(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)
முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்
ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:
- உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
- உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
- உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
- உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
- உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
- உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
- உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
- உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
இந்த கட்டுரையில், உமர் தம்முடைய தம்பியை மொபைளில் அழைத்து பேசுகின்றார். பொதுவாக, உமரின் தம்பி தான் சௌதியிலிருந்து அழைத்து பேசுவது வழக்கம், ஆனால், இந்த முறை ஒரு வித்தியாசத்திற்காக, உமரே தம் தம்பிக்கு அழைத்து 'இயேசு கூறிய நல்ல சமாரியன்' உவமையைப் பற்றி பேசுகின்றார்.
முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்!
உமர்: ஹலோ தம்பி, அஸ்ஸலாமு அலைக்கும்
தம்பி: வ அலைக்கும் ஸலாம் அண்ணே!
என்ன இது? நான் காண்பது கனவா? அல்லது நிஜமா? நீங்க எனக்கு ஃபோன் செய்து பேசுகிறீர்கள்? தம்பியோடு ரமளான் மாதத்தில் ஏதாவது விசித்திர விளையாட்டு விளையாட முடிவு செய்து இருக்கிறீர்களா?
உமர்: ஒன்றுமில்லை தம்பி. நேற்று நாம் பேசினோமே (முந்தைய கட்டுரை), அதைப் பற்றி ஏதாவது சிந்தித்தாயா?
தம்பி: இல்லை, அண்ணே! எனக்கு அதிக நேரம் தேவை. நாம் அதைப் பற்றி பிறகு பேசலாம்.
ஏதோ அத்தி பூத்தாற்போல எனக்கு ஃபோன் செய்துவிட்டீர்கள். இன்று ஏதாவது ஒரு உவமையைப் பற்றி பேசுவோமா?
உமர்: பேசலாமே! எனக்கு நேரமிருக்கிறது. நீயே சொல், எந்த உவமையைப் பற்றி பேசலாம்?
தம்பி: நல்ல சமாரியன் உவமையைப் பற்றி பேசலாமா? இந்த உவமையில் நீங்கள், எந்த ஒரு குற்றச்சாட்டையும் இஸ்லாம் மீது வைக்கமுடியாது! எப்படி வசதி?
உமர்: ம்ம்...நல்ல சமாரியன் உவமையா? சரி பேசலாமே!
தம்பி: இதோ நான் லூக்கா 10:29 - 37வரை படிக்கிறேன்.
உமர்: அடப்பாருடா! நீ ஏற்கனவே இந்த உவமையைத் தான் என்னோடு பேசவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தயாராக இருக்கிறாய் போல் தெரிகிறது? உடனே லூக்கா 10:29 என்று சரியாகச் சொல்கிறாய்?
தம்பி: ஆமாம், உங்களுக்கு நானே ஃபோன் செய்து, இதைப் பற்றி பேசலாம் என்று நினைத்து இருந்தேன், நீங்களாகவே வந்து மாட்டிகிட்டீங்க! இதோ படிக்கிறேன்...
உமர்: வேண்டாம்.. படிக்கவேண்டாம்.. நானே அந்த உவமையை உனக்காக சிறிது மாற்றிச் சொல்லப்போகிறேன், கேள்.
[லூக்கா 10:29-37 வரை இக்கட்டுரையின் கடைசியில் கொடுத்திருக்கிறேன் படித்துக்கொள்ளுங்கள்]
தம்பி: ஓகே, சொல்லுங்கள்.
உமர்: ஒரு யூதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்;
தம்பி: இருங்க இருங்க.. இயேசு சொன்ன உவமையில் "யூதன்" எங்கே இருக்கிறான், "ஒரு மனுஷன்" என்று தானே இயேசு சொல்லியுள்ளார்.
உமர்: தம்பி, இயேசு யாருக்காக இந்த உவமையைச் சொல்கிறார் என்று படித்துப் பார், ஒரு நியாயசாஸ்திரி தன்னை நீதிமானாக காட்டுவதற்காக இயேசுவிடம் "எனக்கு பிறன் யார் என்று கேட்கிறான்", அந்த யூத நியாயசாஸ்திரிக்கு இயேசு பதில் அளிக்கிறார். எனவே, அந்த மனிதன் யூதனாக இருப்பதற்கு அதிய வாய்ப்பு உள்ளது. மேலும் எருசலேமிலிருந்து எரிகோ என்று இயேசு சொல்வதால், அவன் யூதனாக இருப்பதற்கு இன்னும் வாய்ப்பு அதிகம். அவன் யாராக இருந்துவிட்டு போகட்டும், நம் உவமையில் "அவன் யூதன்" என்று கருதிக்கொள்வோம், சரியா?
தம்பி: சரி, தொடருங்கள்..
உமர்: ஒரு யூதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்;அவர்கள் அவன் உடைகளை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
அப்பொழுது தற்செயலாய் ஒரு கிறிஸ்தவ போதகர் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனார்.
தம்பி: மறுபடியும் பாருங்க! "கிறிஸ்தவ போதகர்" இந்த உவமையில் எங்கே வந்தார்!
உமர்:வருவார் தம்பி, வருவார். நாம் சிறிது உவமையை மாற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மையக்கருத்து ஒன்று தான், ஆனால் கதாபாத்திரங்களை சிறிது மாற்றிவிட்டேன்.
தம்பி: சரி, தொடருங்கள்.. இன்னும் யார் யார் வருவார்களோ!
உமர்:அந்தப்படியே ஒரு இந்து கோயில் பூசாரியும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனார்.
மறுபடியும் "இந்து கோயில் பூசாரி" ஏன் என்று கேள்வி கேட்காதே, நம் உவமையில் யார் வேண்டுமானாலும் வரலாம்.
தம்பி: சரி, உங்கள் ஆட்டத்தை கண்டினியூ பண்ணுங்க.
உமர்: பின்பு முஸ்லிம் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அந்த அடிபட்ட யூதனைக் கண்டு, மனதுருகி,. . .
தம்பி: நோ..நோ..நோ.. நான் இதனை ஒப்புக் கொள்ளமாட்டேன்...
உமர்: இன்னும் நான் உவமையை முடிக்கவே இல்லை...முதலில் நான் சொல்லிமுடிக்கட்டும், அதன் பிறகு உன் கேள்விகளை நீ கேட்கலாம்...
தம்பி: நீங்கள் தப்புத்தப்பா உவமையைச் சொல்கிறீர்கள்...
உமர்: என்னப்பா.. ஒரு யூதனுக்கு கற்பனைக் கதையிலும் உதவி செய்யமாட்டாயா? இப்படித்தான் இஸ்லாம் உனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறதா?...
தம்பி: இஸ்லாம் பற்றி தவறாக சொல்லாதீங்க...
சரி உங்க கதையைச் சொல்லுங்க, என்ன செய்வது, கேட்டுத்தொலைக்கிறேன்...
உமர்: ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறாய்! சரி மீதமுள்ளதைக் கேள்..
பின்பு முஸ்லிம் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அந்த அடிபட்ட யூதனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுய ஒட்டகத்தின் மேல் ஏற்றி, பக்கத்து ஊரில் உள்ள ஒரு மசூதியில் வைத்து, அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது தன்னிடம் உள்ள பணத்தையும் கொடுத்து, அதற்கு மேலாக தன் கிரேடிட் கார்டையும் அந்த மசூதியின் இமாமிடத்தில் கொடுத்து : நீங்கள் இவனை விசாரித்துக் கொள்ளுங்கள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உங்களுக்குத் தருவேன் என்றான்.
தம்பி: அண்ணே! நிறுத்துங்க.. ஒரு யூதனை மசூதியில் வைத்து பராமரிப்பதா? கேட்கவே கொமட்டுது எனக்கு!
உமர்: ஏன் இப்படி கொமட்டுது உனக்கு? ஒரு நல்ல செயலை முஸ்லிம் செய்வதாகவும், அவனே 'இயேசு கூறிய நல்ல சமாரியன்' என்றும் சொன்னதில் என்ன தவறு?
தமிழ் நாட்டில் பார்க்கும்போது, முஸ்லிம்கள் சமுதாயத்திற்கு அதிக நன்மைகளைச் செய்கிறார்கள், சென்னையில் வெள்ளம் வந்து போது, முஸ்லிம்கள் அதிகமாக உதவி செய்தார்களே! இது உனக்கு ஞாபகம் இல்லையா?
தம்பி: அது வேறு இது வேறு, யூதனுக்கு ஒரு முஸ்லிம் கற்பனையில் கூட உதவி செய்வது என்பது நடக்கக்கூடாது.
உமர்: ஏன்? யூதர்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பு? மனிதனை வெறுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கற்றுக்கொடுக்கின்றதா?
தம்பி: நான் உங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை காட்டுகிறேன், பாருங்கள், புகாரி ஹதீஸில் இப்படி உள்ளது:
ஸஹீஹ் புகாரி 2926 & 3593
2926. நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
3593. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, 'முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.
உமர்: இப்படிப்பட்ட இனவெறி ஹதீஸ்களை இன்னும் நீ நம்புகிறாயா? இனவெறியை முஸ்லிம்களின் உள்ளங்களில் அளவில்லாமல் ஊற்றிவிட்டார் முஹம்மது. முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராதாம். மக்களிடையே சமாதானத்தை உண்டாக்காமல் வெறுப்பையும், சண்டை மனப்பான்மையையும் உண்டாக்கியவர் முஹம்மது.
தம்பி: இறைத்தூதர் முஹம்மதுவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள், இந்த ஹதீஸ்களை இறைத்தூதருக்குச் சொன்னவன் அல்லாஹ் தானே!
உமர்: சரி, உன் கணக்கிற்கே வருகிறேன். கியாமத் நாளில், மேற்கண்ட ஹதீஸில் வரும் யூதர்கள் யார்? அன்று முஹம்மது வாழ்ந்த போது, அவரை நபி என்று ஏற்றுக்கொள்ளாதவர்களா? அல்லது அவரோடு சண்டை போட்டவர்களா?
தம்பி: இல்லை.. கியாமத் நாளில் எந்த யூதர்கள் உயிரோடு இருந்திருப்பார்களோ, அவர்கள் தான். அதாவது அடுத்த 10 அல்லது 100 ஆண்டுகள் கழித்து கியாமத் நாள் வந்தால், அப்போது இருக்கும் யூதர்கள் தான் அவர்கள்
உமர்: அடுத்த 10 அல்லது 100 ஆண்டுகளுக்கு பிறகு வாழும் யூதர்களுக்கும், இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்? அவர்களை கொள்ளும்படி, ஏன் கற்கள் பேசவேண்டும்? நமக்கு சம்மந்தமில்லாத, நம்மை ஒன்றுமே செய்யாத யூதர்களை ஏன் நாம் வெறுக்கவேண்டும்?
தம்பி: இறைத்தூதர் முஹம்மது காலத்து யூதர்கள் தீமை செய்தார்கள் அல்லவா? அதற்காக இன்றைய யூதர்கள் அல்லது நாளைய யூதர்கள் கொல்லப்படவேண்டும்!
உமர்: 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழு தீமை செய்தால், இன்றுள்ள அதே இனம் தீமையை அனுபவிக்கவேண்டுமா? இது என்ன நியாயம்?
இன்று ஒரு குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுள்ள முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறி, வன்முறையில் ஈடுபட்டு, உலக மக்களுக்கு தீமை செய்தார்கள். அதற்காக நம்மோடு வாழும் நல்ல முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லலாமா? இது தவறு தானே!
ஒரு நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களின் செயல்களினால், வேறு நாட்டில் உள்ள முஸ்லிம்களை மற்ற மக்கள் தாக்குவது சரி என்றுச் சொல்கிறாயா?
உனக்கு கொஞ்சமாவது புத்தியுள்ளதா? ஒரு மனிதனைப் போலவா நீ பேசுகின்றாய்?
தம்பி: அதுவேறு இது வேறு, யூதன் வேறு முஸ்லிம் வேறு.
உமர்: அது எப்படி? அரேபியாவில் வாழ்ந்த ஒரு யூதக்குழு 1400 ஆண்டுகளுக்கு முன்பு செய்த குற்றத்திற்காக, இன்றுள்ள அல்லது அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கும் யூதனை எதிரியாக முஸ்லிம்களாகிய நீங்கள் பார்ப்பீர்களானால், நம் காலத்திலேயே நம் கண்களுக்கு முன்பாக, ஈஸ்டர் பண்டிகையின் போது, இலங்கையில் குண்டு வெடித்த முஸ்லிம்களுக்காக, நம்மைச் சுற்றியுள்ள முஸ்லிம்களை கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்தால் அதனை நீ ஆதரிப்பாயா?
காட்டுமிராண்டியாக சிந்திக்கும் தம்பியே, கொஞ்சம் மனிதனாக சிந்திக்க பழக்கப்படு, உன் மூளையை அடகுவைத்துவிட்டு பேசுகின்றாயா என்ன?
தம்பி: நீங்கள் எதை ஆரம்பித்தீர்கள், இப்போது எதை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
உமர்: நல்ல சமாரியன்களாக நம்மைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள். எவ்வளவு அன்போடும், பரிவோடும், மக்களுக்கு உதவி செய்துக்கொண்டும் முஸ்லிம்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவன் ஆபத்தில் இருந்தால், உடனே ஓடிச்சென்று அவனுக்கு உதவி செய்யும் கோடாணு கோடி முஸ்லிம்களின் கால்களை கழுவி நீ குடித்தாலும் உனக்கு புத்தி வராது தம்பி. இப்படி வித்தியாசம் பார்க்காமல் உதவி செய்யும் மனிதர்களுக்கு உதாரணம் தான் 'நல்ல சமாரியன்' உவமை. அதனை நீ எடுத்துப் பேசும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதனை சிறிது மாற்றிச் சொல்லி, ஜாதி இனம் மொழி நாடு பார்க்காமல் நாம் உதவி செய்யவேண்டும், அதனை ஒரு முஸ்லிம் செய்வதாகச் சொல்லி, அவனை நல்ல சமாரியனுக்கு ஒப்பிட்டுப் பேசினால், நீ சந்தோஷப்படுவாய் என்று நினைத்தால், துரு பிடித்த மூளையுள்ளவன் பேசுவது போல பேசுகிறாய் தம்பி, நான் ஏமாற்றமடைந்தேன்.
தம்பி: இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். ஆபிரகாம் கால பல்லி செய்த பாவத்திற்கு, அரேபியாவின் பல்லிக்கு கிடைத்த தண்டனையப் பாருங்கள், இந்த ஹதீஸை படித்தபிறகாவது உங்களுக்கு புத்தி வரும், உண்மை புரியும்.
ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3359.
உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் எண்: 4509
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உமர்: இப்படிப்பட்ட இன்னொரு உதாரணத்தைச் சொன்னால், செருப்பால் அடிப்பேன்.
[வாசகர்கள் மன்னிக்கவும், இப்படியும் கட்டுரையை எழுதுவார்களா? என்று கேட்காதீர்கள். இது என் தம்பிக்கும் எனக்கும் இடையே நடக்கும் உரையாடல். சில நேரங்கள் நாங்கள் இருவரும் இப்படி பேசிக்கொள்வது வழக்கம் தான்]
நீ முட்டாளாடா? உனக்கு புத்தியில்லையாடா? நீ படித்தவன் தானே!
ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது நியாயமா?
ஆபிரகாமை தீக்குண்டத்தில் போட்டபோது, அந்த அக்கினி இன்னும் அதிகமாக எரியவேண்டும் என்றுச்சொல்லி பல்லி ஊதியதாம் எனவே பல்லியை கொல்லவேண்டும் என்று முஹம்மது கூறினார். பாட்டிகூட இப்படி கற்பனை செய்துச் சொல்லாது, அவ்வளவு பழமைவாதியாக முஹம்மது சொல்லியுள்ளார். இதுமட்டுமா, ஒரே அடியில் பல்லியை கொன்றவருக்கு அதிக நன்மைகளாம், இரண்டு அடியில் கொன்றவருக்கு கொஞ்சம் குறைவான நன்மைகள் கிடைக்குமாம். நெருப்பை பல்லி ஊதி அனலை அதிகமாக்குமா? பல்லி என்ன டையனோசர் மாதிரி பெரியதாக இருந்ததா என்ன?
இப்போது கேள்வி என்னவென்றால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது எந்த ஊர் நியாயம்?
தம்பி: என்னை செருப்பால் அடிப்பேன் என்றுச் சொல்கிறீர்கள், இது நியாயமா?. நானும் திருப்பிச் சொன்னால் என்ன செய்வீர்கள்?
உமர்: நீயும் சொல்! ஏன் தயங்குகிறாய்! உண்மை மார்க்கத்தை பின்பற்றிக்கொண்டு இருந்த உன்னை இஸ்லாமுக்கு தாரை வார்த்துவிட்டு, பல ஆண்டுகளாக, இன்னும் உனக்கு அறிவு வரும்படி என்னால் செய்யமுடியவில்லையல்லவா? அதற்காக எனக்கு இது நிச்சயம் வேண்டும் தம்பி.
தம்பி: இதற்காகத் தான் ஃபோன் செய்தீங்களா? அதுவும் ரமளான் மாதத்தில் என்னை அழைத்து பேசி, இப்படிச் சொல்வது சரியில்லை
உமர்: சில பேருக்கு சில நேரத்தில் வார்த்தைகளால் அடித்தால் புத்தி வராது, இப்படி விசேஷமான பொருளால் அடித்தால் தான் புத்தி தெளியும்.
இருந்தாலும் தம்பி! ஒரு பல்லியை கொல்வதற்கு இப்படி ஒரு கதையைச் சொன்னவரையா நீ பின்பற்றுகிறாய்?
என்னை மன்னித்துவிடடா, நான் சொன்ன வார்த்தைகளை திரும்ப வாங்கிக் கொள்கிறேன்.
தம்பி: ஏன் முதலில் தேவையில்லாமல் வாயைவிடனும் அதன் பிறகு, ஏன் திரும்ப வாங்க வேண்டும்.
உமர்: இது உனக்காக திரும்ப வாங்கிக்கொண்டேன் என்று நினைக்கிறாயா? இல்லை இல்லை. இப்படி பல்லிக்கதையெல்லாம் நம்பும் உன்னை அடிக்க செருப்பை பயன்படுத்தினால், 'செருப்பு என் மீது கோபித்துக்கொள்ளும், தன்னை நான் அவமானப்படுத்திவிட்டதாக, அது நினைத்துவிடும் என்று' எண்ணி தான் அந்த வார்த்தைகளை திரும்ப வாங்கிக்கொண்டேன்.
தம்பி: உங்களுக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான்.
உமர்: சரி, விஷயத்துக்கு வருகிறேன், இப்போவாதுச் சொல், நீ நல்ல சமாரியனா? இல்லையா?
தம்பி: நான் நல்ல சமாரியன் தான், ஆனால் யூதனுக்கு உதவி செய்யமாட்டேன்.
உமர்: மறுபடியும் பாருடா! தொடங்கிய இடத்திற்கே திரும்ப வந்திருக்கிறாய்! சரி, கதையை மாற்றிச் சொல்கிறேன். நான் மேலே சொன்ன உவமையில், அடிபட்டு கிடந்தவன் ஒரு முஸ்லிம் என்று வைத்துக்கொள்வோம், அவனுக்கு உதவி செய்து, பராமரித்தவன் ஒரு யூதன் என்று வைத்துக்கொள்வோம்.
இது உனக்கு ஓகேவா?
தம்பி: ஒரு யூதனுடைய உதவி பெறுவதைவிட, அந்த செருப்பு அடியே மேல், போதும், நான் ஃபோன் வைக்கிறேன்.
இனி எனக்கு நீங்கள் ஃபோன் செய்யவேண்டாம்.
உமர்: இரு தம்பி, இன்னும் பேசலாம்....
தம்பி ஃபோன் வைத்துவிட்டான்.
அடிக்குறிப்புக்கள்
1) நல்ல சமாரியன் உவமை: லூக்கா 10:29-37
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். 30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.
இன்னொரு உவமையோடு சந்திப்போம்...
தேதி: 22nd April 2022
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2022ramalan/2022-ramalan-9.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக