி மொழி பெயர்த்து வெளியிடுவிங்க கரெக்ட்டா?
உங்களுக்கு பதில் சொல்ல முடியமா போனா, கட்டுரை மொழி பெயர்க்க கிடைக்களைனா, நேரம் இல்லைன்னு ஓடிருவிங்க அப்படி தானே?
அப்படினா, எங்கள் கருத்தா அறிவிச்சு என்ன புரோயோச்சனம்?
நாங்க வேலை மெனக்கெட்டு கருத்த அறிவிப்போம், கேள்வி எழுப்புவோம், ஆனா நீங்க நேரம் கிடைச்சா வெளியிடுவிங்க, பதில் அளிப்பிங்க, முடியாட்டி அப்படியே விட்டுட்டு வேற மொழி பெயர்ப்பு தேட போயடுவிங்க அப்படி தானே?
இப்படி நீங்க செய்றதை தடுக்க தான் நேரடி விவாதத்துக்கு குப்பிடுறது. நேரடி விவாதத்துல இப்படி மழுப்ப முடியாது பாருங்க. எழுத்து விவாதம் மாறி இஷ்டத்துக்கு நேரத்த வேஸ்ட் பன்ன முடியாது பாருங்க.
உமர் அண்ணா, தெரியாம கேக்குறேன், நேரடி விவாதத்துல செத்தவங்க எண்ணிகையை கொஞ்சம் சொல்றிங்களா? இதுவரை விவாதத்துல ஈடுபட்ட கிறிஸ்தவ அறிஞ்சர்கள் செத்து போயடாங்களா? அப்படியே செத்து இருந்தாலும் அவங்களுக்கு சொர்க்கம் கிடையாதா?
இஸ்லாமியர்கள் கேட்டவங்க மாறி கருத்த அறிவிச்சுட்டு, நீங்க தானே எங்க குர்ஆன்னை அசிங்க படுத்தி புகை படம் வெளியிடிங்க. நாங்க அதை போல் செயலையே!!
நிங்களே கேள்வி கேட்டுட்டு, உடனே பதில் சொல்ற மாறி குர்ஆன்னை இழிவு படுதுரிங்கள், அப்படினா யார் கேட்டவங்க? குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்.
ஒரு கோழையை போல பயந்து ஒடுரிங்க, அனா அது இல்ல உண்மை காரணம், உங்களுக்கு சொந்தமா பதில் அழிக்க தெரியாது போலா, யாரது எழுத்தி வச்சா அதை மொழி பெயர்பிங்க அப்படி தானே?? அப்படி இல்லைனா பைபிள் வசனங்களுக்கு உங்க சொந்த கருத்த சொல்லமா தெளிவான ஆதாரம் வச்சு விளக்கம் தாருங்களேன்???
-ஜாவித்
உமர் அண்ணா,
// உங்களால் முடிந்தால், என்னுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் பதில் அளிக்கமுடிந்தால் பதில் அளியுங்கள். அவைகளுக்கு எனக்கு நேரம் கிடைக்கும் போது பதில் அளிப்பேன்//
நான் அறிந்தவரை உங்களுக்கு அண்ணன் ஜியா அவர்கள் அளித்த இரண்டு பதில்களும், அது சம்பந்தமாக அவர் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கும் நீங்கள் தான் இன்னும் பதிலளிக்க வேண்டி யுள்ளது என நினைகிறேன்.
சகோ. ஜாவிட்
சகோ. உமர் அவர்களின் கட்டுரைகள் அனைத்தும் மொழிபெயர்ப்பல்ல. பி.ஜே அவர்கள் மற்றும் உங்கள் தமிழ் இஸ்லாமியர்களுக்கான பதில்கள் அனைத்தும் அவரின் தேடல்களின் விளைந்தவை.
அடுத்து மொழிபெயர்ப்பு என்பது இலகுவான பணியல்ல. ஏற்கனவே செய்து முடித்த ஆய்வு கட்டுரைகளை மீண்டுமாக ஆய்வு செய்ய (தேவைப்பட்டால் ஒழிய) வேண்டிய அவசியமில்லை. அவற்றினை மொழிபெயர்க்கலாம். இதன் மூலம் நிறைய நேரத்தை மீதப்படுத்தலாம். இது பொதுவாக கடைபிடிக்கப்படும் முறைதான்.
சான்றாக ஒரு விஞ்ஞான ஆய்வுக்கட்டுரை ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தால் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம். மீண்டுமாக தமிழுக்கென்று ஆய்வு நடத்த தேவையில்லை. அப்படி செய்தால் அது வீண் முயற்சி.
ஆயினும் சொந்தமாக அவசியத்தின் நிமித்தம் (பல்கலைக்கழக ஆய்வு சம்பந்தமாக) வேண்டியிருந்தால் அப்படியே மொழிபெயர்ப்பு சரியான முறையல்ல.
இங்கு இரண்டாவது காரணி இத்தளத்தினை பொறுத்தவரை அவசியம் ஏற்படும்போது உபயோகிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக