சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
முந்தைய கட்டுரைகள்:
சவக்கடல் சுருள்கள் பதினோறு குகைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. ஒவ்வொரு குகையிலும் என்னென்ன சுருள்கள் கிடைத்தன என்பதை இப்போது சுருக்கமாக காண்போம்.
குகை 1
கும்ரான் பகுதி மேய்ப்பர்களால் 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குகை இதுவாகும். இந்த குகையில் பெரிய மண் ஜாடிகளில் கிடைத்த சுருள்கள் நல்ல நிலையில் இருந்தன. இந்த குகையில் கிடைத்த சுருள்களில் மிகவும் முக்கியமானவைகள்:
- ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் (Isaiah) – இரண்டு பிரதிகள் கிடைத்தன.
- போர் சுருள் (The War scroll) – ஒளியின் பிள்ளைகளுக்கும், இருளின் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் போர் பற்றிய விவரங்கள் பற்றியது.
- சமுதாய சட்டங்கள் (The Rule of the Community) – கும்ரானில் வாழ்ந்த யூத சமுதாயம் பின்பற்றும் சட்டங்கள் பற்றிய விவரங்கள்.
குகை 1ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம் / இல்லை) |
---|---|---|---|
1 | 1Q1 | Genesis (ஆதியாகமம்) | ஆம் |
2 | 1Q2 | Exodus (யாத்திராகமம்) | ஆம் |
3 | 1Q3 | Paleo-Leviticus (லேவியராகமம்) | ஆம் (பாலியோ ஹீப்ரு (Paleo-Hebrew Font) எழுத்துக்களில் எழுதப்பட்ட சுருள்) |
4 | 1Q4 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
5 | 1Q5 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
6 | 1Q6 | Judges (நியாயாதிபதிகள்) | ஆம் |
7 | 1Q7 | Samuel (சாமுவேல்) | ஆம் |
8 | 1Q8 | Isaiah (ஏசாயா) | ஆம் |
9 | 1Q9 | Ezekial (எசேக்கியேல்) | ஆம் |
10 | 1Q10 | Psalms (சங்கீதம்) | ஆம் |
11 | 1Q11 | Psalms (சங்கீதம்) | ஆம் |
12 | 1Q12 | Psalms (சங்கீதம்) | ஆம் |
13 | 1Q13 | Phylactery (A small leather box containing Hebrew texts on vellum, worn by Jewish men at morning prayer as a reminder to keep the law.) | ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி, அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள். |
14 | 1Q14 | Pesher Micah (மீகாபுத்தகத்தின் விளக்கவுரை) | இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை. |
15 | 1Q15 | Pesher Zephaniah (செப்பனியா புத்தகத்தின் விளக்கவுரை) | இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை |
16 | 1Q16 | Pesher Psalms (சங்கீதம்புத்தகத்தின் விளக்கவுரை) | இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை |
17 | 1Q17 | Jubliees (ஜூபிலீஸ்) | இல்லை |
18 | 1Q18 | Jubilees (ஜூபிலீஸ்) | இல்லை |
19 | 1Q19 | Noah (நோவா) | இல்லை |
20 | 1Q20 | Genesis Apocryphon (ஆதி இரகசிய எழுத்துக்கள்) | இல்லை |
21 | 1Q21 | Levi (Aramaic) லேவி (அராமிக் மொழியில்) | ஆம் |
22 | 1Q22 | Moses (மோசே) | இல்லை |
23 | 1Q23 | Enoch (ஏனோக்கு) | இல்லை |
24 | 1Q24 | Enoch (ஏனோக்கு) | இல்லை |
25 | 1Q25 | Apocryphal Prophecy (இரகசிய தீர்க்கதரிசனம்) | இல்லை |
26 | 1Q26 | Wisdom Apocryphon (ஞான இரகசிய எழுத்துக்கள்) | இல்லை |
27 | 1Q27 | Mysteries (இரகசியங்கள்) | இல்லை |
28 | 1Q28 | Community Rule (சமுதாய சட்டங்கள்) | இல்லை |
29 | 1Q28 | Congregation Rule (மக்கள் கூடுகை சட்டங்கள்) | இல்லை |
30 | 1Q28 | Rule of the Blessings(ஆசீர்வாதாத்தின் சட்டங்கள்) | இல்லை |
31 | 1Q29 | Liturgy of 3 Tongues of Fire(பொது ஜெபங்களின் 3 நெருப்புத்தழல்கள்) | இல்லை |
32 | 1Q30 | liturgical text (பொது ஜெபங்கள்) | இல்லை |
33 | 1Q31 | liturgical text (பொது ஜெபங்கள்) | இல்லை |
34 | 1Q32 | New Jerusalem (புதிய ஜெருசலேம்) | இல்லை |
35 | 1Q33 | War Scroll (போர் சுருள்) | இல்லை |
36 | 1Q34 | liturgical prayers (பொது ஜெபங்கள்) | இல்லை |
37 | 1QH | Hodayot – Thanksgiving Scroll (நன்றி செலுத்தும் பாடல்கள்) | இல்லை |
38 | 1Q35 | Hodayot – Thanksgiving Scroll (நன்றி செலுத்தும் பாடல்கள்) | இல்லை |
39 | 1Q36 | hymns? (பாடல்கள்?) | இல்லை |
40 | 1Q37 | hymns? (பாடல்கள்?) | இல்லை |
41 | 1Q38 | hymns? (பாடல்கள்?) | இல்லை |
42 | 1Q39 | hymns? (பாடல்கள்?) | இல்லை |
43 | 1Q40 | hymns? (பாடல்கள்?) | இல்லை |
44 | 1Q41-70 | Unclassified | வகைபடுத்த முடியாத சுருள் |
45 | 1Q71 | Daniel (தானியேல் புத்தகம்) | ஆம் |
46 | 1Q72 | Daniel (தானியேல் புத்தகம்) | ஆம் |
- 'Pesher' என்றால் விளக்கவுரை (Interpretation) என்று பொருள் (https://en.wikipedia.org/wiki/Pesher).
- ' Apocryphon' என்றால் இரகசிய எழுத்துக்கள் என்று பொருள் (https://en.wikipedia.org/wiki/Apocryphon).
குகை 2:
தொல்பொருள் ஆய்வாளர்கள் கும்ரான் பகுதியை ஆய்வு செய்யும் போது, பிப்ரவரி 1952ம் ஆண்டு இந்த இரண்டாவது குகை கண்டுபிடிக்கப்பட்டது. இக்குகையில் மோசேயின் ஐந்தாகமங்கள் அனைத்தும் கிடைத்தன, இன்னும் எரேமியா தீர்க்கதரிசன புத்தகமும், சங்கீதமும் கிடைத்தன. இவைகள் தவிர தள்ளுபடி புத்தகமாகிய ஏனோக்கின் புத்தகமும் கிடைத்தது.
குகை 2ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண்
| சுருள் பெயர்
| சுருள் விவரம்
| பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 2Q1 | Genesis (ஆதியாகமம்) | ஆம் |
2 | 2Q2 | Exodus (யாத்திராகமம்) | ஆம் |
3 | 2Q3 | Exodus (யாத்திராகமம்) | ஆம் |
4 | 2Q4 | Exodus (யாத்திராகமம்) | ஆம் |
5 | 2Q5 | Paleo-Leviticus (லேவியராகமம்) | ஆம் |
6 | 2Q6 | Numbers (எண்ணாகமம்) | ஆம் |
7 | 2Q7 | Numbers (எண்ணாகமம்) | ஆம் |
8 | 2Q8 | Numbers (எண்ணாகமம்) | ஆம் |
9 | 2Q9 | Numbers (எண்ணாகமம்) | ஆம் |
10 | 2Q10 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
11 | 2Q11 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
12 | 2Q12 | Deuteronomy (உபாகமம்) | ஆம் |
13 | 2Q13 | Jeremiah (எரேமியா) | ஆம் |
14 | 2Q14 | Psalms (சங்கீதம்) | ஆம் |
15 | 2Q15 | Job (யோபு) | ஆம் |
16 | 2Q16 | Ruth (ரூத்) | ஆம் |
17 | 2Q17 | Ruth (ரூத்) | ஆம் |
18 | 2Q18 | Sirach (ஸிரக்) | இல்லை |
19 | 2Q19 | Jubilees (ஜூபிலீஸ்) | இல்லை |
20 | 2Q20 | Jubilees (ஜூபிலீஸ்) | இல்லை |
21 | 2Q21 | Apocryphon of Moses (மோசேயின் இரகசிய நூல்) | இல்லை |
22 | 2Q22 | Aprocyrphon of David (தாவீதீன் இரகசிய நூல்) | இல்லை |
23 | 2Q23 | Apocyrphal prophecy (இரகசிய தீர்க்கதரிசனம்) | இல்லை |
24 | 2Q24 | New Jerusalem (புதிய எருசலேம்) | இல்லை |
25 | 2Q25 | Legal documents (சட்ட நூல்கள்) | இல்லை |
26 | 2Q26 | Enoch Giants (ஏனோக்கின் இராட்சதர்கள்) | இல்லை |
27 | 2Q27-33 | Unclassified
| வகைபடுத்த முடியாத சுருள் |
குகை 3:
இந்த மூன்றாம் குகையை ஆய்வாளர்கள் மார்ச் 1952ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்த குகையில் எசேக்கியேல், சங்கீதம், புலம்பல் மற்றும் ஏசாயா புத்தகத்தின் விளக்கவுரையும் கிடைத்தது. இக்குகையின் விசேஷம் என்னவென்றால், 'ஒரு நீண்ட வெண்கலத்தால் ஆன தகடு இந்த குகையில் கிடைத்தது', மேலும் அந்த தகட்டில், ஆலயத்தின் பொக்கிஷங்கள் எங்கேயெல்லாம் மறைக்கப்பட்டு இருக்கிறது என்ற விவரம் வரைபடமாக வரையப்பட்டு இருந்தது. ஆய்வாளர்கள் அந்த தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த வரைபடத்தின் படி தேடிப்பார்த்தும் அவர்களுக்கு எந்த ஒரு பொக்கிஷமும் கிடைக்கவில்லை.
குகை 3ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம்
| பைபிளின் புத்தகமா? (ஆம்/இல்லை) |
1 | 3Q1 | Ezekial (எசேக்கியேல்) | ஆம் |
2 | 3Q2 | Psalms (சங்கீதம்) | ஆம் |
3 | 3Q3 | Lamentations (புலம்பல்) | ஆம் |
4 | 3Q4 | Pesher Isaiah (ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
5 | 3Q5 | Jubilees (ஜூபிலீஸ்) | இல்லை |
6 | 3Q6 | Hymn (பாடல்கள்) | இல்லை |
7 | 3Q7 | Testament of Judah (யூதாவின் உடன்படிக்கை) | இல்லை |
8 | 3Q8 | unclassified, mentions Angel of Peace (வகைபடுத்த முடியாத சுருள், அமைதியின் தேவதூதன் என்ற பெயர் இருக்கிறது) | இல்லை |
9 | 3Q9 | sectarian text? (குழு பற்றிய சுருள்) | இல்லை |
10 | 3Q10-14 | Unclassified (வகைபடுத்த முடியாத சுருள்) | இல்லை |
குகை நான்கில் மிகப்பெரிய அளவில் சுருள்கள் கிடைத்தன, எனவே அதனை தனிக் கட்டுரையாக கண்போம்.
தேதி: 31st Oct 2016
மூலம்: http://www.biblicalarchaeology.org/daily/biblical-artifacts/dead-sea-scrolls/caves-and-contents/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக