முந்தைய கட்டுரைகள்:
- சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
- சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
- சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
- சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
- சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
- சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
- சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?
- சவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா? அல்லது சாபமா?
- பேராசிரியர் ஐஸன்மேன் யார்? சவக்கடல் சுருள்கள் பற்றிய அவரது கோட்பாடு (ஊகக்கொள்கை) என்ன?
நான் ஏற்கனவே சொன்னது போல, என்னுடைய இந்த தொடர் கட்டுரைகள் எழுதுவதற்கு முக்கியமான காரணம், பிஜே அவர்களின் விளக்கம் 271 ஆகும்.
பிஜே அவர்களின் 271வது விளக்கத்திற்கு மறுப்பு அளிக்க, நான்கு ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டியிருந்தாலே போதுமானதாகும். ஆனால், தமிழ் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் 'சவக்கடல் சுருள்கள்' பற்றிய குறைந்தபட்ச விவரங்களை புரிந்துக்கொள்ளவேண்டுமென்பதற்காக, இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது மட்டுமல்ல, பிஜே போன்றவர்கள் இதர மேற்கத்திய அறிஞர்களின் கருத்துக்களை ஆதரித்து, அவைகளை முழுவதுமாக புரிந்துக்கொள்ளாமல், நுனிப்புல் மேய்வதினால் இஸ்லாமுக்கு உண்டாகும் ஆபத்தை விளக்குவதற்காகத்தான் இந்த முயற்சி.
இப்போது, பிஜே அவர்கள் 271வது விளக்கத்தில் என்ன எழுதியுள்ளார், ஐஸன்மேனின் கருத்து எப்படி இஸ்லாமை இடித்துப்போடுகிறது என்பதை காண்போம். இதுவரை தெளிவுபடுத்திய விவரங்கள் இந்த மறுப்பு கட்டுரைக்கு உதவும்.
பிஜே அவர்களின் விளக்கம் 271ஐ இங்கு சொடுக்கி படிக்கலாம். பிஜே தம் விளக்கத்தில் செய்த பிழைகள் இவைகள் தாம்.
பிழை 1: குர்-ஆனின் குகைவாசிகள் கதையை, சவக்கடல் சுருள்களோடு சம்மந்தப்படுத்தியது பிஜேயின் முதல் பிழை. இதற்கு நான் கொடுத்த மறுப்பை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
பிழை 2: சவக்கடல் சுருள்கள் விஷயத்தில், பேராசிரியர் ஐஸன்மேனின் கருத்தை உண்மை என்று நம்பி, இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதியது இரண்டாவது பிழை.
பிழை 3: ஐஸன்மேனின் கருத்தை (ஊகக்கொள்கையை) முழுவதுமாக ஆய்வு செய்யாமல், அறைவேக்காடு என்றுச் சொல்வதற்கு ஏற்ப, தம்முடைய கருத்தைச் சொல்லி, கிறிஸ்தவத்தை விமர்சித்தது பிஜே அவர்களின் மூன்றாவது பிழையாகும்.
பிஜே அவர்கள் விதைத்ததை அறுவடை செய்யவேண்டாமா? பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்திலிருந்து ஒரு வசனம் ஞாபகத்தில் வருகிறது, 'கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்' என்பதாகும் (சங்கீதம் 126:5). ஆனால், பிஜே அவர்களின் விஷயத்தில், இது அப்படியே தலைகீழாக உள்ளது, ஒரு காலத்தில் கெம்பீரத்தோடு விதைத்த பிஜே அவர்கள், இன்று கண்ணீரோடே அறுவடைச்செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது ஜஸன்மேனின் கைகள் மூலமாக, பிஜே அவர்கள் எப்படி இஸ்லாமை இடித்துபோடுகிறார் என்பதை காண்போம். கீழ்கண்ட விளக்கத்திற்கு பிஜே அவர்கள் மறுப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் அல்லது அவருடைய 271வது விளக்கத்தை மாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
அடி 1: இயேசு ஒரு யூத சுதந்திர போராட்ட வீரர்:
பேராசிரியர் ஐஸன்மேனின் கருத்தின் படி, யோவான் ஸ்நானகனும், இயேசுவும் யூதர்களுக்கு ரோமர்களிடமிருந்து சுந்ததிரம் வாங்கிக்கொடுக்க போராடிய வீரர்கள் ஆவார்கள். ஆனால், குர்-ஆன் 'யோவானையும், இயேசுவையும்' ஆன்மீகத்தோடு மட்டுமே சம்மந்தப்படுத்தியுள்ளது. இவர்கள் 'தீர்க்கதரிசிகள்' என்று குர்-ஆன் சொல்கிறது.
பிஜே அவர்கள் ஐஸன்மேனின் கருத்தை ஒப்புக் கொண்டபடியினால், குர்-ஆன் 3:38-39, 45-46,48-49ம் வசனங்கள் சொல்வதை மறுத்து, யஹ்யாவும், ஈஸாவும் நபிகள் அல்ல, அவர்கள் வெறும் யூத சுதந்திர போராட்ட வீரர்கள் என்று ஒப்புக்கொள்கிறாரா? ஐஸன்மேனின் கருத்து கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களுக்கு எதிராக உள்ளது. ஐஸன்மேனை ஆதரிப்பதற்காக பிஜே அவர்கள் இவ்வசனங்களை புறக்கணிக்கின்றாரா? அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.
குர்-ஆன்
3:38. அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்''488 என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90 அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.
3:45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
3:46. "அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார்.415 நல்லவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினர்)
3:48. அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும்491 கற்றுக் கொடுப்பான்.67
3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும்459 (ஈஸாவை அனுப்பினான்.)"உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி269 அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' (என்றார்)
பிஜே அவர்களுக்கு கேள்விகள்:
- யஹ்யாவும், ஈஸாவும் நபிகளா? அல்லது யூத போராட்ட வீரர்களா?
- இவ்விருவர் ஆன்மீக வாதிகளா? அல்லது தங்கள் தாய் நாட்டுக்காக போராடியவர்களா?
- யார் சொல்வது உண்மை? பேராசிரியர் ஐஸன்மேனா? அல்லது அல்லாஹ்வா?
அடி 2: இயேசு அற்புதம் செய்தார் என்று குர்-ஆன் சொல்வது கட்டுக்கதையாகும்
பேராசிரியர் ஐஸன்மேனின் படி, இயேசுவின் பிறப்பு மற்றும் அவர் செய்த அற்புதங்கள் எல்லாம், பவுலினால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகளாகும். இயேசு ஒரு யூத நாட்டு சுதந்திரத்திற்காக போராடியவராக இருந்தார், ஆனால், பவுல் அந்த இயக்கத்தை ஆன்மீக இயக்கமாக மாற்றி, இயேசு தந்தையில்லாமல் அற்புதமாக பிறந்தார், அவர் பல அற்புதங்கள் செய்தார் என்று பொய்யாக சுவிசேஷங்களில் சேர்த்துவிட்டார் என்று ஐஸன்மேன் கூறுகிறார்.
பிஜே அவர்கள் ஐஸன்மேனின் கருத்தை ஒப்புக்கொண்டபடியினால், குர்-ஆனுக்கு மரண அடியை தனக்கு தெரியாமலேயே அடித்துவிட்டார்.
குர்-ஆன் 3:46ன் படி தொட்டில் குழந்தையாக இயேசு இருக்கும்போதே பேசினார், இது உலகில் இதுவரை நடக்காத அற்புதம்.
குர்-ஆன் 3:47ன் படி இயேசு தந்தையில்லாமல் பிறந்தார்.
குர்-ஆன் 3:49ன் படி, இயேசு கலிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்தார், தொழுநோயையும் குணப்படுத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்.
ஆனால், பேராசிரியர் ஐஸன்மேனின் படி, மேற்கண்ட அற்புதங்கள் அனைத்தும், பவுலினால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
பிஜே அவர்களே, குர்-ஆனின் மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் பவுல் தான் இட்டுக்கட்டினார் என்று ஒப்புக்கொள்வீர்களா? பாவம் முஸ்லிம்கள்! தங்கள் குர்-ஆனில் பவுல் இட்டிக்கட்டியதை வைத்துக்கொண்டு, அதனை வேதம் என்று 14 நூற்றாண்டுகளாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது திரு ஐஸன்மேனின் ஆய்வின்படியும் பிஜே அவர்களின் உதவியினாலும் இதனை முஸ்லிம்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பிஜே அவர்களே! இன்னும் நீங்கள் குர்-ஆனை இறைவேதம் என்று நம்புகிறீர்களா?
அடி 3: இயேசுவே நபியாக இல்லாத போது, முஹம்மது எப்படி நபியாக முடியும்?
திரு ஐஸன்மேன், 'இயேசு நபியில்லை' என்றும், அவரது பிறப்பு அற்புதமில்லையென்றும், அவர் அற்புதங்கள் செய்யவில்லையென்றும் கூறுகிறார். ஆனால், முஹம்மது மேற்கண்ட அனைத்தும் உண்டென்று நம்புகிறார்.
பிஜே அவர்கள் இப்போது யார் சொல்வதை நம்பப்போகிறார்கள்? யாருக்கு ஓட்டு போடப்போகிறார்கள்? ஐஸன்மேனுக்கா? அல்லது தங்கள் உயிரினும் மேலான முஹம்மதுவிற்கா?
அடி 4: யாக்கோபு யாராக இருப்பாரோ, இயேசுவும் அவராகவே இருப்பார்
ஐஸன்மேனின் கருத்துப்படி, ஒருவருக்கு 'இயேசு யார்?' என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அவர் முதலாவது 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு யார் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்'. யாக்கோபு ஒரு நபியாக இருந்தால், இயேசுவும் ஒரு நபி என்றுச் சொல்லலாம். யாக்கோபு ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தால், இயேசுவும் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.
ஐஸன்மேனின் படி, யாக்கோபு ஒரு யூத கிளர்ச்சி போராட்ட வீரர், எனவே, இயேசுவும் ஒரு போராட்ட வீரர்.
ஐஸன்மேனை நம்பும் பிஜே, இயேசு ஒரு நபி அல்ல, குர்-ஆன் சொல்வது பொய்யாகும், ஐஸன்மேன் சொல்வதுதான் உண்மை என்றுச் சொல்வாரா?
'இஸ்லாமை அழிக்க முயலும் ஐஸன்மேனின் ஊகக்கொள்கை (Theory)'
பிஜே போன்றவர்கள் அரைகுறையாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். 'இஸ்லாமை இது உறுதிப்படுத்துகிறது, கிறிஸ்தவத்தை எதிர்க்கிறது' என்று யாராவது சொன்னால் போதும், அதன் பின்னணி என்ன? அவர் என்ன கோட்பாட்டைச் சொல்கிறார்? அது இஸ்லாமை ஆதரிக்கின்றதா? அல்லது குர்-ஆனோடு மோதுகின்றதா? போன்றவற்றை ஆராயாமல், உடனே அவருக்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்துவிடுவது. இது தான் பிஜே போன்ற முஸ்லிம்களின் வழக்கமாகிவிட்டது, பிழைப்பாகிவிட்டது. பொய்யான ஹதீஸ்களை கண்டுபிடிப்பதற்கு பிஜே அவர்கள் காட்டிய, காட்டும், காட்டப்போகும் முக்கியத்துவத்தைப் போன்று ஐஸன்மேன் போன்றவர்களின் கருத்துக்களுக்கும் காட்டியிருந்தால், இப்படி இஸ்லாமுக்கு பிஜே சமாதிகட்டியிருப்பாரா?
எங்கள் ஆய்வின் படி, சில ஹதீஸ்கள் குர்-ஆனோடு மோதுகின்றன என்றுச் சொல்லி, ஹதீஸ்களை புறக்கணிக்கும் பிஜே அவர்களே! இதே போல, மேற்கத்திய அறிஞர்கள் 'இஸ்லாமை ஆதரிக்கிறது' என்று மேலோட்டமாகச் சொல்லும் போது, அவ்வறிஞர்களின் கோட்பாடு குர்-ஆனோடு மோதுகின்றதா? என்று ஆய்வு செய்து எழுதலாம் அல்லவா?
இஸ்லாமை காப்பாற்ற புறப்பட்டுவிட்டேன் என்றுச் சொல்லிக்கொண்டு, அதே இஸ்லாமுக்கு கல்லறையைக் கட்ட வந்துவிட்டீர்கள் நீங்கள்! உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், 'பிஜே போன்றவர்கள் இஸ்லாம் பற்றி பேசாமல், எழுதாமல் இருந்தாலே போதும், இஸ்லாம் இன்னும் சில ஆண்டுகள், யாரிடமும் அடிவாங்காமல் இருக்கும்'.
முடிவுரையாக:
அ) சவக்கடல் சுருள்களுக்கும், இஸ்லாமுக்கும் நேரடியாக சம்மந்தமில்லை
ஆ) 'மறைமுகமாக சம்மந்தமுண்டு' என்றுச் சொன்னால், அது பழைய ஏற்பாட்டு நபிமார்கள் மூலமாக கொடுக்கப்பட்ட வேத எழுத்துக்களை அல்லாஹ் 2000 ஆண்டுகள் பாதுகாத்து, இன்று நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தான் என்று முஸ்லிம்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.
இ) பேராசிரியர் ஐஸன்மேனின் கோட்பாடு, அல்லாஹ்விற்கும், குர்-ஆனுக்கும் இஸ்லாமுக்கும் எதிரானது என்பதை முஸ்லிம்கள் அறியவேண்டும்.
ஈ) சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷமாகும்.
உ) 1992க்கு பிறகு அனைத்து சவக்கடல் சுருள்கள் மக்களின் முன் கொண்டு வரப்பட்டது. அதனை ஆய்வு செய்த மதசார்ப்பற்ற அறிஞர்கள், யூத ஆய்வாளர்கள் கூட கிறிஸ்தவத்திற்கு எதிராக தங்கள் விரலை நீட்டமுடியவில்லை. கிறிஸ்தவ சபை மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
பிஜே அவர்களே! இஸ்லாமின் உண்மை நிலையை உறுதிச் செய்ய உங்களுக்கு குர்-ஆனும், முஹம்மதுவின் சுன்னாவும் போதுமானதாக இல்லாத போது, ஐஸன்மேனும் சவக்கடல் சுருள்களும் எப்படி உதவும்?
இதுவரை ஐஸன்மேனின் கோட்பாடு எப்படி இஸ்லாமுக்கு எதிராக இருக்கிறது என்பதை விளக்கினேன், அடுத்த கட்டுரையில் 'ஐஸன்மேனின் கோட்பாட்டிற்கு இதர ஆய்வாளர்கள் என்ன மறுப்பு கொடுத்துள்ளார்கள்? அவரது கோட்பாட்டில் உள்ள பிழைகள் என்னென்ன? அவரது ஆய்வில் அவர் தவரவிட்ட ஆதாரங்கள் எவைகள்?' என்பதைப் பார்ப்போம். இவ்விவரங்கள் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், மேலும், முஸ்லிம்கள் கூட சவக்கடல் சுருள்களின் விஷயத்தில் தங்கள் நிலையை சரி பார்த்துக்கொள்ளமுடியும்.
தேதி: 5th Nov 2016
'சவக்கடல் சுருள்கள்' பொருளடக்கம்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/pj_and_eisenman.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக